புதுச்சேரி : பாலியல் வக்கிரத்திற்கு எதிராக….

4

 

புதுச்சேரி புஜதொமு

டெல்லி மருத்துவ மாணவி மீதான பாலியல் கொடுமைக்கு இணையாக புதுச்சேரியிலும் பள்ளி மாணவி மீது பாலியல் வக்கிரம்!

புதுச்சேரி மாநிலம் கொத்தபுரி நத்தம் கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி நாகராஜ் என்பவரின் மகள் திவ்யா (17வயது) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் புதுச்சேரி அரசு மகளிர் மேநிலைப்பள்ளியில் +2 படித்து வருகிறார். கடந்த 1-1-13 அன்று மாலை டியூசன் சென்ற அவரை, ஏற்கெனவே நட்பு ரீதியாக பழகி வந்த முத்து என்பவன் திவ்யாவிடம் “உனது அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை” எனவும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகவும் பொய் சொல்லி கடத்திச் சென்றுள்ளான். தனது கூட்டாளி பொறியியல் கல்லூரி மாணவனான வெங்கடாஜலபதியையும் தொலைபேசி மூலமாக அழைத்து இருவரும் கூட்டாக விழுப்புரம் பேரூந்து நிலையத்தில் அந்த மாணவியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியில் மயக்கமடைந்த மாணவியை இறந்து போய் விட்டாள் என நினைத்து இரு காமவெறியர்களும் ஓடிவிட்டனர். பிறகு மயக்கம் தெளிந்த அந்த மாணவி தொலைபேசி மூலம் தனது பெற்றோர்களுக்கு விவரத்தை கூறி இருக்கிறாள். பின்னர் பெற்றோர்கள் காவல் துறையின் துணையுடன் மகளை மீட்டு புதுவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இரு காமவெறியர்களின் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தது.

இதைக் கேள்விபட்ட புஜதொமு தோழர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே புகுந்து பலத்த பாதுகாப்புடன் வந்த காமவெறியர்கள் இருவரையும் தூக்கில் போடு என்று முழக்கமிட்டனர். கோர்ட் வளாகத்திற்கு உள்ளேயே புகுந்து முழக்கமிட்டதால் பீதியடைந்த காவல்துறையினர் தோழர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தினையொட்டி புதுவை பகுதி முழுவதும் பேரூந்துகளில் சுவரொட்டி ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.

___________________________________________________________________

தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.

___________________________________________________________________

சந்தா செலுத்துங்கள்

ஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்!

4 மறுமொழிகள்

  1. // இதைக் கேள்விபட்ட புஜதொமு தோழர்கள், நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே புகுந்து பலத்த பாதுகாப்புடன் வந்த காமவெறியர்கள் இருவரையும் தூக்கில் போடு என்று முழக்கமிட்டனர். கோர்ட் வளாகத்திற்கு உள்ளேயே புகுந்து முழக்கமிட்டதால் பீதியடைந்த காவல்துறையினர் தோழர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.//

    அப்பா,எவ்வளவு பெரிய வீச்சான போராட்டம்.

  2. திரு ஆனந்த் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? எனில் போராட வேண்டும்.வாருங்கள் ஒன்றினைந்து போராடுவோம்.பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்காகவும்.நேற்றைய செய்தியை பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.டெல்லி பாலியல் வன் கொடுமை வழக்கை நீர்த்துப் போகச் செய்து விடுவார்களோ என்று தோன்றுகிறது. ஊடகங்கள் வழக்கு விசாரணையை செய்தியாக வெளியிடக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதே நிலமைதான் புதுச்சேரிக்கும்.நீதி கிடைக்க வேன்டுமெனில் போராடத் தயாராகுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க