Monday, April 12, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் கருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு - இறுதி வாதங்கள் !

கருவறை தீண்டாமைக்கு எதிரான வழக்கு – இறுதி வாதங்கள் !

-

அர்ச்சகர்கள்
னைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தொடர்பான வழக்கு வரும் 20-2-13 அன்று உச்சநீதிமன்றத்தின் இறுதி விசாரணைக்கு வருகிறது.

நீதிபதிகள் லோதா, செல்லமேஸ்வர் ஆகியோர் வழக்கறிஞர்களிடம் “ஒரு தேதியை சொல்லுங்கள் அன்று முழுமையாக வாதத்தை கேட்கிறோம்” என்று கேட்டனர். சிவாச்சாரியர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பராசரன் அவர்களிடமும் அரசு தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் அவர்களிடமும் அர்ச்சக மாணவர்கள் தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர்கள் அந்தி அர்ஜுனா,  காலின் கான்சால்வேஸ் மற்றும் வழக்கறிஞர் கோவிலன் பூங்குன்றன்அவர்களிடமும் அவர்களிடமும் உறுதிப்படுத்தி இந்த தேதியை குறித்தனர்.

பெரியார் அறிவித்த கருவறை போராட்டக் கிளர்ச்சியைத் தொடர்ந்து 1970ம் ஆண்டு கோவிலில் வாரிசுரிமை அர்ச்சகர் நியமன முறை ஒழிக்கப்பட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. ஆனால் இன்றுவரை பார்ப்பனர்களைத் தவிர பிற சாதியினர் அர்சச்கராக முடியவில்லை.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2006ம் ஆண்டு அதற்கான சட்டத்தை  தமிழக அரசு கொண்டு வந்த வேகத்தில் மதுரை பார்ப்பன சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றனர். பெரியாரின் போராட்டம் நடந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதே பிரச்சினை நேரடியாக நம்முன் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு

 • ‘பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும்’ என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா? என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும் முக்கிய வழக்கு.
 • சாதித் தீண்டாமையை பாதுகாக்கும் ஆகமம் பெரிதா? தீண்டாமை எந்த வடிவத்தில் இருந்தாலும் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அரசியல் அமைப்பு சட்டம் பெரிதா? என்பதை தீர்மானிக்கவிருக்கும் முக்கிய வழக்கு.

அன்று அரசும் பார்ப்பன அர்ச்சகர் தரப்பும் மட்டுமே வழக்கை நடத்தியதால் 1970ல் வெற்றி பெற்றும் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டோம். இன்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் தரப்பில் நாம் மூன்றாவது தரப்பாக வாதிட உள்ளோம். கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் நமது வாதம்.

அரசு ஒரு நாளும் பார்ப்பனர்களுக்கு எதிராக இந்த வாதத்தை முன்வைக்காது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தகுதி உடையவர்கள் யாராக இருந்தாலும் சாதி பார்க்காமல் அர்ச்சகர் பணி நியமனம் வழங்க வேண்டும்; அர்ச்சகர் வேலையும் பொது வேலைவாய்ப்புதான்; அதில் பிறப்பை மட்டும் தகுதியாக பார்ப்பது அரசியல் அமைப்பு சட்டப்படி தவறு என்பதையும் வாதிட உள்ளோம்.

வழக்கு செலவுகளுக்காக நிதி வழங்கி அனைவரும் இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

நெட்பாங்க்கிங் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

 1. கருவறை
  இறைவன் அமர்ந்து இருக்கும் இடம் . அங்கு பால், பழம் , தேங்காய், தேன் என இன்ன பிற வகையறாக்கள் குவிந்து கிடக்கும் . இந்தியாவில் கால நிலையில் ஈ ,எறும்பு கொசுக்கள் எளிதாக குவியும் இடமாக மாறும் வாய்ப்பு உள்ள பகுதி .

  தூய்மை
  கருவறையில் பொது இடத்தில தூய்மை பேணப்படுவது அவசியம் .
  கிருமிகள் என்ன வகை பாக்டீரியாவ வைரஸா , அதன் பெயர் என்ன என்று எதுவும் தெரியாத காலத்தில் , தூய்மையை பேணினால் வியாதிகள் வராது எனபது மட்டும் தெரிந்த காலம் அது .

  மருத்துவம்
  மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் வியாதியஸ்தர்கள் கோவிலுக்கு அதிகம் சென்றிருப்பார்கள். அவர்கள் மூலம் பூசை செய்பவர்களுக்கு வியாதிகள் பரவுவதை கண்ணுற்ற பிறகு , பூசை செய்பவர்களை தொட வேண்டாம் என்று சமுதாய அங்கீகாரம் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் .

  தீட்டு
  இன்றைக்கு எளவு வீட்டிற்கு சென்றால் “தீட்டு ” அதாவது வியாதி பரவாமல் இருக்க என்னை தொடாதே என்பதே அது . பெண்கள் மாத விலக்கா “தீட்டு “. அம்மை போட்டு இருக்கிறதா “தீட்டு “.
  நம்மவர்கள் கோவில் திருவிழா முடிந்த பின்னர் மஞ்சள் நீராடு விழா நடத்துவது கண்ணுக்கு தெரியாத கிருமிகளை கொல்வதற்கே

  தீட்டு – தீண்டாமை கருவி
  குலத்தொழில் அடிப்படையில் அமைந்த சமுதாயம் தூய்மையை பேண முடியாத தொழில் செய்பவர்கள் மீது “தீட்டு ” என்னும் சாட்டையை சொடுக்கி இருக்க வேண்டும் .

  இல்லையென்றால் பண பலமும் , உடல் பலமும் கொண்ட சமுதாயம் , இந்த இரண்டும் இல்லாத சமுதாயத்திற்கு பயந்து தீண்டாமையை ஒப்புகொண்டிர்க்க வேண்டிய அவசியம் இல்லை . மருத்துவ காரணங்களை முன்னிட்டே ஒப்புக்கொண்ட ஒரு சமுதாய நிகழ்வு , கருவறைக்குள் எல்லாரும் சென்றால் தூய்மையை பேண இயலாது என்றே பிற சமுதாயங்கள் அன்கீகரிதிர்க்க வேண்டும் . ஒரு சமுதாயத்தால் திரித்து கூறப்பட்டுள்ளது .

  இசுலாம் சமுதாயம் கூட பெண்களை தொழுகையின் போது உள்ளே விடாமல் இருப்பதற்கு இது போன்ற காரணம் இருக்கலாம்

  தூய்மையை பேணும் எவரும் கருவறைக்குள் வேலை செய்யலாம் . ஆனால் கோவில்லுக் செல்லும் எல்லாரும் சாமி சிலையை தொட்டு ஆராதிப்பேன் என்றால் , தூய்மை பேணுவது கடினம்

  கடைசியாக தலித்கள் அர்ஷகராக வேண்டுமா ?
  தேவை இல்லை , அவர்கள் எஞ்சினீர் ,மருத்துவர் அல்லது விக்ஞானி ஆகா வேண்டும் .
  கருவறைக்குள் இருப்பதை எது அமெரிக்க ஜனாதிபதி பதவி போன்று அவர்கள் மிநிக்கினாலும் அதை உதாசீன படுத்தி மற்ற சமுதாயத்தினர் முன்னேற வேண்டும்

  • “கடைசியாக தலித்கள் அர்ஷகராக வேண்டுமா ?
   தேவை இல்லை , அவர்கள் எஞ்சினீர் ,மருத்துவர் அல்லது விக்ஞானி ஆகா வேண்டும் .
   கருவறைக்குள் இருப்பதை எது அமெரிக்க ஜனாதிபதி பதவி போன்று அவர்கள் மிநிக்கினாலும் அதை உதாசீன படுத்தி மற்ற சமுதாயத்தினர் முன்னேற வேண்டும்”

   அவர்கள் பொறியாளர்களாக,மருத்துவர்களாக,விஞ்ஞானிகளக ஆகியுள்ளார்கள்.ஆனால் அர்ச்சகர்களாக ஆக முடியவில்லை, எனவேதான் இந்த வழக்கு.மேலும் பார்ப்பனர்கள் ஏன் விவசாயியாகவோ,தொழிலாளியாகவோ,மீனவராகவோ,துப்புரவுத் தொழிலாளியாகவோ அல்லது வெட்டியான்யாகவோ ஆக ஏன் ஆசைப்படக்கூடாது??????

   • /////பார்ப்பனர்கள் ஏன் விவசாயியாகவோ,தொழிலாளியாகவோ,மீனவராகவோ,துப்புரவுத் தொழிலாளியாகவோ அல்லது வெட்டியான்யாகவோ ஆக ஏன் ஆசைப்படக்கூடாது/////

    ஆசைபாடுதல் என்பது அவரவர் உரிமை. கட்டாயப்படுத்தக்கூடாது! இதில் பிராமணர்களை மட்டும் குறிப்பிட்டு உள்ளீர்கள். ஏன் மற்ற உயர் ஜாதியினரை சேர்க்கவில்லை என்று தெரியவில்லை!!! பிள்ளைமார்கள், முதலியார்கள், நாயுடுகள் ,வன்னியர்கள் தேவர்கள் மற்றும் பிற ஜாதியினர் ஏன் வெட்டியான்களாக துப்புரவு மற்றும் சவரம் செய்யும் தொழிலாளியாக போகவில்லை!!! இதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்!!! பிராமனர்களை சொன்னால் ஒன்றும் செய்யமாட்டார்கள்!! மற்றவர்களைப் பார்த்து இந்த தொழில்களை செய்யுங்கள் என்று அறிவுரை சொன்னால் என்ன ஆகும் என்று நினைத்துப்பார்க்கவே முடியாது!

    • “ஆசைபாடுதல் என்பது அவரவர் உரிமை. கட்டாயப்படுத்தக்கூடாது”

     நாங்களும் தான் ஆசைப்படுகிறோம். ஆனால் கருவறைக்குள் விட மாட்டேன்கிறீர்களே?

      • ஆசார விதிகளை நான் சொல்லவில்லை. சகோதரர் சொல்லியிருப்பதைப் பாருங்கள்

       (சிறுமி கற்பழிப்பை வேடிக்கைப் பார்த்த திருப்பதி வெங்கட்)

       Vimaladhasan September 28, 2011 at 11:17 pm
       Permalink
       18.3

       அந்த சிறுமி உங்கள் மகளோ அல்லது உங்கள் தங்கையாகவோ இருந்திருந்தால் கூடவா இன்னும் அந்த பொம்பளை பொறுக்கி கடவுளுக்கு (கண்ணனாக கோகுலத்தில் எத்தனை பெண்களின் மானத்தை கெடுத்திருக்கிறான். த்தூ…அதை வேறு நியாயப்படுத்தி சொல்கிறீர்கள்) சப்போர்ட் பண்ணி பேசுவீர்கள் ,காலாகண்டன். அமாம் ஆமாம் காஞ்சீபுரம் தேவனாதன் கருவறையிலேயே சாமான் போட்டுவிட்டு சாமி மேல் போட்டிருந்த துணியையே எடுத்து சாமானை துடைச்சி மீண்டும் சாமி மேல போட்டப்போ அப்போ என்ன செஞ்சிது அந்த சாமி ?

       • comedyaa pesadheenga, saamy enna senjichu appadi ipapdinnu.

        athaan koil sothayellam aatayapottu makkal buttiellam mazhungadichuteenga,ippo vandhu neenga yen vettalanna enna seiradhu?

        adhikaarathula irukkuravangala thaan ekekkanum?

        terroristukke inga karunai manu poduraanga,idhula enga matter asaamya ellam thookula podurathu.

   • @புதுநிலா

    உங்களது ஆதிக்க சாதி மனப்பான்மை தெரிந்து விட்டது . ஆதிக்க சாதிகளான நீங்கள் டாக்டர் என்ஜினியர் ஆவீர்கள். ஆனால் தலித்கள் மட்டும் அர்ச்சகராக ஆசைப்பட வேண்டும் ?! பலே !

    //மேலும் பார்ப்பனர்கள் ஏன் விவசாயியாகவோ,தொழிலாளியாகவோ,மீனவராகவோ,துப்புரவுத் தொழிலாளியாகவோ //

    ஏன் ஆதிக்க சாதிகள் மீன்வராகவோ துப்பரவு தொலிலாஇயாகவொ ஆகா கூடாது ?

    விவாதத்தை எப்போதும் தலித்களுக்கு பரிந்து பேசுவது போல ஆதிக்க சாதிகள் நீலிகண்ணீர் வடிக்கின்றன

    எதிரே நிற்கும் பார்பனர்களை தலித்கள் வெல்லலாம் ஆனால் கூடவே இருந்து நடிக்கும் ஆதிக்க சாதிகளை பச்சோந்திகளை வெல்ல முடியாது

  • “கருவறை
   இறைவன் அமர்ந்து இருக்கும் இடம் . அங்கு பால், பழம் , தேங்காய், தேன் என இன்ன பிற வகையறாக்கள் குவிந்து கிடக்கும் . இந்தியாவில் கால நிலையில் ஈ ,எறும்பு கொசுக்கள் எளிதாக குவியும் இடமாக மாறும் வாய்ப்பு உள்ள பகுதி .”

   திருவாளர் தேவநாதன் காமலீலை புரிந்த போது கருவறை என்னவானது?

    • வாழைப்பழத்தை உரிச்சி கையில கொடுக்கமுடியாது. இத்தனை ரோஷ்ப்படும் நீர்,அவனை அப்போதே போய் வெட்டியிருக்க வேணாமா?

      • என்னமோ போங்க..

       நீங்க தான் சொன்னீங்க “எங்ககிட்டே விடுங்க, தலையை சீவி எடுதிடறோம்னு”
       சீவி எடுக்க வேண்டியது தானேன்னு கேட்டா பத்து வருஷ்ம் யார் உள்ளே இருக்குறதுன்னு உடனே பல்டி அடிக்கிறீங்க.

       நான் தான் தப்பா நினைச்சுட்டேன் :நீங்க தலையை சீவிடுறோம்முன்னு சொன்னதை கத்தியாலன்னு நினைச்சுட்டேன். இப்பல்ல தெரியறது அது சீப்பாலேன்னு

   • @தமிழ்
    இது வெட்டி விவாதம்

    இந்த ஒருவன் செய்த தவறை ஒரு சமூகத்தின் மீது தெளிக்கும் இந்த விவாதத்தை ,
    நாளை ஒரு தலித் அர்ச்சகர் செய்யும் போது , இவங்களே இப்படிதான் என்று தூற்ற எளிய வழியை உருவாக்கி தருகிறீர்கள்

    • “நாளை ஒரு தலித் அர்ச்சகர் செய்யும் போது ,”

     முதலில் தலித்தை அர்ச்சகராக விடுங்கள். பிறகு பார்ப்போம் அவர்கள் செய்யும் தவறுகளைப் பற்றி.

     • @Tamil

      தலித்களை அர்ச்சகராக்கும் ஆசை உள்ள நீங்கள் , முதலில் ஆதிக்க சாதியை அர்ச்சகராக்கி அழகு பார்க்கலாமே ? அட அவர்கள் எல்லாம் மருத்துவம் பொறியியல் படிக்க போய்விட்டார்களா ?

 2. பொதுவாக இந்த பிரச்சனையில் பார்ப்பன கும்பல் முன் வைக்கும் வாதம் சுத்தம். பார்ப்பனர்கள் போல் மற்றவர்கள் சுத்தமாக இருப்பதில்லை. இது காலங்காலமாக மற்ற மக்களை இழிவு படுத்தி ஒரு வித தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் உக்தி. அதனால் தான் சில சாதி இந்துக்களும் பார்ப்பனரின் இந்த வாதங்களை ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் பார்ப்பனர்கள் தான் சுத்தம் இல்லாதவர்கள்,ஒழுக்கம் இல்லாதவர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவர்களின் செயல்களின் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

 3. Article 17 – The Constitution Of India 1949

  17. Abolition of Untouchability – Untouchability is abolished and its practice in “ANY FORM” is forbidden The enforcement of any disability arising out of Untouchability shall be an offence punishable in accordance with law
  http://www.indiankanoon.org/doc/1987997/

  வழக்கில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள் !!!

 4. தமிழத்தில் ஏராளமான கோவில்கள் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கும் ஜாதிக்கும் கோவில்கள் பல உண்டு!!! புது கோவில்கள் பல கட்டப்பட்டுதான் வருகின்றன! அதில் எல்லாம் பிராமினர்கள் யாரும் அர்ச்சகர்கள் இல்லை!!அந்த அந்த ஊரைச் சேர்ந்தவர்களும் சம்பத்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கலும்தான் கோவிலில் அர்ச்சர்களாக உள்ளார்கள்! தேவைப்படின் அர்ச்சர்களாக விரும்புவோர் மிக பிரமாதமாக அவர்களுக்குப் பிடித்தமான இடத்தில் வேண்டிய கோவிலை கட்டி அதற்கு அர்ச்சர்களாகளாமே!! யார் வேண்டாமென்ரது. கிருஸ்து மதத்தைப் போல் பாதிரிகள் சம்பலம் கொடுத்து ஒரு அமைப்பிலிருந்து நியமிக்கப்ப்டுவதில்லை. அவரவர்களுக்கு பிடித்த இடத்தில் கோவிலைக் கட்டிக் கொண்டு யார் வேண்டுமானாலும் அர்ச்சகறாகலாம்! இது நமது நாட்டில் உள்ள மத சுதந்திரம்!! ஏதெனும் ஒன்றை மற்ற மதத்தார்களை திருப்தி படுத்த எழுதி பெட்ரோ டாலர் வசூலிக்க இது ஒரு வழி!!!!

  • Could you please tell how many temples are constructed by the so called “Brahmins”? Chidambaram??, Tanjor??, Madurai??, Rameshwaram??, Kanniyakumari??, Sri Rangam??, Maylapore?? Why can’t you guys construct new temples for you?

   When govt started implementing reservation in IIT and IIM, the so called “Brahmins” told the same, Start your own IIT and IIM and study there with your cast professors. It is absolutely untouchability. Why can’t you guys start your own IIT and IIM and study? Why can’t you vacate the current IIT and IIM?

   • All the temples were built by the advice of brahmins and orders of kings,i thought aryan gods like shiva,shakti,vinayakar etc are of no use to tamils and onyl dravidian gods like murugar,munesswarar,kaliamma etc are local gods.

    why do u want the temples of shiva/shakti and aryan gods?

    • “why do u want the temples of shiva/shakti and aryan gods??”

     சரியாகச் சொன்னீர்கள். முட்டாப் பசங்க, எதற்கு ஆரியக்கடவுள்களை வழிபட ஆசைப்படுகிறார்கள்? ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டிருக்கும் அய்யனார் வகையறாக்களை கல்லைக் குடித்தோமா, ஆட்டை வெட்டுனோமா கும்பிட்டோமா அப்படின்னு போகாமா ஏன் அதிக ஆசைப்படுகிறார்களோ தெரியவில்லை.

     அது சரி
     harikumar , இந்த முட்டாப் பசங்க ஆரிய சட்டத்திற்கு மட்டும் ஏன் அடி பணிந்து போக வேண்டும் என்று உங்களவால் ஏன் ஆசைப்படுகிறார்கள்?

 5. பார்ப்பனர்கள் புனிதமேன்பதர்க்காக் மட்டும் கோவிலில் பூஜை செய்வதில்லை அது பணம் பொழியும் அருவி அத்துடன் சாமி என்று தன்னையே அழைக்க வைக்க ஒரு வழியாகவும் உள்ளது . மேலும் குடியரசுத் தலைவர் முதல் குப்பத்து குப்புசாமி வரை கும்பிடு போடும் அங்கீகாரம் அதனால் ஏற்படும் பெருமிதம் அதை மற்றவர்களோடு பங்கிட்டுக்கொண்டால் பவிசு போய்விடுமல்லவா?
  அது வருமானத்துக்குரிய பகுதி என்பதால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அத்தொழிலில் பங்கேற்க உரிமையுண்டு அதனை பெற்றுத்தர போராடும் தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகள்.

 6. கருவறைத் தீண்டாமையை கருவறுத்தே தீர வேண்டும்.சூத்திரன் என்ற இழிவை உச்ச நீதிமன்றம் நம் மீது சுமத்தினால் அந்த உச்சிக்குடுமி மன்றத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.பூசாரி வேலை அல்ல பிரச்சனை.தீண்டத் தகாதவன் என்ற இழிவு தான் பிரச்சனை.சீ என்று சொன்னால் நாய் கூட கடிக்கவரும்.தீண்டாமையை ஆதரிப்பவர்கள் நாயை விடக் கேவலமானவர்கள்.

 7. கருவறைத் தீண்டாமையை கருவறுத்தே தீர வேண்டும்.சூத்திரன் என்ற இழிவை உச்ச நீதிமன்றம் நம் மீது சுமத்தினால் அந்த உச்சிக்குடுமி மன்றத்தையும் தகர்த்தெறிய வேண்டும்.பூசாரி வேலை அல்ல பிரச்சனை.தீண்டத் தகாதவன் என்ற இழிவு தான் பிரச்சனை.சீ என்று சொன்னால் நாய் கூட கடிக்கவரும்.சாதி ,தீண்டாமையை ஆதரிப்பவர்கள் நாயை விடக் கேவலமானவர்கள்.வருமானம் கொழிக்கும் பெருங்கோவில்களைக் கட்டியவர்கள் பார்ப்பனர்களா? நாட்டார் சிறு தெய்வங்களை ஏழை மக்களுடைய கடவுளர்களை, பார்ப்பனர்கள் ஆஆகம விதிப்படி கட்டியதாகச் சொல்லும் கோவில்களுக்குள் நுழையவிட்டதில்லை.அப்படியே விட்டாலும் கோவிலுக்கு வெளியே புறக்கடையில் தான் அனுமதித்திருக்கிறார்கள்.அதற்கு எத்தனைப் போராட்டங்கள். நந்தன்,வள்ளலார்…எத்தனை உயிர்பலிகள்.இப்போது தீண்டாமை பெருங் கோவில்களின் கருவறையில் நிற்கிறது.தீட்சிதர்களை ஒழித்ததைப்போல் மதுரை சிவாச்சாரிகளையும் ஒழித்தே தீருவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க