Monday, April 12, 2021
முகப்பு உலகம் ஈழம் மாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு!

மாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு!

-

பத்திரிக்கையாளர் சந்திப்பு

ழத்தமிழ் மக்களுக்காகப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதை கண்டித்தும், எமது ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்த அறிவிப்பும்…

sbhavan-7அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானம் வெற்றியல்ல – அது ஒரு ஏமாற்று.
ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள இனவெறி ராஜபக்‌ஷே கும்பலை போர்க்குற்றவாளிகள் என அறிவித்து பொது விசாரணை மூலம் தண்டிக்க வேண்டும்.
ஈழத் தமிழ் மக்களின் தன்னுரிமைக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதை கண்டித்தும் மாணவர்களைத் திரட்டி போராட உள்ளோம். இது பற்றிய எமது அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்க உள்ளோம். எனவே, இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு வந்திருந்து எமது செய்தியை வெளியிடுமாறு தங்களை அன்புடன் கோருகிறோம்.

நாள்: 25.3.2013
நேரம்: நண்பகல் : 12 மணி
இடம்: பத்திரிக்கையாளர் மன்றம், சேப்பாக்கம்.

தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி அனைத்துக் கல்லூரி மாணவர்களையும் அணிதிரட்டி வருகிறது. இத்தகைய போரட்டங்களில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழக அரசின் இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம், தொடர்ந்து மாணவர் போராட்டத் தீயை வளர்த்தெடுப்போம்!

எமது கோரிக்கைகள்

1) ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் மோசடியானது. அதை எதிர்க்கிறோம்!

2) இராஜபக்சேவை சர்வதேசப்போர்க்குற்றவாளியாக அறிவித்து, நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

3) ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இவண்
கணேசன்,ஒருங்கிணைப்பாளர்,
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி,
9566149374

 1. Students should be carefull about the divisive forces conspiring to divide the people , for exaple pasumpon thevars statue was demolished at koilpatti to divert the attention from eelam issue and spark coomunal tensions leading to riots in southern districts . athorugh enquiry required to probe the miscreants and their motives. Vinavu should look in to it and working class should never be divided as divided by congressmen in 1957 riots

 2. மாணவத்தம்பிகளுக்கு,
  நீங்கள் எவ்வளவு வலிமையாக போராடினாலும்,மத்திய அரசு நிச்சயம் உங்களை கூப்பிட்டு பேசாது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுடைய தோல்வியை தவிற்க இயலாது என்ற மனப்போக்கின் காரனமாகவும்,இனி என்ன செய்வது என்ற நிலையில் இருக்கிறது.
  உங்களுக்கு( தமிழக மக்களுக்கு) இருப்பது துருப்பு சீட்டு, 40 பாராளுமண்ற உருப்பினர்கள் மட்டுமே. அவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி சுற்றி வலைக்கப்படவேண்டும். அனைத்துக்கட்சியினரும் இலங்கையில் தமிழ் மக்கள்(எஞ்சியுள்ளோர்) நல் வாழ்வு வாழவேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றமில்லை.
  40 பேரும் நாடாளுமண்றத்திலேயே இருக்கட்டும். நல்ல முடிவு- நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும்.
  அன்னிய நாட்டை துண்டாக்க நம்மால் இப்போது இயலுமா?
  பொதுவாக்கெடுப்பு என்பது கேட்கலாம்.ஆனால் எப்படி, under whose supervision ?
  40 MP க்களும் நல்ல முடிவு கிடைக்கும் வரை,தமிழகத்தில் தேவை இல்லை.
  MP ஆனதுமுதல் வாய் திறந்து பேசாதவர்கள்,இப்போதாவது பேசவைக்கவேண்டும்.
  அடுத்த 40 நீங்கள் கை காட்டியவர்களாக இருக்கட்டும்.
  september ஜெனீவாவில் இந்தியாவின் குரல் ஒலிக்கட்டும்.
  இப்பொது இருக்கும் மாணவர் ஒற்றுமை,ஊழல் ஒழிப்பு,அடிப்படை வசதிகள்,கல்விப்பாதுகாப்பு,environmental safety, etc,etc.

 3. இந்தியாவே இலங்கை இனப்படுகொலை செய்த இலங்கைக்கு நிகரான குற்றவாளியாக இருக்கும்போது அவன் என்ன நம்மை கூப்பிட்டு பேசுறது.

  மேலும் இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கை ரிலையன்ஸ்,டாடா,ஏர்டெல் போன்ற முதலாளிகளின் லாபம் மட்டுமே தீர்மானிக்கும். இதுல எம்.பி, தேர்தல், 40 பேர் என எதுவும் பத்து பைசா பிரோஜனம் கிடையாது.

  நமது போராட்டத்துக்கு இந்த அரசை பணிய வைக்கும் ஒரு நடவடிக்கை கூட நிரந்தர தீர்வு கிடையாது. மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரவேண்டும் எனில் இந்த கட்டமைப்பையே தகர்க்க வேண்டும் என்பதே யதார்த்தம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க