“இவ்வளவு கொடூரம் நடந்தால் தான் நான் திரும்பிப் பார்ப்பேன் என்கிற நம் மனநிலை சரிதானா. டெல்லியில் மட்டும் அல்ல… தமிழ்நாட்டில், நமக்கு மிக அருகே, நம் ஊரில் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து நாம் கவலைப்பட்டு இருப்போமா?”
மேற்கண்ட அறச்சீற்றத்தை சமீபத்தில் வாசிக்க நேர்ந்த போது உண்மையிலேயே அரண்டு போனேன். ஆனந்த விகடன் 9.1.2013 தேதியிட்ட இதழில் கவின்மலர் எழுதியிருக்கும் ‘அன்பானவர்களுக்கு ஒரு கடிதத்தில்’ தான் இந்த அறச்சீற்றம் காட்டாற்று வெள்ளம் போலக் கரைபுரண்டு ஓடியிருக்கிறது. கலகக்குரல் தளத்தில் இந்தக் கட்டுரை வெளியான போதே இந்த இதழைப் படிப்பதற்காக தேடினேன் – ஆனால், சமீபத்தில் தான் அதற்கு வாய்ப்பு அமைந்தது.
கட்டுரையின் முதல் பக்கத்தை வாசித்து முடித்து விட்டு ஒருவித ‘குற்றவுணர்ச்சியோடு’ அடுத்தப் பக்கத்தைத் திருப்பினால், புருவத்தை நெருக்கிக் கொண்டு, கண்களை இடுக்கிக் கொண்டு, சொக்காயின் காலரை தூக்கிக் கொண்டே ஒரு சிறுவன் நம்மை தர்ம அடி அடிப்பதற்கு புத்தகத்திலிருந்து வெளியேற எத்தனித்துக் கொண்டிருந்தான். ஒரு கணம் அதிர்ந்து போய், ‘ஐயையோ நான் எந்த தப்பும் செய்யல்லீங்க’ என்று அலறியவாறே பக்கத்தில் பார்த்தால்… அது அலெக்ஸ் பாண்டியன் விளம்பரம். அந்தக் கோபக்கார குழந்தை கார்த்தி. ‘ஃப்பூ… இதுக்குத்தானா பயந்தோம்.. நல்ல வேளை யாரும் பாக்கலையே’ என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டே அடுத்த பக்கத்தில் தொடர்ந்த அறச்சீற்றத்துக்குள் முங்கினேன்.
“இந்த 21-ம் நூற்றாண்டிலும் பொழுதுபோன பின்னால் பெண்களை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்போம் என்று கூறும் விந்தை மனிதர்களாக இங்கே பலர் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது”
“உலகம் எங்கோ சென்று கொண்டு இருக்கிறது நண்பர்களே! ஆனால் நாம் இந்தப் புள்ளியில் தேங்கி நிற்கிறோம் என்பதை நினைக்க வேதனையாக இருக்கிறது” – மேற்படி கட்டுரை, பக்கம் 12
எனக்கு உண்மையிலேயே ஆச்சர்யமாகத் தான் இருந்தது. விகடன் நிர்வாகம் கவின்மலருக்கு சம்பள பாக்கி ஏதும் வைத்து விட்டதோ? இதே விகடனில் தான் துணி துவைப்பது, கூட்டிப் பெருக்குவது, சமைப்பது போன்ற வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் ஆண்களைக் கேலி பேசி ‘ஜோக்குகள்’ வந்துள்ளன. மட்டுமல்லாது மாமியார் மருமகள் சண்டை, பொரணி பேசும் பெண், வீட்டு வேலைக்கரியை பெண்டாள நினைக்கும் ஆண் என்று ‘பெண்ணை வீட்டுக்குள்ளேயே பூட்டி வைப்பதை’ ஆதரிக்கும் கருத்துக்களின் விளைநிலமே விகடனாயிற்றே; அப்படியிருக்கும் போது இவர் எதுக்கு சேம் சைடு கோல் போடுகிறார் என்பது தான் ஆச்சர்யத்துக்குக் காரணம். பாலியல் வன்முறையைக் கற்றுக்கொடுப்பதிலும் பிசினெஸ், பாலியல் வன்முறையைக் கண்டிப்பதிலும் பிசினெஸ். எனில் விகடனின் இத்தகைய இரட்டை வேடத்திற்கு கவின் மலர் தன்னாலான முறையில் உதவி செய்கிறார். இந்த மனிதாபிமானத்தைக் கூடவா அறுத்துப் பார்ப்பது?
“இந்தக் குடும்ப அமைப்பும் சமூகமும் பெண்கள் குறித்து என்ன பார்வையை வளரும் குழந்தையின் மனதில் பதியவைக்கிறது? கள்ளங்கபடம் இன்றிப் பழகும் குழந்தைகளில், பெண் குழந்தை பெரியவளானதும், ஆண்களுடன் பேசத் தடை விதிப்பது, அவளை விளையாட அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்வது போன்ற நடைமுறைகள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன”
எதிர்பாராத நேரத்தில் சொக்காயைக் கொத்தாகப் பற்றி செவிட்டில் பொளேர்ர்ர்ர்… என்று அறைந்தது போலிருந்தது. ஆனால், அது கவின்மலரிடம் வெளிப்பட்ட ‘சத்தியாவேசத்தின்’ விளைவினால் அல்ல. “பொண்ணுங்கன்னா எப்டி இருக்கனும் தெரியுமா?” என்பதில் ஆரம்பித்து, ‘என்ன உடை அணிய வேண்டும், எந்த செருப்பு போட வேண்டும், கொண்டையில் எத்தனை குண்டூசி குத்திக் கொள்ள வேண்டும், பெண் தன் உடலை எப்படி கவர்ச்சியாக காட்ட வேண்டும், அந்தப் பெண்ணை எப்படி மூர்க்கமாக அடைய வேண்டும்’ என்பது வரைக்கும் பாடம் நடத்தும் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினி – கமல் முதல் அஜித் – விஜய், தனுஷ் – சிம்பு வரை பாடம் நடத்தும் பேட்டிகளையும் அவர்களைப் பற்றிய செய்திகளையும் கிசுகிசுக்களையும் வெளியிட்டு கல்லா கட்டும் விகடனின் பக்கங்களில் இருந்து இப்படியொரு ‘சத்தியாவேச’ ஜூவாலை குப்பென்று பற்றியெறிவதைப் பார்த்ததால் ஏற்பட்ட விளைவு அது. இருக்காதா பின்னே, ரெண்டு சைக்கிள் பிராண்டு ஊதுவர்த்தியை செப்டிக் டேங்கினுள் சொருகி வைத்து விட்டு முகர்ந்து பார்க்கச் சொன்னால் இப்படித்தானே இருந்தாக வேண்டும்?
“ஓர் ஆண் வலுக்கட்டாயமாக ஒரு பெண்ணை வல்லாங்கு செய்து விட முடிகிற ஒரு சமூகத்தில், திருமணத்தில் கூட ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கேள்வி கேட்கும் ஆணாதிக்கம் தான் தர்மபுரியில் மூன்று கிராமங்களின் மீது நடந்த தாக்குதலுக்கான அடிப்படைக் காரணம்” – மேற்படி கட்டுரை. பக்கம் 13
என்னாது… காடுவெட்டி குரு விகடன் பத்திரிகையில் பங்குதாரரா? லீனா மணிமேகலை எடுத்த டியூஷன்கள் வீண் போகவில்லை. ஊரே காறித்துப்பிய சாதிவெறியாட்டத்திற்கு இப்படிக்கூடவா வியாக்யானம் எழுத முடியும்? நாயக்கன் கொட்டாய் தாக்குதலை சாதிவெறியில் மூழ்கிய வன்னியப் பெண்கள் முழு மனதாக ஆதரித்து தமது வீட்டு ஆண்களுக்கு சக்தி மாதாக்களாய் இருந்ததெல்லாம் கவின்மலருக்குத் தெரியவில்லை. ஈராக் போருக்கு ஆண்கள் காரணம் என்று லீனா மணிமேகலை எழுதும் போது தருமபுரி தாக்குதலுக்கு ஆண்கள் காரணம் என்று கவின்மலர் ஏன் எழுதக்கூடாது? ஆனால் ஒன்று நிச்சயம், களப்பணி மூலம் சமூக மாற்றத்திற்கு இம்மியளவு கூட செயல்படாத இத்தகைய விளம்பர மோக அறிவாளிகளின் அறிவு குண்டு சட்டியை விட்டு தாண்டவே தாண்டாது. பாவம் கவின்மலர் என்ன செய்வார்!
“வீடுகளிலும் கல்விக்கூடங்களிலும் மட்டும் அல்ல; பொழுதுபோக்கச் செல்லும் திரையரங்குகளில் காட்டப்படும் திரைப்படங்களும், விளம்பரங்களும் பெண்களை நுகர்வுப் பொருளாக சித்தரிக்கின்றன” – மேற்படி கட்டுரை. பக்கம் 13
வாசித்துக் கொண்டிருக்கும் போதே லேசாக வீசிய காற்றில் வாசித்துக் கொண்டிருந்த பக்கம் புரண்டு அடுத்த பக்கத்தில் நின்றது. “நயன்தாரா யாருக்கு? – ஸ்டார் ‘பிரதர்ஸ்’ வார்” என்கிற தலைப்பு கண்களைப் பிடுங்கியது. கவின்மலர் மேலே அடுக்கியிருக்கும் காரணங்களில் ‘பத்திரிகைகளிலும்’ என்பது மட்டும் எப்படியோ மிஸ் ஆகி விட்டிருப்பது தற்செயல் என்றே சத்தியமாக ‘நம்பி’ விட்டேன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யக்கூடாது என்பது எந்தப் பெண்ணியத்தில் வரும் என்று உலக இலக்கியங்களை ஆராய்ந்தும் வருகிறேன்.
கடைசியில் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார் கவின்மலர்,
“மாற்றங்கள் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். நம் துறையில் இருந்து தொடங்க வேண்டும். நம் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும்” – மேற்படி கட்டுரை. பக்கம் 13.
இங்கேயும் ‘நாம் வேலைபார்க்கும் பத்திரிகையிலிருந்து தொடங்க வேண்டும்’ என்கிற வரி தற்செயலாக மிஸ் ஆகிவிட்டது என்று சத்தியமாக ‘நம்புகிறேன்’.
***சமூகத்தில் ஆணாதிக்கக் கருத்துக்கள் ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பது உண்மை தான். ஆம்பிள்ளைத் திமிரோடு வளர்க்கப் படும் பொறுக்கிகள் வாய்ப்புக் கிடைக்கும் போது பெண்களின் மேல் பாய்ந்து குதறுகிறார்கள் என்பதும் உண்மை தான். ஆனால், இந்தத் திமிர்த்தனத்திற்கு ஒரு வெகுஜன அங்கீகாரம் வழங்குவது யார்? இதை ரசிக்கத்தக்க குறும்புகளாக கற்றுக் கொடுப்பது யார்? அங்கே தான் வருகிறார்கள் விகடன் மாமாக்கள்.
ஜூ.வி, ஆ.வி, குமுதம், ரிப்போர்ட்டர் என்கிற பலான குப்பைகளின் வரிசையில், இதிலேயே தனிச்சிறப்பான நிபுணத்துவம் மிக்க பத்திரிகையாக ‘டைம்பாஸ்’ என்கிற பத்திரிகை சமீபத்தில் தான் விகடன் குழுமத்திலிருந்து அறிமுகமாகி இருக்கிறது. யாரும் வாசிக்காமல் இருந்து விடக்கூடாது என்கிற அக்கறையில் அதனை ஐந்து ரூபாய் விலையில் மலிவாகவும் கிடைக்கும்படி செய்துள்ளது விகடன் குழுமம். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பெண்களின் அரை நிர்வாணப் படங்கள், உள்ளூர் சினிமா நடிகையிலிருந்து ஆங்கிலச் சினிமா நடிகைகள் வரை பாலியல் கிசுகிசுக்கள், ‘யாரோடு யார் எங்கே எந்த இடத்தில் எப்போது’ என்கிற வானிலை அறிவிப்புகள் என்று முற்றுமுழுதான மஞ்சள் பத்திரிகையாக வெற்றி நடை போடுகிறது ‘விகடன் டைம்பாஸ்’.
இதிலும் கிசுகிசுக்கள் யாரைப் பற்றிச் சொல்லப்படுகின்றன என்பதை வாசகன் அறிந்து கொள்ளாமல் போய் விடக்கூடாதே என்கிற அக்கறையில் எந்த நடிகருக்கு எந்தப் பட்டப்பெயர் என்கிற அகராதியையும் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பக்கம் கீழ்த்தரமான பாலியல் ரசனையைக் கடைவிரித்துக் கொண்டே அந்தப் பக்கம் வேதம் ஓதும் திறமை என்பது விகடனின் கண்டுபிடிப்பல்ல. கருவறையில் கடவுள் பக்தி – வெளிப் பிரகாரத்தில் காம பக்தி என்பது தானே பார்ப்பனிய இந்து மதத்தின் பெருமை மிகு ‘பாரம்பரியம்’?
விகடனின் வரலாற்று வளர்ச்சியில் இதெல்லாம் புதிதில்லை. ‘சரசுவாகிய நான்’ தொடரின் மூலம் போலீசு, எம்.எல்.ஏ, மந்திரி என்று சகலரோடும் கள்ளத்தொடர்புகளால் ‘வளர்ந்து’ ஆளான சாராயக்கடை சரசக்காவின் கதை ஒரு அப்பட்டமான பாலியல் தொடர். வாசகர்களின் மிருக உணர்ச்சிகளைத் தூண்டி விட்டுக் காசு பார்ப்பதில் இவர்களுக்கு எந்தவகையான கூச்ச நாச்சமும் இருப்பதில்லை. சிவகாசி ஜெயலட்சுமியில் இருந்து பிரேமானந்தா, ஜெயேந்திரன், தேவநாதன், நித்யானந்தா வரைக்கும் நடந்த குற்றங்களை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொண்டு அவர்கள் அடித்த காமவெறி கண்றாவிகளையே முக்கியத்துவம் கொடுத்து ‘சுவை’பட விவரித்துக் கல்லாக் கட்டியவர்கள்தான் இந்த யோக்கியவான்கள்.
பாலியல் ரீதியிலான குற்றங்களைப் பற்றி எழுதுவதோ அல்லது அதைப் பற்றி மக்களிடையே ஒரு விழிப்புணர்வைத் தூண்டுவதோ அல்லது இப்படியொரு அபாயத்தை சமூகத்தின் பகிரங்கமாக முன்வைத்து விவாதத்துக்குள்ளாக்குவதோ தவறில்லை. ஆனால், இந்தப் பத்திரிகைகள் நடந்த விவகாரத்தில் இருக்கும் விகாரங்களைத் தெரியாதவர்களுக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றன. கோபம் வரவழைக்க வேண்டிய இடத்தில் காம வெறியைத் தூண்டி விடுகின்றன. டாக்டர் பிரகாஷின் குற்றங்களை அம்பலப்படுத்தும் போர்வையில் அவரது லீலா வினோதங்களை விரிவாக விவரித்து அதுவரைக்கும் தெரியாதவர்களையும் இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளத் தூண்டியது பத்திரிகைகள் தான். இந்தத் தூண்டலுக்கு வாசகனை மலிவான உணர்ச்சியில் மூழ்க வைத்தால்தான் சர்குலேஷன் எகிறும் என்ற சுரண்டல் கண்ணோட்டம்தான் காரணம்.
பாலியல் உணர்ச்சிகளைப் பொருத்தவரை விலங்குகளும் மனிதர்களுக்கும் இருக்கும் ஒரே வேறுபாடு – மனிதர்களுக்கு இருக்கும் சமூக உறவும், அந்த உறவின் பாற்பட்டு அவன் பின்பற்றும் சமூகக் கட்டுப்பாடுகளும்தான். பாலியல் உணர்ச்சிகளுக்கும் அவனது சமூக ரீதியான பொறுப்பு உணர்வுகளுக்கும் இடையேயான முரண்பாடுகளும் அதையொட்டி ஒருவனின் அகநிலையில் ஓயாது நடக்கும் போராட்டங்களையும் எதிர்கொள்ளும் போது ஆனந்த விகடன்களும் குமுதங்களும் எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுகின்றன. அந்த முரண்பாட்டை நல்ல விதமாக ஆற்றுப்படுத்துவதற்குப்பதில் வெறியைக் கிளப்பி விட்டு கல்லா கட்டுகின்றன.
பெண்கள் என்றால் சமைக்க வேண்டும் – ஆண் சமைப்பது கேலிக்குரியது என்பதை மொக்கை ஜோக்குகள் மூலம் சொல்லி விட்டு, நேரடியாக பெண்களுக்கு சமையல் குறிப்புகளை எழுதுகிறார்கள். பெண்கள் என்றால் அழகாய் இருக்க வேண்டும், அழகு படுத்திக் கொள்ள வேண்டும் – அதற்கு அழகுக் குறிப்புகள், பெண்கள் என்றால் பொரணி பேசுவார்கள், குடும்பச் சண்டைகளில் இறங்குவார்கள் – இதற்கு மாமியார் மருமகள் மொக்கைகள். இவ்வாறு ஏற்கனவே பொதுப்புத்தியில் உறைந்து போயிருக்கும் அசிங்கங்களை மேலும் வளர்த்தெடுக்கின்றன. இறுதியில் பெண்களை வீட்டு சிறையில் ஒரு போகப்பொருளாய் அடைத்து வைத்திருப்பதைத்தான் விகடன், குமுதம் அறிவாளிகள் செய்து வருகின்றனர்.
ஆம்பளைப் பொறுக்கித்தனத்தையே ஹீரோத்தனமாக முன்வைக்கும் சினிமாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதுவது, திரையில் பெண்களை தரக்குறைவாக மதிக்கும் ‘நாயகர்களை’ அழைத்து பேட்டி காண்பது என்று ஆணாதிக்க திமிர்த்தனங்களுக்குப் பரிவட்டம் கட்டி அதையே ஒரு பொதுக் கலாச்சாரமாக நிலைநிறுத்தியதில் பத்திரிகைகளின் பங்கு முக்கியமானது. பெண்ணை போகப் பொருளாக்கி விட்டார்களே, விற்பனைப் பண்டமாக்கி விட்டார்களே என்று பத்தாம் பக்கத்தில் கவின்மலர் உயிரைக் கொடுத்து தொண்டைத் தண்ணீர் வற்றக் ‘குமுறிக்’ கொண்டிருக்கிறார் – நடுப்பக்கத்திலோ கல்யாண் ஜுவல்லர்ஸின் விளம்பரம்; கழுத்து நிறைய நகைகளோடு ஒரு பெண் அமர்ந்திருக்க பக்கத்திலேயே, ‘திருமணம் பற்றிய சிந்தனை.. இனி ராஜகம்பீரமாகும்” என்கிற வாசகங்கள். பெண்ணைப் பெற்றால் வரதட்சிணையாக நகை போட்டுக் கட்டிக் கொடுக்க வேண்டுமென்பதை விளம்பரத்தில் சொல்லி விட்டு முதல் பக்கத்தில் நீர்த்துப் போன மொழியில் கவின்மலரின் உபதேசம். அருவெறுப்பூட்டுகிறது இந்த நாடகம்.
ஊருக்கு உபதேசம் சொல்லும் கவின்மலர், அவருடன் இணைந்து பணியாற்றி டைம்பாஸ் என்ற மலிவான ‘மெல்லிய’ போர்னோ பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் ரீ.சிவக்குமாரின் (சுகுணா திவாகர்) சட்டையைப் பிடித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் இரண்டு கேள்விகளாவது கேட்கத் தயாரா? இல்லை இவரை ஆசிரியர் பொறுப்பில் விட்டு காசு பார்க்கும் விகடன் நிர்வாகத்தினை கண்டித்து ஒரு மொக்கை கவிதையாவது எழுதத் தயாரா? முடியாது எனில் யாரை ஏமாற்றுகிறீர்கள்?
இப்படிப்பட்ட பத்திரிகைகளைப் படித்து ‘தயாராகும்’ ஒரு இளைஞன் எப்படியிருப்பான்? பொறுக்கியாக இல்லையென்றால்தான் ஆச்சரியம். இவ்வாறாகத் ‘தயாரான’ இளைஞன் ஒருவன் சாலையில் செல்லும் பெண்ணை எப்படிப் பார்ப்பான்? அவன் குற்றவாளியென்றால் அவனது ஆண்மைத் திமிர் கொண்ட ஆளுமையின் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகிக்கும் இந்தப் பத்திரிகைகள் குற்றவாளிகள் இல்லையா? பெண்களை போகப் பொருட்களாகவும், நுகர்வுப் பண்டங்களாகவும் கடைவிரிக்கும் ஊடகங்கள் வழியே தனக்கென்று ஒரு ஆணாதிக்க ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் லும்பன்கள் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடும் போது தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், அந்தக் குற்றத்தைத் தூண்டிய பத்திரிகைகளோ தண்டனையிலிருந்து தப்புவது மட்டுமின்றி நடந்த குற்றச் சம்பவத்தையே எந்தக் கூச்சநாச்சமும் இன்றிக் காசாக்குகின்றன.
பாலியல் குற்றச்சம்பவங்களில் குற்றமிழைத்தவர்களுக்கு தூக்கு, ஆண்மை நீக்கம், ஆயுள் சிறை என்று அவரவர்க்குத் தோன்றிய தண்டனைகளைப் பட்டியலிடுகின்றனர். ஆனால், இந்தக் குற்றங்களின் காரண கர்த்தாக்களுக்கு யார் எந்த தண்டனையை வழங்குவது?
_____________________________________________________________________________________________
– தமிழரசன்
_____________________________________________________________________________________________
மேலும் படிக்க
// இந்தப் பக்கம் கீழ்த்தரமான பாலியல் ரசனையைக் கடைவிரித்துக் கொண்டே அந்தப் பக்கம் வேதம் ஓதும் திறமை என்பது விகடனின் கண்டுபிடிப்பல்ல. கருவறையில் கடவுள் பக்தி – வெளிப் பிரகாரத்தில் காம பக்தி என்பது தானே பார்ப்பனிய இந்து மதத்தின் பெருமை மிகு ‘பாரம்பரியம்’? //
கட்டுரை நல்லாத்தானே போய் கொண்டிருந்தது.. ’பார்ப்பனிய இந்து மதத்தின்’ பெருமையை இடையில் எங்காவது செருகியே ஆகவேண்டும் என்று ஏதேனும் வேண்டுதலா..?!
பார்பனீயம் என்பதே உழைக்காமல் பிழைக்கும் கலை என்பதே! உஷையை சூரியனும் சந்திரனும் மாறி மாறி கற்பழிக்கின்ற்னர் என்பதிலிருந்து, ராமனைக்கண்டதும் சீதையின் அல்குல் வீஙகி ஆபரணம் தெறித்து விழுந்தது என்ற பார்பனீய கற்பனைகள், புராணங்கள் பெண்களை இழிவு படுத்தியே எழுதப்பட்டன! இன்றைய இந்தியா டுடே, விகடன், டைம்ச் ஆப் இந்தியா பத்திரிகைகள் அப்படியே வேத விதியை பின்பற்றுகின்றன, பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாக!
// உஷையை சூரியனும் சந்திரனும் மாறி மாறி கற்பழிக்கின்ற்னர் என்பதிலிருந்து //
தாத்தாச்சார்யார் புதுசா கிளுகிளு வியாக்கியானம் ஏதாவது ஓதி அனுப்பிவிட்டாரா..?!
உஷை என்ற பெயரில் பலர் இருந்திருக்கின்றனர்.. கிருஷ்ணனின் பேரன் அனிருத்தனின் மனைவி உஷை (மகாபலியின் மகன் பாணாசுரனின் மகள்).. சூரியனின் மனைவி உஷை (விஸ்வகர்மாவின் மகள்).. சந்திரனின் மனைவி உஷை யாரு பெத்த பிள்ளையோ தெரியாது..
// ராமனைக்கண்டதும் சீதையின் அல்குல் வீஙகி ஆபரணம் தெறித்து விழுந்தது என்ற பார்பனீய கற்பனைகள், புராணங்கள் பெண்களை இழிவு படுத்தியே எழுதப்பட்டன //
ராமனைப் பார்த்ததும்தான் சீதையின் அல்குல் விரிந்தது என்று கம்பர் எழுதினார்.. அவர் எழுதியது ஆபாசமோ இல்லையோ.. வீங்கியது என்று நீங்கள் எழுதுவதுதான் ஆபாசம், இழிவுபடுத்தல்..
// இன்றைய இந்தியா டுடே, விகடன், டைம்ச் ஆப் இந்தியா பத்திரிகைகள் அப்படியே வேத விதியை பின்பற்றுகின்றன, பேசுவது ஒன்றும் செய்வது ஒன்றுமாக! //
மற்ற பத்திரிக்கைகள் ’வேதவிதியை’ப் பின்பற்றுவதில்லையா..?!
அல்குல் என்பதற்கு இடை என்றும் பொருள் உண்டு.
அதுனால தான் நான் என்ன சொல்றேன்னா குமுதம், விகடன் போன்ற பார்ப்பன குப்பைகளை கொளுத்திட்டு எல்லாரும் தரமான சமூக அக்கறை கொண்ட குங்குமம் படிங்க. நாடு சுபிக்ஷமா இருக்கும்.
அந்தக்காலததிலேயே குமுதம் கிளு கிளு ரவிக்கை முட்டி கிழஙுகு கதைகள் மீண்டும் மீண்டும் போடுவதும், போட்டிக்கு விகடன் ஜெயராஜ அவர்களின் படஙளுடன் காமரசத்தை பிழியவில்லையா!நாய் விற்ற காசு குரைக்காது என்று அறிந்து கொன்டதால் குஙகுமமும, சாவி, இதயம், பாக்யா முன்னோர் கலாஷாரத்தை அப்படியே பேணி வருகின்ற்னர்! சினிமாத்துறையும அப்படித்தான் கலாச்சாரத்தை பேணி வருகின்றனர்!
நக்கீரன் கோபாலை விட்டுட்டீங்க. அன்புள்ள அல்லி போட்டு அசத்தும் ராணி அக்காவை மறந்துட்டீங்க.
அந்த பொண்ணு ஒரு விளம்பர மோகம் அதுல போலித்தனமான முற்போக்க கருத்தை எழுதி விளம்பரம் பன்னுரபோல என்ன பேசுறோம் என்று தெரியாம உளறும்
வினவில் தமிழரசன் பார்ப்பனீய இந்துமதம் போன்ற வார்த்தைகளை தன் அழகான கட்டுரையில் திருஷ்டிப் பொட்டு கணக்கில் செருகி சொதப்புவது போலல்லாமல் விகடன் கவின்மலர் போன்றவர்களின் நல்ல கடிதங்களைச் செருகி பெயர் எடுக்கிறது..
எல்லாத்துக்கும் பார்ப்பனீயம்…பேசாம கருப்பு சட்டை போட்டுக்குங்க…
ஆனந்தவிகடன் சாட்ஷாத் பார்ப்பனீயப் பத்திரிகை தான். அதில் பார்ப்பனர்களுக்குதான் சந்தேகம் இருக்கும்.பார்ப்பனீயத்தை நேரடியாகப் பரப்பி பணம் சம்பாதிக்க முடியாத போது முற்போக்கு முகமூடிகளைத் தரிக்கிறார்கள்.அடிப்படை நோக்கம் பார்ப்பனீயத்தினூடகக் கோடிகளைக் குவிப்பது தான்.
கக்கூஸ்ல பேண்டுகிட்டே–திண்ணும், அல்லது திண்டுகிட்டே பேழும் கூட்டம் அப்படித்தான் இருக்கும்.
பார்பனீயம் உழைக்காமல் லலித கலைகள் மூலம், ஆளை ம்யக்கி பணம் சம்பாதிக்கும், பிழைப்பு என்றே பொருள்படும்! பார்பனர் மிகுதியாக கட்டுப்படுத்தி கையாள்வதாலேயே பார்பனீயம் என்கிறோம்!
//பார்பனர் மிகுதியாக கட்டுப்படுத்தி கையாள்வதாலேயே பார்பனீயம் என்கிறோம்//
எவ்வளவு மிகுதி? எங்கிருந்து கிடைத்தது உங்களுக்கு இந்த தகவல்? யார் கணக்கெடுத்தது?
அப்போ ஏன் ஜமீன்தார்கள் / பன்னை முதலாளிகள் எல்லாம் என்ன கணக்கு?
உங்கள் அயொத்திதாசர் பற்றிய பின்னூட்டத்திலிருந்தே தெரிகிறது இந்த கணக்கு கருஞ்சட்டை புரட்டுக்கனக்கு தான் என்று…
அயொத்தி தாசர் பின்னோட்டத்திலிருந்து என்ன தெரிகிற்து உஙகளுக்கு? அயொதி தாசரும், பெரியாரும் கிட்ட தட்ட ஒரே காலகட்டத்தில் இருந்தும், தொடர்பற்று போனது ஏன்? நீதிக்கட்சிக்கு வருவதற்கு முன்பே பெரியார் தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட வில்லையா? மதுரை கோவில் அரிஜன ஆலய நுழைவை எதிர்த்து வழக்கு போட்டவர், கமாராஜ அந்த போராட்டத்தை நடத்த இருக்கிரார் என்பது தெரிந்ததும் முந்திக்கொள்ள வில்லையா? சமூதாய மாற்றத்திற்கு முனைபவர்களை இணைய விடாமல் செய்தது எந்த சக்தி என்பது தானே எனது கேள்வி?
//ஜமீன்தார்கள் / பன்னை முதலாளிகள் எல்லாம் என்ன கணக்கு?// இந்த அமைப்புகள் எல்லாமே,நில பிரபுத்துவ, அய்ரொப்பிய நிர்வாக அமைப்புகள் தானே? ஆனால் அஙகு சாதி பிரிவுகள் ஏற்படாமல் வர்க்க பிரிவுக்ளானது ஏன்? இஙகு மட்டும சாதிக்ளானது, இந்தியாவில் யார் ராஜாவானாலும் மந்திரியாக இருந்து அர்த்த்சாச்திரம் படைத்தவர்களாலலலவா? அயரோப்பவில் இரண்டெ சாதி தான் ! ஆட்சியதிகாரம் செய்து வந்த, ஜெர்மானிய ரத்தவழியின பிரபுக்கள், பூர்வ குடிகளான சாமானியர்கள்! அதனாலேயே வர்க்க பிரிவு ஏற்பட்டு பிரன்சு புரட்சியும, கம்யூனிச எழுச்சியும் ஏற்பட்டது! இந்தியாவில் ஒவ்வொரு சாதியும் தனிநேஷனாலிடி போல இனண்ய மறுப்பதன் காரணம் என்ன? ஆதி இந்தியன் அடஙகி போனதும், சிறு குழுக்களுக்கு இடையே எட்டப்பர்கள், விபீஷனர்கள் முளைத்ததுவும்தானே காரணம்? குழுத்தலைவர்களை ராஜாக்கள் ஆக்கி அவர்களை, கடவுளாக்கியது எந்த கூட்டம்? எகிப்தில் ராம்செச் வரலாறு நமக்கு உண்ர்த்துவது என்ன?
ரெக்கார்டு ஸ்டாப்…ரொம்ப கீறல் விழுந்தாச்சு..
http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0050269
எதற்கெடுத்தாலும் நீ வேலை பார்க்கும் நிறுவனம் மட்டும் யோக்கியமா என்று கேட்கும் அறிவுக்கொழுந்துகளுக்கு..! அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து…நீ வேலை செய்யும் அரசாங்கம் யோக்கியமா என்று கேட்கும் அபத்தத்தை ஒத்தது இது. ஒரு அரசு ஊழியரைப் பார்த்து அரசின் அத்தனை தவறுகளுக்கும் பொறுப்பேற்கச் சொல்லும் முட்டாள்தனத்துக்கு ஒப்பானது. ஊடகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் எவரும் இப்படியொரு அபத்தக் கேள்வியைக் கேட்க மாட்டார்கள்.////வினவு இணைய தளத்துக்கு கவின்மலர் கத்துக்குட்டித்தனமான பதில் முகநூலில்.
http://www.facebook.com/kavinnnn
//தமிழகத்தின் எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் அரசை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபடுவதற்கும், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கும், அரசை விமர்சிப்பதற்கும், ஒரு தனியார் ஊடகத்தில் வேலை பார்ப்பதற்குமான வித்தியாசம் உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். ஒரு தனியார் ஊடக நிறுவனத்தில் ஊடகத்தில் வரும் அத்தனை கருத்தும் நம்முடையது இல்லை எனும்போது சும்மா வந்து நீ அதைக் கேட்டியா இதைக் கேட்டியா என்று எங்களை நோக்கி வரும் கேள்விகள் போல அரசு ஊழியருக்கு வருவதில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.//
//போராட்டங்களில் கலந்துகொள்வது குறித்ததல்ல நான் எழுதியது. நீங்கள் ஒரு அரசு ஊழியர். அரசாங்கம் ஓர் ஊழலில் ஈடுபடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை நீ கேட்டியா? உனக்கும் அதில் பங்கு இருக்கிறது என்று சொல்வது அபத்தம்தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் //கவின்மலரின் அபத்தமான வாதம் முகநூலில்.
http://www.facebook.com/kavinnnn
போராட்டங்களில் கலந்துகொள்வது குறித்ததல்ல நான் எழுதியது. நீங்கள் ஒரு அரசு ஊழியர். அரசாங்கம் ஓர் ஊழலில் ஈடுபடுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதை நீ கேட்டியா? உனக்கும் அதில் பங்கு இருக்கிறது என்று சொல்வது அபத்தம்தான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் //யக்கா அறிவுக் கொழுந்து…அரசு உழலில் ஈடுபடும் பொழுது அதன் ஊழியர்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள்.
நீங்கள் இதுவரை விகடனில் வேலை பார்த்திருக்கின்றீர்கள்.எத்தனை முறை அதன் அயோக்கியத்தனத்தை,மோசடியை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடியிருக்கின்றீர்கள்.நேர்மையாகப் பட்டியலிடுங்கள்.
நீங்கள் சிபிஎம் மின் உறுப்பினர் என்பதால் அந்தளவுக்கு ஒர்த் இல்லை என்பது எங்களைப் போல் வினவுக்கும் தெரியும்.அதனால் தான்,
//ஊருக்கு உபதேசம் சொல்லும் கவின்மலர், அவருடன் இணைந்து பணியாற்றி டைம்பாஸ் என்ற மலிவான ‘மெல்லிய’ போர்னோ பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்கும் ரீ.சிவக்குமாரின் (சுகுணா திவாகர்) சட்டையைப் பிடித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் இரண்டு கேள்விகளாவது கேட்கத் தயாரா? இல்லை இவரை ஆசிரியர் பொறுப்பில் விட்டு காசு பார்க்கும் விகடன் நிர்வாகத்தினை கண்டித்து ஒரு மொக்கை கவிதையாவது எழுதத் தயாரா? முடியாது எனில் யாரை ஏமாற்றுகிறீர்கள்?//
என்று வினவியது.ஆனால் பதில் சொல்லத் துப்பில்லாமல் முகநூலில் வறட்டுச் சவால் விடுக்கின்றீர்கள்.அதற்கு நெறயப் பேரு லைக் போட்ருக்காங்க.
கேள்வியைப் புரியாம என்னத்தையாவது எழுதாதீங்க.உங்களையெல்லாம் எப்படி வேலைக்குச் சேர்த்தாங்கன்னு தெரியலையே..?
நான் எச்சலை விற்று வியாபாரம் செய்யும் குமுதம், டைம்பாஸ் இதழ்கலை தொடுவதில்லை. குப்பைகளை புறக்கணிப்போம்
[…] விகடனில் அறிவுரை வியாபாரம்…..!! 2. விகடனுக்கு என்ன தண்டனை, கவின்மலர் […]
அவளுடைய பாலியல் சுதந்திரத்தைக் கேள்வி கேட்கும் ஆணாதிக்கம் தான் தர்மபுரியில் மூன்று கிராமங்களின் மீது நடந்த தாக்குதலுக்கான அடிப்படைக் காரணம்”///
தர்மபுரியின் கலவரத்திற்கு பாலியல் சுதந்திரம் கொடுக்காததுதான் காரணமா? பாலியல் சுதந்திரம் தான் இவிகள மாதிரி ஆட்களோட தேவை போல…
Let them[women] Speak and write.
like கவின்மலர் more women should come and speak and write.
pls allow them