privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சன் டிவி ஆர்ப்பாட்டம் : செய்தி, படங்கள்!

சன் டிவி ஆர்ப்பாட்டம் : செய்தி, படங்கள்!

-

ன் நியூஸில் வேலை பார்க்கும் பெண்களிடம் பாலியல் தொந்தரவு செய்த தலைமை அதிகாரி ராஜாவையும், வெற்றிவேந்தனையும் தண்டிக்கக் கோரியும், பாலியல் புகார் கொடுத்த அகிலாவை பழிவாங்கும் சன் டிவி நிர்வாகத்தைக் கண்டித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் சன் டிவியின் பட்டினப்பாக்கம் அலுவலகம் முன்பு ஏப்ரல் 17, 2013 அன்று மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள், மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் என சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

காமராஜர் சாலையில் உள்ள எம்.ஆர்.சி நகர் பேருந்து நிறுத்தத்தில் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அதன் பின் சன் டிவி அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்று அதன் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை கிளைச் செயலாளர் மில்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினையும் விளக்கி கூறினார். மனித உரிமை பாதுகாப்பு மைய சென்னை கிளை பொருளாளர் வழக்குரைஞர் மீனாட்சி சன் நியூஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அகிலா அனுபவித்த பாலியல் தொந்தரவுகளை விவரித்து உரையாற்றினார்.

சில செய்தியாளர்கள் மட்டுமே செய்தி சேகரிக்க வந்திருந்தனர். ஆனால் ஆர்ப்பாட்டத்தின் நியாயத்தை உணர்ந்த பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருகின்ற வகையில் சுற்றி நின்று கவனித்தனர்.

அனுமதி பெறாத ஆர்ப்பாட்டம் எனக் கூறி கலந்து கொண்டோரை காவல்துறையினர் கைது செய்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அரைமணி நேரத்திற்குப் பிறகு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். காவல்துறையினர் பலர் பிரசுரங்களை ஆர்வமாக வாங்கிப் படித்து, சரியான காரணங்களுக்காக போராடினீர்கள் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாலை நேரம் என்பதால், அலுவலகம், கல்வி நிறுவனங்களில் இருந்து வீடு திரும்பும் பொதுமக்களும், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்த பயணிகளும் பிரசுரங்களை வாங்கி ஆர்வமாக படித்து ஆர்ப்பாட்டத்தின் நியாயத்தை உணர்ந்தனர்.

முழக்கங்கள்

சன் செய்தி அலுவலகத்தில்
வேலை பார்க்கும் பெண்களுக்கு
பாலியல் தொந்தரவு செய்த
சன் நியூஸ் தலைமை அதிகாரி
பொறுக்கி ராஜாவையும்
மாமாப்பயல் வெற்றிவேந்தனையும்
பாதுகாக்கும் நிர்வாகத்தை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!

சன் டிவி நிர்வாகமே!
பாலியல் குற்றவாளிகளை
பாதுகாக்காதே! பாதுகாக்காதே!

பழிவாங்காதே! பழிவாங்காதே!
பாலியல் புகார் அளித்த
செய்தி வாசிப்பாளர் அகிலாவை
சஸ்பெண்ட் செய்து பழிவாங்காதே!

பாலியல் புகாரை வாபஸ் வாங்க
சஸ்பெண்ட் செய்து மிரட்டாதே!

பொறுக்கிப்பயல் ராஜாவையும்
மாமாப்பயல் வெற்றியையும்
உடனடியாக பணிநீக்கம் செய்!

அநீதியாக அளிக்கப்பட்ட
அகிலாவின் சஸ்பெண்ட் உத்தரவை
உடனடியாக திரும்பப் பெறு!

தமிழக அரசே! காவல்துறையே!
பாலியல் குற்றவாளிகள்
ராஜா – வெற்றிவேந்தனை
உடனடியாக சிறையில் தள்ளு!

ஆணாதிக்கத் திமிருக்கு
அதிகாரத்துவ திமிருக்கு
பாலியல் தொந்தரவுகளை
சகித்துக் கொள்ளும் ஊழியர்களே!
ஊடக நண்பர்களே!
அடிமைத்தனத்தை கைவிடுங்கள்!
அகிலாவுக்காக போராடுங்கள்!
அகிலாவை போல் போராடுங்கள்!

பாலியல் வன்கொடுமையை
எதிர்த்து நின்று போராடும்
அகிலாவுக்கு துணை நிற்போம்!

பெண்களை போகப் பொருளாய்
பார்க்கின்ற திமிருக்கு
ஆணாதிக்கத் திமிருக்கு
முடிவு கட்டுவோம்! முடிவு கட்டுவோம்!

பாலியல் வன்கொடுமைகளுக்கு
முடிவு கட்ட அணிதிரள்வோம்!

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை