Monday, April 12, 2021
முகப்பு அரசியல் ஊடகம் தினமலர் கஞ்சா அடித்து விட்டு எழுதுகிறது!

தினமலர் கஞ்சா அடித்து விட்டு எழுதுகிறது!

-

பிப்ரவரி 21-ம் தேதி ஹைதராபாத் தில்குஷ்நகரில் நடந்த இரட்டை வெடிகுண்டு சம்பவத்தைப் பற்றி ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளைக் குறித்து “பயங்கரவாதம் தொடர்பான செய்திகளை வெளியிடும் போது சுய கட்டுப்பாடோடும் பொறுப்புணர்வோடும் நடந்து கொள்ள வேண்டும்” என்று இந்திய ஊடக ஆணையத்தின் தலைவர் மார்கண்டேய காட்ஜூ ஊடகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.மார்கண்டேய காட்ஜூ

தேசிய சிறுபான்மையர் ஆணையத்தின் தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் காட்ஜூ அந்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். “புலன் விசாரணை முடிவதற்கு முன்பே, ஆதாரமற்ற ஊகங்களின் அடிப்படையிலான தகவலை வைத்து ஊடகங்கள் குறிப்பிட்ட சமூகத்தினரை குறி வைத்தன” என்று ஹபிபுல்லா தனது கடிதத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

“பயங்கரவாதச் செயல் என்றால் அதை முஸ்லீம்கள்தான் செய்திருக்க வேண்டும்; முஸ்லீம்கள் செய்திருக்க வேண்டுமென்றால் அது இந்தியன் முஜாகிதீனின் வேலையாகத்தான் இருக்க வேண்டும்; இந்தியன் முஜாகிதீன் வேலையாக இருந்தால் அதில் பாகிஸ்தான் உளவுத் துறையின் கை இருக்க வேண்டும்” என்று முன்னாள் உளவுத் துறை அதிகாரியும், பாதுகாப்புத் துறை நிபுணருமான ராமன் எழுதியிருந்ததை சுட்டிக் காட்டிய ஹபிபுல்லா இந்தப் போக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டிருந்தார்

ஹபிபுல்லாவின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ள காட்ஜூ, “பெரும்பான்மை முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் என்ற பொதுப்புத்தி கட்டியமைக்கப்பட்டிருப்பதால், அற்பமான சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸ் முஸ்லீம்களை கைது செய்கிறது. அப்படி கைது செய்யப்பட்ட முஸ்லீம்கள் பிணையில் வெளி வருவது கூட முடியாத சூழல் நிலவுகிறது. கடைசியில் அவர் குற்றமற்றவராக நிரூபணமானாலும், சிறையில் கழித்த பல ஆண்டுகளை யாரும் திருப்பிக் கொடுக்க முடியாது. அப்படி முஸ்லீம்கள் மீது தவறுதலாக பழி சுமத்திய பல வழக்குகள் உள்ளன” என்கிறார் ஹபிபுல்லா.

‘தேசத்தின் கூட்டு மன சாட்சியை திருப்திப் படுத்த’ தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்ட அப்சல் குரு முஸ்லீமாக, அதுவும் காஷ்மீரி முஸ்லீமாக, அதுவும் முன்னாள சரணடைந்த போராளியாக இருந்ததால்; வழக்கறிஞர் வைத்து வாதாட முடியாத ஏழையாக இருந்ததால் அவருக்கு எதிராக தீர்ப்புகள் சொல்லப்பட்டு இறுதியில் உயிரையும் கொடுக்க வேண்டி வந்தது. 2001ம் ஆண்டு நாடாளுமன்ற குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பத்திரிகைகள் பாகிஸ்தானிய தொடர்பு, முஸ்லீம் பயங்கரவாதம், டெல்லி பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். ஜீலானியின் இரட்டை வாழ்க்கை என்று புளுகுகளை பல வாரங்கள் அவிழ்த்து விட்டன. அவர்களின் புளுகுகள் அம்பலமான பிறகு குறைந்த பட்ச மன்னிப்பு கூட கேட்கவில்லை. ஆனால், அந்த புளுகுகளால் கட்டி அமைக்கப்பட்ட ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியை’ திருப்திப்படுத்த அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்.

“ஹைதராபாத் குண்டு வெடிப்புகள் நடந்த ஓரிரு மணி நேரத்துக்குள், இஸ்லாமிய அமைப்பு போல தோன்றும் ஒரு அமைப்பு பொறுப்பேற்பதாக அனுப்பியதாக மின்னஞ்சல்களையும், தகவல்களையும்  தொலைக்காட்சி சேனல்கள் காட்ட ஆரம்பித்தன. அது பொறுப்பற்ற செயல். எந்த ஒரு விஷமியும் அப்படி ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருக்க முடியும். ‘அப்படி ஒரு தகவலை தொலைக்காட்சியில் காண்பித்தது  பார்வையாளர்கள் மத்தியில் அனைத்து முஸ்லீம்களும் குண்டு எறிபவர்கள், பயங்கரவாதிகள்’ என்ற அபிப்பிராயம் உருவாக வழி வகுத்தது” என்கிறார் நீதிபதி காட்ஜூ.

ஊடகங்கள் ‘இந்து’ நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் பாசிச மனோபாவத்தை இப்படி உருவாக்குகின்றன.

தமிழ்நாட்டில் உண்மையின் உரைகல் என்ற முத்திரையுடன் வெளியாகும் பார்ப்பனியத்தின் ஊதுகுழலான தினமலர் ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக வெளியிட்ட இரண்டு செய்திகளை வினவு வாசகர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

அந்த செய்திகள் வெளியான ஸ்க்ரீன் ஷாட்டுகள்:

மார்ச் 1ம் தேதி வெளியான செய்தியில் பாகிஸ்தான், முஜாகிதீன், சந்தேகம் என்ற முகாந்திரத்தில் முசுலீம்களை பயங்கரவாதிகளாக காட்ட முனைந்தது தினமலர்.தினமலர் பாகிஸ்தான்

செய்தி 1 – பதிவு செய்த நாள் : மார்ச் 01, 2013, 23:09 IST

ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு: முஜாகிதீன்களிடம் என்.ஐ.ஏ., விசாரணை

ஐதராபாத்: ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக, இந்திய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த, இரண்டு பேரிடம் என்.ஐ.ஏ. என அழைக்கப்படும் தேசிய புலனாய்வு நிறுவனத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐதராபாத்தில், கடந்த மாதம், 21ம் தேதி நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்பில், 20 பேர் பரிதாபமாக இறந்தனர்.

பாகிஸ்தானை மையமாக வைத்து செயல்படும், பயங்கரவாத அமைப்புகளே, இந்த சதித் திட்டத்தை நிறைவேற்றியதாக, புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. குறிப்பாக, பாகிஸ்தானிலிருந்து செயல்படும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின், ரியாஸ் பட்கால் உத்தரவின்படி, இந்த குண்டு வெடிப்புகள் அரங்கேற்றப்பட்டதாக, என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்தாண்டு ஆகஸ்ட்டில், புனேயில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட, இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த மக்பூல், இம்ரான் கான் ஆகியோருக்கு ஐதராபாத் குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என புலனாய்வு அமைப்புகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அப்படி செய்தி வெளியிட்ட ஒரு வாரத்துக்குள் மார்ச் 6-ம் தேதி “பிப்ரவரி 21-ல் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நக்சல்கள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர்” என்று நஞ்சைக் கக்கியிருக்கிறது.

தினமலர் நக்சல்

செய்தி 2 பதிவு செய்த நாள் : மார்ச் 06,2013,03:52 IST

ஆண்டிபட்டி : வைகை அணை மற்றும் பூங்கா பகுதியில், போலீசார் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை மேற்கொண்டனர். பிப்ரவரி 21-ல் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் நக்சல்கள் நடத்திய தொடர் குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர். நக்சல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக,தேனி மாவட்டம் வைகை அணையில் பாதுகாப்பு கருதி, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சிறப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

வைகை அணை மற்றும் பூங்கா பகுதிகள், நுண்புனல் மின் நிலையம் உட்பட பல இடங்களில், மெட்டல் டிடக்டர் உதவியுடன் வெடிகுண்டு பதுக்கப்பட்டுள்ளதா, என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து சோத்துப்பாறை, மஞ்சளாறு அணை உட்பட தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மார்ச் ஒன்றாம் தேதி பாகிஸ்தானையும், இந்திய முஜாகிதீன்களையும் சாக்கிட்டு முசுலீம்களை குறிவைத்த தினமலர் ஐந்து நாள் இடைவெளியில் மாவோயிஸ்டுகள் மீது குறிவைக்கிறது. ஐதராபாத் குண்டு வெடிப்பிற்கு நக்சல்கள் காரணம் என்று தமிழில் எழுதி சாதனை படைத்த பத்திரிகை தினமலராக மட்டுமே இருக்கும். தினமலருக்கு பிடிக்காத எவரும் இந்த குண்டுவெடிப்பு குற்றப் பத்திரிகையில் இடம்பெறலாம். எழுதும் போதே இத்தகைய அபாண்டங்கள் இயல்பாக வருகிறது என்றால் தினமலர்காரர்கள் கஞ்சா அடித்து விட்டு எழுத வேண்டும். அதுவும் அந்த கஞ்சா மலையில் விளையும் போதை கஞ்சாவாக இருக்க வேண்டுமென்பதில்லை, பார்ப்பனிய வெறிபிடித்த கஞ்சாவாகவும் இருக்கலாம்.

ஆனால் முசுலீம்கள் மீது பழிசுமத்தாதீர்கள் என்று கேட்க ஒரு மார்க்ண்டேய கட்ஜுவும், இன்னபிற ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் இருக்கலாம். ஆனால் தேசத்திற்காக போராடும் நக்சல்கள் மீது எழுதப்படும் இத்தகைய அவதூறுகளை தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள்?

மேலும் படிக்க
Stop targetting muslims for blasts – Katju tells media

 1. //ஆனால் தேசத்திற்காக போராடும் நக்சல்கள் மீது எழுதப்படும் இத்தகைய அவதூறுகளை தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள்?//

  நாங்க இருக்கோம்… -வாசன் ஐ கேர்

 2. பெருவாரியான மக்களால் படிக்கப்படுவதால் தொடர்ந்து இப்படி தொடர்பற்ற செய்திகளைப் புகுத்துவதன்மூலம் மக்கள் மனதில் நச்சை விதைத்து வருவது தெள்ளத் தெளிவாகிறது!

 3. காரணம் இருந்தால் கூட யாரையும் மரியாதை குறைவாக பேசுவதற்கு மனது வர மறுக்கிறது. ஆனா இந்த ———, இவனை என்ன பண்றதுன்னு தெரியலையே

 4. தமிழகத்தில் அவாள் ஆட்சி அல்லவா! அதுதான் தலை கால் புரியவில்லை, அவர்களின் ஊடகஙளுக்கு!
  மத்தியிலும் தணிக்கை அதிகாரி தயவில் ஆட்சியை பிடித்துவிட்டால் அவ்வளவுதான்! எஙகெ அம்பி களை காணோம் ?

  • கருத்துக் கருவூலமே,

   மத்திய தணிக்கை அதிகாரி ஒழிக.. போதுமா..?!

   • அவர் அம்பிகளைத் தானே கூப்பிட்டார். ஓ நீங்க அம்பிதானா!

    • தினமலர் குசும்பை விட உங்க குசும்பு இருக்கே அது மோசம்.. “ஆனால் தேசத்திற்காக போராடும் நக்சல்கள் மீது எழுதப்படும் இத்தகைய அவதூறுகளை தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள்?” என்று வினவு ரொம்ப ஃபீல் பண்றார்.. போய் ஆறுதலா 4 வார்த்தை சொல்லி, தினமலரையும் கண்டிச்சுட்டு வாங்க..போங்க..

 5. There are lot of Islamic Jihad terrorist groups throughout the world and they are in India, south India, Indonesia, Philippines,Thailand,America, European countries(Muslims who are settled now in America and European countries are were given food,shelter,jobs and equal citizen rites by the respective countries out of poverty from their native countries. Unfortunately, some Muslims who settled in America and Europe after become “fat” indulges in terrorism against those countries who gave food and shelter)China and middle east.So Islamic terrorists are throughout the world and since all these terrorists are from Muslim community they are called Muslim terrorists is no wrong.If there are Christians or Hindus having a organisation and indulges in terrorist activities they would be called Christian or Hindu terrorists only.Then which way you call them. Fortunately both Christian and Hindu religions preach only peace not Jihad,so you will find never any terrorists in these religions.

  • வாய்யா அறிவுக்கொழுந்தே!!!! இன்றைக்குத் தான் இந்தியாவுக்கு இம்ப்போர்ட் ஆனீரோ?

  • “Fortunately both Christian and Hindu religions preach only peace not Jihad,so you will find never any terrorists in these religions.”

   Are you really sure that Christians and Hindus do not indulge in terrorism? What was Narendra Modi, Babu Bajrangi, RSS, Srirama sena, Siva sena, abhinav Bharath, USA are doing? Social service?? You STUPID!!!!!!

  • உங்கள் கற்பனை கதையை கமலிடம் சொன்னால் ஒரு நல்ல படம் எடுப்பார்.

   • //உங்கள் கற்பனை கதையை கமலிடம் சொன்னால் ஒரு நல்ல படம் எடுப்பார்.// தரம்! 🙂

 6. தின மலம் சொமபாணம் சுரபாணம் வழிவந்த கூட்டம்.பிஜெபி ஜச்வந்த் சிங் அபின் அடிப்பார்.ராமர்கோவில் சாமியரகள் கஞ்ஜா பிடிப்பர்!

 7. // தினமலருக்கு பிடிக்காத எவரும் இந்த குண்டுவெடிப்பு குற்றப் பத்திரிகையில் இடம்பெறலாம். //

  தினமலருக்கு தன் நம்பகத்தன்மை பற்றி கொஞ்சமாவது அக்கறை இருந்தால் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை உண்மைச் செய்தி போல போடுவதை தவிர்க்க வேண்டும்..

 8. தேசத்திற்காக போராடும் நக்சல்கள்….. எந்த தேசத்திற்க்கு?? அப்பாவி மக்கள் மத்தியில் பயத்தை மட்டுமே விளைத்து, அவர்களுக்கு ஏதோ நன்மை செய்வது போல் ஒரு மாயை உருவாக்கி, தங்கள் கூட்டத்துக்கு வேண்டாதவர்களை எல்லாம் கொலை செய்து, கொள்ளை அடித்து, ஒரு தீவீரவாத அமைப்பாகவே நக்சல்கள் இருக்கின்றன…… மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றால், விடுதலை புலிகள் போல அழிவுத்தான் கிடைக்கும்…. முட்டாள்களை மழுங்கடித்து நக்சல்களாக மாற்றி ஏதோ ஒரு சேகுவேராவை உருவாக்கியதாக நினைக்கும் முன்…. சேகுவேரா எப்படி இறந்தார் என்பதை எல்லோருக்கும் வினவு வாயிலாக ஒரு கட்டுரை வெளியிட வேண்டும்…

  • விடுதலை புலிகளை பற்றி எழுதியவை தவறு. உங்களுக்கு யார் கூறியது புலிகளை மக்கள் நிராகரித்தார்கள் என்று? மக்கள் செல்வாக்கு இல்லாமல் அந்த இயக்கத்தால் எவ்வாறு 30 ஆண்டுகளாக செயல்பட முடிந்தது! புலிகளின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் உண்டு, இந்தியாவின் துரோகங்கள், இலங்கை இராணுவத்தின் அசுர பலம், புலிகளின் நெகிழ்ச்சி அற்ற தன்மை, அன்டன் பாலசிங்கத்தின் மறைவு, வியூக பிழைகள், அரசியல் அறிவு இல்லாமை, மற்றும் காட்டி கொடுப்புகள்.

  • “..மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்றால், விடுதலை புலிகள் போல அழிவுத்தான் கிடைக்கும்..”
   விடுதலைப் புலிகள் தோற்றதற்கு ஹிந்தியா போன்ற ஏழு நாடுகளின் கூட்டு சதியும், துரோகமுமே தவிர மேலே கூறுவது போல “மக்கள் மத்தியில் ஆதரவு இல்லை” என்றில்லை. நீங்களும் தினமலம் போல் உளறுகிறீர்கள் போலும்!

 9. Maoists are fighting in the cause of tribals who are displaced from their settlements by MNCs like Vedanta with the active support from the central govt as well as the respective state govts.Mr Indian,are you aware of these happenings?

 10. சூரியன் ஓனாயிகலின் அழு குரலை கேட்டு , உதிக்காமல் இருக்கது…

 11. வேறு ஒன்றும் இல்லை, ஒவ்வொரு செய்தியும் அவர்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டு இரு வேறு ஆசிரியர்களால் எழுதப்பட்டது. தமிழகத்தில் எவன் ஒருவன் இதையெல்லாம் கவனிக்க போகின்றான் என்கின்ற தைரியம். இதைத்தானே கருணாவும், ஜெயாவும் தங்கள் அறிக்கையில் செய்து வருகிறார்கள்.

 12. தினமலர் பார்ப்பன தேச பக்தி இதழாக திருவனந்தபுரத்தில் இயஙகிவந்தது! திருவனந்தபுரம் கேரளாவிற்கு சென்ற பின், தமிழர்களுக்கு பார்ப்பன தேசபக்தியை பரப்ப, தமிழர்களை மூடனம்பிக்கைகளை வளர்த்து , அவாளுக்கே உரிய கிண்டல், குசும்புகளுடன், இலவச இணைப்புகள் சகிதம் பீடு(டை?)நடை போடுகிறது! தினத்தந்தியே கவ்ர்ச்சி விஷ்யஙளில் இவர்களிடம் பிச்சை வாஙக வேண்டும்! பக்தி இலவச இணைப்பு போட்டு சற்சூத்திரர்களை கவரும் அதேநேரத்தில் கவர்ச்சி படஙகளையும், பலான கிசு கிசு செய்தி போட்டு தமிழ் இளைக்ன்ர்களை கெடுத்து வருகிறது! இதெற்கெல்லாம் பணம் எஙகிருந்து வருகிறது? டைம்ச் ஆப் இந்தியா, இந்தியா டுடெ வரிசையில் கவர்ச்சி காட்டி தமிழ் ரசிகர்களை பார்ப்பனிய அடிமைகளாக்குகின்றனர்! புதிதாக இப்பொது அனந்த விகடனின் டைம்பாச் வேறு! பிர பத்திரிகைகளும் இவர்களை பின்பற்றாமல் கல்லா கட்ட முடியாது! சும்மா சொல்ல கூடாது, மிக அருமையாக மூளை சலவை செய்கிறார்கள்!

 13. அநேகமாக அனைத்து முற்போக்கு இயக்கங்களும், ஜனநாயகசக்திகளும் காறித்துப்பிய, சாலையில் போட்டு எரித்த ஒரே பத்திரிக்கை தினமலர் தான்.

 14. which newspaper we see in morning because most popular media BBC news also vacate in some countrys so we not to communicate, Here local medias are given wrong informations How to know truth Pls tell correctly and don’t Politics in media peoples are dependent in medias
  Thank You

 15. இனி தினமலர் தனது தலைப்பில் உண்மையின் உரைக்கல் என்பதை எடுத்துவிட்டு ,”தினமலர் செய்திகள் யாவும் கற்பனையே”என்று எழுதிவிட்டால் வாசகர்களுக்கு குழப்பம் வராது.

 16. முன்பெல்லாம் தினத்தந்தியை பார்பர் ஷாப் ஏடு என்று தினமலர் கிண்டல் செய்தது ! இப்பொது அதனினும் இழிவான காகிதமாக ஆகிவிட்டது!

 17. நேற்றைய கூடங்குளம் அணு உலை முற்றுகை போராட்டம் குறித்த செய்தியிலும் உதயக்குமார் கும்பல், உதயக்குமார் கும்பல் என தினமலர் கொதிக்க வேண்டிய அவசியம் என்ன?
  முதல் நாளே போராட்டத்திற்கு ஆதரவு இல்லை, அது இல்லை, இது இல்லை என இட்டுகட்டி எழுத தினமலருக்கு என்ன தேவை?

  இப்படி

  மற்ற பத்திரிக்கைகளை விட இவனுக்கு ஏன் இந்த ஆத்திரம் என மக்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பது மட்டும் நிதர்சனம்.

 18. பொதுவாக இந்துத்வா ஊடகங்கள், செய்தியை வெளியிடுவதே, சந்துகளில் சிந்துபாடத்தான்! உண்மையை உள்ளபடி எழுதினால் அவர்கள் பிழைப்பு நடத்த முடியாது! முதலாளிகளின் கொள்கைப்படியே இதழ்நடத்தமுடியும்! ஆனாலும், தினமலர் பார்ப்பன இன வெறியும் சேர்வதால், போதை தலைக்கு ஏறி தான்டவம் ஆடுகிறது! காணொளி ஊடகங்களிலும், இந்த எஜமான விசுவாசத்தை காணலாம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க