Sunday, April 18, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் பாமக ராமதாசுக்கு எதிர்ப்பு : தென் மாவட்டங்களில் செருப்படி!

பாமக ராமதாசுக்கு எதிர்ப்பு : தென் மாவட்டங்களில் செருப்படி!

-

மிழ்நாடு முழுவதும் ஆதிக்க சாதி சங்கங்களை சேர்த்து சாதி வெறி அரசியலை பரப்ப முயற்சித்து வரும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாசுக்கு எதிராக திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல் நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

காதல் திருமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, வன்கொடுமை சட்டத்தில் திருத்தம் செய்ய கோருவது போன்ற கோரிக்கைகளோடு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

ஜனவரி 30ம் தேதி திருநெல்வேலி வந்த ராமதாசை எதிர்த்து ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் முன்பு மறியல் செய்த மக்கள் விடுதலைக் கட்சியைச் சேர்ந்த 45 பேர் கைது செய்யப்பட்டனர்.  அந்த கட்சியின் தலைவர் முருகவேல் ராஜன்,  “இழந்த செல்வாக்கை நிலை நிறுத்த ஜாதி மோதல்களை தூண்டி ஓட்டு வங்கியை தக்க வைக்க ராமதாஸ் முயற்சி செய்கிறார். அவரை கைது செய்ய வேண்டும். பா.ம.க.,வை தடை செய்ய வேண்டும்” என்றார்.

ஜங்ஷன் பேருந்து நிலையம் முன்பு தேவேந்திர மக்கள் முன்னேற்றக்கழகம் விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள்,  ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, புரட்சிபாரதம், ஆதிதிராவிடர் நல உரிமை சங்கம், துப்புரவு பணியாளர் சங்கம், அம்பேத்கர் தொழிற்சங்கத்தினர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட  4 பெண்கள் உட்பட 125 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமதாசின் கூட்டம் நடைபெறும் அரங்கிற்கு எதிரில் மள்ளர் நாடு அமைப்பினர் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை எரித்தனர். இது தொடர்பாக 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த 51 பேர்  முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.  மக்கள் தேசம் அமைப்பச் சேர்ந்த 46 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் ராமதாசை கண்டித்து தீக்குளிக்க முயன்ற விடுதலை சிறுத்தை கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய செயலர் தமிழ் பாரி உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

அனைத்து சமுதாய பேரியக்கம் சார்பில் கூட்டம் நடத்துவதற்காக திண்டுக்கல் வந்த ராமதாசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலித், சிறுபான்மை மற்றும் இடதுசாரிகள் கூட்டுக் குழுவின் சார்பில் திண்டுக்கல் பெரியார் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
சாதி மறுப்பு திருமணம் செய்யும் வாரிசுதாரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யக்கூடாது

என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பெண்கள் உள்பட 144 பேரை கைது செய்தனர்.

ராமதாசும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் அரசியலில் பிழைப்பதற்காக இந்த ஆதிக்க சாதிவெறியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் செல்லுமிடமெல்லாம் அவருக்கு செருப்படி வழங்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க

 1. இத்தகைய செருப்படிகளால் செல்லாக்காசாகப் போகிறது பா.ம.க.

  பிற பிற்பட்ட சாதிக்காரனெல்லாம் இவருக்கு வாக்குப் போடுவார்கள் என்று இவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்திலும் பா.ம.க தோல்வியடைந்ததை வன்னியச் சாதியைவிட மேல் அடுக்கில் உள்ள முதலியார் – வெள்ளாளர் – ரெட்டியார் உள்ளிட்ட சாதியினர் குதூகலித்து மகிழ்ந்து கொண்டாடியதை சாமான்ய வன்னியன் அறிந்துதான் வைத்துள்ளான். வர்ணாசிரம சாதியப்படிநிலையில் வன்னினுக்கு பிற மேல்வர்ணத்தார் மத்தியில் என்ன மரியாதை என்பதையும் சாமான்ய வன்னியன் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

  சாமான்ய வன்னியன் ஒருவன் மேற்குறிப்பிட்ட சாதிப்பெண் ஒருத்தியை – வயது 21 க்கு மேல் இருந்தாலும் – காதலித்து கைப்பிடிக்கும் போது “பள்ளிப் பயலுக்கு வெள்ளாளப் பொண்ணு கேக்குதோ?” என்கிற அர்ச்சனைகள் ராமதாசுக்குத் தெரியாதா என்ன?

  இராமதாசு போடும் தற்போதைய நாடகம் வாக்கு வங்கி அரசியல்தான் என்பதை எல்லோரும் அறிவர். தாழ்த்தப்பட்டவனாவது இதுவரை நன்றி விசுவாசத்தோடு வாக்களித்தான். பா.ம.க வால் ஒன்றிரண்டு இடங்களையாவதுப் பெறமுடிந்தது. இனி அதுவும் இல்லை என்றாகிவிட்டது. பிற பிற்பட்ட சாதிக்காரன் கூட இருந்தே குழிபறிக்கப் போவதும், சாமான்ய வன்னியன் பா.ம.க விடமிருந்து எட்டி நிற்கப் போவதும் கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில் பா.ம.க விற்கு பாடை ஏற்பாடு செய்வது ஒன்றுதான் மிச்சமிருக்கு!

  • ஒரு சில சிறு அமைப்புகள் எதிர்த்தாலும், அதிக அமைப்புகள், சங்கங்களின் ஆதரவையும் பொதுமக்களின் மதிப்பையும் பா.ம.க பெற்றிருக்கிறது. ஏனெனில் அதிகமானோர் அதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 2. வினவு அண்ணே செருப்படி யாருக்குனு வரும் நாடலமன்ற தேர்தலில் தெரியும்..நீங்க என்னதான் எழுதினாலும் பாமக வ அசைக்க முடியாது.கையில பேனா கிடசுசுனு சும்மா கனடத எழுதாதீங்க

  • அது தான் போன நாடாளமன்ற தேர்தலில் தெரிஞ்சதே – பா மா கா வோட புஜபல பாரகிரமங்கள் (உடனே கூட இருந்த எதிரிகளின் சதியால் வீழ்த்த பட்டுவிட்டோம் என்று புனை கதைகளை கட்டவிழ்த்து விடவேண்டாம்)

   • நீங்கள் அடைப்பு குறிக்குள் எழுதினதுதான் உண்மை. மேலும் போட்டி இட்ட எதிர்க்கட்சி காசு கொடுத்து வெற்றிபெற்றதும் உலகம் அறிந்த உண்மை. இதுதெரியாமல் எழுதிருக்கிறீர்களே?

 3. ///ஜங்ஷன் பேருந்து நிலையம் முன்பு தேவேந்திர மக்கள் முன்னேற்றக்கழகம் விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள், ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, புரட்சிபாரதம், ஆதிதிராவிடர் நல உரிமை சங்கம், துப்புரவு பணியாளர் சங்கம், அம்பேத்கர் தொழிற்சங்கத்தினர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்///

  மருத்துவரின் அனைத்துசாதி சேர்ப்பு கொள்கையை..மாற்று அனைத்து சாதிக்கூட்டணி எதிர்க்கிறது ! # ஙே..ஙே!

  • மேலும் மேலும் ஓடுக்க நினைக்கும் ஆதிக்க (என்று சொல்லிகொள்ளும்) சாதியினரை எதிர்த்து நின்றால் “சாதி சேர்ப்பு கொள்கை” என மறுமொழி தெரிவிப்பது தங்களின் ஜாதிய ஆதிக்க தனத்தின் வெளிப்பாடு

   • நன்றி..இப்படித்தான் பதில் வரும் என எதிர்பார்த்தேன்…ஆதிக்க/அடங்கிய என்ற பார்வை விலக்கிப் பார்த்ததால் தெரிவது என்ன என்று பாருங்கள் நண்பா! இரு முரண்பட்ட சாதிக் கூட்டணிகளை! (கருத்துக்களுக்கு சாயம் பூசுவதை என்றுதான் கைவிடுவீர்களோ..வளர வேண்டும்)

 4. Recently reported in Hindu. One kongu vella girl had love marriage with one vanniyar boy and she got pregnant. The girl’s parents cajoled her and took her to a clinic and fetus was aborted.

 5. //ராமதாசும், பாட்டாளி மக்கள் கட்சியும் ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் அரசியலில் பிழைப்பதற்காக இந்த ஆதிக்க சாதிவெறியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் செல்லுமிடமெல்லாம் அவருக்கு செருப்படி வழங்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  கடலூரில் கூடிய கூட்டத்தை பார்த்தீர்களா?

 6. தலித்தை தவிர எந்த ஒரு சமூகமோ எந்த ஒரு அரசியல் கட்சியோ எதிர்ப்பதாகவோ அல்லது ஆர்ப்பாட்டம் நடத்துவதாகவோ, மருத்துவர் மீது சேறு வாரி இறைக்கும் வினவுவால் கூட எழுத முடியவில்லை. இதுதான் நிதர்சனம். உன் எழுத்துக்கள் நீ நினைக்கும் என்னத்துக்கு மாற்றாகவே முடியும்

  • இந்தியாவில் தலித்தை மனிதனாக பார்கின்ற நிலைமை மற்ற எந்த ஜாதிகளிலும் இல்லை.
   தலித்துக்கு இருக்கும் இடம் முதல் புதைக்கும் இடம் வரை தனியாக ஒதுக்கி வைக்கபட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வேறு எவரும் எங்களுக்காக குரல் (அ) மனிதாபிமானம் காட்டுவார்கள் என்று அனுமானம் கூட செய்ய முடியவில்லை. தன் கையே தனக்கு உதவி அதை போல் எங்களுக்கு நாங்களே ஆர்பாட்டம் (அ) ஆதரவு தெரிவித்து கொள்ள வேண்டியது தான். இருப்பினும் அடிப்படை மனிதாபிமானம் கொண்ட சில பெரிய மனிதர்கள் இருந்தார்கள் (மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்).

 7. வினவிடம் இருந்து இது போன்ற மூன்றாந்தரமான தலைப்புகளை எதிர்பார்க்கவில்லை.
  தயவுசெய்து தலைப்பை மாற்றவும்.

 8. வினவு ஆசிரியரே! ஆதிக்க ஜாதி! அப்படின்னு நீங்க வர்னிக்கர வன்னியர், தேவர், கவுண்டர், நாடார், முக்குலத்தோர், நாயுடு, நாயக்கர், கொங்கு, வுடையார், ரெட்டியார், பற்றி பொது விமர்சனம் செய்து நீங்களே மருத்துவர் அய்யா அவர்களுக்கு வலிமை சேர்க்க வேண்டாம். இப்படி நீங்கள் தலித்துக்கு சாதகமாக எழுதி மற்ற இன மக்களிடம் இருந்து அவர்களை தனிமை படுத்த வேண்டாம். நீங்கள் மறைமுகமாக அணைத்து சமூக மக்களை இணைத்து ராமதாஸ் ஐயாவுக்கு எளிமை செய்ய வேண்டாம். இப்போ ராமதாஸ் ஐயாவை விட அதிகமா நீங்கதான் ஜாதிவெறி பரப்பிக்கிட்டு இருக்கீங்க. மாட்டுக்கும் இருக்கு ஜாதி. பசு, எருமை, சிந்து, செர்சு, HF, ஷாகிவால் அப்படின்னு சொல்லிகிட்டே போகலாம். தனி மனிதன் சுயமா சிந்தனை செய்தால் மட்டுமே ஜாதி வேண்டாமென்பது நடக்கும். ஜாதி 2000 வருடம் பழமையானது. வுங்கள் எதிர்ப்பு 100 வருட அனுபவம் பெறும்போது ஜாதிக்கு 2100 வருட அனுபவம் கிடைக்கும். தலித் மக்களை பொருளாதார ரீதியா முன்னேற முயற்சி செய்தால் வரும் காலத்தில் ஜாதி வேண்டாம் என பிற இன மக்கள் ஏற்க முன்வருவார்கள். ஜாதி இல்லை என யாரும் வரபோவது இல்லை.

  • மாட்டுக்கும் இருக்கு ஜாதி. பசு, எருமை, சிந்து, செர்சு, HF, ஷாகிவால் அப்படின்னு சொல்லிகிட்டே போகலாம்.

   அப்ப மனிதன் இல்லயா.?பா.மா.கா

 9. @roman

  மாடுகளில் அத்தனை ரகம் இருக்கு என்கிறீர்கள் உண்மைதான் ஆனால் எந்த மாடும் இன்னொரு மாட்டை கேவலமாய் பார்ப்பதில்லை. மனிதர்களிலும் வெள்ளையானவன், கருப்பானவன், குட்டையானவன், நெட்டையானவன், குண்டானவன் ஒல்லியானவன் வட இந்தியன் ,தென் இந்தியன் திராவிடன் , ஆரியன் என நூற்று கணக்கான பிரிவுகள் உண்டு. ஆனால் எல்லோரும் மனிதர்களே. நீயும் அவனும் ஒரே திராவிட இனத்தில் இருந்து கொண்டு அவனை தாழ்ந்தவன் என்றும் உன்னை உயர்ந்தவன் என்றும் எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்.காக்கைகளில் என்ன உயர்வு தாழ்வு?
  அவன் இருபதல்தான் நீ உயர்ந்தவனாய் உன்னை நினைத்து கொள்கிறாய் . அவன் இல்லை எனில் அந்த இடத்தில நீ தான் இருப்பாய் உனக்கு மேலே இருக்கும் எல்லோருக்கும் நீதான் தாழ்த்தபட்டவன் என்பதை மறந்து விடாதே.அப்படி ஓர் நிலை வந்தால்மட்டுமே உங்களை போன்றவர்களுக்கு அந்த வலி தெரியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க