Saturday, April 17, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா மாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம்!

மாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம்!

-

மாலி வரைபடம்மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி மீது பிரான்ஸ் இராணுவத் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசுலாமிய தீவிரவாதிகள் தென்பகுதிகளை நோக்கி நகர ஆரம்பித்த போது அவர்கள் மீது பிரான்ஸ் வான் வழித்தாக்குதல்களை நடத்தியது.

250 கிலோ எடையிலான குண்டுகளை வீசி கடநத 5 நாட்களாக தாக்கிய பிறகும் இஸ்லாமிய போராளிகளின் முன்னேற்றத்தை பிரான்சால் தடுத்து நிறுத்த முடியவில்லை. மாலியின் மத்தியப் பகுதியில் உள்ள 35,000 பேர் வசிக்கும் டயாபலி என்ற இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரையும் இராணுவ முகாமையும் போராளிகள் கைப்பற்றியுள்ளனர். மத்திய மாலியின் முக்கிய நகரமான செகவ் நகரத்தில் வசிக்கும் 60 பிரெஞ்சு நாட்டினரை பிரான்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றியிருக்கிறது.

இந்தச் சூழலில் மாலிக்கு அனுப்பப்படும் தரைப்படையினரின் எண்ணிக்கையை மூன்று மடங்காக்கி 2,500 ஆக உயர்த்தப் போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. ஐவரி கோஸ்டில் நிறுத்தப்பட்டிருந்த பிரெஞ்சு படைகள் தரை வழியாக மாலிக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வடக்கு ஆப்பிரிக்காவில் லிபியா, சிரியா, ஐவரி கோஸ்ட், மாலி என்ற நான்கு நாடுகளின் மீது போர் தொடுத்து பிரான்ஸ் தனது முன்னாள் காலனிகளின் மீது நவீன காலனியாதிக்கத்தை செலுத்தியிருக்கிறது.

2011ல் லிபியாவில் கடாபியின் அதிகாரத்தை ஒழித்துக் கட்டிய பிறகு மேற்கத்திய நிறுவனங்கள் பல லடசம் கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் வளங்களை கைப்பற்றியிருக்கின்றன. கடாபியின் ஒருங்கிணைப்பில் செயல்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்திய கூட்டமைப்புகள் கலைக்கப்பட்டு அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்கா முழுவதும் இராணுவத் தளங்களை அமைக்க ஆரம்பித்திருக்கின்றன.

மாலியில் பிரெஞ்சு படைகள்
மாலியை ஆக்கிரமிக்கும் பிரெஞ்சு படைகள்

2011ல் பிரான்ஸ் ஐவரி கோஸ்டின் உள்நாட்டு போரில் தலையிட்டு தனது கைப்பாவையான அலசானே அவுத்தாரா என்பவரை அதிபராக்கியது.  செனகலில் அமெரிக்க, பிரெஞ்சு ஆதரவுடன் நடந்த எதிர்க் கட்சி போராட்டங்களின் மூலம் மேக்கி சால் என்பவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அல்ஜீரிய அரசுடன் பிரான்ஸ் பல ஆயிரம் கோடி யூரோ மதிப்பிலான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறாக தனது ஆதிக்க வளையத்தை உருவாக்கியுள்ள பிரான்ஸ் அடுத்த கட்டமாக மாலியின் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை செலுத்துகிறது.

கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய போராளிகள் லிபிய இராணுவத்தில் பணி புரிந்த துவாரக் இன வீரர்களும் சேர்ந்து கொண்டு மாலியின் வடபகுதியை கைப்பற்றினர்.  மாலியில் கலகத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்த இராணுவ தளபதிகளுக்கு எதிரான இராணுவ வீரர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டார்கள்.

இவர்களுக்கு எதிராகத்தான் பிரான்ஸ் இப்போது இராணுவ நடவடிக்கை எடுக்கிறது. அதன் காலனிய கைப்பாவை அரசுகளான ஐவரி கோஸ்ட், நைஜர், செனகல், நைஜீரியா போன்ற நாடுகள் பிரான்சுடன் இணைந்து கொள்ள ஆயிரக்கணக்கான படையினரை அனுப்ப திட்டமிட்டுள்ளன. அல்ஜீரியா பிரான்சின் வான் வழித்தாக்குதல்களுக்கு வசதியாக தனது தளங்களை திறந்து விட்டிருக்கிறது.

தமது உலகளாவிய ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் நீட்சியாக அமெரிக்காவும் பிரான்சும் ஆப்பிரிக்க நாடுகளின் மீது இராணுவ ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.  ஏகாதிபத்திய படைகள் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் கோரிக்கை.

மேலும் படிக்க

 1. தீவிரவாதிக்கு பெயர் சமாதானவாதி
  சமாதானவாதிக்கு பெயர் தீவிரவாதி.

 2. Nagaraj, I am not supporting corporates. But the tone of the article deviates from condemning France to supporting terrorism. How many sufi masques are destroyed in this battle? Do we want the same fate of Bhamiyan Buddha happen to everything else but sunni mosques?

 3. ஆப்கான்ல கம்யூனிச ருஷ்ய ராணுவம் வாங்கிக்கட்டிக்கிட்ட மாதிரி, மாலில பாவம் பிரான்ஸ் ராணுவம் அடி வாங்கும்னு பயப்படறிங்களா. ரெம்ப தான் அக்கறை.

 4. உங்களது இந்தக் கட்டுரையை படித்த போது யானையை பார்த்த பர்வையற்றவன் கதை தான் ஞாபகத்துக்கு வந்தது.
  பிரான்ஸ் செய்வது சரியா என்பதற்கு அப்பால் இந்த இஸ்லாமிய அடிப்படை வாதம் சரியத் சட்டத்தின் ஆட்சியை நிலையிறுத்துகிறொம் என்று சொலிக் கொண்டு மாற்று மத மற்று கலாச்சார மாற்று அரசியல் வழிமுறை கொண்டவர்கள் அழித்தொழிப்பதும் தலைவெட்டுவதும் கைவெட்டுவதும் சவுக்கடி கொடுப்பதும் பள்ளிகளுக்குள் புகந்து ஜிகாத் என்ற பேரில் குழந்தைகளை சுட்டுக்கொல்வதும்? போது இடங்களிலில் குண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்றுவிட்டு இஸ்லாத்தின் எதிரிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று 10ம் 14 ம் நூற்றாண்டு தலைக்குத்தலை பழிக்குபழி என்ற காட்டமிராண்டித் தனத்தை இப்போதும் பிடித்துக் கொண்டு தொங்கும் இந்த கும்பலுக்கு இஸ்லாமிய போராளிகள் என்ற மகுடம் வேறு.
  உண்மையில் பாலஸ்தீனத்தின் பிஎப்எல்பி மற்றும் குர்திஷ் விடுதலை இயக்கத்தினரை அவர்களிடம் வலது சந்தர்ப்பவாத தவறுகள் இரந்தாலும் நான் இஸ்லாமிய போராளிகள் என்று ஒத்துக்கொள்வேன்.
  பொதுவுடமை சிந்தனையை சாதாரண முதலாளித்துவ ஜனநாயகக் கட்டமைப்பின் சிவில் நிர்வாகச் சட்டங்களை கூட மறுதலிக்கும் இந்த அடிப்படைவாதிகளை உங்கள் கட்டுரையில் அம்பலப்படுத்த தவறியது ஏன்?

  • Well said Siva. I oppose Israeli ad American agressions. But can’t really support these islamic terrorists. They are even destroying Sufi mosques. Does your religion teach you to destroy places of worship of others?

 5. ///மாலியின் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இசுலாமிய தீவிரவாதிகள் தென்பகுதிகளை…///

  அடுத்த பத்தியில்
  //இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நகரையும் இராணுவ முகாமையும் போராளிகள் கைப்பற்றியுள்ளனர்…//

  அவுங்க இசுலாமிய தீவிரவாதிகளா??? போராளிகளிகளா???

 6. Islamist terrorists now spreading to Africa and this terrorists were almost crushed both in Algeria and Mali and the rest of this terrorists would be cleaned in a couple of days with the help of French troops.

  • மிஸ்டர். பல்லு, நீங்கள் ஒரு மனோதத்துவ நிபுணரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க