Sunday, April 18, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!

பங்காரு அம்மாவின் சொத்தைப் பல் மோசடி!

-

ammaமேல்மருவத்தூர் அம்மா பங்காரு அடிகளாரை நிறுவிய தலைவராகவும், அவரது மனைவி லஷ்மி பங்காரு அடிகளாரை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் கொண்டு ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியின் நிர்வாக இயக்குனராக பங்காரு அடிகளாரின் இரண்டாவது மகன் செந்திலின் (சின்ன அம்மா) மனைவி ஸ்ரீலேகா செயல்பட்டு வருகிறார். 2012-ம் ஆண்டு எம்டிஎஸ் எனப்படும் பல் மருத்துவ மேற்படிப்புக்கான அனுமதி பெறுவதற்காக இந்திய பல் மருத்துவக் கழகத்திடம் கல்லூரி நிர்வாகம் விண்ணப்பத்திருக்கிறது.

அக்டோபர் 2012-ல் நடந்த ஆய்வில் கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இல்லாததை சுட்டிக் காட்டி அனுமதி மறுத்திருக்கிறது இந்திய பல் மருத்துவக் கழகம்.  டிசம்பர் 28-ம் தேதி கூடிய கல்லூரியின் நிர்வாகக் குழு இந்திய பல் மருத்துவக் கழகத்தின் உறுப்பினர் ராயப்பேட்டையைச் சேர்ந்த பல் மருத்துவர் டாக்டர் எஸ் முருகேசன் என்பவருக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்க முடிவு செய்திருக்கிறது.

இந்த முருகேசன் எஸ்ஆர்எம் பல் மருத்துவக் கல்லூரியின் டீன் (பொறுப்பு) ஆகவும் இருக்கிறார். சரியான உள்கட்டமைப்பு வசதி இல்லாத கல்லூரிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்திய பல் மருத்துவக் கழகத்தின் அனுமதி வாங்கிக் கொடுப்பதை முக்கிய தொழிலாக செய்து வருகிறார்.

ஆதிபராசக்தி கல்லூரியினர்  முருகேசனுக்கு லஞ்சம் கொடுக்கப் போவது பற்றிய தகவல் சிபிஐ அதிகாரிகளுக்குத் தெரிய வந்து ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் இருக்கும் அவரது கிளினிக்கில் ரெய்டு நடத்தினர். லஞ்சப் பணத்தின் முதல் தவணையாக ரூ 25 லட்சத்தை கொடுத்த போது, முருகேசனையும், கல்லூரியின் நிர்வாகச் செயலர் கருணாநிதி, நிர்வாக அலுவலர் கே ராம்பத்ரன் ஆகியோரையும் இடைத்தரகராக உடன் வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் ஆரணி எம்எல்ஏ டி பழனியையும் சிபிஐ அதிகாரிகள் ஜனவரி 8-ம் தேதி கைது செய்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சென்னை சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில்   8-ம் தேதி மாலை ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாட்கள் நீதி மன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கல்லூரியின் நிர்வாக இயக்குனரும் பங்காரு அடிகளாரின் மருமகளும் முன்னாள் காவல் துறை ஐஜி இளங்கோவனின் மகளான ஸ்ரீலேகா மீதும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறது சிபிஐ. கல்லூரியின் நிர்வாகக் குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களான பங்காரு அடிகளார் மீதும் லஷ்மி பங்காரு அடிகளார் மீதும் வழக்கு பதிவு செய்யவில்லை.

ஆன்மீகம் என்ற பெயரில் கடவுளுக்கு புரோக்கர் வேலை செய்யும் சாமியார்கள் பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லூரிகளையும் ஆரம்பித்து மக்களைச் சுரண்டி வருகின்றனர். நிலங்களை கைப்பற்றுவது, அதிகார வர்க்கத்தின் துணையை தேடிக் கொள்வது, அரசியல் கட்சி ரவுடிகளுடன் பரஸ்பர சகாய உறவுகளை ஏற்படுத்திக் கொள்வது என்று தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்கின்றனர்.

காஞ்சிபுரத்தின் சங்கர மடம்,  நிலங்களை வளைத்துப் போட்டு பல கல்வி நிறுவனங்களை நடத்துகிறது. இதே போன்று அமிர்தானந்த மாயி, சாயி பாபா உள்ளிட்டு பல்வேறு கார்ப்பரேட் சாமியார்கள் கல்விக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடவுள் பிசினசை விட கல்வி பிசினஸ் பல மடங்கு காணிக்கைகளை கொடுப்பதால் இவர்கள் தமது ஆன்மீக செல்வாக்கை வைத்து நடுத்தர வர்க்கத்திடம் பக்தி சுரண்டலோடு சேர்த்து கல்வி சுரண்டலையும் செய்து வருகின்றனர்..

1970கள் முதல் மேல்மருவத்தூரில் அத்தகைய ஆன்மீக சாம்ராஜ்யம் நடத்துபவர் பங்காரு அடிகளார்.  மெட்ரிகுலேஷன் பள்ளி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக், மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி என்று ஆரம்பித்து கல்வி வியாபாரத்தை பக்தியுடன் கலந்து மக்களிடம் கொள்ளை அடித்து வருகிறார். பங்காரு அடிகளாரின் மனைவியும் இரண்டு மகன்களும் திருமதி அம்மா, பெரிய அம்மா, சின்ன அம்மா என்ற பெயர்களில் வியாபாரத்தின் வெவ்வேறு பிரிவுகளை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் அ.தி.மு.க., தி.மு.க.  கட்சிகளைச் சேர்ந்த முன்னாள்/இன்னாள் அரசியல் வாதிகளான ஏ சி சண்முகம், விஸ்வநாதன், ஜேப்பியார் போன்ற ரவுடிகளுக்கும், அரசியல்வாதியாக வளர்ந்திருக்கும் பச்ச முத்து போன்ற கல்வித் தந்தைகளுக்கும் ஈடு கொடுத்து தமது சாம்ராஜ்யங்களை விரிவு படுத்தி வருகின்றனர்.

காஞ்சி சங்கராச்சாரி கல்வி நிறுவனங்களை நடத்தி மேட்டுக்குடி மக்களிடம் கொள்ளை அடித்துக் கொழுப்பது போல,  கீழ் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் ஆன்மீக நம்பிக்கையை மூலதனமாக்கி தமது வியாபாரத்தை நடத்துகின்றனர் பங்காரு அடிகளார் குடும்பத்தினர்.

அனைத்து மக்களுக்கும் தரமான, இலவசமான, தாய்மொழி வழிக் கல்வியை பட்ட மேற்படிப்பு வரை அரசே வழங்குவதற்கு மாற்றான எந்த ஒரு கல்வி முறையும் இது போன்ற வக்கிரங்களுக்கு வழி வகுக்கும் என்பதுதான் நிதர்சனம். மேல் மருவத்தூருக்கு பாத யாத்திரை போகும் செவ்வாடை பக்தர்கள் இனி புழல் சிறைக்குத்தான் போக வேண்டியிருக்கும். அம்மாவின் கிரிமினல் குற்றத்தை கண்ட பிறகாவது பக்தர்கள் திருந்துவார்களா?

படிக்க:

 1. I really appreciate your article which gives more valuable information on Bangaru Adigalar of Adi parasakthi temple in Mel Maruvathur.

  Though such valuable information are not appearing in “Hindu” paper which I purchasing but you are giving information free of cost is to be appreciated.

 2. வினவு இந்த பதிவில் பங்காருவோடு ஒட்டிக்கொண்டிருக்கும் “அடிகளார்” என்ற பதம் நீக்கப்பட கோருகிறேன்

 3. வினவு நீ சொல்வதை என்னால் ஏத்து கொள்ள முடியாது
  ஏன்னாநீ ஒருநாத்திக வாதி
  உனக்கு மருவத்தூர பத்தி என்ன தெரியும்
  வெரும் செய்திய வச்சிநீ உன் இஷ்டத்துக்கு எழுதாத
  உனக்கு வாய் மெல்ல இந்த விசயத்த கையில் எடுக்காத
  மேல் மருவத்தூர் கோவிலுக்கும் இந்த விசயத்துக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது
  ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கல்வி குழுமத்தில் எந்த ஒரு உறுப்பினர் பதவியிலும் இல்லை.
  அவரின் முழுநேர பணி ஆன்மீகம் மட்டுமே
  இது ஆதிபராசக்தி பக்தர்கள் அனைவரும் அரிந்ததே.
  னீ ஒருநாள் மருவத்தூர் வன்ட்கு பாரு அப்புரம் உனக்கு தெரியும்.
  அதே போல இங்கு(மருவத்தூரில்) சின்ன அம்மா, பெரிய அம்மா, அப்படியெல்லாம் யாரும் கிடையாது. திருமணமான பெண்ணை அழைக்கும் போது எப்படி திருமதியுடன் அவர் கணவர் பெயரையும் சேர்த்து அழைக்கிறோமோ அதே போல தான் பங்காரு அடிகளார் அவர்களின் மனைவியை திருமதி அம்மா என்று அழைக்கிறோம்
  ——-
  னான் மூட பழக்க வழக்கங்களைநம்பாதவன். ச்
  ஆனால் என்னால் ஆதிபராசக்தி அம்மனை உணர முடிகிறது
  செவ்வாய் வெள்ளி கிழைமைகளில் அசைவம் சாப்பிடுகிறேன். (வழிபாடுநாள்களை தவிர்த்து.)

  • தம்பி கார்த்திகேயா!நீ படிசவன்தன? உன்னுடைய பின்னூட்டு உனக்கே சிரிப்பு வரல? னீஙல்லாம் திருந்தவே மாட்டீங்கலா????

  • எல்லாம் ரைட்டுதான் ஆனா நீ எந்த கிழமையில் என்ன சாப்பிடுரன்னு யார் கேட்டா?

 4. னான் மூட பழக்க வழக்கங்களைநம்பாதவன். ச்
  ஆனால் என்னால் ஆதிபராசக்தி அம்மனை உணர முடிகிறது
  செவ்வாய் வெள்ளி கிழைமைகளில் அசைவம் சாப்பிடுகிறேன். (வழிபாடுநாள்களை தவிர்த்து.) திரு.கார்திகேயன் அவர்களே உங்கள் புகைப்படத்தை வெளியிட விருப்பம் இல்லையென்றால் அதை தவிர்த்திருக்கலாம். விஜய் என்ற நடிகனின் புகைப்படத்திற்குப் பின்னால் ஒழிந்து கொள்ள வேன்டும் என்ற மனநிலை உங்களுக்கு எப்படி வந்ததோ அதே போலத்தான் ஆந்திராவில் போலீஸ் வேலையில் இருந்த பங்காரு க்கு சாராயம் காய்ச்ச வேண்டும்,மாட்டிக்கொண்டு டிஸ்மிஸ் செய்யப்பட்டவுடன் தமிழ்நாட்டுக்கு ஓடிப்போகவேண்டும் என்றும் தோன்றியதும் உங்களைப் போன்ற மூடப்பழக்கவழக்கங்களை நம்பமாட்டேன் என்று சொல்லிக்கொண்டு அய்யப்பன் முருகன் ஆதிபராசக்தி வேளாங்கன்னி நாகூர் தர்கா என்று ஏதேனும் ஒரு போதைக்கு அடிமையாகக்கூடியவர்களை வைத்து ஆன்மீகத் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியதும். அதே நேரத்தில் சாராய போதையை விட ஆன்மீக போதையில்தான் அதிக வருமானம் என்பதை உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான அடிமைகள்(ஆன்மீக அடிமைகள்)மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருப்பதால் அந்த முன்னாள் சாராய வியாபாரி தனது தொழிலை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே செல்கின்றான்.அது போல தொழிலை விரிவு படுத்தும் அவசரத்தில் இது போல கையும் களவுமாக சிக்கிக்கொள்வதெல்லாம் சகஜம்.கம்பி என்னுவதும் பங்க்காருக்கு(அடிகளார் என்று சொல்லவேண்டாம் என ஒரு நன்பர் கேட்டுக்கொண்டதற்கினங்க)ஒன்றும் புதிதில்லை.பாவம் உங்களைப் போல அப்பாவி அடிமைகள் தான் ரொம்ப வெசனப்படுகிறீர்கள்.என்றைக்குத்தான் நீங்களெல்லாம் திருந்தப்போகிறீர்களோ என்னைப்போல.(நானும் ஒரு காலத்தில் பழனி மலை அல்லாவுக்கு அல்லேலூயா சொன்னவன் தான்.)ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன்.நானும் செவ்வாய் வெள்ளி மட்டுமல்ல வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் குறிப்பா பாப்பான் என்றைக்கெல்லாம் அசைவம் சாப்பிடக் கூடாதென்று சொல்கிறானோ அன்றைக்கெல்லாம் கண்டிப்பாக ஆடு மாடு பன்னி மீனு கோழி எல்லாம் சாப்பிடுவேங்க,,,அதுக்காக பங்க்காருக்கு சங்கராச்சாரிக்கு பாதிரியாருக்கு மயில் தோகையில் மந்திரிக்கிரவனுக்கெல்லாம் உங்களை மாதிரி அடிமையாக இருக்க முடியாது.பெரு மகிழ்ச்சியுடன் மக்களுக்கான போராட்ட களத்தில் நிற்பேன்.பட்டினியையும் ருசியுடன் அனுபவிப்பேன்.முடிந்தால் வந்து நின்று ஒரு நாள் வேடிக்கைப் பாருங்கள்.போரளிகள் மரணத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதை… வாழ்க்கையின் எதார்த்த உண்மைகளை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை……

 5. அது என்ன பங்காரு அடிகள்?

  கலியபெருமாள் படையாட்சி என்று

  சொன்னால் புரியாதா?

 6. அதெப்படி

  சரவணபவன் அண்ணாச்சியை கைது செஞ்சப்ப நாங்க அவர் கடைக்கு போகம இருந்தோமா?

  அவர் மேலும் கடை திறக்க ஆதரவு அளித்து வரோம்மல்ல

  சங்கராச்சாரி தண்டத்தை கீழே போட்டாமல் எடுத்து கொடுத்து சனாதனம் காப்போம்

  அப்படியே பங்காரு அம்மா பல கிளை திறக்கவும் ஆதரவு தருவோம்

 7. படையாச்சிகளுக்கு (வன்னியர்களுக்கு) பங்காரு, முதலியார்களுக்கு நித்தியா(னந்தா) – இவர் அகமுடைய முதலியாராக இருந்தாலும் இதற்கு முன்பு முதலியார்களால் போற்றப்பட்ட வேதார்த்திரி மகரிசி இறந்து போனதால் இப்போது நித்யாவே முதலியார்களின் ஏகபோக சாமி -, பார்ப்பனர்களுக்கு சிறீ சிறீ ரவி(சங்கர்), கொங்கு வெள்ளாளர்களுக்கு (கவுண்டர்)ஜக்கி வாசுதேவ், கள்ளர்களுக்கு பிரேமானந்தா – இவர் சிறையிலிருக்கும் போதே மண்டைய போட்டவர் – என சாதிக்கொரு சாமியார்கள் தமிழகத்தில் தோன்றியவண்ணம் உள்ளனர். தனது சாதிக்காரன் எத்தைகைய மாபாதகச் செயல்களைச் செய்தாலும் “அட நம்மாளுப்பா” என சமாதானப்படுத்திக் கொள்ளும் சாதிய மனப்பான்மைதான் மேற்கண்ட ஆசாமிகளின் பலம். “நம்மாளு” மனப்பான்மையிலிருந்து மக்கள் விடுபடாதவரை இத்தகையக்கேடிகள் பாதுகாப்பாகத்தான் வலம் வருவார்கள்.

  கோயில் மாடும் பிரேமானந்தாவின் மரணமும்.
  http://hooraan.blogspot.com/2011/01/blog-post.html
  சாமியார்கள் அத்துப் போனால் இந்து மதம் இத்துப் போகு…
  http://hooraan.blogspot.com/2011/02/blog-post_27.html
  சாமியார்களின் வலையில் விழும் பெண்கள்!
  http://www.hooraan.blogspot.in/2011/08/blog-post.html

  • பாசு சும்மா அப்பிடியே அடிச்சி விடாதீங்க …. ஜக்கி வாசுதேவ் கவுன்டர்ன்னு யார் சொன்னது …. எதையுமே ஆராயம சொல்வதுதான் புர்ச்சியா ? அவர் மைசூரை சேர்ந்தவர் விக்கிபீடியா விக்கிபீடியா … ன்னு ஒன்னு இருக்கு அதுல போயி பாருங்க பாசு ….. முதல்ல உன்மையை பேசி பழகுங்கள் அப்புறமா புர்ச்சி பன்னலாம்

 8. ஒரு சில கல்வி நிறுவணங்களைத்தவிற அனைத்து நிறுவணங்களுமே இப்படித்தான் நடக்கின்றன.கல்வித்தந்தைகளின் எண்ணிக்கைகளும் அதிகமாகி வருகின்றன.தரமற்ற மருத்துவர்களை தாரளமாக உருவாக்கி நாடு முழுவதிலும் உலவவிட்டு,எதிர் காலத்தை இருட்டாக்கும் சீரிய பணியில் இருக்கிறார்கள்.பல் மருத்துவம் மட்டுமல்ல அனைத்து மருத்துவமும் அப்படித்தான்.இவர்களுக்கு துணை போவது அமைச்சுப்பணியாளர் முதல் அரசியல் தலைவர்கள் வரை Medical council,Dental council,Nursing Council anaiththum அடக்கம். இந்த விஷயத்தில் அம்மாவும் ,அய்யாக்களும்,ஆத்தாக்களும்,பல அரசியல் தலைவர்களுக்கும் அவர்களின் உறவினர்களும்,பினாமிகளும் ஒரே மாதிரி தான்.இதில் மதத்திற்கு வேலையில்லை.இறைனவனை நம்புபவர்கள் தனி மனித வழிபாடு செய்வது சர்ச்சைக்கு உரியது,தனி விவாதம் தேவை.

 9. Tamilnadu is filled with a number of cowards who become slaves. One of the slavery medium is Religion. It is almost impossible to take the slave mentality out of our Tamil people

 10. ஓ. பங்காரு படையாச்சின்னு தெரியும். அப்ப முன்னாள் காவல் துறை ஐஜி இளங்கோவனும் படையாச்சி தான். சாதி விட்டு பங்காரு சம்பந்தம் பண்ணுவானா?

  ஜக்கி கவுண்டனா? அப்ப ஜக்கிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டியது தான், அது நம்ம கடமை அதைக்கூட செய்யலைன்னா கவுண்டனா இருக்கவே தகுதியற்றவன் நான். தகவலுக்கு நன்றி ஊரான்.

  பங்காரு வாத்தியார் வேலை பார்த்ததாக அல்லவா என் நண்பன் சொன்னான். அவனும் பங்காரு ஊரு தான் அதனால பங்காரு பண்ற வேலை எல்லாம் அவனுக்கு தெரியும். இங்க ஒரு நண்பர் பங்காரு ஆந்திராவில் இருந்த காவல்காரர் அங்க சாராயம் காய்ச்சி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்கிறார். ஒரே குழப்பமா இருக்கே. ஓ பங்காருவின் உண்மையான பெயர் கலியபெருமாள் படையாட்சியா? நண்பர்களால் பல தகவல்கள் தெரிகிறது.

  • //தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்மருவத்தூர் என்ற சிறிய கிராமத்தில், 3.3.1941}ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் கோபால நாயகர், தாயார் பெயர் மீனாம்பிகை அம்மாள். அவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். அடிகளார் குடும்பத்தில் இரண்டாவது மகன்//

   இப்டில அவக சொல்றாக, சாதி கலவரத்த தூண்டாதிங்கப்பா…

  • ‘கவுண்டன்’ என்றாலே தகுதி எதுவும் இல்லாதவன்னு தான் அர்த்தம் , அப்புறம் கவுண்டனா இருக்க தகுதி என்னவா இருக்க முடியும்? உன்ன மாதிரி முட்டாளா இருந்த போதுமா?

  • கலியபெருமாள் படையாட்சி,ஆசிரியர் வேலை பார்த்தார்….சம்பளம் போதவில்லை…
   சைடு பிசினசாக சாமியார் (பார்ட் டைம்) பார்த்தார்…பிசினஸ் பிக்கப் ஆனதும்,ஆசிரியர்
   வேலையை “உதறி” தள்ளினார்…
   காவடி,தீச்சட்டி சுமக்கும் செவ்வாடை தொண்டர்களுக்கு அருளாசி செய்து, நாலு காசு
   பார்க்கிறார்: ஏதொ பொழப்பு நடக்குது: கலியபெருமாள் குடும்பம் 3 வேளை நிம்மதியா
   சாப்பிடுது….

   • ஆனால்.பங்காரு அம்மன் சுயம்பு(ஆடோமேடிக்) யாரும்
    பிரதிஸ்டை பண்ணவில்லை…நம்புங்கள்…அம்மன் மேல சத்தியம்

   • பங்காரு அவர்கள் தமிழனல்ல, அவர் ஒரு தெலுங்கன் என்று தான் ஒரு தெலுங்கு நண்பர் கூறினார். பங்காரு என்ற பெயரே தெலுங்கு தானாமே. 🙂

    • அது என்ன?
     ஏமாற்றுப் பேர்வழிகளை தெலுங்கன் என்று?
     படையாட்சி தெலுங்கில் வராது வியாசன்:
     தெலுங்கில் வருவது: கல்கி(குமுதம் வகையரா அல்ல)
     சுவாமிகள்…அவரும் பள்ளிக்கூடம் வைத்து நடத்தினார்…ஒப்பேறவில்லை: இருக்கவே இருக்கு
     சாமியார் வேசம்

     • பங்காரு தமிழரல்ல, அது தெலுங்குச் சொல் என்று கூறுகிறார்கள். ஆனால் படையாட்சிகள் தமிழர்கள். தென்னாபிரிக்காவில் அமைச்சராக இருந்த புகழ்பெற்ற படையாட்சி, ராமகிருஷ்ண படையாட்சி, தமிழீழ விடுதலைக்காக முழுமூச்சாக உழைத்தவர்.

 11. பங்காரு வாத்தியார் வேலை பார்த்ததாக அல்லவா என் நண்பன் சொன்னான். அவனும் பங்காரு ஊரு தான் அதனால பங்காரு பண்ற வேலை எல்லாம் அவனுக்கு தெரியும். இங்க ஒரு நண்பர் பங்காரு ஆந்திராவில் இருந்த காவல்காரர் அங்க சாராயம் காய்ச்சி பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்கிறார். ஒரே குழப்பமா இருக்கே. //தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மேல்மருவத்தூர் என்ற சிறிய கிராமத்தில், 3.3.1941}ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய தந்தையார் பெயர் கோபால நாயகர், தாயார் பெயர் மீனாம்பிகை அம்மாள். அவருடைய குடும்பம் விவசாயக் குடும்பம். அடிகளார் குடும்பத்தில் இரண்டாவது மகன் எனக்கும் சற்று குழப்பமாக உள்ளது. வினவு இதனை தெளிவுபடுத்தவேண்டும்.எனது தகவல் தவறெனில் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். ஏகப்பட்ட சாமியாருங்க வந்து கொழப்பிட்டாய்ங்கப்பா..தோழர்களிடம் இருந்து சரியான தகவலை எதிர்பார்க்கிறேன்..

 12. ஆதீனங்களின் கொடுமை தாங்காத கீழத் தஞ்சை விவசாயிகள், பெரும் போராட்டம் நடத்தியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றி விரிவாக எழுதுங்களேன்.

 13. கள்ளநோட்டு புகழ் பங்காருக்கு அடிமை கூட்டம் பெரும்பலமாக மாறியபிறகு இவனே அம்மனாகமாறி ராஜ் டிவி யில காலையில் சித்தர் பீடம்னு புரோக்கிராம் போட்டு அடடா!!
  நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்கலடா….

 14. கல்வி தந்தை வரிசையில் தினகரனின் காருண்யாவையும் சேர்த்துககொள்ளவும்.

 15. இந்த பக்கிய பத்தி சவுக்கு அண்ணன் தெளிவா ஒரு கட்டுரை போட்ருக்காரு. இவன் பெத்ததுகளும் ஆளாளுக்கு அடிசுகுதுங்கலாமே? நாட்டுக்கு நல்லது தான்.

 16. தனியார் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசுடமை/பொதுவுடமை ஆக்குவதொன்றே வழி. அதற்கு சரியான அரசு வேண்டும், சட்ட மாறுதல்வேண்டும் இன்னும் பயணம் போக வேண்டிய பாதை இந்தியாவில் வெகுவாக நீண்டு கொண்டே இருக்கிறது

 17. எல்லா சாமியாரையும் நார் நாராக கிழிந்து தொங்கும்போது
  இதில் படையாட்சி என்ன,முதலியார் என்ன?
  எல்லா மட்டையும் ஒண்ணுதான்

 18. வேலூர்,சித்தூர்பகுதிகளில் இந்த பெயர் பிரசித்தம்! கவுண்டர் சாதி என்று சொல்லிக்கொண்டாலும், வன்னிய பிரிவினரே! விஜயநகர ஆட்சியிலிருந்ததால் இப்பகுதிகளில் தெலுங்கு, தமிழ் இரண்டுமே பேசுவர்! நாயகர், சேர்வை , மந்திரி,சேனாபதி, சேனைதலைவர் என்ற சாதி உட்பிரிவுகள் உண்டு! பஙகாரு அம்மன், காஞ்சி காமாட்சி போல சிலருக்கு குல தெய்வமாக இருக்கலாம்! கடலூர்,தஞ்சை மாவட்டங்களில் படையாட்சி என்ற வன்னிய உட்பிரிவினர் உண்டு! பொதுவாக எல்லா வன்னிய உட்பிரிவினரும் மாரியம்மன், வீரன், காளி போன்ற போர்த்தெய்வங்களை குல தெய்வங்களாக வணங்குபவர்கள்! தேவர் சாதியினரைபோல, படையில் பணிபுரியும் ஆற்றல் உள்ளவர்களாதலால் படையாள்கள் , படையாட்சி என்று கூறிக்கொள்கின்றனர்! கோழி, ஆடு பலி கேட் கும் கிராம தேவதைகளை வணங்கி, குறிசொல்லுதல், சாமியாடுதல், மாடுவிரட்டல் போன்ற அரிய தமிழ் பண்பாடுகளும் இன்றளவும் மாறாமல் கடைபிடிக்கின்றனர்! வேப்பமரம், புற்றுகோவில்களை உருவாக்கி சுயம்பு சாமி வரவழைத்தல் முதலிய ஆன்மீக பணிகள் இன்றும் நடக்கின்றன!

  பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக்கட்சியை அழிக்க ராஜாஜி இவர்களை பயன்படுத்தி கொண்டார்!நீதிகட்சி அணியில் தெர்தலில் போட்டியிட்டு, ஆட்சி அமைக்கும்போது ராஜாஜி பக்கம் தாவிய முதல் கட்சி மாறி தமிழர் ராமசாமி படையாட்சியார், இன்றைய ராமாதாஸின் முன்னோடி! பாமர மக்கள் பின்புலம் இருப்பதாலும், திராவிட் இயக்கம் இருக்கும்வரை, உறவாடி களவாடும் எதிரணி தேவைபடுவதாலும் பஙகாருக்கு ஆபத்தில்லை!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க