Tuesday, December 10, 2024
முகப்புஉலகம்ஈழம்ஈழம்: மாணவர் எழுச்சி - செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!

ஈழம்: மாணவர் எழுச்சி – செய்ய வேண்டியது என்ன? கோவையில் கூட்டம்!

-

ஈழத்தமிழர் ஆதரவு மாணவர் எழுச்சி போராட்ட அனுபவங்கள்: இனி செய்ய வேண்டியது என்ன? – விளக்கக் கூட்டம்

தலைமை :
தோழர் L அலாவுதீன்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

வரவேற்புரை :
தோழர் M ஆனந்தகுமார்,  வழக்குரைஞர்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சிறப்புரை :
தோழர் சி. ராஜூ, வழக்குரைஞர்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

நன்றியுரை :
தோழர் K. உமா,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

நாள் :
12-04-2013 வெள்ளிக்கிழமை
நேரம் :
மாலை 5.00 மணி
இடம் :
அண்ணாமலை அரங்கம், சாந்தி திரையரங்கம் அருகில், இரயில் நிலையம் எதிரில், கோவை

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (RSYF), கோவை.

  1. ஈழத்தமிழர் பிரச்சினைக்கு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி எதுவும் தெரியாது. மேலும் கடனை உடனை வாங்கி மிகுந்த கஷ்டத்தோடு பிள்ளைகளை படிக்க வைக்கிறோம். ஆனால் அவர்கள் போராட்டம் கீராட்டம் என்று அலைந்து தங்கள் வாழ்க்கையில் மண்ணைப்போட்டுக்கொள்கிறார்கள் என்று பல பெற்றோர்கள் அங்கலாய்த்துகொண்டதையும் காணமுடிந்தது. நிறைய மாணவர்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை கேட்டு கை கொட்டி மகிழ்ச்சியோடு ஆர்ப்பரித்தார்கள். இதை நானே வேதனையோடு கண்டேன். இங்கே எங்கே இருக்கிறது ஈழ மக்களின் மீதான கரிசனையும் மனிதாபிமானமும்? கோவையை சேர்ந்த ஒரு பேராசிரியை, இந்த போராட்டம் பிரபாகரன் மகன் கொல்லப்பட்டதை கண்டித்து நடக்கிறது என்று தொலைப்பேசியில் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தமிழகத்தில் இருக்கும் படித்தவர்களே ஈழ மக்களின் பேரழிவை இந்த லட்சணத்தில் புரிந்து வைத்துள்ளார்கள். சாதாரண மக்களை பற்றி என்ன சொல்ல?.

    தமிழகத்தின் மெத்தப்படித்த அதிமேதாவிகளுக்கு கூட இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழருக்கும் அத்தீவின் வடகிழக்கில் பாரம்பரியமாக வாழும் ஈழத்தமிழருக்கும் இடையே உள்ள வேறுபாடு தெரியாது. இன்னொரு நாட்டுக்கு டீ எஸ்டேட்டில் வேலை செய்யப்போனவர்கள், பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் எப்படி தனி நாடு கேட்டு போராடலாம் என கேட்கிறார்கள். நான் உரையாடியவர்களில் மிகப்பெரும்பாலானோர் இம்மாதிரியான அறியாமையைத்தான் கொண்டிருக்கிறார்கள். ரொம்பவும் சலிப்பாக இருக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களும் (அனைவரும் அல்ல) இந்த விடயத்தில் இதே மாதிரியான தற்குறிகள் தான். எப்படிப்பட்ட வஞ்சகமும் அநியாயமும் ஈழ மக்களுக்கு நடந்திருக்கிறது என்பதை அறியாத மாணவர்கள் பல இடங்களில் சிரித்துக்கொண்டே குரல் எழுப்புவதையும் மறியல் செய்வதையும் புகைப்படங்களில் காண முடிந்தது. இத்தகைய அலட்சியமான செயல்பாடுகளுக்கு காரணம் அறியாமையே. இந்த அறியாமையை போக்கினால் ஒழிய ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களிடத்தில் குறிப்பாக மாணவர்களிடத்தில் மிகப்பெரிய மாற்றமும் விழிப்புணர்வும் வரும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இன்றைய மாணவர்கள் தான் எதிர்காலத்தில் பல்வேறு அதிகார அமைப்புக்களிலும் தொழில்களிலும் (உள்ளூரில் இருந்து உலகளவில்) பொறுப்பு வகிக்கப்போகிறவர்கள். அடுத்த தலைமுறைக்கு இந்த விடயங்களை கொண்டு போகிறவர்களும் இவர்கள் தான். ஆகவே தமிழகத்து மாணவர்கள் ஈழ விவகாரத்தில் அனைத்து விடயங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். புரட்சிகர அமைப்புக்கள், விவரம் தெரிந்த மாணவர்கள், தமிழ் அமைப்பினர் ஆகியோர் ஈழத்தமிழர் வரலாறு, அவர்களின் யாழ்ப்பாண ராச்சியம் குறித்த வரலாறு, ஈழத்தமிழருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் உள்ள வேறுபாடு, பிரச்சினைக்கான காரணங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கு விளக்கி அறிவூட்ட வேண்டும். பொது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்துகளில் கல்லூரி மாணவர்கள் பொது மக்களுக்கு பிரச்சாரம் செய்ய வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேசுவது பொது மக்களிடம் நன்றாக எடுபடுவதை கண்டிருக்கிறேன். தமிழ் அமைப்பினர் ஒரு குக்கிராமத்தில் இருக்கும் ஒரு வீடு பாக்கியில்லாமல் பிரச்சாரம் செய்ய வேண்டும். அறிவியல் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் சாதனங்களை பயன்படுத்தி கருத்தரங்கம், கலந்துரையாடல், பிரச்சாரம் ஆகியவற்றை செய்யலாம். இப்போது போராடிய மாணவர்கள் பெரும்பாலும் சட்ட மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளையும் புலங்களையும் சேர்ந்தவர்களே. இது போதாது. இந்த போராட்டத்தில் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஏன் அதிகம் பங்கெடுக்கவில்லை? அவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களுக்கு மனிதாபிமான உணர்வு இல்லையா? கடின உழைப்புக்கும் நுண்ணறிவுக்கும் சொந்தக்காரர்களான அவர்களின் ஆதரவையும் பங்கெடுப்பையும் பெற வேண்டும். தமிழகத்தை சேர்ந்த புத்திஜீவிகளிடம் (மெத்தப்படித்த அறிவாளிகள், அரசு அலுவலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள், பண செல்வாக்கு கொண்டவர்கள், மருத்துவர்கள், பொறியியல் வல்லுனர்கள், உயர்கல்வி பயிலும் மாணவர்கள், தமிழ் நாட்டிலிருந்து வெளிநாட்டில் குடியேறிய தமிழர்கள் ஆகியோர்) பிரச்சாரம் செய்து ஆதரவை அணுகி பெறுவதும் இன்றிமையாதது.

  2. மாணவர்கள் எதை செய்தாலும்,போராட்டங்கள் பல நடத்தினாலும்,அடுத்த ஒரு நாட்டில் செயல்படுத்த வேண்டிய ஒரு மாற்றத்தை நமது பாராளுமண்றத்தின் மூலமாகத்தான் முடியும். இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளின் உண்மை நிலையை அலசிப்பார்த்தால் தெரியும் அது புஸ்வாணம் என்று. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து செல்லும் 40 MP களும் அவர்களின் – மாணவர்களின் எதிரொலியாக இருக்க என்ன செய்யவேண்டும்,சிந்தித்து செயல்படுங்கள்.உங்கள் எண்ணங்களை இணையதளங்களின் மூலமாக பரவவிடுங்கள்.ஈழத்தில் நமது தமிழ் சகோதர்கள் வாழ்வு பற்றி கவலைப்படும் அதே சமயத்தில் ஊழலின் உச்சக்கட்டத்தில் இருக்கும் நம் நாட்டை உங்களால்தான் காப்பாற்ற முடியும். 1965க்கு பிறகு மாணவர்களின் எழுச்சியை பார்க்கும்போது அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.What was the results after 1966,67and what’s happening now and the true colours of every one is exposed.Please do something constructively . All eyes are on you.

  3. மாணவர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கி ஈழப்பிரச்சனை எப்படி உருவானது என்பது முதல் அனைத்தையும் தெரிவிக்க வேண்டும்.
    நமது நாட்டுப் பிரதமராக இருந்தவரை (ராஜீவை ) புலிகள் கொன்றதுமுதல் இன்று நடக்கும் உச்சகட்ட பிரச்சாரம் அனைத்தையும் மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பிரபாகரன் உயிருடன் இருப்பதாக “லட்டர் பேடு” கட்சி தலைவர்கள் கூறுகிறார்கள். இது உண்மையா என்பதையும் அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். பிரபாகரனை மாணவர்கள் முன் நிறுத்தினால் மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்ப்டுத்துவார்கள். அப்போது “புரட்சி” வெடிக்கும்!!! அமிதலிங்கம் , சீரிசபாரத்தினம் , பத்பநாப ,மாத்தையா மற்றும் பல இலங்கை தமிழர்களை யார் கொன்றது எப்படி கொன்றார்கள் என்பதையும் மாணவர்களுக்கு விளக்க வேண்டும்.
    அத்துடன் இல்லாமல் காஸ்மீரில் அகதிகளாக விரட்டப்பட்டு நமது நாட்டிலேயே இருக்கும் அந்த அப்பாவி இந்துக்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையே ஏன் என்பதையும் விளக்க வேண்டும்.
    தமிழர்களின் பண்பாடு என்ன என்பதையும் விளக்க வேண்டும். “பர்தா” அணிவது தமிழர் பண்பாட என்பதையும் விளக்க வேண்டும்.
    அப்போதுதான் மாணவர்கள் அனைத்தயும் தெரிந்து மிகப்பெரிய போராட்டத்தில் குதிப்பார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க