privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!

ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!

-

டந்த ஆண்டு டிசம்பரில் தனது உடன்பிறவா சகோதரியும் அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் அதிகாரிகளைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

சசிகலா கும்பல் போயசு தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருப்பது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம் என்று சித்தரிக்கும் சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், இதற்கு ஜெயலலிதா மக்களிடம் விளக்கம் தர வேண்டும் என்று கோருகிறார். திருவாளர் ராமகிருஷ்ணன் சித்தரிப்பது போல, இது அ.தி.மு.க.வின் அற்பமான உட்கட்சி விவகாரமல்ல. இது ஆட்சியதிகாரம் சம்பந்தப்பட்ட, சட்டத்துக்குப் புறம்பாகத் தனது பினாமி கும்பலைக் கொண்டு அரசு எந்திரத்தை ஜெயலலிதா ஆட்டிப்படைத்த விவகாரம்.

ஜெயா - ச்சி - சோ : அதிகாரச் சூதாட்டம்கட்சியில் யாரை அமைச்சராக்குவது, யாரை நீக்குவது என்பது மட்டுமின்றி, எந்தெந்த போலீசு மற்றும் அரசு அதிகாரிகளை எங்கே, எந்தத் துறையில் நியமனம் செய்வது, இடமாற்றம்  செய்வது  என அனைத்தையும் செயல்படுத்துவது வரை, ஜெயலலிதாவின் கண்ணும் காதும் மூக்கும் மூளையுமாக அவரது பினாமியாக சசிகலா கும்பல் இயங்கி வந்தது. சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமாக, யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்படாத அதிகாரமாக இருந்த ஜெயாவின் பினாமியான இந்த கும்பலே ஆட்சியை நடந்தி வந்தது.

ஜெயலலிதா-சசிகலா
ஆடம்பர உல்லாச சொகுசு வாழ்க்கையில் ஊறித்திளைக்கும் ஜெயலலிதாவின் பினாமி சசிகலாவும் பினாமியின் எஜமானி ஜெயலலிதாவும்

ஜெயாவுக்காக இக்கும்பலிடம் கப்பம் கட்டி கடாட்சம் பெற்றதால்தான் அமைச்சர்களாகவும் அரசின் முக்கிய பொறுப்பு வகிக்கும் அதிகாரிகளாகவும் நியமனம் பெற முடியும். அதிகார போதையிலும், ஆடம்பர உல்லாச சொகுசு வாழ்க்கையிலும், இலஞ்ச  ஊழல், சொத்து சுகத்திலும் மூழ்கிக்கிடந்த ஜெயா, தன்சார்பாக இக்கும்பல் மூலம் நிர்வாகத்தை நடத்தி வந்தார். அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவதும், பெருமுதலாளிகளிடம் பேரம் நடத்துவதும், கோடிகோடியாகக் கொள்ளையடிப்பதும், கொள்ளையடித்த சொத்துக்களை தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஜெயாவின் பினாமி சொத்தாகப் பதுக்கிவைப்பதுமாக அனைத்தையும் சசிகலா கும்பல்தான் கவனித்துக் கொண்டது. இத்திருப்பணியின் மூலம் இக்கும்பல் தனது பங்குக்கும் சொத்துக்களைக் குவித்துக் கொண்டது.

இவையெல்லாம் ஜெயாவுக்குத் தெரியாமல் நடக்கவில்லை. அனைத்தும் தெரிந்தேதான், அவரது ஒப்புதலுடன்  உத்தரவுப்படிதான் நடந்துள்ளது. “உடன்பிறவா சகோதரி’’, “தியாகி” என்றெல்லாம் புகழ்ந்து சசிகலா கும்பலை வளர்த்துவிட்டதே ஜெயலலிதாதான். பதவியேற்பின்போது சட்டவிரோதமாக சட்டமன்றத்திலேயே துணை அவைத்தலைவர் இருக்கையில் சசிகலாவை அவர் அமர்த்திக் கொண்டார். சசிகலாவை அ.தி.மு.க.வினர்  “சின்னம்மா” என்று அழைக்குமளவுக்கு போயசு தோட்ட மாளிகையில் மட்டுமின்றி, கட்சிக் கூட்டங்களிலும், தேர்தல் பிரச்சாரத்திலும், மகாமகத்தில் குளிக்கும்போதும் அவர் சசிகலாவை அருகிலேயே வைத்துக் கொண்டு அவருக்கு உயர் அதிகார முக்கியத்துவம் அளித்தார். சின்னம்மா சொன்னால் காரியம் நடக்கும், ஜெயலலிதாவின் மறுஅவதாரம்தான் சசிகலா என்பதாகியது. தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகளை சசிகலா கும்பலைச் சேர்ந்த ராவணன், ராமச்சந்திரன் முதலானோர்தான் நடத்தினர். இறுதியில், உடன்பாடு ஏற்பட்டு ஒப்பந்தமாகும்போது கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்குப் பூங்கொத்து கொடுப்பதுபோல ஜெயா போட்டோவுக்கு போஸ் கொடுத்து வந்தார்.

நேற்றுவரை கருணாநிதியின் குடும்ப ஆட்சியைச் சாடி பிரச்சாரம் செய்துவந்த பார்ப்பன ஊடகங்கள் இப்போது சசிகலா கும்பலை ஜெயா வெளியேற்றியதும், இதுநாள்வரை ஜெயா ஆட்சியில் மன்னார்குடி மாஃபியா எனப்படும் சசி குடும்பத்தின் நிர்வாகத் தலையீடு இருந்ததாக எழுதுகின்றன. அவ்வாறு தலையீடு செய்ய அதிகாரமளித்தது யார்? யார் அந்தக் கும்பலை ஊட்டி வளர்த்தார்கள்? எப்படி இந்தக் கும்பலால் ஆட்டம் போட முடிந்தது? என்ற விவகாரத்திற்குள் இவை நுழைவதில்லை. இந்த பினாமி கும்பலின் எஜமானிதான் ஜெயா. இப்படி, தானே சட்டத்துக்குப் புறம்பாகத் தனது பினாமியாக சசிகலா கும்பலை வளர்த்துவிட்டு, இப்போது எதுவும் தெரியாதது போல ஜெயலலிதா நாடகமாடுகிறார். இத்தனை காலமும் தனது பினாமி கும்பலைக் கொண்டு ஆட்சியை நடத்திவந்துள்ள ஜெயா, முதல்வர் பதவியில் நீடிக்க அருகதையில்லை என்று இந்த ஊடகங்கள் சாடுவதில்லை. சசிகலா கும்பலை உருவாக்கி வளர்த்துவிட்ட குற்றவாளியான ஜெயாவை எதிர்த்து வாய்திறப்பதுமில்லை.

ஜெயா - ச்சி - சோ : அதிகாரச் சூதாட்டம்அதற்கு மாறாக, 25 ஆண்டு காலம் தன்னுடன் இருந்த தோழியைப் பிரிவதால், உணர்வு ரீதியான கொந்தளிப்புகள் இருந்தாலும், அதனைச் சகித்துக் கொண்டு தமிழக மக்களின் நலனையே அவர் முன்னிறுத்திப் பாடுபடுகிறார் என்று ஜெயலலிதாவை மாபெரும் தியாகியைப் போலச் சித்தரிக்கின்றன.  சசிகலா கும்பலின் ஊழலும் கொள்ளையும் பற்றி ஜெயலிலிதாவின் கவனத்துக்குப் போயிருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்காது என்றும்,  நம்பிக்கைத் துரோகத்துக்காக சசிகலா கும்பல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும், கோடிகோடியாகக் கொள்ளையடித்து அதை சசிகலா கும்பல் மட்டுமே தூக்கிக் கொண்டு ஓடியது போலவும் கதையளக்கின்றன.  இக்கும்பலை வளர்த்து ஆதாயமடைந்துள்ள முதன்மைக் குற்றவாளியான ஜெயாவை இக்குற்றங்களிலிருந்து விடுவித்து, அவரைப் புனிதமானவராகக் காட்டி ஒளிவட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன. பார்ப்பன ஊடகங்கள் சித்தரிப்பது போல, ஜெயாவுடனிருந்து கொண்டு நைச்சியமாக அவருக்குத் தெரியாமல், அவரை ஏமாற்றிவிட்டு இந்தக் கும்பல் ஊழல் கொள்ளையில் ஈடுபடவில்லை. பினாமி என்ற முறையில் ஜெயாவால் நியமிக்கப்பட்டு, அவரது ஆசியுடன் ஒப்பதலுடன்தான் அது ஊழல்  ‘கொள்ளை’   அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது.

கீழ்நிலை ஊழியர்களைக் கொண்டு அரசு அதிகாரிகளும் போலீசு அதிகாரிகளும் இலஞ்ச ஊழலில் ஊறித் திளைப்பதைப் போலத்தான், ஜெயலலிதாவும் தனது பினாமியான சசிகலா கும்பல் மூலம் ஊழல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். பங்கு போடுவதில் பிரச்சினை வரும்போதும் அல்லது அம்பலப்படும்போதும் தான் குற்றவாளி அல்ல என்று கீழ்நிலை ஊழியரை உயரதிகாரிகள் பலிகிடாவாக்குவதைப் போலத்தான், பங்கு போடுவதில் பிரச்சினை வந்ததும், தன்னை அப்பாவியாகக் காட்டிக்கொண்டு, பினாமி பணத்தையும் சொத்தையும் மீட்பதற்காகவும், பழிவாங்கவும் போலீசையும் உளவுத்துறையையும் ஜெயலலிதா ஏவிவிடுகிறார்.

இதுநாள்வரை சசிகலா கும்பல் மூலம் பலன்களைப் பங்கு போட்டுக் கொண்ட ஜெயலலிதா,  சசிகலா கும்பலை வெளியேற்றியதும் இப்போது தன்னையே நீதிபதியாகவும் விசாரணை அதிகாரியாகவும் நியமித்துக் கொண்டு நில அபகரிப்பு, நிதிமோசடி முதலான குற்றங்களில் ஈடுபட்டதாக சசிகலாவின் நெருங்கிய உறவினர்கள் மீது போலீசை ஏவி நடவடிக்கை எடுக்கக் கிளம்பியுள்ளார். ஆனால், கோடநாடு எஸ்டேட் போன்றவற்றில் ஜெயாவும் சசிலாவும் வெளிப்படையாகவே பங்குதாரர்களாக இருப்பதுபோல,   இத்தகைய எல்லா குற்றங்களிலும் ஜெயாவுக்கும் பங்கு உள்ளது. முன்பு வளர்ப்பு மகன் சுதாகரன் மீது, ஜெயாவின் போயசுத் தோட்டப் புதையலைக் கைப்பற்றுவதற்காக போதை மருந்து வழக்கு போடப்பட்டதைப் போலவே,  இப்போது இம்மாதிரியான காரியங்களுக்குச்  சட்டவிரோதமாக போலீசும் உளவுத்துறையும் ஜெயாவினால் ஏவிவிடப்படுகிறது.

இப்படி போலீசை சட்டவிரோதமாக ஜெயா பயன்படுத்துவதைப் பற்றி பார்ப்பன ஊடகங்கள்  ஏன் கேள்வி எழுப்புவதில்லை? அண்ணா ஹசாரேவின் பின்னால் ஊழலை ஒழிக்க அணிதிரளச் சொல்லும் ‘அறிஞர்’களுக்கும் ஊடகங்களுக்கும், ஜெயாவின் பினாமி அதிகாரமாக இயங்கிய சசிகலா கும்பலும், அக்கும்பலை ஊட்டி வளர்த்து இலஞ்ச ஊழல்அதிகார முறைகேடுகளில் ஈடுபட்ட கிரிமினல் குற்றவாளி ஜெயாவும்  கண்ணில் படாமல் போனது ஏன்?  இது சட்டவிரோதமானது என்று ஏன் இந்த ‘அறிவாளி’களுக்குத் தெரிவதில்லை?

அதிகாரத் தரகரான நீரா ராடியாவும் தரகுப் பெருமுதலாளி டாடாவும் ஆ.ராசாவைத் தொலைத்தொடர்பு அமைச்சராக்க “லாபி” செய்ததையும், அமைச்சர்களின் நியமனம் மற்றும் அமைச்சரவையின் உருவாக்கத்தில் கார்ப்பரேட் முதலாளிகளும் அதிகாரத் தரகர்களும் நேரடியாகத் தலையிடுவதையும் ராடியா டேப்புகள் அம்பலப்படுத்திக் காட்டின. சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமாக இவர்கள் செயல்பட்டதைச் சாடியும், அமைச்சர் ராசா பதவி விலக வேண்டும் என்றும் அப்போது பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.வும் சோவும், அதேபோன்று சட்டத்துக்குப் புறம்பான தனது பினாமி கும்பலை வைத்துக்கொண்டு ஆட்சி நடத்திய ஜெயாவைப் பற்றி வாய்திறப்பதில்லை.

பெங்களூருவில் நடந்துவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்து, ஒருவேளை பதவியிழக்க வேண்டியிருந்தாலோ, அல்லது சிறைக்கு அனுப்பப்பட்டாலோ, ஆட்சியில் நீடிப்பதற்காகத் தனது விசுவாசியும் ஏற்கெனவே வாஜ்பேயி அரசில் சட்ட அமைச்சராக இருந்தவருமான தம்பிதுரையைத் தற்காலிக முதல்வராக்குவது என்கிற திட்டம் ஜெயாவிடம் இருந்தது. மறுபுறம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டால், கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, தமது விசுவாசிகளில் ஒருவரை முதல்வராக்க  சசிகலாவும், அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களும் சதியாலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்துள்ளன.

ராஜகுரு ராமஸ்வாமி அய்யரிடம் ஆசி
ராஜகுரு ராமஸ்வாமி அய்யரிடம் ஆசி

சு.சாமி, துக்ளக் சோ, மறைந்த முன்னாள் அரசுத் தலைவர் வெங்கட்ராமன் முதலானோரைக் கொண்ட பார்ப்பன கும்பல், சசிகலா கும்பலிடமிருந்து ஜெயாவை மீட்க அக்கும்பலுடன் ஏற்கெனவே நீண்டகாலமாக அதிகாரச் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளது. சசிகலா கும்பலின் சதியாலோசனை பற்றி உளவுத்துறை மூலம் ஜெயாவின் கவனத்துக்கு வந்ததாலும், மகாமகப் படுகொலை காலத்திலிருந்தே பினாமி அதிகாரத்துக்காக சசிகலா கும்பலுடன் போட்டி போட்டு வந்த பார்ப்பன கும்பல் இத்தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயாவை எச்சரித்ததாலும், சசிகலா கும்பலை ஜெயா வெளியேற்ற வேண்டியதாயிற்று. சசிகலா கும்பலுக்குப் பதிலாக, இப்போது அந்த இடத்துக்கு வந்துள்ள பார்ப்பன கும்பல் வேகமாகக் காய்களை நகர்த்தவும் தொடங்கி விட்டது. தன்னை வெளியிலிருந்து பார்த்து விமர்சிப்பவராகக் காட்டிக் கொள்ளும் சோ, கடந்த ஜனவரி 14 அன்று நடந்த துக்ளக் வார இதழின் 42வது ஆண்டுவிழாக் கூட்டத்துக்கு இந்துவெறி பயங்கரவாத மோடியையும் அத்வானியையும் அழைத்துவந்து ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளார்.

சசிகலா நீக்கத்துக்குப் பிறகு, மயக்கத்திலிருந்து ஜெயா தெளிந்துவிட்டார் என்றும்,  கட்சியையும் ஆட்சியையும் புதிய பாதையில் செலுத்த நிர்வாகத்திறன்மிக்க ஜெயலலிதா புறப்பட்டுவிட்டார் என்றும் அதிகாரச் சூதாட்டத்தில் வெற்றி பெற்றுள்ள பார்ப்பன கும்பலின் ஊடகங்கள் ஜெயாவுக்குப் புகழாரம் சூட்டி வருகின்றன. ஆனால், போலீசை ஏவி அச்சுறுத்துவதைத் தவிர, நிர்வாகத் திறனற்ற ஜெயலலிதாவுக்கு இத்தகைய பினாமி கும்பல்களின் கொட்டத்தை கட்டுப்படுத்தவும் தெரியாது; ருசி கண்ட பூனையாக உள்ள இத்தகைய கும்பல்களைக் கட்டுப்படுத்திவிடவும் முடியாது. ஜெயலலிதாவின் பினாமியான சசிகலா கும்பல் மீதும், அப்பினாமி கும்பலைக் கொண்டு ஊழல்கொள்ளையில் ஈடுபட்ட ஜெயலலிதாவின் மீதும் பகிரங்கமாக முழுமையான விசாரணை நடத்தி, அக்கும்பல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, உழைக்கும் மக்கள் தமது போராட்டத்தின் மூலம் குற்றவாளியான ஜெயாவைத் தண்டிப்பதுதான், இத்தகைய பினாமி கும்பல்களையும் அதன் மூலம் ஊழல் கொள்ளை, அதிகார முறைகேடுகளில் ஈடுபடும் ஆட்சியாளர்களையும் முடமாக்கும்.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

 1. எம்ஜியாரின் மக்கள் தொண்டு நிர்வாகத் திறமை தொலைநோக்கு பார்வை இவற்றால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்து அவரால் நெறிமுறைப்படுத்தப்பட்ட ஒரு பண்பட்ட தலைவியை அவர் பார்வைக்கு வராத சில தவறுகளை காரணம் சொல்லி, தனக்கென்று ஒரு குடும்பம் இன்றி தமிழக முன்னேற்றத்திற்க்காக தன்னலம் பார்க்காமல் உழைக்கும் ஜெயலலிதாவை அவர் தந்த கருத்து சுதந்திரத்தையே வைத்து இப்படி கேவலமாக விமர்சிப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கது

 2. எவ்வளவு காட்டுக் கத்தல் கத்தினாலும் நாங்கள் நம்பப்போவதில்லை. ஏனென்றால் நூல் இல்லாமல் பம்பரம் சுற்றுகிறது என்று சொன்னாலும் நம்பும் மட சாம்பிராணி தமிழ் மக்களல்லவா நாங்கள்.

 3. அதிகபட்ச உல்லாசத்தோடு உற்சாகமாக மிகவும் பகட்டாக எல்லா வசதிகளோடும் ஒரு மனிதன் தன் குடும்பத்தோடு வாழ எத்தனை ரூபாய்கள் மக்களின் வரிப்பணம் செலவாகும்? அதை அப்படியே அள்ளி முதல்வர் மற்றும் மந்திரிகளுக்கு முதலிலேயே கொடுத்து விட்டால் அப்புறம் அவர்கள் மக்களுக்காக நேர்மையாக உழைக்க ஆரம்பித்து விடுவார்கள்,வறுமையை ஒழிக்க நாடு முன்னேற பல திட்டங்கள் போடுவார்கள் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.மாற்று கருத்து இருப்பின்…..

 4. மகாமகத்தில் குளிக்கும் போது ஆரம்பித்து சட்டசபை துணை அவைத்தலைவர் பொறுப்பு கொடுக்கும் வரை (அதாவது சமையல் அறையில் ஆரம்பித்து, படுக்கையரை வரை கூடவே இருந்துருங்காங்க) எல்லாமே தெரியாமயும் கவனத்துக்கு வராமலும்தான் செய்தாங்கலாம்.

 5. அதே சோ ஜெயின் ஆட்சியை கவிழ்த்து கருணாநிதி மூப்பனார் ரஜினி கூட்டணி ஆட்சி ஏற்படுத்திய போது அவர் பார்பனர் இல்லையா ?
  அதே சுபிரமனியம் சாமி ஜெயின் ஆட்சியை எதிர்த்து வழக்குகள் தொடர்ந்த போது அவர் பார்பனர் இல்லையா ?

  பார்பன பூச்சாண்டி காட்டி மக்களை இன்னும் எத்துனை காலத்திற்குத்தான் ஏமாற்றுவீர்கள்?

  பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை குளிர்வித்து வோட்டு பொறுக்கும் தந்திரமே இந்த வினவு குள்ள நரியின் செய்தி

 6. ஜெயாவுடனிருந்து கொண்டு நைச்சியமாக அவருக்குத் தெரியாமல், அவரை ஏமாற்றிவிட்டு இந்தக் கும்பல் ஊழல் கொள்ளையில் ஈடுபடவில்லை. பினாமி என்ற முறையில் ஜெயாவால் நியமிக்கப்பட்டு, அவரது ஆசியுடன் ஒப்பதலுடன்தான் அது ஊழல் ‘கொள்ளை’ அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு வந்தது.

 7. வெண்ணிற ஆடை நிர்மலாவோ அல்லது லதாவோ நம் மாநில முதல் அமைச்சர் ஆகியிருந்தால் இவ்வளவு மோசமான நிலைமை ஆகி இருக்காது.அவர்கள் இருவரும் பிரபல நட்சத்திர அந்தஸ்தில் இருந்த போது அவர்களை பற்றி பல நல்ல விஷயங்களை பத்திரிக்கையில் படித்திருக்கிறேன்.மேலும் இருவரும் அரசியலில் கால் பதித்த போது பல இடைஞ்சல்களை இன்றைய முதல்வர் அவர்களுக்கு வேண்டியவர்கள் இவருக்கே தெரியாமல் செய்தார்கள்.

  • கழுதை விட்டையில் முன் விட்டை என்ன பின் விட்டை என்ன.எம்.ஜி ஆர்.என்ற முட்டாள் அரசியல் கோமாளியின் கதாநாயகிகள்ங்கிறத தவுர இந்த மூணு அம்மணிகளுக்கு முதல்வரா வர்றதுக்கு என்ன தகுதி இருக்கு.

 8. வெண்ணிற ஆடை வேஸ்ட்…லதா தமிழ் மக்கள் மீது ஆழ்ந்த அன்பு கொண்டவர்.திருநாவுக்கரசருடன் எங்கள் ஊருக்கு பிரசாரம் செய்ய வந்த போது பார்த்திருக்கிறேன்.அவர் பேச்சில் ஒரு அரசியல் தெளிவு ஆழ்ந்த ஆங்கில புலமை மாநில மத்திய அரசியல் பற்றி மட்டும் அல்ல சிறந்த வெளியுறவு கொள்கைகளையும் அறிய முடிந்தது.நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் கடுமையான முடிவுகளை யாருக்கும் பயப்படாமல் எடுக்கக்கூடிய துணிவும் உள்ளவர்.குஷ்பூவுக்கும் இது பொருந்தும்சிறந்த ஆங்கில புலமை உள்ளவர் மனதில் சரியென்று படுவதை தைரியமாக சொல்லக்கூடியவர்.எழுதி வைத்ததை பார்த்து படிக்காமல் தூய தமிழில் நீண்ட நேரம் மக்களுக்கு புரியும் படி கருத்துக்களை சொல்லக்கூடியவர்.

 9. ஜெயாவைப் பற்றி இன்னும் உங்களுக்கு உண்மை தெரியவில்லை.அவர் இந்த சோவுக்கும் மோடிக்கும் பெப்பே காட்டும் சமயம் வரும்.சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாகும் வரை சசியுடன் முற்றிலும் தொடர்பு அற்றவராக தனது நடிப்பை தொடர்வார்..இதை தோழியும் அறிவார்.சசியை வெளியேற்றியதும் ஜெயாவை நம்பி சொத்து குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆச்சார்யாவை நீக்கியாகிவிட்டது. அவரும் வெளிப்படையாகவே பேட்டி கொடுத்து விட்டார்.அடுத்து வர்களுக்கு சாதகம்மான நீதிபதியால் ஜெயா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையாவார்.அதன் பின்னர் சோ கும்பல் விரட்டியடிக்கப்பட்டு மீண்டும் சசி குடும்ப ஆட்சியே நடைபெறும்.கவலைப்படாதீர்கள் .பார்ப்பன ஆட்சி நீடிக்காது.

  • ஆமாம் பார்ப்பன ஆதிக்கம் நீடிக்கக்கூடாது தேவர் ஆதிக்கம் தான் இருக்க வேண்டும்.வீர மறவர் குலம் இழந்த பெருமையை மீட்க வேண்டும்.தமிழ் மண்ணில் ஆரியர்கள் ஆதிக்கமா?

   • அதெபோல் வன்னிய மன்னில் எப்படி மற்றாஜாதிக்காரர்களை அனுமதிப்ப்து. அவர்கள் மற்றுமே அந்த ம்ன்னை ஆளவேன்டும். அன்புமனி ஆன்டால் என்ன அவர் மகள் ஆன்டால்நமக்கென்ன? தாய் பான்டியநாட்டைமட்டும் விட்டுக்கொடுக்க மாட்டொம்.

 10. Heloooooooo pl correct the names u mentioned for posting the fotograph.

  Its the talk of the state.U wrongly published their fotos , how can we accept ur write ups. he he he.First , get trained to be an journalist.

 11. Unless Cho the wrongly identified personality and the lunatic subramaniasamy, are checked none can protect the interest of the country and its people. They create an image that they make the Govenments and they are behind the major happenings. For their speeches underming the constitutioln of India lthey are to be tried and punished otherwise anything can happen.Sasikala an unknown person acquired so much wealth in her name without the knowledge of the cheif minister, jeyalalitha, is mockery, why not judiciary itself take up the case and establish that judicial system still alive inthe country to safeguard, countries sovereignty and the basic tenats of democracy and all the more the most innocent citizens of the country.

 12. நம் தமிழர்களே, அமெரிக்கா ராசுக்களே, தமிழக அரசியல் தெரியாத தம்பிமார்களே – இதைப் படியுங்கள்.

  தமிழகத்தை கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழர்கள் ஆளவில்லை என்று சொல்லும், தமிழக அரசியல் தெரியாத தம்பிமார்களே இதைப் படியுங்கள்.

  தி மு க ஆட்சி செய்யும் பொழுது எந்த எந்த தமிழர்கள் தமிழகத்தை ஆண்டார்கள் என்று பார்ப்போம்.

  கன்யாகுமரி மாவட்டம் – சுரேஷ் ராஜன் என்ற – தமிழர்.
  தூத்துக்குடி – பெரியசாமி – தமிழர்.
  திருநெல்வேலி – கருப்பசாமி பாண்டியன் , ஆவுடையப்பன் – தமிழர்.
  விருதுநகர் – தங்கபாண்டியன், தங்கம் தென்னரசு – தமிழர்.
  மதுரை – எஸ்ஸார் கோபி, போட்டு சுரேஷ் , அரைத் தமிழன் அழகிரி.
  தேனி – மூக்கையா – தமிழர்.
  திண்டுக்கல் – பெரியசாமி – தமிழர்.
  ராமநாதபுரம் – நடிகர் ரித்திஷ் சிவக் குமார் – தமிழர்.
  சிவகங்கை – சுப தங்கவேலன் தமிழர்..
  நாகப்பட்டினம் – விஜயன் – தமிழர்.
  திருவாரூர் – பூண்டி கலைராஜன் குடும்பம் – தமிழர்.
  தஞ்சாவூர் – எஸ் எஸ் பழனிமாணிக்கம், TR பாலு – தமிழர்.
  திருச்சி – செல்வராசு – தமிழர்.
  புதுக்கோட்டை – பெரியண்ணன் குடும்பம் தமிழர்.
  கடலூர் – MRK பன்னிச் செல்வம் – தமிழர்.
  சேலம் – வீரபாண்டி ஆறுமுகம் குடும்பம் – தமிழர்.
  ஈரோடு – பெரியாசாமி , ராஜா குடும்பம் – தமிழர்.
  வேலூர் – துரைமுருகன் – தமிழர்.
  கோவை – கண்ணப்பன் – தமிழர்.
  திருப்பூர் – கோவிந்தசாமி – தமிழர்.
  திருவண்ணாமலை – வேலு – தமிழர்.
  விழுப்புரம் – பொன்முடி – முத்தரையர் , செஞ்சி ராமசந்திரன் – தமிழர்.
  பெரம்பலூர் – ஆ ராசா – தமிழர்.
  தருமபுரி – செல்வகணபதி – தமிழர்.
  சென்னை – KPP சாமி – தமிழர்.

 13. அ தி மு க ஆட்சி செய்யும் பொழுது எந்த எந்த தமிழர்கள் தமிழகத்தை ஆள்கிறார்கள் என்று பார்ப்போம்.

  தற்பொழுது நடப்பது நாடகம் மட்டுமே. தமிழர்களே இதை நம்பாதீர்கள். பெரிய பெண்ணும் , சின்ன பெண்ணும் நாடகம் நடத்துகிறார்கள். நாடக இயக்குனர் துக்ளக் சோ ராமசாமி.

  OPS பன்னிச் செல்வம் , செங்கோட்டையன் , ஜெயக்குமார் , தளவாய் சுந்தரம் , வளர்மதி, PH பாண்டியன் , தம்பிதுரை போன்ற அடிமைத் தமிழர்களைக் கொண்டு — கொள்ளைக் கூட்டமான சசிகலா வின் ன்னார்குடி கும்பல் – ஒரு மண்டலத்திற்கு ஒருவர் வீதம் நியமனம் செய்து,
  ஒட்டு மொத்த தமிழகத்தையே கொள்ளை அடிக்கிறார்கள்.

  கோவை – ராவணன்
  திருச்சி – கலியபெருமாள்
  சென்னை – வெங்கடேஷ்
  நெல்லை – நைனார் நாகேந்திரன்
  தமிழகம் முழுதும் – திவாகரன்
  இன்னும் தினகரன், சுதாகரன…….

  ஒட்டு மொத்த தமிழகத்தையே கொள்ளை அடிக்கிறார்கள். கடந்த எட்டு மாதங்களில் மட்டும் சுமார் நான்காயிரம் கோடி
  ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னர் சீட் கொடுப்பதற்கு மட்டும் திவாகரன் சுமார் இருநூறு கோடி வசூல் செய்திருக்கிறான்.

  தற்பொழுது நடப்பது நாடகம் மட்டுமே. தமிழர்களே இதை நம்பாதீர்கள். பெரிய பெண்ணும் , சின்ன பெண்ணும் நாடகம் நடத்துகிறார்கள்.

  முடிவு எடுப்பது இந்திய வல்லாதிக்க அரசு மட்டுமே.
  தமிழகம் என்பது கொள்ளை அடிப்பதற்கான ஒரு மேம்படுத்தப்பட்ட , பெருமைக்குரிய நகராட்சி மட்டுமே.

 14. செத்துப்போன ஜாதி சித்த்ங்களை வைத்துக்கொன்டு அரசியல்நடத்துக்கிரீர்கள். எதெர்கெடுத்தாலும் பார்ப்பன் என்று கூறி மக்களை தனிமைப்படுத்த முயர்சிக்கிரீர்கள். ஆனால் அரபு மற்றும் உறுது மொழி பெசுபவர்களை கன்டுகொள்வதேஇல்லை. வேலூர், வானியம்படி ம்ற்றும் பிற் முஸ்லீம்கள் வாழும் பகுதிக்குச் சென்றாள் தமிழ்நாட்டில்தான் இருக்கிரோமா அல்லது பகிஷ்தான் மற்றும் அரபுநாடுகலில் இருக்கிரோம என்ற் சந்தெகம் வந்துவிடும். அங்கு தமிழை கான முடியாது. இதற்கு ஏதெனும் செய்யுங்கள்.

 15. //செத்துப்போன ஜாதி சித்த்ங்களை வைத்துக்கொன்டு அரசியல்நடத்துக்கிரீர்கள்//

  அப்படி செத்துபோன சாதி சித்தங்களில் ஏன் தமிழை தேடுகின்றீர்.

  //எதெர்கெடுத்தாலும் பார்ப்பன் என்று கூறி மக்களை தனிமைப்படுத்த முயர்சிக்கிரீர்கள்//

  மக்களை விழிப்புணர்வு செய்ய முயர்ச்சி செய்கிறார்கள். நீங்க சொல்லும் பெரியார் எடுத்துக்காட்டு தான்: ” பாம்பையும் பார்ப்பானையும் ஒன்னா பார்த்தால் பாம்பை விட்டுட்டு பார்ப்பானை அடிக்க சொன்னார்”

  //வேலூர், வானியம்படி ம்ற்றும் பிற் முஸ்லீம்கள் வாழும் பகுதிக்குச் சென்றாள் தமிழ்நாட்டில்தான் இருக்கிரோமா அல்லது பகிஷ்தான் மற்றும் அரபுநாடுகலில் இருக்கிரோம என்ற் சந்தெகம் வந்துவிடும். //

  அதே மாதிரிதான் திருவரங்கம், திருபெருமத்தூர் எல்லாம் சிரிரங்கம் சிரிபெருமத்தூர் என்று சமஸ்கிரித கலப்பினை தமிழில் செய்த பொழுது நாங்களும் இது தமிழ் நாடா இல்லை மா பி யா என்று சந்தேகம் கொண்டோம் ஆனால் தெளிந்துவிட்டோம் தமிழை எந்த கொம்பனாலும் ஒன்னு செய்ய முடியாது என்று.

  //இதற்கு ஏதெனும் செய்யுங்கள்.//

  போலி இந்து மதத்தையே அதன் பொய்மையையும் இத்தனை ஆயிரம் ஆண்டு சகித்துக் கொண்ட நாங்கள் இதையும் சகித்துக் கொள்வோம். தமிழர்களுக்கு சகிப்புத் தன்மை அதிகம்.

 16. எப்படியோ தமிழ் தெரிந்தவர்க்லுக்கும் தமிழ் கற்றுக்கொன்டவர்கலுக்கும் ஒரு மிக பெரிய பொராட்டதை உண்டுபன்னி மக்கள் அனைவரும் ஒருவரைஒருவர் தக்க்கிக்கொள்ளவேண்டும். தமிழ்நாடு சின்ன்ச்பின்னமாகா வேன்டும் என்பதுதான் உஙளின் கொல்கை.ஆனால் பாண்டியநாட்டு மீதுமட்டும் எவனும் கைவைக்க கூடாது. அவ்வாரு கை வைத்தால் சாப்பிட கை இருக்காது. எங்கள் பாண்டியநாட்டு மக்கள் வீரம்நிரைந்த மன்னின் சொந்தக்கரர்கள். போர் என்ட்ரால் புலி குனம் பொங்கும் இன்ப காதலென்ட்ரல் புமனம் பொங்கி எழுந்து உலகமே ஒரெ இனம் என்ற் சரித்திரம் கன்டவர்கல்நாஙள். பாண்டியனாட்டை பல ஜமீன் களாக பிறித்து ஆட்சி செய்வொம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க