Thursday, August 11, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

-

னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்!
கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம்!
உச்சநீதிமன்றத்தில் மதுரை சிவாச்சார்யர்களுடன் சுமுகத் தீர்வு காண முயற்சிக்கும் பார்ப்பன ஜெயலலிதா கும்பலின் சூழ்ச்சியை முறியடிப்போம்!

கண்டன ஆர்ப்பாட்டம்

நேரம் : 22-04-2013 திங்கட்கிழமை காலை 10.30 மணி
இடம் : மாவட்ட நீதிமன்றம் முன்பு, மதுரை

தலைமை : திரு ரங்கநாதன் தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு

கண்டன உரை:

வழக்கறிஞர் A K ராமசாமி அவர்கள், செயலாளர், வழக்கறிஞர்கள் சங்கம், மதுரை
தோழர் கதிரவன், மக்கள் கலை இலக்கிய கழகம், மாநில செயற்குழு உறுப்பினர்
தோழர் ந. குருசாமி செயலர், விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை
வழக்கறிஞர் சே வாஞ்சிநாதன் துணைச் செயலர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை
வழக்கறிஞர் மு திருநாவுக்கரசு, தலைவர், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், மதுரை
திரு ம லயனல் அந்தோணிராஜ் செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

மற்றும் அர்ச்சகர் மாணவர்கள், கிராமப் பூசாரிகள்

நன்றியுரை : வழக்கறிஞர் பா. நடராஜன் துணைத்தலைவர், மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை

கோயில்னைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2007ம் ஆண்டில் தமிழகத்தின் ஆறு முக்கியமான கோவில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு துவங்கியது. 2007-08 கல்வி ஆண்டில் ஒரு வருட அர்ச்சகர் கல்விப் பயிற்சியும், இருமாத புத்தாக்கப் பயிற்சியினையும் 206 பேர் முடித்தனர். 2006ம் ஆண்டில் தமிழக அரசின் அவசர சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்ததால் அர்ச்சகர் பயிற்சிப் பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க அன்றைய தி.மு.க. அரசாங்கம் மறுத்து விட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள், “அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தினை” உருவாக்கி உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரர்களாகிப் போராடி வருகின்றனர். இடைக்காலத் தடையினை விலக்கவோ, வழக்கினை விரைவுபடுத்துவோ முயற்சிக்காத தி.மு.க. அரசாங்கம், அவரச சட்டத்திற்குப் பதிலாக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்திலோ அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான முக்கியமான பிரிவையே நீக்கி விட்டது. உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு இறுதி நிலையினை எட்டி 23.04.2013 அன்று விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில் ஜெயலலிதா அரசாங்கமோ சுமுகமாகப் பேசித் தீர்ப்பதாக கழுத்தறுப்பு வேலையினை செய்யத் துவங்கியுள்ளது.

கருவறைக்குள் நுழைந்து பூசை செய்யும் தகுதி பார்ப்பன சாதியினருக்குத் தவிர மற்றவருக்குக் கிடையாது என்பது பார்ப்பன வர்ணாஸ்சிரமம் உருவாக்கிய அநீதி. தமிழக அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான உயர்மட்ட ஆய்வுக் குழு, 2008ல் சமர்ப்பித்த அறிக்கையின்படி தமிழகத்தில் அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பூசை செய்யும் பார்ப்பனர்களில் 80 சதவீதம் பேர் முறையான பயிற்சியில்லாமலும், வாரிசுதாரர் உரிமையிலும்தான் பூசை செய்து வருகின்றனர். கேடுகெட்ட தேவநாதன்களும், ஜெயேந்திரர்களும் சாமியைத் தொடலாம், அது தீட்டில்லை. ஆனால், அரசு உருவாக்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள் பூசை செய்யக் கூடாதாம். ஏனெனில் இம்மாணவர்கள் சாதியால் பார்ப்பனர்கள் இல்லை. எனவே சாமியைத் தொட்டால் தீட்டாம்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினை அல்ல இது. கருவறைக்குள் நிலவும் சாதித் தீண்டாமையை ஒழிக்க வேண்டிய பிரச்சனை, குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கப்படுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, 976ம் ஆண்டு சேஷம்மாள் வழக்கிற்குப் பின்பாக, அர்ச்சகர் நியமனம் மத சார்பற்ற நடவடிக்கை, அது எவ்வகையிலும் மத சுதந்திரத்திலை தலையிடுவதாகக் கருத முடியாது என பல வழக்குகளின் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிறப்பால் இழிவானவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினர், இவர்கள் பூசை செய்தால் புனிதம் கெட்டு, சாமி தீட்டாகி விடும் என்று பார்ப்பனரல்லாதோர் மேல் சுமத்தப்படும் இழிவினை இன்னமும் ஏற்கத்தான் வேண்டுமா என தமிழகம் கிளர்ந்தெழவில்லை. கருவறைக்குள் நிலவும் பார்ப்பன ஆதிக்கத்தினை எதிர்க்க வேண்டிய நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சாதியினர் திரட்டப்படுகின்றனர். அதனால் தான், தமிழக அரசால் இவ்வழக்கினை நாங்கள் பேசி முடித்துக் கொள்கிறோம் என உச்சநீதிமன்றத்தில் மிகத் துணிச்சலாகக் கூற முடிகின்றது.

பெரியார்பெரியார் பிறந்த மண் என்ற மூச்சுக்க்கு முன்னூறு தடவை பேசுவதால் பயனில்லை. மாறாக ஜெயலலிதா அரசாங்கத்தின் பார்ப்பன ஆதிக்க நிலை நாட்டல் நடவடிக்கைக்கு எதிராக தமிழகமே கிளர்ந்து எழுந்து “அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு” என முழங்க வேண்டிய தருணமிது. “கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வெளியில் ஈன சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார் பெரியார். இன்று எமது கேள்வியும் அதுதான். நாம் என்ன செய்யப் போகிறோம்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சூத்திரர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள்தான் இந்த அர்ச்சக பட்டர்களின் முன்னோர்கள். கோவில் நுழைவுப் போராட்டம் வெற்றியடைந்த நிலையில் மீனாட்சியைத் தவிக்க விட்டு பூசை செய்யாமல் ஓடிப் போனவர்கள்தான் இந்த ஆதி சிவாச்சாரியர்கள். பிரிட்டிஷ் ஆட்சி போடவுடன் எங்கள் அதிகாரமும் போய் விட்டது என்று சொல்லி வெள்ளைப் பரங்கியர்களுக்கு வெஞ்சாமரம் வீசிய “தேசபக்தர்கள்”தான் இவர்கள். இன்றைக்கு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் போராடுகிறவர்களும் இவர்கள்தான். இவர்களிடம் கடவுள் பக்தி மட்டும் அல்ல. கடவுள் மீது மரியாதை கூட கிடையாது. அப்படி இருந்திருந்தால் மீனாட்சியைப் புறக்கணித்து பூசை செய்யாமல் ஓடிப் போயிருப்பார்களா? கோவிலில் சாமியின் பெயரால் அடிக்கின்ற கொள்ளை பறிபோய் விடக் கூடாது என்பதே அவர்கள் நோக்கம். அதனால்தான் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக விடாமல் இந்து மத உரிமையைக் காட்டி மீனாட்சி கோவில் பட்டர்கள் தடுத்து வருகின்றனர். அப்படியானால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்துக்கள் இல்லையா?

தமிழக அரசே!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை இழுத்தடிக்காமல் விரைவுபடுத்து!
மீனாட்சி கோவில் பட்டர்களுக்கு ஆதரவாக பார்ப்பன ஆதிக்கத்தினை கருவறைக்குள் நிலைநாட்ட முயற்சிக்காதே!
பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர்களுக்கு பாரபட்சமின்றி உடனே வேலை கொடு!

தமிழக மக்களே!

கருவறைக்குள் நிலவும் சாதி தீண்டாமைக்கு எதிராகப் போராடுவோம்!
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக்கப்பட கிளர்ந்தெழுவோம்!

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை
தொடர்புக்கு : 9443471003

  • உருப்படியான விசயங்களை ஒட்டு மொத்தமாக நீங்கள்தான் குத்தகை எடுத்திருக்கிறீர்கள் என்பது பலருக்கும் தெரியாது.

  • @jaisankar jaganathan தங்களின் அகராதியில் உருப்படியான விஷயம் என்றால் என்னவோ?

 1. //“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு” என முழங்க வேண்டிய தருணமிது. “கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வெளியில் ஈன சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார் பெரியார். இன்று எமது கேள்வியும் அதுதான். நாம் என்ன செய்யப் போகிறோம்.//

  உண்மை,
  தொடரட்டும் போராட்டம், தோழர்களுக்கு வாழ்த்துகள்

 2. அந்த மதம் தமிழர்களுக்கு உரியதல்ல என்பதற்கு அதுவும் ஒரு ஆதாரம். அதப்போயி ஏன் கெடுக்குறீங்க? மற்ற சாதிக்காரன் எல்லாரும் ஆளுக்கொரு கோயில கட்டி அதில நீங்க மட்டுமே அர்ச்சகரா இருங்க. பிராமணன் பூச செய்யும் கோயிலுக்கு போகவேணாம்.

  அதுக்கும் பிடிக்கலையா வேறொரு மதத்துக்கு போங்க.பெட்ரோமாக்ஸ் லயிட்டேதான் வேணுமா என்ன? பிராமணனின் மதம் பிரச்சனைஎன்றால் அதுக்கெதிராக போராடவேண்டியதுதானே. ஏன் பிராமணர்களுக்கு எதிராக போராட்டம்? போறபோக்கில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டால் மநுவும் தமிழ் நூல்தான் என்று சொன்னாலும் சொல்லுவீங்கபோல!

  கலைக்கப்படவேண்டியது கருவறை! அதிலுள்ள தீண்டாமை அல்ல.

  ஆமா இம்முட்டு நாளா நீங்க கடவுள் இல்லைன்னுதானே சொல்லீட்டு இருந்தீங்க? –

  இப்ப செய்யுறது நல்ல விடயம்தான். இன்னும் கொஞ்சம் தெளிவா செய்யலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவேனும் கல்வியும் சம உரிமையும் வழங்கக்கூடிய ஒரு மதத்துக்கு வழிகாட்டுங்கள். அவங்க அங்கபோயி,படிச்சு, நாலுகாசு சம்பாதிச்சு – தன்னம்பிக்கையோட நிமிர்ந்தாப்பிறகு – தான் பெற்ற கல்வியின் மூலம் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அவனே முடிவுசெய்யட்டும்.
  அவனது கல்வி அந்த முடிவுக்கு வழி சமைக்கும்.

  நீங்க கடவுள் மறுப்பு கொள்கையை விடவும் முடியாது – ஆனா சாதி ஒழியனும், தீண்டாமை ஒழியனும்னா அது நடக்காது.

  • //நீங்க கடவுள் மறுப்பு கொள்கையை விடவும் முடியாது – ஆனா சாதி ஒழியனும், தீண்டாமை ஒழியனும்னா அது நடக்காது.//

   மிகச் சரியான கருத்து

 3. இங்கு மதமே கூடாது கடவுள் பெயரால் பிரிவினை செய்யப்படுகிறது என்பதுதான் தோழர்கள் நிலைப்பாடு..!

  பின் அதை கீழ்சாதிக்காரன் செய்தால் என்ன மேல் சாதிக்காரன் செய்தால் என்ன..? எவன் அர்ச்சகர்கள் ஆனாலும் மூடநம்பிக்கையை தீ மூட்டி வளர்க்கத் தானே போகிறான் பின் இவர்களும் பகுத்தறிவுக்கு எதிரி தானே..?

  மூடநம்பிக்கையை வளர்க்க பயிற்சி எடுத்து பட்டம் முடித்து வருபவர்களை எப்படி வரவேற்க்க அவர்களுக்காக போராடா செல்வது என்பது நியாயமா..?

  நமக்கு மதத்தையும் சடங்கையும் ஓழிப்பது முக்கியமா..என்பதை தோழர்களே சொல்லட்டும்.

 4. // “கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் வெளியில் ஈன சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கி கேள்வி எழுப்பினார் பெரியார். இன்று எமது கேள்வியும் அதுதான். நாம் என்ன செய்யப் போகிறோம். //

  பெரியாருக்கு இதேதான் வேலை.. உங்களுக்கும் வேறு வேலையில்லையா..?!!!

  • பெரியார் மதம் இல்லை என்பார் ஆனால் இஸ்லாமிய கிருஸ்துவ மதங்கள் மகாநாட்டில் கலந்துக்கொள்வார்..

   சாதிகள் இல்லை என்பார்..பெரியார் சிறப்பு விருந்தினராய் கலந்து கொள்ளாத சாதி விழா ஏதெனும் உண்டா..? (பிராமிணர் விழா தவிர)

   • ஜாதி இல்லை என்பார், ஆனால் அவ்ருடைய நெருங்கிய படிவாரங்கள் அவரை நாயக்கரே என்று மரியாதையுடன் விளிப்பர்…

 5. இங்கு சிலர், நீங்கள்தான் நாத்திகர்களாயிற்றே; நீங்கள் எதற்கு அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டிப் போராடுகிறீர்கள்? என்று அறிவாளித்தனமாக (?) கேட்கிறார்கள். இதற்கான பதிலைத் தோழர்கள் கட்டுரைகள் மூலமும், தங்கள் போராட்ட நடைமுறை மூலமும் பலமுறை கூறியிருக்கிறார்கள்.

  தில்லைச்சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் போராட்டத்தை நாத்திகர்களாகிய தோழர்கள் நடத்தி வெற்றி பெற்றார்கள். தமிழ் உணர்வாளர்கள், தமிழ் மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் என்று இன்றும் பீற்றிக்கொள்பவர்கள், தேவர, திருவாசகத்தைக் கரைத்துக் குடித்த கடவுள் நம்பிக்கையுள்ள பகதர்கள், சிவனடியார்கள் யாருக்கும் ( சிவனடியார் ஆறுமுகச் சாமியைத் தவிர ) தமிழ் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதே என்று கோபம் வரவில்லை. மாறாக கடவுள் நம்பிக்கை இல்லாத தோழர்களுக்குத்தான் அதற்கெதிராகக் கோபம் வந்தது. அது வெறும் வழிபாட்டு உரிமை மட்டுமல்ல. மொழித் தீண்டாமைக்கெதிரான போராட்டம். அதே போல் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் போராட்டம். அது ஏதோ அர்ச்சகர் வேலை குறித்த பிரச்ச்னை அல்ல. ஆகமவிதிப்படி, கோயில் கருவறைக்குள் பார்ப்பானைத் தவிர, வேறு சாதியினர் எவரும் நுழையக்கூடாது என்ற மனுநீதியை, பார்ப்பனியப் படிநிலையை எதிர்த்த போராட்டம். இது தீண்டாமைக் கெதிரான போரட்டமும் கூட. எந்த வகையான தீண்டாமையையும் எதிர்த்துப் போராடுவது, கம்யூனிஸ்டுகளின் கடைமை. ஆகவே தோழர்கள் அதற்காகப் போராடுகிறார்கள்.

  மேலும் மதத்தை ஒழிக்க நினைப்பவர்கள் ஏன் அர்ச்சகர்களுக்காகப் போராட வேண்டும் என்று கேட்பவர்கள் புதிய ஜனநாயகம் வெளியிட்ட ” மதம்- ஒரு மார்க்சியப் பார்வை ” என்று நூலைப் படித்துவிட்டு , மதம் பற்றிய மார்க்சியர்களின் நிலைப்பாட்டைத் தெரிந்து கொண்டு பின்னர் பின்னூட்டமிடவும். சும்மா எதாவது சொல்ல வேண்டும் என்பதற்காகக் கண்டதையும் கழிந்து கொண்டிருக்க வேண்டாம்.

  கீழ்க்காணும் கட்டுரைகள் இப்பிரச்சனை பற்றிய புரிதலுக்கு உதவலாம்.

  தீட்சிதப் பார்ப்பனர்களின் திமிரை அடக்கிய தில்லைப் போராட்டம்
  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6006:2009-07-17-16-14-08&catid=312:2009&Itemid=59

  தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரைஓயாது எமது சமர்!
  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3618:2008-09-05-19-04-09&catid=67:2008&Itemid=59

  தில்லைச் சிற்றம்பலத்தில் தமிழ் :வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்! ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!
  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=913:2008-04-26-21-06-23&catid=67:2008&Itemid=59

  அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் மட்டும் போதுமா? சாதி ஒழிப்புப் போராட்டம் வேண்டாமா?
  http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=875:2008-04-26-06-53-34&catid=38:2006&Itemid=59

  மேற்கண்ட கட்டுரைகள் தில்லைப் போராட்டத்தின் போது புதிய கலாச்சாரத்தில் வெளி வந்தவை. இவற்றைப் படித்துவிட்டு குறிப்பாக உங்கள் விமர்சனத்தை வைக்கவும்.

 6. சரியாகச் சொன்னீர்கள் பகத்.கம்யூனிஸ்டுகள் வெறும் நாத்திகர்கள் மட்டுமல்ல.அவர்கள் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும்,உரிமை மறுப்புகளையும் எதிர்த்துப் போராடுகிறவர்கள்.பார்ப்பான் மனிதர்களிலே தான் தான் உயர்ந்தவன்,மற்றவர்களெல்லாம் தனக்குக் கீழானவர்கள் என்கிற நடைமுறையை இன்றளவும் கடைபிடிப்பவன்.பார்பனிய சிந்தனை கீழ் மட்டம் வரை புரையோடச் செய்யப் பட்டுள்ளது.அவர்களெல்லாம் சக மனிதர்களுடைய உரிமைகளை எளிதில் மறுப்பவர்கள்.பார்ப்பனீயத்தின் அதிகார வரம்பு மக்கள் போராட்டங்களினால் மட்டுமே தகர்க்கப்பட்டிருக்கிறது.இப்போது கருவறைக்குள் இருந்துகொண்டு கொக்கரிக்கிறது.அரசியல் சட்டம் தீண்டாமை குற்றம் என்று வரையறுக்கிறது.ஆனால் சாதி,தீண்டாமையை இந்து மதம் தனது உரிமை என்கிறது.பார்பனப் பட்டர்கள் தூக்கிப் போடும் கோவில் பிரசாதத்தை பவ்வியமாக வாங்கி கண்களில் ஒற்றிக் கொள்ளும் நீதியரசர்கள்,உயர் அதிகாரிகள்,ஓட்டு அரசியல் தலைவர்கள்,முதலாளிகள் யாருக்கு சாதகமாக இருப்பார்கள் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டுமா?கடவுள் மறுப்புக் கொள்கை உடைய கம்யூனிஸ்டுகள் ஆன்மீக விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்பவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை தக்கவைத்துக்கொள்ள செய்யும் முயற்சிதான் .அவர்கள் ஜனநாயக விரோதிகள்.பெரும்பான்மை மக்களின் எதிரிகள்.இதுவரையிலான வரலாற்றில் அவர்கள் எப்படி வீழ்த்தப் பட்டார்களோ அப்படியே மக்களால் வீழ்த்தப் படுவார்கள்.

 7. பாருங்கள் அதே பாட்டு! அதை படித்துவிட்டு வாருங்கள் இதை படித்துவிட்டு வாருங்கள் என உங்கள் கொள்கைகள் தான்சரி, உங்கள் பிரச்சாரங்கள்தான் சரி என மீண்டும் மீண்டும் அடம்பிடிக்கும் உங்களது சின்னப்பிள்ளைத்தனம்தான் மிக அறிவாளித்தனமென நீங்கள் நினைத்தால் – வேறு யன்ன செய்ய முடியும்?

  அடுத்தவன் துன்புறுவதை இவர்கள் விரும்பவில்லை. அவர்களது அடிமைத்தனத்தை இவர்கள் விரும்பவில்லை. அதற்காக இவர்கள் போராடுவதில் சந்தோசம். ஆனால் நாம் எதிர்பார்க்கும் அந்த சமுதாயம் இந்த போராட்டங்களால் உருவாகாது!

  ராமசாமி ஐயா சொன்னதுதான் உண்மை, சமவுடமைதான் தீர்வு என நீங்கள் முடிவு செய்துவிட்டு சவுண்டு கொடுப்பதால் – எமது பிரச்சனைகள் தீராது.

  தமிழகத்தின் சமூக கட்டமைப்பு, அந்த கட்டமைப்பின் காரணம் அதை மாற்றக்கூடிய வழிகள் என நடைமுறையை ஆராய்ந்தால் – என்ன செய்ய வேண்டுமென தெரியவரும். அதற்க்கு நீங்கள் முதலில் ராமசாமி ஐயாவின் கொள்கைகளையும் கம்யுனிசம் அது இது என்ற தத்துவங்களையும் ஓரத்தில் போட்டுவிட்டு கொஞ்சம் ப்ராக்டிகல் பகுத்தறிவோடு வேலைசெய்ய வேண்டும்.

  சரியான வேலையை செய்ய முனைபவர்கள் தவறானவர்களாக இருக்கும்போது முடிவுகளும் தவறாகிவிடுகின்றன.

  அந்த மக்களை வேறு மதத்துக்கு மாற்றி கல்வி கொடுங்கள். பொருளாதாரத்தில் உயர்த்துங்கள். யாருக்காவது தாம் அடிமையா என்பதையும், கடவுள் இருக்கிறாரா என்பதையும் அவர்கள் முடிவுசெய்யட்டும் – அந்த முடிவுக்கு அவர்களது கல்வி வழிசமைக்கும்.

  • // பாருங்கள் அதே பாட்டு! அதை படித்துவிட்டு வாருங்கள் இதை படித்துவிட்டு வாருங்கள் என உங்கள் கொள்கைகள் தான்சரி, உங்கள் பிரச்சாரங்கள்தான் சரி என மீண்டும் மீண்டும் அடம்பிடிக்கும் உங்களது சின்னப்பிள்ளைத்தனம்தான் மிக அறிவாளித்தனமென நீங்கள் நினைத்தால் – வேறு யன்ன செய்ய முடியும்? //

   நான் எதையும் படிக்க மாட்டேன். படிக்காமல் கண்டதையும் உளறுவேன் என்பது போல்தான் இருக்கிறது உங்கள் பேச்சு. வினவின் கொள்கைகளை யார் வேண்டுமானாலும் தாராளமாக விமர்சிக்கலாம். ஆனால் விமர்சிக்கும் முன் வினவின் கொள்கை என்ன என்பதைச் சரியாக தெரிந்து கொண்டு விமர்சியுங்கள் என்று தான் கூறுகிறோம். அதற்குக் கட்டுரைகளைப் படியுங்கள் என்று கூறினால் அது உங்களுக்கு அதே பாட்டாகத் தெரிகிறது. உங்கள் நேர்மையை எண்ணும் பொழுது புல்லரிக்கிறது.

 8. உருப்புடியான விஷயம் என்பது அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆவது தானே. அதைட்தான் சொல்லியிருந்தேன்

 9. அனைத்து சாதியினரும் அர்ச்சகராக உச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தால், மத ரீதியிலான சாதி அமைப்பு உடையும்! இது முதல் படிதான்! இதற்கே அம்பி போன்றவர்களுக்கு மனம் வரவில்லை என்பது வருத்ததிற்கு உரியது! பார்ப்பனர்கள் பூசாரிகள் மட்டுமே ! கோவில் உரிமையாளர்கள் அல்ல! வேதஙகள் கூட அவர்கள் பிராமணர் அல்லாத முனிவர்களிடமிருந்து கேட்டறிந்ததுதான்! ஆகவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதில் அம்பிகளுக்கு என்ன நஷ்டம்?

 10. வாருங்கள் சகோதரரே! ராமசாமி ஐயாவை விட்டு வெளியேதான் உங்கள் கொள்கைகள் இருக்கிறதென்றால் சொல்லுங்கள் – ஒருதடவை வாசித்துவிடலாம். உதவிக்கரம் நீட்டுபவர்களிடம் குற்றம் காண்பதல்ல நோக்கம். அதே தவறு – அதே அணுகுமுறை – அதே விளைவுதான் வரும்.

  சாதிகள் ஒழியவேண்டும் – எல்லோரும் சந்தோஷமாக சம உரிமையுடன் வாழவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். உங்கள் கொள்கைகளை படித்தால்தான் அது சாத்தியமென்றால் – வேண்டாம், நாங்கள் நேர்மை அற்றவர்களாகவே இருந்துவிடுகிறோம்.

  தமிழனை அடிமையாக்கிய பிராமண மதத்தை காப்பாற்றவும் – பிராமணருக்கு அடுத்த நிலை சாதியினரை முன்னிறுத்தவும் போராடுகிறீர்களோ என எண்ணத்தோன்றுகிறது.

  எமது தமிழ் நாட்டை சில சாத்தான்கள் பிடித்திருக்கிறது. 1. பிராமண மதம் 2. பகுத்தறிவு 3.சினிமா.

  உங்கள் கொள்கைகள் இதோடு ஒத்துப்போகிறதா என பாருங்கள்.

  எனது வரிகள் உதவிசெய்ய வருபவர்களை விமர்சிப்பதாக இருந்தால் மன்னியுங்கள் சகோதரரே. உங்கள் வழி உங்கள் இலட்சியத்துக்கு வழிசமைக்காது! – இதை எப்படி உங்கள் கொள்கைகள் அனைத்தையும் படிக்காமல் சொல்லமுடியுமென கேட்கிறீர்களா? அதற்க்கான பதில் உங்களுக்கு கூட தெரியும்!

 11. Vaalmiki was a hunter-cum robber.Later he became a great Rishi.Veda Vyasa was born to a fisherwoman.Vishwamithra,who culled out Gayathri Mantra from the Vedas was born to Kshatriya parents but became a Brahmarishi.Rishabha Deva,the first Jain Teerthamkara,a Kshatriya king, had 100 sons.His 81 sons became renowned Brahmins.The descendants of Drshta,a Kshatriya,became Brahmins.Manu was a Kshatriya king.Markandeya was an outcaste.Durvasa was a cobbler.Kasyapa was a blacksmith.

  Nowhere in the Gita,did the Lord say that He created the caste system according to the birth or parentage of people.He sets out the qualities of a Brahmana and clearly indicates that those having those qualities alone could be called “Brahmins”irrespective of to whom they are born.Those qualities are (Chapter 18-Sloka 42)”Complete control of mind and senses,austerity,purity,ever in peace,integrity,uprightness,right-knowledge,self-realization,belief in God and in rebirth are the gunas of a Brahmin.If these are the lakshanas-the signifying qualities of a Brahmin,no one living today can ever claim to be a Brahmin.

  Sri Ramakrishna Paramahamsa,in his 7th year,during his thread ceremony,took his first Bhiksha from his Aayah,who was a Shudra lady amidst lot of protests from his orthodox elders.Kanakadas,a Kannada poet,belonging to a lower caste was prevented entry to Udipi temple by Brahmins.He went to the rear side of the temple to have dharshan of the lord through a window.On hearing his cries,Lord”s idol turned 180 degrees and Lord”s face became visible through the back-side window.When prevented entry to the Chidambaram temple by Brahmins,Nandanar wanted to have dharshan of Lord Shiva from outside.But his view was obstructed by Nandhi.On hearing his cries,Lord Shiva made Nandhi to move aside.Nandhanar became one of the 63 Nayanmars.

  In the last 600 to 700 years,caste has become birth oriented exclusively.

  The above paragraphs were the extracts from an article,”Caste system, a menace” by Mr M.N.Krishnamani,Senior Advocate in Bhavan”s Journal dated 15th April,2013.

  Tiruvalluvar also defined Andhanar as the one who shows compassion for every living beings.”Andhanar Enbor Aravor,Evvuyirkkum Sendhanmai Poondozhugalaan”

 12. மனிதர்களிலே பார்ப்பனர்களைப் பற்றி இவ்வளவு பேச வேண்டியதிருப்பதால் அவர்கள் ஒரு தரப்பு என்பது உறுதியாகிறது.பார்பனீயத்தை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த சாதியினராக இருந்தாலும் அவர்கள் பார்ப்பனர்களுள் தான் வைக்கப்படுவார்கள்.பார்ப்பனீயத்தை எதிர்ப்பவர்கள் பார்ப்பனராக இருந்தாலும் அவர்கள் எதிர்தரப்பினரே.பொது விதி எப்போதும் இப்படித்தான் இருக்க முடியும்.ஒருவர் மற்றொருவராக மாறுகிற கதை எல்லாம் இப்படித்தான் வருகிறது.ஆனால் சமதர்மத்தை இரு வழிகளில் அடையலாம் ஆனால் அதில் ஒரு வழி கம்யூனிச வழி அல்ல.இன்னொரு வழி என்ன என்று நான் சொல்ல மாட்டேன் என்று சொல்பவர்களை எந்த தரப்பில் வைப்பது ?அவர்கள் ஒரு உள் நோக்கத்தோடு வருகிறவர்கள்.அவர்களுடைய கொள்கை குழப்புவது.அதில் மீன் பிடிப்பது.பழமையான பார்பனீயம் பல புதுமையான வேடங்களை அணிந்து வந்தாலும் அதன் கிழட்டுத் தன்மை எல்லா ஒப்பனைகளையும் மீறி வெளியே தெரிந்து விடுகிறது.ஒப்பனைக் கலைஞர்கள் தங்கள் முயற்சியை விக்ரமாதித்தியன் போல விடாமல் செய்து வருகிறார்கள்.ஆதி சங்கரன் வாதில் சமணர்களை வீழ்தியதைப் போல கம்யூனிஸ்டுகளும் இவர்களை வீழ்த்த வேண்டியுள்ளது.விடாது கருப்பு.

 13. நன்றி! சூரியன் அவர்களே! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல் எனும் கொள்கையை நான்நம்புகிறேன்! பல்லாண்டுகளாக நாம் பயணித்த பாதை தவறானது என்று தெரிந்தும், திருத்திக்கொள்ள மறுப்பது என்ன நியாயம்?

 14. சற்றே நகரும் பிள்ளாய் என்று நந்திக்கு மட்டும் சொல்லபட்டதாக நான் நினைக்க வில்லை! அம்பிகளுக்கும் சேர்த்துதானோ!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க