Tuesday, October 4, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க த.நா தமிழனுக்கு 1ரூபாய் இட்லி! ஈழத்தமிழனுக்கு இலவச ஈழம்!

த.நா தமிழனுக்கு 1ரூபாய் இட்லி! ஈழத்தமிழனுக்கு இலவச ஈழம்!

-

தா-பாண்டியன்“யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே” என்பது நாம் அறிந்த முதுமொழி. வலது கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் என்று கூறப்படும் தா.பாண்டியன்தான் யானையின் கழுத்தில் தொங்கும் மணி.

மார்ச் 20 ஆம் தேதியன்று, இராஜபக்சேவின் இனப்படுகொலைக்கும் போர்க் குற்றத்துக்கும் எதிரான மாணவர் போராட்டங்கள் தீவிரமடைந்திருந்த சூழலில் தா.பா ஒரு அறிக்கை விட்டிருந்தார். “மாணவர்கள் இப்படி தனித்தனியாகப் போராடுவதால் பயனில்லை, எல்லோருடைய போராட்டத்துக்கும் முதல்வர் தலைமை தாங்கி நடத்த வேண்டும்” என்ற விசித்திரமான கோரிக்கையை அவர் முன்வைத்திருந்தார்.

“மணி தானாக ஆடாதே” என்று நாம் யோசித்து முடிப்பதற்குள் சீனுக்கு யானை வந்து விட்டது. “ஐ.பி.எல் போட்டியில் இலங்கை ஆட்டக்காரர்கள் சென்னைக்கு வரக்கூடாது. இலங்கையை நட்பு நாடாக இந்தியா கருதக்கூடாது. தனி ஈழம் குறித்த வாக்கெடுப்பை ஈழத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நடத்த வேண்டும்.” என்று அடுக்கடுக்கான அம்மாவின் தீர்மானங்களால் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் சுவர்கள் அதிர்ந்து விரிசல் விடத் தொடங்கி விட்டன.

அம்மாவுடைய சட்டமன்ற உரையின் கடைசி வரிகள்தான் மிகவும் கவனிக்கத்தக்கவை. மாணவர் போராட்டத்துக்குப் பயந்துதான் கருணாநிதி ராஜினாமா செய்து விட்டார் என்று எல்லோரும் கருணாநிதியை கலாய்த்துக் கொண்டிருக்கும் சூழலில், இந்த தீர்மானமும் மாணவர்களுக்குப் பயந்து கொண்டு அம்மா போட்ட தீர்மானம் என்று யாராவது எண்ணி விட்டால்? குறிப்பாக மாணவர்களிடம் அப்படி ஒரு ஆணவம் வந்துவிடக்கூடாதே என்பது தாயுள்ளத்தின் கவலை. எனவேதான், “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில் மாணவ மாணவியரின் போராட்டம் அமைந்திருந்தது” என்ற உண்மையைத் தனது உரையில் அவர் அழுத்தம் திருத்தமாகவும் அதே நேரத்தில் பணிவுடனும் சுட்டிக் காட்டியிருந்தார்.

“அம்மாதான் சத்யம், தமிழகம் மாயை ; தமிழகம்தான் அம்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தமிழகத்தை அம்மா பிரதிபலிக்க முடியாது. இந்த பிரம்மஞானம் கைவரப் பெற்றவர்கள் தமிழகத்தில் ஓ.ப, தா.பா போன்ற வெகுசிலர்தான். (ஓ.ப = ஓ. பன்னீர் செல்வம்)

“பிரதிபலித்தது போதும், போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்” என்றும் தனது சட்டமன்ற உரையில் அம்மா அன்புடன் உத்தரவிட்டிருக்கிறார். “அம்மா தலைமை தாங்கவேண்டும்” என்று தா.பா சொன்னதன் உட்பொருளும் இதுதான். தோளில் “சிவப்பு” துணியைத் தொங்கவிட்டிருக்கும் ஒரு மனிதர், “போதும், போராட்டத்தை முடியுங்கள்” என்று “பச்சை”யாக சொல்ல முடியாதல்லவா?

போராட்டம் இப்படியே தொடர்ந்து, எங்காவது ரெண்டு ஊரில் தடியடி-கைது என்று ஏடாகூடமாகிவிட்டால், “செக்கா சிவலிங்கமா என்று வித்தியாசம் தெரியாத மாணவர்கள் ஜெயலலிதாவுக்கும் ஒரு கொடும்பாவி தயார் செய்து பற்ற வைத்து விடுவார்கள்; புரட்சித்தலைவியின் கொடும்பாவி என்பதால் போலீசார் அதனை மிதித்து அணைப்பதற்கும் அஞ்சுவார்கள்; இதெல்லாம்  “களம் பல கண்ட கம்னிஸ்டான” தா.பாவுக்கு தெரியாதா என்ன? அதனால்தானே கொண்டை தெரிந்தாலும் பரவாயில்லை என்று அவரைத் தன்னுடைய ஒற்றர் படையின் தலைமைத் தளபதியாக அம்மா நியமித்திருக்கிறார்.

தாபா வாக இருக்கட்டும், பிற ஐந்தாம் படைத் தளபதிகளான வைகோ, பழ. நெடுமாறன், சீமான், டி.கே. ரங்கராஜன் போன்றோராக இருக்கட்டும். ஒரே நேரத்தில் எட்டுத் திக்குகளிலிருந்தும், வெவ்வேறு கட்டையில், நாளுக்கொன்றாகப் புரட்டிப் பேசும் இவர்களை அம்பலப் படுத்துவதென்பது மிகமிகக் கடினம். அது ரோலர் கோஸ்டரில் சவாரி செய்பவன் மீது குறி பார்த்து எறிவதற்கு ஒப்பானது.

“போரில் இலங்கையின் கூட்டாளியாக இந்திய அரசு செயல்பட்டிருக்கிறது என்ற உண்மையை ராஜபக்சே சொல்லிவிடுவார் என்பதால்தான் இந்திய அரசு ஐ.நா விசாரணையை எதிர்க்கிறது” என்று முழங்கினார் தா.பா – இது மார்ச் 6-ம் தேதி.

இந்திய அமைதிப்படைக்கு டவாலி வேலை பார்த்தவரான தா.பா,  இப்படி “அநியாயத்துக்கு”  நியாயமாகப் பேசுகிறாரே, என்று நாம் ஆச்சரியப்பட்டு முடிவதற்குள், “அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து இலங்கை அரசுக்கு புத்தி புகட்டும் வரையில் இந்தியா திருத்தம் கொண்டு வர வேண்டும் என்கிறார். இது 12 ஆம் தேதி.

“திருத்தமாவது ஒண்ணாவது, இந்தியாவே தீர்மானத்தை கொண்டு வரவேண்டும்” என்று ஆங்கில சானல்களில் சீறுகிறார் தேசிய செயலர் டி. ராஜா. சி. மகேந்திரனோ, சன் டிவி விவாத மேடையில், “சுயநிர்ணய உரிமை, தேசிய இனப்போராட்டம்” என்று ஏ.கே 47 துப்பாக்கியாய் வெடிக்கிறார்.

“செய்த பாவத்துக்கு இந்தியா பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும்” என்கிறார் நெடுமாறன். “அதெல்லாம் முடியாது, இந்தியாவின் டவுசரைக் கழட்டாமல் விடமாட்டேன்” என்று மேல் ஸ்தாயியில் ஒரு சவுண்டு விட்டு, அப்படியே மத்திய ஸ்தாயிக்கு இறங்கி வந்து, “தமிழக சட்டமன்றத் தீர்மானம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது” என்கிறார் வைகோ.

இன்னொரு பக்கம் மார்க்சிஸ்டு எம்.பி டி.கே ரங்கராஜன். அவர் அம்மாவின்  முதுகுப் பக்கம் முளைத்திருக்கும் கை. “ராஜபக்சேவை ராஜபக்சேவே விசாரித்தால் போதும், என்பதும், வாக்கெடுப்பு கூடாது என்பதும்தான் அவர் கொள்கை. மார்க்சிஸ்டு கட்சியின் கொள்கையும் அதுதான். 2009 ஏப்ரல் வரையில் ஜெயலலிதா பேசியதும் இதைத்தான். காங்கிரசு அரசின் கொள்கையும் அதுதான். ஆனால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலகியதை, நாடகம் என்று சாடிய ரங்கராஜன், சட்டமன்றத்தில் ஜெ போட்டிருக்கும் தீர்மானத்தை நாடகம் என்று சாடவில்லை. கட்சி மட்டும் சம்பிரதாயமாக தனது கருத்து வேறுபாட்டை தெரிவித்திருக்கிறது.

தேசிய இனப்பிரச்சினையைப் பொருத்தவரை “இந்தியா இலங்கை சிங்கப்பூர் மலேசியா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டிலும் எந்த தேசிய இனத்தின் பிரிந்து போகும் உரிமையையும் அங்கீகரிக்க முடியாது” என்பதுதான் வலது இடது கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை. இப்படி ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் காஷ்மீரை எதிர்த்தும், ஈழத்தை ஆதரித்தும் எப்படி இவர்களால் வாள் சுழற்ற முடிகிறது என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். இதென்ன பிரமாதம், ஒரே நேரத்தில் ஈழத்தை ஆதரித்தும், எதிர்த்தும் அம்மா கம்பு சுற்றி வூடு கட்டவில்லையா?

“ராஜீவைக் கொன்ற புலிகளை கருணாநிதி ஆதரிக்கிறாரே, சோனியா ஏன் மவுனம் சாதிக்கிறார், அவர் ராஜீவின் பெண்டாட்டிதானே?” என்று ஏப்ரல் 2009 இன் முற்பகுதியில் பேசிய ஜெயலலிதா, அதே ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் “இராணுவத்தை அனுப்பி ஈழம் வாங்கித் தருவேன்” என்று தேர்தல் கூட்டங்களில் முழங்கவில்லையா?”

“இலங்கையில் தற்போது நடைபெறும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை என்பதை ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி புரிந்து கொள்ளாதது விந்தையாக உள்ளது” என்று அக்டோபர் 2008 இல் பேசிய ஜெயலலிதா, இன்று ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு என்று சட்டமன்றத்தில் தீர்மானம் போடவில்லையா?

“இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் பிடித்து வைத்துக் கொண்டு, விடுதலைப் புலிகள் அவர்களைப் ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறி ஜனவரி 2009 இல் ராஜபக்சேவுக்கு வக்காலத்து வாங்கிய ஜெயலலிதா, இன்று ராஜபக்சே மீது இனப்படுகொலைக் குற்ற விசாரணை கேட்கவில்லையா?

இத்தனை தகிடு தத்தங்களையும் மறைத்து அம்மாவை ஈழத்தாயாக காட்டுவதென்பது, பச்சை ஆடை ஜெயலலிதாவை வெண்ணிற ஆடை ஜெயலலிதாவாக காட்டுவதற்கு ஒப்பான சவால். இதனை சாதிப்பதற்கு வைகோ, தாபா, சீமா, நெடுமா உள்ளிட்ட ஒப்பனைக் கலைஞர் சங்கமே களத்தில் இறங்கியிருக்கிறது. எனினும், இது சும்மா அரிதாரத்தை மாற்றிப் பூசும் வேலை மட்டுமல்ல என்பதால், கிராபிக்ஸ், அனிமேசன், ஈவென்ட் மானேஜ்மென்ட், மீடியா மேனேஜ்மென்ட், பிராண்ட் புரமோசன் வல்லுநர்களான ஃபீரீலான்ஸ் போராளிகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்கள்.

000

ட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை வழங்கிய சென்னைத் தமிழனுக்கு அம்மா ஒரு ரூபாய் இட்டிலி வழங்கவில்லையா? 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 40 சீட்டையும் அம்மாவுக்கு வழங்கியிருந்தால் அன்றைக்கே அம்மா ஈழம் பெற்றுத் தந்திருக்க கூடும். “வரவிருக்கும் தேர்தலில் 40 எம்.பி தொகுதிகளையும் பெற்றுத் தந்தால், இலவச ஈழம் உறுதி” என்று சொல்வதற்குத்தான் இந்த சட்டமன்றத் தீர்மானம்.

ஆனால் இலவச ஈழத்தை வழங்கவிருக்கும் மஞ்சள் பையில், புலி படத்தை அச்சிட அம்மா சம்மதிக்க மாட்டார். அம்மா படத்தை மட்டும் போட்டு, புலி படத்தை புறக்கணிப்பதற்கு புலி ஆதரவாளர்களுக்கு மனம் ஒப்பாது. புலி மேல் அம்மா சவாரி செய்வது போல போடலாம். நல்ல கருத்துப் படமாகவும் இருக்கும்.

–   தொரட்டி

 

 1. //போராட்டம் இப்படியே தொடர்ந்து, எங்காவது ரெண்டு ஊரில் தடியடி-கைது என்று ஏடாகூடமாகிவிட்டால், “செக்கா சிவலிங்கமா என்று வித்தியாசம் தெரியாத மாணவர்கள் ஜெயலலிதாவுக்கும் ஒரு கொடும்பாவி தயார் செய்து பற்ற வைத்து விடுவார்கள்; புரட்சித்தலைவியின் கொடும்பாவி என்பதால் போலீசார் அதனை மிதித்து அணைப்பதற்கும் அஞ்சுவார்கள்; இதெல்லாம் ”களம் பல கண்ட கம்னிஸ்டான” தா.பாவுக்கு தெரியாதா என்ன? அதனால்தானே கொண்டை தெரிந்தாலும் பரவாயில்லை என்று அவரைத் தன்னுடைய ஒற்றர் படையின் தலைமைத் தளபதியாக அம்மா நியமித்திருக்கிறார்.//

  நல்லா வாய் விட்டு சிரிக்கும் படியான சொற்றொடர். ஆனால் உண்மையும் கூட.

 2. தெருக்கூத்தை பார்க்காமல் தூங்கிவிடக்கூடும் என்பதால் பபூண் வேடமிடுபவர்கள் பார்வையாளர்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பார்கள். அதற்காக ரொம்பவுமே மெனெக்கெடுப்பார்கள். இப்படிப்பட்ட பபூண்கள் இல்லை என்றால் தெருக்கூத்தில் சுவாரசியம் இருக்காது.

  நாமும் தூங்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அம்மாவின் தெருக்கூத்திலும் இத்தனை பபூண்கள் இருக்கிறார்கள் போலும்!

  நல்ல நகைச்சுவை. தொரட்டிக்கு வாழ்த்துகள்!

 3. மிக அருமையான கட்டுரை!
  ஆழமாகவும் மிக்க நகைச்சுவையுடனும் எழுதப்பட்டிருக்கிறது. விழுந்து விழுந்து சிரித்தேன். படம் மிகப் பொருத்தம்! அதுவே ஆயிரம் அர்த்தங்களை நல்ல நகைச்சுவையுடன் சொல்கிறது.

  தா.பா வுக்கு ஜெ. மேல் ஒரு வருத்தம்: நாஞ்சில் சம்பத்துக்கு மட்டும் கார் கொடுத்தார், தனக்குத் தரவில்லை என்று.

 4. புரட்சித் தலைவி – 1988 (நெடு, பண்ருட்டி & கோ)
  நிரந்தர கழக பொதுச் செயலாளர் – 1989(செங்கோட்டையன் & கோ)
  நிரந்தர முதல்வர் – 1991 (கண்ண்ப்பன், அழகு திரு, செங்கோட்டை & கோ)
  தடா தாயார் – 1991-92 (கோவை ராமகிருட்டின், கலிக்கபட்டி ரவி)
  காவிரி தாய் – 1993 (மொக்கை நாவல் பாலகுமாரன்)
  சமூக நீதி காத்த வீராங்கனை – 1994 (கி.வீரமணி)
  பொடா அம்பாள் – 2002 (வைகோ, கணேசமூர்த்தி, பழ நெடுமாறன், புது கோட்டை பாவாணன்)
  அரசு ஊழியர்களை மிதித்து வதம் செய்த மகிஷாஷுரமர்த்தினி – 2003 (தினமலர், துக்ளக்)
  தைரியலஷ்மி – 2004 (ரஜினிகாந்த்)
  தங்கதாரகை – 2005 (தங்கபாலுவின் தம்பி தலைமையிலான‌ அமெரிக்கவாழ் ஹிந்துக்கள்)
  உலக தமிழர்களின் தாய் – 2011 -மே (பெரியார் திக)
  ஈழ தாய் – 2011 ஆகஸ்டு – (செந்தமிழன் சீமான் அண்டு கோ)
  தேச துரோகி உதயகுமார் & கோ-வை வதம் புரிந்த‌ இரும்பு மங்கை – (காங்கிரஸ், பாஜக, ஆர்.எஸ்.எஸ் & கோ ஹிந்து தேசபக்தர்கள்)
  ஹிந்து, ஹிந்தி, ஹிந்தியாவின் எதிர்காலம் – 2012 (“சோ”மாறி & ஹிந்து தேசபக்தர்கள்)
  விடியலுக்கான விடிவெள்ளி – 2013 (வைகோ)

  இப்படி ஜெயலலிதாவுக்கு பட்டங்களை வாரி வழங்கிய அனைவருக்கும் ஜெயலலிதா கொடுத்த பரிசு சிறை, செருப்படி மற்றும் கெட்ட வார்த்தை அர்ச்சனை.

  நெடு, பண்ருட்டி, அறந்தாங்கி தெருக்கரசர் இவர்கள் உதிர்ந்த ரோமங்கள்

  செங்கோட்டையன் ஒழுக்க கேடான ஆள் மந்திரி காலி

  அழகு திரு, கண்ணப்பன் முன்னாள், இன்னாள், என்னாள் துரோகிகள்

  இப்படி ஜெவிடம் எவ்வளவு செருப்படி வெளக்கமாத்தடி வாங்கினாலும் நெடுஞ்செழியன் அவர் தம்பி செழியன் முதல் நெடுமாறன் வரை, வைகோ முதல் செந்தமிழன் சீமான் வரை ஏதோ ஒரு காலத்தில் தங்கள் கடமை ஜெ பணி செய்து கிடப்பதே ஆழ்வார்களாக அவதாரம் எடுத்துள்ளார்கள்…

  இந்த எல்லா ஆழ்வார்களையும் விட மேல்மருவத்தூர் அம்மாவின் மறு உருவம் தாவண்ணா பாண்டி சொல்லும் குறி அம்மாவின் இதயத்தில் ஒரு ஓரத்தில் ஓபியை ஓண்டி தள்ளும்.

  வலது இப்படி என்றால் காவி கம்னிஸ்டுகளான் இடது, அரிவாளை வளைத்து நாமமாக்கி, சுத்தியலை நாம்த்தின் நடு கோடாக்கி, ஜெவுக்கு கரசேவை செய்து வரும் டி.கே.ரெங்கராஜன், நெய்வேலி ஜி.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் ஜெவின் திருசேவை, ஏற்கெனவே ஜெசாமியாடி சரத்குமாரோடு(என்ன இருந்தாலும் சரத் அப்பா முன்னாள் காவி கம்னிஸ்டுகளின் கோடாங்கிதானே) மல்லுகட்டி நிற்கிறது.

  • கருணாநிதி நிறைய பட்டம் கொடுத்து இருக்காரே , கருணாநிதிக்கும் நிறைய பட்டம் கிடைச்சு இருக்கே அந்த பட்டியலையும் போடுங்க .

 5. தலைப்பு இப்படி வைத்து இருக்கலாம்…
  த.நா தமிழனுக்கு 1ரூபாய் இட்லி! ஈழத்தமிழனுக்கு இலவச ஈழம்!
  மொத்ததில் எல்லா தமிழனுக்கும் அல்வா…

 6. இந்த தொரட்டி பறிச்சுப் போடுற புளியங்காய் நமக்கு ரொம்ப இனிக்குது.ஆனா தா பா வை கோ பழ நெ ச்சீமா டி ரா கி ரா மாதிரியான ஆளுகளுக்குப் புளிக்கும் கசக்கும் என்னத்தையோ வாயில போட்டா மாருதி இருக்கும். அதுக்கு நாம என்ன செய்ய முடியும். அவங்க கட்டுன கூத்து அப்படி.குரைச்சுத்தான் தீரனும்.பாவம்.இவுங்களால தொரட்டி என்னமோ கூர்மையாகிட்டுப் போகுது.இந்தக் கூட்டணியில இன்னுங் கொஞ்சம் பேரு பு இ மு புமாமுன்னுட்டு மாணவர்கள கொழப்பிக்கிட்டுத் திரியுறாங்க.அவுங்களையும் கொஞ்சம் தோலுரிக்கணும்.ஈழப் பிரச்சினையில இவங்கள்ளாம் காமடி பீசுங்கிறத மாணவர்கள்,மக்கள் நல்லா உணரணும்..ஆமா.

  • மாணவர் போரட்டமெல்லம் டெரர் காமெடி வகை….

   இதை பார்த்து அரசு பயப்படுமா? சிம்பிள் டாட்டிக்ஸ் போதும் மாணவர்களை முறியடிக்க… போராடியே ஓயட்டும்னு விட்டாலும் இன்னம் ஒரு பத்துநாள் போராடுவாங்க.. அப்புரம் கூட்டம் குறையும்.. கல்லூரி திறந்து வராத மாணவர்களின் பிராக்டிகல், டீசி, கண்டட்டு சர்டிபிகட் எல்லாம் கை வக்கப்படும்ன்ன்னு வாய்மொழி வதந்தி பரப்பினாலே மொத்த மாணவிகளும் 95 சதம் மாணவர்களும் போரட்ட களத்தை மறந்துடுவங்க..

   உண்மையாக போராடும் ஐரோம் சர்மிளாவுக்காக அரைபக்கம் கூட எழுதாத ஏடுகள், சென்னை குலுங்குது, வெண்ணை திரளுதுன்னு அட்டை படத்துடன் எழுதும்போத புரிஞ்சுக்க வேண்டாமா ?

   போரட்டத்த ஆதரிச்சா அரசு விளம்பரம் வராது ரெய்டு வரும்னு 10 பைசா செலவுல போன் பண்ணீனாலே அட்டை படத்தில் மாணவர் போராட்டம் மறைந்து திரிசா திருமணம் வந்துவிடாதா?

   மிச்சம் இருப்பவர்கள் உண்மையாக போராடநினைப்பவர்கள் ஆனா எண்ணிக்கை மக்கள் தொகையில் ஒப்பிட்டா 0.01% மாணவர்க்ளில் ஒப்பிட்டா 3 % ஒரு ஆரு இரண்டு மாசம் உள்ள இருக்குற மாதிரி கேஸ்போட்டு அப்புரம் மன்னிப்பு கடிதம் கொடுத்தா மாண்வர்களின் எதிர்காலம் கருதி மன்னிப்போம்னு அறிவிச்சா விரல் விட்டு எண்ண்ம் அளவு தான் களத்தில் இருப்பாங்க.. அவங்கள சமாளிப்பது பெரிய வேலயா?.. பிரக்டிகல்ல பத்து மார்க் சேர்த்து போடுறேன்ன்னு சொன்னா ஈவ் டீசிங்க், காதலிச்சு ஏமாத்திட்டானு கேஸ் குடுக்க அவஙக கூட படிக்கிற தோழிகளே தயார இருப்பங்க.. எதுனா ரெண்டு கேஸ் போட்டு அவங்க வாழ்க்கைய அரசு வேலை கனவ நாசம் பண்ணிட்டா அத பாக்குற சக மாணவர்கள் இன்னம் 10 வருசத்துக்கு எந்த பிரச்சன்னைக்கும் அணி திரள மாட்டன்க்க…

   போரட்டத்த அரசு அனுமதிக்க இன்னம் வேற என்னவோ காரணம் இருக்குங்க…

   வினவுதான் ஏதோ மேட்டர் இல்லாம விகடன் மாதீரி போராட்ட கவரேஜ் குடுக்குதுன்னா செவத்தி வீரன் நீங்களூமா இந்த டெரர் காமெடிய ஒரு விஷயமா நினைக்கிறீங்க…

   • இந்த போராட்டத்தில் இருந்து போராட்ட உணர்வுள்ள வெறும் நூறு இளைஞர்கள் இந்த சமுதாயத்திற்கு கிடைத்தாலும் மிகப்பெரிய வெற்றிதான். எல்லோரும் ஒரே நாளிலே மாறி போராட வந்து விடுவார்கள் என்றால் வரலாற்று/விஞ்ஞான ஆய்வெல்லாம் என்ன ஆவது.

   • // பிரக்டிகல்ல பத்து மார்க் சேர்த்து போடுறேன்ன்னு சொன்னா ஈவ் டீசிங்க், காதலிச்சு ஏமாத்திட்டானு கேஸ் குடுக்க அவஙக கூட படிக்கிற தோழிகளே தயார இருப்பங்க..

    இதை விட போராடும் கல்லூரி பெண்களை கேவல படுத்த முடியாது வினோத். முதல்ல உங்க ஆணாதிக்க எண்ணத்தை மாத்துங்க. என் வகுப்பில் எல்லா பெண்களும் போராட்டத்தில் கலந்துகிட்டோம்.

    • திவ்யா அவர்களே…

     எடுத்த எடுப்பில் ஆண் பெண்ணை பற்றி என்ன சொன்னாலும் அத ஆணாதிக்கம்னு சுருக்கதீங்க இந்த டுபக்கூர் ஆதிக்ககதயும் தாண்டி ஆண்களும் பெண்களுக்கும் நிறையா வேலை இருக்கு, உண்மையான சமுக விரோத ஆட்களை ஆதிக்க சக்திகளை எதிர்க்க தேவைப்படும் சக்தியை இப்படி ஆண்களை எதிர்த்து பெண்களும், பெண்களை அடக்கறேன்ன்னு ஆண்களும் வீணடிச்சா நம்காலத்திலும் நியாயமான சமுகத்தை நம் காலத்திலும் காண முடியாது.

     ஆனால் இனத்தால், நிறத்தால் சாதியால் மதத்தால் மக்களை பிரித்தால் தான் ஆதிக்கம் செலுத்த முடியும் இது ஆதிக்க சக்திகளுக்கு நன்கு தெரியும்.

     =================================================
     ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம்கிறதில்லாம் யாரிடம் பொருளாதாரம் இருக்குங்கிறதை வச்சுதான். நீங்களே படிப்பிலோ தொழிலிலோ உயர்ந்து வருமானம் நன்றாக இருந்தால் திருமணத்திற்கு பின் ஆணாதிக்கம் எல்லாம் பெரிசா இருக்க வாய்ப்பு இல்லை.. என்னா கணவன் என்ற ஆண் இல்லாமலும் நீங்க இருக்கலாம். ஆனா பொருளாதார ரீதியில் கணவனை சார்ந்து இருந்தா இன்னொறு சீரியல் வில்லனை மணக்கும் ஹிரோயின் ஆகவும் வாய்ப்பு இருக்கு.

     வேலை பொருளாதாரம் எதுவும் இல்லாமல் கணவனின் வருமானத்தில் இருந்து ஆணாதிக்க பிரச்சனையை சந்திக்காமல் இருக்கும் கணவன் தோழனாகவும் மனைவி தோழியாகவும் வாழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

     பொருளாதார சுதந்திரத்துடன் உங்களுக்கும் அப்படி ஒரு வாழ்கை அமைய வாழ்த்துக்கள்..

     —————————————–

     இது பதில் மொத்தமும் அரசு எப்படி போரட்டத்தை கையாள வாய்ப்பு இருக்குகிறதுக்காக சொல்லப்பட்டது.

     பெண்கள் போராட்டத்தில் கலந்துக்கவே இல்லன்னு நான் சொல்லலை. பெண்கள் கலந்துகொள்வதற்கும் ஆண்கள் கலந்துகொள்வதற்கும் வித்தியாசம் இருக்கு, சமுதாய இயங்களில் உள்ள பெண்கள் போராட்டம் வேறுமாதிரி,.. ஆனால் போராட்ட முனனனுபவம் இல்லமல் போராட்டத்தில் ஈடுபடும் க்ல்லூரி பெண்களின் நிலை வேறு.’

     வீட்டினரின் அனுமதியில்லாமல் போரட்டத்தில் கலந்து கொள்வீர்களா ?. போராட்டம் மாதகணக்கில் நீண்டால் ? வகுப்பு போக முடியாமல் படிப்புக்கு தடை ஏற்பட்டால் ?. தடியடி, கண்ணிர்புகை,கைது, சிறைன்னு என்கவுண்டர்ன்னு போரட்டம் போகும்போது .. போய்வா மகளே.. போய் வான்னு உங்க வீட்டில் அனுப்பிவைப்பங்களா ??

     அடிப்படையில் பெண்கள் சுயநலவாதிகள், இதை பெண்ணான உங்களாலேயே மறுக்க முடியாது.. தன் நலம் தன் குடும்ப நலம், அதன்பிறகு தான் மற்றதெல்லம். இது இயற்கையே செய்த ஏற்பாடுன்னலும், இதுவும் ஒரு உண்மை. ஒரு கம்ப்ளைன்ட் மட்டும் கொடு, நேரடி விசாரணைக்கு வர வேண்டியதில்லை, உன் பாஸ் பெயில் பற்றி நீ கவலை பட வேண்டாம்ன்னு சொன்னா உங்க கல்லூரி நிர்வாகம் சொன்னபடி கம்ப்ளைன்ட் கொடுக்க எந்த பெண்ணும் முன்வர மாட்டர்கள்னு உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? கல்லூரி மாணவிகளே நிர்வகத்திற்காக போலிசில் பொய் புகார் கொடுத்தருக்காங்க தெரியுமா ? நிர்வாக உத்தரவு எல்லாம் அப்புரம், சுயநலத்ற்காகவே புகார் கொடுத்த பெண்களும் உண்டு தானே.? எல்லா பெண்களும் இப்படித்தன்னு நான் சொல்லலை, ஆனால் இப்படிபட்ட பெண்களும் உண்டுன்னு தான் சொன்னேன்.

     பெண்களுக்கு சாதகமான சட்டங்கள் அதிக அளவில் இருக்கு, எந்த அளவிற்குன்னா அரசியல் சட்டத்தின் அடிப்படை கோட்பாடான சட்டத்தின் முன் அனைவரும் சமம்ங்கிறத கேள்விக்குறியாக்கும் அளவிற்க்கு இருக்கு.

     ஒரு பெண் நினைத்தால் நிரபராதி ஆணையும் சுலபமாக பொய்குற்றம்சாட்டி சிறைக்கு அனுப்பலம்ங்கிற அளவுக்கு , அதே சமயம் உண்மையாகவே தப்பு செய்யும் பெண்ணை தண்டிக்க ஆண் பிரம்ம பிரையத்தனம் செய்ய வேண்டும் என்னுமளவிற்கு கேனத்தனமாக போடப்பட்ட சட்டங்களின் பெரிய தொகுதியே இருக்கு.

     எனவே ஆளும் வர்கத்திற்கு இந்த சட்டங்களை பிரையோகிப்பது மிக சுலபம், துப்பாக்கியில் சுட்டால் கூட கணக்கு கேட்கலாம். பின்னால் விசாரணை வரலாம், போராட்டத்தில் ஈடுபட்டவர் குற்றமற்றவர்ன்னு நிறுபிக்கபடலாம், ஆனால் பெண்களின் வழக்கு வேறுமாதிரியானது,

     கொஞ்சகாலம் முன் பிரபலமான அமரிக்க அரசின் கண்களில் விரல் விட்டு ஆட்டிய விக்கிலீக்சின் ஜீலியன் ஆங்கேயின் தற்போதய நிலை உங்களுக்கு தெரியுமா ? பெண்கள் சட்டத்தை அரசு எதற்கு எப்படி பயன்படுத்தாம்ங்கிறதுக்கு இவர் ஒரு உதாரணம்.

     தண்டிப்பது சுலபம் ஒருமுறை தண்டிக்கபட்டுவிட்டால், சமுகமும் அரசும் பார்வ்வை வேறுமாதிரி இருக்கும்.

     எந்த காரணமாக இருக்கட்டும் ஜெயில்க்கு போய்வந்தவர்ன்னு தெரிஞ்சா அவருடன் நீங்கள் சகஜமாக பழகுவீங்களா ?

     இன்னொறு மறுமொழி போட்டு இருக்கேன் சிவக்குமார்க்கு பதிலாக.. எண் 11.1 அதையும் படிச்சு பாருங்க.

     பெண்களை கேவலபடுத்து நோக்கம் எல்லாம் எனக்கு இல்லை. பெண்ணை பற்றி கொஞ்சம் குறைவா எழுதினா உடனே ஆணதிக்கம்ங்கிற எண்ணத்தில் இருந்து வெளிய வாங்க. எழுத்தில் உண்மை இருக்கா இல்லைய இதை முதலில் பாருங்க.

  • பு.இ.மு – பு.மா.மு போன்ற கம்பெனிகள் சீமான் வகையறாக்களைப் போல ஜெயாவை முட்டாள்தனமாக ஆதரிக்கமாட்டார்கள் மிகவும் புத்திசாலித்தனமாக அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்திய பிறகே ஆதரிப்பார்கள், கடந்த நாடாளுமன்றத் தோர்தலில் இந்த அறிவாளிகள் காங்கிரசுக்கு ஓட்டுப்போட வேண்டாம் என்று பிரச்சாரம் செய்தார்கள், இவர்கள் பச்சையான இனவாதிகள் அல்ல சிவப்பு இனவாதிகள்.

 7. “தனி ஈழம்”-அவாளும்,அவைகளும் நடத்தும் கோமாளி கூத்துக்கு சரியாக பொருந்தியிருக்கிற கருத்துப்படம் இது.

 8. அமெரிக்க விசாவிற்காக முதல் நாளே வரிசை பிடித்து நிற்கும் அடிமைகளின் தேசமான நம் தாய் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தேர்தல் வருமுன்னே போயஸ் தோட்ட காம்பவுண்ட் சுவரை வெறிக்க பார்க்க தொடங்கி விடுவர் .அந்தம்மாவிடம் நல்ல பேர் எடுக்க குப்பைகள் பொறுக்குவது, வாசல் பெருக்குவது, கோலம் போடுவது வரை ஒரு நல்ல ‘ஒழுங்குக்கு’ அவர்களாகவே வந்து விடுகிறார்கள். இதில் ஓரளவு ‘கெத்’தாக கடைசி நேரத்தில் உள்ளே வருபவர் மருத்துவர், இந்த முறை எப்படியோ?

 9. என்ன இப்படி சொல்லிடீங்க வினோத் இதெல்லாம் நடக்கனுமிங்கிறது உஙக ஆசை.

  • சிவக்குமார் அவர்களே… இப்படி நடக்கும்கிறது என் ஆசையா இருக்க நான் பிரதமரோ , முதல்வரோ, இல்லை மாணவர் போரட்டத்தில் நான் இழக்கபோவது எதுவும் இல்லை. போராட்டம் முறியடிக்கப்ப்டால் நான் பெறப்போவதும் எதுவும் இல்லை..

   அரசியல் ஓநாய்களூடன் ஒப்பிட்டால் போராடும் மாணவர்கள் பரிதாபதிற்குரிய பலியாடுகளாக தெரிகிறார்கள். முறையான அரசியல் பயிற்சி, மாணவர் பாரளுமண்றம் நிழல் அமைச்சரவை, நிழல் பட்ஜட் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, அனுபவம் உள்ள கள போராளிகளுடன் போரட்டத்தில் ஈடுபட்டல் கூட அரசால் அது போராட்டமாகவே பர்க்கபடும். அப்போது தான் நிஜ போராட்டத்தை ஒடுக்கும் உத்திகளை கையில் எடுக்கும் அரசு.

   அதை முறியடிக்க தொடர் போரட்டமும் மக்கள் ஒத்துழைப்பும் வேண்டும். தயங்காமல் உடல் உயிர் எதிர்காலம் எல்லாவற்றையும் பணயம் வைக்கும் போராட்ட அமைப்பும், அதை சுயுலாபத்துக்கு பயன்படுத்தாத தலைவர்களூம் வேண்டும் ஏனென்ற்றால் அமைப்பு வலுப்படும்போது, அதை ஒடுக்க அரசு கையாளூம் தந்திரம் பிரதிநிதிதுவம். தலைவர்களை பிரதிநிதிகளாக்கி முறையற்ற வருவாய், சுகங்களை அவர்கட்கு ருசி கண்பித்து, பின் அவர்களை சக போராளிகளீடம் அடையாளம் காட்டி, அமைப்பை உடைத்து மேலாண்மையை நிலைநாட்டுவது இன்னொறு தந்திரம்,

   இந்த நரித்தனத்துகொல்லாம் கட்டுபாமல் போரடிநால் தடா , பொடா வரும், ஆயுதம் ஏந்த , தேடப்டும் குற்றவாளியாகவேண்டி வரும். இதையும் தாண்டி அமைப்பை காப்பறுவது பெருஞ்சவால். அதை செய்துகாட்டியவர் தான், பிரபாகரன். ஆனால் இரண்டாம் நிலைதலைவர்கள் இல்லாதது, தமிழகளூக்கு மட்டுமே உரித்தான காட்டிகொடுக்கும் குணம், சாதிய பிரச்சனை, எல்லாம் சேர்ந்துதான் முள்ளிவாய்க்கால் சம்பவம் நடந்தது.

   பிரபாகரனே இன்னம் பயணிக்க வேண்டிய பாதை நீண்டது. இந்த குறைகளை களைந்திருந்தால் அடுத்த நிலை போராளீகளீன் அரசு, அதை உலக நாடுகள் அங்கிகரிக்க, இருக்கும் அரசை வீழ்த்த வேண்டும் .. இப்போதும் ஒரு நரிதனம் வரும் போராளிகளின் அரசு உருவானவுடன், இருக்கும் அரசின் உயர்நிலை அதிகாரிகள் புதிய அரசில் பங்கேற்று பதவியை தக்கவைக்க போரளி வேஷம் போடுவர். அவர்களில் ஆபத்திலாத பல் பிடுங்கபட்ட பாம்புகளை இனம் கண்டு, கூட்டணீ சேர்த்து கண்காணிப்பில் வைத்து கொண்டு, மற்றவர்கள ஒதுக்க வேண்டும் , ஒதுக்குவதற்கு போராளி அரசின் சுலபமான வழிமுறை கொல்வது.. இல்லை சிறைபத்துவது. பழய அரசின் கட்டமைபை பயன்படுத்திகொள்ளவும் பலம் வாய்ந்த எதிரிகளின் பலவீனங்களை அடையாளம் காணவும் இது உதவும், இதை தான் இலங்கை அரசு செய்தது கருணவை மந்திரி பதவி கொடுத்து புலிலளை ஒழிக்க உதவி பெற்றது.

   இந்த எல்லா நிலையிலும் மக்கள் ஆதரவு மிக மிக முக்கியம். இப்படி நீண்ட போராட்டத்தில் பெறபட வேண்டிய வெற்றி சாலை மறியலில் கிடைக்கும் என்கிறீர்களா?

   மானவர்களின் போராட்ட திறன் தவறாக பயன்படுத்தபடுகிறது. இந்த இரண்டும் கெட்டான் சாலை மறியலில் மக்களிடம் மாணவர் அவப்பெயர் வாங்கியது தான் மிச்சம். சில நாள் போராடியும் அரசில் பெரிய மாற்றம் ஒன்னும் இல்லை என்னும்போது மாணவர்களிடம் நம்பிக்கை குறைவு எற்படும்..

   அரசும் அதை தான் எதிர்பார்கும்… உலக அரசியல் மக்கள் போராட்டங்களை உற்று நொக்கி பின்னர் சொல்லுங்கள், நான் சொன்னது என் ஆசையா, இல்லையா என…

 10. தா. பாண்டியன் மானத்தை இழந்த ‘கவரிமான்’, சர்வதேச பாட்டளி வர்க்கத்தை அடமானம் வைத்த ‘கம்னுஸ்ட்’, தமிழனுக்கு சமாதி கட்டிய ‘தமிழின போராளி’ பலே பாண்டியா

 11. நான் இன மானமுள்ள தமிழன் என்பதால் உள்ளபடியே என் கருத்தை இங்கே பதிவிடுகிறேன். தா யார்? இவரும் ஒரு காலத்தில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து தேர்தலில் நின்ற கட்சியினை சேர்ந்தவர் தான், அய்யா பழ. நெடுமாறன் இவர் எந்த இதுக்காக சுதந்திரா காங்கிரஸ் இல் இருந்து பிறகு வெளியேறினார்? 2009 க்கு பிறகு இவரால் பகிரங்கமாக தனி ஈழத்திற்கான தமிழகம் தழிவிய அளவில் மாநாடு நடத்த முடிந்ததா? இன்னும் ஒருத்தர் அவர் நடப்பதற்காகவே ஏதாவது ஒரு தலைப்பை வைத்துக் கொண்டு செல்கிறார். தி.மு.கவில் இருந்த போது மேலவை உறுப்பினராக இருந்தார் அதன் பிறகு எந்த கூட்டணியிலும் அவரை மேலவைக்கு தேர்ந்தெடுக்க வில்லை.ஏன் அவருக்கு பாத்தியப்பட்ட தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத பரிதாபத்திற்குரியவர் அவர். இன்னொருத்தவர் இருக்கிறாரே அவரி பற்றி பேசவேக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஏனென்றால் கருத்துக்கு அருகதையில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

  • // இன்னொருத்தவர் இருக்கிறாரே அவரி பற்றி பேசவேக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். // அரகுறையா உலராம இப்படி முடிவெடுத்து இருப்பது உசிதம் 😛

 12. அன்னாச்கி நாம என்ன பன்னனும்னு சொல்ரிஙக? திரும்பவும் தி.மு.க காங்கிரசுக்கெ வாக்கு போட சொல்ரிஙலா

 13. ஒரே நேரத்தில் எல்லோரையும் விமர்சிச்சு செவப்பு கலர் காரங்க மட்டும் சிரிக்க எழுதப்பட்ட கட்டுரை . எல்லாமே தவறு நான் மட்டுமே சரி – வினவு இப்படி சொல்லிட்டு கட்டுரை எழுதுங்க இன்னும் சிறப்பா இருக்கும் . தமிழக சட்டமன்ற தீர்மானம் பற்றிய எந்த விமர்சனமும் இல்லை , பொருளாதார தடை விதிக்க சில ஆண்டுகளுக்கு முன்பே முதல்வர் தீர்மானம் போட்டார் . சிங்கள உழைக்கும் மக்களிடம் பிரச்சாரத்தை ஆரம்பிச்சுட்டீங்களா வினவு 🙂

  • வினவு தப்புன்னா யார் சரின்னு சொல்லுங்க மணி, நீங்க சொல்லும் சரியான யோக்கியர்களிடம் நேர்மை என்று ஒன்று இருந்தால் வந்து மாற்றுக்கருத்தை பேச வேண்டியது தானே ?

   ’ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு’ விமர்சனம் கேட்குமளவுக்கா தமிழன் முட்டாளாக இருப்பான் ?

   ஈழம் பெற்றுத்தருவதற்காக கூடத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் திட்டம் போட்டார் உங்களைப் போன்ற தமிழ்தேசியர்களும் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தீர்கள் முதல்ல அந்த மேட்டர் என்னாச்சுன்னு சொல்லுங்க மணி ?

   ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழனுமா தனியா வாழனுமான்னு முடிவு செய்ய வேண்டியவன் யார் ?

   • // வினவு தப்புன்னா யார் சரின்னு சொல்லுங்க //

    வினவு மட்டுமே சரியானவர்கள் அப்படித்தானே ?

    //ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு’ விமர்சனம் கேட்குமளவுக்கா தமிழன் முட்டாளாக இருப்பான் //

    தாபா சொன்ன ஒரு வரியை எடுத்துக் கொண்டு கட்டுரை எழுதி விமர்சிப்பீங்க , ஆனா முதல்வரின் தீர்மானம் பற்றி வாய் திறக்க மாட்டீங்க . அதுக்கு பேரு அறிவாளித்தனம் 🙂 தீர்மானத்தில் சரி , தவறு என்னென்ன என ஒரு கட்டுரை எழுதுங்கள் உங்களுக்கு திராணி இருந்தால் !

    // ஈழம் பெற்றுத்தருவதற்காக கூடத்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் திட்டம் போட்டார் உங்களைப் போன்ற தமிழ்தேசியர்களும் கிடைக்கும் என்று காத்துக்கொண்டிருந்தீர்கள் //

    நிச்சயமாக இல்லை , ஜெயலிலதாவின் தீர்மானங்கள் தமிழீழத்தின் அவசியத்தை தமிழக மக்களுக்கு உணர்த்த பயன்படும் என்ற அளவில் அதனை வரவேற்கலாம் . ஜெயலலிதா ஈழம் பெற்றுத்தருவார் என செவப்பு தோழர்கள் நினைத்து இருக்கலாம் . தமிழக முதல்வரின் பழைய தீர்மானங்களை எப்படி பாக்குறீங்க ?

    // ஈழத்தமிழர்கள் சேர்ந்து வாழனுமா தனியா வாழனுமான்னு முடிவு செய்ய வேண்டியவன் யார் //

    நிச்சயமாக நீங்களோ நானோ இல்லை , ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தான் தீர்மானிக்கனும் . இலங்கையை உடைக்க புடாது , சிறு நாடுகள் தோன்றினால் பிரச்சனையாக இருக்கும் ன்னு மார்க்சிஸ்ட் கட்சி போல மகஇக வும் பேசக்கூடாது 🙂

    • ////வினவு மட்டுமே சரியானவர்கள் அப்படித்தானே ?////

     ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்கும் தமிழ்தேசிய அல்லக்கைகளோடு ஒப்பிடால் வினவு சரியா தமிழ்தேசிய அப்ரசண்டிகள் சரியா ?

     2009 வரை இந்தியாவுக்கு காவடி தூக்கிய தமிழ்தேசியவாதிகளும் தற்போதும் தூக்கி வருகிற சில தமிழ்தேசியவாதிகளோடு ஒப்பிட்டால் வினவு சரியா தேசியவாதிகள் என்று சொல்லிக்கொள்கிற இந்தியாவின் அடிமைகள் சரியா ?

     இந்தியாவை நம்பாதே என்று சொல்கிற வினவு சரியா இந்தியாவைத்தான் நம்புவோம் இந்தியா தான் ஈழம் வாங்கித்தரும் என்று சொல்கிற, தமிழ்தேசியர்கள் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடும் காசி ஆனந்தன் சரியா ?

     இது போல இன்னும் பல சரி தவறுகளை சொல்ல முடியும் இப்போதைக்கு இதில் எது சரி தவறு என்பதை மட்டும் சொல்லுங்கள் அத்துடன் வினவு எப்படி தப்பு என்பதையும் சொல்லுங்கள்.

     ///தாபா சொன்ன ஒரு வரியை எடுத்துக் கொண்டு கட்டுரை எழுதி விமர்சிப்பீங்க, ஆனா முதல்வரின் தீர்மானம் பற்றி வாய் திறக்க மாட்டீங்க. அதுக்கு பேரு அறிவாளித்தனம் 🙂 தீர்மானத்தில் சரி, தவறு என்னென்ன என ஒரு கட்டுரை எழுதுங்கள் உங்களுக்கு திராணி இருந்தால்!///

     மறுபடியுமா ? ஜெயலலிதா மேல நீங்க இவ்வளவு நம்பிக்கை வைச்சிருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை மணி. இந்தாங்க ஜெயாவின் தீர்மான அவதாரம் பற்றிய கட்டுரை.

     அதிரடி ரிலீஸ் – ஈழத்தாய் இரண்டாவது அவதாரம்! https://www.vinavu.com/2011/06/10/eezhathai/

     ///ஜெயலிலதாவின் தீர்மானங்கள் தமிழீழத்தின் அவசியத்தை தமிழக மக்களுக்கு உணர்த்த பயன்படும் என்ற அளவில் அதனை வரவேற்கலாம்.////

     ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் தான் வேணும்னு முடிவு செய்ய நீங்க யார்ன்னு ஏற்கெனவே கேட்டேன், ஆமா அதை நீங்களோ நானோ முடிவு செய்ய முடியாதுன்னு சொன்னீங்க ஆனா இப்போ இங்க என்ன சொல்றீங்க, ”தமிழீழத்தின் அவசியத்தை தமிழக மக்களுக்கு உணர்த்த வேண்டும்னு சொல்றீங்க” இதிலிருந்து என்ன தெரியுது ? ஈழத்தமிழர்களுக்கு என்ன வேணும் வேணாங்கிறதை எல்லாம் அவர்கள் தங்களுடைய சொந்த மூளையை பயன்படுத்தி முடிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை அதையெல்லாம் தமிழ்தேசியவாதிகளான நாங்களே முடிவு செஞ்சிருவோம் என்று இன்னொரு நாட்டு மக்களின் வாழ்க்கையை, சமூக அமைப்பைப் பற்றி முடிவு செய்கின்ற உயர்ந்த இடத்தில் உங்களை நீங்கள் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது, நீங்கள் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள அனைத்து தமிழ்தேசியவாதிகளும் தங்களை அத்தகைய உயர்ந்த இடத்தில் தான் வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

     ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை பற்றி முடிவு செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நான் சொல்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

     ////நிச்சயமாக நீங்களோ நானோ இல்லை, ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தான் தீர்மானிக்கனும்.///

     அந்த தகுதி சீமான்,வைகோ போன்ற கோமாளிகளுக்கு மட்டுமல்ல புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுக்கும் இல்லை அது சிங்க இனவெறி பாசிச அரசின் கீழ் வாழும் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமே உண்டு.

     குறிப்பு : ஈழத்தில் பாசிச ஒடுக்குமுறையின் கீழ் வாழும் தம் மக்களோடு வாழ விரும்பும் புலம்பெயர் தமிழர்களை நான் கூறவில்லை.

     • ஜெயலலிதாவிற்கு பல்லக்கு தூக்கும் என்ற வாசகமே ஏற்புடையது அல்ல , தமிழக முதல்வராக ஜெயலலிதா செய்யும் நல்ல விடயங்களை ஆதரிப்பதும் தவறான விடயங்களை எதிர்ப்பதும் எப்படி பல்லக்கு தூக்குவதாகும்?மேலும் ஜெயலலிதாவை பல்லக்கு தூக்க தமிழ்த்தேசியம் ஏன் பேசணும் ?

      தமிழர் நலனுக்காக தமிழத்தேசியம் பேசும் இயக்கங்கள் சரியா இல்லை வறட்டு கொள்கைகளுடனும் குழப்பமான தீர்வுகளையும் சொல்லும் வினவு சரியா என்றால் தமிழ்த்தேசிய அமைப்புகளே சரி என்பேன்.

      //ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு இடைவிடாத போராட்டம் மூலமே வழி கிடைக்கும். சட்டப்பூர்வமாகப் போராடி பாசிசத்தை வெல்ல முடியாது. இது ஜெயா போன்ற பாசிஸ்டுகளுக்கு புரியுமென்பதால்தான் அவர்கள் இதுபோன்ற நடக்க முடியாத விசயங்களுக்காக போராடுவது போல போராடுகிறார்கள்.//

      அந்த கட்டுரையில் நடக்க வாய்ப்பற்ற விடயங்களை தீர்மானமாக போட்டு இருக்கிறார் ஜெயலலிதா என் குறிப்பிட்டு உள்ளது .. எது நடக்கும் நடக்காது என நாம் முன்கூட்டியே தீர்மானிக்க முடியுமா என்ன ? அப்படி தீர்மானிப்பது ஜோசியம் தானே ? தீர்மானத்தில் உள்ள நிறை குறைகளை ஆராயாமல் தீர்மானமே போலியானது என சொல்லுவது எந்த வகை என தெரியவில்லை ..

      //ஈழத்தமிழர்களுக்கு என்ன வேணும் வேணாங்கிறதை எல்லாம் அவர்கள் தங்களுடைய சொந்த மூளையை பயன்படுத்தி முடிவு செய்யவேண்டிய அவசியம் இல்லை அதையெல்லாம் தமிழ்தேசியவாதிகளான நாங்களே முடிவு செஞ்சிருவோம் //

      வட்டுக்கோட்டை தீர்மானம் அதனை தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற தேர்தல் முடிவு என அனைத்தும் தமிழீழத்தை வலியுறுத்தியதெனே குறிப்பிட விரும்புகிறேன் . புலிகளின் போராட்ட நோக்கமும் புலிகளுக்கு உதவிய தமிழர்களின் நோக்கம் தமிழீழ தேசம்தான் . முதல்வர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க போட்ட தீர்மானம் தமிழீழம் நோக்கி போராடும் மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும் . இந்திய அரசில் தமிழகம் இருக்கும் வரை தமிழக தமிழனுக்கு எந்த உரிமையும் இருக்காது …

      // ஈழத்தமிழர்களின் வாழ்க்கையை பற்றி முடிவு செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று நான் சொல்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?//

      எனக்கு மட்டுமல்ல இது அனைவருக்குமே பொருந்தும் , யாருக்கும் உரிமை இல்லை .. ஆனால் இதுநாள் வரை எந்த கோரிக்கையை முன்னிறுத்தி ஈழத்தமிழர்கள் போராட்டம் நடத்தினார்களோ அந்த கோரிக்கையை சொல்லுவதில் தவறு இல்லை என நினைக்கிறேன் … தமிழீழ கோரிக்கை பற்றிய உங்களின் நிலைப்பாடுதான் என்ன 🙂 தமிழீழம்தான் ஈழத்தமிழர்க்கு தீர்வு என்பது எனது கருத்து அதனை உறுதியாகவும் சொல்லுவேன் !

      //இந்தியாவை நம்பாதே என்று சொல்கிற // இந்தியாவை மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நாட்டையும் நம்ப முடியாது ஆனால் இந்த சந்தர்ப்பவாத உலகினருடன் தானே பயணிக்க முடியும் 🙂

      • ///ஜெயலலிதாவிற்கு பல்லக்கு தூக்கும் என்ற வாசகமே ஏற்புடையது அல்ல///
       ///தமிழக முதல்வராக ஜெயலலிதா செய்யும் நல்ல விடயங்களை ஆதரிப்பதும் தவறான விடயங்களை எதிர்ப்பதும் எப்படி பல்லக்கு தூக்குவதாகும் ?///
       ///மேலும் ஜெயலலிதாவை பல்லக்கு தூக்க தமிழ்த்தேசியம் ஏன் பேசணும் ?///

       சரி பல்லக்கு வேண்டாம் ஜால்ராக்கள் என்பது பொருத்தமாக இருக்க்கும் என்றால் அப்படியே கூட வைத்துக்கொள்ளலாம்.

       நீங்கள் மதிக்கும் தமிழக முதல்வர் இதுவரை தமிழக மக்களுக்கு செய்த நன்மைகளை எல்லாம் கொஞ்சம் பட்டியல் போடுங்களேன் பார்ப்போம்.

       பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை பாராட்டுவதற்கும் ஒரு குரூரமான மனம் வேண்டும் ஆனால் தமிழக வரலாற்றில் கோமாளிகள் பாத்திரத்தை ஏற்றிருக்கும் தமிழ்தேசிவாதிகளுக்கு ஜெயலலிதா என்கிற பார்ப்பன பாசிஸ்ட்டை பாராட்டுகின்ற வரிசையில் கூட இடம் இல்லை மாறாக ஜிங்குச்சா தட்டுகின்ற அல்லக்கைகளின் வரிசையில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள்.

       நரேந்திர மோடியின் நண்பரும் சோவிடம் ஆலோசணை பெறுபவருமான பாசிச ஜெயாவிடம் நல்ல விசயங்களை தேடுவது என்பது மலத்தில் அரிசி பொறுக்கும் வேலையாகும் (அதிலும் இது பார்ப்பன மலம்) ஜெயலலிதா என்கிற பார்ப்பன மலத்தில் உள்ள நல்ல விசயங்களை எல்லாம் ஆய்வு செய்து நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்டதை ஒதுக்கும் உயரிய கொள்கையுடையவர்கள் தமிழ்தேசியவாதிகள் தான் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், எனவே ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்குகின்ற முழுத் தகுதியும் தமிழ்தேசியவாதிகளுக்குத்தான் உண்டு.

       ///தமிழர் நலனுக்காக தமிழத்தேசியம் பேசும் இயக்கங்கள் சரியா இல்லை வறட்டு கொள்கைகளுடனும் குழப்பமான தீர்வுகளையும் சொல்லும் வினவு சரியா என்றால் தமிழ்த்தேசிய அமைப்புகளே சரி என்பேன்.///

       உண்மை தான் தமிழர்களுக்காக பல நல்ல விசயங்களை செய்யும் ஜெயலலிதாவைப் போய் பாசிஸ்ட் என்றும் தமிழின விரோதி என்றும் கூறுகின்ற ம.க.இ.க வின் கொள்கை வறட்டுவாதக் கொள்கை தான் நானும் உங்களைப் போல தமிழ்த்தேசிய அமைப்புகளைத் தான் சரி என்பேன்.

       /////வட்டுக்கோட்டை தீர்மானம் அதனை தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற தேர்தல் முடிவு என அனைத்தும் தமிழீழத்தை வலியுறுத்தியதெனே குறிப்பிட விரும்புகிறேன் . புலிகளின் போராட்ட நோக்கமும் புலிகளுக்கு உதவிய தமிழர்களின் நோக்கம் தமிழீழ தேசம்தான். முதல்வர் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க போட்ட தீர்மானம் தமிழீழம் நோக்கி போராடும் மக்களுக்கு உந்து சக்தியாக இருக்கும். இந்திய அரசில் தமிழகம் இருக்கும் வரை தமிழக தமிழனுக்கு எந்த உரிமையும் இருக்காது…/////

       வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பிறகு நாற்பது ஆண்டுகள் ஆகப்போகிறது, அதற்குப் பிறகு பல தலைமுறைகள் பிறந்துவிட்டன, இப்போது பெரும்பான்மையாக உள்ள அவர்கள் தான் அதைப்பற்றிப் பேச வேண்டும். ஈழம் வேண்டும் என்பதை அந்த மண்ணின் மக்கள் பேசட்டும், போராளி இயக்கங்கள் பேசட்டும் அதை நாம் கேட்கிறோம் ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு எந்த வேலை வெட்டியும் இல்லாமல் ஈழம் ஈழம்னு பேசுற இவனுங்க யாருன்னு கேட்கிறேன்.(வேலை வெட்டி எதுவும் இல்லைன்னு சொல்லிட முடியாது ஜெயலலிதாவுக்கும் இந்திய அரசுக்கும் காவடி தூக்குவது இவர்களின் பிரதான வேலையாக இருக்கிறது)

       /////தமிழீழ கோரிக்கை பற்றிய உங்களின் நிலைப்பாடுதான் என்ன ? தமிழீழம்தான் ஈழத்தமிழர்க்கு தீர்வு என்பது எனது கருத்து அதனை உறுதியாகவும் சொல்லுவேன் !/////

       இதுக்கு முன்னாடி போட்ட பின்னூட்டத்திலேயே இதுக்கு விரிவா பதில் சொல்லியிருக்கேன் படிச்சுக்குங்க, பிறகு ஈழத்தமிழர்களுக்கு ஆலோசணை சொல்கிற உங்களுடைய பெரியண்ணன்தனத்தை கொஞ்சம் ஓரங்கட்டிவிட்டு வேறு ஏதாவது உருப்படியான வேலைகள் இருந்தால் பாருங்கள்.

       /////இந்தியாவை மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நாட்டையும் நம்ப முடியாது ஆனால் இந்த சந்தர்ப்பவாத உலகினருடன் தானே பயணிக்க முடியும்/////

       இந்தியாவை நம்பாதே என்பதன் பொருள் இந்தியா நமக்கு உதவி செய்யும் என்று காத்துக்கொண்டிருந்த புலிகளுக்கும், இன்றும் காத்துக்கொண்டிருக்கிற காசி ஆனந்தன் போன்றவர்களுக்கும் இந்தியா உதவாது அதை நம்பாதே என்று கூறுவதாகும்.புலிகளும் சரி தமிழ்தேசியவாதிகளும் சரி இந்திய உழைக்கும் மக்களை இந்தியா என்று கருதவில்லை மாறாக அதிகார வர்க்கத்தையும் ஓட்டுக்கட்சிகளையும் தான் உண்மையான இந்தியா என்று நம்பினார்கள் அவர்களிடம் தான் கோரிக்கையும் வைத்தார்கள். புலிகள் நம்பிய இந்தியாவை நாங்கள் நம்ப வேண்டாம் என்கிறோம் புலிகள் நம்பிக்கை வைக்காத இந்தியாவின் மீது, இந்திய உழைக்கும் மக்களின் மீது நம்பிக்கை வைக்கச் சொல்கிறோம்.

       எனவே இந்தியாவையோ வேறு எந்த ஒரு நாட்டையுமோ அல்லது ஐ.நா.மன்றத்தையோ அடிபணிய வைப்பது என்பது வேறு புலிகள் எண்ணியது போல, தமிழ்தேசியவாதிகளை எண்ணுவது போல தாஜா செய்து காரியம் சாதித்துக்கொள்ளலாம் என்று கணக்கு போடுவது வேறு. முன்னது தான் ம.க.இ.க வின் கொள்கை.

       நேர்மையாக இருக்க வேண்டும் என்றால் கொள்கைப்படி நடக்க வேண்டும் கொள்கைப்படி நடக்க வேண்டும் என்றால் நீண்டகால போராட்டம் மற்றும் அடிபணிய வைப்பது ஒன்று தான் தீர்வு ஆனால் பல்வேறு குறுக்கு வழிகளை வைத்திருக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு அது வறட்டுத்தனமாக குழப்பமான தீர்வாக இருக்கிறது. எனவே தான் பாசிஸ்டுகளை பாராட்டுவது, இந்திய விரிவாதிக்கவாதிகளை தாஜா செய்வது என்கிற சந்தர்ப்பவாதமே கொள்கையாகிவிட்டது சந்தர்ப்பவாதத்தை எப்படி வேண்டுமானாலும் நடைமுறைப்படுத்தலாமே ? தமிழ்தேசியம் என்கிற என்கிற சந்தர்ப்பவாதம் அப்படித்தான் பயணிக்கிறது.

       • ஜெயலலிதா வை ஆதரிப்பதும் ஜெயலலிதா செய்யும் நல்ல விடயங்களை ஆதரிப்தும் ஒன்றானது அல்ல . மலத்தை கொண்டு போயி அரியணையில் வைத்தால் மலத்தில் அரிசி பொறுக்கும் நிலை வரத்தான் செய்கிறது , ஆப்பிரிக்க ஏழைகள் மலத்தில் உள்ள செரிக்காத உணவையும் உண்பார்களாம் ..

        // பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை பாராட்டுவதற்கும் ஒரு குரூரமான மனம் வேண்டும் //

        கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை , இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் மக்கள் விரோத அரசுகள்தான் இவற்றை தேர்வு செய்யும் மக்கள் குரூர மனம் படைத்தவர்களா என்ன ?

        //எனவே ஜெயலலிதாவுக்கு பல்லக்கு தூக்குகின்ற முழுத் தகுதியும் தமிழ்தேசியவாதிகளுக்குத்தான் உண்டு.//

        ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பது தமிழ்த்தேசியவாதிகள் இல்லை . சமூகத்துடன் இணைந்து பயணிக்க வேண்டியதால் ஜெ செய்யும் நல்ல விடயங்களை ஆதரிப்பதும் கேடு கெட்ட விடயங்களை எதிர்ப்பதும் தமிழ்த்தேசிய கட்சிகளின் கடமையாகிறது .. எல்லாருமே தவறு என கண்ணை மூடிக்கொண்டு சொல்வது ஏற்புடையது அல்ல .

        // வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பிறகு நாற்பது ஆண்டுகள் ஆகப்போகிறது, அதற்குப் பிறகு பல தலைமுறைகள் பிறந்துவிட்டன,//

        தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு வாக்களித்த மக்களும் , அதனை தொடர்ந்து ஆயுத போராட்டம் நடத்திய போராளி குழுக்களும் முன் வைத்த கோரிக்கைதான் தமிழீழம் . நாற்பது ஆண்டுகள் ஆவதால் பூனை புலியாகி விடாது ,கம்யுனிச கொள்கைகள் வருடா வருடம் மாறுகிறதா என்ன ? தமிழீழம் தொடர்பாக எனது கருத்தை சொல்வது எப்படி பெரியண்ணன் மனோபாவம் என புரியவில்லை . தமிழீழம் என்று சொல்வதை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம் , எண்ணற்ற மாவீரர்களின் கனவு தமிழீழம் .

        //நேர்மையாக இருக்க வேண்டும் என்றால் கொள்கைப்படி நடக்க வேண்டும் கொள்கைப்படி நடக்க வேண்டும் என்றால் நீண்டகால போராட்டம் மற்றும் அடிபணிய வைப்பது ஒன்று தான் தீர்வு ஆனால் பல்வேறு குறுக்கு வழிகளை வைத்திருக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு அது வறட்டுத்தனமாக குழப்பமான தீர்வாக இருக்கிறது.//

        அடி பணிய வைப்பதென்றால் எப்படி யாரை ? தண்ணீர் கேட்டு போராடும் மக்களை அடி பணிய வைக்க அரசுக்கு தெரியும் , தங்கள் தாயகத்தை மீட்க போராடிய இனத்தை அடுத்த வேளை உணவுக்காக எதிரியிடம் அடி பணிய வைக்க ஏகாதிபத்தியங்களுக்கு தெரியும் .. ஆனால் உழைக்கும் மக்கள் , நியாயம் கோரி போராடும் மக்கள் , உரிமை கேட்டு போராடும் மக்கள் யாரை அடி பணிய வைக்க முடியுமென எனக்கு தெரியவில்லை . ஜெயலலிதா என்ன சொல்லுவார் , தேசிய கட்சிக்காரன் என்ன சொல்லுவான் தமிழர் போராட்டத்தை அங்கீகரிப்பான மாட்டானா என எதிர்பார்க்க எங்களுக்கு மட்டும் ஆசையா சொல்லுங்க .

        • ///ஜெயலலிதாவை ஆதரிப்பதும் ஜெயலலிதா செய்யும் நல்ல விடயங்களை ஆதரிப்தும் ஒன்றானது அல்ல.///

         பார்ப்பன பாசிஸ்ட் ஜெயலலிதாவிடம் நல்ல விசயங்களை தேடுகிறார்கள் என்றால் தமிழினவாதிகள் எந்தளவுக்கு இழிந்து போயிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பாசிச ஜெயாவுக்கு சற்றும் குறைவில்லாத சு.சாமியிடமும் சோ ராமசாமியிடமும் இதே போல சில நல்ல விசயங்கள் வெளிப்பட்டால் அதையும் ஆதரிப்பீர்களா ?

         பாசிசத்தில் ஜனநாயகத்தை தேடுவதைப் போல மக்கள் விரோதிகளிடம் நல்லதை தேடும் தமிழினவாதிளின் இந்த வாதத்தை மோடி மற்றும் ராஜபக்சேவுக்கும் பொருத்தலாம் அல்லவா, அவர்களிடமும் சில நல்ல விசயங்கள் இருந்தால் அதையும் அங்கீகரிப்பீர்களா ?

         ///கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் எந்த வேறுபாடும் இல்லை, இன்னும் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் மக்கள் விரோத அரசுகள்தான் இவற்றை தேர்வு செய்யும் மக்கள் குரூர மனம் படைத்தவர்களா என்ன ?///

         ஆனால் தமிழினவாதிகள் நடந்துகொள்வதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே, கருணாநிதியை சாத்து சாத்துன்னு சாத்துகிறவர்கள் ஜெயலலிதாவை அந்தளவுக்கு கவனிப்பதில்லையே. ஜெயலலிதா மீது ஒரு பயம் இருப்பதைப் போலத் தெரிகிறதே ?

         தமிழ்தேசியவாதிகள் தம்மை மக்களோடு ஒப்பிட்டுக்கொள்ளலாமா ? மக்கள் அவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்றால் அறியாமையின் காரணமாகத் தான் அப்படி செய்கிறார்கள். தமிழினவாதிகளுக்கோ அறியாமை அல்ல பிரச்சினை கொள்கை தான் பிரச்சினை, நேர்மையான கொள்கை எதுவும் இல்லாததால் சந்தர்ப்பவாதமே தமிழ்தேசியத்தின் கொள்கையாகிவிட்டது.

         ///ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பது தமிழ்த்தேசியவாதிகள் இல்லை . சமூகத்துடன் இணைந்து பயணிக்க வேண்டியதால் ஜெ செய்யும் நல்ல விடயங்களை ஆதரிப்பதும் கேடு கெட்ட விடயங்களை எதிர்ப்பதும் தமிழ்த்தேசிய கட்சிகளின் கடமையாகிறது. எல்லாருமே தவறு என கண்ணை மூடிக்கொண்டு சொல்வது ஏற்புடையது அல்ல.///

         ஜெயலலிதாவை ஆட்சியில் அமர்த்துவதற்காகத்தான் தமிழினிவாதிகள் ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்கள் என்று நீங்கள் புரிந்துகொண்டிருப்பது தவறு, ஜெயலலிதாவை மட்டுமல்ல தமிழ்தேசியவாதிகள் எல்லோரையும் ஆதரிப்பார்கள் ஏனெனில் அது தான் சந்தர்ப்பவாதம்.

         தமிழ்தேசிய சந்தர்ப்பவாதிகள் ஈழப்பிரச்சினையில் யார் யாரையெல்லாம் மேடை ஏற்றியிருக்கிறார்கள் ? இல.கணேசன், இந்து மக்கள் கட்சி போன்ற பார்ப்பன பயங்கரவாத கும்பலை எல்லாம் மேடையில் ஏற்றி ஈழத்திற்காக முழக்கமிட வைத்தனர். இந்துமதவெறி பயங்கரவாதிகளுக்கு ஈழத்தைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது ? பார்ப்பன பா.ஜ.க வை தமிழகத்திலிருந்தே துடைத்தெரியாமல் அவர்களுடன் மேடையை பகிர்ந்துகொள்வது தமிழ்தேசியத்திற்கு கேவலமாக இல்லையா ? தமிழினவாதிகளை விட தி.மு.க காரன் எவ்வளவோ மேல் என்பேன் ஏனென்றால் 2007 ல் ராமர் பாலம் பிரச்சினை வந்த போது பா.ஜ.க வின் கமலாலயத்தை தி.மு.கவினர் சூறையாடினர், பார்ப்பன கும்பல் பீதியாகி வாலை சுருட்டிக்கொண்டு பின்வாங்கியது. எனவே தமிழ்தேசியவாதிகள் ஜெயலலிதாவை மட்டுமல்ல சந்தர்ப்பத்திற்கேற்ப நேர்மையற்ற முறையில் எல்லோரையும் ஆதரிப்பார்கள்.

         ///தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு வாக்களித்த மக்களும், அதனை தொடர்ந்து ஆயுத போராட்டம் நடத்திய போராளி குழுக்களும் முன் வைத்த கோரிக்கைதான் தமிழீழம். நாற்பது ஆண்டுகள் ஆவதால் பூனை புலியாகி விடாது, கம்யுனிச கொள்கைகள் வருடா வருடம் மாறுகிறதா என்ன ?///

         இப்போதும் அதே போல பெரும்பாண்மையான ஈழத்தமிழர்கள் தனித்தமிழீழம் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பதைப் போலச் சொல்கிறீர்களே, அவர்கள் அனைவருக்கும் தனி ஈழம் தான் வேண்டும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் ?

         ஈழத்தமிழர்கள் என்றால் அதில் மலையக மக்கள் இருக்கிறார்களா இல்லையா, தமிழ் முசுலீம்கள் இருக்கிறார்களா இல்லையா அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்களை மட்டும் தான் ஈழத்தமிழர்கள் என்கிறீர்களா, யார் யாரெல்லாம் ஈழத்தமிழர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்.

         ///தமிழீழம் தொடர்பாக எனது கருத்தை சொல்வது எப்படி பெரியண்ணன் மனோபாவம் என புரியவில்லை.///

         உங்கள் கருத்தை நீங்கள் சொல்லலாம் அதற்கு முன்பாக அந்த மக்களின் கருத்து என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறேன். மேலும் நீங்கள் சொல்லும் அதே கருத்தை தான் நானும் சொல்ல வேண்டும் என்றோ, மாற்றுக்கருத்தை சொன்னால் ஈழத்துரோகி என்றோ சொல்லக்க்கூடாது என்கிறேன்.

         ///தமிழீழம் என்று சொல்வதை நீங்கள் விரும்பாமல் இருக்கலாம், எண்ணற்ற மாவீரர்களின் கனவு தமிழீழம்.///

         நாங்கள் விரும்புகிறோமா இல்லை நீங்கள் விரும்புகிறீர்களா என்பதல்ல பிரச்சினை தமிழ்நாட்டிலிருந்துகொண்டு நீங்களும் நானும் விரும்பி ஆகப்போவது என்ன ? எனவே இன்றைய நிலையில் பெரும்பாண்மையான ஈழ மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பது தான் கேள்வி, அதை அறிய வேண்டுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்கிறோம்.

         ///அடி பணிய வைப்பதென்றால் எப்படி யாரை ?///

         தனி ஈழம் அமைப்பது என்றால் எப்படி, யாரால் ?

         • இலங்கையில் தமிழீழம் விரைவில் மலரும் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா நம்பிக்கை தெரிவித்தார்.

          தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய ஒழுங்கு கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் தமிழிசை செüந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, தமிழறிஞர் அவ்வை நடராசன் உள்பட பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

          http://www.vanakkam.com/?p=18622#.UV8dIK3BX4U.facebook

         • // யார் யாரெல்லாம் ஈழத்தமிழர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள்.//

          ஈழத்தில் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள்தான் ஈழத்தமிழர்கள் …

          // இப்போதும் அதே போல பெரும்பாண்மையான ஈழத்தமிழர்கள் தனித்தமிழீழம் தான் வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பதைப் போலச் சொல்கிறீர்களே, அவர்கள் அனைவருக்கும் தனி ஈழம் தான் வேண்டும் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் //

          முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்பு வரை தமிழீழ கோரிக்கையை தனி நாட்டை முன்னிறுத்தி தான் போராட்டமே நடந்தது … ஒரு விடுதலைப் போர் பல ஏகாதிபத்திய வல்லரசுகளால் முடக்க பட்டதென்பத்ற்காக கோரிக்கையை மாற்றிக் கொள்வது எந்த விதத்தில் நியாயம் … பொது வாக்கெடுப்பு நடத்தி ஈழத்தமிழர்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும் , ஆனா எனது கருத்தும் நிலையும் தமிழீழம் மட்டுமே .

          @///அடி பணிய வைப்பதென்றால் எப்படி யாரை ?///

          தனி ஈழம் அமைப்பது என்றால் எப்படி, யாரால் ?//

          யாரையும் அடி பணிய வைக்க முடியாது என்பதே எனது கருத்து ,தமிழக மக்களுக்கு தமிழீழம் ஈழத்தமிழர்களின் தேவையை உணர்த்தி விட்டு பெருந்திரளான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் … துப்பாக்கி முனையில் இருந்துதான் சுதந்திரம் பிறக்கிறது என்ற மாவோ கருத்தை உண்மையாக்குவோம் ..

          தமிழக விடயங்களை பிறகு விவாதிப்போம் தோழர் , திமுக பாஜக உடன் கூட்டணியும் வைக்கும் பாஜக தலைமையகத்தை அடிச்சும் நொறுக்கும் இரண்டிலும் அந்த கட்சி தன்னலம் சார்ந்தே செயல்பட்டது .. தன்னல நோக்கமின்றி சரியான நடவடிக்கைகளை ஆதரிப்பதை தவறென சொல்கிறீர்கள் 🙂

          • ///ஈழத்தில் தமிழை தாய்மொழியாக
           கொண்டவர்கள்தான் ஈழத்தமிழர்கள்…///

           அப்படியானால் தமிழ் மக்கள் அனைவரும் ஈழம் பற்றிய தத்தமது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் அதிலிருந்து முடிவு செய்ய வேண்டும்.

           ///முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு முன்பு வரை
           தமிழீழ கோரிக்கையை தனி நாட்டை முன்னிறுத்தி
           தான் போராட்டமே நடந்தது…///

           நான் முள்ளிவாய்க்காலுக்கு முன்பு உள்ள நிலைமைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவில்லை இப்போது என்ன செய்யப்பட வேண்டும் என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். இன்று தமிழர்களிலேயே கூட பலர் ஈழம் வேண்டாம் என்று சொல்லலாம் அப்படிச்சொன்னால் அவர்களை தமிழர்களே இல்லை என்று ஒதுக்கித்தள்ளிவிடுவீர்களா ? தமிழ் மக்கள் அனைவரின் கருத்தையும் கேட்டறிவது தானே ஜனநாயகம், அப்படியில்லாமல் நாற்பது வருடத்துக்கு முன்னாலேயே எல்லாத்தையும் முடிவு பன்னிட்டோம் என்று இன்றும் சொல்வது சரியா ?

           ///பொது வாக்கெடுப்பு நடத்தி ஈழத்தமிழர்கள் தங்கள்
           எதிர்காலத்தை தீர்மானிக்கட்டும்,ஆனா எனது கருத்தும்
           நிலையும் தமிழீழம் மட்டுமே.///

           உங்கள் கருத்தை நீங்கள் தாராளமாக சொல்லலாம் அதற்கு உங்களுக்கு முழு உரிமையும் உண்டு ஆனால் உங்கள் கருத்தை தான் நானும் பிறரும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் அவ்வாறு சொல்லாமல் பொதுவாக்கெடுப்பு என்று ஜனநாயகப்பூர்வமான ஒரு கருத்தை சொன்னால் அதற்காக தமிழினதுரோகி என்று அவதூறு செய்வதும் ஜனநாயக விரோதமாகும்.

           ///யாரையும் அடி பணிய வைக்க முடியாது
           என்பதே எனது கருத்து,தமிழக மக்களுக்கு
           தமிழீழம் ஈழத்தமிழர்களின் தேவையை உணர்த்தி
           விட்டு பெருந்திரளான மக்கள் போராட்டத்தை
           முன்னெடுக்க வேண்டும்… துப்பாக்கி முனையில்
           இருந்துதான் சுதந்திரம் பிறக்கிறது என்ற மாவோ
           கருத்தை உண்மையாக்குவோம்///

           ஆளும் வர்க்கத்தை அடிபணிய வைக்காமல் எப்படி மாவோவின் கருத்தை உண்மையாக்க முடியும் ? புரட்சி என்பது பிற்போக்கு ஆளும் கும்பலை அடிபணிய வைத்து மண்டிபோட வைப்பதேயன்றி வேறென்ன ?

           ///தன்னல நோக்கமின்றி சரியான நடவடிக்கைகளை
           ஆதரிப்பதை தவறென சொல்கிறீர்கள்///

           ஆர்.எஸ்.எஸ் காரன் கூடத்தான் தன்னலமின்றி இருக்கிறான் அப்படியானால் அதை சரி என்று சொல்கிறீர்களா ?

       • //சரி பல்லக்கு வேண்டாம் ஜால்ராக்கள் என்பது பொருத்தமாக இருக்கும் என்றால் அப்படியே கூட வைத்துக்கொள்ளலாம்.//

        நண்பர் அம்பேத் சித்தார்த்,

        ஜால்ராக்கள் என்றால் எவர் எது சொன்னாலும் செய்தாலும் அவர்களுக்கு ஆமா சாமி போடுறதுதானே… அப்படிஎன்றால் நிச்சயமாக தமிழ்தேசியவாதிகள் ஜெயாவின் ஜால்ராக்கள் அல்லர்.

        • எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டாத்தான் ஜால்ராவா லெனின் அவர்களே தமிழினவாதிகளைப் போல சந்தர்ப்பத்திற்கேற்ப கைதட்டி குதூகலிப்பது ஜால்ரா வகையைச் சேராதா ?

         தினமணி வைத்தியநாதன் கூடத்தான் ஜெயலலிதாவின் எல்லா செயல்களுக்கும் ஜால்ரா போடுவதில்லை அதனாலேயே வைத்தி மாமா ஜெயா மாமியின் ஜால்ரா இல்லை என்றாகிவிடுமா ?

         உங்களிடமிருந்து மற்ற கேள்விகளுக்கும் பதிலை எதிர்பார்க்கிறேன்.

         • நண்பர் அம்பேத் சித்தார்த்,

          //எல்லாத்துக்கும் ஆமாம் சாமி போட்டாத்தான் ஜால்ராவா லெனின் அவர்களே தமிழினவாதிகளைப் போல சந்தர்ப்பத்திற்கேற்ப கைதட்டி குதூகலிப்பது ஜால்ரா வகையைச் சேராதா?//

          நீங்கள் சொல்வது போல் யாரும் கை தட்டி குதூகளிக்கவில்லை. ஒரு தீர்மானத்தை வரவேற்பதற்கும் கை தட்டி குதூகளித்து தீர்மானம் போட்டவரை பாராட்டுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. இந்த சட்டமன்ற தீர்மானத்தை வரவேற்பதால் உடனே ஜெயாவுக்கு ஈழத்தின் மீது அக்கறை வந்துவிட்டதாக நெடுமாறன், சீமான் போன்றோர்கள் நிச்சயமாக நினைக்கவில்லை. மேலும் ஈழத்திற்கு எதிராக ஜெயாவின் நடவடிக்கைகளையும் இந்த தமிழனவாதிகள் கண்டித்தவர்கள் தான். அப்படியிருக்கும் போது எப்படி ஜால்ரா என்று எண்ண முடியும்.

          அதுமட்டுமின்றி ஜெயா நிச்சயம் தமிழீழத்திற்கு எதிரானவர் என்பது தமிழினவாதிகளுக்கும் தெரிந்தது தான். அதையும் மீறி ஜெயாவை பாராட்டுபவர்களுக்கு நிச்சயம் ஒரு உள்நோக்கம் இருக்கும். மேலும் இத்தீர்மானம் ஒரு நிர்பந்தத்தினாலும் (மாணவர் மற்றும் மக்கள் போராட்டம், கருணாநிதி நடத்தும் TESO நாடகம்) அரசியல் அதாயத்திர்க்காகவும் மட்டுமே கொண்டு வரப்பட்ட தீர்மானமாகத்தான் பார்க்க முடிகிறது.

          //வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு பிறகு நாற்பது ஆண்டுகள் ஆகப்போகிறது, அதற்குப் பிறகு பல தலைமுறைகள் பிறந்துவிட்டன, இப்போது பெரும்பான்மையாக உள்ள அவர்கள் தான் அதைப்பற்றிப் பேச வேண்டும். ஈழம் வேண்டும் என்பதை அந்த மண்ணின் மக்கள் பேசட்டும், போராளி இயக்கங்கள் பேசட்டும் அதை நாம் கேட்கிறோம் ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு எந்த வேலை வெட்டியும் இல்லாமல் ஈழம் ஈழம்னு பேசுற இவனுங்க யாருன்னு கேட்கிறேன்.//

          நிச்சயமாக ஈழத்தில் உள்ள மக்களும் அங்கிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் தான் தனி ஈழம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் போராட வேண்டும். அது அவர்களின் கடமை, உரிமை மற்றும் இன்றைய தேவையும் கூட. அதற்காக தனி ஈழம் குறித்து மற்றவர்கள் யாரும் ஆலோசனைகள் சொல்ல கூடாது என்று சொல்வது சரிதானா நண்பரே? அப்படி நீங்கள் சொல்வது அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.

          //எனவே இந்தியாவையோ வேறு எந்த ஒரு நாட்டையுமோ அல்லது ஐ.நா.மன்றத்தையோ அடிபணிய வைப்பது என்பது வேறு புலிகள் எண்ணியது போல, தமிழ்தேசியவாதிகளை எண்ணுவது போல தாஜா செய்து காரியம் சாதித்துக்கொள்ளலாம் என்று கணக்கு போடுவது வேறு. முன்னது தான் ம.க.இ.க வின் கொள்கை.//

          தமிழீழத்திற்கு கேடு கேட்ட இந்த இந்திய (கொலைகார) அரசு எதிரி என்பது தமிழனவாதிகளுக்கும் தெரியும், ம.க.இ.க வுக்கும் தெரியும், மாணவர்களுக்கும் தெரியும். அப்படியிருக்கும் போது ‘அமைதி வழியில்’ நிச்சயம் இந்த கொலைகார அரசை அடிபணிய வைக்க முடியாது. அதுவும் உழைக்கும் மக்களுக்கு அது மிக மிக பெரிய சவாலாகும். ம.க.இ.க மக்கள் எல்லா இடங்களிலும் போராட்டம் நடத்தி இந்திய அரசின் முகத்திரையை கிழித்துக் கொண்டு தான் வருகிறார்கள். ஆனால் இந்த தமிழனவாதிகள் இன அழிப்பு நடக்கும் போதே இந்திய அரசின் உதவிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள் தான். மேலும் அவர்கள் இந்திய அரசை நம்பவில்லை. மாறாக அதே (கொலை) அரசிடம் கோரிக்கை வைக்கிறார்கள். ஏன் அதை கோரிக்கையாக இல்லாமல் ஒரு கட்டளையாக பார்க்கலாமா? கோரிக்கையும் வச்சாச்சு, போராட்டமும் நடத்தியாச்சி (தமிழகத்திலும் சரி உலக அளவிலும் சரி). பிறகு எப்படி அடி பணிய வைப்பது. யாரிடம் பொது வாக்கெடுப்பு பற்றி கோரிக்கை வைப்பது? நீங்கள் சொல்வது போல் உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து, அவர்களும் யாரிடம் கோரிக்கை வைப்பார்கள்? இருக்கும் உலகத்திடமா அல்லது இல்லாத கடவுளிடமா?

          • ///நீங்கள் சொல்வது போல் யாரும் கை தட்டி குதூகளிக்கவில்லை. ஒரு தீர்மானத்தை வரவேற்பதற்கும் கை தட்டி குதூகளித்து தீர்மானம் போட்டவரை பாராட்டுவதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.///

           ஒரு பார்ப்பன பாசிஸ்டின் ‘நல்ல’ நடவடிக்கைகளை முற்போக்காளன் என்று சொல்லிக்கொள்கிற ஒருவன் எப்படி வரவேற்க முடியும் ? இரண்டாவதாக கருணாநிதியை காறித்துப்புகிற அளவுக்கு ஜெயலலிதாவையும் காறித்துப்பி தொடப்பக்கட்டையால் அடிப்பதில்லையே ஏன் ?

           ///அதுமட்டுமின்றி ஜெயா நிச்சயம் தமிழீழத்திற்கு எதிரானவர் என்பது தமிழினவாதிகளுக்கும் தெரிந்தது தான்.///

           அப்படியானால் பினாயில் என்று தெரிந்து தான் குடிக்கிறார்களா ? தெரியாமல் செய்வதைக் கூட முட்டாள்த்தனம்னு சொல்லலாம் தெரிந்தே செய்வதை என்னவென்று சொல்வது லெனின் ?

           ///அதையும் மீறி ஜெயாவை பாராட்டுபவர்களுக்கு நிச்சயம் ஒரு உள்நோக்கம் இருக்கும்.ஒரு பாசிஸ்ட்டை ஆதரிப்பதற்கு என்ன உள்நோக்கம் இருக்க முடியும் ?///

           ///நிச்சயமாக ஈழத்தில் உள்ள மக்களும் அங்கிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களும் தான் தனி ஈழம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் போராட வேண்டும். அது அவர்களின் கடமை, உரிமை மற்றும் இன்றைய தேவையும் கூட.///

           ஈழத்தமிழர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை உண்டு. உங்களுக்கும் எனக்கும் என்னவோ அதே தான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும்.

           ///அதற்காக தனி ஈழம் குறித்து மற்றவர்கள் யாரும் ஆலோசனைகள் சொல்ல கூடாது என்று சொல்வது சரிதானா நண்பரே ?///

           உங்களுடைய ஆலோசனைகளை தாராளமாகச் சொல்லுங்கள். அதை யாரும் வேண்டாம் என்று சொல்லவில்லையே. ஆனால் அந்த ஆலோசனைகள் எந்த அடிப்படையில் அமைய வேண்டும் ? அவை உங்களுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது இங்குள்ள தமிழ்தேசியவாதிகளான சீமான், மணியரசனுடைய விருப்பத்தின் அடிப்படையிலான ஆலோசனைகளாகவோ இருக்க முடியாது, இருக்கக்கூடாது. நீங்கள் விருப்பப்படுவது நல்லதாக இருக்கலாம் கெட்டதாக இருக்கலாம் அவையெல்லாம் இரண்டாம்பட்சமானது, முதன்மையானது என்னவென்றால் நீங்கள் விரும்புவதைப் போல் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு அவ்வாறு செய்ய முடியாது.

           உங்களுக்கென்று தனித்தமிழீழம் ஒன்றை அமைத்துக்கொண்டால் அது உங்களுக்கு நல்லதாக அமையும் என்று நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆலோசனை கூறலாம் ஆனால் அது தான் ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் விருப்பம் என்று நீங்கள் எப்படி கூற முடியும் ? அப்படி கூற முடியாது பெரும்பாண்மை ஈழத்தமிழர்களின் விருப்பத்தை அறிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு பொதுவாக்கெடுப்பு தான் நடத்தப்பட வேண்டும். மேலும் தனி ஈழம் என்கிற கோரிக்கைக்கு மாற்றுக்கருத்தை முன்வைப்பவர்களை எல்லாம் ஈழத்துரோகிகள் என்றும், தமிழினவிரோதிகள் என்றும் அவதூறு செய்வது என்பது தன் கருத்தை தான் அனைவரும் கூற வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஜனநாயக விரோத அணுகுமுறையாகும். எனவே நீங்கள் ஆலோசனை சொல்லக்கூடாது என்று நான் சொல்லவில்லை முடிவு எடுக்காதீர்கள் என்று தான் சொல்கிறேன் ஏனெனில் அது அவர்களுடைய வேலை.

           ///இந்த தமிழனவாதிகள் இன அழிப்பு நடக்கும் போதே இந்திய அரசின் உதவிகளை எதிர்த்து பிரச்சாரம் செய்தவர்கள் தான். மேலும் அவர்கள் இந்திய அரசை நம்பவில்லை. ///

           இல்லை, தமிழினவாதிகள் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில் இந்திய அரசின் பங்கையெல்லாம் அம்பலப்படுத்தவில்லை, மாறாக காங்கிரசுக்கு எதிராகத்தான் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். மத்தியில் காங்கிரசுக்கு பதிலாக பா.ஜ.க வும் தமிழகத்தில் தி.மு.க வுக்கு பதிலாக அ.தி.மு.க வும் ஆட்சிக்கு வந்தால் போர் நிறுத்தப்படும், ஈழத்தமிழர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று போரின் இறுதி நாட்கள் வரை இந்திய அரசின் மீதும், இந்திய ஓட்டுக்கட்சிகளின் மீதும் புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டிருந்தனர். எனவே ஈழத்தமிழர்களின், புலிகளின் அழிவில் தமிழ்நாட்டு தமிழ்தேசியவாதிகளுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது, புலி புலி என்று பேசிக்கொண்டிருந்த இவர்கள் தான் புலிகளின் அழிவுக்கு காரணமாக இருந்தார்கள். முள்ளிவாய்க்கால் போரில் இவர்கள் அனைவரும் துரோகிகள்.

           துரோகிகளின் மவுனத்தில் துடிக்கும் முள்ளிவாய்க்கால் – https://www.vinavu.com/2010/01/07/mulli-vaikal/
           http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6691:2010-01-21-21-59-08&catid=325:2010

           ///எப்படி அடி பணிய வைப்பது. யாரிடம் பொது வாக்கெடுப்பு பற்றி கோரிக்கை வைப்பது? நீங்கள் சொல்வது போல் உழைக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து, அவர்களும் யாரிடம் கோரிக்கை வைப்பார்கள்? இருக்கும் உலகத்திடமா அல்லது இல்லாத கடவுளிடமா?///

           ஈழம் வேண்டும் என்று சொல்பவர்கள் எல்லாம் அதை எப்படி, எந்த வழியில் பெற வேண்டும் என்கிறார்கள் ?

         • நண்பர் அம்பேத் சித்தார்த்,

          //ஒரு பார்ப்பன பாசிஸ்டின் ‘நல்ல’ நடவடிக்கைகளை முற்போக்காளன் என்று சொல்லிக்கொள்கிற ஒருவன் எப்படி வரவேற்க முடியும் ? இரண்டாவதாக கருணாநிதியை காறித்துப்புகிற அளவுக்கு ஜெயலலிதாவையும் காறித்துப்பி தொடப்பக்கட்டையால் அடிப்பதில்லையே ஏன்?//

          ஒருவேளை ஜெயா முதல் அமைச்சராக இல்லாமலிருந்தால் தனி ஈழம் குறித்த பொது வாக்கெடுப்பு என்ற வார்த்தைகளை நிச்சயமாக சொல்லியிருக்கமாட்டார். அப்படிப்பட்ட ஒரு ‘பாசிஸ்ட்’ அதையே ஒரு தீர்மானமாக இப்போது கொண்டு வருவதற்கு என்ன நிர்பந்தம்? அந்த நிர்பந்தத்திற்கு மிகப்பெரிய காரணியாக தமிழக மாணவர்களின் போராட்டத்தை கூறலாமா? ஏன் கல்லூரி மற்றும் புரட்சிகர இயக்கங்களை சேர்ந்த மாணவர்களின் போராட்டத்தில் அதுவும் ஒரு கோரிக்கைதானே. இந்த தருணத்தில் எந்த ஒரு பாசிஸ்ட் முதல் அமைச்சராக இருந்தாலும் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தித்தான் ஆக வேண்டும். தற்போது ஜெயா மனப்பூர்வமாக இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார் என்று யாரும் சொல்லவில்லை. அவர் நிர்பந்தப்பட்டிருக்கிறார். அந்த வகையில் நிர்பந்திக்கப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை ‘மட்டும்’ தான் தமிழினவாதிகள் வரவேற்கிறார்களே தவிர அதற்காக யாரும் பாசிஸ்ட் ஜெயா வை பாராட்டவில்லை. ஏன் நாளைக்கே உலக பாசிஸ்டான அமெரிக்கா ஒரு நிர்பந்தத்தினால் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா வில் தீர்மானம் கொண்டு வந்தால் அதை நீங்கள் வரவேற்பீர்களா இல்லை அமெரிக்கா ஒரு பாசிஸ்ட் என்பதற்காக அதை எதிர்ப்பீர்களா?

          இரண்டாவதாக, உச்சகட்ட இன அழிப்பு நடந்த சமயத்தில் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பில் இருந்து அவரும் கருணாநிதி போல் நடந்திருந்தால் அவரும் இன்று அதிகம் பேரால் விமர்சிக்கப்பட்டுருப்பார் என்பது எனது கருத்து.

          //ஈழத்தமிழர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை உண்டு. உங்களுக்கும் எனக்கும் என்னவோ அதே தான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும்.//

          இதை ஏற்றுக்கொள்கிறேன். பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களின் விருப்பத்தை தெரிந்துகொள்ளத்தான் வேண்டும். ஆனால் உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு அந்த அரசிடமிருந்து விடுதலை வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு தனி நாடு என்பது தான் ஒரே தீர்வு என்பது எனது கருத்து.

          மேலும் புலிகளை தவறாக வழி நடத்தியதில் தமிழினவாதிகளுக்கும் பங்கு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனென்றால் தமிழினவாதிகள் கொலைகார காங்கிரஸ் அரசை விமர்சித்தார்களே தவிர அந்த இன அழிப்பையே அவர்களும் சேர்ந்து தான் செய்கிறார்கள் என தெரிந்தும் காங்கிரஸ் அரசை போர் நிறுத்தத்திற்காக நம்பியது மிகப்பெரிய தவறு.

          லெனின்.

          • எதெல்லாம் நடக்காதோ அதையெல்லாம் பாசிச ஜெயா துணிவோடு செய்வார், அதை தமிழினவாதிகளும் நிர்பந்தம் காரணமாக தான் அவர் இவ்வாறு செய்கிறார் என்று நம்புவார்கள், இதற்காக தமிழினவாதிகளிடம் ஜெயலலிதா நல்ல பேரும் வாங்கிக்கொள்வார்.இந்த தீர்மானங்களால் தன்னைத்தவிர வேறு யாருக்கும் ஒரு நயா பைசா கூட பிரயோஜனமில்லை என்பதை நன்கு அறிந்து தான் ஜெயலலிதா இந்த தீர்மானங்களை எல்லாம் கொண்டு வருகிறார். எனவே நீங்கள் கூறுவதைப் போல தமிழக அரசை அடிபணியவைக்கும் போராட்டங்கள் மூலம் இந்த தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.

           ///உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு அந்த அரசிடமிருந்து விடுதலை வேண்டுமானால் அவர்களுக்கென்று ஒரு தனி நாடு என்பது தான் ஒரே தீர்வு என்பது எனது கருத்து.///

           அது அந்த மக்களின் கருத்தாகவும் இருக்க வேண்டும்.

         • //உங்களுக்கென்று தனித்தமிழீழம் ஒன்றை அமைத்துக்கொண்டால் அது உங்களுக்கு நல்லதாக அமையும் என்று நீங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆலோசனை கூறலாம்//

          நீங்களும் காங்கிரஸ்காரங்க மாறியே பேசுறிங்களே. இங்குள்ளவர்கள் யாரும் தமிழக மக்களுக்காக தனித்தமிழீழம் என்ற ஆலோசனையை சொல்லவில்லை. அது சிங்கள இனவெறி அரசின் கீழ் இருக்கும் மக்களுக்கான தேவை. அது ஏற்கனவே ஈழத்தமிழர்களால் முன்மொழியப்பட்ட கோரிக்கை. நீங்கள் சொல்வது போல் நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டதால் அந்த கோரிக்கை கைவிடப்பட்டுவிடுமா என்ன. தமிழீழக்கொள்கை என்பது பொருளாதார வளர்சிக்கேற்பவோ அல்லது தொழிற்நுட்ப வளர்சிக்கேற்பவோ மாற்றிக்கொள்ள வேண்டிய காரியமல்ல. சுதந்திர இந்தியா என்ற கோரிக்கை ஆரம்பித்து நாற்பது ஐம்பது ஆண்டுகள் கழித்து மாறியதா என்ன. 90 ஆண்டு காலம் தொடர்ந்து அதற்கான போராட்டங்கள் நடைபெற்றது தானே.

          //ஈழத்தமிழர்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை உண்டு. உங்களுக்கும் எனக்கும் என்னவோ அதே தான் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும்.//
          உங்களுக்கும் எனக்கும் தனி தமிழீழம் குறித்து முடிவெடுக்கும் உரிமை இல்லை. ஆனால் சிங்கள இனவெறி காரணமாக வெளியேறி வெவ்வேறு நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள் சிங்கள இனவெறி அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு தனி தமிழீழம் குறித்து முடிவெடுக்கும் உரிமை நிச்சயம் உண்டு.

          • ///நீங்களும் காங்கிரஸ்காரங்க
           மாறியே பேசுறிங்களே.///

           இது தான் ஜனநாயக விரோதம் என்பது. ஈழம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் துரோகிகள், எதிரிகள், காங்கிரஸ்காரர்கள் என்பது என்ன வகையான அணுகுமுறை லெனின் ? தனிஈழம் தான் வேண்டும் என்பதை நான் என் வாயால் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம் அதற்காக என்னை எப்படி கட்டாயப்படுத்தலாம் ?

           இந்த ஜனநாயக மறுப்பு எப்படி செயல்படுகிறது என்றால் அதன் ஒரு பக்கம் தமிழகத்தில் பிறரை இவ்வாறு மாற்றுக்கருத்தை கூறவிடாமல் தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று கூறக்கட்டாயப்படுத்துவதும், மற்றொருபுறம் உண்மையிலேயே ஈழத்தில் வாழப்போகிற மக்களிடம் எந்தக்கருத்தையும் கேட்காமல் எல்லாத்தையும் நாற்பதாண்டுகளுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம் என்று அவர்களுடைய கருத்தை கூறும் ஜனநாயக உரிமையை மறுப்பதும் என்று இந்த அணுகுமுறை தனது ஜனநாயகமின்மையின் இரு வெவ்வேறு பக்கங்களை வெளிப்படுத்துகிறது. இறுதியில் எந்த மாற்றுக்கருத்தையும் கூறாமல் இந்த தமிழ்தேசியக் கோமாளிகளின் கருத்தை மட்டும் ஏற்று அமுல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு என்ன பெயர் ? இதற்கு ஜெயலலிதாவே பரவாயில்லை போலிருக்கிறதே.

           ///உங்களுக்கும் எனக்கும் தனி தமிழீழம்
           குறித்து முடிவெடுக்கும் உரிமை இல்லை.
           ஆனால் சிங்கள இனவெறி காரணமாக
           வெளியேறி வெவ்வேறு நாடுகளில் வாழும்
           புலம் பெயர்ந்த தமிழர்கள் சிங்கள இனவெறி
           அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.
           அவர்களுக்கு தனி தமிழீழம் குறித்து முடிவெடுக்கும்
           உரிமை நிச்சயம் உண்டு.///

           போரினால் அவர்கள் எல்லாம் வெளியேறிவிட்டார்கள், சரி வெளியேறாமல் இருப்பவர்கள் எல்லாம் எதற்காக இருக்கிறார்கள் ? சொந்த மண்ணைவிட்டு ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவிற்கும் புலம்பெயர்ந்த இந்த தமிழர்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களுக்கு எது வேண்டும் வேண்டாம் என்பதை முடிவெடுப்பார்களாம் அதை இனவெறி பாசிசத்தின் கீழ் வாழும் தமிழர்கள் நிறைவேற்றுவார்களாம், அதன்பிறகு அதுவரை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இருந்தவர்கள் எல்லாம் உடனடியாக ஈழத்திற்கு குடிபெயர்வார்கள் (அப்படி ஈழம் அமைந்தாலும் புலம்பெயர்ந்துள்ளவர்களில் 90% பேர் வரமாட்டார்கள்) என்றால் அங்கு என்ன கட்டிடம் கட்டும் வேலையாக நடந்துகொண்டிருக்கிறது எல்லாத்தையும் கட்டிமுடித்த பிறகு போய் ஜாலியாக குடியேறுவதற்கு ?

           ஈழத்தமிழர்களுக்கு அருகிலேயே வாழும் சாதாரண சிங்களனுக்குக் கூட தனிதமிழீழம் தான் தீர்வு என்று கூற முழு உரிமை உண்டு ஆனால் தமிழனே ஆயினும் ஈழத்தில் ஒடுக்குமுறையின் கீழ் வாழாதவனுக்கு அங்கு வாழ்பவர்களை பார்த்து அப்படி செய் இப்படி செய் என்று ஐடியா சொல்லவோ, அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்யவோ எந்த உரிமையும் இல்லை.

          • ///நீங்களும் காங்கிரஸ்காரங்க மாறியே பேசுறிங்களே.///

           இது தான் இதுவே தான் புலிகளின் அணுகுமுறை மற்றவரின் ஜனநாயகத்தை மறுக்கும் பாசிச அணுகுமுறை.

         • நண்பர் அம்பேத் சித்தார்த்,

          //எதெல்லாம் நடக்காதோ அதையெல்லாம் பாசிச ஜெயா துணிவோடு செய்வார், அதை தமிழினவாதிகளும் நிர்பந்தம் காரணமாக தான் அவர் இவ்வாறு செய்கிறார் என்று நம்புவார்கள்//

          அப்படியென்றால் பொது வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்கிறீர்களா?

          //இதற்காக தமிழினவாதிகளிடம் ஜெயலலிதா நல்ல பேரும் வாங்கிக்கொள்வார்.//

          தமிழனவாதிகள் என்னவோ ஜெயாவை பாராட்ட தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை போல் சொல்கிறீர்கள்.

          //இந்த தீர்மானங்களால் தன்னைத்தவிர வேறு யாருக்கும் ஒரு நயா பைசா கூட பிரயோஜனமில்லை என்பதை நன்கு அறிந்து தான் ஜெயலலிதா இந்த தீர்மானங்களை எல்லாம் கொண்டு வருகிறார்.//

          ஜெயா போட்ட சட்டமன்ற தீர்மானத்தால் பிரயோஜனம் என்று நெடுமாறன், சீமான் போன்றவர்கள் ஏதும் அறிக்கை விட்டிருக்கிறார்களா என்ன.

          //எனவே நீங்கள் கூறுவதைப் போல தமிழக அரசை அடிபணியவைக்கும் போராட்டங்கள் மூலம் இந்த தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.//

          தற்போது நடைபெறும் போராட்டங்கள் யாவும் அறவழிப் போராட்டங்கள் (அன்னா ஹசாரே அறவழிப் போராட்டமல்ல), ஆனால் வீரியமிக்கவை . இதற்கு நிச்சயம் தமிழக அரசோ இந்திய அரசோ நிச்சயம் அடிபணியாது (அடிபணியாமல் இருப்பதற்கான உத்திகளை எல்லா அரசுகளுமே தெரிந்து வைத்திருப்பார்கள்). ஆனால் ஜெயாவின் தற்போதைய தீர்மானத்தை ஒரு நிர்பந்தமாகத்தான் தமிழினவாதிகள் பார்க்கிறார்கள்.

          //அது அந்த மக்களின் கருத்தாகவும் இருக்க வேண்டும்.//

          அது என் கருத்து என்று மட்டும் தான் சொன்னேன். ஆனால் விருப்பமா இல்லையா என்பதை அந்த மக்கள் தான் தீர்மானிக்க முடியும். இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.

          //இது தான் ஜனநாயக விரோதம் என்பது. ஈழம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் துரோகிகள், எதிரிகள், காங்கிரஸ்காரர்கள் என்பது என்ன வகையான அணுகுமுறை லெனின்?//

          ஈழம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லவில்லை. அது பெரும்பான்மை காங்கிரஸாரின் பிரதிபலிப்பு.

          //தனிஈழம் தான் வேண்டும் என்பதை நான் என் வாயால் சொல்ல வேண்டும் என்று நீங்கள் எப்படி எதிர்பார்க்கலாம் அதற்காக என்னை எப்படி கட்டாயப்படுத்தலாம்?//

          நான் உங்களிடம் எதிர்பார்க்கவும் இல்லை கட்டாயப்படுத்தவுமில்லை. தமிழினவாதிகள் தமிழகத்தில் யாரையும் கட்டாயப்படுத்துகிறார்களா? இங்கிருப்பவர்களுக்கு தனித்தமிழீழம் என்பது அவரவரது கருத்து. தனி ஈழம் குறித்து இப்போது விவாதிப்பதை விட ஈழத்தில் இருக்கும் மக்களின் எண்ணத்தை அறிந்த பிறகு விவாதித்தால் சரியாக இருக்கும்.

          • ///அப்படியென்றால் பொது வாக்கெடுப்பு சாத்தியமில்லை என்கிறீர்களா?///

           பொதுவாக்கெடுப்பு சாத்தியம் இல்லை என்று சொல்லவில்லை அதற்காக ஜெயலலிதாவை நம்புவது முட்டாள்தனம் என்கிறேன்.

           ///தமிழினவாதிகள் என்னவோ ஜெயாவை பாராட்ட தருணம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை போல் சொல்கிறீர்கள்.///

           அப்படி சொல்லவில்லை தமிழினவாதிகள் சந்தர்ப்பவாதிகள் என்கிறேன் நாளையே கருணாநிதியையும் கூட பாராட்டுவார்கள்.

           ///ஜெயா போட்ட சட்டமன்ற தீர்மானத்தால் பிரயோஜனம் என்று நெடுமாறன், சீமான் போன்றவர்கள் ஏதும் அறிக்கை விட்டிருக்கிறார்களா என்ன.////

           பிரயோசனம் இல்லை என்று ஏதும் அறிக்கைவிட்டிருக்கிறார்களா ?

           ///தற்போது நடைபெறும் போராட்டங்கள்
           யாவும் அறவழிப் போராட்டங்கள் (அன்னா ஹசாரே அறவழிப் போராட்டமல்ல), ஆனால் வீரியமிக்கவை . இதற்கு நிச்சயம் தமிழக அரசோ இந்திய அரசோ நிச்சயம் அடிபணியாது (அடிபணியாமல் இருப்பதற்கான உத்திகளை எல்லா அரசுகளுமே தெரிந்து வைத்திருப்பார்கள்). ஆனால் ஜெயாவின் தற்போதைய தீர்மானத்தை ஒரு நிர்பந்தமாகத்தான் தமிழினவாதிகள் பார்க்கிறார்கள்.///

           எப்படி நிர்பந்தம் என்கிறீர்கள் ? ஆளும் வர்க்கத்தை அடிபணியவைக்கும் போராட்டங்கள் இன்றி எப்படி நிர்பந்தம் ஏற்படும் ?

           ///அது என் கருத்து என்று மட்டும் தான் சொன்னேன். ஆனால் விருப்பமா இல்லையா என்பதை அந்த மக்கள் தான் தீர்மானிக்க முடியும். இதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை.///

           அதைத்தான் நானும் சொல்கிறேன். அதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சீமான் மணியரசன் போன்ற தமிழ்தேசிய கைப்புள்ளைகள் தீர்மானிக்கக்கூடாது.

           ///ஈழம் வேண்டாம் என்பவர்கள் எல்லாம் காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லவில்லை. அது பெரும்பான்மை காங்கிரஸாரின் பிரதிபலிப்பு.///

           இப்போது காங்கிரசுக்காரனுக்கு எதிராக சவுண்டுவிடும் ஈழ ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொள்கிற ஈழம் வேண்டும் என்பவர்கள் எல்லாம் அந்த ஈழம் காங்கிரஸ்காரன் கையால் கிடைக்கும் என்றால் ஏற்றுக் கொள்ளத் தயங்கமாட்டார்கள். இத்தகைய தமிழ்தேசிய கும்பல் ம.க.இ.க வைப் பார்த்து காங்கிரசு மாதிரி பேசுறீங்க என்று கூறுவது தான் சகிக்கவில்லை.

           ///நான் உங்களிடம் எதிர்பார்க்கவும் இல்லை கட்டாயப்படுத்தவுமில்லை. தமிழினவாதிகள் தமிழகத்தில் யாரையும் கட்டாயப்படுத்துகிறார்களா? இங்கிருப்பவர்களுக்கு தனித்தமிழீழம் என்பது அவரவரது கருத்து. தனி ஈழம் குறித்து இப்போது விவாதிப்பதை விட ஈழத்தில் இருக்கும் மக்களின் எண்ணத்தை அறிந்த பிறகு விவாதித்தால் சரியாக இருக்கும்.///

           பிறகு ஏன் ம.க.இ.க வை தமிழினவாத கும்பல் அவதூறு செய்கிறது.

         • //இது தான் இதுவே தான் புலிகளின் அணுகுமுறை மற்றவரின் ஜனநாயகத்தை மறுக்கும் பாசிச அணுகுமுறை.//

          தனித்தமிழீழம் தான் தீர்வு என்று சொல்பவர்களையெல்லாம் புலிகள் என்றும் புலி ஆதரவாளார்கள் என்றும் சொல்வது தவறு.

          • சரி தனித்தமிழீழம் தான் தீர்வு என்று கூறுபவர்கள் புலிப்பாசிசத்தை விமர்சித்திருக்கிறார்களா ?

 14. தமிழன் இனி தமிழனாக வாழவேண்டும் என்றால் தமிழயும் தமிழனையும் ஏமாற்றி துரோகம் செய்து தனக்கு மானம் இல்லை என்றாலும் தமிழன் மானத்தை அடகு வைக்கும் தமிழின துரோகியான தா.பா,வை.கோ,சீமன்,`போன்ற ஜெ வின் கால் மிதியை பொல் தெய்ந்து தமிழை காக்கும் இவர்கலை நாட்டை விட்டு ஒதிக்கி வைப்போம்.தமிழ் பேசும் மனிதனாக வழுவோம்.

 15. சசிகலா சொல்கிறார்……

  காம்ரேட் பாண்டி
  உடன் பிறவாவின் கடைக்கண் வேண்டி
  காவடி எடுத்தாய் ஓ.ப-வையும் தாண்டி

  நட்டு ராஜன் சொல்கிறார்…(அதானுங்கோ உடன் இருந்தவரை அடகு வைத்தவர்)

  உலகத் தமிழர் தலைவர் நெடுமாறன்
  மெழுகு பிடிக்கும் மெய்யாளன்
  புலம் பெயர் தமிழரின் புல்லாளன்
  அம்மா படைக்கு வில்லாளன்

  நாஞ்சில் சொல்கிறார்….

  பொ.டா வைகோ
  போயிட்டு போறார் போங்கோ
  விடியலின் விடிவெள்ளி கூப்பிடுறாங்கோ
  ஈழம் சீக்கிரமே கிடைச்சிருங்கோ
  கொஞ்ச சீட்டு தான் இருக்கு சீக்கிரம் வாங்கோ

  தைலை தாசன்(ராம தாஸ்) சொல்கிறார்…

  டாய் வேலு…
  நீ ரொம்ப வாலு
  அம்மா ஊத்துறாரு கூழு
  திராவிடம் ஒரு தேளு
  ஆனா நானும் விடுவேன் நூலு

  டைரக்டர் சீமான் டு செந்தமிழன் சீமான் சொல்கிறார்…

  செந்தமிழன் சீமான்டா
  கோமாளி உலகின் கோமான்டா
  இலையிடம் விலை போனேன்டா
  புலிக் கொடிய புடிச்சேன்டா
  போங்கி எழுவான் நாம் தமிழன்டா
  போயஸ்ல தான் இருக்கு தமிழ் ஈழம்டா

  போலி கம்யூனிஸ்டுகள் டு காவி கம்யூனிஸ்டுகள் சொல்கிறார்கள்…

  ரெளடி ராஜபக்சே ஒரு காலி
  ஐநா போடனும் அவனுக்கு ஒரு வேலி
  இடமென்ன வலமென்ன எல்லாமே போலி
  பாத்து போடுங்கம்மா கூலி

 16. மாணவர் போரட்டம் இப்போதே வெற்றிதான்! கோட்டையே கொந்தளிக்குதே! அம்மாவின் ஜால்ராக்களையும், பிரபாகரனை தவறாக வழினடத்திய, சஙகர மட அடிமைகளையும் மாணவர்கள் புரிந்து கொண்டு, மந்தைக்குள்நுழைய வரும் ஓனாய்களையும் மாணவர் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்!

  • anyway Eaazham kedaikka porathu illa,

   edhukku summa time waste pannikittu,pesama you can try TN as a separate country.

   Atleast inga vettiya pesura pala thalainga urulum.

 17. sir/madam,
  For the problems of Srilanka Tamils…some of the Tamils is TN, India and helping and protesting to get central Govt or World attention. This is the maximum we can do for them.
  It is the duty of the well settled Srilanka Tamils, who r settled in all over the world to help the tamils of srilanka.

  Tamils of India and Tamils of Srilanka are separated during 1991,,, reasons well known to them.

  They cannt demand help/support from Tamils of India…Whatever help provided is enough.

  • Tamils are not always united. anybody explain why there was many fractions of Srilanka Tamils..and history knows about in-fighting among themselves.

   They are suffering and not getting International support, because of the “Terrorist” Tag they earned after 1991.

 18. உலகின் மிகப்பெரிய ஒரு அரசியல் பித்தலாட்டமான திராவிட கூத்தை அரங்கேற்றி பெரும்பான்மை தமிழ் சாதிகளுக்கு நாமம் போட்ட வெள்ளாளர் கூட்டம் இப்போது ஈழகூத்தை நடத்திக்கொண்டிருக்கிறது.பதவிக்கு வந்தவுடன் அரசின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் ஆக்கிரமித்து கொண்டு மற்ற சாதியாருக்கு வாயில் விட்டை போட்டவர்கள் இவர்கள். ஈழத்தில் தங்கள் சுயநலத்துக்காக ஒரு கோமாளியையும் அவர் சார்ந்த சாதியையும் பலிகொடுத்தவர்கள். இப்போது புரோகித கூட்டத்துடன் சேர்ந்து கொண்டு அடுத்த உலகமஹா சதியை அரங்கேற்றி வருகின்றனர். இந்த புரோக்கர்கள் புரோகிதர்களுக்கு நாற்பது சீட்டு வாங்கி கொடுக்க போகிறார்களாம். இவர்களை நம்பி ஏமாளி தமிழ் சாதிகள் தங்கள் பிள்ளைகளை தெருவுக்கு அனுப்பவேண்டுமாம். ஈழத்தில் கொன்றது போதாது என்று இங்கும் கீழ்சாதி பிள்ளைகளை பலியிட திட்டம். என்ன செய்வது? இந்த நரிகளை நம்பி ஆடுகளை போல் மாணவர் கூட்டம் போய்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் நாற்பது பிடுங்காததை நாளை வரும் நாற்பது பிடுங்கப்போகிறதாம். கல் தோன்றி மண் தோன்றா காலத்தே கத்தி,கள்ளுபானை,சாதியோடு தோன்றிய காட்டுமிராண்டிகள் தானே நாம். இன்னும் எத்தனை நாள் இவர் நம்மை ஏமாற்றுவார்? ஈழ விடுதலை என்பது எல்லா சாதியினருக்குமான விடுதலையாக இருக்குமானால் இந்த போராட்டம் நியாயமானதே. இல்லையென்றால் நாம் ஆப்பசைத்த குரங்காக மீண்டும் மாட்டிக்கொள்வோம்.புரோகிதர்களின் பிரதமர் கனவுக்கு தமிழனை காவுகொடுக்கும் நாதாரி கூட்டத்தை நம்பி மாணவர்கள் ஏமாற வேண்டாம். இவர்களின் முகமூடியை கிழிக்க ஒன்றை மட்டும் கேளுங்கள்:- ஈழ இனப்படுகொலையை கண்டித்து நாம் ஏன் தேர்தலை புறக்கணிப்பு செய்யலாமே என்று?-ஒத்துகொள்ளமாட்டார்கள். இது வோட்டு பொறுக்கும் கூட்டம். உழைப்பவனுக்கு மட்டுமல்ல ஏனைய சாதிகளையும் ஏமாற்றி பிழைக்கும் இவர்களை அடையாளம் காணுங்கள்.

 19. தேர்தல் புறக்கணிப்பா? இப்பொதே, படித்தவர்களில் பாதிக்கு மேல் அதைத்தானே செய்கிரார்கள்! கள்ள வோட்டுகளே வெற்றியை தீர்மானிக்கின்றன! இதுவே இந்திய ஜன? அல்ல பணநாயகம் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க