Saturday, September 21, 2024
முகப்புசமூகம்சினிமாவிஸ்வரூபம் : ஒரு முன்னோட்டம் !

விஸ்வரூபம் : ஒரு முன்னோட்டம் !

-

கமல்ஹாசன்சொற்கள் உணர்த்தும் நேர்மறை பொருளை நீர்த்துப் போகும் வண்ணம் நமது கருத்து கந்தசாமிகள் படுத்தி எடுக்கிறார்கள். விசுவரூபம் குறித்த அத்தகைய விவாதங்கள், கருத்துக்கள், ‘தத்துவங்கள்’, புளகாங்கிதங்கள், புல்லரிப்புகள் அனைத்தும் இந்த ரகத்திலானவை. இவற்றில் எவற்றை விட – எழுத என்று தத்தளிக்கும் வண்ணம் கந்தசாமிக்கள் தினுசு தினுசாக பொங்கித் தீர்த்திருக்கிறார்கள்.

நாளை மறுநாள் திரையிடப்படும் இப்படத்தை அனுமதிக்கக் கூடாது என்று இசுலாமிய அமைப்புகள் அறிவித்திருக்கும் நிலையில் சற்று பின்னே சென்று பார்க்கலாம்.

முதலில் கமலஹாசனை மாபெரும் தியாகி என்று சித்தரிக்கும் அவஸ்தையை பார்ப்போம். கமல் சினிமாவில் சம்பாதித்ததை முழுக்க இந்தப்படத்தில் செலவழித்திருக்கிறார், அந்த அளவு சினிமாவை நேசிக்கிறார், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு போகத் துடிக்கிறார் என்று கேழ்வரகில் நெய் வடிவதாக சத்தியம் செய்கிறார்கள். விசுவரூபம் தயாரிப்புச் செலவு 90 கோடி என்றால் கமல் இவ்வளவு வருடங்களாக இம்புட்டுதான் சம்பாதித்தார் என்பது நம்பும்படியாக இல்லை. விட்டால் டீக்காசு கூட இல்லாமல் கமல் கஷ்டப்படுகிறார் என்று அழுதாலும் அழுவார்கள்.

தொலையட்டும். சினிமா என்பது கலையோ இல்லை உன்னத விழுமியங்களை வளர்க்கும் சமூக நடைமுறையோ இல்லவே இல்லை. அது அப்பட்டமான வியாபாரம். மாபெரும் மூலதனத்தை கோரி நிற்கும் முதலாளித்துவத் தொழில். சரியாகச் சொல்லப்போனால் கிச்சு கிச்சு மூட்டி உணர்ச்சிகளை சுரண்டி கோடிகளில் வயிறு வளர்க்கும் ஒரு பிரம்மாண்டமான ஜந்து. ஒருவர் சினிமாவில் இருக்கிறார் அல்லது சினிமாவுக்கு செல்ல ஆசைப்படுகிறார் என்றால் அதன் பொருள் அவர் கலைத்தாகம் கொண்ட யோகி என்பதல்ல. சினிமா தரும் அளப்பரிய பணம், புகழ், போதை, சொத்து, அதிகாரம், பிரபலம் இவைதான் ஒரு நபர் சினிமாவில் இருப்பதற்கு அடிப்படையான காரணம்.

பலரும் இத்தகைய ஆழ்மன வேட்கையை நைசாக அமுக்கிவிட்டு தான் சினிமாவில் போய் உலகத்தை திருத்த பாடுபடுவேன் என்று தேய்ந்த ரிக்கார்டு போல விடுவார்கள். கமலே கூட 70களில் அப்படி பேசியவர்தான். மறைந்து போன அனந்துவுடன் பெல்பாட்டம் போட்ட கமல் மயிலாப்பூர் வீதிகளில் உலக சினிமா குறித்து விவாதித்ததெல்லாம் இன்று ஊசிப்போன பழங்கஞ்சி. தற்போது தானே வெட்கப்படுப்படி தேர்ந்த கலை வியாபாரி ஆகியதை கமல் ஒத்துக் கொள்கிறார் –  கந்தசாமிகள் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

இப்படத்தை டி.டி.எச்சில் ஒளிப்பரப்புவதால் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என பிரச்சினை வந்த போது கமல் அதிகம் பேசியது என்ன? “இந்த படம் என் சொத்து, நான் விரும்பிய வகையில் வியாபாரம் செய்வேன்” என்றெல்லாம் பேசினாரே ஒழிய இது கலை, தவம், ஆன்மீகம் என்றா பாடினார்? சரி இதையெல்லாம் மீறி கமல் “நாயகனில்” அற்புதமாக நடித்தார், “அவ்வை சண்முகியில்” அட்டகாசமாக மேக்கப் போட்டார், “பஞ்ச தந்திரத்தில்” வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் என்று ரசிக்கிறீர்களா? ரசித்து விட்டு போங்கள். ஆனால் அதற்குமேல் உலகை உய்விக்க வந்த கலைஞானி என்று உருகுவதுதான் சகிக்க முடியாத ஒன்று.

ஒரு நாட்டுப்புறக் கலைஞனைப் போல இலவசமாகவோ இல்லை மலிவான கட்டணத்திலோ சினிமா கலைஞர்கள் தமது திறமைகளை காட்டுவதில்லை. கமலை ரசிப்பதற்க்காக மல்டி பிளக்சில் நீங்கள் செலுத்தும் 120 ரூபாய் கட்டணத்தில் 40 ரூபாய் அவரது பாக்கெட்டிற்கு போகிறது. உங்களை சிரிக்க வைக்க அவர் கட்டணம் வாங்கிக் கொண்டு கிச்சுகிச்சு மூட்டுகிறார். இதனால் இதை வியாபாரம் என்று அழைக்கலாமே ஒழிய கலைச் சேவை என்றால் அது அந்த கலைவாணிக்கே அடுக்காது.

அடுத்து கமல் தமிழ் சினிமாவுக்காக பல தொழில்நுட்பங்களை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் என்று கொல்லுகிறார்கள். “இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக” என்று சன் டிவியின் ஆம்பளைக் குரல் கூவும் போது தோன்றும் நகைச்சுவைதான் கமலின் முதல் சாகசங்கள் குறித்தும் வருகிறது. தலைக்கு மேல் ஒலிக்கும் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டு வந்தார், டிஜிட்டல் கேமராவை இட்டுக்கிணு வந்தார், கிழவன் மேக்கப்பை ஹாலிவுட்டிலிருந்து பெயர்த்து வந்தார், ஆவிட்டைக் (AVID) கொண்டு வந்தார், ஆத்தாவைக் கொண்டு வந்தார் என்பதில் துவங்கி தற்போது டிடிஎச்சில் முதன்முறையாக ஒளிபரப்பப் போகிறார் என்று துள்ளிக் குதிக்கிறார்கள், விசிலடிச்சான் குஞ்சுகள்!

இதெல்லாம் தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய சாதனையாம்! கமல் போட்ட ரோட்டில்தான் தமிழ் சினிமாவே தடம் புரளாமல் வால்வோ பஸ் போல சொகுசாக பயணிக்கிறதாம். ஒரு புதிய தொழில்நுட்பத்தின் வருகையை எதைக் கொண்டு அளவிடுவது? கமலைப் போன்ற ஞானிகள் படப்படிப்பின் போது பங்களா வசதி கொண்ட கேரவான்களில் மூச்சா விடும் போது, கழிப்பறைக்கு கூட பல நூறு மீட்டர் தூரம் நடந்து செல்லும் கோடான கோடி மக்கள் இங்கே வாழ்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் முதன் முதலாக கேரவானில் மூத்திரம் பெய்தவர் என்பதற்காக, அந்த கழிப்பறைக் கோப்பைக்கு பூஜை செய்வது கேலிக்கூத்தல்லவா?

பெரும்பான்மை மக்களின் துன்பமான வாழ்வை இதுவரை எந்த நவீனத் தொழில் நுட்பமும் குறைத்ததாக வரலாறு இல்லை. அப்படிக் குறைத்தால் நாம் எந்த தொழில் நுட்பத்திற்கும் ஒரு பாராட்டு விழா எடுக்கலாம். பீகாரிலிருந்து குடும்பத்தைத் துறந்து இங்கு மெட்ரோ வேலையில் உயிரை இழக்கும் தொழிலாளியின் வாழ்வை எளிதில் தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கும் செல்பேசி என்ன செய்து விடும்? ரோபோட்டிக் எந்திரங்கள் இருப்பதனாலேயே மாருதி தொழிலாளிகள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் அடங்கி விடவில்லையே?

இல்லை தமிழ் சினிமாவில் இவ்வளவு தொழில்நுட்பங்களை கமல் கொண்டு வந்ததால் நாயக்கன் கொட்டாய் தலித் மக்கள் தாக்கப்படாமல் இல்லையே? குறைந்த பட்சம் காதல் இளவரசனது படங்களை பார்த்துக்கூட காதலை தண்டிக்க கூடாது என்று ஆதிக்க சாதிவெறியர்களுக்குத் தோன்றவில்லையே? ஆக வாழ்வையும், பண்பாட்டையும் இம்மியளவு கூட கமல் கடத்தி வரும் தொழில் நுட்பங்கள் பண்படுத்தி விடாத போது அதில் சிலாகிக்க என்ன இருக்கிறது? இல்லை கமல் படங்கள்தான் அந்த நவீன தொழில்நுட்பத்தால் தமிழ் மக்களின் வாழ்வை அச்சு அசலாக காட்டியிருக்கிறதா? பாச மலரில் அழுத தமிழர்களின் கண்கள் மகாநதியில் இன்னும் கொஞ்சம் வீங்கித்தானே போனது?

வாழ்வு குறித்த கூர்மையான தத்துவ நோக்கில்லாமலும், சமூக அக்கறை இல்லாமலும் எவ்வளவுதான் டெக்னாலஜி வந்தாலும் தமிழ் சினிமாவின் அற்பத்தனமான சென்டிமெண்ட் மாறிவிடாது. மேலும் டிடிஎச்சில் ஒளிபரப்ப முயன்றதற்கு காரணம் 150 கோடி வசூலை திரையரங்குகளில் மட்டும் சுருட்ட முடியாது என்ற இலாப நோக்குதான். ஆனால் இன்றைக்கு கமலும், கமல் ரசிகர்களும் இந்த டிடிஎச் நடைமுறைக்கு வந்தால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்று பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கிறார்கள்.

சற்று வசதி உள்ள நடுத்தர வர்க்கம்தான் டிடிஎச் வைத்திருக்கிறதே அன்றி தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் கேபிள் மூலம்தான் டிவி பார்க்கிறார்கள். தமிழகத்தில் 35 இலட்சம் டிடிஎச் இணைப்புகள் இருக்கும் என்று கூறுகிறார்கள். இவர்கள் மாதத்தவணையாக கேபிள் டிவி கட்டணத்தை விட சில மடங்கு அதிகம் கட்டித்தான் பார்க்க வேண்டும். இப்படி வசதி படைத்த வாடிக்கையாளர்களுக்கு வசதி குறைந்த பட்ஜெட் படங்களை கொண்டு போய் வியாபாரம் செய்யலாமாம். விசுவரூபத்திற்கு டிடிஎச் கட்டணமாக தலைக்கு ஆயிரம் ரூபாய் வைத்தார்கள். இப்படி ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு புதுப்படத்தை எத்தனை தமிழர்கள் பார்க்க முடியும்? விசுவரூபத்திற்கே அப்படி கலெக்சன் கன ஜோராக வரவில்லை என்று கூறுகிறார்கள். இப்படி இருக்க குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டும் எப்படி வெற்றி பெறும்?

சினிமா என்பது முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தொழில். அது கலை என்பதாக ஏற்கப்பட்டாலும் நிச்சயம் தொழில்தான். சினிமா சந்தையை ஒரு சில முதலாளிகள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெயர் வேண்டுமானால் மாறுபடலாம். இவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் சிறிய பட்ஜெட் படங்கள் வாழவோ சாகவோ முடியும். அதைத்தாண்டி வேறு அற்புதங்கள் நிகழ்ந்து விடாது.

என் தொழில், என் சொத்து, என் விருப்பம் என்று ஆரம்பத்தில் அடம்படித்த கமலை அதே டயலாக்கை வைத்தே திரையரங்க உரிமையாளர்கள் அடக்கி விட்டார்கள். ஆனால் நமது கமல் பையன்களோ திரையரங்க உரிமையாளர்களை டெக்னாலஜிக்கு எதிரான வில்லன்களாக சித்தரிக்கிறார்கள். என்ன இருந்தாலும் நம்பியாரைப் பார்த்து வில்லன்களை முடிவு செய்பவர்களாயிற்றே! நம்மைப் பொறுத்த வரை முழு தமிழக சினிமாத்துறையும் தமிழக மக்களுக்கு வில்லன்கள்தான். இதில் கமல் தியாகி, அபிராமி ராமநாதன் பாவி என்ற பாகுபாடெல்லம் நம்மிடம் இல்லை. இந்த புரிதலில் இருந்து பார்த்தால் திரையரங்க உரிமையாளர்கள் கமலை அடக்கியது அவர்களே சொல்லிக் கொள்ளும் பிசினெஸ் விழுமியங்களுக்கு உட்பட்டதுதான்.

கமல் தனது படத்தை தனது விருப்பம் போல டிடிஎச்சில் வெளியிடும் போது திரையரங்க உரிமையாளர்கள் தமது விருப்பம் போல கமல் படங்களை இனி வெளியிடுவதில்லை என்று பேசுவதில் என்ன தவறு? அவர்கள் சொத்தில் தனது படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்று கமல் தார்மீகரீதியாக  கூட கோர முடியாது. ஆனால் டிடிஎச்சில் தான் நினைத்த மாபெரும் கல்லா கலெக்சன் இல்லை என்றதும் கமல் வேறு வழியின்றி முதலில் திரையரங்கில்தான் வெளியாகும், ஒரு வாரம் கழித்து டிடிஎச்சில் வெளியாகும் என்று இறங்கி வந்தார். முதலில் அவர் முண்டியதற்கும் வியாபாரம் காரணமாக இருந்தது போலவே அவர் முடங்கியதற்கும் அதுவே காரணம்.

இடையில் நமது இணைய ரசிகர்கள் பலர் கமலின் புது டெக்னாலஜியில் தமது பெயரும் வரலாற்றில் இடம்பிடித்தே ஆகவேண்டும் என்று ஆயிரம் ரூபாயை பல்வேறு டிடிஎச் நிறுவனங்களுக்கு மொய் எழுதி அதை வேறு பெருமையான டிரைலராக வெளியிட்டு அழகு பார்த்தார்கள். கடைசியில் கமலின் புது டெக்னாலஜியில் ஏமாந்தவர்கள் என்ற பட்டமே வரலாற்றில் காத்திருக்கிறது. அதுவும் கட்டிய பணம் கட்டியதுதான் என்று பல நிறுவனங்கள் கம்மென்று முடித்துக் கொண்டன. எந்த ஆசை காட்டி ஆயிரம் ரூபாயை சுருட்டினார்களோ அந்த ஆசை இல்லை என்றான பிறகும் பணம் திரும்ப வராதாம். இதை எதிர்த்து சண்டை போடக்கூட துப்பில்லாத நுகர்வோராகத்தான் நமது இணைய ரசிகர்கள் வீரம் பேசுகின்றனர். ஆக நவீன டெக்னாலஜி பல பயன்படுத்தும் இந்த டெக் சிங்கங்களை இப்படி அடிமாட்டு ரேட்டுக்கு ஏமாற்றலாம் என்றால் அந்த தொழில்நுட்பங்களால் என்ன பயன்?கமல் ஹாசன் கார்ட்டூன்

துப்பாக்கி படத்திற்கு இசுலாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு காட்டியதை வைத்துக்கூட கமல் முன் எச்சரிக்கையாக டிடிஎச்சில் காட்ட நினைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் அவர் வியாபாரி அல்லவா? விசுவரூபம் டிரைலரில் அமெரிக்கா, அமெரிக்க கொடி, அமெரிக்க இராணுவம், அமெரிக்க ஹெலிகாப்டர்கள், எஃப் பி ஐ எல்லாம் வருகிறது. கூடவே வில்லன்களாக இசுலாமிய அடையாளங்களும் ஏராளமாக வருகிறது. ஹாலிவுட், ஆஸ்கார் என்று போக வேண்டுமென்றால் இசுலாமிய வில்லன்கள்தான் என்ட்ரி பாயிண்ட் என்று கமல் நினைத்திருக்கலாம்.

உன்னைப் போல ஒருவனில் பாசித்தை முன்மொழிந்த கமலஹாசன் உலகளாவிய கதைக்களன் என்ற பெயரில் சல்லிசாக இருக்கும் இசுலாமியத் தீவிரவாதத்தை கையில் எடுத்திருக்கலாம். என்ன இருந்தாலும் வியாபாரி என்பதால் எது தற்காலிக வாழ்க்கையில் வில்லத்தனமாக கட்டியமைக்கப்பட்டிருக்கிறதோ அதை எடுத்தால்தான் பரபரப்பாக இருக்கும் என்பது கமலுக்கு தெரியும். இதற்கு மேல் படத்தைப் பார்க்காமல் எப்படி விமரிசனம் செய்யலாம் என்று சிலர் கேட்கலாம். இல்லை, இங்கே நாம் விமரிசனம் செய்வது கமலின் வியாபார நோக்கத்தை மட்டுமே.

தனது படம் இசுலாமியர்களை தவறாக சித்தரிக்கவில்லை, இசுலாமியர்கள் படத்தை பார்த்தால் பிரியாணி செய்து தந்து ஆதரிப்பார்கள் என்று கமல் பேசிய கையோடு பல்வேறு இசுலாமிய தலைவர்களைகூட்டி படத்தை காட்டியிருக்கிறார். பார்த்தவர்கள் பலர் இப்போது கொலை வெறியோடு இந்த படத்தை எதிர்க்கிறார்கள்.

தற்போது இசுலாமிய அமைப்புகளின் தலைவர்கள் அந்தப் படத்தை வெளியிட வேண்டாம் என்று தடை கோரி போராடி வருகிறார்கள். இசுலாமிய மதவாதிகள் படத்தைப் பார்த்து அதில் குறியீடாக வரும் இசுலாமிய அடையாளங்களை வைத்து மட்டும் இப்படி முடிவு எடுத்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் கதையின் அரசியலிலிருந்து அதை எடுத்து முன்வைப்பதை நாம்தான் செய்ய முடியும். அதனால் படம் வந்த பிறகு தொடருவோம்.

ரிசானாவின் படுகொலையை நியாயப்படுத்திய இசுலாமிய மதவாதிகள் அடுத்த கட்டமாக விசுவரூபத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் அடியாளாக செயல்படும் சவுதி அரேபேயாவை உச்சி மோரும் இவர்கள் அதே அமெரிக்காவின் ஆசியோடு வரும் விசுவரூபத்தை எதிர்ப்பதை இறைவன்(PBUH) தான் விசாரிக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக விசுவரூபம் படத்தின் சாட்டிலைட் உரிமை, பாடல் வெளியீட்டு விழா உரிமை இதெல்லாம் ஜெயா டிவியிடம் இருப்பதாக வைத்துக் கொண்டால், கமல் கோட்டை சென்று காத்திருந்து அம்மாவை பார்ப்பார். ஒரு வேளை அந்த உரிமைகள் இல்லை என்றாலும் அம்மா மனது வைத்தால் கமலை ஆதரிக்கலாம். என்ன இருந்தாலும் பாபர் மசூதி இடிப்பிற்காக்க தொண்டர்களை அனுப்பியவர் கமலின் துக்கத்தை புரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பிறகு என்ன, அம்மா போலிசை பார்ப்பார். அம்மாவே களத்திற்கு வந்துவிட்டால் அம்மாவுடன் கூட்டணி வைத்த தவ்ஹீத் ஜமா அத்தும், தமுமுகவும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பம்மி விடுவார்கள். பிறகு இசுலாமிய மக்களின் சுயமரியாதைக்காக மதச்சார்பற்ற முற்போக்கு, ஜனநாயக சக்திகள்தான் கமலை கண்டித்து போராட வேண்டும்.

அதற்கு தேவை இருக்கிறதா என்பதை படம் பார்த்த பிறகு தெரிவிக்கிறோம்.

மேலும் படிக்க:

  1. \\துப்பாக்கி படத்திற்கு இசுலாமிய அமைப்புக்கள் எதிர்ப்பு காட்டியதை வைத்துக்கூட கமல் முன் எச்சரிக்கையாக டிடிஎச்சில் காட்ட நினைத்திருக்கலாம். என்ன இருந்தாலும் அவர் வியாபாரி அல்லவா?//

    This is the real fact behind his hue and cry against screening in theatres.

  2. the guy who wrote this article is mentally retarded he should be admmited in kilpakkam before he goes and started killing people, chains this dump guy lock him up and throw away the key so we dont have read shit he wrote called article

  3. // அம்மாவே களத்திற்கு வந்துவிட்டால் அம்மாவுடன் கூட்டணி வைத்த தவ்ஹீத் ஜமா அத்தும், தமுமுகவும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பம்மி விடுவார்கள். //

    இது மெய்யான தகவலா என்ன? காரணம் த.த.ஜவின் பீ.ஜெயும் த.மு.மு.க வின் ஜவாஹிருல்லாஹ்வும் முன்னர் ஒரணியாக ஜாக்கில் (JAQH) இருந்தவர்கள் தான். அப்போது ஒன்றாக ஜாமத்தாக தொழுதிருப்பர்கள். ஆனால் பிரிவினைக்கு ஒருத்தரை நேரில் கண்டால் கூட மற்றொருவர் ஸலாம் சொல்வார்களா என்பது கூட சந்தேகமே. அதற்கு பின்னர் சீ ஸா வில் எதிர் எதிர் புறத்தில் ஆடுவது போல ஒருவர் அம்மாவை ஆதரித்ததால் ம்ற்றொருவர் அய்யாவை ஆதரித்து தான் காலம் தள்ளிக்கொண்டிருக்கின்றர். தற்போது ஜவாஹிருல்லாஹ் அம்மாவிடம். ஆகையால் அய்யாவை கடந்த தேர்தலில் பீ.ஜெ ஆதரித்தார். நீங்கள் என்னவென்றால் இருவரும் ஓரணியில் உள்ளதாக சொல்கிறீர்களே. அப்படி நடந்தால் கியாமத் நாள் வந்து விட்டதாக நினைக்கவேண்டி வரும்.

    • // நீங்கள் என்னவென்றால் இருவரும் ஓரணியில் உள்ளதாக சொல்கிறீர்களே. //

      இது இந்திய தவ்ஹீத் ஜமாத்.. TNTJ அல்ல..

  4. //அமெரிக்காவின் அடியாளாக செயல்படும் சவுதி அரேபியாவை உச்சி மோரும் சில இசுலாமிய மதவாதிகள் ரிசானாவின் படுகொலையை நியாயப்படுத்திவிட்டார்கள்.//

    //எல்லாவற்றுக்கும் மேலாக பாபர் மசூதி இடிப்பிற்காக தொண்டர்களை அனுப்பிய அம்மா கமலின் துக்கத்தை துடைக்க மனது வைத்தால்… போலிசை பார்ப்பார். அம்மாவே களத்திற்கு வந்துவிட்டால் அம்மாவுடன் கூட்டணி வைத்தபடி இங்கே உச்சி மோரும் தவ்ஹீத் ஜமா அத்தும், தமுமுகவும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பம்மி விடுவார்கள்.//

    இப்படியும் காட்சிகள் அரங்கேறிட வாய்ப்பிருக்கிறது.

    இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைத்துமே மறுக்கவே இயலா யதார்த்தமான வார்த்தைகள்.

    -கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ்

  5. // ரிசானாவின் படுகொலையை நியாயப்படுத்திய இசுலாமிய மதவாதிகள் …. //

    பரவாயில்லையே. இதெல்லாம் கூட உங்க கண்ணுல படுதே.

    • //ரிசானாவின் படுகொலையை நியாயப்படுத்திய இசுலாமிய மதவாதிகள் அடுத்த கட்டமாக விசுவரூபத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அமெரிக்காவின் அடியாளாக செயல்படும் சவுதி அரேபேயாவை உச்சி மோரும் இவர்கள் அதே அமெரிக்காவின் ஆசியோடு வரும் விசுவரூபத்தை எதிர்ப்பதை இறைவன்(PBUH) தான் விசாரிக்க வேண்டும்.//

      😀 பாத்தீங்களா! வினவிலயே விஸ்வரூபத்துக்கு நடுவுல தான் ரிசைனா வருது. விஸ்வரூபம் தான் வினவுக்கு முக்கியம். அதனால தானே இந்த கட்டுரைக்கே ஹிட்ஸு…

  6. இஸ்லாத்தை பட்றி தங்கலுக்கு கருத்து வேருபாடு இருந்தாலும் இந்திய தேசத்தில் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்பட்டவர்கலாக இருப்பதினால் தாள்த்தப்பட்டவர்களுக்காக போராடும் இணையதலத்தில் இருந்து விஸ்வருப படத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான் இருக்கும் ஆதரவாக இருக்காது என்று எழுதியிருப்பது அருமை

    • 100% vinavu is for dalit’s. I too started having doubt vinod. either all people to get convert in to dalit or die. no neutral at all. is thrima is sponsoring Vinavu?

      • ஓ அப்படியா!
        என்ன ஒர அறிவுப்பூர்வமான கண்டுபிடிப்பு!

        சரி நீங்கள் சொல்லும் லாஜிக்படி பார்த்தால் , டில்லியில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து ‘அந்த பெண்ணுக்கு ஆதரவாக’ ஆயிரக்கணக்கான மக்கள் போராடினார்கள் எதர்க்கு?

        எல்லோரும் பெண்களாக மாற வேண்டும், இந்த உலகத்தில் எந்த ஆணும் இருக்கக் கூடாது என்றா?

        நான் கேட்பது அபத்தமாக இருக்கா? அப்படினா உங்கள் புரிதலும் அவ்வளவு அபத்தம்!

        யாரும் யாராகவும் மாற வேண்டாம் எல்லோரும் அறிவுள்ள மனிதர்களாக மாறினாலே போதும்.

  7. It is very clear that guy who wrote this article don’t know anything about kamal hassan and his films, he simply wants to propogate his stinky ideas by the way of claiming himself as intellectual personality, there are some idiots in this society who thinks finding fault in everything means intellectuality, i believe writer falls this category

    • தொழில் செய்ய உரிமையுண்டு என்று பேசிய கமல் வியாபாரி மட்டுமல்ல ஒரு வேடதாரி,
      இந்தாலு விஸ்வரூபம் படத்தை பாலச்சந்தருக்கு போட்டுகாட்டுனாராம் அதை பார்த்த பாலசந்தர் ”அல்லா உனக்கு அருள்புரிவார்” என்று சொன்னாராம் அதை அகமகிழ்ந்து பேட்டியில் சொல்கிறார்,

      ‘தான் ஒரு நாத்திகன்’ என்று சொல்லி கொள்பவர் என்ன செய்யனும் அந்த முட்டாள்தனமான பாராட்டை அப்பவே விட்டுவிட வேண்டும். ஆனால் அதை பெருமையாக சொல்லிகொள்கிறார் என்றால் என்ன ஒரு மானங்கெட்டதனம்.

      அன்று இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்து படம் எடுத்தான், இன்று இப்படி பேசுரான், ‘முடிந்தவரை கழுத்தப்புடி முடியாவிட்டால் காலைப்புடி’ என்கிற தத்துவத்தை வைத்திருக்கும் இந்த பார்ப்பனர்கள் வாழ்வு எவ்வளவு இழிவானது?

        • usual மொக்கை பின்னூட்டம் .
          ஹரிகுமார் ,உண்மை மதவாதம் ,தேசபக்தி ஆகியவற்றுக்கு இனி நீங்கள் கமலுக்கு சான்றிதல் வழங்கலாம் .

          • I am not a fan of Kamal at all,i think he is a bootlicker of DK/DMK giving random reasons for it.

            But i dont see why he is wrong here?

            whats wrong in talking about afghan taliban here?

            please dont tell me u guys and they r the same?

            Pashtun people look down even upon punjabi muslims,i dont have to talk about you all.

      • நாறல் தனமான கருத்து. பாரப்பனர்கள் எல்லாம் கெட்டவர்களென்றால் மற்ற சாதியினர்கள் எல்லாம் ஒழுக்கமுள்ளவர்களா?

  8. 100% crap article. what are you trying to convey Mr. Vinavu ?
    including your website business is for middle/higher class people. no poor man has internet at home whereas you are running website. if kamal is releasing his movie in to DTH whats your problem? society is mixed by all kind of people.not just for rich or poor. same way you too talk about sensitive mater to boost your crowed. kamal has noting to do with tharmapuri..

  9. முற்போக்கு வாதிகள், ஜனநாயக வாதிகள் என்று சொல்லுபவர்கள் சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்களுக்கு இருந்த இட ஓதிக்கீடை பிடுங்கினார்கள், ஐபதாண்டுக்கள் கழித்தே இஸ்லாமிய இயக்கங்கள் இடஒதிக்கீட்டை பெறமுடிந்தது . நீங்கள் சொல்லும் சன நாயக வாதிகள் மமுற்போக்காளர்கள் அவங்க அவங்க ஜாதிகாரனுக்கு தான் உதவினார்கள், முஸ்லிம்களின் ஓட்டை பெறவே சும்மா ஒப்புக்கு குரல் கொடுக்கிறர்கள்.

  10. ////அம்மாவே களத்திற்கு வந்துவிட்டால் அம்மாவுடன் கூட்டணி வைத்த தவ்ஹீத் ஜமா அத்தும், தமுமுகவும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று பம்மி விடுவார்கள். //
    வினவு தவ்ஹித் ஜமாஅத் பற்றி முழுமையாக தெரிந்திருந்தும் அதை மற்ற அரசியல் கட்சிகள் போல பாவித்து எழுதுவது வாடிக்கையாகிவிட்டது தமுமுக ஒன்றிரண்டு MLA சீட்டுகளுக்காக வாலாட்டும் அரசியல் கட்சி .தவ்ஹித் ஜமாத்தோ முஸ்லிம்களின் இடஒதுக்கீடுக்காக தேர்தலில் அதிமுகவையோ திமுகவையோ ஆதரிக்கும் தொண்டு இயக்கம் .கடந்த மாதத்தில் சென்னை திருவல்லிக் கேணியில் உலகம் அழியப் போவதாக சொல்லபப்ட்ட வதந்தியை எதிர்த்து மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்ததை இந்து முன்னனி அவர்தம் கொன்றதாக கூறப்படும் வள்ளலாருக்கு வக்காலத்து வாங்கி கொடுத்த புகாரில் நள்ளிரவில் நான்கு தவ்ஹித் ஜமாஅத் நிர்வாகிகளை கைது செய்தனர் .இதை எதிர்த்து காவல்நிலையத்தை முற்றுக்கையிட்ட தவ்ஹித் சமாதி போலிஸ் தடியடி நடத்தி விரட்ட நினைத்தது .ஆனால் அசையாது நின்று போராடி தவறு செய்த துணை ஆய்வாளரை இடமாற்றம் செய்ய வைத்தது .இதுவரை தவ்ஹித் ஜமாஅத் துனைகாணோம் துணியை காணோம் என்று பம்மிய நிகழ்வை உங்களால் கூற முடியுமா?
    பெரியார் சொன்னதுபோல ஐதீக பிராமணரை விட முற்போக்கு பிராமணர் ஆபத்தனாவன் என்பது கமலை பொறுத்தவரை உண்மை .பாலசந்தர் தனது முற்போக்கு கருத்துக்களை சினிமாவில் திணிக்கும் பொழுது தனது சமுதாயத்தை முன்னிறுத்தினார். இன்னும் அவரது குடும்பத்திலும் செய்துகாட்டினார் என்று கேள்விபட்டுள்ளேன் .அதை போல கமல் தீவிரவாதத்தை படம் எடுக்க வேண்டுமானால் தந்து சமுதாயத்தில் உள்ள தீவிரவாதத்தை ,அதாவது மோடியின் தீவிரவாதம் ,கர்கரே கண்டுபிடித்த பல ஹிந்துத்துவாகக்ளின் தீவிரவாதத்தை பெண்சாமியார் குண்டுவைத்த வீரதீர செயலில் தனது மகளை நடிக்கவைத்து இருக்கலாம் .அலல்து இவர் கரகறேயாக நடித்து மோடியின் தீவிரவாதத்தை அம்பலபடுத்தியிருக்கலாம்

    • why should he discuss about his religion?

      he is a self declared atheist and non believer,so just because he is born in a religion and community why should he represent them?

      He and his family do not represent hindus or brahmins in anyway.

      and why should anyone not discuss the problems of any other community?

    • இதில் சாதி எங்கே வந்தது? திரைப்படம் என்பது பொழுது போக்கு சாதனம் தான். அதை மதத்தின் பெயரால் மறுப்பது எந்ந வகையில் நியாயம்? மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்கு இப்பொழுது குரல் கொடுக்கும் அமைப்பு கண்டனம் வெளியிட்டதா? தவறு என்றால் எல்லாம் தவறுதான்.

    • கமல் தீவிரவாதத்தை படம் எடுக்க வேண்டுமானால் தந்து சமுதாயத்தில் உள்ள தீவிரவாதத்தை ,அதாவது மோடியின் தீவிரவாதம் ,கர்கரே கண்டுபிடித்த பல ஹிந்துத்துவாகக்ளின் தீவிரவாதத்தை பெண்சாமியார் குண்டுவைத்த வீரதீர செயலில் தனது மகளை நடிக்கவைத்து இருக்கலாம் .அலல்து இவர் கரகறேயாக நடித்து மோடியின் தீவிரவாதத்தை அம்பலபடுத்தியிருக்கலாம்

  11. எல்லா பயல்களுக்கும் சம்பாதிப்பதற்கு முஸ்லிம்கள் தான் தேவையாக இருக்கிறது.இந்தப் படத்தோடு பார்ப்பன கமல்
    நடு ரோட்டுக்கு வருவது உறுதி.

  12. When Kamal’s fan are ready to accept 1000 supports why can’y they accept one point that stays against him.. Nothing can be 100% pure.. If you think you are correct you should be ready to face the opposition as well, otherwise what you stand as positive is not true

    • deva,

      i am not a kamal fan but tell me whats the point against him?

      why r tamil muslims hurt by the realities of taliban afghans?

      if they are bothered,why dont they do something about it instead of hating kamal hassan for showing the reality?

      • எங்களை பற்றிய அவதூருகருத்துக்களை அந்த படம் சொல்லுகிறது அதனால் நாங்கள் போராடுகிறோம் .இதில் ஹரிகுமாருக்கு என்ன வேலை?

      • ஹரி குமார் /// why r tamil muslims hurt by the realities of taliban afghans?///
        அவர்களை பற்றிய உண்மைகள் இந்தபடத்தின் மூலம் தெரிந்து கொள்ளவேண்டுமா?
        யார் தீவிரவாதி?
        அமைதியாக இருந்த ஆப்கானிஸ்தானில் பிரச்னைகளை உருவாக்கி அந்நாட்டை கைப்பற்றி கோடிகணக்கான மக்களை கொன்ற ரசியாவை எதிர்த்து தங்களது நாட்டுக்காக போராடிய தாலிபான்கள் தீவிரவாதியா?
        அப்போது அமெரிக்காவில் பொறியாளராக பயிற்சி பெற்றுக் கொண்டிருந்த பின்லாதினை ஆப்கானுக்கு அனுப்பிவைத்து பணமும்ஆயுதங்களும் அள்ளி கொடுத்து,ரசியாவை எதிர்த்து போராட வைத்தது அமேரிக்கா அல்லவா?அபடிஎனில் அமெரிக்க அல்லவா தீவிரவாதி?
        ரசியர்களை விரட்டிய பின்னர் தனது பொம்மை அரசாக தலிபான்களை நிறுவி ஆப்கான் கனிமங்களை கொள்ளை அடிக்க நினைத்த அமேரிக்கா அரசுக்கு அடிபணியாது ஆட்சி செய்த தாலிபான் அரசை தீவிரவாதிகளாக காட்டி அந்த நாட்டுக்குள் தனது படையை அனுப்பி வைத்து லட்சகணக்கான மக்களி கொன்றும் சிறைபிடித்தும் கண்டெய்னரில் ஆடுமாடுகளை போல அடைத்து கவுதிமாலா சிறைக்கு அனுப்பி சித்ரவதையி பாதிபெர்களுக்கு மேலாக கொன்று குவித்த அமெரிக்க அஹிசைவாதியா?
        இந்தியாவுக்கு எதிராக அவர்கள் என்ன தீவிரவாதம் பண்ணினார்கள்?

        • ஆக மொத்தம் சொந்தமா மூளையே இல்லாத கூட்டம்ங்கறீங்க. இப்படி இருக்கிறவங்க அடிமையா இருக்கறதுல தப்பே இல்ல.

          • சீனு ////ஆக மொத்தம் சொந்தமா மூளையே இல்லாத கூட்டம்ங்கறீங்க. இப்படி இருக்கிறவங்க அடிமையா இருக்கறதுல தப்பே இல்ல.///

            ஆமாம் ,உங்களைப் போன்ற அறிவு யாருக்கு வரும்? குண்டு வைத்துவிட்டு அந்த இடத்தில் இஸ்லாமிய துண்டு பிரசுரங்கள் ,தொப்பிகள் இதைஎல்லாம் விட்டு விட்டு செல்லும் அற்புத ஐடியா
            அமெரிக்காவுக்கு வாழ் பிடிக்கும் அயோக்கியத்தனம் .சென்சார் போர்டு அனுமதித்ததை மறுக்கலாமா?என்று தேசிய கீதம் பாடுபவர்கள் ,கிருஷ்ணா கமிசன் அறிக்கையை பொருட் படுத்தாது அதன் அடிப்படையில் தன்னை கைது செய்து பார்க்கட்டும் என்று சவால் விட்ட தாக்கரே வை பற்றி வாய் திறக்காதவர்கள்
            அமேரீக்க இந்திய இறையாண்மையை மீறி கல்பாக்கம் அணுமின் நிலையத்தை வேவு பார்த்தபொழுது செத்த பாம்புபோல இருந்தவர்கள் முஸ்லிம்கள் என்றால் தங்களது முழு அறிவையும் தேசபக்தியையும் கொட்டுவது அறிவின்வெளிப்பாடே

          • சீனு பல பிரச்னைகளில் அமெரிக்க சொல்லித்தானே இந்தியா கேட்க முடிகிறது அப்போது என்ன இந்தியா முட்டாளா?

        • I know about the Talibs and they are not saints.

          i dont know why you are bothered by them?

          as usual,acting beyond their weight,i hope modi comes and knock u all off your perch.

          • ஹரிகுமார் ///I know about the Talibs and they are not saints.///
            அவர்கள் புனிதர்கள் அழல் அவர்கள் மனிதர்கள் .தனது நாட்டின்அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் மனிதர்களை ,இப்படி ஒவ்வொரு நாட்டிலும் போராடுபவர்கள் இருக்கவே செய்கிறார்கள் .அதே சமயத்தில் தாலிபான்கள் தங்களது மத கடமைகளையும் கடைபிடித்தால் அதை தீவிரவாதமாக்கி அதனுடன் மதத்தை முடிச்சு போட்டு மொத்த முஸ்லிம்களையும் அவர்களைப் போலவே ஏன் காட்டவேண்டும்?

            மோடி குஜராத்துக்குள் அடக்கம் .இந்த தடவை உங்களது மோடி தலைமையில் பாஜக 90 எம்பி சீட்களை தாண்டாது .குஜராத்திலே 2 எம்பி சீட்கள் குறையும் .

  13. நச்சென்ற பதிவு. தொழில் நுட்பம் சினிமாவில் மட்டும் தான் புதிதாக வருகிறதா? எல்லாத் துறைகளிலும் தான் வருகிறது. புதிதாக ஒரு தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காகவே ஆஹோ ஓஹோ என்று ஒருவரைத் தலையில் தூக்கிக் கொண்டாடுவது வேறு எந்தத் தொழிலிலும் இல்லை.சினிமாக்காரன் தான் ஃபாஸிஸம், ஃப்யூடலிஸம் எல்லாவற்றுக்கும் முதுகு சொரிகிற தன்மானம் கெட்ட வியாபாரி என்பது தெரிந்தும் ஜனங்கள் ஏன் இப்படி மயக்கத்தில் கிடக்கிறார்களோ? சினிமாக்காரன் ஒவ்வொருவனும் கலைச்சேவைக்காகவே பிறந்த மாதிரி தினவெடுத்துத் திரிவான். ஆபாசமாக இருக்கிறதே என்று தட்டிக் கேட்டால் வியாபாரம் தானே என்பான். அவர்கள் இருமினாலும் தும்மினாலும் செய்தியாக எண்ணி வாய் பிளப்பதை நிறுத்தி இவர்களை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் என்று ஒதுக்கி வைக்கிறோமோ அன்றுதான் இவர்கள் கொட்டம் அடங்கும்.

  14. ஐயா வினவு அவர்களே!
    மூச்சு முட்ட நல்லா எழுதி இருக்கீங்க. inox ticket ரூ 120 தான், ஆனா ரூ 10 க்கும் இருக்குங்க மற்ற திரையருங்குல ரூ.50 க்கும் இருக்குங்க!! அங்க போய் பாருங்க, சொகுசாவும் வேணும் சும்மாவும் வேணும்ன எப்டீங்க! இப்ப internet க்கு செலவு பன்னி என்ன மாதிரி முட்டலுங்க இந்த ​​blog அ படிச்ச தான உங்களுக்கு வருமானம், இல்லேன்னா ‘வினவு’ வெறும் ‘கனவு’, நீங்க இத சேவையா செஞ்சீங்கன்ன் நீங்க இவ்ளோ வியாக்யானம் பேசலாம்.

  15. முஸ்லீம்கள் இந்த போராட்டங்களின் மூலம் சொல்ல வருவதென்ன? ஒற்றுமையாக வாழும் மக்களின் மத்தியின் முஸ்லீம்கள் மற்ற மதத்தை கொல்லும் தீவிரவாதிகள் என்று சித்தரித்து மக்களை பிரிக்க முயலாதே என்றுதான். அவர்களின் கவலை நியாயமானது. ஏற்கனவே பலப்படங்களில் இதை கமல் செய்துவிட்டார்.மறுபடியும் செய்கிறார் என்றால் இவரின் காழ்புணர்ச்சியை என்ன வென்று சொல்வது ? வேறு கதை களங்களே இல்லியா என்ன ?இந்த கபடதாரியை எப்படி அழைப்பது? மேற்கத்திய உலகம் கொண்டாடும் ஒரு சல்மான் ருஷ்டியாக பிரபலம் அடைய முயல்கிறார் என்றே தோன்றுகிறது.

    • whats wrong in showing taliban and wahhabis for being fanatical and stupid?

      Just because some guy does namaaz and has a arabic name,does that mean he is immune from all his sins?

    • மிக மிக சரியாக சொநீர்கள் இந்தியன் அவர்களே. கமல் ஒரு பெருமை விரும்பி என்பது உலகுக்கே தெரியும் , அவர் அமெரிக்காவில் புகழ் பெற வேண்டும் என்றால் முஸ்லீம்களை கேவல படுத்தினால் போதும் .

      அப்படியாவது ஒரு ஆஸ்கார் கருவாடு தர மாட்டானுங்களா என்ற நப்பாசை தான் போலும்…கடைசியில் முதலுக்கே மோசம் வந்து விட்டது.

      எந்த ஒரு சமூகத்தையும் கருத்தால் தாக்கி அவர்கள் மனதை புண்படுத்தி தான் படமெடுப்பேன் ,மற்ற இயக்குனர்கள் போல ஜனரஞ்சகமான படம் எடுக்க மாட்டேன் என்றால் …தயவு செய்து படமே நீ எடுக்காதே…உன் ஒருவனின் கருத்து சுதந்திரத்திற்காக மாமன் மச்சானாக பழகும் இரு சமூகமும் எதிர் எதிர் திசையில் நிற்க வேண்டுமா??

  16. // நீங்க இத சேவையா செஞ்சீங்கன்ன் நீங்க இவ்ளோ வியாக்யானம் பேசலாம்.// நல்லா வினவு இணையதளத்தைப் பாருங்க ஹல்லொ பாஸ்!வினவு செய்யறது சேவைதான்.

  17. இந்த கட்டுரையில் உள்ள பெரும்பான்மையான கருத்துகளோடு நான் ஒத்து போகிறேன்.

    //சினிமா என்பது முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு தொழில். அது கலை என்பதாக ஏற்கப்பட்டாலும் நிச்சயம் தொழில்தான். சினிமா சந்தையை ஒரு சில முதலாளிகள் மட்டுமே தீர்மானிக்கிறார்கள். அவர்களுக்கு நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என்று பெயர் வேண்டுமானால் மாறுபடலாம். இவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் சிறிய பட்ஜெட் படங்கள் வாழவோ சாகவோ முடியும். அதைத்தாண்டி வேறு அற்புதங்கள் நிகழ்ந்து விடாது.//

    வினவை பொறுத்தவரையில் ரஜினியும் – கமலும் இன்னபிற கோடியில் புரளும் கதாநாயகர்கள் யாவருமே வில்லன்கள்தான் என்பது சரிதான். ஆனாலும், எல்லா விசயத்திலும் ஒரு குறிப்பிட்டவர்களை (எந்த அளவுக்கு கேவலமாக) விமர்சிக்க முடியுமோ, அந்த எல்லை வரை தாராளமாக சென்று வருகிறீர்கள். ஊருராக,மக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் நீங்கள் ஏன் சொந்தமாக படம் தாயரிக்க கூடாது? உங்களது புரட்சிகர கருத்துகளை திரையிலும் சொல்லலாமே.

    • //ஊருராக,மக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் நீங்கள் ஏன் சொந்தமாக படம் தாயரிக்க கூடாது? உங்களது புரட்சிகர கருத்துகளை திரையிலும் சொல்லலாமே//

      நீங்கள் கேட்கும் கேள்விக்கு எனக்கு தெரிந்த காரணங்களை கூறுகிறேன் தவறாக இருந்தால் தோழர்கள் மன்னிக்கவும்.

      1. கலை இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் மக்களுடன் நெருக்கமாக இருக்க முடியும். இதன் மூலம் சமூகத்தின் உண்மை நிலையை தங்கள் படைப்புகளில் பிரதிபலிக்க முடியும். ஆனால் இன்றைய சினிமா மேற்கத்திய கலாச்சாரத்தின் கைத்தடியாகவே உள்ளது. சினிமாவில் புகுவதால் மக்களுக்கும் இயக்கத்திற்கும் இடையே நெருக்கம் குறைந்து விடும் என்று எண்ணி இருக்கலாம்.

      2. 5 பாடல்கள் (1 குத்து, 1 ரொமாண்டிக் கண்டிப்பாக) இடம் பெற வேண்டும், 4 பைட், 1 டூ பீஸ் சீன்….இப்படி வியாபரமயமாக்கபட்ட கலை துறையில் வினவின் புரட்சிகர இயக்கங்களுடன் திரைப்படம் எடுப்பதற்கு எந்த தயாரிப்பாளர் முன் வருவார்.

  18. வினவு, இந்த மாதிரி லூசுத்தனமான பதிவுகளை நிறுத்திக்கொண்டால் அதுவெ இந்த சமூகத்துக்கு செய்யும் நன்மை…. Don’t think or swim in the fact that you are speaking neutral in this article. You are misleading everyone and basically you have some problem i hope. I am not saying that because i am a Kamal Fan or against any particular community. Right to express is a good thing if you rely on a Practical world. I started reading Vinavu because of its non-biased articles, but now , thinking that this is non-biased, you have gone to some negative ends, which is more dangerous. I request that you stop some crap articles like this and concentrate to increase the quality to boost your web traffic. Don’t recommend things similar to votebank politics. I have started seeing many articles like this inrecent days. Shame..

    • இப்படி மேம்போக்காக சொல்லாமல் எந்த வினவின் எந்த கருத்துகளில் முரண்படுகிறீர்கள் என்று தெளிவாக குறிப்பிட்டால் விவாதிக்கலாம்.

      For Eg: // I started reading Vinavu because of its non-biased articles, but now , thinking that this is non-biased, you have gone to some negative ends, which is more dangerous//

      Which part the article makes you think it’s biased and supports what????

      //You are misleading everyone and basically you have some problem i hope.//
      How they are misleading and to where/what?
      //Right to express is a good thing if you rely on a Practical world//

      Freedom of expression is a limited one Mr.Guru (it should not result in defamation). I guess it’s listed in the Indian constitution under part II. similarly freedom of expression has a corollary i.e..,freedom of criticism. Got my drift!!!

      // I am not saying that because i am a Kamal Fan or against any particular community//
      This is a solid gold tell. It reflects the deeply felt anger and your arguments clearly lacks objective reasoning.

  19. VInavu – I was a reader of u for long time..U have some wonderful articles..But why the _______you write such ______ articles? You realy dont have the guts to write against fundamentalism by all religions.(You leave out islam mostly)..I am an atheist , a freethinker..Good bye..

  20. I second tis
    ////வினவு, இந்த மாதிரி லூசுத்தனமான பதிவுகளை நிறுத்திக்கொண்டால் அதுவெ இந்த சமூகத்துக்கு செய்யும் நன்மை…. Don’t think or swim in the fact that you are speaking neutral in this article. You are misleading everyone and basically you have some problem i hope. I am not saying that because i am a Kamal Fan or against any particular community. Right to express is a good thing if you rely on a Practical world. I started reading Vinavu because of its non-biased articles, but now , thinking that this is non-biased, you have gone to some negative ends, which is more dangerous. I request that you stop some crap articles like this and concentrate to increase the quality to boost your web traffic. Don’t recommend things similar to votebank politics. I have started seeing many articles like this inrecent days. Shame..

  21. இன்னும் படமே வரல, அதுக்குள்ள வினவு எதுக்கு ‘விஸ்வரூபம் : ஒரு முன்னோட்டம் !’ அப்டின்னு போடணும்? ‘கமலின் கேவலமான வியாபாரம்’ அப்டின்னு போட்ருக்கலாம். முற்றிலும் முரணான கட்டுரை. வானம் படத்தை வினவு பாராட்டியதை ரசித்த என்னால் இந்த கட்டுரையின் நடுநிலை இல்லாததை ரசிக்க முடியவில்லை. கமல் தன்னை வியாபாரி என்று சொன்னதில் தப்பு ஏதும் இல்லை. ஒரு திரைபடத்தை பற்றி மத தலைவர்கள் தான் முடிவு சொல்ல வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லை. இதே மத தலைவர்கள் பாலியல் வக்கிரத்தை தூண்டும் படங்களுக்கு எதிரா இப்படி மிரட்டல் விடுப்பார்களா ? இந்து முன்னணிக்கும் இந்த முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஒரு வித்யாசம் கூட இல்லை என்பதை இப்போ புரிந்து கொண்டேன். இதைவிட போராட்டத்தை எந்த வகையிலும் கொச்சை படுத்த முடியாது . படத்தில் என்ன இருக்கு என்பதே தெரியாமல் கமல் ஹாலிவுட் போறான், அதா பிளான் பண்றான் இத பண்றான் என்பதெல்லாம் கட்டுரையாளரின் கற்பனை தான்.

  22. <>

    ஆம் ரிசானாவின் படுகொலையை யாரும் கண்டிக்கவில்லை.”ஓடு மீன் ஓடி உறு மீன் வரும் வரை காத்திருக்குமாம் கொக்கு” என்பது போல் ‘இழவு’ செய்திக்காக காத்திருந்து தற்போது துக்கம் விசாரிக்கிறார்கள், ஏதோ எதிர் பார்த்த வெற்றி போல்.தமிழ் நாட்டில் ஒரு தாத்தா ரிசானாவின் 30க்கு கடிதம் எழுதுகிறார், அய்யோ பாவம் அவருக்கு தெரியாது ஆவி உலகத்திற்கு தபால் படடுவாடா இல்லை என்று.

    மதம் நெரடியாக ஆட்சி செய்தால் எப்படி இருக்கும் என்ற வினவின் பழைய கட்டுரை மிகையல்ல. இங்கு என்ன வித்தியாசம் என்றால் பரிசுத்த வேதாகமத்திற்கு பதிலாக புனித திருகுரான்,ஆனால் முடிவு ஒன்றே,அது மரணம்.பெயரில் தான் பரிசுத்தமும்,புனிதமும். ஒரு வேளை வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டின் பக்கங்கள் புரட்டப்படாமல் புதிய ஏற்பாட்டின் பக்கங்கள் புரட்டப்பட்டு இருந்தால் அந்த அப்பாவி பெண் கம்பிகளுக்கு பின்னாலாவது உயிருடன் இருந்திருப்பாள். அளவற்ற அருளாளனின் தேசத்தில் இருப்பதோ ஒரே ஒரு மறுபதிப்பு பதிக்க முடியாத புத்தகம், அது நேரடியாகவே அவளை கழுமரத்திற்கே அனுப்பியது.

    இதில் என்ன கொடுமை என்றால் இஸ்லாமிய சமய (காவலர்) அமைப்புகள் யாவும் நிகரற்ற அன்பாளனின் தேசத்தை கண்டிக்கவேயில்லை, மாறாக நியாயப்படுத்தின. பிபிசி தமிழ் சேவை செய்தியாளர் உள்ளூர் மௌலவியிடம் குற்றசாட்டு “ஆதாரத்துடன் நிறுபிக்கப்பட வில்லை”, ஆனாலும் தண்டனையை நிறைவேற்றி விட்டதே சவுதி அரேபியா இதை நீங்களோ, உங்கள் அமைப்போ கண்டிக்க வில்லையே ஏன் என வினவியதற்கு, அந்த மௌலவி ஷரியா சட்டத்தை கண்டிக்க முடியாது அது இறைவணின் தீர்ப்பு என்றார். பிபிசி செய்தியாளர் திகைத்துபோய் மௌலவிக்கு கேள்வி விளங்க வில்லையோ என நினைத்து மறுபடியும் அதே கேளவியை கேட்கிறார்,மௌலவியோ மிகுந்த புரிதலுடன் அதே பதிலை அழுத்தமாக எடுத்துரைக்கின்றார். அதாவது இங்கு குற்றம் நிறுபிக்கப்பட தேவையில்லை தீர்ப்பும்,தண்டனையும் தான் முக்கியம் ஏன் என்றால் இது அல்லாவின் ஆனை. மௌலவியின் புத்தியே இப்படி என்றால் அவரிடம் போதனை கேட்பவரின் நிலமை எப்படி இருக்கும்.

    (குறிப்பு :எழுத்து பிழை இருப்பின் மண்ணிக்கவும்)

    • இலங்கை ரிசானவுக்குஅழுது ,அழுது இன்னும் கண்ணீரை நிறுத்தாத சகோதர பாசங்களே !
      இந்திய சட்டம் ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை .ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்ற அடிப்படையில் வகுக்கபப்ட்டவை.

      இஸ்லாமிய சட்டம் ஒரு நிரபராதி கொல்லப்பட்டாலும் பரவாயில்லை ,ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடக் கூடாது என்ற அடிபப்டையில் உள்ளவை .
      இப்போது சிந்தியுங்கள் ,
      ஒரு நிரபராதிக்காக ஆயிரம் கொலையாளிகள் தப்பித்தால் 2000 நிரபராதிகள் கொல்லப்படுவார்கள் .
      ஆனால் ஒரு நிரபாராதியின் சந்தேகமான விடுதலையால் ஆயிரம் கொலை யாளிகள் தப்பித்துவிடுவார்கள் .அதனால் 2000 நிரபராதிகள் அல்லது அதற்கும் மேல் கொல்லப்படுவார்கள் .
      இதை நீங்கள் மறுத்து பாருங்கள்

      குறிப்பு ;மன்னிப்பிலே எழுத்து பிழை

      • நன்றி Ibraham.

        பதிவை பதிவேற்றி விட்டே இதனை கவனித்தேன்.Virtual Tamil Inscript Keyboard பாவனையில் பழக்கமின்மையால் இப் பிழைகள் எற்படுகிறது.

      • //இலங்கை ரிசானவுக்குஅழுது ,அழுது இன்னும் கண்ணீரை நிறுத்தாத சகோதர பாசங்களே !//

        அழுவதற்கு சகோதர பாசம் தேவையில்லை, உணர்ச்சிகள்தான் தேவை.

        //இஸ்லாமிய சட்டம் ஒரு நிரபராதி கொல்லப்பட்டாலும் பரவாயில்லை ,ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்து விடக் கூடாது என்ற அடிபப்டையில் உள்ளவை //

        (இதைதான் அவர் நாயகனில் பேசினார், பிறகு ஏன் இப்போது அவரை எதிர்க்கிறீர்கள்?)

        மனிதன் உணர்ச்சி மற்றும் கற்ற அறிவின் வழியாக இயங்குபவன், கடவுளோ “முற்றும்” தெரிந்தவர்,இதில் எவ்வாறு அவரின் சட்டங்கள் மனிதர்களுக்கு உகந்தது, பாவம் முற்றும் தெரிந்தவருக்கு இது தெரியவில்லை. அவரின் அல்லகைகளான உங்களுக்கும் தெரியவில்லை. ஷரியா, மனுநிதீ, ஏற்பாடுகள் எல்லாம் கடவுள் வாழும் நரகத்திற்கு மிக சரியாக இருக்கும், அறிவுள்ள மனிதன் வாழும் உலகிற்கு தேவையில்லை.

  23. \\இப்ப internet
    க்கு செலவு பன்னி என்ன
    மாதிரி முட்டலுங்க இந்த
    blog​​ அ படிச்ச தான
    உங்களுக்கு வருமானம்,//

    உங்கள மாதிரி முட்டாள்கள்ளாம் வினவு பிளாக்க படிச்சி மூலைய வலத்துக்குங்க சார்.

  24. கமல் காசன் சினிமா என்ற பெயரில் எது வேண்டுமானாலும் எடுக்கட்டும் ஹாலி வூட் அளவிற்கு எடுக்கட்டும் எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் ஏற்கனவே கல்வி சமூக அடிப்படையில் பின்னோக்கி இருக்கும் ஒரு சமூகத்தை உண்மைக்கு முற்றிலும் மாற்றமாக தீவிர வாதிகளாக சித்தரித்தால் அச்சமூகம் மென் மேலும் பாதிக்கப்படும் என்பதாலேயே எதிர்க்கின்றோம் மேலும் த த ஜ , ம ம க போன்ற இஸ்லாமிய அமைப்புகளைப்பற்றி எழுதும் முன் சம்பவங்களை சரி பார்த்து எழுதுவது நல்லது

      • குரு ,இரட்டை சிந்தனை வேண்டாம் இந்தியாவில் பல குண்டு வெடிப்புகளை நடத்தியதோடு இன்னாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்கள் ,பற்றிய திரை படங்களை காட்டுங்கள் /தாலிபான்கள் இந்தியாவில் என்ன தீவிரவாத செயலை செய்தார்கள்? அவர்கள் நாட்டில் அமெரிக்கர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து போராடுவதை அமெரிக்க தீவிரவாதம் என்று சொன்னால் பகத் சிங் சுபாஸ் சந்திர போஸ் எல்லாம் தீவிரவாதிகளா?

          • ஒரு முஸ்லீம் குஜராத் கலவரத்தை மைய்யப்படுத்தி காவி உடை அணிந்தவர்கள் ஒரு முஸ்லீம் கற்பினியின் வயிற்ரை கிழித்து சிசுவை எடுத்து தீயில் கருக்கி கொண்டு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷமிடும்படி காட்சிகளை படத்தில் எடுத்திருந்தால் இங்குள்ள இந்து அமைப்பினர் ஒத்துக்கொள்வார்களா? இல்லை இந்த சினிமா உலகம்தான் ஆதரிக்குமா ? இல்லை இதுபோல் காட்சியை கமலுக்கு எடுக்க துணிவிருக்குமா ? அதை கருத்து சுதந்திரம் என்று கூறுவார்களா ?

  25. விஸ்வரூபம் சிங்கப்பூரில் ரிலீஸ் ஆகிடுச்சாம் மலேசியாவில் இன்று இரவு வெளியாகிறது மற்றும் ஆந்த்ராவில் நாளை…ஆனால் இந்த இடங்களில் ஒருவர் கூடவா இந்த படத்தில் உள்ள “புண்படுத்தும்” காட்சிக்கு ஆட்சேபிக்கவில்லை?அல்லது தடை விதிக்க வில்லை?விசித்திரமாக உள்ளது

  26. இந்து கடவுள்களின் லட்சணத்தையும் ஆபாசத்தையும் திரைப்படமாக எடுத்து RSS காரர்களிடம் போட்டு காண்பித்தால், அவர்கள் படத்தை தடை செய்ய போராடுவார்கள். கிறிஸ்துவ பைபிளை விமர்சித்து படம் எடுத்து, அதை கிறிஸ்துவர்களிடம் போட்டு காண்பித்தால், அவனும் படத்தை தடை செய்ய போராடுவான். இதே போல இஸ்லாமின் காட்டுமிராண்டித்தனத்தை விமர்சித்து படம் எடுத்தால், இஸ்லாமிய பிற்போக்குவாதிகளும் எதிர்த்து போராடுவார்கள். இந்த மாதிரியான போராட்டங்களை ஊக்குவித்தால், எதிர்காலத்தில் பகுத்தறிவு இயக்கமே தமிழ்நாட்டில் இல்லாதபடி செய்து விடுவார்கள். பகுத்தறிவாளர்கள் , மதங்களை விமர்சித்து எந்த புத்தகங்களையும் எழுத விடமாட்டார்கள். இது போன்ற மதவாத போராட்டங்களுக்கு எந்த வித ஆதரவும் வழங்கக்கூடாது. மதவாதிகளின் பேச்சை கேட்டு எந்த திரைப்படத்திற்கும் தடை விதிக்கக்கூடாது. கருத்துரிமைக்கும், தமிழ்நாட்டின் அறிவியல் வளர்ச்சிக்கும் இவை மிகப்பெரிய தடைக்கற்கள் ஆகும்.

  27. இஸ்லாமிய மதத்தினால், பெண்கள் அடிமைகளாக நடத்தபடுவதை எதிர்த்து புத்தகம் எழுதிய தஸ்லீமா நஸ்ரீன் என்ற பெண்ணிய பகுத்தறிவு போராளியை “தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம்” என்று போராடி அவரை வரவிடாமல் தடுத்த அதே இஸ்லாமிய அமைப்புகள் தான் இப்போதும் போராட்டத்தில் குதித்துள்ளன. பிற்போக்குவாதிகளின் போராட்டங்களில் பொதுவாக நியாயமிருப்பதில்லை. இந்த இஸ்லாமிய அமைப்புகளுக்கும், RSS உக்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாக தெரியவில்லை. இவர்கள், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவதற்கு எதிராக போராடுவதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமிய காட்டுமிராண்டி தத்துவங்களை விமர்சிக்கும் அனைவரையும் அழிக்க போராடுபவர்கள். தமிழ்நாட்டுபகுத்தறிவாளர்கள், இஸ்லாமிய மதத்தை விமர்சிப்பது குறைவாக இருப்பதால், இவர்கள் நம்மை எதிர்ப்பதும் குறைவாக உள்ளது. தஸ்லிமா நஸ்ரீனை போல நாமும் இஸ்லாமை விமர்சித்து புத்தகம் எழுதினால், நம்மையும் தமிழ்நாட்டை விட்டு விரட்ட பார்ப்பார்கள்.

    • அமெரிக்கா வியட்நாம் வீரர்களை இரு உள்ளங்கை களின் தோலைசீவி கூப்பிய கரமாக ஒட்டி இருகைகளையும் பிரிக்கமுடியாத அளவில் சித்ரவதை படுத்தியது முதல் ஜப்பானில் அணுகுண்டு வீசி இன்று வரை புல் பூண்டு விளைய விடாமல் ஆக்கியதை ,போபால்விஷவாயுவால் கொல்லபப்ட்ட மக்களுக்கு இன்னும் நஷ்ட ஈடு கொடுக்காமல் இருப்பதை ,அந்நிய நாடான ஆப்கானில் ரசியாவை விரட்ட ஆயுதங்கள் கொடுத்து விரட்டிய பின்னர் அவர்கள் அடக்கி ஆயிரகணக்கான மக்களை கண்டெஇனரில் அடைத்து அதில் பாதி பேர்கள் மூச்சு முட்டி சாகடித்து மீதியாநோரை கவுதிமாலாவில் சித்ரவதை படுத்தி சாகடித்த காருண்யா செயலை படம் பிடித்து உலக மக்களுக்காக காட்டிட யாரும் முயற்சிக்கவில்லையே ஏன்?உயிர்முடிச்சை நசுக்கிவிடுவான் என்பதாலா?

      • Ithellam ungalukke therinjirukku,ithellam ulaga makkalukku yen theriyadhu.

        Muslim oruthar thappu pannuna mattum adhu thani manitha eedupaadu,americavula oru janaadhipadhi mudivu edutha athu 1776 mudhal irukkum americavukke ketta peru.

        indha aalayellam eppadi thaan madichu oorula nadamaada vudraangalo.

  28. படத்தைப் பார்க்காமல் இப்படியொரு விமர்சனம் சரியல்ல. முதலில் தடை செய்யச் சொன்னவர்கள் சரியானவர்களாயிருந்தால் படத்தை வெளிவர விடவேண்டும். அதன் பிறகு மக்கள் தான் அதன் முடிடிவை தெரிவிக்க வேண்டும். இவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது?

  29. What you are saying sir, thasavatharam movie la saiva vaina prachanaiya kaiyandu iruntharu.
    atha nammalala marukka mudiyala why because that is true here vice versa. movieya parkkurathukku munnadi neenga eppadi oru vimarsanatha vaikalam. kamala pathi pesa thaguthi illatha alellam avara pathi pesa arambichitanga

  30. ஏன்__ வினவு? முஸ்லிம்கள் தான் ரியான விசயத்தில் பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுத்து இருக்காகல. நீ பொய் விவாதம் பண்ணி உனக்கு தில்லு இருந்த நிருபிக்க வேண்டியது தான. அத விடு கருணாநிதி அறிக்கை விடுர மாதிரி ஏன் இங்க எழுதிக்கிட்டு இருக்க.

    • பூமி கோளவடிவம் என்று பகுத்தறிவாதிகளாகிய எங்களுக்கு தெரியும்..
      நீங்கள் இல்லை, இல்லை பூமி தட்டையானது, அதை இறைவனே வந்து எங்களிடம் சொன்னாறுனு சொல்லுவீங்க. நாங்க உங்கள் கிட்ட வந்து விவாதம் செய்து நிரூபிக்க வேண்டும் அப்படிதானே?

      எப்பவோ சொன்னதையெல்லாம் இன்னமும் நம்புவது, அதை அப்படியே ஏற்றுக்கொள்வது அறிவாகாது நம் மக்களின் பிரச்சணைகளுக்கு தீர்வு எந்த மத நூலிளோ, இறைவனிடமோ இல்லை தயவுசெய்து கொஞ்சம் அதை தாண்டிவாங்க….

  31. இசுலாமிய தீவிரவாதமும், இந்துத்துவா தீவிர வாதமும்நாட்டை எஙகே கொன்டு செல்லும்? முற்போக்குவாதி என கூறிக்கொள்ளும் கமல், காவிக்கு ஜால்ரா போட்ட மணிரத்னம் போல மத சென்டிமென்ட் விவகாரத்தில் விளையாடலாமா?

  32. இந்த கட்டுரையில் உள்ள பெரும்பான்மையான கருத்துகளோடு நான் ஒத்து போகிறேன்.

  33. ‘விசுவரூபம்’ படத்திற்கான எதிர்ப்பை இசுலாமிய அமைப்புகளின் அணியில் நின்று பேசுவதும், கருத்துரைப்பதும் தவறே. ரிசானா என்ற இளம்பெண்ணின் மரணத்தைக் கொண்டாடியவர்கள் பெரும்பாலோர். ஆனால், ஒரு சில இசுலாமிய தீவிரவாதிகள் எனப்படுவோரின் நடவடிக்கையால் ஒட்டமொத்த இசுலாமிய சமூகமே பழி சுமந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்தப் படம் பொது புத்தியில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்வது சிரமமல்ல. கமலின் இப்போதைய ஆவேசம் கலைஞனுக்குரிய சத்திய ஆவேசம் போலில்லை; ஒரு தேர்ந்த வியாபாரியின் வியாபார தந்திரங்கள். எனவே கருத்துரிமை, கலை உரிமை என்று இப்பிரச்சினையை அணுகுவது மேம்போக்கான அணுகுமுறையே. இந்தியாவின் பல நகரங்களில் இசுலாமிய மக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில்லை. முசிலிம் நிறுவனங்களில் மட்டுமே அவர்கள் நிம்மதியாக படிக்க முடிகிறது போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள்.

  34. விஸ்வரூபம் விமர்சனம்

    கதைக்களம் அமெரிக்கா. ஒரு மிடில் கிளாஸ் ஃபிகர் தன்னோட மேல் படிப்பை முடிக்க நினைக்கறப்போ பெற்றோர் வற்புறுத்தலால மனசுக்கு இஷ்டமே இல்லாம மேரேஜ்க்கு ஒத்துக்கறா. டும் டும் டும் பட ஜோதிகா மாதிரி .

    எப்படியோ மேரேஜ் லைஃப் 3 வருஷம் ஓடிடுது . பெருசா 2 பேருக்கும் அட்டாச்மெண்ட்டும் இல்லை, பெரிய சண்டை ஏதும் இல்லை . மவுன ராகம் ஜோடி மாதிரி தொட்டுக்கோ தொடைச்சுக்கோன்னு வாழ்க்கை நகருது . ( ஆனா மேட்டர் முடிஞ்சடுது – ஹீரோ கமல் ஆச்சே? )

    இந்த 3 வருஷ கேப்ல நிரூபமா ( ஹீரோயின் ) மேற்படிப்பை முடிச்சு டாக்டர் ஆகிடறா . ஹீரோ விஸ்வநாதன் டான்ஸ் ஸ்கூல் நடத்தறார். 2 பேரும் அவங்கவங்க ரூட்ல போறாங்க .

    ஹீரோ வரலாறு அஜித் மாதிரி கொஞ்சம் பெண் தன்மை உள்ள ஆள் . பரத நாட்டியம் பயின்றதால அவருக்கு இயல்பாவே முரட்டுத்தனம் ஏதும் இல்லாம பெண்மையின் மென்மை வந்து ஒட்டிக்குது . இதுல பாருங்க அவர்க்கு ஆண்மை இல்லாம எல்லாம் இல்லை. ஆனா சாஃப்ட்டா இருக்கார் .

    ஹீரோயினுக்கு இது பிடிக்கலை .மனசுக்குப்பிடிக்காதத மேரேஜ் , கனவுக்கு தீனி போடாத கணவன் , அதனால டைவர்ஸ் அப்ளை பண்ணலாம்னு நினைக்கறா.

    அதுக்கு ஏதாவது காரணம் வேணுமே ? அவளோட ஐடியா என்னன்னா ஆம்பளைங்க யாரும் யோக்கியன் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பிரேக்கிங்க் பாயிண்ட் இருப்பது மாதிரி ஒவ்வொரு ஆணுக்கும் டீன் ஏஜ்ல ஒரு லவ் அஃபேர் இருந்திருக்கும், அதை கண்டு பிடிச்சா அதை வெச்சு டைவர்ஸ் வாங்கிக்கலாம்னு நினைக்கறா..

    தன் கணவனை வேவு பார்த்து ரிப்போர்ட் கொடுக்க ஒரு தனியார் துப்பறியும் ஏஜெண்ட்டை நியமிக்கறா . அன்ஃபெயித்ஃபுல் ( UNFAITHFULL) படத்துல வர்ற மாதிரி . அதுல ஹீரோ ஹீரோயினை உளவு பார்க்க ஆள் வைப்பான் . ஆனா இதுல உல்டா ல உல்டா . ஹீரோயின் ஹீரோவை உளவு பார்க்கறா .

    கிணறு வெட்ட கலா மாஸ்டர் கிளம்புனது மாதிரி புதுசு புதுசா அதிர்ச்சியான சில தகவல்கள் ஹீரோவைப்பற்றி தெரிய வருது

    1. அவர் ஒரு தீவிரவாதியா?

    2. தாலிபான் அமைப்பில் பணி ஆற்றியவரா?

    3. நரசிம்மா படத்துல வர்ற மாதிரி தீவிரவாதியாக நடிக்கும் இந்திய உளவுப்படை ஆஃபீசரா?

    4. அவர் என்ன பிராஜக்ட்டுக்காக பாட்ஷாவா இருந்தவர் இப்போ மாணிக்கமா நடிக்கறார்?

    5. ஒபாமாவை கொலை செய்யத்துடிக்கும் கூட்டத்தில் இவரும் ஒருவரா? அல்லது அந்த கூட்டத்தைப்பிடிக்க வந்த ஆஃபீசரா?

    ஒரு எழவும் புரியல தல சுத்துதுது….வழக்கம் போல கமல் தன மேதாவி தனத்தை காட்டுறேன்னு இந்த படத்தையும் சொதப்பி இருக்கார் .

    மீதியை தமிழ் நாட்டில் வெளிவந்தால் வெண் திரையிலோ , கமல் வெளி இட்டால் டிடிஎச் லோ , இல்லானே ஒரு இருபது ரூபாய் கொடுத்து வழக்கம் போல டிவிடி யிலோ பாருங்க.

    கடைசியாய் கமல் சாரிடம் ஒரு கேள்வி புரியுற மாறி எப்பதான் படம் எடுக்க போறீங்க ?

    கடன்காரனுங்க விரட்ட கமல் ஜட்டியோட ரோட்ல ஒடனுங்குறது விதி எவன் மாத்த முடியும்?

  35. இந்த விமர்சனத்தில் கதை மட்டுமே சொல்லப்பட்டிருக்கிறது.

    “புரியுற மாறி படம் எடுக்காத காரணத்தாலேயே… கடன்காரனுங்க விரட்ட ஜட்டியோட ரோட்ல கமல் இப்படி ஒடனுங்குறது விதி”

    ‘நச்’ என முடித்திருக்கும் விதம் அருமை!

    -கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ்

  36. ஒரு பலமிக்க மனிதன் ஒரு ஐந்து வயது சிறுவனை காட்டி இவன் என்னை அடிக்கிறான் எங்களை கொல்ல பார்கிறான் என்று கூச்சலி ட்டுக்கொண்டே அந்த சிறுவனை நாயடி பேயடி அடிக்கிறான். இப்படித்தான் உலகத்தில் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.அசுர பலம் பொருந்திய அமெரிக்க மற்றும் அதன் அடிவருடி நாடுகள் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மறைத்து தங்களின் பலம் வாய்ந்த மீடியாக்களால் அவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி அவர்களை உலகத்தின் விரோதியாக சித்தரிக்கின்றன. இஸ்ரேலை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் போராடினால் அவன் இஸ்லாமிய தீவிரவாதி. ஆக்கிரமிப்பு ரசியர்களை எதிர்த்து போராடினால் அவனும் இஸ்லாமிய பயங்கரவாதி . காஷ்மீரிகள் அவர்களின் நியாத்திற்கு போராடினால் அவனும் இஸ்லாமிய பயங்கரவாதி.அவன் எதிர்ப்பை காட்ட ஒரு குண்டு வெடித்தால் அவன் நாட்டில் கூட்டமாக சேர்ந்து கொத்து கொத்தாக குண்டுகளை வீசுகிறார்கள் .அவன் பத்து பேரை கொன்றால் இவன் ஆயிரம் பேரை கொல்கிறார்கள் . இஸ்லாமிய நாடுகளின் கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இராக்கில் அணுகுண்டுகள் இருக்கென்று கூறி (பண்ணிகளை போன்று) கூட்டமாக அந்நாட்டை தாக்கி பல ஆயிரம் மக்களை கொன்று குவித்து ஒரு இரும்பு குண்டை கூட எடுக்காமல் திரும்பியவர்களை எவனாவது கண்டித்தானா ? எவனாவது அதை படம் எடுத்தானா ? ஆனால் இங்கே அடிவாங்கி பரிதாபநிலையில் இருப்பவன் தான் வில்லன்.அநீதி இழைக்கப்பட்டவன் தான் அயோக்கியன்.இப்படித்தான் படம் எடுக்கிறார்கள். இது எப்படி முடிகிறது? அவர்களின் பலமான ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்படும் பிரசாரத்தினால் தான். தொலைக்காட்சி, பத்திரிகை, ஹாலிவுட் திரைப்படங்கள், இணையதளங்கள் என்று தொடர்ந்து செய்யப்படும் பிரசாரமே. இங்கு ஊடகத்தால் நியாயங்கள் புதைக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதேதான் நடக்கிறது. 5 வருடங்கள் முன்புவரை இந்தியாவில் குண்டு வைப்பவர்கள் இஸ்லாமியர்கள் தான் என்று இஸ்லாமியர்களே நம்பினார்கள். இன்று அநேக குண்டு வெடிப்புகள் காவிக்கூட்டத்தின் நயவஞ்சகத்தால் நடத்தப்பட்டிருக்கும் உண்மை வெளிவந்துவிட்டது. எந்த அமைப்பாவது கண்டித்தார்களா? அதை யாராவது படம் எடுத்தார்களா ?அந்த நியாயத்தை பற்றி எல்லாம் கண்டுக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளிருக்கும் மத வெறி. ஆனால் காட்டப்படுவது பாதிக்கப்பட்டவன் தான் மத வெறி பிடித்தவன் என்று. இன்று அப்படித்தான் விஸ்வரூப படப்பிரச்சனையில் மீடியாக்களில் முஸ்லீம்கள் சித்தரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

    • Great Congress lie – Hindu terrorism. Why should we bomb our own country. We do not have another huge place for 1 billion Hindus to go and live.

      You Muslims have place all over the world. Thats why Muslims bomb India, issue fake currency, support Pakis, Afghanis.

      Another Muslim lie is that Godhra was done by Hindus themselves.

      Muslims are spreading in India because of the corrupt politicians who wants Muslim votes. Poor fellows they don’t know that one day when Muslims get power, Muslims will destroy everyone including the politicians who supported Muslims.

      • Hello Mr. AAR, Please Stop your Goyabals type preaching, U think Hindus only in this country?

        “Why should we bomb our own country.” same question repeated Why should we Muslims bomb our own country?

        “Muslims are spreading in India (only 13.4%)” same thing Hindus also spreaded & spreading in India (80.5%). (Source:en.wikipedia.org/wiki/Religion_in_India)

        Each and every corner of india muslims, dalits & other minorities are suppressed by any means.

        First try to love your compatriot then come to speak about Nationalism.

  37. சகோதரர் பாக்கியராசன் கருத்தே என் கருத்தும்

    கமலின் வருமானத்தை பற்றிய கவலை இருப்பவர்கள் எங்காவது பிச்சை எடுத்து அவருக்கு கொடுக்கலாம் நானும் என்னால் முடிந்ததை தருகிறேன் ஆனால் கூட வாழும் என் சமூகத்தின் ஒரு அங்கத்தினரை வில்லனாக சித்தரித்து வரும்படி பார்க்க நினைக்கும் அவர் படத்திற்கு நான் எதிரி தான்..

    கமலின் வருமானத்திற்கு நீங்கள் கவலைபடுங்கள் நான் என் சகோதரர்களின் ஜனநாயகத்திற்கு துணை நிற்பேன்..

    என்னை போன்ற லட்சாதி லட்சம் இந்தியகளின் எண்ணம் இதுதான் ஒரு கலை கூத்தாடியின் கருத்து சுதந்திரத்துக்காக அண்ணன் தம்பியாக பழகும் இரண்டு சமூகத்தின் ஒற்றுமை கேள்வி குறியாக வேண்டுமா?

    எந்த ஒரு சமூகத்தையும் கருத்தால் தாக்கி அவர்கள் மனதை புண்படுத்தி தான் படமெடுப்பேன் ,மற்ற இயக்குனர்கள் போல ஜனரஞ்சகமான படம் எடுக்க மாட்டேன் என்றால் …தயவு செய்து படமே நீ எடுக்காதே…உன் ஒருவனின் கருத்து சுதந்திரத்திற்காக மாமன் மச்சானாக பழகும் இரு சமூகமும் எதிர் எதிர் திசையில் நிற்க வேண்டுமா??

  38. இதில் வேறு சதி இருப்பது போல் தெரிகிறது.சொந்த பணம் போட்டு எடுக்கும் கமல் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டார்.அமெரிக்கனுடைய பணம் என்றே நினைக்கிறேன்.இவர் அடிக்கடி அமேரிக்கா செல்வதும், இவருடைய அமெரிக்க மோகமும் நாடறிந்ததே.இவ்வளவு நாளாக முற்போக்குவாதியாக அறிவு ஜீவியாக காட்டிக்கொண்டவர் சமீபகாலமாக அமெரிக்க அடிவருடியாக மாறியதன் நிர்பந்தம் என்ன ? சொந்த பணமாக இருந்தால் முஸ்லீம்களுக்கு படத்ததை காண்பித்து இருக்க மாட்டார். துப்பாக்கி குழு போல் ஒன்று இரண்டு காட்சிகளை வெட்டிவிட்டு ஒரு வருத்தத்தை தெரிவித்துவிட்டு படத்தை வியாபாரம் செய்திருப்பார்.இன்றுவரை அப்படி இறங்கியும் வரவில்லை. அதே போல் இவருடைய டிடிஹெச் முயற்சியும் சந்தேகத்தை கிளப்புகிறது. டிடிஹெசில் வந்த அடுத்த இரண்டு மணி நேரத்தில் பளிங்கு போல பிரிண்ட் எடுக்கப்பட்டு திருட்டு டிவிடி சந்தைக்கு வந்துவிடும் என்பது கமலுக்கு தெரியாதா என்ன ? ஆனால் இவர் சொன்ன காரணம் என்ன.. திருட்டு டிவிடி யை ஒழிக்கத்தான் இந்த முயற்சி என்று ? யார் காதில் பூ சுற்ற பார்கிறார் ? அவருடைய நோக்கம் அதுவல்ல. அவருடைய நோக்கம் அதிகப்படியான மக்களிடம் விரைவாக கொண்டு போய் இந்த நச்சு விதையை (அமெரிக்கன் விரும்பியப்படி) சேர்த்துவிட வேண்டும் என்பதுதான். ஒரு டிக்கட்டையே ஆயிரம் ரூபாய் கொடுத்து ப்ளாக்கில் வாங்கும் ரசிகன் இதை வாங்கிவிடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டார். அப்படி வாங்கும் (மடையன்) 52 இன்ச் எல் ஈடி டிவி இல்லாத பாமர ரசிகன் என்ற உண்மை அவருக்கு தெரியவில்லை. 52 இன்ச் டிவி உள்ளவனுக்கு(புத்திசாலிக்கு) டொரண்டை பற்றி நன்றாக தெரியும். அவன் வாங்கவே மாட்டான்ன் என்றும் புரியவில்லை. அந்த படத்தில் கமர்சியல் விஷயங்களே இல்லை. ஒரு டாக்குமென்ட்ரி போல் தான் செல்கிறதாம் கூட்டி கழித்து பாருங்கள் கணக்கு கரெக்டா வரும்.விஸ்வரூபம் படத்தில் வருவது போல் இவரை அரசு உளவு பார்த்தால் படத்தில் வரும் திகிலான திடீர் திருப்பங்கள் போல உண்மையிலும் நிகழலாம்.

    • தெளிவு பண்ணாமல் விடுப்பட்டது…
      சாதரணமாக படம் வெளிவந்து அதனுடைய கேம் பிரிண்ட்(மிக மட்டமான தரமுடையது) வெளிவரவே ஒரு வாரம் ஆகும். அதன் பளிங்கு பிரிண்ட் கிடைக்க 3 வாரங்களோ அல்லது ஒரு மாதத்திற்கு மேலையோ ஆகும். ஆனால் இவர் டிடிஹெசி ஒளிபரப்பிய 2 மணி நேரத்தில் ஹெச்டியில் பளிங்கு போல பிரிண்ட் எடுத்து மார்கெட் கொண்டு வந்துவிட முடியும். அது கமலுக்கு நான்றாக தெரிந்திருக்கு. டொரண்ட என்பது திருட்டுத்தனமா படத்தை டவுன்லோட் செய்யும் தளம்

  39. தடைக்கு எதிராக இல.கணேசன் விஸ்வரூபமாக இல்லாவிட்டாலும் குஸ்பரூபமாக கூக்குரல் கொடுத்திருப்பதும் அதை எல்லா மாமாப் பத்திரிகைகளும் தலைப்பில் போட்டிருப்பதும், இதில் இன்னுமொரு கூத்து! ரஜினிக்கு அழுது அழுது கண்ணீர் வற்றிவிட்டது. படம் மொக்கை என்று தெரிந்துவிட்டதால் பில்ட் அப் எகிறிக்கொண்டே போகிறது. பேசாமல் கமல் இலவச டிவிடியாக வெளியிட்டு உலக முன்னோடியாகலாம்.

  40. கமலிடம் சில கேள்விகள்: இஸ்லாமியர்களின் புனித நூலான புனித குர்ஆன் ,அவர்களுடைய தொழுகை , நபிகள் நாயகம் , குர்ஆன் வசனங்கள், இவை இல்லாமல் உங்களால் படம் எடுக்கவே முடியாதா? வேறு கதை களமே இந்த உலகத்தில் இல்லையா? இதற்கு முன்னரும் இது போல் செய்து நிறைய எதிர்ப்பை சந்தித்த நீங்கள் மீண்டும் இதை வலுகாட்டயமாக செய்வதன் நோக்கம் என்ன? ஆஸ்கார் ஆசையில்
    இஸ்லாமியரை இழிவாக சித்தரித்து படம் எடுத்தால் ஆஸ்கார் கிடைக்கும் என்று எதாவது ஒரு அமெரிக்க ஆஸ்கார் எஜன்ட் சொன்னதை கேட்டு இப்படி செய்கிறீர்களா?

    • அப்படி நீங்க செய்திருந்தால் பாவம் நீங்க …அந்த ஏஜென்ட் உங்களை நல்லா ஏமாத்தி புட்டான் …அதுக்கெல்லாம் ஆஸ்கார் தரமாட்டனுங்க ..படம் நல்ல இருந்தாதான் ஆஸ்கார் அவார்டு கிடைக்கும். விச்வாரூபம் போல டப்பா படத்துக்கெல்லாம் விஜய் டிவி அவார்ட் மட்டும் தான் ..உங்க ரேஞ் அவளோதான் …

  41. ஒரு கூத்தாடிக்காக அவன் சம்பாதிப்பதற்காக சகோதரர்களாய் வாழ்ந்த மக்கள் இன்று பிரிந்து நிற்கிறார்கள்.

  42. உலக நாடுகளின் மக்களுக்கு அமெரிக்க ஆக்ரமிப்பு பற்றிய பொதுபுத்தியை அமெரிக்காவுக்கு ஆதரவன முறையில் மாற்ற ஹாலிவுட் படங்களுக்கு நிதி உதவி தருகிறது அமெரிக்க உளவுத்துறை.அந்த பின்ணணியிலேயே விஸ்வரூபம் படத்தையும் பார்க்க வேண்டியதுள்ளது.கமல்ஹாசனின் தற்போதைய கார்ப்பரேட் தொடர்புகளும் இந்த ரீதியில் கவனத்திற்குரியது.

  43. காமெடியன் கமலின் விஸ்வரூபம் பற்றிய இந்தத் தரமான நையாண்டியை கண்டிப்பாக கலைஞன் கமல் படித்து உண்மையை உணர வேண்டும்.கமல் ரசிகர்கள் 1000 ரூ கட்டியவர்கள்,கட்டாதவர்கள், காத்திருப்பவர்கள் அனைவரும் இப்போதாவது சிந்திக்க வேண்டும்.இசுலாமியர்கள் இசுலாமியர்களாய் ஒன்று திரள்வது,சமூக நியதிகளை இசுலாமிய நியதிகளுக்குள் அடக்க முயற்சி செய்வது இவை போன்றவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.விஸ்வரூபம் பற்றிய நையாண்டி அதன் இயல்பிலிருந்தே வந்திருக்கிறது கவித்துவம்.

  44. ஊடகங்கள் என்ன சொன்னாலும் அப்படியே நம் மக்கள் நம்பி விடுகின்றனர்…
    இதற்கு ஒரு சிறந்த உதாரணம்… ஒசாமா…?

    ஒரு தீவிரவாதியின் பெயரை சொல்லுங்கள் என்று கேட்டால்,,, அனைவரும் சொல்லும் வார்த்தை.. ஒசாமா பின் லேடன்…

    எதனால் அவரை தீவிரவாதி என்று சொல்கிறோம் என்று கேட்டால், பெரும்பாலோர் சொல்லும் பதில்… எல்லோரும் சொல்கிறார்கள் அல்லது டி.வியில் சொல்கிறார்கள்…

    ஊடகங்கள் நம்மை வழிந்டத்திய விதம் இது…

    வெகு சிலரே… நான் அவரை நல்லவர் என்றோ, தீவிரவாதி என்றோ கூறமாட்டேன்,, ஏனென்றால் அவரைப் பற்றி நான் உண்மையாக அறியவில்லை என்று கூறுகின்றனர்… இவர்கள் நேர்மையானவர்கள்…

    சினிமா ஒரு வெகுஜன ஊடகம்… அதில் ஒரு நிகழ்வை பற்றி குறிப்பிட முன் அதைப் பற்றி நன்கு அறிந்து பின் கூற வேண்டும்.. அதுவே நேர்மை…

    கமல் என்ன சொல்லி உள்ளார் என்று எனக்கு தெரியவில்லை.. மேற்கூறிய விதத்தில் கமல் ஆராய்ந்து ஆதாரபூர்வமான விஷயங்களை உண்மையாக அவர் கூறியிருந்தால் அதை எதிர்ப்பது கண்டனத்திற்க்குறியது…

  45. i have seen the movie and found nothing against Muslims.. I put some justification comment about kamal. but in this movie he has done a great job. This movie is a milestone in tamil cinema. Chinna pasanga velayadumbothu sanda pota, vilayata vilayata paru nu solra community aen cinema va cinemavaa paka therila.. movie a pathutu pesunga.. kamlaloda innoru achivement intha padam.. US la ithu second week, nan pona NILES,IL,USA theatre la intha padam than houseful.. kamal ku nashatam kedayathu.. India la padam release ana athu extra profit than..

    Nan onne kekren.. Intha padam already torrent la release aitu.. atha epdi thaduka poringa.. neenga enna panninalum padam velila varum… kamalkaga torrentla padam pakathavanga neraya per..

    FYI.. ithu nalla padam.. purilana athu unga thappu..

  46. கமல் தன்னை நாத்திகவாதி என்று சொல்வது பொய் .முடிந்தவரை தனது படங்களில் வைணவ சமயத்தை தூக்கிபிடித்தவர் அவர்.கமல் தன்னை சாதி மறுப்பாளன் என்று சொல்வது பொய். அவர் தன்னை ஆத்திக்க சாதியை சேர்ந்தவன் என்று பல படங்களில் நடித்துள்ளார். முதலியார் ,ரெட்டியார் ,உடையார், ஐயர் , என சாதிப்பெயர்களை முன்மொழியாமல் அவர் எந்த படத்திலும் நடித்தது இல்லை. விஸ்வரூபம் படத்தில் சர்வதேச தீவிரவாதி முல்லா உமர் கோவைக்கு ,மதுரைக்கு வந்து தங்கியதாக காட்சிகள் அமைத்துள்ளாராம். இதை சிலர் மறுத்து கேட்டபோது தன்னிடம் ஆதாரம் இருப்பதாக கூறினாராம் . இதற்கே அவரை அரசு கைது செய்யலாம் .ஒரு தேடப்படும் குற்றவாளியை பற்றி தனக்கு தெரிந்திருந்தும் அதை கமல் மறைத்துள்ளார் . நல்லவனாக இருப்பது வேறு ,நல்லவன் போல நடிப்பது வேறு .கமல் இதில் இரண்டாம் வகையை சேர்ந்தவர் .

  47. கமலின் விஸ்வரூபம் படம் வந்த பின்புதான் தமிழ்நாட்டில் இசுலாமியர்களுக்கு எதிரான போக்கு எவ்வளவு தூரம் வளர்க்கப்பட்டுளது என்ட்ர உண்மை தெரிகிரது. இதில் அரசியல்வாதிகல், பத்திரிக்கைகல் சினிமா துரையினர் என்ட்ர பேதமில்லை. ஆனால் இதை இசுலாமியர்கள உணர்வார்களா…?

  48. நான் ஒரு நாத்திகவாதி. அதனால் மதங்கள் இருப்பதாக சினிமாவில் கூறப்படுபவை எல்லாம் என்னைப் போன்றோரை மனதளவில் புண்படுத்தும் செயலாகும். ஆகவே வெளியிடப்படும் திரைப்படங்கள் எல்லாவற்றையும் என்னைப் போன்றோருக்கு திரையிட்டுக் காட்டிய பின்பே வெளியிடப்படவேண்டும். (திருட்டு விசிடியில் மோசமான தரத்தில் படம் பார்ப்பதைவிட, ஓசியில் தரமாக படங்கள் பார்ப்பதற்கு இப்படியும் ஒரு வழி உண்டு… நகைச்சுவைக்காக)

    முதலில் சினிமாக்காரர்களிடமிருந்து நல்லவிடயங்கள் ஏதாவது வருகின்றன/வரவேண்டும் என்றோ, அல்லது அவர்கள் நிஜ வாழ்விலும் ஹீரோக்களாக இருப்பார்கள் என்றோ எதிர்பார்ப்பது அறிவீனம். சினிமா என்பது குறுகிய காலத்தில் பெரும் இலாபத்தை எதிர்பார்த்து நடத்தப்படும் ஒரு தொழில் அவ்வளவே.

  49. விஸ்வ “ஹிந்து “ரூபம் !
    —————————
    கமலஹாசன் ஆகட்டும் அல்லது வேறெந்த சினிமாக்காரர்களும் ஆகட்டும்-
    இவர்கள் யாரும் தங்களைத் தாமே ஒரு பெரிய அவதாரபுருசர்களாக கருதிக்கொள்வதை
    முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும்.கசாப்புக்கடை காரர்களை போல், சலூன் கடை காரர்களை ,
    மளிகைகடைகாரர்களைப் போல இவர்களும் ஒரு வியாபாரிகள்தான் -பிழைப்புவாதிகள்தான்!
    முதலில் இதைஅவர்கள் நினைவில்வைத்துக்கொண்டு செயல்படுவது நல்லது!
    எந்தெந்த மதங்களெல்லாம் சரியானமதங்கள்..? எந்தெந்தமதங்களையெல்லாம்
    தொடர்ந்து நாட்டிலேஇருக்க அனுமதிக்கலாம்..,-என்று ,சினிமாக்காரர்கள் படம் எடுத்து ..,
    அதை இந்தியஅரசிடம் தண்ணிக்கை குழு அதிகாரிகளாக வேலை செய்பவர்கள் தீர்மானித்துவிட்டால்..
    குறிப்பிட்ட அந்தமதத்தை தேசவிரோதமதம் என்றும், அந்தமதத்தைசார்ந்து இருந்தாலோ.,
    அல்லது அந்தமதத்தை பற்றி உயர்வாய் பேசினாலோ ..அவர்களை தேசப்பாதுகாப்புச்சட்டத்தில் கைதுசெய்து,
    மரணதண்டனையும் வழங்கிவிடலாமா ..?! தயவுசெய்து இதுபோன்று கோணல்தனமாக சிந்திக்காதீர்கள் !
    மதங்களை வரையறுப்பதும் – வடிவமைப்பதும்-மதங்கள் சார்ந்த உரிமை என்பதை
    உணர்ந்து பேசுங்கள் -செயல்படுங்கள் ! அப்படியே மதங்களைகைதுசெய்யவோ, சிறையிடவோ-
    சிரசேதம்செய்யவோ தேவையிருந்தாலும்கூட அந்தவேலையை சட்டசபையும் -பாராளுமன்றமும்
    பார்த்துக்கொள்ளும். நீங்க, “யாரை எந்தஅளவு ஆடையோடுஆடவிட்டால்- கணிசமாக காசுபார்க்கலாம்” என்று ,
    உங்க வியாபாரத்தை மட்டும் கண்ணும் கருத்துமா கவனித்துக்கொள்ளுங்கள் ..,பிற கவனம் வேண்டாம்.!
    ஐம்பது வயசு சினிமா ஆயிரத்து ஐநூறு வயசு மதத்தை வழிநடத்த ஆசைப்படுறது-
    உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா..?! அயிரைக்கு எதுக்கு விலாங்கு சேட்டை?
    “எனக்கு பிறந்த நாள், எனவே நீ உன் நேரத்தை -வேலையை வீணடிப்பதுடன்-,
    நூறு ரூபாயையும் செலவுசெய்து என் படத்தை பார்! இதுதான் உனக்கு நான் தரும் பிறந்த நாள் பரிசு!”
    இப்படி மக்களை ஒருவகை போதைக்கு உட்படுத்தி அவர்களின் பொருளாதாரத்தை உறிஞ்சும் கூட்டம்தானே-
    இந்த சினிமாக்கூட்டம்?! நீங்கள் மதவாதிகளை சாடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது ?
    மதவாதிகளின் சொகுசுபிளான் ஒருசிறிய வட்டத்திற்குள் என்றால் –
    உங்களின் சொகுசுக்கனவோ உலகளாவியவட்டம்!. இதில் எங்கே இருக்கிறது சமூகப்பார்வை?
    சரி..அது போகட்டும்.. உங்களை எந்தமதவாதிகள்சந்தித்து எங்களுக்குள்நட்புறவுஏற்படுவதற்கு
    உங்களால் ஆன பங்களிப்பை தாருங்கள் என்று கெஞ்சிக்கேட்டது?
    சரி..அதையும் விட்டுவிடுவோம்…, சினிமா என்பதும் அவைசார்ந்த இன்னபிற படைப்புக்களும்
    வாழ்க்கையின் ஆதாரசுருதிஎன்றோ… சமுதாயத்தின் உயிர்மூச்சென்றோ…
    சந்தோசத்தின் திறவுகோலென்றோ சினிமாக்காரர்களிடம் பொதுமக்கள் என்றைக்காவது சத்தியம்செய்து
    சொல்லியிருக்கிறார்களா.? அல்லவே-, இவையெல்லாமே அவற்றை ஆக்குபவர்களை மட்டுமே
    அடையாளப்படுத்துகிறது- என்ற, உண்மைஅறியாத ஜடங்கள் என்றா மக்களை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் ?
    இவைதவிர வேறுஎதை அவைகள் உண்டாக்கிஇருக்கிறது?…,உண்டாக்கப்போகிறது ?-
    சினிமாக்காரனின் சொகுசு வாழ்க்கையைத் தவிர ! பொதுவாகவே சினிமாவும் ஒரு போதைப்பொருள் ,
    சினிமாக்காரனும் புகழ் போதையில் இருப்பவன்தான் – அல்லது
    போதையை தேடும் வெறியுடன் இருப்பவன்தான் ! அந்த போதையானது எனது மனம் கவர்ந்த பகுத்தறிவுவாதி?!
    கமல் அவர்களுக்கு சற்று மிகுதியாகவே உண்டு! இந்த போதையில்தான் எதிர்பட்டோர் மீதெல்லாம்
    “மோடி” இடித்து வம்புக்குஇழுத்து விட்டார்! எல்லோரும்சொல்கிறார்கள் கமல் நல்லவர் -பொதுமனிதர் என்று-
    உண்மையில் அவர் நல்லவர்தான் ! ஆனால்., “பிசகுதல்” என்பது நல்லவர் -கெட்டவர் பார்த்து நிகழ்வதில்லையே.!
    ஆனைக்கு மாத்திரம் அல்ல… ஆண்டவனுக்கும் அடிசறுக்கும்! உண்மையில் சறுக்கித்தான் இருக்கிறது !
    உண்மையிலேயே அரசியல்வாதிகளும் ,ஆட்சியாளர்களும் உருவேற்றி உருவேற்றி “சினிமா” என்கிற
    ஒரு அவசியமும் இல்லாத ஒன்றை அத்யாவசியத்தேவை எனும் நிலைக்கு ஆக்கிவிட்ட அவலம்இது !
    இங்கே மதங்களுக்குள் எச்சில்துப்பாமல் வசூலை வாரிக்குவித்த வணிகரீதியானபடங்கள் எத்தனையோஉண்டு !
    என்பதையும் யாரும் மறந்துவிடக்கூடாது! .
    கஞ்சா விற்பவன் “நான் அதிகமாக முதலீடுசெய்து வியாபாரம் துவங்கிவிட்டேன் ,என்னை விட்டு விடுங்கள் “என்றோ ,
    நீங்கள் வேண்டுமானாலும் புகைத்துப்பாருங்கள் இதில் அப்படியொன்றும் போதை இருக்காது” என்றோ ,அல்லது,
    “பொதுமக்களிடம் நான் முன்வைக்கிறேன் விரும்பியவர்கள் வாங்கட்டும் .,விரும்பாதவர்கள் போகட்டும் ” என்றோ, ,
    போலீசிடம் சொன்னால் விட்டுவிடுவார்களா ?! யாராகயிருந்தாலும் இங்கே எல்லைதாண்டுவதற்கு சுதந்திரம் இல்லை !
    ஏனென்றால்…ஒற்றுமையும் ,அமைதியும்,சந்தோசமும் அந்த எல்லைக்கோட்டில்தான் பரவிக்கிடக்கிறது !
    ரசிகர்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்கிறீர்களே..,அந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினையைவிட
    மதவாதிகள் ஏற்படுத்தும் பிரச்சினை கடுமையானதாக இருக்குமே என்று- யோசிக்கவில்லையா ?!, அல்லது
    இந்தியாவில் முஸ்லிம்கள் மைனரிட்டிகள்தானே ..அவர்களால் என்ன செய்துவிடமுடியும்..என்ற, பரிட்சார்த்தமுயற்சியா.?
    தயவுசெய்து நேற்றிருந்த அமைதி குலைந்துவிடாதபடி இன்றைய பொழுதை சீர்த்திருத்த முயற்சி மேற்கொள்ளுங்கள் !
    தீவிரவாதம் என்கிறோமே ,அது என்ன ? ஒருவர் தமது கொள்கையிலே சற்று கூடுதலான பற்று வைப்பதற்கு பெயர் தீவிரவாதம் !
    சரி.,எந்தக்கொள்கையிலே தீவிரமாக இருக்கிறார்கள் ? கடவுள் -மதம் சார்ந்த கொள்கையிலே தீவிரமாக இருக்கிறார்கள்!
    சரி.,கடவுள் -மதம் என்பது என்ன ? அது நம்பிக்கைசார்ந்த விசயம் !
    சரி.,நம்பிக்கை என்பது என்ன ? அது முட்டாள்தனங்களின் முழுஉருவம் !
    சரி..,அவை என்ன.,என்ன ? கருவறை துவங்கி கல்லரை வரையிலும் முட்டாள்தனங்கள்தான் வாழ்க்கையை முன் நிறுத்துகிறது !
    செத்துப்போய் மண்ணுக்குள் புதைந்து போனவன் கல்லுக்கு வந்து காட்சிதருகிறானே..அது முட்டாள்தனம்தான் !
    அந்த கல்லுக்கு அணி அணிஅணியாய் சென்று அஞ்சலி செய்கிறோமே அது முட்டாள்தனம்தான் !
    செத்துப்போனவனை அடக்கமாக அடக்கம் செய்யாமல் தீயிட்டுக்கொளுத்தி சுற்றுப்புறத்தையும் -சுவாசிக்கும் காற்றையும் மாசுபடுத்துகிறோமே..,அது முட்டாள்தனம்தான் !
    செத்துப்போனபிறகும் தனக்கென ஒருதனிவீடு(சமாதி)வேண்டுமென்று கட்டச்சொல்லி
    கட்டையில் போகிறானே..,அது முட்டாள்தனம்தான் !
    இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம்..,ஆக, மையத்தில் நின்று மதிமயங்காமல் சிந்தித்துப்பார்த்தால்
    கடவுள் ,கற்பு,அறிவு,ஆரூடம்.. என,எல்லாமே நம்பிக்கை சார்ந்ததுதான் ! நம்பிக்கைசார்ந்த எல்லாமே முட்டாள்தனங்கள்தான்!
    நெற்றியிலே குங்குமம் முட்டாள்தனம்! தலையிலே குல்லா முட்டாள்தனம்!
    நிசப்தத்தில் மனதோடு மனதாக சந்திக்கவேண்டிய இறைவனை -இடிமுழக்கதிற்கு ஒப்பாக
    கும்மாளத்தோடு கூக்குரலிட்டு கூப்பிடுவது முட்டாள்தனம் ,
    தாலி முட்டாள்தனம் , தாயத்து முட்டாள்தனம் , மதங்கள் முட்டாள்தனம் , கடவுள்கள் முட்டாள்தனம்,
    பண்டிகைகள் முட்டாள்தனம் , இன்னும் சொல்லப்போனால்
    தேசக்கொடிக்கு சல்யூட்அடிக்கிறோமே அதுகூட மனம்சார்ந்த -நம்பிக்கைசார்ந்த ஒரு சடங்குதானேதவிர,
    அறிவுசார்ந்த அணுகுமுறையல்ல !
    மொத்தத்தில் “மூடும் பழக்கமும் மனம் சார்ந்ததுதான்..,நம்பிக்கை சார்ந்ததுதான்..,முட்டாள்தனமானதுதான்”!
    இவற்றில் எதை கமலஹாசன் விட்டொழித்து வெற்றிக்கொடிநாட்டப்போகிறார் ?!
    கமலஹாசனும் ,அவருக்கு வக்காலத்துவாங்கும் ஞானசூன்யங்களும் இதற்கு பதில் சொல்லட்டும்.
    (சினிமா தோன்றியதற்கு முன்பிருந்த ஜாதிமதப்பிரிவுகளின் எண்ணிக்கையையும் ,அதற்கு பிறகு காணும்
    ஜாதி மதபிரிவுகளின் எண்ணிக்கையையும், இன்னும் .,கண்ணில் பட்ட இடத்திலெல்லாம் கடைவிரித்திருக்கும்
    கடவுள் கூட்டங்களின் எண்ணிக்கையையும்., இந்த சினிமா மற்றும் சினிமா சார்ந்த கூத்தாடிகள் மட்டுமல்ல!.,
    தயவுசெய்து பொது மக்களும் கொஞ்சம்கூர்ந்துகவனித்து சிந்திப்பார்களாக! )

    வேலைமெனெக்கெட்ட விஸ்வரூபத்திற்கும் ..
    வெட்டித்தனமான சினிமாக்காரர்களுக்கும் சில யோசனைகள் ..!
    —————————————————————————————————————
    சினிமாவை சினிமா என்ற கண்ணோட்டத்தில் மட்டும் படமெடுங்கள் ,
    அளவுக்குமீறிமுயற்சிசெய்து யதார்த்தத்தை கொண்டுவருகிறேன் பேர்வழி என்று
    எக்கச்சக்கமான சிக்கல்களுக்குஉள்ளாகாதீர்கள்!

    ஒரு தனிநபருடைய இடங்களை அல்லது பொருட்களை படம்பிடிப்பதற்கு
    அந்த உரிமையாளரிடம் அனுமதி பெறுவது போல
    மதங்களை மையப்படுத்திதான் நீங்கள் படம் எடுக்கபோகிறீர்கள் என்பது உறுதியாகிவிட்டபிறகு
    அந்த மதத்தை சார்ந்த மதகுருக்களை யாரையாவது சந்தித்து கதைசொல்லி அல்லது கதைகேட்டு
    ஐயமின்றி-அச்சமின்றி தகவல்களை சேகரித்தபின்பு காட்சிபடுத்துங்கள் ! அல்லது ,

    அரசாங்கமே தணிக்கைக்குழுவில் மதம்சார்ந்தவிசயத்தை முற்றும்அறிந்த அந்தந்தமதகுருக்களையும்
    அந்தந்தமதங்களின்சார்பாக நியமனம்செய்ய வேண்டும்!

    –மக்கட்டி தவசிகுலன் —.
    babamubeen@gmail.com

  50. I hereby request all muslim brothers, let us allow this movie to be shown. We all know kamal for more than 40 years. He cannot do any blunders. If there any issues, we can take the issue to court. Moreover, censor dept has issued certificate.

    Please let us not follow these uneducated political muslim leaders. They have no common knowledge and education. They were sent to madarasa because they were fool on education. If they have little fear of Allah the All Mighty, let them dissolve their local groups and unite.

  51. கமலுக்கும், கமாலுக்கும் ஆன பிரச்சனை என்றுதான்,நானும் முதலில் நினைத்தேன்! இது ஜயா டி வி சம்பந்தப்பட்ட கட்டை பன்சாயத்து விவகாரம் தானாம் ! பாவம், அப்பாவி முச்லிம்கள்! இலிச்சவாயர்கள், தமிழக மக்கள்!

  52. நேற்று தான் இந்த விஸ்வரூபம் படம் பார்த்தேன். ஒரு நடு நிலையானவான் என்ற அடிபடையில் என் கருத்து என்னே வென்றால் அப்கானிஸ்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரியாத பாமர மக்கள் இந்த படத்தை பார்த்தால் இங்குள்ள இஸ்லாமியரை நிச்சயம் ஒரு காட்டு மிரண்டியாகவோ ,இரக்க மற்ற கொடுரகாரர்களாக தான் நினைக்க தோன்றும்.

    பள்ளி மாணவர்கள் , சிறு குழந்தைகள் பார்த்தல் இஸ்லாமியரை பற்றி தவறான எண்ணமே மனதில் பதியும், நிச்சயம் தன இஸ்லாமிய நண்பனை தீவிரவாதி என்று தான் பட்ட பெயர் வைத்து அழைப்பார்கள்.எல்லா நண்பர் கூட்டத்திலும் ஒரு இஸ்லாமிய நண்பன் இருப்பான் அவனுக்கு தீவிரவாதி என்ற பட்டபெயர் உறுதியாகி விட்டது.

    அமெரிக்க வீர்கள் அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை கொல்ல மாட்டார்கள் என்று முல்லா உமரே கூறுவது போல் ஒரு காட்சி எனக்கு அக வாயால் சிரிப்பதா?!?!? புற வாயால் சிரிப்பதா?!?!?!? என்று குழப்பம் தோன்ற இரு வாயாலும் சிரித்து வைத்தேன்.

    கமல் ஹாசன் வெள்ளைக்காரன் முன் மண்டி இட்டு ( இன்னும் பச்சையாக சொல்ல என் மனம் ஏங்குகிறது நாகரீகம் கருதி என்னால் அதை எழுத முடியவில்லை)அமெரிக்கர்கள் காலை கழுவி குடித்து விட்டார் .

    ஆஸ்கார் விருது மட்டும் உலகின் அங்கீகாரம் கிடையாது என்று சொன்னவர் அந்த அமெரிக்க அங்கீகாரத்திற்கு இஸ்லாமியரை ஏலம் போட்டு விட்டார்.

    மற்றபடி கதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை . ஹேராம் படத்தில் அந்த சோடா பேக்டரி சீன எவளோ போர் அடிக்குமோ அதே போல தாலீபான்களை காட்டும் கட்சிகள் ஹிந்தி , அராப் ,இங்க்லீஸ் என்று எல்லா மொழிகளிலும் பேசி கடைசியில் நமக்கு தலை சுத்துவது தான் மிச்சம்.

    சீசியம் திருட்டை கண்டு பிடிக்க தான் கமல் அமெரிகாவில் இந்திய உளவு படை ரா வில் வேலை பார்கிறார் என்று எடுத்து கொண்டாலும் ஏன் ஒரு ஒம்போது போல் வேஷம் போட்டு வாழனும் ? மனவிவியை கூட தொடாமல் …

    அமெரிக்கர்கள் கூட சேர்ந்து அதை கண்டு பிடித்திருக்கலாமே ?

    கடைசியில் தலை சுத்தல் தான் மிச்சம்

    இந்த படத்திற்கு நூறு கோடி என்று சொல்வது மிக பெரும் பொய் சத்தியமா சொல்றேன் கமல் சம்பளம் இல்லாமல் முப்பது கோடி கூட ஆகிருகாது. கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

    ஆப்கன் வீதி போல நாலு வீடு எல்லாம் செட்டிங் அந்த வீட்டை அமெரிக்கர்கள் பாம் போட்டு அழிப்பார்கள் . அதான் செலவு.அமெரிக்கால கார் சேசிங் மற்றபடி வேற செலவு ஏதும் தெரியல .மறுபடியும் கேக்குறேன் கமல் இப்படிலேம்மா பொய் சொல்லி பொழப்பு நடதுனுமா ?

    கமல் தெரியாமலோ ,முற்போக்கு சிந்தனயோடோ இந்த படத்தை எடுக்க வில்லை மிக மிக திட்டமிட்டு தாலிபான்கள் என்ற பெயரில் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களை கேவல படுத்தி காட்டு மிராண்டிகளாக சித்தரித்து அமெரிக்க அங்கீகாரத்தை பெறவே இதனை மிகவும் கவனமுடன் செய்திருக்கிறார் .

    இப்படத்தின் மூலம் கமலின் முற்போக்குவாதி என்ற சாயம் வெளுத்து உண்மை முகம் வெளி பட்டு விட்டது.

    ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் விஸ்வரூபம் கமலின் சுயரூபம் .

    எது எப்படியோ இந்த பிரச்சனையால் இந்த விளங்காத படம் எப்படியும் கமலுக்கு போனியாகிவிடும் .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க