Tuesday, April 13, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் !

பா.ம.க சாதிவெறிக்கு துணை போகும் விடுதலைச் சிறுத்தைகள் !

-

திருமா - ராமதாஸ்தர்மபுரியில் நவம்பர் ஏழு அன்று நடத்தப்பட்ட வன்னிய சாதி வெறியாட்டத்தை எதிர்த்து கடந்த ஒரு மாத காலமாக கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் தொடர் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டிசம்பர் 25-ல் வெண்மணியில் நடந்த படுகொலை நாளையொட்டி, வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்ற அடிப்படையில் புதுச்சேரியில் திருப்புவனையில் பேரணி-பொதுக்கூட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். இதற்காக 16000 துண்டறிக்கைகளும், 1100 சுவரொட்டிகளும் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பிரச்சார இயக்கத்துக்கு வன்னியர்-தாழ்த்தப்பட்ட மக்களில் உள்ள உழைப்பாளிகளிடம் கணிசமான ஆதரவு, நிதி உதவி, கிடைத்தது. இன்றைய சமூக யதார்த்தத்தில் பல்வேறு வாழ்க்கைப் பிரச்சனைகளை அனுபவித்து வரும்  உழைக்கும் மக்கள் தனது பொது எதிரிக்கு எதிராக ஒரு வர்க்கமாகத் திரள்வதற்குத் தடையாக உள்ள சாதி உணர்வையே தூக்கியெறிந்து ஜனநாயக உணர்வைப் பெற வேண்டும் என்பதே இந்தப் பிரச்சாரத்தின் மையப் பொருளாக கொண்டு செல்லப்பட்டது.

திட்டமிட்டபடி அன்று காலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடிகளை நடுவதற்குத் தயாரான போது புதுச்சேரி திருபுவனை பகுதியிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பிலுள்ள சில பொறுப்பளர்கள் கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று எந்தக் காரணமும் கூறாமல் நேரடியாக தோழர்களிடம் வாக்கு வாதம் செய்துள்ளனர்.  தோழர்கள் பொறுமையாக அவர்களுக்கு விளக்கம் அளித்தும் கூட அவர்கள் எதையும் கேட்கவோ, விவாதிக்கவோ தயாராக இல்லை. ஒரு கட்டத்தில் கூட்டம் நடத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வுடன் தோழர்கள் காவல் நிலையம் சென்று புகார் செய்துள்ளனர். காவல் துறையோ, வெண்மணி பற்றி மட்டும் தான் பேச வேண்டுமென வாயடைக்கப் பார்த்தது.

இங்கு ஜனநாயகம் இல்லை என்பதற்கு இதை விட சிறந்த சான்று இருக்க முடியாது. ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்டவர்கள் மீது வன் கொடுமையை ஏவி விடுகின்றனர். எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்று கோருகின்ற விடுதலைச் சிறுத்தைகளின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பிலுள்ள பத்மநாபன்      என்பவர் 10,15 பேரைத் திரட்டிக் கொண்டு வந்து கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என்று அடாவடி செய்கிறார்.  பா.ம.க ராமதாசு மாநிலம் முழுவதும் சென்று ஆதிக்க சாதி வெறியைத் தூண்டி விட்டு, தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு ஆதிக்க சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது, பணம் பறிப்பது என்று நடந்து கொள்வதாக அவதூறு பரப்பி தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியினரை அணி திரட்ட முயல்கிறார். இதைப் பற்றி வி.சி கட்சியினர் மௌனம் சாதிக்கும் போது புரட்சிகர அமைப்பினர் தான், வன்னியர் சங்கம் உட்பட ஆதிக்க சாதிச் சங்கங்களைத் தடை செய், அவர்களின் சொத்துக்களைப் பறித்தெடு என்று தமிழகம் முழுவதும் இயக்கம் எடுத்து வருகின்றனர்..

இந்தக் கோரிக்கைக்கு இயக்கம் எடுக்க தயாராக இல்லாத விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர அமைப்பினரின் பொதுக்கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என அடாவடி செய்வது கொஞ்ச நஞ்சமுள்ள தங்கள் அணிகள் மத்தியில் இன்னும் அம்பலமாகி விடுவோமோ என்ற பயம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இணையத்தில் வன்னி அரசு அவதூறு செய்வதற்கும், கீழுள்ள அணிகள் இப்படி நடந்து கொள்வதற்கும் அடிப்படை ஒன்றே தான். இதை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது, காவல் துறை பொதுக்கூட்ட அனுமதியை ரத்து செய்து விட்டதாக தகவல் வந்துள்ளது. தடையை மீறி கூட்டம் நடைபெறும் என்று தோழர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துகள் மக்களிடையே போகக் கூடாது என்பது தான் ஆதிக்க சாதி வெறியர்களின் நிலைப்பாடு. இதையே களத்தில் நின்று வி.சி அமைப்பினரும் செய்கின்றனர். அனால் பத்து நாட்களுக்கும் மேலாக உழைக்கும் மக்கள் மத்தியில் தங்கியிருந்து வன்னியர், தாழ்த்தப்பட்டவர் என அனைத்து பிரிவினர் மத்தியிலும் இந்தக் கருத்தின் அடிப்படையில் தோழர்கள் வீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அனைவரிடமும் முழுமையான ஆதரவு கிடைத்து வருகிறது. பொதுக் கூட்டத்தைத் தடுத்து விட்டால், இந்தக் கருத்தினை மக்கள் மத்தியில் செல்ல விடாமல் தடுத்து விடலாம் என்று கருதினால், அது பகற் கனவே. ஏற்கனவே சென்று கொண்டிருக்கிற இந்தப் பிரச்சாரம் தொடர்ந்து நடக்கும்.

எமது விமர்சனங்களை வி.சி கட்சிப் பொறுப்பாளர்கள் தங்களிடம்  உள்ள தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பார்க்காமல், தங்களுக்கு எதிரான கருத்து என்று பார்த்தால, ஆதிக்க சாதி வெறிக்கும், இதற்கும் எந்த வேறுபாடுமில்லை என்பதை இங்கு அழுத்தமாகச் சுட்டிக்காட்டிகிறோம். சூரியனைக் கைகள் கொண்டு மறைக்க முடியாது. அடாவடியாலும் , அடக்குமுறைகளாலும் ஜனநாயகக் கருத்துகளை ஒழித்து விட முடியாது.

___________________________________________________________________

புதிய ஜனநாயகத் தொழிலாளர்  முன்னணி, புதுச்சேரி.

___________________________________________________________________

 1. அது மட்டும் அல்ல, இந்த திருப்பி அடிக்கும் சிறுத்தைகள் வன்னிய சாதி சங்கங்களையே நாடிச் சென்று அந்த கூட்டத்தைத் தடுக்க ஆதரவு கோரினர். “எங்களையாவுது ஓர் இடத்தில்தான் திட்டி இருக்கிறார்கள் உங்களை மூன்று இடங்களில் திட்டி இருக்கிறார்கள் அவர்கள் (துண்டு அறிக்கையில்)” என்று கூறி அவர்களை கலகம் செய்ய அழைத்துள்ளனர் இந்த கருங்காலிகள். தங்கள் குறுகிய சாதிக் கொள்கையைக் காக்க சரியான கூட்டநியைத்தான் சிறுத்தைகள் தெரிந்தேடுத்துள்ளனர். இனியுமா தலித் உழைக்கும் மக்கள் இந்த அயோக்கியர்களை நம்பப் போகின்றனர்? இன்னொரு விடுதலைச் சிறுத்தைகள் பிரமுகர்: “புரச்சித் தலைவி அம்மாவே அவரை ‘தம்பி திருமா வளவன்’ என்றுதான் அழைக்கிறார், நீங்கள் அவரை ‘உழைக்கும் தலித் மக்களை வைத்துப் பிழைக்கும் திருமா போன்ற’ என்று எழுதுகிறீர்கள்! கூட்டம் நடக்க விட மாட்டோம்!” என்று கூறியுள்ளான். சாதி இயக்கமாகத் தொடங்கி, ஓட்டுக் கச்சியாக வளர்ந்து, தற்போது பார்ப்பனியத்தின், திராவிடத்தின் அடிவருடியாக, பிர்ப்போக்கு சாதி கச்சிகளின் கூட்டாளியாக, அறிவு நேர்மையும் அரசியல் கொள்கையும் அற்ற ஒரு தலித் மக்களின் முற்றான துரோகியாக விடுதலைச் சிறுத்தைகள் சீரழிந்து போனது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எந்தக் கோமணம் வைத்து அவர்கள் இந்த கேவலத்தை மறைத்து கட்டைப் பஞ்சாயத்தும் வெட்டி வாய்ச் சவடாலும் பேசிப் பொறுக்கித் தின்ன முயன்றாலும், புரச்சிகர அமைப்புகளின் மூலம் முழுதாக அம்பலமாகி, தலித் மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு ஒழியப் போவது நிச்சயம். சாதி ஒழிப்புக்கான நெடுபயணத்தில் முதல் தேவை இந்த தலித் சாதி மக்களின் துயரத்தை வைத்துப் பிழைப்பு நடத்தும் திருமா கிருஷ்ணசாமி முதலியோரை ஒழிப்பதுதான்.

 2. எல்லாக் கட்சிகளிலும் அல்லக்கைகள். அதில் வி.சி்.க மட்டும் விதிவிலக்கல்ல. தனது பிழைப்புக்காக சொந்தக் கட்சிக்காரனையே எமலோகம் அனுப்புபவர்கள் தங்களின் எதிர்கால பிழைப்பே கேள்விக்குள்ளாகும் போது சும்மாவா இருப்பார்கள்? கருத்துக்கைளை எதிர்கொள்ள திராணியற்றவர்களின் கோழைத்தனத்திற்கு இதைவிட வேறேன்ன சான்று வேண்டும்?

 3. தேர்தலில் பங்கெடுப்பதற்கு முன்பு வரை விடுதலை சிறுத்தைகள் அணிகளிடம் அரசியல் இருந்தது. ஓட்டுக்கட்சியாக மாறிய பிறகு அரசியல் பின்னுக்கு போய், பிழைப்புவாதம் முன்னுக்கு வந்துவிட்டது. மேலிருந்து என்ன சொல்லப்படுகிறதோ, கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்றுகிற போக்கு தான் இப்படி செய்ய வைக்கிறது. இப்பொழுது நன்றாக அம்பலப்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். விரைவில் மக்கள் மத்தியில் நன்றாக அம்பலப்படுவார்கள்.

 4. அனுமதி மீறி கூட்டம் நடந்ததா இல்லையா..? அதையும் கொஞ்சம் சொல்லுங்க

  • காவல்துறை இறுதியில் அனுமதி மறுத்து கடிதம் அளித்துவிட்டது எனத் தெரிகிறது. ஆனாலும், தோழர்கள் தடையை மீறி கூட்டத்தை நடத்த, மறுத்தால் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.பேரணி தொடங்குவதாக இருந்த இடத்தில் தோழர்கள் செவ்வுடையில் அணிவகுத்து நிற்க, சாலையின் மறுபுறம் வி.சி. காலிகள் குடித்துவிட்டு கூட்டமாக நின்று தோழர்கள் எந்த முழக்கமும் எழுப்பக்கூடாது, மீறினால் சாலையில் படுத்துவிடுவோம் என்று சொல்லி ரகளையில் ஈடுபட்டனர். பின்னர், காவல்த்துரையினருடன் தோழர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தியும், அந்தக் காலிகள் களைந்து போகும்படி காவல்துறை எதுவும் சொளவோ செய்யவோ இல்லை. காவ்லதுரையினர் தோழர்களிடம் “அவர்கள் எல்லோரும் குடித்துவிட்டு ரவுடித்தனம் செய்ய வந்துள்ளனர். நீங்கள் எளிதில் அவர்களை அடித்து விரட்டிவிடலாம். ஆனால், அது பெரிய வன்முறைக்கு இடமாகும். அவர்களுக்கு எதுவும் புரியாது, அவர்கள் எந்த ஞாயத்தையும் பேசவோ கேட்கவோ தயாராக இல்லை.” என்று கூறினர். அத்தகைய மோதல் நம் நோக்கத்திற்கு அவசியமற்றது என்பதாலும், இந்த அறிவீனர்களுடன் மோதி எந்தப் பயனும் இல்லை என்பதாலும், கூட்டம் கைவிடப்பட்டது என்று தெரிகிறது. எனினு, அவர்களின் கயமைத்தனத்தைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி தொடர் பிரச்சாரத்தில் தோழர்கள் புதுவை கடலூர் விழுப்புரம் பகுதிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 5. //இந்தக் கோரிக்கைக்கு இயக்கம் எடுக்க தயாராக இல்லாத விடுதலைச் சிறுத்தைகள், புரட்சிகர அமைப்பினரின் பொதுக்கூட்டத்தை நடத்த விட மாட்டோம் என அடாவடி செய்வது கொஞ்ச நஞ்சமுள்ள தங்கள் அணிகள் மத்தியில் இன்னும் அம்பலமாகி விடுவோமோ என்ற பயம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?//
  இவனுகளை இன்னுமா நம்புது இந்த உலகம்?

 6. ஒட்டு வங்கி அரசியல் கேள்வி பட்டு இருக்கிறேன். இது என்ன ஆள் பிடிக்கிற அரசியலா?

  • ஆம், இது ஆள் பிடிக்கும் அரசியல் தான் சோழன். தலித் மக்களின் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்த ஆள் பிடிப்பதை போன்றதல்ல இது, சாதிவெறியை ஒழித்துக்கட்டுவதற்காக ஆள் பிடிக்கும் அரசியல்.

   ஆள் பிடிக்கும் அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆதிக்க சாதிவெறியர்களோடு சேர்ந்து கொண்டு புரட்சிகர அமைப்புகளுக்கு எதிராக நிற்கும் வி.சி பிழைப்புவாதிகளின் அயோக்கியத்தனங்களைப் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே ? அதைப் பற்றி முதலில் சொல்லுங்கள்.

 7. இந்த நிகழ்வில் விசியை மட்டும் தனித்து பார்ப்பது தவறு. பொதுக்கூட்டம் நடைபெறும் நாளிற்கு முன்பாகவே, பாமக, சிஐடியு, விசி மற்றும் சில கண்ட்ராக்டர்கள் மற்றும் சில ரவுடி கும்பல்களிடையே ஒரு வானவில் கூட்டு உருவாகியுள்ளது. புஜதொமுவை இந்தப் பகுதியில் வளரவிட்டால் தொழிற்சாலைகளில் கட்டைப்பஞ்சாயத்து செய்து பொழைப்பு நடத்துவது இயலாததாகிவிடும் என்பதுதான் இவர்களின் கூட்டிற்கான காரணம். இதற்கு விசியை மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தப் பிரச்சினைக்கான கூட்டத்திற்கு மட்டுமல்ல இனி மற்ற பொதுக்கூட்டங்கள் நடத்துவதைக் கூட தடுக்கவேண்டும் என்றே திட்டமிட்டு உள்ளனர்.

 8. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் திட்டமிட்டு ஆதிக்க சாதிப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுவது, பணம் பறிப்பது என்று நடந்து கொள்வதாக
  this is true

 9. வி.சி கச்சியினர் மற்ற போருக்கிகளுடனும் ரவுடிகளுடனும் இரண்டறக் கலந்துவிட்ட்ட நிலையில், கட்டைப் பஞ்சாயித்துச் செய்து பிழைக்கும் இழிந்த துரோகிகள் என்ற ஒரு அடையாளம் மட்டுமே அவர்களுக்கென மிஞ்சியிருப்பது. எனில், வி.சி கச்சியைத் தனித்துப் பார்ப்பது இயலாத ஒன்றுதான். அவர்களது கொடியும் தலித் சாயமும்தான் அம்பலப்பட வேண்டியுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க