
‘சிறப்பு அகதி முகாம்’ எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!!
என்ற முழக்கத்துடன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
ஆகிய புரட்சிகர இயக்கங்கள் இம்மாதம் முழுவதும் தமிழகமெங்கும் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளவிருக்கின்றன.
ஈழ அகதிகள் அவர்களுக்கான அகதி முகாம்களில் எவ்வாறு இரண்டாந்தர குடிமக்களாக கூட நடத்தப்படுவதில்லை என்பதையும்
- சிறப்பு முகாம்களில் அவர்கள் ஒரு குற்றப் பரம்பரையினர் போல சிறை வைக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுவதையும்
- கியூ பிரிவு போலிசால் எந்த நேரமும் கண்காணிக்கப்படுவதையும்,
- சிவில் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுவதையும்,
அம்பலப்படுத்துவதோடு, இந்த அடக்குமுறைச் செயல்களிலிருந்து ஈழத்தமிழ் அகதிகளை விடுவிக்க கோரியும்
பேருந்து, ரயில், குடியிருப்பு பகுதிகளிலும், தொழிற்சாலை வாயில்களிலும், மக்கள் கூடுமிடங்களிலும் சுவரெழுத்து மூலமும் இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சிறு வெளியிடுகள், நூல்கள், பாடல், கலைநிகழ்ச்சி, வீதி நாடகம், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள்,என விரிவாக இந்த பிரச்சார இயக்கம் மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது.
மே நாள் அன்று சென்னையில், உயர்நீதிமன்றத்தின் அருகில் காலை பத்து மணிக்கு துவங்கும் துவங்கும் பேரணி இறுதியில் போலீசு டிஜிபி அலுவலகம் முற்றுகை செய்யும் போராட்டமாக நடக்க உள்ளது. இந்த பேரணி-முற்றுகை போராட்டத்தில் தமிழகம் முழுவதிலுமுள்ள தோழர்கள், மக்கள், மாணவர்கள் கலந்துகொள்கின்றனர்.
தமிழின பிழைப்புவாதிகள் ஈழத்தாய் என ஏற்றிப் போற்றும் ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் விரோதப் போக்கையும் ஜெ உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகள் ஈழத்தமிழர்க்காக வடிப்பது நீலிக்கண்ணீரே என்பதையும் உணர்ந்து ஈழத்தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்க மக்கள் போராட்டங்களே தீர்வு என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் விதமாக இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்படவுள்ளது.
முழக்கங்கள்
- சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்!
- அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்கு!
- ஈழத்தமிழ் அகதிகள் மீதான போலீசு கண்காணிப்பு கட்டுப்பாடுகளை நீக்கு!
கவுரவமான வேலைவாய்ப்பு, குடியிருப்பு வழங்கு!
தகவல் :
ம.க.இ.க., பு.ஜ.தொ.மு.,பு.மா.இ.மு., பெ.வி.மு.
‘சத்தியம்’ தொலைக்காட்சியில், சமீபத்தில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் சிறப்பு முகாம்கள் குறித்து ஒரு செய்தி தொகுப்பை வழங்கினார்கள். அதில், சாதாரண விவரிப்பில் வெளிப்படுத்தப்பட்ட ஓர் உண்மை அதிர்ச்சியளித்தது. இங்கிருக்கும் இளைஞர்கள் மீது முதலில் பொய் வழக்கு ஒன்றை சோடிக்கிறது, போலிஸ். பிறகு உண்மையை ஒத்துகொண்டால் விரைவில் வழக்கிலிருந்து வெளிவரலாம் என்று பேரம் பேசுகிறது. (முகாமில் இருக்கும் காலம் தண்டனைக் காலமாக கருதப்படுகிறது. ) தீர்ப்பை தமக்கு சாதமாக பெறும் போலீஸ், பின்னர் இந்த பேரம் பேசி பெறப்பட்ட தீர்ப்பை, ஐகோர்ட்டில், விடுதலைப் புலிகளுக்கு தடையை நீடிக்க பயன்படுத்திக் கொள்கிறது.
திறந்தவெளி சிறைச்சாலை என்று ஜெயலலிதா, மோடி போன்ற பாசிஸ்ட்களின் காட்டு தர்பார் ஆட்சியை குறிப்பிட பயன்படுத்துவோம். சிறப்பு அகதி முகாம் அலங்காரமற்ற அர்த்தத்திலேயே ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாகத் தான் இருக்கிறது. ஏனெனில், இங்கு வாழும் காலம் அம்மக்களுக்கு தண்டனைக்காலமாக கருதப்படுகிறது.
உழைக்கும் மக்களின் விடுதலைக்கு உன்மையான தொன்டனாக இருந்து வேலை செய்யும் மனிதர்களாக இருப்பது மிகவும் கடினம். இந்த பனியை சலிப்பு இல்லாமல் செய்யும் பொருப்பு உங்கலுக்கு மட்டும் பொருந்தும்.னீஙகல் போடும் முழக்கம் இந்த அரசமைப்புநொருங்கட்டும்.
புலம் பெயர்ந்து தமிழகத்தில் இருந்து வரும் ஈழத்தமிழர்கழுக்கரகவும் போராட வேண்டியது அவசியம். அதே சமயம் எந்த ஒரு இயக்கத்தையோ அல்லது அரசியல் கட்சியையோ குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது மட்டும் நடவடிக்கை ஆகாது. போராட்டத்திற்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
[…] […]