Saturday, July 13, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ராமதாஸ் - குருவை சிறையிலடை ! வன்னியர் சங்கத்தை தடை செய் ! !

ராமதாஸ் – குருவை சிறையிலடை ! வன்னியர் சங்கத்தை தடை செய் ! !

-

மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னிய கலாச்சார விழா என்ற பெயரில் ஆண்டு தோறும் நடத்தப்படும் பா.ம.கவின் வன்னிய சாதிவெறியூட்டல் அரசியல் விழாவிற்கு இவ்வாண்டு சென்ற பா.ம.க வன்னியர் சங்க குண்டர்களின் அராஜக நடவடிக்கையின் விளைவாக நடைபெற்றதே மரக்காணம் கலவரம் ஆகும்.

பாமக இராமதாசின் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதி வெறியர்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சார்பாக இன்று உயர்நீதிமன்ற ஆவின் கேட்டிற்கு முன்பாக மதியம் 1.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை ஒருங்கிணைத்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் துவக்கமாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, மரக்காணம் பகுதிக்கு தாங்கள் உண்மை அறியும் குழுவாக சென்று கண்டறிந்த விஷயங்களை முன்வைத்து உரையாற்றினார்.

”பா.ம.கவினர் குடிவெறியுடன் வாகனங்களின் மேலே ஏறி சென்ற போது செல்லுமிடங்களில் எல்லாம் சாதாரண மக்களிடம் வம்பிழுத்துள்ளனர். சித்திரை திருவிழாவில் பேசிய இராமராசு, காடுவெட்டி குருவின் பேச்சுகள் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினரை திரட்டும் வகையில் அமைந்துள்ளன. குஜராத்தில் முசுலீம்களை எதிரிகளாக சித்தரித்து 2000 முசுலீம்களை கொன்று குவித்து அவர்களின் பிணங்களின் மேல் ஏறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த நரேந்திர மோடி போன்று தமிழகத்தில் தலித் மக்களை எதிரிகளாக்கி வருகிறார்கள் இராமதாசும் பா.ம.கவும்.

ஜனநாயகப்பூர்வமான அம்சங்களுடன் வளரவேண்டிய நாகரீக சமூகத்தினை பின்னோக்கி காட்டுமிராண்டித்தனமாக நடத்த வன்னிய இளைஞர்களை தூண்டிவிடுகின்றனர். இது தலித் மக்களுக்கு எதிரான பிரச்சினை மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் எதிரானது. இராமதாசின் சாதி வெறி அரசியலுக்கு எதிராக வழக்குரைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் போராட வேண்டியது அவசியமாகியுள்ளது”

குடிவெறி காலித்தனத்தில் ஈடுபட்ட பா.ம.க குண்டர்களை கூனிமேட்டில் உள்ள வன்னிய சாதி மக்களே இஸ்லாமியர்களுடன் சேர்ந்து கண்டித்து திருப்பி தாக்கியுள்ள செய்திகள் குறித்தும், பா.ம.க இராமதாசின் சாதி வெறி அரசியலால் தலித் மக்கள் மட்டுமல்ல, வன்னிய மக்களும் பாதிக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்தி ராமதாசை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த வேண்டியதையும் முன்வைத்து கூர்மையான முழக்கங்கள் எழுப்பட்டன. காவல் துறையினரும், வழக்கறிஞர்களும், பொது மக்களும் ஆர்வமுடன் நின்று முழக்கங்களை கேட்டனர்.

மரக்காணம் மக்கள் மீது
பா.ம.க.வன்னியர் சங்க
குடிகார சாதி வெறியர்களின்
கொலை வெறி தாக்குதலை
கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழக அரசே! காவல் துறையே!
கட்டையன் தெரு, கழிக்குப்பத்தின்
தாழ்த்தப்பட்ட மக்கள் மீது
கொலை வெறி தாக்குதல் நடத்திய
பா.ம.க., வன்னியர் சங்க
குடிகார பொறுக்கிகளை
கைது செய்! சிறையிலடை!
ஆதிக்க சாதிவெறி அமைப்புகளை தடைசெய்!

தடைசெய்! தடைசெய்!
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராய்
சாதிவெறியை பரப்புகின்ற
வன்னியர் சங்கத்தையும்
சித்திர திமிர் விழாவையும்
தமிழக அரசே! தடைசெய்!

——

ஓட்டுப் பொறுக்கி அரசியலில்
சுயலாப நோக்கத்திற்கு
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராய்
வன்னிய-சாதி மக்களை
கேடாக பயன்படுத்தி
சாதிவெறியை பரப்புகின்ற
ராமதாசின் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம்!

சித்திரை பெருவிழாவில்
பீர், பிராந்தி பாட்டிலோடு
குடிகார பொறுக்கிகளை
அணிதிரட்டும் ராமதாஸ்
குடியால் நாடு சீரழிவதாய்
ஊருக்கு உபதேசிப்பது
மோசடி! ஏமாற்று!

——

ராமதாசின் அரசியலுக்கு
ஆதிக்க சாதிவெறிக்கு
பாதிக்கப்படுவது
தலித் மக்கள் மட்டுமல்ல
வன்னிய சாதி மக்களுமே
தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராய்
ஆதிக்க சாதிவெறியை
பரப்புகின்ற ராமதாசை
காடுவெட்டி குருவை
கைது செய்! சிறையிலடை!

—–

கூனிமேடு கிராமத்தில்
குடிகார பொறுக்கிகளை
வன்னியசங்க பா.ம.க
ரவுடிகளை விரட்டியடித்தது
வன்னிய சாதி மக்களே!

வன்னியர் சங்க, பா.ம.க ரவுடிகளை
சாதிவெறி குடிகார பொறுக்கிகளை
வன்னிய சாதி மக்கள்
கூனிமேடு கிராம மக்கள்
அம்பலப்படுத்தி விரட்டியதை
தமிழகமெங்கும் பரப்புவோம்!

ராமதாஸ் உள்ளிட்ட
ஆதிக்க சாதிவெறி
பிழைப்புவாதிகள் அனைவரையும்
அரசியல் அனாதையாய்
தமிழகத்தில் மாற்றுவோம்!

—-


(படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்)
தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை

 1. பா.ம.க.வின் பசுமைத் தாயகம்

  அரசியல் கட்சிகள் டிரஸ்டுகள் வைத்து உள்நாடு, வெளிநாட்டிலிருந்து பணம் பெறுகின்றன. கட்சி உறுப்பினர்கள் சிலர் என்.ஜி.ஓ நடத்தி பணம் பெறுகின்றனர். வெளிநாட்டு அரசுகள் மற்றும் உளவுத்துறைகளோடு சில கட்சிகள் தொடர்பு கொண்டுள்ளதாக குற்றங்கள் சாட்டப்படுகின்றன. ஆனால் ஒரு என்.ஜி.ஓ வைத்து அப்பட்டமாக கட்சிக்கு இணையான முக்கியத்துவத்தை அதற்குத் தருவது பா.ம.க ஒன்றுதான். எந்த இடத்தில் பா.ம.க முடிந்து பசுமைத் தாயகம் தொடங்குகிறது என்பதே சந்தேகத்திற்கிடமாக உள்ளது.

  உதாரணத்திற்கு டாக்டர் ‘ஐயா’வின் சிகரெட் – மது எதிர்ப்பு. இது பசுமைத் தாயகம் என்.ஜி.ஓ.வின் ஒரு புராஜெக்ட். என்.ஜி.ஓக்களின் புராஜெக்டுகள் எப்போதும் இலவசமாகச் செய்யப்படுவதில்லை. ‘ஐயா’ குடும்பத்தின் பசுமைத் தாயகம், பவுண்டேஷன் வோர்ல்ட் லங் பவுண்டேஷன் (World Lung Foundation – WLF) என்ற புகையிலைக்கு எதிரான அமைப்பிலிருந்து நிதியுதவி பெறுகிறது. முக்கியமாக சென்னையில் புகைப்பழக்கத்தை ஒழிக்க இவ்வமைப்பு பசுமைத் தாயகம் பவுண்டேஷனுக்கு நிதியுதவி அளித்து வருவதாக WLF வெப்சைட் கூறுகிறது. இந்த WLF, அமெரிக்காவின் 7வது பெரும் பணக்காரரும், நியூயார்க்கின் மேயராக இருந்தவருமான மைக்கேல் பொளூம்பெர்க்கின் தொண்டு நிறுவனத்திலிருந்தும், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனிலிருந்தும் நிதியுதவி பெறுகிறது. இத்தனைக்கும் இளைய ‘ஐயா’ மத்திய சுகாதார அமைச்சராக எல்லாம் இருந்தார். மக்கள் நலத்தைப் பேண அரசு அமைப்புகளை வலிமைப்படுத்துவதை விட்டுவிட்டு சந்தேகத்திற்குரிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பின் ஓடுவது இந்தியர்களின், தமிழர்களின், வன்னியர்களின் நலனுக்கு உகந்ததா? நாட்டின் ஜனநாயக அமைப்புகளுக்கு சட்டதிட்டங்களுக்கு வெளியே இயங்கும் இத்தகைய என்.ஜி.ஓக்களை ஊட்டி வளர்ப்பது நல்லதா என்று ‘ஐயா’தான் விளக்க வேண்டும்! இத்தகைய தொடர்புகள் உள்ளவர்கள் தனியார்மயத்திற்கு எத்தகைய சேவை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள் என்பதை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம் அல்லவா?

  ரஜினி, பாபா படம் வெளிவரும்போது ஒரு கூட்டத்தில் வீரப்பனை அழிக்க வேண்டும் என்று பேசினார். படம் வெளிவந்ததும் பா.ம.க பொங்கியெழுந்தது. சூப்பர் ஸ்டார் பின்வாங்கி ஒளிந்து கொண்டார். தமிழுணர்வாளர்கள் வீரப்பனுக்காகத்தான் ‘ஐயா’ ரஜினியை இந்தப் பாடுபடுத்துகிறார் என்று நினைத்து புளகாங்கிதமடைந்தனர். படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருப்பதால்தான் தமது கட்சியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றார் ‘ஐயா’. ‘ஐயா’ பொய் சொல்கிறார் என்று உணர்வாளர்கள் நினைத்துக் கொண்டனர். ‘ஐயா’ மறுக்கவில்லை. அதேவாரம் மது ஒழிப்புப் பேரணி நடத்தினார். உண்மையான ‘ஐயா’, வீரப்பன் பங்காளி ‘ஐயா’தான் என்று சொல்லப்பட்டது.

  மக்களுக்கு வீரப்பன்; நிதியுதவியாளர்களுக்கு சிகரெட், மது எதிர்ப்பு. ‘ஐயா’வின் திறமையே திறமை.

  ‘ஐயா’ வீரவேசத்துடன் தாமிரபரணி, கோகோகோலா பேக்டரியை எதிர்த்தார். பசுமைத் தாயகம் World Water Forum நிகழ்வுகளில் கலந்து கொண்டது. World Water Forum கோகோகோலா நிறுவனத்திடமிருந்து நிதியுதவி பெறுகிறது என்பது குறித்து ‘ஐயா’விடம் யாரும் கேட்கவுமில்லை; ‘ஐயா’ சொல்லவுமில்லை.

  பசுமைத் தாயகத்தின் இணையதளம் முற்றிலும் ஆங்கிலத்தில் உள்ளது. ’ஐயா’வின் தமிழ் பற்று..?அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் பார்க்க வேண்டியவர்கள் எப்படி இணைய தளத்தைப் பார்ப்பார்கள்? அப்படி இணைய தளத்தை யார் பார்க்கிறார்கள்? அதிலென்ன சந்தேகம் தமிழ் தெரியாத, ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான்!

  பாமகவின் பிறப்பே பின்நவீனத்துவவாதிகளின், ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் உதவியோடு என்பதைப் புரிந்து கொண்டால் இந்த விபரீதமான புராஜெக்ட் அரசியலில் நமக்கு ஆச்சரியம் ஏற்படாது.
  – குணா, தேசிய முன்னணி இதழ் குழு

  • ஓ! அதுதான் சேதியா. அதனால் தான் சாதி வெறியை உமிழும் (http://arulgreen.blogspot.com/2013/04/Dalit-Atrocity-against-Vanniyars-at-Marakkanam.html)

   இந்த இணைய பக்கத்திற்கு ”பசுமை பக்கங்கள்” என்று வைத்து அருள் என்பவர் அப்பட்டமான சாதி வெறியை தூண்டுகிறா___!

   உழைக்கும் மக்கள் வர்க்கமாக திரளக்கூடாது என்று சாதியை வைத்து பிளவை உண்டாக்குரா__ங்க இந்த சமூக விரோதிகள்.

 2. சாதி வெறியை தூண்டி, கலவரம் செய்ததை கண்டித்து, கைது செய்து சிறையில் அடைத்தால் மற்ற சாதி வெறிபிடித்து அலையும் வெறியர்களுக்கு பயம் இருக்கும்.

  • அப்படி செய்தால், கருணாநிதி முதல் வீரமணி வரை அனைவரும் வாழ்க்கை முழுவதும் கம்பி எண்ணிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்…!! (வினவும் கூட) பார்ப்பனர்களுக்கு எதிராக எல்லோருமே வன்மைப் பாராட்டுவது யார் கண்களுக்கும் தெரிவதில்லை – அவர்கள் அமைதியாக செல்வதனால். ராமதாசைப் போன்று, அடி தடி, உதையில் இறங்கினால் தான், ஜாதி வெறி கண்களுக்குப் படுகிறது.

   • அப்படி என்றால் பார்பனர்களுக்கு எதிராக இட ஒதிக்கீடை கொண்டுள்ள இந்திய அரசியல் அமைப்பை சட்டத்தை ஏற்றுக்கொண்ட அனைத்து குடி மக்கள், சட்டம் பயிலும் மாணவர்கள், நீதிபதிகள், காவலர்கள், அரசியல் வாதிகள் என அனைத்து தரப்பினரும் அரசியல் சட்டத்தை ஆதரிக்கின்றனர். எனவே எல்லோரும் சிறையில் இருக்க வேண்டியர்கள் அப்படித்தானே.

    /அவர்கள் அமைதியாக செல்வதனால்/ ஹா ஹா ஹா இவர்கள் சிறும்பான்பையினராக இருப்பதாலும், மற்றவர்கள் விழித்துக்கொண்டதாலும் இப்படி இருக்கிறார்கள் அதாவது அமைதியாக இருக்க வில்லை வேறுவழியில்லாததால் அடக்கி வாசிக்கிறார்கள். இவர்களின் சாதி/ வர்ணவெறியை திருவரங்கத்தில் உள்ள ரங்கனாதர் கோவிலில் பார்க்கலாம். சாமி சிலையை பார்ப்பனர் அல்லாதோர் தொட்டால் தீட்டி பட்டுவிடும் என்பதால் சிலை வேளியேவரும் போது சுற்றி வலையம் அமைத்து இவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பதை உணர்த்த சட்டை போடாமல் பூணூல் தெரியும்படி இருப்பார்கள். என்ன ஒரு கொடுமையான தீண்டாமை!

    கொடுமையான தீண்டாமை பாராட்டும் இவர்களை ஒழித்துக்கட்டாமல் எப்படி சமத்துவம் கிடைக்கும்?

 3. இவர் நடத்துவது ஜா”தீ” கட்சி இல்லையா. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜாதி தேவைபடுகிறது. ஜாதி பார்த்து தானே சீட் குடுக்கிறார்கள். ஆனால் வெளியில் மகா யோகியன்கள். ஆனால் வன்னியன் பேசினால் மட்டும் தப்பா?. தலித்துகள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாதது. எதுவும் பேசினால் வன்கொடுமை சட்டம்! இந்த ஒன்றே இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அடிப்படை. மற்ற சமூகத்தினர் எவரும் வாய் திறக்க மறுத்து மௌனிக்கும் நேரத்தில் தான் ராமதாஸ் அவர்கள் வெளிப்படையாக போராடுகிறார். ஜாதி இல்லை என்று சொல்பவர்கள், எந்த கோட்டாவில் படித்தார்கள், எந்த ஜாதியில் திருமணம் செய்தார்கள், தன மகனை (ளை) எப்படி சொல்லி பள்ளியில் சேர்த்தார்கள் என்று அவர்கள் மனசாட்சியை கேட்டுக்கொள்ளவும். தவறு அனைத்து பக்கமும் உள்ளது. இதில் ஒரு சாரரை மட்டும் குறை சொல்லி நடுநிலை / முற்போக்கு சாயம் பூசிக் கொள்ள நினைப்பது சரியல்ல. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு.

  • //இவர் நடத்துவது ஜா”தீ” கட்சி இல்லையா. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஜாதி தேவைபடுகிறது. ஜாதி பார்த்து தானே சீட் குடுக்கிறார்கள். ஆனால் வெளியில் மகா யோகியன்கள். ஆனால் வன்னியன் பேசினால் மட்டும் தப்பா?.//
   மிகவும் சரி..!!
   //தலித்துகள் என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளாதது. எதுவும் பேசினால் வன்கொடுமை சட்டம்!//
   மிகவும் சரி..!!
   ஆனால், ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது..!! ஒப்புக்கொள்கிறீர்களா?

 4. //ஆனால், ஒரு தவறுக்கு இன்னொரு தவறு சரியாகாது..!! ஒப்புக்கொள்கிறீர்களா?//

  தவறு எங்கு நடந்தது என்று அறியத் தான் நீதி விசாரணை வேண்டுகிறோம். அது தவறா ? பாதிக்கபட்டவர்கள் அனைவரும் மனிதர்கள் என்று பார்க்காமல் ஜாதியை பார்ப்பதேன் ?. இந்த சூழ்நிலையை சரியாக கையலவேண்டியது யார் ?

  தலித்துகளுக்கு வந்தால் ரத்தம். மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா

 5. பிராமணர்களின் கொடுமையால் பாதிக்கப்பட்ட வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அதிகபடுத்த பட வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்

  • அதே போல முற்போக்காளர்களின் கொடுமையால் பாதிப்புக்குள்ளாகும் பார்பனர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப் பட வேண்டும் என்பதே என்னைபோன்றோரின் வேண்டுகோள்

 6. சாதியின் பெயரால் எவன் அயோக்கியதனம் செய்தாலும் பொருத்துக்கொள்ள முடியாது. சட்டத்தின் முன்னே அனைவரும் ஒன்றே.தாழ்த்தப்பட்டவர்களை மேலும் தாழ்ந்தவர்கள் ஆக்குவதால் யாரும் உயர்ந்தவராகிவிட முடியாது. தலித் அல்லது வண்ணியர் உட்பட யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்களே. போதுமான சிறை வசதி மற்றும் காவல் துறையினரின் குறைவான எண்ணிக்கை காரனமாக,காலையில் கைது மாலையில் விடுதலை. 15 நாள் ரிமாண்டில் போட்டால் டப்பா டான்ஸ் தான். பஸ் கொளுத்துவது,அலுவலக சூறையாடுதல்,சாலை மறியல் இது தான் ஆர்ப்பாட்டமா. அவனவன் வாழ்வதற்கே போராடிக்கொண்டிருக்கும் வேளையில் குறுக்கு வழியில் தேடிய பணத்தை வைத்து அமைதியியை குலைக்கும் மணித மிருகங்களை வேட்டையாடவேண்டும். நடு நிலையான அரசின் நடவடிக்கை,சாதியற்ற காவல்துறை, நீதி தவறாத நீதித்துறை இப்போது வேண்டும்.
  சட்டதிருத்தஙகள் வேண்டுமென்றால்,சட்டமண்றங்களுக்கும், பாராளுமண்றங்களுக்கும் செல்லுகின்றவர்கள் வெறும் வேடிக்கை பார்க்கின்றவர்களாகவும்,கட்சி கொறடாக்கள் சொல்வதை கேட்டு வாய் திறக்காதவர்களும் தேவையில்லை.
  பொது சொத்து பொது மக்கள் சொத்து அதை சேதப்படுத்தும் எவனுக்கும்,செய்தவன் நமது சாதி என்று சப்பைகட்டு கட்டுவதை நிறுத்தினாலே போதும்,அடங்குவார்கள்.
  பிறப்பினால் வந்தது சாதி.எவனும் வேண்டிப்பிறப்பதில்லை ஒரு சாதியில்.
  அமைதித்தமிழகத்தை அடியோடு மாற்றிவிடுவார்கள்,சாதி வெறியர்கள்.
  உணர்வோம் ஒன்றாவோம்.

 7. ராமதாசுவை எதிர்த்து கட்டுரை எழுதும் வினவு. ராமதசுவை சாதி வெறியர் என எழுதி தான் (வினவு) ஒரு பொதுவான ஊடகம் காட்டிக்கொள்ள முயல்கிறது. ராமதாசு எப்படி வன்னியர்களுக்கு ஆதரவோ அதேபோல் மயாவதி,திருமா – தலித்களுக்கும்,யாதவ் (கோணார்)-முளாயம் சிங் யாதவ் ஆதரவு. இவர்கள் எல்லாம் அவரவர் சாதிக்கு நல்லவர்களே. அடுத்தவர் சாதிக்கு எதிரிகளே.

  ராமதாசுவை மட்டும் தூற்றி எழுதும் வினவு மற்ற சாதி தலைவர்களை (குறிப்பாக திருமாவை) ஒரு கட்டுரை கூட விமர்சித்து எழுதவில்லையே ஏன்?

 8. அனைத்து சாதிவெறியர்களையும் சாடி பல கட்டுரைகள் வினவில் வந்துள்ளன, சற்று பொறுமையாக தேடி படிக்கவும், பிறகு விமர்ச்சனம் செய்யவும்.

 9. ராமதாசுயும் குருவும் இல்லாயன்றால் எளிதிலே வன்னியரை விழ்திவிட(முடியது) லாம் என்று ஒரு எறும்பு என்னியதாம் ha ha ha வன்னியர் என்பவர்கள் மட்டுமே தமிழ்நாட்டில் சத்திரீயர்கள் நாங்கள் மூவேந்த , பல்லவ ,வழியினர் எங்களை எவனாலும் அழிக்க முடியாது

 10. மிஸ்டர்.உன்மை நீங்கள் மட்டுமே மூவேந்த,பல்லவ பரம்பரை இல்லை லிஸ்ட படிங்க.1.முக்குலத்தோர்[கள்ளர்,மறவர்,அகமுடையர்]2.வெள்ளாளர்[பொண்ணு கொடுத்த வகையில்]3.இசை வெள்ளாளர்[திருவாரூர் சோழர் மட்டும்]4.தேவேந்திர குல வேளாள மள்ளர்கள்[நில உடமை சமூகம் உள்ள அனைத்து அரச பரம்பரைக்கும்]5.உய்யகுண்ட ரவி குல சத்திரிய சான்றோர்[நாடார்]6.பார்க்கவ குலத்தார்[உடையார்,மூப்பனார்,நயினார்]7.பரதவர்[பாண்டிய குலத்திற்கும்,பிறகு மற்றதிற்கும்]8.முத்தரையர் 9.நாயர்[சேரர் குலத்திற்கு மட்டும்],ஏன் அப்படிங்கிறேன் ஜெயமோகன் தான் இருக்காறுல்ல மூணுக்கும் அப்ளை பண்ணிவைங்க.10.நாயுடு,நாயக்கர்[சோழ பரம்பரைக்கு புதுசா அப்ளை பண்ணியிருக்காங்க] இவங்க எல்லாருமே சேர,சோழ,பாண்டிய,பல்லவரின் நேரடி வாரிசுகள் மற்றும் ஆண்டபரம்பரைதான்.[விடுபட்ட ஆண்ட பரம்பரை இருந்தால் என்னை அருள் கூர்ந்து மன்னியுங்கள்]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க