Saturday, April 17, 2021
முகப்பு உலகம் ஈழம் ஈழத்துக்காக சென்னை குடிசைப் பகுதி மக்கள் போராட்டம்!

ஈழத்துக்காக சென்னை குடிசைப் பகுதி மக்கள் போராட்டம்!

-

மிழகம் முழுவதிலுமுள்ள கலை-அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாணவர்களின் போராட்டத்தை அரசு முடக்க முயற்சித்த போதிலும், இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து பொதுவிசாரணையின் மூலம் தண்டிக்கக்கோரியும், ஈழத்தமிழ்மக்களுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

மாணவர்களின் போராட்டம் என்ற அளவில் சுருங்கிவிடாமல், பகுதி மக்கள், இளைஞர்களையும் இப்போராட்டத்தில் இணைக்கும் வகையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர், எழும்பூர் சந்தோஷ்நகர் பகுதி மக்களை அணிதிரட்டி இன்று காலை 10.30 மணியளவில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, தாசப்பிரகாஷ் சிக்னல் அருகில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிங்கள இனவெறியன் ராஜபக்சே கும்பல் நடத்திய இனப்படுகொலையை வெறும் மனித உரிமை மீறல் என்று நாடகமாடி இராஜபக்சே கும்பலை காப்பாற்றுவதற்காக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை நிராகரிக்க வலியுறுத்தியும், இந்தப்போரை வழிநடத்திய இந்தியாவே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவருவது அயோக்கியத்தனம் என்பதை அம்பலப்படுத்தியும், இதற்கு தீர்வாக இராஜபக்சேக் கும்பலை நூரம்பர்க் போர்க்குற்ற விசாரணை போன்ற பொதுவிசாரணையின் மூலம் தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.  இதில் ராஜபக்சே போன்று வேடமிட்டிருந்த நபரை பெண்கள் செருப்பால் அடித்து தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர்.

நகரின் மையமான பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில், சுமார் அரைமணி நேரத்திற்குமேல் நீடித்த இப்போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் கைக்குழந்தைகளுடன் பெண்கள், பள்ளிக்கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உட்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் அணிதிரண்டு வந்திருந்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.

  1. தோழருக்கு….அதென்ன சென்னை சேரி மக்கள் என்று தலைப்பில்…..சந்தோஷ் நகர் மக்கள் என்று போடலாமே……..

  2. இங்கே இவ்வளவு அலம்பல் தேவையில்லாதது…. போர் நடக்கும் போதே ஒண்ணும் பண்ண முடியல… இன்னும் சில நாள்ல இது அப்படியே அடங்கிவிடும்.. 1985’ல் இருந்து தமிழ்நாட்டல இது தான் நடக்குது…. அன்னா அசாரே பின்னாடி கூட ஒரு பெருங் கூட்டம் கூடியது, இது கூட இங்கே தமிழ்நாட்ல ஒரு சில இடத்துல போராட்டம் நடக்குது, ஆனா அன்னா அசாரே பின்னாடி நாட்டல இருக்குர எல்லா மாணவ அமைப்பும் கொடி பிடிச்சுக்கிட்டு நின்னானுங்க, என்ன ஆச்சு?? ஊழல ஒழிச்சாச்சா???? அது மாதிரி தான், ஈழமும்… இலங்கையில் நடப்பதை தடுக்கவே முடியாது…. சும்மா பத்திரிக்கைகளுக்கு தீனி போடலாம்…. அவ்வளவு தான்… இன்னும் சில நாள்ல இது பிசுபிசுத்து போய் மறக்கப்படும்…. உறுதி….///

  3. nothing going to change. do u think that rajapakshe will be arrested?never. china,russia and other latin american countries will save him. so bad he is going to escape and continue as sri lanka president.

  4. மாணவர்களின் போராட்டத்திற்கு ஓட்டுமொத்த தமிழர்களும் கட்சி தலைமைகளின் கருத்தை தவிர்த்தது தங்களுடைய கருத்துகளின் அடிப்படையில் ஒன்றணைந்தால் மாற்றம் சாத்தியமே…….

  5. தமிழக மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிரேன். இந்தி போரட்டத்தின் போது அரசியல் தலைவர்களின் பங்களிப்பு இருந்தது. ஆனால் இந்த போரட்டம் மாணவர்க்ளாளெ நடத்தப்படுகிறது. சினிமா, சாரய, T. V போதையை கடந்து சமுக உணர்வு வுடன். மாணவர்கள் போராடுவது பெருமை பட வேண்டியது. என்.டி. டி.வி. டெல்லியில் நேரடி ஓளிபரப்பு செய்தார்களெ.இங்கே ஏன் 9 நாளக கானோம்.

  6. Our people cries & blood in EELAM is not heard by anyone. Only few % is fighting & worrying but nothing is going to change. TamilNADU has to become powerful in this world, we need more & better tamil leaders to take lead in proper way. Then we can punish the criminals who killed innocent tamil people other than that no way.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க