Sunday, April 18, 2021
முகப்பு செய்தி ஆபாசக் குத்தாட்டங்களையும் விளம்பரங்களையும் நிறுத்துங்கள்!

ஆபாசக் குத்தாட்டங்களையும் விளம்பரங்களையும் நிறுத்துங்கள்!

-

சமூக விடுதலையை முன்னெடுப்போம் ! பெண் விடுதலையை சாதிப்போம் !

சன் – கலைஞர் – விஐய் டி.வி போன்ற விசப்பாம்புகளே!
காமவெறியைத் தூண்டும் ஆபாசக் குத்தாட்டங்களையும் –விளம்பரங்களையும் உடனே நிறுத்துங்கள்!
– கண்டன ஆர்ப்பாட்டம்

உழைக்கும் மக்களே!

இளம் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் அனைத்து டி.வி களின் ஆபாச வக்கிரங்களையும் ஒழித்துக்கட்டப் போராடுவோம் !

 • ‘என் தங்கையின் கற்பையல்லவா காணிக்கையாகக் கேட்டான் அந்தப் பூசாரி’ என்று வீரவசனம் எழுதிய கலைஞர் ‘’மானாட மயிலாட’’ என்ற பெயரில் ஆயிரமாயிரம் தங்கைகளின் மானத்தை விலைபேசி தனது டி.வி யின் மூலம் கல்லா கட்டும்  அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவோம்!
 • நண்டு லுங்கிக்கும் ஆக்ஸ் செண்டுக்கும் சோரம்போகும் இழிப்பிறவிகளாக பெண்களை சித்தரிக்கும் வக்கிர விளம்பரங்களை விரட்டியடிப்போம் !
 • “ஆயிரங்காலத்து பயிர் திருமணம்‘’ என்ற மக்களின் முதுமொழியை முடமாக்கி அரைக் காசு பெறாத ‘மாசா’ விற்கு திருமணத்தை விலைபேசும் வக்கிர விளம்பரங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம் !
 • ஜுனியர் சூப்பர் சிங்கரில் ‘’அயிட்டம் சாங்கில் பீலிங் பத்தல‘ ’என்று துளிர்களிடம் காம உணர்ச்சியைத் தூண்டும் பணப் பேய்களுக்கு பாடை கட்டுவோம் !
 • பெண்ணை போகப்பொருளாய் ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் சித்தரிக்கும் விளம்பரங்களை, சீரியலை, சினிமாக்களை ஒழித்துக்கட்ட ஒரணியில் திரள்வோம் !
 • பெண்ணின் மேன்மையை சிதைக்கும் பெண்ணின் ஜனநாயக உரிமையை மறுக்கும் பார்ப்பன – சாதி ஆணாதிக்கத்தையும் மறுகாலனியாக்கப் பண்பாட்டையும் பாதுகாக்கும் இந்த போலி ஜனநாயக அரசை மோதி வீழ்த்துவோம்!

புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் கட்டியமைப்போம் ! பெண்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுப்போம் !

பாலியல் வன்முறையைத் தூண்டும் “மானாட மயிலாட’’ ஆபாசக்கூத்தை உடனே நிறுத்தக்கோரி…கலைஞர் டிவி முன்பு ஆர்ப்பாட்டம்

நாள் : பிப்.28, 2013
நேரம் : காலை 11.00 மணி

பெண்கள் விடுதலை முன்னணி
தொடர்புக்கு – 9841658457

 1. இப்படி அடி மடியிலேயே கை வச்சா எப்படிங்க? அவங்க பொழப்பு நடக்கிறதே ஆபாசத்த வச்சுத்தானே?

  கலைஞர் டிவி நிகழ்ச்சிகளில் டி.ஆர். பி பெறும் ஒரே நிகழ்ச்சி மா .ம தானாம்…….அப்படின்னா இந்த கன்றாவிய நாக்க தொங்கப்போட்டுக்கிட்டு பார்க்கிற மக்களுக்கு? சான்றோன்

 2. வீட்டுக்குலே பென்னை பூட்டி வைப்போம் என்ட்ர மனிதர் தலை கவிழ்ந்தார்.கவிழவைத்தர்கால் பெவிமு தோழர்கல் .வாழத்துக்கல்.

  • சயனைடு உண்டால் இறப்பு வரும் என்பதை, உண்டுதான் தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற அவசியம் இல்லை.

   உங்க அறிவை நினைத்தால் அப்படியே புல்லரிக்குது.

 3. முற்போக்கு பெண்கள் அமைப்பினர் பல ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் தீபா தியேட்டருக்குள் உள்ளே புகுந்து ஆபாச படத்தின் திரைச்சுருளை எடுத்து வந்து தெருவில் எரித்தார்கள். (அமைப்பு பெயர் சரியாக நினைவில்லை)

  பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை தனிப்பட்ட குற்றமாக (crime) பார்க்கும் பார்வை பலருக்கும் இருக்கிறது. அதனால், தூக்கில் போட வேண்டும், உறுப்புகளை வெட்ட வேண்டும் என பேசுகின்றனர்.

  இப்படி பேசுகின்ற பலரும் மானாட மயிலாடவும், விளம்பரங்களையும் கண்டிப்பதில்லை. எதிர்த்து போராடுவதில்லை.

  பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பினரும், அதன் தோழமை அமைப்பினர்களும் தமிழகம் தழுவிய அளவில் கடந்த இரண்டு மாதங்களாக பெண்கள் மீதான பாலியல் வன்முறையை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

  அதன் தொடர்ச்சியாக இந்த ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது. இந்த போராட்டம் பற்றி பரவவேண்டும். இந்த ஆபாச நிகழ்ச்சிகள் எல்லாமும் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.

  போராடும் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

 4. போராட்டம் நடக்கறது எந்த இடம், எந்த ஊர்ல, அந்த அமைப்பு எந்த பகுதியில செயல்படுது…. இதெல்லாம் போடாம மொட்டையா போடதிங்க.

  • பாலியல் வன்முறையைத் தூண்டும் “மானாட மயிலாட’’ ஆபாசக்கூத்தை உடனே நிறுத்தக்கோரி…கலைஞர் டிவி முன்பு ஆர்ப்பாட்டம்

   நாள் : பிப்.28, 2013
   நேரம் : காலை 11.00 மணி

   பெண்கள் விடுதலை முன்னணி
   தொடர்புக்கு – 9841658457

 5. போராடும் தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

  Attn Mr. Kathir Nilavan. Phone no is given for contact for further informations. Please check . Take care

 6. ஆபாசத்தை குடும்பத்தோடு உட்கார்ந்து பாருங்கள் என்று யாரும் சொல்லவில்லை.உங்க குழந்தைகளை கண்ணியமாக கௌரவமாக வளர்க்க வேண்டும் என்று விரும்பினால் சுட்டி, ஆதித்யா, சித்திரம்,கார்டூன் நெட்வொர்க், புதிய தலைமுறை, மக்கள் தொலைக்காட்சி போன்ற துளியும் ஆபாசம் அற்ற சானல்களை வீட்டில் பார்க்க சொல்லுங்கள்.

 7. தேவைகளின் தாக்கம் அதிகம் ஆவதே இந்த பிரச்னைகளின் ஆரம்பம். அளவோடும், எளிமையோடும் வாழ இந்த தேசத்தில் ஒருவர் கூட விரும்பவில்லை. புலியை பார்த்து சூடு போட்டுக் கொள்கிற பூனைகளாய் — கடன் பட்டேனும் நெய் குடிக்க விரும்புபவர்களாய் நாம் வாழ்கிறோம். நல்ல ஒழுக்கத்தை கற்றுத் தரும் கல்வி முறையை இன்று மனம் உவந்து ஏற்போமா என்பதே கேள்விக்குறி. பணம் மட்டுமே நம் அனைவரின் ஒரே இலக்கு. அது தேவையை தாண்டுகிறபோது — மனமும் ஒழுக்க நெறிகளை தாண்டி விடுகிறது.பிரச்னைகளின் மூல வேரை கண்டறிவோம். தனி மனித ஒழுக்கத்தை நிலைனாட்டுவோம். தேசம் மன ரீதியாக ஆரோக்கியம் அடைய ஒழுக்கனெறி மிக மிக அவசியம்.அது வரை குற்றங்களுக்கு நாம் எல்லோருமே பொறுப்பாவோம். Sridharan,Pondicherry,

 8. /பெண்ணின் மேன்மையை சிதைக்கும் பெண்ணின் ஜனநாயக உரிமையை மறுக்கும் பார்ப்பன – சாதி ஆணாதிக்கத்தையும் மறுகாலனியாக்கப் பண்பாட்டையும் பாதுகாக்கும் இந்த போலி ஜனநாயக அரசை மோதி வீழ்த்துவோம்/

  What is the connection between Brahmins and womens liberation. I think brahmin girls are much more liberated than other castes. This has nothing to with Brahmins. Will you stop this nonsense.

 9. அய்யா! எமது வீட்டிலிருப்பது ஒரே டீ வீ! அனைவரும் அமர்ந்து பார்ப்பது ஒரே நிகழ்ச்சியைத்தான்! மொத்தமாக எல்லாநிகழ்ச்சிகளையும் ஆபாசம் என கூற் முடியாது! நல்லநிகழ்ச்சியை பெற்றொர்கள் தெரிந்தெடுத்து பார்க்கலாமே! வயது வந்த வாரிசுகளை வைத்துக்கொண்டு ஏன் ஆபாச? நிகழ்ச்சியை பார்கிறீர்கள்? ஆபாசம் என்று ஆளுக்கு ஆள் தணிக்கை அதிகாரி யாக செயல்படுவதை விடுத்து ,நல்லது எது என்பதை குழந்தைகளுக்கு காட்டுஙகள்! பெற்றோர் பிள்ளைகளை வழிநடத்தவேண்டும்! ஏற்கனவே சீரழிந்த சமுதாயத்தில், தக்க வழிகாட்டுதலின்றி விடப்படும் சிறுவர்களும் சீரழிவர்! விளம்பரம்நாடும் எல்லா மீடியாக்களும் இந்த ஆபாசத்தைநம்பித்தான் இருக்கின்ற்ன ! உலகமயமாதல் இந்த படிப்பினையையும் நமக்கு புகட்டும்! மேலும் ப்ழகிவிட்ட கண்களுக்கு எது ஆபாசம் ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க