Wednesday, August 4, 2021
முகப்பு செய்தி போலீசுக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி!

போலீசுக்கு எதிராக மாணவர்கள் போர்க்கொடி!

-

திருச்சியில் 24.2.2013 அன்று சட்டக்கல்லூரி மாணவர் போலீசால் ஆபாசமாக திட்டி தாக்கப்பட்டதை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் 26.2.2013 அன்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி ஈ.பி ரோட்டில் நேற்று முன்தினம்(25.2.2013) இருசக்கர வாகனத்தில் சென்ற சட்டக்கல்லூரி மாணவர் விவேகானந்தன் மற்றும் அவரது நண்பர்களை கோட்டைகுற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலகுமாரன் உட்பட 4 போலீஸ், வாகனசோதனை என்ற பெயரில் அழைத்து ஆபாசமாக திட்டி வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர். இதை எதிர்த்துக்கேட்ட மாணவர் விவேகானந்தனை பலமாக அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர் விவேகானந்தன் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது போன்றே போலீசார்கள் சட்டத்தையும் மதிப்பதில்லை, சட்டம் படிக்கும் மாணவர்களையும், வழக்கறிஞர்களையும் மதிப்பதில்லை. மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சம்மந்தப்பட்ட போலீசார்கள் மீது உரிய வழக்குகள் பதிவு செய்து கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரியும், இன்ஸ்பெக்டர் பாலகுமாரன் உட்பட 4 பேரை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் 25.2.2013 அன்று சட்டக்கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சட்டக்கல்லூரி கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆனால் நடவடிக்கை எடுக்காததால் மாணவர்கள் 26.2.2013 அன்று  புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தை தடுப்பதற்காக போலீஸ் வண்டிகளை நிறுத்தி மாணவர்களை சுற்றி வளைத்தது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சம்மந்தபட்ட போலீஸ் மீது உரிய வழக்குகள் பதிவு செய்யுமாறு மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மாணவர்கள், FIR நகல் கொடுக்கும் வரை இடத்தை விட்டு நகரமாட்டோம் என உறுதியாக போராட்டத்தை நடத்தினர்.

ஆனால் போலீஸ் கைது நடவடிக்கையில் இறங்கியதால் மறியல் சட்டக்கல்லூரியிலிருந்து டி.வி.எஸ் டோல்கேட் வரை போலீஸ் போட்டிருந்த தடையை உடைத்துக் கொண்டு முன்னேறியது.  இதில் சட்டக்கல்லூரியின் கிளை செயலர் கர்ணா தலைமை தாங்கினார் இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே நமது தோழமை அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் செயலாளர் தோழர் சீனிவாசனுக்கு, காமராஜ் என்ற மற்றொரு காவல் துறை ஆய்வாளர் தொடர்பு கொண்டு ‘பிரச்சனையை பெருசாக்காதிங்க, அவரு கால்ல வேணாலும் விழுறேன்னு சொல்றாரு, இத இப்படியே விட்ருங்க’ என்று கெஞ்சினார். மற்றொரு புறம் டி.சி கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் ‘நான் விசாரிக்கிறேன்’ என்று நாடகமாடினார்.

சுமார் 80 மாணவர்கள் நீதி கேட்டு போராடியவுடன் காவல் துறையே அஞ்சி நடுங்குகிறது. அப்படியிருக்க உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்தால் பாசிச ஜெயாவின் குண்டர் படையாகிய காவல் துறையின் கொட்டத்தை அடக்குவது மட்டுமல்லாமல், நமது உரிமையையும் பெற முடியும் என்பதை சட்டக்கல்லூரி மாணவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 80 மாணவர்களை விடுவிக்கக்கோரி இரண்டு பிரிவாக 125 மாணவர்கள் அதே இடத்தில் மறியல் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் :
திருச்சி சட்டக்கல்லூரி கிளை, பு.மா.இ.மு

 1. சட்டத்தை வைத்து வயிரு பிழைப்புநடத்தும் காக்கி சட்டை ரவுடிகலின் கொட்டத்தை அடக்க முடியும் என்பதைநிருபித்துகாட்டிய சட்டக்கல்லுரி மானவர்கலுக்கு வழ்த்துக்கல்.

  • பொறுக்கி, பொறம்போக்கு, திருடன், விபச்சார தொழில் செய்ரவன், சாதி வெறியன், மதவெறியன் போன்ற ஒட்டுமொத்த கும்பலும் சட்டம் இயற்றுபவர்களாக (அரசியல்வாதிகள் ), இருக்கும்போது சட்டம் படிப்பவர்கள் ரவுடியாக இருப்பது என்ன தப்பு??

  • ….ஆமாம் அரிகுமார் நீங்கள் சொல்வதைப்போல் இவர்கள் தான் //Lawyer profession itself is a big fraud// நீதிபதிகளாக இருந்து குஜராத் இந்து மதவெறியாட்டம், பாபர் மசூதி இடிப்பு, அப்சல்குரு தூக்கு இன்னும் நிறைய அயோக்கியத்தனமாக தீர்பு வழங்கினர்.

   அரிகுமார் இப்பவாவது புரியுதா இந்த போலி ஜனநாயகத்தின் லட்சனத்தை?

 2. யார்யா இந்த கிருக்கன்.வக்கீல் தொழிலே திருட்டு தொழில்னு உளருகிரான்.

  அதி புத்திசாலியே அப்படின்னா மோகன் பராசரன்,வகையராவும் திருடர்கள்தானா.பதில் சொல்லுயா பார்ப்பன வெரியனே.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க