சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!
சன் – கலைஞர் – விஐய் டி.வி போன்ற விசப்பாம்புகளே!
காமவெறியைத் தூண்டும் ஆபாசக் குத்தாட்டங்களையும் –விளம்பரங்களையும் உடனே நிறுத்துங்கள்!
என்ற தலைப்பில் பாலியல் வன்முறையைத் தூண்டும் “மானாட மயிலாட’’ ஆபாசக்கூத்தை உடனே நிறுத்தக்கோரி இன்று காலை 11 மணிக்கு சென்னை கலைஞர் தொலைக்காட்சி அலுவலகம் முன்பு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சுமார் 65 தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சென்றனர். பெண் தோழர்கள் பேருந்தை விட்டு இறங்கியதுமே கைது செய்யத் தயாராக நின்றனர் காவல் துறையினர். பத்திரிகையாளர்களையும் அங்கு குவித்திருந்தனர்.
‘மற்ற ஓட்டுக் கட்சிகளைப் போல டிவி கேமராவுக்கு போஸ் கொடுத்து விட்டு கலைந்து விடுவார்கள்’ என்று எதிர்பார்த்து ‘சரி, சரி மீடியா எல்லாம் பார்த்தாச்சு, கெளம்புங்க’ என்று போலீஸ் வேனில் ஏறச் சொன்னார்கள் போலீஸ். பெண்களையும் குழந்தைகளையும் பிடித்துத் தள்ள ஆரம்பித்தனர்.
ஆனால் அதை எதிர்த்த தோழர்கள், ‘ஆர்ப்பாட்டம் நடத்தி மக்களிடம் கருத்துக்களை கொண்டு சேர்க்க வேண்டும். இந்த கலாச்சார சீரழிவு பிரச்சனையை புரிய வைக்க வேண்டும்’ என்று வாதாடினர். பெண் போலிசாரிடம் ‘உங்களையும் பாதிக்கக் கூடிய இந்த பிரச்சனைக்காக நாங்கள் போராடுகிறோம். அதை தடுக்கக் கூடாது’ என்று வாதாடினார்கள்.
அதைத் தொடர்ந்து தோழர்கள் சுமார் அரை மணி நேரம் அணிவகுத்துச் சென்று முழக்கங்கள் எழுப்பினர்.
உழைக்கும் மக்களே!
- இளம் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் அனைத்து டி.வி களின் ஆபாச வக்கிரங்களையும் ஒழித்துக்கட்டப் போராடுவோம் !
- ‘என் தங்கையின் கற்பையல்லவா காணிக்கையாகக் கேட்டான் அந்தப் பூசாரி’ என்று வீரவசனம் எழுதிய கலைஞர் ‘’மானாட மயிலாட’’ என்ற பெயரில் ஆயிரமாயிரம் தங்கைகளின் மானத்தை விலைபேசி தனது டி.வி யின் மூலம் கல்லா கட்டும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவோம்!
- நண்டு லுங்கிக்கும் ஆக்ஸ் செண்டுக்கும் சோரம்போகும் இழிப்பிறவிகளாக பெண்களை சித்தரிக்கும் வக்கிர விளம்பரங்களை விரட்டியடிப்போம் !
- “ஆயிரங்காலத்து பயிர் திருமணம்‘’ என்ற மக்களின் முதுமொழியை முடமாக்கி அரைக் காசு பெறாத ‘மாசா’ விற்கு திருமணத்தை விலைபேசும் வக்கிர விளம்பரங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம் !
- ஜுனியர் சூப்பர் சிங்கரில் ‘’அயிட்டம் சாங்கில் பீலிங் பத்தல‘ ’என்று துளிர்களிடம் காம உணர்ச்சியைத் தூண்டும் பணப் பேய்களுக்கு பாடை கட்டுவோம் !
- பெண்ணை போகப்பொருளாய் ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் சித்தரிக்கும் விளம்பரங்களை, சீரியலை, சினிமாக்களை ஒழித்துக்கட்ட ஒரணியில் திரள்வோம் !
- பெண்ணின் மேன்மையை சிதைக்கும் பெண்ணின் ஜனநாயக உரிமையை மறுக்கும் பார்ப்பன – சாதி ஆணாதிக்கத்தையும் மறுகாலனியாக்கப் பண்பாட்டையும் பாதுகாக்கும் இந்த போலி ஜனநாயக அரசை மோதி வீழ்த்துவோம்!
புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் கட்டியமைப்போம்! பெண்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுப்போம்! என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பெண்கள் விடுதலை முன்னணி செயலர் தோழர் உஷா ஊடகங்களிடம் கருத்துக்களை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
A right and nice approach. போராடும் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தேவையான போராட்டம். தமிழகமெங்கும் பரவட்டும். வாழ்த்துகள்!
மானம், வீரம், தமிழ்ப் பண்பாடு என்றெல்லாம் பேசும் தமிழினத் (துரோகி ) தலைவர் கருணாநிதியின் ( கலைஞர் டீவியில் ” மானாட மயிலாட ” என்ற பெயரில் ஆபாசக் கூத்தாட அனுமதிக்கும் ) அயோக்கியத்தனத்தை சிறப்பாக அம்பலப்படுத்தியிருக்கின்றனர் தோழர்கள்.
போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்திய தோழர்களுக்கு வாழ்த்துகள்.
Congrats !
k not bad keep it up
வாழ்த்துக்கள்.
சினிமா, TV, சாராயம், இலவசம் இவற்றை ஒழிக்கவேண்டும்.
வாழ்த்துக்கள் தோழர்களே!!!
தோழர்கள் பல நல்ல நல்ல கருத்துக்களுடனும் நோக்கங்களுடனும் போராடுகிறீர்கள், ஆனால் இது எத்தனை பேரை சென்று அடைகிறது. பெறும்பான்மை மக்களை இவை சென்று அடைய வேறு மாற்று வழிகள் இல்லையா?
Dear Vinavu,
A very very meaningful protest; TV is the root cause of all the sexual violence.
My heartiest congrats to those Women and Vinavu for publishing such an article…
Regards
ravi
சிறு பொறி பெருங்காட்டுத் தீயை மூட்டும் நாள் நெருங்கி வருகிறது.தேவையான,தீரமிக்கப் போராட்டம்.வாழ்த்துக்கள் தோழர்களே!
எது ஆபாசம் அல்லது விரசம் என்பதில் வினவு சற்று கவனமாக இருக்கவேண்டும். மத அடிப்படை வாதிகளின் அணுகுமுறைக்கும், இடதுசாரி அணுகுமுறைக்கும் வித்தியாசம் உண்டு! பெண்கள் அரைகுறை ஆடை அணிவதுதான், ஆண்களின் அத்துமீறலுக்கு காரணம் என்ற பத்தாம்பசலி எண்ண்த்தை விட்டு, பெண்களை கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளை , விளம்பரஙகளை விமர்சித்து பெண்கள் அமைப்பினரே போராட வேண்டும்! வேறு நல்ல நிகழ்ச்சி களும் தொலைக்காட்சியில் வருகின்றனவே!