Sunday, September 25, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

-

விஸ்வரூபம் படம், கமலஹாசன் சொல்லிக் கொள்வது போல ஒரு “ஸ்பை த்ரில்லர்” ஆக இருக்கப்போகிறதோ இல்லையோ, தற்போது தமிழகத்தில் அரங்கேறி வரும் கூத்துகள் கிட்டத்தட்ட அவ்வாறுதான் இருக்கின்றன.

படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் பதறியிருக்கிறார் அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன். நீதிபதி அதை ஏற்கவில்லை. எனவே இரவோடு இரவாக தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று, அவரைத் தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘இன்று காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.

நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.

“இத்திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.

“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இஸ்லாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.

தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.

“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.

“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.

அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.

32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே Application Of Mind  என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.

“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.

“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.

கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

பல இஸ்லாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.

நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.

000

1980 களில் ஷா பானு என்ற மண விலக்கு செய்யப்பட்ட ஏழை இசுலாமியப் பெண்மணி, ‘ஷாரியத் சட்டத்தின் கீழ் தனக்கு மறுக்கப்பட்ட ஜீவனாம்சத்தை, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கவேண்டும்’ என்று கோரினார். ஷாபானுவுக்கு ஆதரவாக அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சையது சகாபுதீன் தலைமையில் இஸ்லாமிய மதவெறியர்கள் வட இந்தியாவெங்கும் சாமியாடினர். இதனைக்காட்டி, இந்து மதவெறியை மிகச் சுலபமாகத் தூண்டியது ஆர்.எஸ்.எஸ்.

உடனே அதனை சமாளிப்பதற்கும், இந்துக்களின் வாக்குகளைக் கவருவதற்கும், பாபர் மசூதியின் கதவுகளை இந்துக்களுக்கு திறந்து விட்டார் ராஜீவ் காந்தி. அதன் பின்னர்தான் அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது.

“ஷா பானு விவகாரத்தில் முஸ்லிம் மதவெறியர்கள் வைத்த கொள்ளிதான், இந்து மதவெறியர்கள் அரசியலில் தலையெடுப்பதற்கு சாதகமாக அமைந்தது” என்பதை ஆய்வாளர் அஸ்கர் அலி எஞ்சினியர் தனது பல கட்டுரைகளில் விளக்கி கூறியிருக்கிறார்.

அதனை ஒத்த விபரீதம்தான் தமிழகத்தில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

000

பின் குறிப்பு:

இதனைப் படித்தவுடன் “நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? கமலின் கைக்கூலியே” என்பன போன்ற வசைகளை இஸ்லாமிய மதவெறியர்கள் தொடங்குவார்கள் என்பதை அறிவோம்.

இதுவரை தெரியவந்துள்ள கதையின்படி விஸ்வரூபம் ஒரு அமெரிக்க அடிவருடித் திரைப்படம். அது மட்டுமல்ல, தெற்காசியாவில் அமெரிக்காவின் புதிய அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு “கலைப் படைப்பு” என்றும் தெரிகிறது. அதாவது இந்திய ராம்போ. இதுதான் இப்படத்தில் நாம் எதிர்க்க வேண்டிய முக்கியமான விடயமாகத் தெரிகிறது.

படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்டியிருப்பதன் மூலம் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. ஒரு இந்திய முஸ்லிமை (கதாநாயகன் கமலஹாசன்) ரா உளவாளியாகவும், அமெரிக்க அடிவருடியாகவும் காட்டியிருப்பதுதான் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்டுள்ள பெருத்த அவமதிப்பு என்று எங்களுக்குத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அடியாளும், இசுரேலின் கையாளுமான சவூதி அரசுக்கு அடியாள் வேலை பார்க்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கு இப்படித் தோன்றாததில் வியப்பில்லை.

இப்போது  ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் பேசும் வசனங்கள், அவர்களுடைய சொந்த சரக்குகளா அல்லது மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டவையா என்பதை மட்டும் அவர்கள் சொன்னால் போதும்.

மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு யாரும் விஸ்வரூபம் படமெல்லாம் பார்க்கத் தேவையில்லை.

  • மிக நல்ல கட்டுரை! வினவின் சில உருப்படியான கட்டுரைகளில் இதுவும் ஒன்று! தொடரட்டும் உங்கள் பணி!

  • பலே..! பலே ! மதவாதிகள் எழுப்பும் விமர்சனக் கருத்துக்கள்..பதிலடி வீரர்களான வினவுத் தோழர்களையே அமைதியாக்கி விட்டதே ! என்னே..அவர்களின் வாதத்திறமை ! 🙂

   • Mr. Rammy, I am still a Christian with liberal views. I never accepted communism or Americanism (capitalism). I have only said that this article is nice as it is for free speech. I supported release of Da Vinci Code. I supported release of Dasavatharam which hindu groups opposed. Now I am supporting Viswaroopam. Even tomorrow, if you make a movie showing any religion or ideology as evil, I will support its release. So don’t think I have embraced red terror or safron terror.

    • Dear Friend ! I have mentioned the “Silence of Roarers (this social group followers..usually are very sound defenders) ….done by the fundamentalists ! Amazed about their debating attitude !

 1. /இப்போது ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் பேசும் வசனங்கள், அவர்களுடைய சொந்த சரக்குகளா அல்லது மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டவையா என்பதை மட்டும் அவர்கள் சொன்னால் போதும்.

  மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை./

  நச்!

  செவிட்டில் அறையும் வார்த்தைகள்… வினவுக்காக இந்த கட்டுரையை எழுதினவரின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

 2. எனக்கு தெரிஞ்சு ஓவர் பில்டப் இல்லாமல் நேர்மையாக வினவில் எழுதப்பட்ட விமர்சனம்
  வாழ்த்துக்கள்

 3. “ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?” என்பதை போல “விஸ்வரூபம் : ஜெயாவின் அடியாட்களா போலீசு ?” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதிருக்கலாம்.

  எங்க நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் பல திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களை வெளியேற்றியது தமிழக அரசின் அடியாட்களான காவல்துறை!

  அணைய போற விளக்கு ரொம்ம்ப பிரகாசமா எரியும்ன்னு சொல்லுவாங்க. நல்லாவே எரியுது, போறபோக்கை பார்த்தால், வர எம்பி எலக்சன்ல பாதியை அணைச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன். மீதியை அடுத்த சட்டமன்ற எலக்சன்ல அணைச்சுடுவாங்கன்னு நினைக்கிறேன்.

  சில வருடங்களுக்கு முன் சென்னை சட்டக்கல்லூரியில், தேவர் இனத்தை சார்ந்த மாணவனை நூறு பேர் கொண்ட ரவுடி கும்பல், கல்லூரி வாசலிலேயே கொலைவெறி தாக்குதல் நடத்திய போது கைக்கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை, இப்போவரைக்கும் திருட்டு விசிடில விற்பனை செய்றவனையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கும் காவல்துறை, தியேட்டருக்கு தன்னோட காசை கொடுத்து படம் பார்க்க வந்தவனை அடிச்சு விரட்டுறதுக்கு பேருதான் வீரமா?

  இப்படி அடியாட்கள் மாதிரி ஓட்டுபோட்ட / ஓட்டு போடப்போகும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதற்குதான் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தருதா? எங்க வரியில தானே அந்த சம்பளம் உங்களுக்கு கிடைக்குது. அதே வரிப்பணத்திலிருந்து கிடைக்கும் பணத்தால், காவலர் குடியிருப்பு, அதுஇதுன்னு எல்லாவற்றுக்கும் சலுகைன்னு பேருல சுகபோகத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற நீங்க தானே, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். அதைவிட்டுட்டு இப்படி அடியாட்கள் மாதிரி செயல்படுறதுதுறது நியாயமா?

  காவல்துறை உங்கள் நண்பன்ன்னு சொல்லிக்கிட்டா மட்டும் போதாது, அதுமாதிரி நடக்கவும் பழகிக்கணும்.

 4. யோவ் என்னயா முஸ்லீம் தீவிரவாதி அது இதுன்னு திடீர்னு எழுதிப்புட்ட…

  • எல்லா முஸ்லீமும் தீவிரவாதியில்லை. மனிதத்துக்கு எதிரான எவராயினும் அவர்கள் பயங்கரவாதிகளே! அவர்கள் எந்த மதத்தில் இருந்தால் என்ன! அவர்களின் எண்ணங்கள் வேரறுக்கப்படவேண்டியவையே! வினவினை ஆழமாகப் புரிந்திராத பையாவைப் போன்றோர் இப்படி ஆச்சரியப்படுவதில் வியப்பேதுமில்லை.

 5. The irony of the current state of affairs is whether vishwaroopam may show the muslims in the bad light or not..the agitations against vishwaroopam put the muslims in very bad light and depicts all of them are intolerants and above crticism. Credit goes to PJ and few fundamental groups.

 6. விஸ்வரூபம் திரைப்படத்தினை பார்க்கலாமா வேண்டாமா என்கிற முடிவினை மக்கள் தாமாக எடுக்கட்டும். அத்திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறவர்களின் உள்/வெளி நோக்கங்களை கடந்து, இத்தடையினை நிபந்தனைகளின்றி மிகக்கடுமையாக கண்டிக்கிறேன்…

  அதேவேளையில், திரைப்படம் பேசுகிற அரசியலில் எனக்கிருக்கிற முரண்பாட்டினை பேசாமலும் இருக்கமுடியாது. பல இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஆதரவு வசனங்களும்/காட்சிகளும், படம் முழுக்க வாய்ப்பிருந்தும் ஆப்கன் போர் குறித்த அரசியலை/உண்மைகளை மிகக்கவனமாக பேசாமல் தவிர்த்து அமைதிகாத்தும் எடுக்கப்பட்டிருக்கிற திரைப்படத்தை விமர்சிக்காமல் என்னால் இருக்கமுடியவில்லை…

  ஆப்கான் மக்களின் வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாமலும், அவர்களின் வரலாற்றை அரைகுறையாகக் கூட அறியமுற்படாமலும், அமெரிக்காவின் பென்டகனில் அமர்ந்துகொண்டு அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகளோடு கலந்துரையாடி உருவாக்கப்பட்ட திரைக்கதையைத்தான் கொண்டிருக்கிறது விஸ்வரூபம் திரைப்படம்.

  • படம் வெளிவந்தபின் நாம் தாராளமாக அதனைப் பற்றி விரிவாக விவாதிக்கலாம், கடுமையாக விமர்சிக்கலாம்.

  • I accept that every one has got freedom of speech and writing.But Kamal film Viswaroopam has been produced as per their masters in U.S.If he is realy interested in Afkan terrorism,first he should tell why they have opted for that? First Russian occupation,then American invasion.He should have shown American bombings on civilians.Iltreatment to dead bodies of taliban fighters.His motive should be neutral.I ask one question.Can he take a film on Gandhi asassination?Can he show safron terrorism ,Malegan,samjadha express,ajmeer bombing? Godse tatooed as Ismail in his hand and killed Gandhi so as to create fight between hindus and muslims.Now Kamal said that he will go to secular country.US is not a secular country.Obama took oath office by touching Bible: but they are not following the principals Bible which preaches PEACE.Castro told CIA has tried to kill him 63 times.Chaves told if he is killed ,it is only by US.The number of people killed in Iraq,Afkanistan and elsewhere by US and allied forces are more than the people killed by their rulers.This US sponsered terrorism for oil and selling of weapons.

 7. ஷா பானு வழக்கை பற்றி எழுதியமைக்கு நன்றி.இது இந்த தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை.ஆனால் இதுவே துவக்கமாக இருந்தது

 8. நல்ல கட்டுரை , சமூக நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரை .. முஸ்லீம்கள் உண்மையை உணர்ந்து போலி மத வெறி கூச்சல்களின் பின் செல்லாமல் தங்கள் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக போராடுவதே சரியானதாகும்… முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வு தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகமாக்கப்பட்டு மதக்கலவரத்தை தூண்டவே வழிவகுக்கும்… பிறகு நாம் அடிப்படை தேவைகளுக்கு கூட போராடும் நிலை வந்துவிடும்….

 9. மிகமிகச் சரியான கருத்து. இப்படத்தின் மீதான தடைகளும் தடங்கல்களும் இஸ்லாமியர்களுக்கெதிரான மனநிலையை வளர்த்துவிடவே உதவுகின்றன.

 10. நடுநிலை கன்னோட்டதுடன் எழுதப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்.

 11. மிகச் சிறப்பாய் வார்க்கப்பட்டிருக்கும் கட்டுரை. வினவுக்கு நன்றிகள்!
  வார்த்தைக்கு வார்த்தை கவனமாய் செதுக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் அறியாமையில் மூழ்கி மத போதையில் தள்ளாடும் முஸ்லீம் சகோதரர்களை நல்வழிப்படுத்தட்டும். முஸ்லீம் மக்கள் பகடைக்காய்களாய் பயன்படுத்தப்படுவவதை அவர்கள் உணர்ந்து தெளியட்டும்.

 12. I think zionist(Isreal,USA) sponserd kamal hasan to make movie which further alienate Muslim community which already marred in Mass media

  So I think your article should be the ‘Kamal hasan puppet of Zionist’

   • குட்டி சைத்தான் ஒன்றை கோடி இஸ்ரேலின் அப்பன் சைத்தான் அமேரிக்கா என்ற உலக ரவுடிக்கு ரசியா பணியுது ,சீனா பணியுது ,ஜப்பான் பணியுது ,ஜெர்மன் பணியுது .பிரான்ஸ் பணியுது ,

    • //குட்டி சைத்தான் ஒன்றை கோடி இஸ்ரேலின் அப்பன் சைத்தான் அமேரிக்கா என்ற உலக ரவுடிக்கு ரசியா பணியுது ,சீனா பணியுது ,ஜப்பான் பணியுது ,ஜெர்மன் பணியுது .பிரான்ஸ் பணியுது ,///

     @S.Ibrahim அட உங்க தமாத் இயக்கம் அம்மாவுக்கே அடிபணியிது…பின்ன அமெரிக்காவுக்கு கழுவிவிடாதா….

    • //‘மஸீஹ் அல்லாஹ்வின் மகன்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். -9:30//

     ithu entha porin pothu sonnathu? ungal nambikkai ennavaga vendumaanalum irukkattum. neengal eppadi aduthavargal nambikkaiyai azhippaan ozhippaannu solla mudiyum? nalaikku nanum oru mathaththai niruvi athula muslimgalai billa ozhippaanu sonna ungalukku kovam varathu? ithu pira mathathinarin manathai punpaduthaatha? kurnai thadai panniralama?

 13. விஸ்வரூபம் பொறுத்த வரை முஸ்லிம் தலைவர்கள் இப்போது முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள், காரணம் அரசின் செயலபாடுகளில் சிக்கி முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், கமலஹாசனுடன், பேசி அவர் அமெரிக்காவிலிருந்து வந்த மறுநாளே சில் காட்சிகளை தவிர்த்து விட்டு வெளியிடிவதென முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், வழக்கின் தீர்ப்பு சம்மந்தமாக காத்திருந்தார்கள். தீர்ப்பு வந்த மறு நிமிடமே, திரையிடட்டும் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது நடப்பது அரசியல் நாடகமே, பொதுமக்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும்.

 14. சகோதர, சகோதரிகளே! இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுதவோ அல்லது மததுவேசம் எடுக்கவோ நான் எழுதவில்லை. இந்த படத்திற்கு இவ்வளவு எதிர்ப்புகளும், பரபரப்பும் முதலில் தேவையற்றதே! முஸ்லிம் அமைப்புகள் முதலில் செய்த தவறு, கமலிடம் ஆட்சேபனையைக் கூறி ஒரு சில காட்சிகளை நீக்க முயன்றிருக்கலாம். தாங்கள் சொல்வது போல் ஆர்.எஸ்.எஸ் ஈஸியாக உள்ளே நுழைய வழி, இதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழக மக்கள் அப்படி பட்டவர்கள் அல்ல. நான் வெளி ஊருக்கு செல்லும் போது வழியில் தொழுகை நேரத்தை அடைந்தால், அங்கு தொழுகையை நிறைவேற்ற எத்தனையோ ஹிந்து சகோதரர்கள் தங்கள் இல்லங்களில் அனுமதி தந்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தங்கள் வீட்டில் உள்ள சாமி புகைப்படங்களை நான் தொழும் வரை திரைக்கூட போட்டிருக்கிறார்கள். தமிழன் மனம் பெரியது.

  இந்த நிகழ்வு விபத்து போல் வந்துவிட்டது என்பதே உண்மை. அரசியல் கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு, தொண்டர்கள் எப்படி தலையசப்பார்களோ அதை போல்தான் இன்று இயக்க தலைவர்களின் முடிவும் உள்ளது. அது மட்டுமில்லை இயக்கத்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 10 % மட்டுமே. மற்ற முஸ்ஸிம்கள் யாரும் இதற்கு பொறுப்பக முடியாது. நான் கூட என் வீட்டில் ஏர்டெல் மூலமாக விஸ்வரூபம் பார்க்க 1000 டெபாசிட் செய்தவன்தான் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

  கமலுக்கு ஏற்பட்ட இந்த நிலை கடுமையாக கண்டிக்க கூடியது, ஒரு மனிதனை சோதனையின் விளிம்பிற்கு தள்ளுவது, இயக்க தலைவர்கள் இஸ்லாத்தை புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

  விஸ்வரூபம் பொறுத்த வரை முஸ்லிம் தலைவர்கள் இப்போது முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள், காரணம் அரசின் செயலபாடுகளில் சிக்கி முடிவெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஆனால், கமலஹாசனுடன், பேசி அவர் அமெரிக்காவிலிருந்து வந்த மறுநாளே சில காட்சிகளை தவிர்த்து விட்டு வெளியிடிவதென முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், வழக்கின் தீர்ப்பு வராமல் வெளியிட முடியாது என்பதாலேயே காத்திருந்தார்கள். தீர்ப்பு வந்த மறு நிமிடமே, திரையிடட்டும் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது நடப்பது அரசியல் நாடகமே, பொதுமக்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும்.

  • அப்துல் உங்கள் நேர்மை எமக்கு மிகவும் பிடித்துள்ளது…ஆனால் அப்துல் என்ற பெயரில் விஷமிகள் யாரும் இதை பதிந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

 15. அன்பார்ந்த என் வினவு எழுத்தாளரே… எங்கோ ஒரு பெண் விபச்சாரம் செய்து விட்டால் அந்த பெண் மட்டும் தான் விபச்சாரி ஆவாள்.. அதற்காக ஒட்டுமொத்த பெண்களும் விபச்சாரி ஆக மாட்டார்கள்.. உங்கள் அம்மா ,மனைவி, மகள் அவர்களும் பெண் என்பதால் அவர்களும் விபச்சாரி ஆவார்களா…? அதை போல் தான் எவனோ ஒருவன் தீவிரவாதி அவன் மதம் இஸ்லாம் என்பதால் ஒட்டுமத்த இஸ்லாமியர்களும் எப்படி தீவிரவாதி ஆவார்கள்?

  • ///மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.///

   என்று தானே உள்ளது

  • Brother, Than why you are worrying, if others are not thing your mother and sister as prostitue. If you are giving example for comments do not show stupid examples. In Tamil Nadu, Our Hindu and Christian brothers are living as brothers with the Muslims.

  • விபச்சாரம் செய்யும் பெண் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதி பாத்திரத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு என்ன அய்யா பொருள்?

  • @muslim tamilan அந்த TNTJ தமாத் அரசியல் கட்சி கூட்டத்தில் உள்ளதை அப்படியே சொல்லுரிங்க.. எப்படி??

   https://www.youtube.com/watch?feature=player_embedded&v=DQ_LsAbVsLA

   25% மூஸ்லீம்கள் உள்ள கேரளத்தில் தடையின்றி ஒடுகிறது..
   ஆனா ஆளுங்கட்சியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் தாமத் தலைவனை தட்டிக்கேட்டக உனக்கு நாதியில்லை.

  • அன்பின் முஸ்லிம்தமிழன் நீங்கள் கட்டுரையை மேலோட்டமாகப்படித்துவிட்டு விமர்சிக்கிறீர்கள் நீங்கள் நினைப்பது தவறு மீண்டும் ஆழ்ந்து படியுங்கள்

 16. பத்திரிக்கை துறை மக்களுக்கு பொதுவான கருத்துக்களை எடுத்துச் சொல்லும், இன்னும் பதட்டமான சூழ் நிலைகளிலெல்லாம் மக்களை அமைதிப்படுத்த பல நன்முயற்சிகளை செய்துக்காட்டி அமைதியை ஏற்படுத்திய வரலாறு உள்ளது. நீங்களே இப்படி சொல்வது உணர்ச்சிவசத்தின் தொகுப்பை காட்டுகிறது. தங்களின் கோபம் நியாயமானது, அந்த அளவிற்கு எங்கள் இயக்க தலைவர்கள் உங்களை புண்படுத்திவிட்டார்கள். தவறு எங்களுடையது. அதற்கு பிரயாச்சித்தம் தேடுவது எங்கள் பொறுப்பே!

 17. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
  விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்:
  தொழுதுவிட்டு கொலை.
  தீவிரவாதிகளின் கையேடு அல்-குர்ஆன்.
  எதிரியின் கழுத்தை அறுப்பதை அப்படியே காண்பிப்பது.
  பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் புகழிடம்.
  அமைதியின் சின்னமான புறாக்களையும் கொல்லுதல்.
  தமிழ் பேசுபவர்களை இழிவுபடுத்தியுள்ளார்.

 18. விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட இருந்த தியேட்டர்களில் கண்ணாடிக்கதவுகள் நொறுக்கப்பட்டன.சில இடங்களில் பெட்ரோல் குண்டுகள்,etc.
  தேவையில்லாமல் முஸ்லீம்கள் மீது வெறுப்பு அடுத்தவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகிறது.அரசு உடன் முடிவு எடுக்க வேண்டும்.courtல நடப்பதை தவிர்க்கலாம்.கமலும் முஸ்லீம்களும் இனைந்து முடிவு தெரிவித்தபிறகு மேல் முறையீட்டை வாபஸ் வாங்காமல் இருப்பது தவறு.
  ஆனால் வண்டு முருகன் ஜோக்கு Top ஒ Top

 19. அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே,

  அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக )..
  விஸ்வரூபம் பிரச்சினையின் “உண்மைரூபத்தை” தற்போது அறிந்திருப்பீர்கள்.

  நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்.

  விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ?

  அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ?

  அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ?

  திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே…

  டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ?

  அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ?

  நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்….

  நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ?

  ” இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்” என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ?

  நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை.

  ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது.

  ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது.

  நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல,
  ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை.

  இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள்.

  இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும்.
  தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது.

  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது.

  இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை.

  அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள்.

  அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள்.

  இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள்,
  உண்மையானவர்களை உணருங்கள். ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள்.

  கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள்.

  ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். நாம் என்றும் நாமாக இருப்போம்.

  மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்.

 20. ///இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
  விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்:
  தொழுதுவிட்டு கொலை.
  தீவிரவாதிகளின் கையேடு அல்-குரான்.
  எதிரியின் கழுத்தை அறுப்பதை அப்படியே காண்பிப்பது.
  பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் புகழிடம்.
  அமைதியின் சின்னமான புறாக்களையும் கொல்லுதல்.
  தமிழ் பேசுபவர்களை இழிவுபடுத்தியுள்ளார்///

  முஸ்லிம் தமிழன் அண்ணே அதான் கமல் அந்த காட்சிகளை நீகுறேனு சொல்லிடாரு ..அப்புறம் ஏன் ? இப்படியே குதிச்சுட்டு இருந்தா பாதிப்பு நாமுடைய முஸ்லிம் சகோதர்களுக்கு மட்டும்தான் … மிக பலமான அரசியல் காய்கள் திரைமறைவில் நகர்கின்றது புரிந்து கொள்ளுங்கள் மக்களே >>>>

 21. இந்த பதிவு ஒரு நகைச்சுவை இழையோடும் தொனியில் இருந்தாலும் சொல்லிய செய்தி தீவிரமானது. தமிழகத்தின் சில பகுதிகளில் அதிமுக வினர் திரை அரங்குகளில் கலாட்டாவில் இறங்குவதாக தெரிகிறது. அந்த கும்பலில் தெரிந்தோ, அறியாமலோ ஒரு சில இசுலமாமிய நண்பர்கள் தம்மை இணைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படின் அது பெரும்பான்மை சமூகத்தவர் மனதில் தீவிரமான சிந்தனைகளை உருவாக்க கூடும். அதன்பின் பெரியார் மண் என்று நாமெல்லாம் பெருமைபட்டுக் கொள்ள வாய்ப்பில்லாமல் போகலாம். ஷாபானு விவகாரம் ,விஷ்வரூபம் விவகாரம்,சயது சகாபுதின்,ஜெய்னுலாதின் இதெல்லாம் வேறுவேறென்று கூறிவிட முடியாதபடி ஆகிவிடக்கூடும். இசுலாமிய சமயத்தை சேர்ந்த மக்கள் ஜனநாயக சக்திகளோடு கை கோர்க்க வேண்டுமேயன்றி மதவாதிகளுடன் அல்ல. அது அவர்களுக்குநன்மை தராதுயென்பதை உணர்வது நல்லது.இந்த மோதலின் மையப்புள்ளி அரசைநடத்துபவர்கள் என்பதை மதநல்லிணக்கத்தின் மேல்நம்பிக்கையுள்ள ஊடகங்கள் தெளிவு படுத்திவிட வேண்டும். ஒரு கொளரவ மோதலில் தமிழகத்தில் மதச்சண்டை வந்தால் கூட பரவாயில்லை தனிமனிதன் நடுத்தெருவுக்கு வந்தால் போதும்னு நினைக்கும் ஆள்வோரின் அராஜகத்தை பெரியார் வழிவந்ததாக அரசியல் செய்வோரும்,ஜனநாயக இயக்கங்களும் வை கோ, வலது ,இடதுகள் அனைவரும் அம்பலப்படுத்தி கண்டிக்க முன் வர வேண்டும் . இன்றைய நிலையில் அந்த படம் வந்து செய்யும் தீமையை விட வராமல் செய்யும் தீமையே அதிகம் எனத்தோன்றுகிறது.இதனை சிந்தித்து இசுலாமிய நண்பர்கள் தமது கருத்துக்களை திறந்த மனதோடு வெளிப்படுத்த வேண்டும்

  • இன்றைய நிலையில் அந்த படம் வந்து செய்யும் தீமையை விட வராமல் செய்யும் தீமையே அதிகம் எனத்தோன்றுகிறது.

 22. நீ தாலிபான காட்டுங்கள் இல்ல லக்ஷ்ர்இதொய்பாவை காட்டுங்கள் எங்களுக்கு பிரச்சனையில்லை ஆனால் முஸ்லிம்கள் தன் உயிரைபோல மதிக்கும் குரான் வசனங்களை ஓதிக்கொண்டு கழுத்தைஅறுப்பது போல் காட்சியை வைக்கவேண்டுமா தொழுது முடித்தவுடன் கொலைசெய்வதுபோல் காட்சிவைப்பது சரியா ? இதைபார்க்கும் இந்துமக்கள் இஸ்லாமியர்களின் குரானும் தொழுகையும் தீவிரவாதம் செய்ய தூண்டுகிறது எனற தவறான எண்ணத்திற்கு வரமாட்டார்களா ? தமிழ் சினிமாக்களில், “பாகிஸ்தான்” முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருந்தவர்கள், இப்போது, இந்தியாவில் “உங்கள் ஊரில் – உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் “ஸ்லீப்பர்” செல்களாக இருக்கலாம், என முஸ்லிம்களை காட்சிப்படுத்தியது, விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி. இப்படியே ஒவ்வொரு படத்திலும் எங்களை தீவிரவாதிகளாக காட்டி காட்டி இந்து சகோதரர்களிடமிருந்து இப்பவே பாதி அந்நிய படுத்தி விட்டார்கள். இதற்கு ஒரு முடிவு வேண்டாமா அதற்காக போராடினால் ஒரு மததுவேஷமுள்ள ஆஸ்கர் விருதுக்குஆசைபட்டு அமெரிக்கனை தூக்கிபிடிக்கும் நடிகர் நஷ்டபடுவார் என்று கவலைபடுகிறார்கள் சிலஇந்து சகோதரர்கள். டேம்999 படத்துக்கு எதிராக பெருபான்மை மக்கள் போராடினால் அது போராட்டம். நாங்கள் போராடினால் அது தீவிரவாதம்.

  1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

  2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

  3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

  4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

  5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

  6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

  7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

  நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

  9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

  10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

  11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

  12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

  13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

  14) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தது இந்தியாவில ரத்த ஆற்றை ஓட்டியது யார் ?

  இதெல்லாம் கமல் போன்ற முற்போக்கு இயக்குனர்கள் கண்களுக்கு அஹிம்சை செயலாக தெரியும் போலருக்கு. இந்த ஆர்எஸ்எஸ் காவி தீவிரவாதத்தை பற்றி படம் எடுத்திருக்கிறார்களா ? எடுப்பார்களா ???

  • குண்டு வைப்பது மட்டும் தான் தீவிரவாதம் என்றா கருதுகிறீர்கள். அவர்கள் வைத்த குண்டையெல்லாம் உங்களைப் போன்றவர்கள் நாலு கூட்டம் போட்டால் ஒன்றுமில்லாமல் பண்ணி விடுவீர்கள் போலப் படுகிறது.

  • @அஹ்மத்,

   என்ன பாஸ் இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டிங்க…இதே கேள்வியை உங்களை கேளுங்க பாஸ்.குரான் படிச்சிட்டு இதுவரை தீவிரவாதிகள் யாரையும் கொல்லவில்லையா??பாகிஸ்தானில் பல இடங்களில் மசுதிக்கு உள்ளே குண்டு வெடிப்பது உங்களுக்கு தெரியாதா? சாதரணமாக உங்கள் மசூதிக்குள் வெளியாட்கள் செல்ல முடியுமா?? dam 999 படத்தையும் இதையும் ஒன்னா வச்சி பாக்காதிங்க..அது வேறு இது வேறு..ஆப்கானில் நடக்கும் கட்சியையும்,இந்தியாவையும் அதுவும் தமிழ் நாட்டையும் ஒன்றுபடுத்தி பார்க்க முடியுமா?? என்ன சீழ்கெட்ட சிந்தனை இது..

   இதுபோக உங்களுடைய மற்ற கேள்விகளில் இருக்கும் நியாயத்தை நாங்கள் மறுகவில்லை

   • சகோதரர் நெல்லைபாலாஜி அவர்களே தாங்கள் முதலில் கேட்ட கேள்வி குர்ரான்னை படித்துவிட்டு இதுவரை யாரும் கொள்ளவில்லையா என்று கேட்கிறீர்கள்.இதற்கு என்னுடைய பதில் எனாக்கு தெரிந்த வகையில் இதுவரை யாரும் அவாறு செய்ததாக தெரியவில்லை . ஒரு வேளை அவாறு அவர்கள் அநியாயமாக கொலை செய்திருந்தால் .அது கண்டிப்பான முறையில் பெரும் தவறு பெரும் பெரும் பாவம் அவர்கள் நரகம் தான் செல்வார்கள் . நான் தங்களிடம் ஒன்று கூற விரும்போகிறேன் . தாங்கள் ஒருமுறை குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது . இதிலிருந்து தன்னகளுக்கு தெரியும் குர்ரான் யாரையும் கொள்ளசொல்வதில்லை என்று . உதாரனத்திற்க்கு. ஹிந்து மத வாதிகளில் சிலர் விபச்சாரத்திலும் பலமோசடிகளிலும் ஈடுபடுகின்றனர் அதற்காக தங்கள் அவர்கள் பகவத்கீதை என்ற வேதத்தை படித்துவிட்டு தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூற மாட்டீர்கள் . அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல் .அதற்க்கு மதம் பொறுப்பாகாது . என்றே கூறுவீர்கள் . எனவே இது தான் சரியான கருத்தும் கூட.
    எனவே சற்று சிந்தித்து பாருங்கள் .

  • எத்தனை யார்…
   உச்ச பட்சமே இதுதான் “நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ”

   – கஷாப் , தாவூத் , அப்சல் குரு இந்துகள் என்று கேள்விப்பட்டேன் அதை மேற்கண்ட பின்னுட்டத்தில் முஸ்லீம் என்ற பெயரில் உறுதிப்படுத்திவிட்டார்.

  • அண்ணே..கோயமுத்தூர் குண்டு வெடிப்பை ஏன் விட்டுட்டீங்க..! அந்த கேஸையும் காவிங்க மேலேயே ஏத்துங்க அண்ணே!

  • எந்தவொரு மதத்தின் மறை நூல்களிலும் இல்லாத அளவிற்கு குரானில் மற்றைய மதத்தவர்களை ‘காபிர்கள்’ (infidels) என்று இழிவுபடுத்தும் விடயங்கள், எதிரிகளாகச் சித்தரிக்கும் விடயங்கள், அவர்களுக்கெதிரான வன்முறைகளை தூண்டும் விடயங்கள் எல்லாம் உள்ளனவே.
   அப்போ, குரானை தடைசெய்யும்படி நாங்களும் போராடலாமா?

   • காபிர்கள் என்றால் இஸ்லாம் அல்லாதவர்கள் என்று அர்த்தம். இதில் எங்கே இழிவுபடுத்தப்படுகிறது.

    • Author: Dr. Sami Alrabaa
     Publication: Family Security Matters
     Date: January 23, 2009
     URL: http://www.islam-watch.org/Sami/Saudi-Textbooks-Hatred-Violence.htm

     Ahmed Al-Sarraf cited in Al-Qabas (June 2, 2007) some passages from a Kuwaiti school textbook taught at the first secondary grade. Here is an English translation of passages from the book, “Jurisprudence”, page 38:

     Who is, or who is not, punished in a Muslim society:
     A Muslim who kills an apostate or someone who commits adultery against an infidel is not punished.
     If a Muslim kills an infidel or a slave, he is not punished.
     If a Muslim man, father, or grandfather kills someone from his offspring, he is not punished.

 23. மிக அருமையான கட்டுரை. மதத்தின் பெய்ரால் தீவிரவாதம் செய்யும் ஒரே மத வாதிகள் முஸ்லிம்கள்தான். எங்கும் எவரும் ஏதாவது ஒரு கொள்கைக்காக போராடுவார்கள் அல்லது தீவிரவாதம் செய்வார்கள் ஆனால் பச்சைக்குழந்தைபோல் யாராவது எது சொன்னாலும் உடனே அது தன்னப் பற்றி தான் என்று ஒரே ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் அமைப்பின் செய்னுலாபுதீன் போன்றவ்ர்க்ள் தான் இத்னைசெய்கின்றன்ர்.

 24. இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து போராடினால் அது ஹிந்துக்களை ஒன்று படுத்திவிடும் என்று சொல்வது ,காவிரிக்காக தமிழர்கள் ஒன்றிணைந்து போராடினால் கர்நாடகம் ஒன்று பட்டு விடும் ,முல்லை பெரியாருக்காக போராடினால் கேரளம் ஒன்று பட்டு விடும் ,பாலாருக்காக போராடினால் ஆந்திரம் ஒன்றுபட்டு விடும் ,தலித்துக்காக போராடினால் மேல் ஜாதியினர் அனைவரும் ஒன்றுபட்டு விடுவார்கள் ,என்னய்யா இது ? அப்படி என்றால் உரிமைக்காக யாரும் போராடவே கூடாதா ? காவிகொள்கையில் உள்ள அதே இஸ்லாமிய எதிர்ப்பு வெறி “விஸ்வரூபத்தில்” உள்ளது ,அதைத்தானே தடை செய்ய சொல்லி போராடுகிறோம் , காவிக்கள் இனி செய்யப்போகும் செயலைத்தான் இந்த படம் இன்று செய்ய வருகிறது ,நேற்று (உன்னைப்போல் ஒருவன்) செய்தது, “முஸ்லிமா நீ, என்ன செஞ்சாலும் போராடாதே அவன் ஒன்னு கூடிருவான் “என்று வினவு பயமுறுத்துவது ,அதன் மேல் ,அதன் கொள்கை மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ,”நீ அவனைப்போல் ஒருவனோ ” என்று . இந்த போராட்டமாவது ஹிந்துக்களை ஒன்று படுத்தி ,ஜாதி ஏற்ற தாழ்வை நீக்கும் என்றால் ,அதை விட சந்தோசம் எங்களுக்கு வேறு என்ன இருக்கிறது ,அப்படியாவது இந்த சனியன் பிடித்த சாதி வேற்றுமை நீங்கட்டுமே ,போராடவே கூடாது என்று “வினவே” சொல்வது ….வினவுக்கு அழகல்ல ,

 25. முட்டாள்தனமான வாதம் முஸ்லிம் என்றால் தொழுது விட்டு தான் வருவான், இந்து என்றால் கோவிலுக்கும், கிறிச்தவன் என்றால் சர்ச்சுக்கும் சென்று விட்டு தான் வருவான். அதற்காக அவர்கள் செய்வது எல்லாம் சசரியாகிவிடுவமா? அல்லது தொழுது விட்டு வருகின்றான் என்பதற்காக அவன் செய்யும் செயல்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாமா? முதலில் யார் அல்லாகு அக்பர் என்றும் குர் ஆன் வசனஙகளை ஓதியும், லாயிலாகா இல்லாH முகம்மது ரசூலுல்லாக் என்று பேனர் கட்டிகொண்டு கழுத்த்றுத்தது யார்? முஸ்லிம்கள் தான். இதனை எந்த முஸ்லிம் அமைப்பாவது கண்டிக்கவாவது செய்ததா? அனைவரும் காட்டுமிராண்டிகள்

  • யார் நீங்கள்தான் சொல்லுங்களேன்? ஜெய் காளி என்று சூலத்தால் குதறியது யார்? சொல்லுங்களேன்.

  • Search in YouTube about “Islamic terror attacks in Afghan.” You can see lot of real videos of Islamist terrorists’ activities and killings in the name of Allah. then only talk about Islamic terrorism.

 26. தோழரே இந்த ஷாஹ் பானு வழக்கு பற்றிய முழு விளக்கம் கொண்ட ஒரு பதிவை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.என்னை போன்ற ஆங்கிலம் சரிவர தெரியாதவர்கள் இதைப்பற்றி படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த கோரிக்கை

 27. அப்போ அவர்கள் எது வேண்டுமாலும் செய்யலாம், அதை இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எதிற்தால், அதனால் ஆ எஸ் எஸ் உள்ளே வருவார்கள் என்று கூறுவது, சரியாக படவில்லை.

 28. Vinavu
  you have correctly predicted the future . i agree your views. now what is happening is a very dangerous game . The platform has been layed for the religious extremist groups .. future looks very dark for TN.

  One chance of escape is there.. that is all moderate minorities should join hands with forward thinking people .. and have an alliance. otherwise we have to face a lot of religious extremists in TN. it is time to awake and join together and fight against all sorts of religious in tolerance .

 29. மிகச் சிறப்பானதொரு கட்டுரை. இசுலாமிய சகோதர்களே! உங்கள் மத உணர்விலிருந்து சற்று விடுபட்டு சிந்தியுங்கள், அப்போது புரியும், உங்கள் எதிர்ப்பின் அபத்தத்தையும், ஆபத்தையும். ‘விசுவரூபம்’ படத்தை திரை கிழிப்போம் நமது கூர்மையான விமர்சன ஆயுதத்தால். வினவு அதற்குரிய கருத்தியல் ஆயுதத்தை நிறையவே வழங்கியிருக்கிறது. தயவு செய்து ஆர்.எஸ்.எஸ் விரிக்கும் வலையில் விழ வேண்டாம்.

  இந்த படத்தின் மூலம் ‘இந்துக்கள்’ மனதில் உருவாகும் வெறுப்பை விடவும், முட்டாள்தனமான உங்கள் தற்போதைய தெருப்போராட்டம் அதிக வெறுப்பை ‘இந்துக்கள்’ மனதில் ஏற்படுத்தும். ஆர்.எஸ்.எஸை எதிர்க்கின்ற ஆற்றல் எந்தவொரு இசுலாமிய அமைப்பிடமும் இல்லை. மிகவும் சிரமப்பட்டு ஜனநாயக சக்திகள் ஆர்.எஸ்.எஸை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தி வரும் வேளையில் குதர்க்கத்துடன் செயல்பட்டு ஆர்.எஸ்.எஸை அம்பலப்படுத்தும் முயற்சியை மீண்டும் இருபது வருடத்திற்கு பின்னோக்கி இழுத்து விடாதீர்கள்.

 30. இந்தப் பதிவில் ஆச்சரியமான நிகழ்வுகளை காணமுடிகிறது. இதற்கு முன் வினவுடன் முரண்பட்ட பலர் வினவின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர். காரணம் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற ஒரு சொல் தான். ஆக அந்த பலரின் உள் மனதில் கனன்று கொண்டிருக்கும் இஸ்லாமிய வெறுப்புதான் இப்போது வினவின் பக்கம் பேச வைத்துள்ளது. ஏதேனும் ஒரு வகையில் இஸ்லாம் என்பதுடன் தீவிரவாதம் என்ற சொல் இணைந்திருக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். வினவும் அப்படி சொல்லிவிட்ட போது குதூகலம் அடைகிறார்கள். வினவும் அப்படி சொல்லிவிட்டது என்பது மற்றுமொரு ஆச்சர்யக் குறியீடு. நரேந்திர மோடி இருக்கும் பாஜகவினரை இந்துமத தீவிரவாதிகள் என்றோ, குஜராத் படுகொலை நடந்த சமயம் மத்திய அரசில் பங்குபெற்ற திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சியை இந்து தீவிவாத கட்சிகள் என்றோ, இன்றளவும் பல இந்து மத வெறியர்களை தண்டிக்காத நீதிபதிகளை இந்து மதவெறியர்கள் என்றோ ஏன் கமலைக் கூட இந்து மதவெறியன் என்றோ அடையாளமிட்டதில்லை. வினவில் இவர்களெல்லாம் பிழைப்புவாதிகளாகத்தான் அடையாளமிடப் படுகிறார்கள். இவ்வாறு சொல்வதற்காக என்னை, தாலிபான், ரிசானா மற்றும் ஷாபானு விவகாரத்தில் பீஜே போன்ற மதவெறியர்களின் நிலைப்பாட்டை ஆதரிப்பவனாக நினைத்துக் கொண்டால் அது என் தவறல்ல. என்னுடைய கேள்வியெல்லாம் ……..இதனாலே தமிழகத்தின் காமெடி பீசுகளாக இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமியத் தீவிரவாதிகளா? வினவிற்குள்ளும் அமெரிக்க ஆன்மா ஊடுருவிவிட்டதோ!

  • jayalalitha = fascist

   BJP/RSS/VHP= பார்ப்பன பாசிசம்

   பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
   https://www.vinavu.com/2008/10/20/btsouth/

   குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
   https://www.vinavu.com/2012/11/19/why-gujarat-elected-narendra-modi/

   ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
   https://www.vinavu.com/2011/01/09/saffron-terror-exposed/

   உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!
   https://www.vinavu.com/2009/10/01/unnai-pol-oruvan/

   குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
   https://www.vinavu.com/2010/08/17/hindu-terrorist/

   குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !
   https://www.vinavu.com/2008/09/04/orrissa/

  • கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
   https://www.vinavu.com/2011/09/14/modi-escapes/

   நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!
   https://www.vinavu.com/2010/06/09/brahmanical-judiciary/

   கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
   https://www.vinavu.com/2011/04/19/godhra-injustice/

   மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்! ஆனந்த் தெல்டும்டே!!
   https://www.vinavu.com/2012/11/19/why-gujarat-elected-narendra-modi/

   குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
   https://www.vinavu.com/2012/03/19/gurarat-carnage/

   • நாகராஜ் கட்டுரைகளின் பெரும்பாலான இடங்களில் இந்து மதவெறியர்கள், இந்துமதப் பாசம், இந்து மதவெறியன் என்றுதான் வருகிறது. ஆனால் இஸ்லாமியர்களின் எதிர்வினையைக் குறிக்கும் இடங்களிலெல்லாம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று அழுத்தமாக வினவு குறிப்பிடுகிறது.

    • ///நரேந்திர மோடி இருக்கும் பாஜகவினரை இந்துமத தீவிரவாதிகள் என்றோ, குஜராத் படுகொலை நடந்த சமயம் மத்திய அரசில் பங்குபெற்ற திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சியை இந்து தீவிவாத கட்சிகள் என்றோ, இன்றளவும் பல இந்து மத வெறியர்களை தண்டிக்காத நீதிபதிகளை இந்து மதவெறியர்கள் என்றோ ஏன் கமலைக் கூட இந்து மதவெறியன் என்றோ அடையாளமிட்டதில்லை. ///
     குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
     https://www.vinavu.com/2010/08/17/hindu-terrorist/

     குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !
     https://www.vinavu.com/2008/09/04/orrissa/
     ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
     https://www.vinavu.com/2011/01/09/saffron-terror-exposed/

  • //இதனாலே தமிழகத்தின் காமெடி பீசுகளாக இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமியத் தீவிரவாதிகளா?//

   ஐயா, யாரைக் காமெடி பீசு என்று கூறுகிறீர்கள்? இன்று அவர்களால்தானே இன்று இந்த படம் முடங்கிக் கிடக்கிறது? அப்படியெனில் அவர்கள் காமெடிப் பீசுகளா அல்லது கலவரக் கேசுகளா? தெளிவுபடுத்தவும்.

   • //ஐயா, யாரைக் காமெடி பீசு என்று கூறுகிறீர்கள்? இன்று அவர்களால்தானே இன்று இந்த படம் முடங்கிக் கிடக்கிறது? அப்படியெனில் அவர்கள் காமெடிப் பீசுகளா அல்லது கலவரக் கேசுகளா? தெளிவுபடுத்தவும்//

    ரிஷி, கிளிப்பிள்ளை போல பேசுகிறீர்களே. இந்தப் படம் இஸ்லாமிய அமைப்புகளால்தான் முடக்கப்பட்டது என்பதை ஒரு குழந்தையிடம் சொன்னால் கூட வாய் பொத்தி சிரிக்கும். இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை ஜெயா பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் உண்மை. இஸ்லாமிய அமைப்புகளுக்கு பயந்து ஜெயா. அரசு தடை போட்டு விட்டது என்பதெல்லாம் நகைப்புக்குரியது. அப்படியாயின் இந்நேரம் பீஜே போலீசின் குண்டாந்தடியினால் வீழ்த்தப்ப்ட்டிருப்பார். நேற்று மாலையே கமலும், இஸ்லமிய அமைப்புகளும் சுமூக முடிவிற்கு வந்துள்ளன. அதற்குப் பிறகும் மண்டபத்தில் எழுதிக்கொடுப்பதாக வினவு வலிந்து திணிக்குமேயானால் வினவை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும்.

    • இல்லை, அபு.

     //நேற்று மாலையே கமலும், இஸ்லமிய அமைப்புகளும் சுமூக முடிவிற்கு வந்துள்ளன. //

     இந்த நிகழ்வினை நானும் டிவியில் பார்த்தேன். பிரச்சினை தீர்ந்தால் சரிதான் என்றுதான் நினைத்தேன்.

     அதன்பின் இரவு தந்தி டிவியில் முஸ்லீம் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு பக்ருதீன் என்பவர் கலந்து கொண்டார். ராதாரவி பேசும்போது முஸ்லீம்களுடன் கமல் சமரசம் செய்து கொண்டுவிட்டார்.. இன்று மாலையே அது பற்றிய செய்தி வந்தது என்று குறிப்பிட்டார்.ஆனால் அதை பக்ருதீன் மறுத்தார். அது ஒரு காங்கிரஸ் எம்பியின் (ஆருண் எம்பி) உள்நுழைவு என்றும் அதெல்லாம் சமரசம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

     இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை ஜெயா பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.. அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள் என்றுதான் இக்கட்டுரையும் குறிப்பிடுகிறது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடையே கூட இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதும் புலப்படுகிறது.

     இந்தக்கட்டுரையும் கூட இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளைத்தான் தீவிரவாதிகள் எனக் குறிப்பிடுகிறதே ஒழிய அனைத்து முஸ்லீம்களையும், அமைப்புகளையும் அல்ல.

     //நேற்று மாலையே கமலும், இஸ்லமிய அமைப்புகளும் சுமூக முடிவிற்கு வந்துள்ளன. //

     மீண்டும் இந்த மேற்கோளையே எடுத்துக்கொள்கிறேன். இதில் குறிப்பிடும் இஸ்லாமிய அமைப்புகள் என்ற பொதுவான வார்த்தை யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறது என சொல்ல முடியுமா?

     • நேற்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் இந்தியன் முஸ்லீம் லீகைச் சேர்ந்த ஒருவர் (பெயர் தெரியவில்லை) இனி நடக்கும் நிகழ்வுகளுக்கு இஸ்லாமிய அமைப்புகளும் இஸ்லாமியர்களும் பொறுப்பல்ல என்பதனை நேரிடையாக தெளிவுபடுத்தியிருந்தார். மேலும், சர்ச்சைக்குரியதாக இஸ்லாமிய அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்ட காட்சிகளை நீக்குவதாக கமல் ஒத்துக் கொண்டுள்ளதால் அதன் பிறகு படம் வெளியாவதில் அவ்வமைப்புகளுக்கு ஆட்சேபனையில்லை என்று கூறியதாகவுமே செய்திகள் வாசிக்கப்பட்டன. இதன் காரணமாகவே இன்று ஜெயாவும் சட்டம் ஒழுங்கு என்ற சொத்தை வாதத்தை முன்னிலைப்படுத்தி இஸ்லாமியர்கள் வன்முறை செய்திருப்பார்கள் என்று இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாக சித்தரித்துக்கொண்டிருக்கிறார். அது இருக்கட்டும். மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததாக வினவு எழுதியது பொய்தானே. மேலும் வினவு மீதான எனது குற்றச்சாட்டு என்னவென்றால் வன்முறையில் ஈடுபடும் இரு பிரிவினரில் ஒருவரை மட்டும் தீவிரவாதிகள் எனவும் மற்றவரை மதவெறியரளாகவும் வினவு சித்தரிக்கிறது என்பதுதான். இங்கு ஆர் எஸ் எஸ்ஸின் மனசாட்சியை வினவும் பேசுகிறதா? தாலிபானை தீவிரவாதிகளாக (சொல்லவேண்டாம் என சொல்லவரவில்லை) சுலபமாக கடந்து செல்லும் வினவு விடுதலைப் புலிகளை (மக்களை கொன்ற கணக்கு இருக்கிறதா?) தீவிரவாதிகள் என எப்போதாவது கூறியிருக்கிறதா?

 31. இந்த படம் வரட்டும். கல்லூரியில், ‘இந்து’ மாணவர்களிடம் பேசுவோம். விவாதிப்போம். அவர்கள் தானே அதிகம் தியேட்டர் சென்று பார்ப்பவர்கள். வினவு தோழர்களுடன் இணைந்து அகமது ஜேன் போன்ற இசுலாமிய நண்பர்களும் வரட்டும். இசுலாமியர்களின் நியாயத்தை கம்யூநிஸ்ட்களை விடவும் நேர்மையாக முன்வைப்பவர்கள் எவரும் இருக்க முடியாது.

  ஜைனுலாப்தீன், ஜவாஹிருல்லா பிடியிலிருந்து வெளியே வாருங்கள். வினவின் முயற்சிக்கு இந்துக்களிடமிருந்து ஆதரவு மிக எளிதாக கிடைத்து விடும்; அதில் கவலையில்லை, உங்கள் ஆதரவும் கூட முறைப்படுத்தப்பட்டால் இந்துத்துவத்திற்கு தமிழகத்தில் கல்லறை கட்டலாம்.

  • இந்துத்துவத்திற்கு தமிழகத்தில் கல்லறை கட்டலாம் என்ற எண்ணம் உங்களிடம் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இசுலாமும் கிறித்தவமும் தொடரலாம் என்பதாகப்படுகின்ற உங்களின் கம்மியூனிசம் தனித்துவமானது. கால்மார்க்சு பாவம், இப்படியெல்லாம் கம்மியூனிச்டுகள் முளைப்பார்கள் என்று எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்.

   • இனியன்,
    வெறித்தனமான இந்துத்தவத்திற்கும், வெறித்தனமான முஸ்லீம் அடிப்படைவாதங்களுக்கும் கல்லறை கட்ட வேண்டும் என்பதுதான் சுகதேவ் குறிப்பிடுவது. அதனால்தான் //ஜைனுலாப்தீன், ஜவாஹிருல்லா பிடியிலிருந்து வெளியே வாருங்கள். // இவ்வாறு கூறுகிறார்.

    இந்து மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதை தடுக்கும் வகையிலான தீய சக்திகள் ஒழிக்கப்பட்டால்தான், பொருளாதார விடுதலையை நோக்கிய அடுத்த பயணத்தை துவங்க முடியும் என்பதும் சுகதேவ் வாதமாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்குப் புரியவில்லையா?

    • நீங்கள் கூறியதுதான் நோக்கமென்றால் எனது பின்னூட்டம் தவறானதே. மன்னிக்கவும்.

     என்னைப்பொறுத்தவரை எந்தவொரு மதமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதுமல்ல, 100% சரியானதுமல்ல. விமர்சனங்கள் நியாயமாக முன்வைக்கப்படவேண்டும், மதவெறி தவிர்த்து நடுநிலையாக விவாதிக்கப்படவேண்டும். எனது மதம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்று யாராவது கூறின் அவர்களை மதவெறி மூடர்கள் என்று அழைப்பதைத்தவிர வேறொன்றும் கூறமுடியாது.

 32. அரசியல் சூழ்ச்சிக்கு முஸ்லிம்கள் குர்பானி கொடுக்கப்பட்டனரா…?

 33. எல்லாவற்றுக்கும் ஆதாரம் வைத்துள்ளார்களாம் எதுய்யா அதாரம் afganishtan காரன் போய் அமெரிக்க மேல குண்ட போட்டானா, அவன் பாட்டுக்கு அவன் நாட்டுல இருக்கான் நீ பொய் அவமேல குண்ட போட்டா அவன் என்ன பூ செண்டு குடுத்து உன்னை வரவேர்பானா.இன்னொரு விஷயம் பின்லேடன் உன்னைவிட அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியா இருந்தான் அவன் கதி என்ன ஆச்சு

  • பெண்கள் படிக்கும் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு வைக்கிறார்கள்

   -இதை சாய்சில் விட்டுவிட்டீர்கள்

  • @Shahibsha
   Funny comment! How ignorant people are…Or religion is not letting people think.
   You have no clue about the regime in Afgan. Americans have done a favor to Afgan people.
   But that is not free.

 34. எங்கள் உறவுகளை உயிரோடு எரித்தீர்கள் ,தாயின் வயிறை கிழித்து குழந்தையை எடுத்தீர்கள், சொத்துக்களை அளித்தீர்கள் நங்கள் பொறுமை காத்தோம் , அனால் எங்கள் மார்க்கத்தை இழிவு படுத்தினால் நங்கள் போருதுகொள்ளமட்டோம் ஏனென்றால் அது எங்கள் உயிரை,செல்வத்தை விட மேலானது, என்றேனும்ஒருநாள் சாகத்தான் போகிறோம் அது எங்கள் மார்கத்திற்காக இருந்தால் அதை விட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை .

  • அப்படியே மார்க்கம் மார்க்கம் என்று கூவிக்கொண்டே உன் கழுத்தை வெட்டிவிடு, நிச்சயம் சொர்க்கத்திற்குப் போய்விடுவாய். அப்படியும் சொர்க்கம் கிடைக்காதுவிடின் என்னை வந்து பார்.

  • // என்றேனும்ஒருநாள் சாகத்தான் போகிறோம் அது எங்கள் மார்கத்திற்காக இருந்தால் அதை விட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை .//

   @Shahibsha முகமது நபியை இழிவுபடித்திய நபரை உங்கள் இறைத்தூதர் அவர்களை இழிவுபடுத்தினாரா அல்லது அவர்களை அன்பு செய்தாரா….. குரானில் அந்த பக்கத்தை மேற்கோள் காட்டி விளக்கவும்..

 35. our priority must be in agri lands becoming plots, 40% grains stored in government stores goes waste, many poor people dying without food Prices of foods goes beyond unreachable, Within ten yrs prices of the essential living things will go hgh. Nobody thinks about that, air, water, organic foods become polluted, foods becoming poison now, because of pesticide. this is wat we r passing to our next generation.India will become worthless live because of our fight.

 36. ஏற்கனவே மதத்தை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்தும் தலைவர்களின் செயலுக்கு துணை நின்று மேலும் தங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் செயல்கள் நியாயம்தான் என எண்ண வைக்கின்றனர்.

 37. ஒரு கட்டப்ன்சாயத்து பிரச்னை, சட்டம் ஒழுஙுகு மற்றும் மதகலவரமாக மாற்றப்பட உள்ளது! ஏற்கெனவெ அமெரிக்க தூதுவரக முற்றுகையினால் கேவலப்பட்ட தமிழக காவல் துறை, இப்பொது ஆளும் கட்சியின் கட்டைபன்சாயத்திற்கு துணை போகும் ஏவல் துறையானதே!

 38. உலக அளவில் முஸ்லிம்களின் தீவிரவாதம் என்பது அமெரிக்க நடத்தும் உலக அரசியல் .
  இந்திய அளவில் முஸ்லிம்களின் தீவிரவாதம் என்பது பாஜக நடத்தும் அரசியல் .
  இந்த அரசியல் விவகாரத்தை இப்போது கமல் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் .
  இப்போதுதான் அவருக்கு அரசியல் என்றால் என்ன என்பதையும் அந்த மற்றவர்களின் அரசியல் ஆதயத்திர்க்காக முஸ்லிம்கள் என்ன கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அந்த படத்தை அவராகவே திரும்ப பெற்றுக் கொள்வது அவரது மனிதாபிமானத்தை காட்டும்

  • கேவலம் எம்பி சீட்டுகளுக்காக தாமாத் இயக்கங்கள் அரசுக்கு அடிபடிந்துவிட்டன.. மதவாதிகளை கேள்வி கேட்டக முடியாமல் திணறும் பாவப்பட்ட S.Ibrahim

   பேய் ஆட்சி செய்தால் வேதங்களும் பிணம் தின்னுமோ.. என்ற பழமொழிக்கு அர்த்தம் இதுதானோ…

  • மதத்திடம் மூளையை அடகு வைத்துவிட்டு அல்லாவின் பெயரால்ன்னு சொல்லிக்கிட்டு குண்டு வச்சா, மட்டுனவன் மட்டும் இல்லாம மத்தவனும் பாதிக்க படத்தான் செய்வான். அதனால் முஸ்லிம் மக்கள் இந்த இஸ்லாமிய அமைப்புகளை புறம் தள்ளி விட்டு , முற்போக்கு – ஜனநாயக இயக்கங்களை துணை கொள்ள வேண்டும்.
   இப்ராஹிம் பாய்,
   முஸ்லிம்களுக்கு ஐந்தாவது கடமை யோடு ஆறாவது கடமையும் உண்டு என்று சொல்லும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று உண்டு தெரியுமா? அது என்ன கடமை என்று தெரியுமா.?

 39. இந்த கட்டுரையின் பின்னூட்டங்கள் தவறான பாதையில் செல்கின்றன.

  இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பிரச்சனை குரான் பற்றி மட்டும்தான், அவர்களுக்கு இங்குள்ள ஏழை இஸ்லாமியர்களை மோடி எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கொலை செய்து கொள்ளட்டும், ஆனால் குரானை மதித்தால் போதுமா?

  அமெரிக்க பயங்கரவாதம் சில பத்து லட்சம் இஸ்லாமியர்களை ஈராகிலும், ஆப்கானிலும் படுகொலை செய்து வருகிறது, அதற்கு சவுதி, துபாய், சார்ஜா, அபுதாபி போன்றவைகள் காட்டி கொடுக்கும், கூட்டி கொடுக்கும் வேலையை செய்கிறது.

  ஆனால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மோடியின் கொலைகள் பற்றியோ, அமெரிக்க,இஸ்ரேல் செய்யும் படுகொலை பற்றியோ வாய் திறக்காமல், குரானை பிடித்து தொங்கி கொண்டுள்ளனர்.

 40. இந்தக் கட்டுரையை அனைத்து வழிகளிலும் இயன்றவரை பரப்புங்கள் இஸ்லாம் மக்களே…அரசியல் சூழ்ச்சியில் இஸ்லாம் மக்களின் பரிதாப நிலைப்புரிகிறது. அல்லாகு அக்பர் என்றும் குர் ஆன் வசனஙகளை ஓதியும் கழுத்தை அறுப்பது எத்தனையோ வீடியோக்களை இணையத்தில் பார்க்கலம்… அதை படத்தில் காட்டினால் என்ன தவறு..

  விஜயகாந்த் எத்தனையோ பாக்.தீவிரவாதிகளை இஸ்லாம் மக்களை கேவலமாக திட்டியிருக்கார்.. அதற்கு ஒரு எதிர்ப்பு இதுவரையில்லையே…..

  • சகோதரர் கல்நெஞ்சம் அவர்களே தாங்கள் கேட்ட கேள்வி குர்ரான்னை படித்துவிட்டு இதுவரை யாரும் கொள்ளவில்லையா என்று கேட்கிறீர்கள்.இதற்கு என்னுடைய பதில் எனாக்கு தெரிந்த வகையில் இதுவரை யாரும் அவாறு செய்ததாக தெரியவில்லை . ஒரு வேளை அவாறு அவர்கள் அநியாயமாக கொலை செய்திருந்தால் .அது கண்டிப்பான முறையில் பெரும் தவறு பெரும் பெரும் பாவம் அவர்கள் நரகம் தான் செல்வார்கள் . நான் தங்களிடம் ஒன்று கூற விரும்போகிறேன் . தாங்கள் ஒருமுறை குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது . இதிலிருந்து தன்னகளுக்கு தெரியும் குர்ரான் யாரையும் கொள்ளசொல்வதில்லை என்று . உதாரனத்திற்க்கு. ஹிந்து மத வாதிகளில் சிலர் விபச்சாரத்திலும் பலமோசடிகளிலும் ஈடுபடுகின்றனர் அதற்காக தங்கள் அவர்கள் பகவத்கீதை என்ற வேதத்தை படித்துவிட்டு தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூற மாட்டீர்கள் . அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல் .அதற்க்கு மதம் பொறுப்பாகாது . என்றே கூறுவீர்கள் . எனவே இது தான் சரியான கருத்தும் கூட.
   எனவே சற்று சிந்தித்து பாருங்கள் .

 41. வினவு,

  சினிமா ரூபத்தில் தான் எந்த மாற்றமும் தமிழகத்தில்நடைபெற வேண்டும் போலிருக்கிறது.
  தமிழர்,தர்மபுரி,முல்லைபெரியார்,காவிரி,விவசாயிதற்கொலை,கூடஙுளம் அனைத்து தமிழனின் வாழ்வு சார்ந்த பிரச்சினையும் இந்த போலி அரசுகளால் என்ன தீர்வு காணப்பட்டது,ஒன்றும் இல்லை தானே!

  அதை போல தான் இதுவும்.கமல் ஒன்றும் உத்தமன் இல்லை.முசுலீம்கள் யாரும்நபிகள் இல்லை.
  வரட்டு சிந்தனை வாதத்தை தொடரவேண்டாம்.
  >>>>மெய்தேடி

 42. இது வினவு தளம் தானா? வினவின் கட்டுரை தானா? ஒரு நிமிடம் சவுக்கு தளமோ என்று தோன்றியது!

 43. ஒரு திரைப்படமோ, தொலைக்காட்சியோ, வானொலியோ, நாளிதழோ, விளம்பரங்களோ, சுவர் எழுத்துக்களோ, ஃபிளக்ஸ் போர்டுகளோ அவற்றின் மீதான கருத்துக்களை சம்மந்தப்பட்ட ஊடகங்கள் சந்திக்கிற வெகுமக்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லாது என்பது நாம் அறிந்ததாகும். ஒரு ஃபிளக்ஸ் போர்டு ஒரு நகரில் வாழும் இலட்சக்கணக்கான மக்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறது. ஆனால் அதன் மீதான நமது கருத்தை, நாம் சந்திக்கிற வெகு சிலரிடத்தில் மாத்திரமே கொண்டு செல்ல முடிகிறது.

  மேற்கண்ட ஊடகங்களின் வலிமையை நாம் சாதாரணமாக குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒருமுறை உலகறிந்த சமூக சிந்தனையாளர் அருந்ததிராய் அவர்களிடம் உள்நாட்டு பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எது? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, அவர் நீட்டி முழக்காமல், எளிமையாகச் சொன்ன பதில், “நடுத்தர மக்களின் பொதுப்புத்தி” என்பதுதான். அந்த நடுத்தர மக்களின் பொதுப்புத்தியை உருவாக்குகிற வேலையை மேற்கண்ட ஊடகங்கள் தான் உருவாக்குகின்றன என்பதும் மிகையாகாது.

  இத்தகைய வலிமையான ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு வழிப் பாதையாகத்தான் இருக்கின்றனவே தவிர, ஒரு சாதாரண குடிமகனின் கருத்தை சொல்ல வாய்ப்புகளை உருவாக்குகிற வெளியை மறுக்கின்றன. …………..

  – நீலவேந்தன்
  thanks
  keetru.com

 44. வினவில் வரும் கட்டுரைகள் வெறுப்புக் கட்டுரைகளாக மட்டுமே இருந்தது என்று நான் நினைத்த போது, இங்கே வருவதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் சமீபத்தில், கருத்துள்ள நிதானமான கட்டுரைகளைக் காண்கிறேன். வாழ்த்துக்கள்! இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களை சாடுவதற்கு பலர் உள்ளனர். அது தேவையும் கூட. ஆனால், இஸ்லாத்தில் உள்ள காட்டுமிராண்டித்தனமான மூடப் பழக்கங்களுக்கு எதிர்க்குரலே அனேகமாக இல்லை. கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்பத் திரும்பச்சொல்லும், மூளைச் சலவை செய்யப்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் அதை ஒரு வெற்றியாக நினைத்த்துக்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில், வினவின் நேர் கொண்ட பார்வையும், தைரியமும் மரியாதைக்குரியவை. நன்றிகள்!

 45. “நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு”.

  I also saw that debate. what keyar said was different from what you have mentioned here.

  I strongly condemn your misrepresentation and your conclusion.

  please you can see the debate again.

  keyar just said we majority were patient . no muslim representative were forzen by shock as you concluded. Indeed they augmented very well

  So your conclusion and misrepresentation is shocking

  Dont write something like Dinamalr

  • நியாஸ் “பெரும்பான்மையினர் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்” என்று சொல்வதன் பொருளே நாங்கள் நினைத்தால் தொலைத்து விடுவோம் என்பதுதானே, இது கூடவா தெரியவில்லை?

 46. ஜெயலலிதா ஆட்சியில் எதுவுமே நடக்கலாம். அந்த பேயின் சொந்த பிரச்சனையில் பகடைக்காய் முஸ்லிம்கள். இன்னும் உங்களை சகோதரர்களாக பார்ப்பது உங்கள் கைகளில்.. தயவு செய்து உங்களை நீங்களே தரம் தாழ்த வேண்டாம். இது ஒரு இன பிரச்னை அல்ல.

 47. ஒரு பலமிக்க மனிதன் ஒரு ஐந்து வயது சிறுவனை காட்டி இவன் என்னை அடிக்கிறான் எங்களை கொல்ல பார்கிறான் என்று கூச்சலி ட்டுக்கொண்டே அந்த சிறுவனை நாயடி பேயடி அடிக்கிறான். இப்படித்தான் உலகத்தில் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.அசுர பலம் பொருந்திய அமெரிக்க மற்றும் அதன் அடிவருடி நாடுகள் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மறைத்து தங்களின் பலம் வாய்ந்த மீடியாக்களால் அவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி அவர்களை உலகத்தின் விரோதியாக சித்தரிக்கின்றன. இஸ்ரேலை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் போராடினால் அவன் இஸ்லாமிய தீவிரவாதி. ஆக்கிரமிப்பு ரசியர்களை எதிர்த்து போராடினால் அவனும் இஸ்லாமிய பயங்கரவாதி . காஷ்மீரிகள் அவர்களின் நியாத்திற்கு போராடினால் அவனும் இஸ்லாமிய பயங்கரவாதி.அவன் எதிர்ப்பை காட்ட ஒரு குண்டு வெடித்தால் அவன் நாட்டில் கூட்டமாக சேர்ந்து கொத்து கொத்தாக குண்டுகளை வீசுகிறார்கள் .அவன் பத்து பேரை கொன்றால் இவன் ஆயிரம் பேரை கொல்கிறார்கள் . இஸ்லாமிய நாடுகளின் கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இராக்கில் அணுகுண்டுகள் இருக்கென்று கூறி (பண்ணிகளை போன்று) கூட்டமாக அந்நாட்டை தாக்கி
  2 லட்சம் மக்களை கொன்று குவித்து ஒரு இரும்பு குண்டை கூட எடுக்காமல் திரும்பியவர்களை எவனாவது கண்டித்தானா ? எவனாவது அதை படம் எடுத்தானா ? ஆனால் இங்கே அடிவாங்கி பரிதாபநிலையில் இருப்பவன் தான் வில்லன்.அநீதி இழைக்கப்பட்டவன் தான் அயோக்கியன்.இப்படித்தான் படம் எடுக்கிறார்கள். இது எப்படி முடிகிறது? அவர்களின் பலமான ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்படும் பிரசாரத்தினால் தான். தொலைக்காட்சி, பத்திரிகை, ஹாலிவுட் திரைப்படங்கள், இணையதளங்கள் என்று தொடர்ந்து செய்யப்படும் பிரசாரமே. இங்கு ஊடகத்தால் நியாயங்கள் புதைக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதேதான் நடக்கிறது. 5 வருடங்கள் முன்புவரை இந்தியாவில் குண்டு வைப்பவர்கள் இஸ்லாமியர்கள் தான் என்று இஸ்லாமியர்களே நம்பினார்கள். இன்று அநேக குண்டு வெடிப்புகள் காவிக்கூட்டத்தின் நயவஞ்சகத்தால் நடத்தப்பட்டிருக்கும் உண்மை வெளிவந்துவிட்டது. எந்த அமைப்பாவது கண்டித்தார்களா? அதை யாராவது படம் எடுத்தார்களா ?அந்த நியாயத்தை பற்றி எல்லாம் கண்டுக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளிருக்கும் மத வெறி. ஆனால் காட்டப்படுவது பாதிக்கப்பட்டவன் தான் மத வெறி பிடித்தவன் என்று. இன்று அப்படித்தான் விஸ்வரூப படப்பிரச்சனையில் மீடியாக்களில் முஸ்லீம்கள் சித்தரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்

  • நீங்க கேக்கும் கேள்விக்கு எவனும் பதில் சொல்ல மாட்டான் , நீங்க காட்டு கத்து கத்திகிட்டே இருக்க வேண்டியதுதான் .

 48. .அஸ்லாமு அலைக்கும்.
  திண்ணமாக அல்லாஹ் வினவு,கமல்,மனுஷ்ய புத்திரன் மற்றும் இன்னபிற காபிர்களை கடுமையாக தண்டிப்பான்.இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.அந்த அல்லாஹ் இதை பார்த்துகொண்டிருக்கிறான்

  • சகோதரர் ரஹீம் அவர்களே தாங்கள் இவ்வாறு அவர்களை கண்டிப்பது. பெரும் தவறு நீங்கள் இவ்வாறு கூறுவது அவர்களிடத்தில் இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.எனவே தங்கள் இனி இவ்வாறு கூறாதீர்கள்.

 49. படத்திற்கு மீண்டும் தடை விதித்திருப்பது ஏற்றுகோள்ள முடியாதது.இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கள். இந்த சதுரங்க ஆட்டத்தில் முஸ்லிம் மக்களின் “ஏக” பிரதிநிதிகளை பகடைக் காய்களாக பயன்படுத்தி பிழைப்பு நடத்த தமிழகஅரசு முயற்சிக்கின்றது. இவர்களும் நக்குகின்ற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன, என நக்கி பிழைப்பு நடத்துகிறார்கள். ஆட்டத்தின் வருணனையாளர்களாக சுப்பர்ஸ்டார், இயக்குனர் இமயம், சீமான், அமீர், “பெருந்தலைவர்” கலைஞர், சு. பாண்டியன் மற்றும் பலர் இருக்கின்றார்கள், இறுதியாக கப்டனும் வந்திருக்கிறார்.

  இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில் இவர்கள் கூறுவது போல் இஸ்லாமை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதும் இல்லை. படம் இடம் பெரும் சூழல் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவாகவும் இருக்கின்றது.

  உண்மையில் தலிபானின் ஷரியாத் ஆப்கானிஸ்தான் எப்படி இருந்தது? காலையில் எழுந்து அபின் சாப்பிட்டுவிட்டு, வீட்டில் இருக்கும் பொண்கள் மற்றும் சிறுமிகள் மீது பெரிய சாக்கு பையை எடுத்து தலையில் போர்த்தி, வீட்டின் மூலையில் விட்டு வீட்டை பெரிய பூட்டால் பூட்டி , கட்ட பஞ்சாயத்துக்கு சென்று புனித குரானையும், ஹதீஸையும் பார்த்து யார் யாரின் தலையை வெட்ட வோண்டும், யார் யாரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என தீர்ப்பு கூறி, எங்காவது பாடசலை திறந்திருந்தால் மாணவர்களை பிடித்து சவுக்கால் அடித்து விட்டு ,பாடசலைக்கு பெரிய வெடிகுண்டு வைத்துவிட்டு, பள்ளி சிறுமிகளை பிடித்துபோய் சாகபோகும் முல்லாவிடம் காசாக்கி கெண்டு தனக்கும் ஒண்றுடன் வீடு செல்வது தானே அவர்களுடைய சராசரி மார்க்க வாழக்கை. ஆனால் கமல் இந்த உண்மைகளை
  கூறாமல் வேறு ஏதே கூறுகிறார்.இதனை ஆப்கானிஸ்தானிய படங்களான
  OSAMA,KITE RUNNER போன்றவற்றில் ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய இயக்குனர்கள் சிறப்பாக கூறுகிறார்கள்.

  படத்தில் ஒரு காட்சி வருகின்றது, அமெரிக்க பணய கைதியின் தலையை வெட்டி கொல்வது போன்று, புனித திருகுரான் வாசிக்கப்பட்டு கலால் (Halal)செய்து தலையை வெட்டுகிறார்கள், இது போன்ற காட்சிகள் அல் குவைதா இணையத்தில் நிறைய உண்டு.

  இன்னும் ஒரு காட்சியில் (செய்யாத) குற்றத்திற்காக தூக்கிலிடுவது போன்று காட்சி வருகிறது.ரிசானாவுக்கு சவுதி அரேபியா செய்தது மாதிரி புனித திருகுரான் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. ஷரியாத் சரியாக பின்பற்றப்படுகிறது. இதில் என்ன தவறு?

  இந்த மரண தண்டனை காட்சிக்காக இஸ்லாமியர்கள் யாரும் கமலை கண்டிக்க முடியாது. இதை கண்டித்தால் அது அல்லாவின் தேசமான சவுதியை அரேபியாவை அவமதிப்பதாகும்.

  • சவுதி விவகாரம்தான் ஊரெங்கும் நாறுதே…உண்மை எப்பவும் சுடத்தான் செய்யும்.அதான் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

  • அப்கானிஸ்தான் போய் பார்த்த மாறி நல்ல ரீல் உடுற தம்பி. சரி எப்படியோ இருந்துட்டு போகட்டும் தாலிபான்கள் தீவீர்வதிகளாக மீடியா உலக மக்கள் மனதில் பதித்து விட்டது. அதை ஏன் தம்பி கமல் படமாக வேண்டும் . தமிழ் நாட்டில் பெரும்பாலன் மக்கள் ஆப்கைச்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவர்கள் இப்படத்தை பார்த்தல் கூட பழகும் இஸ்லாமியரை கூட தீவிரவாதியாக பார்க்கும் எண்ணம் தான் உருவாகும்.

   • படம் பார்த்தால் தான் அந்த எண்ணம் வருமா. தினமும் டி.வி யில காண்பிக்கிறங்களே அப்ப வராதா. பாகிஸ்தானில் தினமும் குண்டு வைத்து மக்கள் இறக்கிறார்களே. அதெல்லாம் யார் செய்கிறார்கள். இந்திய ராணுவத்தினரின் தலையை வெட்டியது யார்?

 50. அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! அல்லாஹ் அறிந்தவன்; செவியுறுபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! -2:244

  உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். -2:216

  இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம் -4:74

  நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது. -4:76

  அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர் கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! -4:89

  நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்கள் மற்றும் உயிர்களால் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான் -4:95, 96

  மறுப்போரின் உள்ளங் களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! 8:12

  கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! -8:39

  எனவே போரில் அவர்களை நீர் வெற்றி கொண்டால் அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களுடன் அவர்களை யும் ஓட ஓட விரட்டுவீராக! அப்போது தான் அவர்கள் பாடம் கற்பார்கள். -8:57

  இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! -9:5

  அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர் களைத் தண்டிப்பான். அவர்களை இழிவு படுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான். -9:14

  நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர், அல்லாஹ்விடம் மகத்தான பதவிக்குரியவர் கள். -9:20

  அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! -9:29

  ‘மஸீஹ் அல்லாஹ்வின் மகன்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். -9:30

  குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! -9:41

  மாறாக இத்தூதரும், (முஹம்மதும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுகின்றனர். அவர்களுக்கே நன்மைகள் உண்டு. அவர்களே வெற்றி பெற்றோர். -9:89

  நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் (இறை) மறுப்போருடன் போரிடுங்கள்! உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். -9:123

  முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர் -48:29

  தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான் -61:4

  Can anyone prove these verses are not violent and spread peace in society? Are you not ashamed to call this as your “holy book”? What Kamal taken is wrong? Are they not reading Koran while cutting heads? Stop the stupidity of your stone age religion.

  • இருங்க பாஸ் பி ஜே தள இணைப்பை கொடுத்து ஹோம் வொர்க் செய்ய சொல்வார்கள்.அல்லது நேரில் விவாதிக்க வா என அழைப்பர்கள் வேறு பதில் இருக்க வாய்ப்பில்லை

  • Stop the ‘out of context’ bull shitting man. Fighting those who fight you, is the very normal rule every country follows in the world you live in. Why the hell India is spending billions in military infrastructure every year? To give food to the children of China and Bangladesh or what? What would you say if all the people around world cries directly or indirectly, “All Indians are barbaric killers. Their soldiers are shooting every body crossing border from china and pakistan. Its because of their violent nature or their vedas etc”. You are going to appreciate them by saying Oh! yes they are barbaric the whole indan community should be banished.

   Whats happening in afganisthan is a war between two countries? You were never there or Kamal was never there to tell the real situation. What Kamal (vomits)throws up is just whats fed into media by US.

   Why the heck Indian muslims should be asked to prove themselves as clean of US interpretation(for their war in Afghan) of Islam and Quran, by showing it in an indian cinema? Are you not brain washed to believe whatever shown in TV, without even questioning a dot, thats run by one side of the warring countries? Are you not going to be the one who’ll justify riots, killings and rapes of muslims as in gujarat after watching these kind of movies?

   So you are saying a ‘Holy Book’ should say “go show your neck/… and get killed when those who hate you and your holy book plot together to kill you and rape your daughters”? Thats the stone age you want people to go?

   • //‘மஸீஹ் அல்லாஹ்வின் மகன்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். -9:30//

    ithu entha porin pothu sonnathu? ungal nambikkai ennavaga vendumaanalum irukkattum. neengal eppadi aduthavargal nambikkaiyai azhippaan ozhippaannu solla mudiyum? nalaikku nanum oru mathaththai niruvi athula muslimgalai billa ozhippaanu sonna ungalukku kovam varathu? ithu pira mathathinarin manathai punpaduthaatha? kurnai thadai panniralama?

    • தோழரே! கமல் ஆப்கானில் நடப்பதை காட்டுவதில் தவறில்லை என்று நீங்கள் சொன்னதால், தலைப்பிற்கு ஓரளவாவது அதில் சம்பந்தம் இருந்ததால் உங்கள் கருத்துக்கு எனது பதில் கருத்தை சொன்னேன். நீங்கள் மீண்டும் ஒரு கேள்வி கேட்கிறீர்கள், தலைப்பிற்கு அதிக சம்பந்தமில்லாமல்.

     லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துவிட்டு அதற்க்கு வக்காலத்து வாங்க ஒரு சிறு வீடியோ கிளிப்பிங்(யாராவது அரபியில் பேசிகொண்டு யாரையாவது கழுத்தை அறுப்பார்கள் ) ஐ பரப்பும் அமெரிக்க மற்றும் ஆயிரக்கணக்கில் மக்களை கூட்டம் கூட்டமாக சேர்ந்து எரித்தும், குத்தியும், குதறியும், கற்பழித்தும் கொன்ற இந்து வெறியர்களின், ஊடக பரப்புரையின் தாக்கம் தான் உங்கள் கருத்துகளில் தெரிகிறது.

     இங்கு கருத்து பரிமாறும் யாரும் ஒரு போரை கண்டதுமில்லை அதனருகில் இருந்து அதன் வலிகளை உணர்ந்ததுமில்லை. ஆயினும் எப்படி நாம் சப்பை கட்டு கட்டி நேரில் பார்க்காத ஒன்றிற்காக 150 கோடி