Tuesday, April 13, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் புதுச்சேரியில் பாலியல் வன்முறையைக் கண்டித்து பொதுக்கூட்டம்!

புதுச்சேரியில் பாலியல் வன்முறையைக் கண்டித்து பொதுக்கூட்டம்!

-

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவுகட்டுவொம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்க கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்!

புதுச்சேரியில் பேரணி – பொதுக்கூட்டம் மற்றும் மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

நாள்: 22.02.2013 வெள்ளிக்கிழமை

பேரணி நேரம்: மாலை 4.00 மணி
பேரணி துவங்குமிடம்: சுதேசி மில் அருகில்
பேரணி முடியுமிடம்: அவ்வை திடல்

பொதுக்கூட்டம் நேரம் : மாலை 5:30 மணி,
இடம்: அவ்வை திடல்

டெல்லி மாணவி பாலியல் வன்முறையை தொடர்ந்து தமிழகம்-புதுச்சேரியில் பள்ளி மாணவிகள் மீது நடக்கும் பல பாலியல் வன்கொடுமைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.புதுவை நோட்டிஸ்

புதுச்சேரியில்  11ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக டெல்லியைப் போலவே பொதுமக்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் தன்னெழுச்சியாக ஒன்று திரண்டு பேருந்து மறியல் வரை செய்து போராடினர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பெற்று வந்த ராஜிவ்காந்தி குழந்தைகள் நல மருத்துவமனை எதிரில் தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

இதைக் கண்ட தலைமை மருத்துவர், ”ஏதோ இப்பதான் புதுசா நடப்பதைப் போல எல்லோரும் குதிக்கிறார்கள், இது போல மாதத்திற்கு மூன்று கேஸ் வருகிறது” என்று கூறினார்.

9 லட்சம் மக்கள் கொண்ட சிறு மாநிலத்தில், ஒரு மருத்துவமனையிலேயே மாதத்திற்கு மூன்று பாதிக்கப்பட்ட பெண்கள் என்றால்? மாநிலம் முழுவதும், நாடு முழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு எத்தனை பேர் வருவார்கள்? வெளியில் சொல்லமுடியாமல் மூடிமறைக்கப்பட்டு குமுறிக் கொண்டிருக்கிற பெண்கள் எத்தனை பேர்? என்பதை நினைக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

இக்கொடுமைகள் சமூகத்தில் எந்த அளவுக்கு வேருன்றி இருக்கின்றன என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இப்பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய நிலவுடமை ஆணாதிக்கத்தையும், இந்தியா கடைப்பிடித்து வரும் புதிய பொருளாதார கொள்கையால் ஏற்படும் மனிதமற்ற, அறநெறியற்ற சீரழிந்த கலாச்சாரத்தையும், இதற்கு காரணமான அரசு அமைப்பையும் மூடி மறைத்துவிட்டு அல்லது கவனமாக ஒதுக்கி விட்டு  ”பெண்கள் ஆடை அணிவது சரியில்லை, சட்டம் சரியில்லை” என்று மழுப்புகிறார்கள்.

இதில் எது உண்மை? யார் குற்றவாளிகள்? பெண்களின் வரலாற்று பாத்திரம் என்ன? உண்மையை விவாதிக்க அணி திரண்டு வாருங்கள்.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

பெண்ணை போகப்பொருளாய், ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் நடத்தும் ஆணாத்திக்க நிலவுடமை பண்பாட்டை அறுத்தெறிவொம்!

ஆபாச வக்கிரங்களை கடைவிரித்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையை தூண்டும் ஏகதிப்பத்திய சீரழிவுக் கலாச்சாரத்தை துடைத்தெறிவொம்!

மறு காலனியாக்க கொள்கையை எதிர்ப்பின்றி நடத்த சாராயப்போதை, நுகர்வெரியில் ஆழ்த்தி மக்களை உழைக்கும் விலங்குகளாக்கும் ஆளும் வர்க்க சதியை முறியடிப்போம்!

மனித இனத்தை உருவாக்கி பேணுகின்ற பெண்ணினத்தின் மேன்மையை உயர்த்திப்பிடிப்போம்!

பாலியல் துன்புறுத்தல்களை அவமானமாக கருதி முடங்கிக்கொள்ளாமல், ஆணாதிக்க பொறுக்கிகளை அடையாளம் காட்டுவோம்!
அடித்து நொறுக்குவொம்!

பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறை புரிந்தவர்களில் முதல் குற்றவாளிகள் போலிசு-ராணுவம்-அதிகார வர்க்கமுமே!

சினிமாக்கள், பத்திரிகைகள்,விளம்பரங்கள், இணையம், செல்போன் அனத்திலும் ஆபாச காமவெறியை அனுமதித்து மக்களை சீரழிப்பதே இந்த அரசுதான்!

சட்டத்தை க்டுமையாக்குவது – தூக்கு தண்டனை என்பது பம்மாத்து! இந்த அரசமைப்புக்குள்ளேயே தீர்வு என்பது ஏமாற்று!

பாலியல் வெரியாட்டங்களுக்கு காரணமான நிலவுடமை – பார்ப்ப்னிய சாதி ஆணாதிக்கத்தையும், மறுகாலனியாக்க கலாச்சாரத்தையும் பாதுகாப்பதே இந்த போலி ஜனநாயக அரசுதான்!

போலி ஜனநாயக அரசை வீழ்த்தி, புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் அமைப்பதே பெண்களின் ஜனநாயகத்திற்கான ஒரே மாற்று!

அணிதிரண்டு வாருங்கள்! ஆதரவு தாருங்கள்!

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாள்ர் முன்னணி, புதுச்சேரி
தொடர்புக்கு: 9488778940

  1. என்ன சொல்ல வருகிறீர்கள் ராம் கூட்டத்துக்கு அனுமதி கிடைத்தால் அது luck என்கிறீர்களா ?
    புதுச்சேரி பொதுக்கூட்டம் புதுமைகளப் படைக்கட்டும் புரட்சியினை வளர்க்கட்டும் !
    வாழ்த்துகள்

  2. இந்த பொதுக்கூட்டம் வெல்லட்டும்.நாடு முழுவதும் நடக்கும் பாலியல் வல்லுருவுக்கு எதிராக நடக்கும் இந்த பேரனியில் கலந்துகொல்ல வழ்துக்கல்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க