Sunday, January 16, 2022
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!

பிணத்தையும் விட்டு வைக்காத வன்னிய சாதிவெறி!

-

செத்த பின்னும் போராடியது சேரிப்பிணம்! பிணத்திடம் போய் வீரத்தைக் காட்டுவதா! ‘வீர’ வன்னியரின் கோழைத்தனம்!

கடலூர் அருகே உள்ள கோண்டூர் பனங்காட்டு காலனியைச் சேர்ந்த உடல்நலக் குறைவால் இறந்து போன தெய்வநாயகத்தின் பிணம்தான் கடந்த 18ம் தேதி மாலை உண்ணாமலைச் செட்டி சாவடிக்கு அருகில் போராடியது.

சென்ற முறை சவ ஊர்வலத்தின் போது “எங்கள் தெருவழியாக உங்கள் சாவு வந்தால் பாடையில் உள்ள பூவையும் மாலையையும் எடுத்து எங்கள் கோயில் மீதும் பெண்கள் மீதும் வீசுகிறீர்கள். எனவே இனிமேல் பறையன் பொணம் இந்த வழியா வரக் கூடாது” என்றனர் அப்பகுதியில் வசிக்கும் வன்னியர்கள். இதோடு மட்டும் நிற்கவில்லை. ‘மேளம் அடிக்கவோ, வெடி வெடிக்கவோ கூடாது’ என்று தடையும் விதித்தனர்.

இந்த முறை தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த சப்தமும் இன்றி அமைதியாகவே சென்றனர்.

04-malaimalar-photoவன்னியர்கள் வசிக்கும் பகுதியான சாவடி விளையாட்டுத் திடல் அருகே 30 பேர் கொண்ட வன்னிய சாதி வெறிக் கும்பல் ஒன்று கையில் உருட்டுக் கட்டை, இரும்பு பைப்புடன் சவ ஊர்வலத்தில் வந்தவர்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியது. திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலைக் கண்டு பதட்டமடைந்த மக்கள் அடிதாங்க முடியாமல் பதறிக் கொண்டு சிதறி ஓடினர். அப்போது பிணத்தைத் தூக்கிச் சென்ற வேலாயுதம், மணி பாலன், செந்தில் குமார், விமல், ஐயனார் ஆகியோர் தலையிலும் கையிலுமாக அடிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட  மயங்கி விழுந்தனர். ஆனாலும் அந்த குண்டர்களின் வெறி அடங்கவில்லை. பாடையை பிய்த்து எறிந்து, செத்த பிணத்தை காலால் எட்டி உதைத்து தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடு ரோட்டில் பிணம் மறியல் போராட்டம் நடத்தியது.

ஒன்றரை மணி நேரத்திற்கு பின் வந்திறங்கிய கடலூர் டி.எஸ்.பி. போலிஸ் சிலரை விரட்டிப் பிடித்து வேனில் ஏற்றியது. இதில் முக்கிய நபர்கள் ராஜேஷ், ராஜீவ் காந்தி, அருள், பாலமுருகன், திருமால் மோகன் ஆகியோரின் தலைமையில்தான் இந்தக் கொலைவெறியாட்டம் அரங்கேறியுள்ளது. பின்னர் 200க்கும் மேற்பட்ட அதிவிரைவு ஆயுதப் படை போலிசார் புடை சூழ அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார் தெய்வநாயகம்.

கடந்த நவம்பர் 7ம் தேதி தர்மபுரி நத்தம் தாக்குதலைத் தொடர்ந்து பாச்சாரப் பாளையம், சேத்தியாத் தோப்பு, சென்னிநத்தம், பண்ருட்டி மேலிருப்பு, புதுச்சேரி காட்டேரிக்குப்பம், விழுப்புரம் அருகே கழுப்பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட சாதிவெறித் தாக்குதல்களை பத்திரிகைகள் இரு பிரிவினர் மோதல் என்றே செய்தி வெளியிட்டன.

இங்கு சாவடியில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பல் வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் சேர்ந்து தாக்கி உள்ளனர். பொறுக்கித் தின்ன அரசியல் கட்சி, தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கியாள சாதி வெறி என்று இரட்டைத்தன்மையுடன் மீண்டும் புத்துருவாக்கம் செய்து கொண்டுள்ளனர் வன்னிய சாதி வெறியர்கள்.

இப்பகுதியில் வசிக்கும் வன்னிர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கட்டிட வேலை, சூளை வேலை, ஆட்டோ ஓட்டுவது, என எல்லா வேலைகளிலும் இணக்கமாகவும் நெருக்கமாகவும் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான் எனப் பழகிக் கொண்டாலும் இடையிடையே நடக்கும் இந்தத் தாக்குதல்களினால் உழைப்பாளி மக்கள் சாதியாக பிளவுபட்டு விடுகின்றனர்.

ஒவ்வொரு தாக்குதலிலும் ஊர்த்தெருக்கள் பாதிப்பதில்லை. சேரிகள்தான் பெரும் இழப்பை சந்திக்கின்றன. வீடு எரிப்பு, உடைமைகள் சூறையாடப்படுதல், பெண்கள் மானபங்கம், உயிரிழப்பு, உடல் உறுப்புகள் இழப்பு என்று மொத்த வாழ்க்கையுமே தொலைத்து நிற்பவர்கள் சேரிமக்கள்தான்.

நிலவுகின்ற இந்த சமூக அமைப்புக்குள், தேர்தல், இடஒதுக்கீடு, சலுகைகள், சீர்திருத்தங்கள் மூலம் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையில்  மாற்றத்தைக் கொண்டு வந்து விட முடியாது என்பதைத்தான் இத்தகைய சம்பவங்கள் நமக்கு உணர்த்தும் உண்மையாக உள்ளது. ஒவ்வொரு பிரச்சனையும் சமாதானக் கூட்டம், வாழக்கு வாபஸ், நட்ட ஈடு என்பதோடு முடிக்கப்படுகின்றது என்பதுதான் கடந்த கால அனுபவம்.

எனவே சாதிவெறியைக் கக்கும், கட்டி காக்கும் இந்த சமூக அமைப்பையே புரட்டிப் போட வேண்டுமானால் சாதி அடையாளத்தைத் தூக்கி எறிந்து விட்டு வெண்மணியின் திசை வழியில் வர்க்கமாய் போராடுவது ஒன்றே வழி.

எரியும் வீட்டுக்குள் இருந்து கொண்டே தீயை அணைக்க முடியாது.
சாதிக்குள் இருந்து கொண்டே சாதியை ஒழிக்க முடியாது.

தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்

 1. //இதோடு மட்டும் நிற்கவில்லை. ‘மேளம் அடிக்கவோ, வெடி வெடிக்கவோ கூடாது’ என்று தடையும் விதித்தனர்.//

  யாரது அங்கே? ஹரிகுமாரா? rssஆ? பாய்மார்கள் தொழுகையின்போது மேளம் அடிக்க விட மாட்டுகிறார்கள் என குஸ்தி போட்ட மாவீரர்களே? வீர வன்னியர்களிடம் உங்களது வீரத்தை காட்டுவீர்களா? காட்டமுடியுமா?

 2. இது உண்மையா? இதற்க்கு என்ன பதில்? இப்படி ஜாதிவேறியினால் சாதிப்பது என்ன? தலைவர் சொலவ்தைக் கேட்டு முட்டாள்கள் இப்போ ஜெயிலில்…

  சிகரெட் குடித்தா தப்பேயில்லை! அவன் உடம்பை அவன் கெடுத்துக்கிறான்; ஆனால் இங்கு நடப்பதோ? இது தான் தப்பு!

  • //சிகரெட் குடித்தா தப்பேயில்லை!

   ஏன் நீங்கள் சிகரெட் பிரியரா? சிகரெட் குடிப்பது அவனது உடம்பை மட்டும்தான் பாதிக்கிறது என்ற அறிவியல் பூர்வமான முடிவிற்கு டாக்டரேட் கொடுக்கலாமா 🙂

  • //சிகரெட் குடித்தா தப்பேயில்லை// நீங்கள் பெரிய ஞானியாக இருக்கவேண்டும்.

 3. // செத்த பிணத்தை காலால் எட்டி உதைத்து தங்கள் வெறியைத் தீர்த்துக் கொண்டனர்.//

  அய்யே ராமதாசு இதெல்லாம் ஒரு பொழப்பா? ஹ்ஹா தூ.

 4. இந்த காலத்திலும் இப்படியா? இது போன்ற காட்டுமிராண்டிகளை பார்க்க அந்த ஊருக்கு போக ஆசைப்படுகிறேன் அந்த ஊருக்கு போகும் வழியை யாராவது சொல்லுங்கள்……ஊராட்சிமன்றம், சுயஉதவி குழுக்கள், ரேஷன் கடை, ஸ்கூல், டாஸ்மாக், டவுனுக்கு போற ரோடு,டீவீ ,ரேடியோ, செய்திதாள்கள்,படித்த மனிதர்கள் இது போன்ற ஏதாவது அந்த ஊரில் இருக்கிறதா என்று பார்க்க.வன்னியர்கள் என்பவர்கள் பார்க்க போனால் கூட வெட்டுவார்கள் என்று என் நண்பர் சொல்கிறார் உண்மையா?

  • வினவின் பதிவுகளை மட்டுமே படிப்பவராக இருந்தால் அது மிக ஆபத்தான செயல். வினவு பெரும்பாலும் ஆதிக்க ஜாதி என்றும் வன்னிய ஜாதிவெறி என்றும் எழுதுவது புதிது அல்ல என்பதை வினவின் பெரும்பாலான கட்டுரைகள் வுணர்த்தும். வன்னியர்கள் சற்று முன்கோப காரர்களாக அறிகிறேன். மற்றபடி பழகுவதற்கு மிகவும் நேர்மையானவர்கள், நண்பனுக்காக தன் இனத்துடனும் பகை வளர்ப்பதை பற்றி கவலை படாதவர்கள். வன்னியர்களுக்கு பிடிக்காத விசயம் இரண்டு. 1. வன்னிய பெண் வேறு இனத்தில் திருமணம். 2. நம்பிக்கைதுரோகம். இந்த விசயத்தில் வன்னியர்கள் மிகவும் முரடர்கள். தலித் தேசிய ஜாதியாக அறிவித்து, ஐயர் வீட்டில் பொண்ணு கொடுத்துவிட்டால் வினவுக்கு பதிவு இடவேண்டிய அவசியம் இருக்காது. என்ன செய்ய ஐயருக்கு பொண்ணு இல்ல.

   • வன்னியர்களுக்கு பிட்க்காத விஷயம் நம்பிக்கை துரோகமாம் ,
    அப்படியானால் ராமதாஸ் அவர்கள் ப ம க தொடங்கிய போது மக்களிடம் சிலவாக்குறுதிகளை தந்தார் அதில்
    1 எனதுகட்சிக்காரன் லஞ்சம் வாங்கினால் நடுவீதியில் வைத்து சவுக்கால் அடிப்பேன் என்றாராம்
    2 நானோ எனது குடும்ம்பத்தில் உள்ளவர்களோ ஒரு கிராம பஞ்சாயத்து பதவிக்கு கூட போட்டியிட மாட்டோம் எனவும் கூறி வாக்காளர்களை நம்ப வைத்தார் ஆனால் நடப்பது என்ன?
    தனது அன்புமகனை மத்திய அமைசர் ஆக்கி அழகு பார்த்தார் அந்த மகனோ தற்போது ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டு சி பி ஐ அலுவலகங்களுக்கு அலைகிறார் இது நம்ம்பிகை துரோகமா?வன்னிய சாணக்கியமா?

   • அய்யா ,
    அப்படின்னா அந்த ரெண்டு பழக்கமும் பிறவி குணம்னு சொல்றீங்களா ..
    பிறப்பு ஏதேனும் குணத்தை கொடுக்குதா ..இல்ல வளர்ப்பு தான் அதை கொடுக்குதா

  • //பார்க்க போனால் கூட வெட்டுவார்கள் என்று என் நண்பர் சொல்கிறார் உண்மையா?// நீங்க எங்க அய்யா இருக்கீங்க, சந்திரனிலா.

  • ஊங்கள் நண்பர் சங்க காலத்து மனிதராய் இருப்பார் போளும்… அவர்கள் மாறி நூற்றாண்டுகள் கடந்து விட்டது.

 5. இப்படி எல்லாம் ஜாதி வெறியினால் பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை இன்னும் அதிகரிக்க வேண்டும்

 6. சம்பவம் உன்மைஎன்றால் வன்மையாக கண்டிக்கிறோம். வன்னியர்கள் தலித் விரோதபோக்கை கை விடவேண்டும். இதற்கு முக்கிய காரணம் தலித் மக்களை தூண்டும் திருமாவும் அதற்கு எதிராக இறங்கி இருக்கும் ராமதாஸ் ஐயாவும் தான். தலித் மக்களும் ஆதிக்கசாதி மக்களும் இணக்கமாக இருக்க காதல் திருமணம் மட்டுமே தீர்வு என திருமாவும், வினவும் நஞ்சு விதைப்பதை நிறுத்த வேண்டும். அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேறுவோம், அப்போது ஜாதி தானாக அழியும். தலித் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும். பொருளாதார இல்லைஎன்றால் பொருளாதார ரீதியாக முன்னேறிய தலித் மக்களே அனைத்தையும் அனுபவித்து முன்னேறி வருகிறார்கள். இடஒதுக்கீடு அடிப்படை தலித் மக்களுக்கு அனைவருக்கும் கிடைக்க பொருளாதார ரீதியாக உள் இடஒதுக்கீடு வேண்டும். வினவு ஆசிரியரே குரல் கொடுங்கள். நாங்களும் வருகிறோம்.

   • ஹாஹஹா.. இடஒதுக்கீடு, பொல்லாத இட ஒதுக்கீட. யாருக்கு வேணும் இது? அம்மா தாலிய வித்துதான் தனியார் கல்லூரில படிச்சுபுட்டு வந்தோம். இந்த காலத்துல இடஒதுகீட வச்சு ஒரு மண்ணும் புடுங்க முடியாது. எங்களுக்கு வேண்டாம் இந்த அடுத்தவன் வயத்துல அடிக்கற பொழப்பு. அரசாங்கத்த நம்பி பொழப்ப ஓட்டினது அந்த காலம் அப்பு. தூங்காதீங்க. போராட பொறந்தாச்சு. பார்போம் ஒரு கை.

  • ////இதற்கு முக்கிய காரணம் தலித் மக்களை தூண்டும் திருமாவும் அதற்கு எதிராக இறங்கி இருக்கும் ராமதாஸ் ஐயாவும் தான்//// What non sense is this??? does the recent happenings created by Dr.Ramadoss (integrating other caste against entire dalith community) match with your comment., please be neutral in commenting…

  • காதல் திருமணமே நஞ்சு எனும் மனநிலைக்கு வந்தபின் காதலை போற்றும் தமிழும் விசமாகத்தான் உங்களால் பார்க்கப்பட்டுமா?
   ஒரு சில காதல் சோகத்திலோ தவறிலோ முட்ந்திருக்கலாம் அதற்க்காக
   காதலே விசமாகுமா?பெற்ற பிள்ளை ஒருவன் தாயயே கொன்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன அதற்க்காக பிள்ளை பெறுவதே பாவமா?அ

   • யாரும் காதலை எதிர்க்கவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. காதல் தானாக வரவேண்டும். இன்றைய காலகட்டில் பொருளாதரம் தான் காதலுக்கு பெரிய தடை. மு.க குடும்பத்தை பார்த்தாலே புரியும். பொருளாதாரம் இருந்தா காதல் என்ன, சம்பந்தம் கூட சுலபமா போட முடியும். வீரமணி சமீபத்தில் பள்ளிகளில் இருந்து காதலை தொடங்குங்கள் என அறிவுரை சொல்லி கொடுக்கிறார். படிக்க வேண்டிய வயசுல காதல் தேவையா? “கவுண்டன் பொண்டாட்டி, எங்களுக்கு வப்பாட்டி”. “வன்னியன வெட்டு, அவன் பொண்டாட்டிய கட்டு”. இப்படி பிரச்சாரம் பண்ணினா, எல்லா ஜாதி காரனும் காத பொத்திகிட்டு போகனுமா? அதுக்கு இங்க யாரும் சொறன கெட்ட ஜென்மம் இல்ல. வெட்டுக்கு வெட்டு. குத்துக்கு குத்து. அடங்க வேண்டிய இடத்துல இங்க யாரும் இல்ல.

    • தமிழ்நாடே, இந்தியாவே சேர்ந்து ப்ராமனர்களைக் கேவலப் படுத்துகிறார்கள்…அவர்கள், அடங்கி செல்லவில்லையா? “துஷ்டனைக் கண்டால் தூர விலகு”…சத்தியம் ஒரு நாள் ஜெயிக்கும்…

 7. சாதி வெறி பிடித்தவர்கள் இருக்கும் ஊர்கள் பக்கத்தில் தொழிற்சாலைகள் அமைத்து,அனைத்து தரப்பினர்க்கும் வேலையும் அதைசார்ந்த சிறு தொழில் வாய்ப்புகளையும் கொடுத்தால், அடிப்படை வசதிகள் பெருகி இளைஞர்கள் படித்து மாநகரங்களுக்கெல்லாம் எல்லாம் போய் வந்தால் நிச்சயம் சாதி வெறியை விட்டுவிடுவார்கள்.

  • அப்படியானால்?ராமதாசும் படிக்காதவர்கலா?மாநகரஙலைபார்க்காதவடர்கலா?

 8. ஏண்டா இப்படி செய்தீர்கள் என்று அவன் சொந்தக்காரனே நாலு ஊர்களில் இருந்து வந்து கண்டிப்பது போல் ஒரு பண்பாடாவது அவர்களுக்குள் இருந்தால், செய்வது தவறென்று புரியும் .அவன் சாதி தலைவரே வெட்டுங்கடா குத்துங்கடா என்றால்?…. தலித்கள் பக்கத்து மாநிலங்களின் தலித் அமைப்புகள் உதவியோடு ஒரு பெரிய பிரசார பயணம் ஏற்பாடு செய்யவேண்டும். தீண்டாமை இல்லாத கிராமங்களுக்கு தரும் ஊக்கத்தொகையை அரசு இன்னும் அதிகம் தரவேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க