Sunday, April 18, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம் !

பியூஸ் போன ரஜினிக்கு சொம்படிக்கும் குமுதம் !

-

ரஜினி கார்ட்டூன்மிழ் மக்களின் சுயமரியாதையை ஒழித்து அடிமைத்தனத்தைக் கற்றுத் தருவதில் பல பத்திரிகைகள் நம்பர் 1க்குப் போட்டி போடுகின்றன. 20.1.13 தேதியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழ், “காத்திருக்கும் அரசியல் புயல்” என்று ரஜினியைக் குறித்து ஒரு அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. கவர் ஸ்டோரி என்றால் அது ஏதோ மிகப்பெரும் செய்தி அலசல் என்று நினைத்து விடாதீர்கள். இது “சுவாமி வம்பானந்தா” என்ற கிசுகிசு மாமாவின் பக்கத்தில் வருகிறது. ஜூனியர் விகடனின் கழுகுக்குப் போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த மாமா, சிஷ்யை எனும் பெண்பால் பாத்திரத்தின் மூலம் கவர்ச்சியுடன் வாரம் இரண்டு முறை மேல் மட்ட கிசுகிசுக்களை வாந்தி எடுக்கும் இழிவான ஜன்மம்.

ரஜினி, தனது பிறந்த நாளைக் கொண்டாடிய ரசிகர்களை, புத்தாண்டில் சந்தித்து பேசினாராம். அப்போது இந்த வம்பானந்தா கூட இருந்த ரசிகர்களை சந்தித்து இந்த சேதிகளை தயாரித்து எழுதுகிறார். ரசிகர்களை சந்தித்த ரஜினி முழுக்க அரசியலைப் பேசிக் கொண்டு இருந்தாராம். ரசிகர்களுக்கு தெரிந்த அரசியல் அறிவில் கடுகளவு கூட தெரிந்திராத ரஜினி என்ன பேசியிருப்பார்? குஜராத்தில் நான்காவது முறையாக முதல்வர் பதவியைப் பிடித்த மோடியை உதாரணம் காட்டிய ரஜினி, “மோடி மக்களுக்காக நல்லது பல செய்தாலும் படுத்துக் கொண்டே ஜெயிக்க முடியவில்லை, கஷ்டப்பட்டுத்தான் ஜெயித்திருக்கிறார், இதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை” என்றாராம்.

இவர்கள் கிசுகிசுவாகவும், பரபரப்பிற்காகவும் செய்திகளை கேட்டோ இல்லை இட்டுக்கட்டியோ எழுதினாலும் உண்மையை ஒளித்து வைக்க முடியாது என்பதற்கு இதுவே சான்று. நரவேட்டை மோடியை சிலாகித்துச் சொல்லுமளவு ரஜினியின் இதயமும் பாசிசத்தின் செல்வாக்கில் இருப்பது ஒருபுறம். இன்னொரு புறம் அத்தகைய மோடி கூட படுத்துக் கொண்டே ஜெயிக்கவில்லை என்பதன் மூலம் ரஜினி என்ன கூற வருகிறார்?

அரசியல் என்பது நோகாமல் நொங்கெடுத்து வயிறார தின்ன வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அவரது திரைப்படத்தில் பாம்பையோ இல்லை பந்தையோ வைத்து ஊதி ஊதியே வில்லன்களை பந்தாடுவார் இல்லையா? அது போல அரசியலிலும் எந்த கஷ்டங்களும் இன்றி பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ரஜினி சொல்ல வரும் கருத்து. எனில் இத்தகைய மைனர்களெல்லாம் தற்செயலாக ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை கதறக் கதற ‘கற்பழிப்பார்கள்’ என்பதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

அடுத்து ‘ஒரு கட்சியில் ஒருவருக்கு சீட் கொடுத்தால் அவரது எதிரணியினர் போய் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்குவது போன்ற மனநிலையில்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள்’ என்று ரஜினி கவலைப்படுகிறாராம். இப்படிப்பட்ட தொண்டர்களால்தான் கட்சிக்கு கெட்ட பெயர் என்பதால் தொண்டர்கள் கட்டுக்கோப்போடு இருப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறாராம். எல்லா ஓட்டுக்கட்சிகளும் தலைமை முதல் தொண்டர்கள் வரை சுயநலம், பதவி, அதிகாரம், ஊழல், சொத்து என்று செயல்படுவதால் பதவி கிடைக்காத பேர்வழிகள் இப்படித்தான் அதிருப்தியாளர்கள் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

ஆனால் ரஜினியே ஒரு பிரம்மாண்டமான சுயநலமாக இருப்பதால் இது அவருக்கு புரியவில்லை. ஆனால் எது எப்படியோ தலைமை எப்படி இருந்தாலும் தொண்டர்கள் முழு அடிமைத்தனமாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறார். இந்த விசயத்தில் இவரை ஆம்பளை ஜெயலலிதா என்றும் அழைக்கலாம். பாசிஸ்டுகளுக்கு ஏது பால பேதம்?

“கடையை ஆரம்பிப்பது விஷயமல்ல, கடையை ஆரம்பித்தால் வெற்றி பெறணும், அதற்கான சூழ்நிலை அமைய வேண்டும், அதுவரைக்கும் காத்திருக்க வேண்டும்” என்று ரஜினி சொன்னாராம். கொள்கையே இல்லாத ஒரு நபர் தனது கவர்ச்சியை மட்டும் மூலதனமாக வைத்து கட்சி ஆரம்பித்தால் இப்படித்தான் யோசிக்க முடியும். இதற்கு சரவணா ஸ்டோர் அண்ணாச்சியே மேல். தனது சொந்த நேர்மையின் மேல் நம்பிக்கை இல்லாத நபர்தான் மற்ற சூழ்நிலைகள் விபத்து போல் தரும் வாய்ப்புகளை பற்றிக் கொண்டு மேலே ஏற கனவு காண முடியும். அரசியல் என்பது அண்ணாமலையில் பால்காரன் கோடிசுரவனாக மாறியது போல ரஜினி புரிந்து வைத்திருக்கிறார். போகட்டும், இந்த அளவாவது ‘யோசிக்கிறாரே’ என்று நமக்குத்தான் ஆச்சரியம்.

“எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தமிழ்நாட்டில் மூன்று கட்சிகள்தான் இருந்தன, அதனால் அவரால் ஜெயிக்க முடிந்தது, இப்போது நிறைய கட்சிகள், ஜாதிக் கட்சிகள்….இதையெல்லாம் தாண்டி அரசியலில் ஜெயிக்கணும்னா அசுர அலை வரணும், அதுவரைக்கும் காத்திருங்கள்” என்று ரஜினி மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டே கூறினாராம்.

எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போது தி.மு.க, காங்கிரசு போக யார் அந்த ரஜினியின் மூன்றாவது கட்சி? ஒரு வேளை போலிக் கம்யூனிஸ்டுகளாக இருக்குமோ? இது மட்டும் அவர்களுக்கு தெரிந்தால் ‘சூப்பர் ஸ்டாரே நம்மையும் ஒரு பொருட்டாக மதித்து மூன்றாவது கட்சி என அங்கீகரித்திருக்கிறாரே, அவரது இதயத்தில் நமக்கும் ஓர் இடமிருக்கிறதே’ என நன்றிப் பெருக்கால் தீக்கதிரில் ரஜினி சிறப்பிதழ் வெளிவருவது உறுதி.

எம்.ஜி.ஆர் மாதிரி குறைவான கட்சிகள் ஓரிரண்டு இருந்தால் தனது வெற்றி சுலபம் என்று ரஜினி கருதுவது நாம் ஏற்கனவே சொன்னது போல சைக்கிள் சுற்றுகிற நேரத்தில் கதாநாயகன் முதலாளியாவதாக கற்றும் தரும் தமிழ் சினிமாவின் அசட்டு உளவியல் பாதிப்பில்தான் ரஜினி இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது. சிகரட்டை தூக்கிப் போட்டு தம்மடிப்பதை வைத்து ஆளானவரெல்லாம் அரசியல் குறித்து யோசித்தால் சாக்ரடிசாகவா பேச முடியும்? சாக்கடையாகத்தான் உளற முடியும்.

96-ல் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார் என்று இடையில் குமுதத்தின் வம்பானந்தா வருத்தப்படுகிறார். ஆனாலும் ரஜினியை கைவிடவில்லை. அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்படும் போது உள்ளே வரலாமென அவர் நினைக்கலாம் என்று குமுதம் ரிப்போர்ட்டர் எழுதுகிறது. ரஜினியே பதறியடித்து ஓடினாலும் இந்த ஊடக மாமாக்கள் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இதுதான் ரஜனிக்கும் நாம் உண்மையிலேயே பெரிய ஆள் என்ற மயக்கத்தை தோற்றுவிக்கும். அவ்வகையில் ரஜினி என்ற கோமாளி பலூனை ஊதுபவர்கள் இத்தகைய விபச்சார ஊடகங்கள்தான்.

ரஜினியின் அரசியல் ஆலோசகர்கள் பலரும் சொன்ன அறிவுரைப்படிதான் அவர் ரசிகர்களுடன் போட்டோ எடுப்பதை நிறுத்திக் கொண்டாராம். அப்போதுதான் அவரைப் பற்றிய ஆர்வம் ரசிகர்களுக்கு இருக்குமென்று அந்த ஆலோசகர்கள் சொன்னதாக வம்பானந்தா அடித்து விடுகிறார். இது உண்மை என்றால் ரசிகர்களைப் பற்றி ரஜினி எவ்வளவு கேவலமாக கருதுகிறார் என்று தெரிகிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் தங்களது தனிமையை, ‘சுதந்திரத்தை’ இழந்து விடுவார்களென ஒரு ஒப்பாரியை எல்லா நடிகர்களும் வைப்பார்கள். அதாவது அந்த நட்சத்திர அந்தஸ்தினால் வரும் பணம் மட்டும் அவர்களுக்கு தேவை. அந்த பணத்தை தரும் ரசிகர்கள் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. ரஜினி ரசிகர்களை சந்திக்காமல் இருப்பதும் இப்படித்தான். ஆனாலும் சிவாஜி, எந்திரன், கோச்சடையான் என்று தனது சினிமாக்கள் பெருவெற்றி பெற்று வசூலில் தனது கழிவுத்தொகை கொட்ட வேண்டுமென்றால் மட்டும் அவர் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுப்பார். மற்ற நேரங்களில் அந்த அரசியல் ஆலோசகர்கள் மேல் பழியைப் போட்டு பதுங்கிவிடுவாராம். ரஜினி ரசிகனே இதைக் கேட்டாவது நீ ‘தற்கொலை’ செய்து கொள்வாயா?

பாசிச ஜெயலலிதாவின் ஊடக பாதந்தாங்கியாக செயல்படும் குமுதம் மாமா, ரஜினியை இப்படி ஊதிப்பெருக்கினால் அம்மா கோவித்துக் கொள்ள மாட்டாரா என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? கவலையே வேண்டாம், அதற்கும் இந்த விபச்சாரத் தரகர்கள் ஒரு பதிலை கச்சிதமாக வைத்திருக்கிறார்கள். அதாவது ‘ரஜினி இப்படி தனி ஆவர்த்தனம் காட்டி, தனிக் கட்சி கண்டால் அது அதிமுகவிற்கு பாதகமில்லையாம். எதிர்க்கட்சிகளின் வாக்குகளைத்தான் ரஜினி பிரிப்பார் என்பதால் புரட்சித் தலைவி குஷியில் இருக்கிறார்’ என்று தில்லானா மோகனாம்பாளின் வைத்தி விஞ்சும் புரோக்கர் விசுவாசத்தில் புல்லரிக்கிறது குமுதம் ரிப்போர்ட்டர்.

ஆக ரஜினிக்கு தேவையான இமேஜ் பில்டப் ஒருபுறம், மறுபுறம் அதனால் புரட்சித் தலைவிக்கு பாதிப்பில்லை என்று சமாதானம் வேறு. ஒரு விபச்சாரத் தரகன் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பது இதுதானில்லையா?

 1. ரஜினிகாந்து வெறும் காமெடி பீஸ் என்று ஒதுக்கி விட முடியாது. இவர் விவேகநந்தரை விட கெட்டிகாரர். ஏனென்றால் விவேகாநந்தர் கூறினார்..

  ”100 இளைஞர்களை தாருங்கள் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றி காண்பிக்கிறேன்” என்றார் கடைசிவரை இந்தியா மாறவேயில்லை ஆகவே அவறுக்கு 100 இளைஞர்கள்கூட கிடைக்கவில்லை. ஆனால் ரஜினிக்கு, அவர் சொல்லுவதையெல்லாம் செய்ய சில 1000 இளைஞராவது இருக்கிறார்கள்.
  அவர்களை வைத்து இந்த பிரபஞ்சத்தின் தலையெழுத்தையே மாற்றினாலும் மாற்றுவார்.

  ரஜினி பயந்துக்கொண்டு சும்மா இருந்தாலும் அவருக்கு பின்னால் இருக்கும் கூட்டம் சும்மா விடாது. பாஜாகவில் சேர்ந்து தமிழ்நாட்டில் நின்றாலும் நிப்பார், ஏனென்றால் ரஜினி தோற்றாலும் எதாவது ராஜசபா MP சீட்டை வாங்கி கொடுத்து அப்படி இப்படி என்று சரிகட்டிவிடுவார்கள் என்ற தைரியத்தால். ஆனால் எல்லாம் முடிந்தப்பின் தான் ஒரு காமெடி பீஸ் என்பது நன்கு உணர்ந்தப்பின் இவரின் கடைசி பஞ்ச் டயலாக் இது…

  ”எல்லாம் மாயை,
  கதம் கதம்”

 2. உங்களுக்கு பிடிக்காதவர்களை விபச்சாரத் தரகர் என்றும், மாமா என்றெல்லாம் வரம்பு மீறி வசை பாட உங்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டா? லீனா மணிமேகலைக்கு கிடையாதா?

 3. சென்ற நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் வடமாநிலங்களில் எல்லாம் சுற்று பயணம் செய்து அங்கெல்லாம் பாஜக அலை வீசுகிறது என்று இங்கு வந்து லூசு மாதிரி உளறிய மண்டையன் இந்த ரஜினி.

 4. வேசித்தனத்தை மூலதனமாக வைத்து தொழில் செய்பவனுக்கெல்லாம் ஆட்சியைப் பிடிக்க ஆசைதான்.சேர்த்து வைத்திருக்கிற கறுப்பை வெள்ளையாக்க அரசியல் என்னும் அடுத்த வேசித் தொழில் தான் நல்ல தீர்வு.அது சரி தமிழ் நாட்டை ஆள சினிமாக் கூத்தாடிகளும் தெலுங்கு,கன்னடக்காரானுகள் தானா தமிழனின் தீர்வு ஏன் நல்ல ஆண்மையுள்ளவர்கள் தமிழ் நாட்டில் இல்லையா ?அரசியல் போல் நடிப்பு என்னும் வேசித் தொழிலும் பரம்பரைத் தொழிலாகி விட்டது.மானம் கெட்ட தமிழ் நாட்டுக்காரனேஉன்னை ஆள உனக்கு தெரியாதா?தமிழ் நாட்டில் தலித்துகள் தானே அதிகம் ஏன் எல்லா தலித்துகள் சேர்ந்து தலித் ஆட்சியை ஏற்படுத்த முடியாது.?சிந்தியுங்கள் வாழ்க தமிழன் மானம், மரியாதை

 5. நடிகனை எல்லாம் தலையில் தூக்கிகொண்டு ஆடி,நாட்டையும் ஆளக்கொடுத்து அவன் ரசிகனை எல்லாம் மந்திரியாக்கி, ஜனநாயகத்தை கேலிப் பொருளாக்கும் ஒரு கேவலமான மக்கள் கூட்டத்தில் பிறந்ததற்கு மனமார வருந்துகிறேன்.

 6. தமிழன் ஏன் வேற்று மொழி நடிகர்களையே முதல்வர் ஆக விரும்புகிறான்? இங்கத்திய நடிகன் ஏதாவது ஒரு ஆதிக்க சாதியை சார்ந்தவனாக இருப்பதாலா? என்னமோ ஒன்னும் புரியல.

 7. ஒருவேளை வடிவேலு அரசியலுக்கு வரக்கூடும் ஏனென்றால் வடிவேலுவின் வாய்க்கொழுப்பால் தொழில் கெட்டுப்போய்க்கிடக்கிறது. அதை ஈடுகட்ட அரசியலுக்கு வந்து வடிவேலு சங்கூதக்கூடும், ஆனால் இந்த ரஜனி என்ற கோமாளி தான் சொகுசாக வாழுவதற்காக விழுந்தபாட்டுக்கு ஏதாவது அலம்பிக்கொண்டு தமிழ்நாட்டின் மோட்டு ரசிகனை உசுப்பேத்தி காலத்தை கழிப்பாரே தவிர அரசியல்ப்பக்கம் ஒருபோதும் வரப்போவதுமில்லை வந்துதான் என்ன புண்ணியம்?. என்ன செய்ய இந்த ஊடகங்க்களும் தாம் வயிறு வளர்ப்பதற்காகவும்குடும்பங்களை செல்வச்செழிப்பாக வைத்திருப்பதற்காகவும் (குமுதம்) நித்தியானந்தாவுக்கு தொடர் எழுதி மக்களை படுகுழியில்த்தள்ளியது ஒன்றுக்கும் லாயல்லில்லாத ரஜனியை கடவுளாக சித்தரிக்கிறது. இது தமிழ்நாட்டின் ஒரு வியாதி அவ்வளவே!

 8. நடிகர் விஜய், இருபது ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் தாக்குபிடிதற்க்கு விஜய் டிவியில் நேன்று ஒரு நிகழ்ச்சி வந்தது அதைவிடவா குமுதம் இதழில் வந்த இந்த கட்டுரை தவறானது?

  ரஜினி விட்டாலும், இந்த விஜய் அண்ட் கோ தமிழகத்தை விட மாட்டார்கள் போல உள்ளதே?

 9. தமிழை தப்பு தப்பாக பெசுவதால் அன்னன் ரசினி இந்தியாவின்…மன்னிக்கவும்
  அமெரிக்காவின் அடுத்த பிரதமர்:பீடியை தூக்கிப்போட்டு பிடிக்கும் லாவகம் எந்த மண்டையனால் இயலும்?

 10. மக்கள் விருப்பம் என்பது, ஆதிக்க சக்திகளால் கூலிக்கு மாரடிக்கும் ஊடகஙகளாலும், பணம் பண்ண அலையும் பாசாஙகு தலைவர்களாலும், உருவாக்கப்படுகிறது! சொந்த புத்தியில்லாதவர்கள் பகுத்தறிவு பாவம் என நம்புபவர்கள், இவர்களது சதிக்கு எளிதில் ஆளாகிவிடுகிரார்கள்! தமிழ்னாட்டு அரசியலை பொருத்தவரை, தமிழன் எவனையும் தலைவனாக வள்ர்த்து விட, இந்த ஆதிக்க சக்திகள் தயாராக இல்லை! ஆகவே, கருணானீதி ஆகட்டுனம், சசிகலா ஆகட்டும், இந்த ஆதிக்க சக்திக்கு அடிபணிந்துதான் போகவேண்டும், எல்லாவற்றுக்கும் அண்ணனான அமெரிக்க முதலாளிகளுக்கு வேண்டுமானால் அப்பீல் செய்யலாம்!

 11. வினவூடன் எனக்கு சிலநேரங்களில் கருத்து வெறுபாடு இருந்தாலும் பலநேரங்களில் உங்கள் கருத்தில் எனக்கு உன்டன்பாடு உள்ளது …இந்த ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் ….. 2004 நாடாளுமன்றத் தேர்தலிலேய அவர் செல்வாக்கு புரிந்துவிட்டது ….. அதிலிருந்து அவர் படம் வெளிவருவதற்கு முன்னாள் அரசியலுக்கு வருவேன் என்று அறிக்கை விட்டு அவரின் அப்பாவி ரசிகர்களை உசுப்பேற்றி படத்தை ஓட வைக்க செய்யும் தந்திரம் மட்டுமே.
  ரஜினி ரசிகர்களோ இலவு காத்த கிளியாக ஏமாறப்போவது உறுதி

 12. I was coming through the context and feel this editor is crossing his limits in so many places.
  Did Rajini ever asked anyone to come and watch his movies? Not just Rajini.. take any leading actors, did anyone of them came in person to public and asked to watch their movies.. so that they can earn more money?? if you dont like rajini movies or dont like cinema itself.. its upto u.. no one is forcing
  to watch his movies.. rajini has some magic and charisma and ppl like him for that..

  he is not cheating others or robbing from ur crest to earn..
  if u dont like his movies, then dont watch his movies.. DOT..

  rajini yaar life ayum kedukkala… avarukku therinja job la earning good..
  and we ve no right to criticize him like the way how the editor used to..

  next, rajini dont know anything about politics..
  this is cool… what the editor thinks like he knows bout politics..
  have u ever got to meet him in person and spoke on this topic?

  then how u came to know that he knows nothing??

  oru website, athula namma manasula vanthatha lam ezhutha oru editor..
  ithukku sombadikka oru naalu vetti pasanga..

  ungalala than naatula entha nallathum nadakka maatanegudu..

  vinavu oda editor or officials ala naatula nadantha ore oru nallatha sollunga…
  before cursing or abusing rajini or anyone else

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க