privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் - 14/01/2013

ஒரு வரிச் செய்திகள் – 14/01/2013

-

செய்தி: சென்னையில் ஏழைகள், கூலி வேலை செய்பவர்களுக்காக 1000 சலுகை விலை உணவகங்களைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி: தினமும் டாஸ்மாக்கிற்கு ரூ.100 மொய் எழுதி தமிழக அரசை வாழவைக்கும் ஏழைகளுக்கு பத்து ரூபாயில் உணவு போடும் மனிதாபிமானமும், கையேந்தி பவன்களை ஒழித்து பெரிய உணவகங்களை வாழவைக்கும் தொலை நோக்குத் திட்டமும் ஃபுல் அரிக்க வைக்கிறது.

_____

செய்தி: தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு இளைஞர்கள் அடிமையாகிவிட வேண்டாம் என ‘தினமணி’ கார்ட்டூனிஸ்ட் மதி கேட்டுக் கொண்டுள்ளார்.

நீதி: மதி, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமணி முதலாளி அனைவரும் ஜெயலலிதாவுக்கு அடிமையாக இருக்கும் போது ஒரு இளைஞர் செல்பேசிக்கு அடிமையாக இருப்பதால் என்ன பாதிப்பு நடந்து விடும்?

_____

செய்தி: திங்கட்கிழமை மாலை சபரிமலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை காட்சியளிக்கும் மகர ஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

நீதி: கேரள மின்வாரியம் மலையுச்சியில் ஆள் போட்டு பிடிக்க வைக்கும் இந்த செட்டப் ஜோதியைக் காணவா இவ்வளவு கூட்டம் என்று ஐயப்பனே வெட்கப்படுகிறாராம்.

_____

செய்தி: ராகுல் காந்திதான் எங்கள் தலைவர்; வரும் மக்களவைத் தேர்தலில் அவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்துவார் என எதிர்பார்ப்பதாக மத்திய செய்தி-ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி கூறியிருக்கிறார்.

நீதி: காங்கிரஸ் கட்சியினர் சாகும் வரை நேரு குடும்பத்தின் அடிமைகள் என்பதை சாகும் வரை ஓதிக்கொண்டே இருப்பார்களோ?

_____

செய்தி: 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா, இந்த ஆண்டு திங்கள் கிழமை தொடங்குகிறது. மகரசங்கராந்தி தினத்தில் துவங்கி மகாசிவாரத்திரியில் நிறைவடையும் இந்நிகழ்வின் போது கோடிக்கணக்கானோர் கங்கையில் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீதி: போராட்டத்தில் குதிக்க வேண்டிய மக்கள் ‘புனித’ அழுக்கு கங்கையில் குளிப்பதால் வாழ்க்கையும் மாறாது, அரிப்பும் நிற்காது.

_____

செய்தி: ஆதரவற்ற ரசியக் குழந்தைகளை அமெரிக்கா தத்து எடுப்பதை தடை செய்யும் சட்டத்தை எதிர்த்து மாஸ்கோவில் ஆயிரக்கணக்கானோர் உறையும் பனியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீதி: சோசலிசத்தை ஒழித்த முதலாளித்துவ ரசியாவில், அநாதைகள் வாழ முடியாது என்பது யாருக்கு அவமானம்?

_____

செய்தி:  பிரதிபா பாட்டீல், ஜனாதிபதியாக இருந்தபோது, 12 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார்; 22 நாடுகளுக்கு சென்றதில், 205 கோடி ரூபாய் செலவானதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நீதி: ரப்பர் ஸ்டாம்பே ஆனாலும் நாலு ஊர் சுற்றிப் பார்க்கும் ஆசை இருக்காதா?

_____

செய்தி: 14வயதுக்குட்‌பட்டோர் மும்பை கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் தேர்வு செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீதி: தொழில், அரசியல், சினிமா, பத்திரிகைகள் என்று தொடரும் ராஜ குடும்ப வாரிசுப் பாரம்பரியத்தில் கிரிக்கெட்  இல்லை என்ற குறையை சச்சின் நீக்கியது சாதனையில்லையா?

_____

செய்தி: வெனிசுலா அதிபர் ஹூகோ சாவேஸ் தனது உயிரை காப்பாற்ற போராடி வருகிறார் என முன்னாள் துணை அதிபர் எலியாஸ் ஜாவ்வா தெரிவித்துள்ளார்.

நீதி: சாவேஸ் பிழைப்பதற்க்காக வெனிசூலா மக்கள் பிராத்தனை செய்வார்கள். சாவதற்காக அமெரிக்கா காத்திருக்கும், முடிந்தால் முயற்சியும் செய்யும்.

  1. கடந்த 10-01-2013 ஈஅ நாளிட்ட ரினமலரில் 13ஈஅ பக்கத்தில் ஒரு செய்தி……சபரிமலையில் மகர ஜோதி ஏற்ற தேவஸ்சம் போர்டுக்குமட்மே அனுமதி…..பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி எங்கள் பாரம்பரிய உரிமைஅதைத்தடுக்கக்கூடாது என்று அங்குளளமவாழ் மக்கள் சங்கங்கள் போராடிவரகின்றன….
    கேரள அய்க்கோர்ட் உத்தரவின்படிதான் அங்கு தேவஸ்சம் போர்ட் மகர ஜோதி ஏற்றிவருகிறது…..
    தேவஸ்சம் போர்ட்நியமிக்கும் அநுபவமிக்க மேல்சாந்தி மற்றும் அவரது குழுவினர்மதன் பொன்னம்பல மேடு சென்று பூஜைகளைநிர்வகிப்பர் இதில் உரிமை கோரி போராட்டம் நடத்துவது ( மலைவாழ் மக்கள்)சரியல்ல என்று சுபா வாசு தேரிவித்தார்….படித்தீர்களா செய்தியை …..மகர ஜோதி என்பதில் எந்த மகிமையும் இல்லை என்று பகுத்தறிவாளர்கள் எப்போதோ சொல்லியாயிற்று (கேரள பகுத்தறிவாளர்கள்கழகக்குழுவினர் நேரே பொன்னம்பல மேட்டிற்கே சென்று தேவஸ்சம் போர்டின் குட்டை உடைக்க, மகர ஜோதியை ஏற்றும் ஆளைப்படம் பிடித்துக்கொண்டு, தாங்களும் ஒரு மகர ஜோதி ஏற்றி, வானொலி வர்ணனையாளர் ஆகா இரண்டு ஜோதி தெரிகிறது என்று குழம்பிப்போய் மூட்டை கட்ட, காவல்துறை அடித்து உதைத்து பிலிம் ரோலை பிடுங்கிக் கொள்ள பதுக்கிய பிலிம் ரோல் மூலம் உண்மையை உலகுக்குக்காட்டினார்கள். அப்போது முதல்வராகஇருந்த ஈ.கே. நாயனார் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக நான் ஏதும் செய்ய முடியாது என்று கை விரித்து விட்டார்…..இப்போது உண்மை அவர்கள் வாயாலேயே வெளிவருகிறது

  2. இது போல இச்லாம் & கிருத்துவ சமய முட்டாள் தனங்கலை வினவு கமென்ட் பன்னுமா? பண்ணினால் இனையதளமே இருக்காது.

  3. செய்தி: திங்கட்கிழமை மாலை சபரிமலை பொன்னம்பல மேட்டில் மூன்று முறை காட்சியளிக்கும் மகர ஜோதியைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.

    நீதி: கேரள மின்வாரியம் மலையுச்சியில் ஆள் போட்டு பிடிக்க வைக்கும் இந்த செட்டப் ஜோதியைக் காணவா இவ்வளவு கூட்டம் என்று ஐயப்பனே வெட்கப்படுகிறாராம்.
    ithu engu suthamaka peideikavellai iva vakeiyam en manathai cetharateika vaikuthu ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க