Tuesday, October 3, 2023
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?

-

டந்த பிப்ரவரி 21ம் தேதி ஹைதரபாத் தில்சுக்நகரின் சந்தைத் தெருவில் 100 மீட்டர் இடைவெளியில் இரண்டு குண்டுகள் வெடித்தன; 3 கல்லூரி மாணவர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்; 119 பேர் காயமடைந்தனர்.

இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகளை தேடுவதற்கான புலன் விசாரணை நடந்து வருகிறது.

“அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோர் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து ஏதாவது எதிர்வினை வரும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்” என்றார் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே. அதன் மூலம் ஹைதரபாத் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் அரசு அமைப்புகளின் முன் முடிவை வெளிப்படுத்தினார்.

2007ம் ஆண்டு ஹைதரபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பைப் பற்றி விசாரணை நடத்திய அதே ஹைதராபாத் போலீஸ் இப்போதும் விசாரணை நடத்துகிறது. மெக்கா மசூதி குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு முஸ்லீம் பகுதிகளில் ரெய்டு நடத்தி, பல முஸ்லீம் இளைஞர்களை சுற்றி வளைத்தது போலீஸ். அவர்கள் தனியார் பண்ணை வீடுகளில் சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆர்.டி.எக்ஸ் ஆயுதங்கள், வெடிமருந்து, ஜிகாதி பிரசுரங்கள், செல்போன் பதிவுகள், மடிக்கணினிகள், பயங்கரவாத பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு போய் வந்த விபரங்கள் இவற்றை கைப்பற்றியதாக போலீஸ் சொன்னது.

அவை அனைத்தும் பொய் என்று இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளன.

இப்போது தில்சுக் நகர் குண்டு வெடிப்புக்குப் பிறகும் முகமது ரயீசுதீன், முகமது அஸ்மத், அப்துல் ரஹீம், அப்துல் கரீம் என்ற அதே இளைஞர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. மெக்கா மசூதி வழக்கில் நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டதோடு தேசிய சிறுபான்மையினர் ஆணையம் அவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று  உத்தரவிட்டிருக்கிறது.

மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக இந்த இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலங்களை தவிர எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசால் தர முடியவில்லை என்று குறிப்பிட்டது. அந்த வாக்குமூலங்கள் கொடூரமான சித்திரவதையின் மூலம் பெறப்பட்டிருந்தன.

2007 மெக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பாக போலி வழக்குகளை உருவாக்கிய போலீஸ் அதிகாரிகள் இது வரை தண்டிக்கப்படவில்லை. சென்ற முறை உண்மையான விசாரணைக்கு தடையாக இருந்த இந்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டால்தான் தில்சுக் நகர் குண்டு வெடிப்பு பற்றிய விசாரணை நியாயமாக நடைபெற முடியும்.

சித்திக்கி
படம் : தி இந்து நாளிதழ்

இதற்கிடையில் ஹைதராபாத் பத்திரிகைகள் பெயர் குறிப்பிடாத போலீஸ்காரர்களை மேற்கோள் காட்டி குண்டு வெடிப்பில் முஸ்லீம்களின் தொடர்பு பற்றி வதந்திகளிலும் ஊகங்களையும் பரப்பி வருகின்றன.

2012 ஆகஸ்ட் மாதம் பெங்களூரு போலீசின் குற்றவியல் பிரிவு இதே ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் 14 இளைஞர்களை பயங்கரவாதிகள் என்று கைது செய்தது. அவர்களில் ஒருவரான முதில்-உர்-ரஹ்மான் சித்திக்கி என்ற டெக்கான் ஹெரால்ட் நிருபர் கடந்த 25ம் தேதி பெங்களூரின் பார்ப்பன அக்ரஹாரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

26 வயதான சித்திக்கி, ‘போலீஸ் முஸ்லீம்களுக்கு எதிராக அமைப்பு ரீதியான பாகுபாட்டை கடைப்பிடிக்கிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார். “நான் முஸ்லீமாக இருந்திருக்கா விட்டால் அவர்கள் என்னை பயங்கரவாதி என்று ஒரு போதும் கைது செய்திருக்க மாட்டார்கள். ஊடகங்களும் போலீசும் முஸ்லீம்கள் பற்றிய பொதுப்புத்தியுடன் நடந்த கொள்கின்றன. இது எனக்கு மட்டுமான பிரச்சனை இல்லை. என்னைப் போல நூற்றுக் கணக்கான முஸ்லீம் இளைஞர்கள் போலி வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.” என்றார் அவர்.

‘சித்திக்கியும் அவருடன் கைது செய்யப்பட்ட இளைஞர்களும் முக்கியமான இந்துத்துவா தலைவர்களையும் பத்திரிகையாளர்களையும் கொல்லத் திட்டமிட்டதாக’ குற்றம் சாட்டப்பட்டனர். சித்திக்கியின் சார்பில் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று போராடியதைத் தொடர்ந்து அவர் குற்றமற்றவர் என்று விடுவிக்கபட்டிருக்கிறார். மற்ற இளைஞர்களுக்கு அப்படிப்பட்ட ஆதரவும் வாய்ப்பும் கிடைக்காமல் இன்னும் சிறையில் உள்ளனர்.

“பெங்களூரு போலீசையும் பத்திரிகைகளையும் பொறுத்த வரை நான்தான் சதித்திட்டத்தின் தலைவன். நான்தான் தலைவன் என்றால் மற்றவர்கள் ஏன் இன்னமும் சிறையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கும் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்கிறார் சித்திக்கி.

சித்திக்கியும் மற்ற 14 பேரும் கைது செய்யப்பட்ட போது போலீஸ் சட்டபூர்வமான நடைமுறைகளை பின்பற்றவில்லை; அவரது குடும்பத்தினருக்கு கைது குறித்து தகவல் சொல்லவில்லை; எதற்காக கைது செய்கிறார்கள் என்ற காரணத்தை சொல்லவில்லை. 30 -40 வெள்ளை தாள்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்; அவற்றுள் ஒன்றில் முன் தேதியிட்ட போலி கைது அறிவிப்பு தயாரிக்கப்பட்டது.

சித்திக்கியுடன் விடுவிக்கப்பட்ட 28 வயதான நல்பாண்ட் ஒரு தனியார் நிறுவனத்தின் டெக்னிஷியனாக வேலை செய்பவர். “நேற்று இரவு முழுவதும் என்னால் தூங்க முடியவில்லை. நான் இயல்பு நிலைக்கு திரும்புவேனா என்று தெரியவில்லை. கடவுளின் கருணை இருந்தால் நான் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும்” என்றார்.

“போலீஸ் கைது செய்யும் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை முஸ்லீம் குல்லாய் அணியச் செய்து வீட்டை விட்டு வெளியில் வரச் செய்தார்கள்” என்கிறார் அவர்.

போலீஸ் துறைகளிலும் புலனாய்வு அமைப்புகளிலும் ஊடுருவி இருக்கும் முஸ்லீம்களுக்கு எதிரான மனப்பான்மை எந்த ஒரு வன்முறை சம்பவத்துக்கும் முஸ்லீம் இளைஞர்களை குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்து துன்புறுத்துவதையும், சித்திரவதை செய்வதையும் வழக்கமாக்கியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நடந்த காவி பயங்கரவாத சம்பவங்களில் ஆரம்பத்தில் முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்து துன்புறுத்தப்பட்டு பின்னர் பல மாதங்களுக்குப் பிறகு அவை இந்து அமைப்புகளின் பயங்கரவாதம் என்று செயல் என்று நிரூபணமாகியிருக்கின்றன.

 1. அஜ்மீர் தர்க்காவில் அக்டோபர் 11, 2007ல்  குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர்.இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. ஆர்.எஸ்.எஸ். உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.
 2. மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது.
  இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.
 3. அக்டோபர் 2009ல் மார்கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 2010ல் தேசிய புலனாய்வு நிறுவனம் வலதுசாரி பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் 11 பேர் மீது கோவாவில் உள்ள பஞ்சிம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
 4. செப்டம்பர் 8, 2006 அன்று மகராஷ்டிராவின் மாலேகானில் ஒரு மசூதிக்கு அருகில் மூன்று குண்டுகள் வெடித்து 37 பேர் கொல்லப்பட்டனர்; 100 பேர் காயமடைந்தனர்.சிமி அமைப்பைச் சேர்ந்த சல்மான் பார்சி, பரூக் இக்பால் மக்தூமி, ராயிஸ் அகமது, நூருல் ஹூடா சம்சுதோஹா, ஷபீர் பேட்டரிவாலா ஆகியோர் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஏற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆனால், முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த முகமது ஜாகித் அந்த நாளன்று மாலேகானிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தார். ஷபீர் மசியுல்லா குண்டு வெடிப்புக்கு ஒரு மாதத்துக்கு முன்பே போலீஸ் காவலில் இருந்தார். நேரடி சாட்சியங்கள் கொடுத்த தகவல்களின் படி குண்டு வைத்தவர்கள் தாடி இல்லாதவர்கள், ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக தாடி வைத்திருப்பவர்கள்.
  2008ம் ஆண்டு 7 பேர் உயிரிழந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சந்தேகம் இந்து பயங்கரவாதிகள் பக்கம் திரும்பியது. இந்த சம்பவத்துக்கும் ஆரம்பத்தில் இந்தியன் முஜாகிதீன் போன்ற குழுக்கள் சந்தேகிக்கப்பட்டன.பின்னர் அபினவ் பாரத் மற்றும் ராஷ்ட்ரீய ஜாகரன் மஞ்ச் அமைப்புகளைச் சேர்ந்த பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினன்ட் கர்னல் புரோகித் மற்றும் ஸ்வாமி அமிர்தானந்த் தேவ் தீர்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.சாத்வி பிரக்யா சிங் தாக்கூரின் மோட்டர் சைக்கிள் குண்டை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்பட்டது. விசாரணையின் போது, ‘மெக்கா மசூதி குண்டு வெடிப்புக்கும் அவர்தான் வெடிமருந்து கொடுத்தாக’ புரோகித் சொன்னார். ஆனால் ஹைதராபாத் போலீஸ் ஹூஜி உறுப்பினர்களை கைது செய்து வைத்திருந்ததால் இந்த விபரத்தை வெளியிட வேண்டாம் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு கேட்டுக் கொள்ளப்பட்டது.
 5. பிப்ரவரி 18, 2007ல் சம்ஜௌதா எக்ஸ்பிரசில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் பெரும்பான்மை பாகிஸ்தானியர் உள்ளிட்ட 68 பேர் உயிரிழந்தனர்.ஆரம்பத்தில் எல்-இ-டியும் ஜே-இ-எம்மும் குற்றம் சாட்டப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த அஜ்மத் அலியும் உண்டு.ஆனால், தடயங்கள் வலது சாரி இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்களை சுட்டிக் காட்டின. மூன்று மாதங்களுக்குப் பிறகு மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே முறை இங்கும் பயன்பட்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்குகளான சந்தீப் டாங்கேவையும் ராம்ஜியையும் போலீஸ் தேட ஆரம்பித்தது.
 6. ஜூன் 4, 2008 அன்று, தானே சினிமா குண்டு வெடிப்பு தொடர்பாக ஹிந்து ஜன்ஜாக்ரிதி மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்புகளைச் சேர்ந்த ரமேஷ் ஹனுமந்த் கட்கரியும் மங்கேஷ் தினகர் நிகமும் கைது செய்யப்பட்டனர். ஜோதா அக்பர் திரைப்படத்தை திரையிடுவதற்கு எதிர்ப்பாக அந்த குண்டு வெடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.
 7. இந்து பயங்கரவாதம்ஏப்ரல் 2006ல் நந்தாதில் உள்ள குண்டு உற்பத்தி பட்டறையில் பஜ்ரங் தள் உறுப்பினர்கள் என் ராஜ்கோண்ட்வாரும் எச் பன்சேவும் தவறுதலாக வெடிமருந்து வெடித்து கொல்லப்பட்டனர்.ஆகஸ்ட் 2006ல் அதே அமைப்பைச் சேர்ந்த ராஜீவ் மிஷ்ராவும் பூபிந்தர் சிங்கும் கான்பூரில் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருக்கும் போது கொல்லப்பட்டனர்.
  இவற்றைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் உள்ள பல நகரங்களில் மசூதிகளில் குண்டுகள் வெடித்தன.  நந்தாதில் தயாரிக்கப்பட்ட குண்டு அவுரங்காபாத் மசூதிக்கானது என்று தெரியவந்தது. சம்பவ இடத்தில் அவுரங்காபாத் வரைபடமும் பொய் தாடிகளும் முஸ்லீம் ஆண் உடைகளும் கண்டு பிடிக்கப்பட்டன.
 8. 2002-03ல் போபால் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிக்கும் கருவி உள்ளூர் இந்துத்துவா தொண்டர்கள் ராம்நாரயன் கல்சங்கரா, மற்றும் சுனில் ஜோஷியுடன் தொடர்புடையவை என்று தெரிந்தன.

குண்டுவெடிப்பு, பயங்கரவாதம் என்றால் சினிமா கதைகளில் மட்டுமல்ல நாட்டின் போலீஸ் அமைப்புகளுக்கும் உடனே முசுலீம் இளைஞர்கள்தான் நினைவுக்கு வருகிறார்கள். இந்த நினைவு பலநூறு அப்பாவி முசுலீம் இளைஞர்களை துன்புறுத்தி வருடக்கணக்கில் சிறையில் அடைப்பது என்று ஒரு பெரும் அடக்குமுறையை அமல்படுத்துகிறது. இந்தியாவின் அதிகார அமைப்புகள் அனைத்தும் இந்துமயமாகி இருக்கிறது என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? உண்மையில் இதுதான் குண்டு வெடிப்புகளை விட ஆபத்தான பயங்கரவாதம்!

மேலும்  படிக்க
Hyderabad blasts activists question presumptive probe
I hope nobody goes through what I did
Media, police should be more sensitive towards dalits and muslims – Siddiqui
Hindu terror – the mirror explodes

  • ஆமாநீ சொல்லுரது சரிதான் தேசதந்தை காந்திய கொன்ற இந்த RSS தேசபக்த இயக்கம்தாண்
   !!!!!

 1. கெல்லொ
  சந்தானம் என்ன இருந்தாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்

 2. கெல்லொ
  சந்தானம் என்ன இருந்தாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள்
  அதை விட்டுட்டுங்க

 3. யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?”///.
  .
  நீதான் வேற யாரு?ஞானேஸ்வரி ரயிலை குண்டு வைத்து தகர்த்து நூறு பேரை கொன்று அப்புறம் மன்னிப்பு கேட்கும் நீங்கள்தான் தீவிரவாதிகள்./..
  *இந்த கமண்டை(வழக்கம்போல்) மட்டறுக்காமல் விவாதத்துக்கு விட முடிந்தால் செய்யவும்

  • ஷியா சன்னி மோதல் உண்மையானது என்றால் அதன் பிண்ணியில் ஏகாதிபத்திய நாடுகளின் சதி இல்லை என்றால் அதை கண்டிக்க வேண்டிய கடமை நம்முடையது ஆனால் எந்தவித அன்னிய சக்திகள்தலையிடுகளும் இல்லாமல் உங்களுக்குள் சாதி சண்டையில் வெட்டிக்கொண்டு சாவதுதான் இந்து மத தர்மமா?

   • எந்தவித அன்னிய சக்திகள்தலையிடுகளும் இல்லாமல் உங்களுக்குள் சாதி சண்டையில் வெட்டிக்கொண்டு சாவதுதான் இந்து மத தர்மமா?///..
    ஏம்பா நீங்கதான் உலகிலேயே உயர்ந்த மதம் /மார்க்கம் இஸ்லாம் என்கிறீர்கள்..பல தெய்வ வழிபாடு முட்டாள்தனம் என்கிறீர்கள்.பின் ஏன் உங்களை பற்றி சொல்லும்போது இந்துக்கள் இதை செய்யவில்லையா என எதிர் கேள்வி கேக்குறீங்க?அப்போ இந்துக்களுக்கும் எங்களுக்கும் வித்தியாசம் இல்லை என்று சொல்றீங்களா?
    அப்புறம் வெளிநாட்டு தலையீடுகளோடு என்ன குற்றம் செய்தாலும் அது பெருமையானதோ?

   • ஷியா சன்னி மோதல் உண்மையானது என்றால் அதன் பிண்ணியில் ஏகாதிபத்திய நாடுகளின் சதி இல்லை என்றால் அதை கண்டிக்க வேண்டிய கடமை நம்முடையது///…
    இதுக்கு பேருதான் தலையை சுத்தி மூக்கை தொடுதல் என்பது
    அகமதியா மக்களை பிற பிரிவு இஸ்லாமியர்கள் ஒதுக்குவது எந்த வெளிநாட்டு சதியால்?அவை கொள்கை வேறுபாட்டால் வருவதுதானே ஒழிய இதில் வெளிநாட்டு சதி என்றெல்லாம் காமெடி

   • இதைத் தவிர ஸுன்னிகள், ஷியாக்களுக்கு வீடு கொடுப்பதில்லை பொதுவாக – வெட்டுப்பழி குத்துப்பழிதான் (பாகிஸ்தானில் இருப்பதைச் சொல்லவில்லை, உங்களுடைய சென்னை மாநரகத்தில் தான் இந்த நிலைமை!)

    ஸுன்னிகள் – பஹாய்களுக்கு, அஹ்மதிய்யா, போஹ்ராக்களுக்கு (இஸ்மைலி ஷியாக்கள் இவர்கள்) நிச்சயம் வீடு கொடுப்பதில்லை தெரியுமா? (இந்த விஷயம் பெங்களூரில், ஹைதராபாத்தில் எனக்குத் தெரிந்து நடந்திருக்கிறது, நடக்கிறது – இவர்கள் தனித்தனிக் குடியிருப்புகளில்தான் வாழ்கின்றனர் – இவர்களுக்கிடையே உரை யாடல்கள் இல்லை)

 4. ஷியா சன்னி மோதலில் மாறி மாறி மசூதிக்குள் குண்டு வைப்பவர்கள் சுத்த அகிம்சாவாதிகள்

 5. ஞானேஸ்வரி ரயிலை குண்டு வைத்து தகர்த்து நூறு பேரை கொன்றது யார்?

 6. Let the cops prove that those Hindu guys arrested are responsible for the blasts.

  Until now,no proof has been submitted and it is just a congress trick to confuse the people.

  world over people know who are the real terrorists.

 7. விட்டா எல்லாம் தற்கொலை செஞ்சுக்கிட்டாங்கனு சொன்னாலும் சொல்லுவீங்க. உங்களை மாதிரி ஆளுங்க தான் என்னை மாதிரி ஆளுங்களை ஆர்.எஸ்.எஸ் பக்கம் தள்ளுறீங்க.

  வாழ்க ஆர்.எஸ்.எஸ்.

  • வாழ்க RSSனு சொல்லு அதுதான் உன்னையும் சேர்த்து அளிக்கபோகுது….ஆமா உன் ஜாதி என்ன ?இந்த கேள்வியை நான் கேக்கல உன் rss கேட்கும்

   • Raja,
    Do you know if RSS would mind the Caste?
    This shows that you have no basic understanding of the principles and practice of RSS. And this misunderstanding is one reason why people get impressed when know the real RSS – that it is completely against casteism.
    Know your facts and then talk.
    RSS can be accused of many things, but definitely not casteism.

  • உங்களை வலி நடத்துவது உங்க அறிவு ! வேற யாரும் கிடையாது . நான் rss வாதி கிடையாது .ஆனா இன்னைக்கு தேதி வரைக்கும் ஒரு தடவ கூட எந்த வழக்கும் நிருபணம் ஆனது இல்லை !

  • பிரசாத், என்ன நீங்க…. வெள்ளி கிழமை அவாளுக்கு மட்டும் அல்ல நமக்கும் நல்ல நாள்தான்.

 8. நமது நாட்டில் குண்டு வெடித்த உடனே இ மெயில் வருகிறது இந்திய முஜாஹிதீன் குண்டு வைத்ததாக தகவல் சொல்லுகிறார்கள் .அப்புறம் ஒரு கம்புயுட்டர்போட்டோ அப்புறம் ,அவர்கள் பிடிபட்டார்கள் செய்தி வருட கணக்கில் விசாரணை .ஆதாரம் இல்லை .இதுதான் தொடர்ந்து நடந்து வருகிறது .உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதில்லை .
  பிஜெபியின் தலித் தலைவராக இருந்த பங்காருலட்சுமணன் லஞ்ச விவகாரத்தில் தெகல்காவை நம்பியவர்கள் குஜராத் ரயில் எரிப்பு சம்பவத்தில் தெகல்காவின் விசாரணைகளை ஏன் கண்டுகொள்வதில்லை ?
  தெகல்கா வின் சாட்சிகளை வைத்து உண்மைகளை கண்டுபிடித்தால் குண்டுவெடிப்புகள் நின்றுவிடும் .குண்டு வெடித்த பின்னரே தீவிரவாதிகளை தேடுபவர்கள் ஒருதடையாவது குண்டு வைக்கும் வேளையில் ,குண்டுகளை இலக்கிற்கு எடுத்தும் செல்லும் வேளையில் ,தயாரிப்பு வேளையில் முஸ்லிம்களை கைது செய்துள்ளனரா? பழைய செய்திகளை பாருங்கள்.பல உண்மைகள் தெரியும் …
  அமெரிக்காவில் தீவிரவாதிகள் அடக்கப்பட்டார்கள் .ஆம் பாம்பின் கால் பாம்பறியும் ..தீவிரவாதிகளை உருவாக்குவதே அமெரிக்காதானே .
  சென்னை குப்பத்திலுள்ள தாதா வீரமணியை உருவாக்கியது அதிமுகவே .அவன் எல்லை மீறியதும் சுட்டுத் தள்ளியதும் அதிமுகவே .சாத்தான்குள இடை தேர்தலில் ஒரு பண்ணையாரை வளர்த்ததும் அதிமுகவே.தன தேவைகள் முடிந்ததும் .என்கவுண்டரில் போட்டுதள்ளியதும் அதிமுகவே .
  சீக்கிய பிரச்சனையை ஜனதா காலத்தில்ஊதி பெரிதாக்கி வளர்த்த இந்திரா காந்தி,அவருடைய ஆட்சியில் அது வரம்பு மீறியதும் பொற்கோவிலில் நுழைந்து தாக்கி அடக்கினார் .ஆனாலும் அந்த விவகாரமே அவரது உயிரை பறித்தது
  ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
  ரசியாவை எதிர்க்க ஆயுதம் வழங்கி வளர்த்த முஜாஹிதின் கள் அமெரிக்காவுக்கு எதிராகதாலிபான்கள் ஆக போரிட்டால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
  பொருளாதார சரிவை சரிகட்ட இராக் எண்ணையை திருட சதாமை பேரழிவு ஆயுதம் என்று உலக வரலாற்று பொய்யை அவிழ்த்து விட்டு அப்பாவி மக்களை கொன்றால் அல்காய்தா உருவானால் இஸ்லாம் என்ன செய்யும்?
  சுதந்திரம் பெற்றபிறகு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் வேளையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் கருத்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று உடன்படிக்கை செய்துவிட்டு அதன்படி நடக்காததால் அந்த மக்கள் போரிட்டால் தீவிரவாதத்தில் ஈடுபட்டால் இஸ்லாம் என்ன செய்யும்?

  • நன்றி இப்ராகிம் அவர்களே! நடுனிலையாளர்கள் கேட்டுவரும் கேள்விகலே இவை! பதில் தர அதிகாரவர்க்கம் தயாரில்லை!

  • Ellam okay but Tehelka matter/Kashmir matter mattum udaikkuthu,orrugai maadhiri sethukiteenga?

   Ivalo thaan matter,8 unmayya ozhunga sonna ibrahim 2 matterla mattum balti adichiteengale?

   Bangaru Laxman kayyum kalavumaa pidipattaru,adhuvum Modi mela avunga solra kutrachattum onnu illaye?

  • //ரசியவுக்காக வளர்த்த ஒசாமா அமெரிக்காவுக்கு எதிரியானால் அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?
   ரசியாவை எதிர்க்க ஆயுதம் வழங்கி வளர்த்த முஜாஹிதின் கள் அமெரிக்காவுக்கு எதிராகதாலிபான்கள் ஆக போரிட்டால் //

   So you agree USA Govt helped Afgan people to get freedom.
   After Afgan got the freedom from Russia in 90s, did US get into their way of life?

   After receiving help from US, your guys ditched those who helped.
   //அதற்கு இஸ்லாம் என்ன செய்யும்?//
   Every one knows what role religion plays in these kind of wars!
   Motivation and Virtual reward . Read Babar Nama to understand your religions role.

   //சுதந்திரம் பெற்றபிறகு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் வேளையில் 25 ஆண்டுகளுக்கு பிறகு மக்கள்//
   Head of princely state made decision to join India. Indian union is not formed based on peoples preference. if so, Hyderabad would have joined Pak and so many other districts..

   You guys cant think any think other then how great your wonderful Re legion is !

   • ராமன்/////So you agree USA Govt helped Afgan people to get freedom.
    After Afgan got the freedom from Russia in 90s, did US get into their way of life?///
    ஆடு நனைகிறதென்று ஓநாய் குடை கொடுத்த கதைதான் .லிபியா ஜனநாயகத்துக்கு அரும்பாடுபட்ட அமேரிக்கா ,கடாபியை கொன்ற பிறகு அதன் என்னை கம்பெனிகள் பங்கு போட்டுக் கொண்டன .
    ஆப்கானிஸ்தானின் கனிம வளங்களை ரசியா கொள்ளை அடித்துவிடக் கூடாது ,அதை நாமே அபகரிக்க வேண்டும் ,ஒரு பக்கம் ரசியாவின் பொருளாதரத்தை சீரழித்து கம்யுனிசத்தை தோற்கடிக்க வேண்டும் ,அடுத்த மாங்காயாக ஒரு பொம்மை அரசைஆப்கானில் நிறுவி கனிம வளங்களை அமுக்க வேண்டும் என்ற கல்லில் தான் ஒசாமாவை வளர்த்தார்கள் .ஆனால் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு பொம்மை அரசாக தாலிபான்களை வைக்க முனைந்தார்கள் அதற்கு அவர்கள் உடன்படவில்லை .அமெரிக்காவுக்கு ரசியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து மக்களை காப்பாற்றவேண்டும் என்று எண்ணம் இருந்தால் ரசியா வெளியேறியதும் அமெரிக்கர்களும் ஒதுங்கி கொள்ளவேண்டியதுதானே .ஆக ரசியாவும் நாடு பிடிக்கும் வெறியுடன் ஆப்கான் அப்பாவி மக்களை கொன்று குவித்தார்கள் .அமெரிக்காவும் அதே எண்ணத்துடன் அப்பாவி ஆப்கான் மக்களை குண்டு போட்டு கொன்று தள்ளியது .அதை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் ஒசாமா உதவியுடன் போராடுகிறார்கள் .இதில் தீவிரவாதம் எங்கிருந்து வந்தது ? இஸ்லாம் எபப்டி வந்தது? புத்தர் சிலையை அகற்றியது தீவிரவாதம் என்றால் கண்ணகி சிலையை அகற்றியது எனன் வாதமாம?குழந்தைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகளை ஒப்பந்தம் மீறி ஜப்பான் நடந்து கொண்டதால் ஆயிரகணக்கான குழந்தைகள் இறந்தால் அது என்ன நியாயமா? வழிபட மக்கள் இல்லாத புத்தர் சிலையை அகற்றியதுதான் தீவிரவாதமா?
    ///Read Babar Nama to understand your religions role.////
    எதையாவது படித்து விட்டு இஸ்லாம் என்று உளறாதீர்கள். பாபரே ஒரு அரைவேக்காடு முஸ்லிம்

    • // ரசியா வெளியேறியதும் அமெரிக்கர்களும் ஒதுங்கி கொள்ளவேண்டியதுதானே //

     //After Afgan got the freedom from Russia in 90s, did US get into their way of life?//

     Did you read the above line?

     //ஆனால் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு பொம்மை அரசாக தாலிபான்களை வைக்க முனைந்தார்கள் அதற்கு அவர்கள் உடன்படவில்லை//

     What Govt did they form? What kind of judiciary they established ? What is the election process? Could you enlighten me? How are you saying they represent Afgan people?

     //அமெரிக்காவும் அதே எண்ணத்துடன் அப்பாவி ஆப்கான் மக்களை குண்டு போட்டு கொன்று தள்ளியது .அதை எதிர்த்து அந்த நாட்டு மக்கள் ஒசாமா உதவியுடன் போராடுகிறார்கள் //

     Again Could you produce evidence , wikipedia sitings for your claim?
     So you are saying after Russians left, US invaded Afgan?

     // எதையாவது படித்து விட்டு இஸ்லாம் என்று உளறாதீர்கள். பாபரே ஒரு அரைவேக்காடு முஸ்லிம்//

     All the bad muslims have no relation with islam and they dint understand the Gods message properly…

     I got it

     • ராமன் ,அமெரிக்காவுக்கு கம்யுனிசத்தை ஒழிக்க வேண்டும் .
      ஆப்கானுக்கு அந்நிய நாட்டை வெளியேற்றம் வேண்டும் .இருவரின் நோக்கம் நோக்கம் நிறைவேறிவிட்டது என்றால் அதன் பின்னர் அமெரிக்காவுக்கு ஆப்கானில் என்னவேலை?
      அதிருக்கட்டும் .முதலில் ரசியாவின் ஆதிக்கத்தை எதிர்த்தும் அதே முஸ்லிம்கள்தான் போரிட்டார்கள் இப்போது அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்தும் அதே முஸ்லிம்களே போரிடுகிறார்கள் .ரசியாவை விரட்டிய பிறகு நான் சொன்னது போலவே ஆட்சி செய்யவேண்டும் என்று அமரிக்க ஆரம்பத்திலே உடன்படிக்கை செய்து இருந்தால் அதை தாலிபான்கள் ஏற்று இருக்க மாட்டார்கள் .
      அவர்கள் எந்த மாதிரி அரசு ஏற்படுத்தினாலும் எந்த மாதிரியான பாலிசியை பின்பற்றினாலும் அதற்கு அமெரிக்காவுக்கும் என்ன உரிமை உள்ளது ?அதை அந்த மக்கள் வரும் காலங்களில் ஏற்றுக் கொள்வார்கள் அலல்து போராடுவார்கள். ஆனால் இதில் இஸ்லாமிய தீவிரவாதம் எங்கே இருக்கிறது?
      அமெரிக்கா உதவாவிட்டாலும் ரசியாவின் பொருளாதார சரிவால் அது ஆப்கனை விட்டு வெளியேறி இருக்கலாம் .
      ரசியாவி தீவிரவாதமும் அமெரிக்காவின் தீவிரவாதமும் தான் இங்கே தெளிவாக தெரிகிறது.இன்னும் தாலிபான்கள் பெண்களை முகமூடிகளாக ,கல்விகற்க அனுமதிக்க மறுத்தது உண்மை என்றால் ,அது தாலிபான் தீவிரவாதமாக இருக்குமே தவிர அது இஸ்லாமாக இருக்காது என்பதே எனது கருத்து.

    • ellam sari,aana buddhar selaya vazhipada aale illa,athanala uadaichittanga ellam bayangara comedy.

     Taliban makkal nenaikkira maadhiri avalo muttalum illa,ellam agenda thaan about idol worship.

     Idolatory is a crime punishable by death is Islam and people talk about it all the time.

     Kannagi selaikkum,buddhar selaikkum sambandhame illai.`

     Naadu pidikkura asai yaaukku thaan illai,islamic empiresukku illaya,Ottoman Turksukku illaya,Baburukku illaya.

     Ghzwa e hind pathi ungalukku onnum theriyadha?

     • ஹரி குமார் ,புத்தர் சிலையை அகற்றவேண்டும் என்ற காரணம் ஜப்பான் அதற்கு முந்தைய ஆப்கான் அரசுடன் செய்த ஒப்பந்ப்படி குழந்தைகளுக்கான மருந்துகள் அமெரிக்காவின் உத்தரவின் பேரில் நிறுத்தியதால் தான் .

      தமிழர்களின் கற்பு தெய்வமாக் மதிக்கப்படும் கண்ணகி சிலை ,தமிழரல்லாத ஒரு ஆட்சியாளரால் ஜாதக பலனுக்காக அகற்றப்பட்டதும் புத்தர் சிலை அகற்றப்பட்ட சமயத்திலே .ஆனால் இந்தியாவில் கண்ணகி சிலை அகற்றியதை விட புத்தர் சிலை அகற்றியது தீவிரவாதமாக சித்தரிக்கபப்ட்டது
      இஸ்லாம் மீதுள்ள காழ்ப்புணர்வா ? இல்லையா?

 9. வினவு போன்ற ஒரு முஸ்லீம்மதவாத அடிவருடிகளிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் ?

 10. நான் கூறிய கருத்தைப் ப்ரசுரிக்காமல், இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ஒருதலைப் பச்சமாக செயல்படுவதால்,நான் இனி இந்த வலை தலத்துக்கு வரப்போவது இல்லை. (இதயாவது ப்ரசுரியுங்கள்)

  • எந்த கருத்தை பிரசுரிக்கவில்லை? ஏன் இப்படி அபாண்டமாக பொய் சொல்கிறீர்கள்?

   • I tried again to publish a message in both English and Tamil…It did not get published. And. please note that when i tried to submit the same message again, it gave me a message that it feels duplicate comment is being suspected and that the post already exists.

    Giving you the benefit of doubt – that there can be bug in the portal, i tried to post that in English only – after seeing your accusation that i lied. It doesnt go through…

    Vinavu: If at all i am proud of something, it is the fact that i dont lie. You are the moderator. You have the access to server logs. Pls check what i have told you. How else can i prove that i submitted? Is there a way to send you screenshots?

 11. I tried again to publish a message in both English and Tamil…It did not get published. And. please note that when i tried to submit the same message again, it gave me a message that it feels duplicate comment is being suspected and that the post already exists.

  Giving you the benefit of doubt – that there can be bug in the portal, let me try to post that in English only.

  This was my comment: Muslims are very peaceful. Please go through the following link. You will understand the truth:

  http://en.wikipedia.org/wiki/List_of_Islamic_terrorist_attacks

  Vinavu: If at all i am proud of something, it is the fact that i dont lie. You are the moderator. You have the access to server logs. Pls check what i have told you. How else can i prove that i submitted? Is there a way to send you screenshots?

  • நீங்கள் லிங்க கொடுத்த பின்னூட்டங்கள் தாமாகவே ஸ்பாமுக்கு சென்றுவிட்டன. லிங்க் இல்லாத பின்னூட்டங்கள் மட்டும் மட்டறுத்தலுக்கு வருகின்றன. இதை இப்போதுதான் பார்த்தோம். எனவே தவறு எங்களிடத்தில் இல்லை.

   • //இதை இப்போதுதான் பார்த்தோம். எனவே தவறு எங்களிடத்தில் இல்லை.//

    நன்றி. தவறு உங்களிடத்தில் இல்லை என்று கூற முடியாது. போர்ட்டல் நடத்தும் தாங்கள், உங்கள் வாசகரைப் பார்த்து “ஏன் இப்படி அபாண்டமாக பொய் சொல்கிறீர்கள்?” என்று கேட்டு இருக்கிறீர்.நான் “நான் கூறிய கருத்தைப் ப்ரசுரிக்காமல்” என்று கூறிய போதே, இப்பொழுது செய்த மாதிரி உண்மை அறியப் புலப்பற்றிருந்தால், தேவை இல்லாமல், என்னைப் பார்த்து “பொய்யன்” என்று உரைத்திருக்க மாட்டீர்.

    எனினும்,நான் சொன்னதைக் கேட்டு, நீங்கள் எடுத்த நேர்மையான முயற்சியைப் பாராட்டத்தான் வேண்டும்.

 12. நண்பர் இப்ராகிம் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்! வள்ர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, ஊழல்கள் அம்பலம் முதலிய பூதஙகளை சமாளிக்க மத்திய அரசுநடத்தும் உச்சகட்டநாடகம்!

 13. எல்லா மக்களும் பொதுவாக அமைதியானவர்களே, அடக்குமுறை வின்ச்சாதவரை! ஆதிக்க சக்திகள் நினைத்தால், அவர்களைன் கொயபல்ச் ஊடகஙகள் மூலம் பேனை பெருமாளாக்க முடியும்!

  • //எல்லா மக்களும் பொதுவாக அமைதியானவர்களே, அடக்குமுறை வின்ச்சாதவரை! //

   இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.

   பாகிஸ்தானில், இந்துக்கள் அங்குள்ள இஸ்லாமியரை “அடக்குமுறை” செய்கிறார்களா? பிறகு ஏன் அவர்களை இஸ்லாமியர் கொடுமை செய்கின்றனர்?

   http://www.rediff.com/news/column/mr-zardari-will-you-protect-hindus-in-pakistan/20120407.htm

 14. ஆர்.எஸ்.எஸ்.சுதேசி ஜாக்ரன் மஞ்ச்,ஆடிட்டர் கோயபல்ஸ் குருமூர்த்தி சென்ற மாதம் தினமணியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். காவி பயங்கரவாதிகள் என்று உள்துறை அமைச்சர் எஸ்.கே. ஷிண்டே சொன்னதன் எதிர் விளைவு.மேற்கண்ட கட்டுரையில் குறிப்பிட்டிருந்த குண்டு வெடிப்புகள் அனைத்தும் இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள் வைதவை தானாம்.அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் ஐ. நா.சபை வெளியிட்டிருக்கிறதாம்.புட்டுப்புட்டு வைத்திருக்கிறார் ஆடிட்டர் அண்ணா.அக்‌ஷரம் பிசகாமல் வெளியிட்டிருக்கிறார் வைத்தி மாமா.ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அமைதிப் போங்காவாம்;அஹிம்சா மூர்த்திகளாம்.காந்திஜி கூட உயிர் விடும் போது அப்படித்தான் சொன்னார் என்றுகூட சொல்வார்கள் சங்கப் பரிவாரங்கள்.அதற்க்கும் தலையாட்டும் காங்கிரஸ் மாடு.அமெரிக்காவின் தலையாட்டி பொம்மைதான் ஐ. நா.என்பது ஊரறிந்த உண்மை.இசுலாமிய தீவிரவாதத்தை வளர்த்தே உலக நாடுகளை ஒடுக்கும் அமெரிக்கா இப்போது இந்தியாவில் மையம் கொண்டிருக்கிறது.இந்திய ஆளும் கும்பலும் அதைச் சொல்லியே மக்களை ஒடுக்கி நாட்டை விற்கிறார்கள்.பல பிரச்சினைகளில் அமெரிக்காவை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யும் காவிக்கூட்டம் ”இந்து பயங்கரவாதம்” என்று சொன்னவுடன் அமெரிக்காவின் தோளில் ஏறிக்கொள்கிறது.துப்பு கெட்ட காங்கிரஸ் கட்சியோ காவியைக் கண்டு ஜகா வாங்குகிறது.இசுலாமிய தீவிரவாதத்துக்குஅடிப்படையே காவி பயங்கரவாதம் தான்.உண்மையைச் சொல்லிவிட்டு ஓட்டுக்காக புரட்டி புரட்டிப் பேசி மக்களைக் குழப்புகிறது காங்கிரஸ் கயவாளிக் கூட்டம்.காவி பயங்கரவாதம் என்று சொல்லவே ஓட்டுக் கட்சிகள் அஞ்சுகின்றனர்.புரட்சிகர அமைப்புகள் மட்டுமே காவி பயங்கரவாதத்தை தில்லாக எதிர்த்து நிற்கின்றனர்.போலி கம்யூனிஸ்டுகள் மூச்ச்!இதில் இசுலாமிய மக்களின் நிலைதான் கையறு நிலையில் உள்ளது.

 15. ஸ்ரீதர் ,உங்க மோடி குஜராத்தில் இஸ்ரத் ஜஹான் என்ற மாணவி உட்பட 3 மாணவர்களை என்கவுண்டரில் போட்டுத்த் தள்ளியது முதல் முஸ்லிம் பெண்களை கற்பழித்து கொன்றது போக 3000 முஸ்லிம்களை கொன்ற அளவுக்குத்தானே நீங்கள் போட்ட லிஸ்ட்டின் மொத்த உயிர்கள் வருகிறது.
  ரசியா அன்னிய நாடான ஆப்கான் மீது படையெடுத்தது முதல் அன்னாட்டி நாசமாக்கி லட்சகனக்கான் அப்பாவி மக்களை கொன்றது போதாதென்று அந்த மக்களை தீவிரவாதி என்று சொல்லுவது பச்சை அயோக்கியத்தனமாக தெரியவில்லையா?
  மும்பை தாக்குதலில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு அவர்களது கண்ட்ரோலில் வைக்கப்பட்டிருக்கும் ஹெட்லே வை இந்தியாவில் கையில் விசாரணைக்கு கொடுத்தால் பல உண்மைகள் வெளிவரும் .

  • இப்போ தெரியுது இவங்க பிரச்சினை என்னன்னு. தாலிபானும், அல்கொய்தாவும் காந்திய இயக்கங்கள்னு நாம சொல்லலைன்னா நாமெல்லாம் தீவிரவாதிகள்.

   இப்படிப்பட்ட ஆளுங்க அந்த இயக்கங்களுக்கு களப்பணியாற்ற செல்வார்கள் என்று பிரார்த்திப்போம். போய் தொலஞ்சா சரி…

   • சீ ,,நு ,சரிசரி ,ஆர் எஸ் எஸ் மற்றும் சங்க குடும்ப இயக்கங்கள் அனைத்தும் காந்திய இயக்கங்கள் தான் அதிலும் கோட்சே காந்தியவாதிக்கு முன்னோடி

   • ரசியா வெளியேறியதும் அமெரிக்கா, நேட்டொ நாடுகள் போரில் நாசமாகிக் கிடந்த ஆப்கானிஸ்தானை மீண்டும் கட்டியமைக்க உதவாமல், கை கழுவி பாகிஸ்தானின் ISI, தாலிபான்களிடம் தள்ளின.. அதன் பலனை அனுபவிக்கின்றன..

  • இதற்கு என்ன அர்த்தம். சொல்லுங்களேன் மிஸ்டர்.ஹரி!!

   IBN LIVE: 02/03/13
   Ahmedabad: Gujarat IPS officer GL Singhal, who was arrested in the Ishrat Jahan encounter case, has resigned from the police force. He was suspended after being arrested in the case. GL Singhal was the ACP in 2004 during the fake encounter case. Singhal is among the 20 policemen, including DIG Vanzara, named in the case.

   Ishrat, a 19-year-old college girl, along with Javed Sheikh alias Pranesh Pillai, Amjad Ali Rana and Zeeshan Johar were killed in a shootout by Ahmedabad Crime Branch on June 15, 2004.

   The Crime Branch had then claimed the four were LeT members and were on a mission to kill Chief Minister Narendra Modi.

    • ஹகு ,கொஞ்சம் பொறுங்கள் ,எல்லாம் சாட்சிகளுக்கும் பணத்தை அள்ளி கொடுத்து நேற்று ராஜினாமா செய்த போலிஸ் அதிகாரி உட்பட 3 அதிகாரிகளையும் மோடி விடுவித்துவிடுவார் .
     அதற்கு ஒத்துவரவில்லை என்றால் ஹரே பாண்ட்யா ,ஹேமந்த் கர்கரே ,போன்றோர் கதிதான் .மோதினா சும்மாவா?
     ஹரி நான் சொன்னது சரி தானே

  • eppo sir proove aache? are in this world or you are in the world of fiction wriiten by RSS
   even recently CBI arrested top level IPS officers for killing Ishrat under the direction of High court . Have the facts and write

 16. மேலும் இதையும் படியுங்கள்.

  NDTV :- 08 Sep 2009

  Ishrat is innocent: Magisterial report
  Ahmedabad:

  The Ishrat Jehan encounter returns to haunt Gujarat police: A magisterial inquiry has concluded that the encounter was fake.

  In 2004 Ishrat Jehan and four others were killed by the Ahmedabad Crime Branch. The Police said they were Lashkar-e-Toiba operatives who had come to Ahmedabad with a plan to kill Chief Minister Narendra Modi.

  Now, a 243-page damning report by Magistrate SP Tamang says: “Ishrat was innocent and was killed only because she was a Muslim and fitted the Gujarat Police’s idea of a terrorist.”

  The report says the police carried out this fake encounter to get rewards and promotions. To curry favour with the Chief Minister they also floated a story that she and her associates had come to eliminate him.

  Among the 20 policemen accused of her murder:

  Gujarat Additional DGP (Intelligence) P C Pandey
  Deputy Commissioner of Police (Gujarat ATS) G L Singhal
  Retired Police Commissioner K R Kaushik
  Police Inspector with Ahmedabad Crime Branch Tarun Barot
  And the then Additional Police Commissioner (Crime Branch) D G Vanazara and then Assistant Commissioner of Police N K Amin both already in jail in connection the Sohrabudddin fake encounter case.

  “It’s cold blooded murder and the court came to the conclusion that the murder was committed for personal gain and to get the praise of the chief minister,” said Mukul Sinha, Ishrat Jehan’s family’s lawyer.

  The probe is a result of pressure from Ishrat’s family who all along maintained that their 19-year-old daughter was innocent.

  Their stand now is vindicated.

 17. /யார் பயங்கரவாதிகள்? முசுலீம்களா, ஆர்.எஸ்.எஸ் இயக்கமா?//

  we shouldnt be comparing RSS against muslims.
  Questions Should be ” RSS vs Islamic radicals”

  Rss is not a threat to freedom of speech and expression. They never issued fatwa against Periyaar .
  So I will say …

  • ராமன் ,,RSS பத்வா கொடுப்பதில்லை ,காந்திக்கு என்ன பத்வா கொடுத்தார்களா? கர்கறேக்கு எனன் பத்வா கொடுத்தார்களா?
   பெரியாருக்கு பத்வா கொடுத்து பார்க்க வேண்டியதுதானே
   பெரியார் ,இப்படித்தானே கேட்டார் ,தலையில் பிறந்தான் ,தோளில் பிறந்தான் ,தொடையில் பிறந்தான் ,காலில் பிறந்தான் எண்டா மானகெட்ட தமிழா ,இதெல்லாம் பிள்ளை பிறக்கும் இடமா? என்று அல்லவா சிந்தனைகளை தூண்டினார்?

   இஸ்லாம் நீ மேல்ஜாதி ,நீ கீழ் ஜாதி என்று சொல்லவில்லையே

   • @Ibrahim
    I think you are living in your own virtual world.

    Gandhi was killed for his political stand. He was not killed for speaking against God
    Can you go to pakistan and see how christans are treated if they speak against your God or prophet?
    Govt takes action and kills people. I insist “GOVT” not “bunch of morons” in the street.

    // கர்கறேக்கு எனன் பத்வா கொடுத்தார்களா?//
    Ha ha , Live in your own conspiracy theory world. Radicals will make you believe
    “Everything is best in our relegion.And jealousy people are against our growth”
    Your logical reasoning side of brain has become numb

    //பெரியாருக்கு பத்வா கொடுத்து பார்க்க வேண்டியதுதானே//
    Thats why I told Hinduism atleast provides freedom of speech, freedom to convert to other faith etc etc

    //இஸ்லாம் நீ மேல்ஜாதி ,நீ கீழ் ஜாதி என்று சொல்லவில்லையே//

    Funny..

    Here is the order group wise

    1.Sunny
    2.Shia.
    3.Ahamadi

    Hindu society lives along with different castes so caste problems comes out easily.
    where is here , you guys have separate country for each group.
    You can observer Pakistan like countries which have mix of groups.Bomb blast everyday.
    It is all because of intolerance towards other community.
    And read what happened to Meenaxiburam females after conversion right here next to your village

    Here is the order gender wise
    1.Male
    2.Female

    Females cannot enter temples and pray alaong with family like daliths in Hinduism
    That means 50 percent of population is discriminated.

    Live in your own virtual world and be happy

    • //Here is the order group wise

     1.Sunny
     2.Shia.
     3.Ahamadi////

     இது சாதி பிரிவுகள் அல்ல.கொள்கை பிரிவுகளே .கொள்கையை மாற்றிக் கொண்டு ஷியா ,சன்னியாகவும் சன்னி ஷியாகவும் மாறலாம் .இந்தியாவில் ஷியாக்கள் இருக்கறார்கள் சந்நிகளுடன் கலந்து வாழ்கிறர்கள் .பாரதிய ஜனதா உபியில் ஆட்சி செய்த பொழுது அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தினார்கள் .ஆனால் பாஜக ஆட்சி ஒழிந்தவுடன் அங்கு அது போன்ற நிலை இல்லை .
     மீனாட்சி புறத்தில் என்ன நடக்கிறது என்று நீங்கள் சென்று பார்க்கலாம் .ஒரு பெண்ணைப்பற்றி ஒருவர் காவியம் எழுதினால் அது உண்மையாகாது .ஒரு சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் .ஆனால் அதிகமான மக்கள் முஸ்லிம்களாகவே முஸ்லிம்களுடன் திருமண உறவுகள் கொ