privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்சஹாரா கொள்ளை குழுமத்தின் ஜனகனமண கின்னஸ் சாதனை !

சஹாரா கொள்ளை குழுமத்தின் ஜனகனமண கின்னஸ் சாதனை !

-

சஹாரா போர்ஸ் இந்தியா
பார்மூலா ஒன் கார் பந்தய குழு: சஹாரா போர்ஸ் ஒன் உரிமையாளர்கள் சஹாரா குழும சேர்மன் சுப்ரதோ ராயும் சாராய வியாபாரி விஜய் மல்லையாவும்

ந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சரான சஹாரா இந்தியா குழுமம் நாட்டு மக்களிடம் தேசபக்தியைத் தூண்டும் வகையில் ஒரு விளம்பரத்தை மே 1 அன்று எல்லா நாளிதழ்களிலும் வெளியிட்டிருந்தது. அதன்படி மே 6 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நாடு முழுவதுமுள்ள தமது அலுவலகங்கள் மூலமாக 11 லட்சம் பேரை தேசிய கீதத்தை சேர்ந்திசையாகப் பாட வைத்து, அதனை மூலம் உலக சாதனை படைக்க திட்டமிட்டுள்ளதாம் சஹாரா. அதில் தேசபக்தி உள்ள உங்களைப் போன்ற இந்தியர்களையும் இணைத்து கின்னசுக்கு தயாராகும்படி அறைகூவி அழைக்கிறது சகாரா.

இந்திய கிரிக்கெட் அணி மட்டுமின்றி தேசிய ஹாக்கி அணி, ஃபார்முலா ஒன் கார் பந்தய குழு, ஐபிஎல் கிரிக்கெட்டின் புனே வாரியர்ஸ், கட்டுமானத் துறை என 7 வகையான தொழில்களில் சக்கைப்போடு போடும் சகாராவின் வளர்ச்சி செபி மற்றும் ரிசர்வ் வங்கியாலேயே சந்தேகத்துடன் தான் பார்க்கப்படுகிறது. 35 ஆண்டுகளுக்கு முன் லக்னோவில் சுப்ரதோ ராய் என்பவரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் கடன் பத்திரங்களை மிகக் குறைந்த விலைக்கு வெளியிட்டு தோராயமாக 4 கோடி மக்களை பங்கெடுக்க வைத்து தொழிலுக்கான மூலதனத்தை திரட்டியதாம்.

2011 இல் மொத்த வருமானம் மட்டும் ரூ.73,000 கோடியாம். அமெரிக்காவில் மன்ஹட்டன் நகரில் ஓட்டலை விலைக்கு வாங்கியதன் மூலம் வால் ஸ்டீரிட் ஜர்னலின் பாராட்டையும் பெற்றுள்ளது இந்நிறுவனம். சுப்ரதோ ராய் மகனது திருமணம் பல நூறு கோடி ரூபாய் செலவில் நடந்த போது பாரதீய ஜனதாவின் ஆட்சி நடைபெற்றது. அத்வானி உள்ளிட்ட பல மத்திய அமைச்சர்கள் அந்த திருமணத்தில் பங்குபெற்றனர். கூடவே முலாயம் சிங் மற்றும் அமர்சிங்கும் பங்கேற்றனர். சகல கட்சி பிரமுகர்களையும் கைக்குள் போட்டு வைத்திருக்கும் சுப்ரதோ ராய் மீது செபி போன்ற அமைப்புகள் சந்தேகம் கொள்ள காரணம் இவை ஹவாலா மோசடிப் பணம் தான் என்பதற்கான சாத்தியங்கள் தான்.

‘எங்க‌ள‌து வேக‌மான‌ வ‌ள‌ர்ச்சியைப் பிடிக்காத‌ அதிகார‌ அமைப்புக‌ள் எங்க‌ள் மீது தொட‌ர்ந்து அவ‌தூறு கிள‌ப்புகிறார்க‌ள்’ என்கிற‌து ச‌காரா. 2008-ம் ஆண்டு ‘சஹாரா இந்தியா பைனான்சியல் நிறுவனத்தின் வைப்புத் தொகை திட்டத்தை ரத்து செய்து, திரட்டிய பணத்தை திருப்பிக் கொடுத்து விடும்படி’ ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. அதே ஆண்டு மார்ச் மாதம் சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்பொரேஷன், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்பொரேஷன் ஆகிய நிறுவனங்களின் பெயரில் பங்குகளாக மாற்றிக் கொள்ளக் கூடிய கடன் பத்திரங்களை விற்று நிதி திரட்ட ஆரம்பித்தது. அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2.2 கோடி பேருக்கு ரூ 17,700 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களை விற்றிருக்கிறது.

‘முதலீட்டாளர்கள் பற்றிய விபரங்களை முறையாக பதிவு செய்யவில்லை, செபி கேட்ட தகவல்களை கொடுக்கவில்லை’ என்று செபி இந்த திட்டத்தை ரத்து செய்தது. அதை எதிர்த்து சஹாரா பதிவு செய்திருந்த மேல் முறையீட்டை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் திரட்டிய பணத்தை வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திரும்பக் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

க‌ருப்பு ப‌ண‌மா, ஹ‌வாலா ப‌ண‌மா என‌த் தெரியாத‌ நிலையில் பொய்யாக‌ கோடிக்க‌ண‌க்கான‌ வாடிக்கையாள‌ர்க‌ளை சேர்க்க‌ வேண்டிய‌ நிர்ப்ப‌ந்த‌ம் ச‌காரா நிறுவ‌ன‌த்துக்கு ஏற்ப‌ட்டுள்ள‌து.

இர‌ண்டு குற்ற‌த்ங்களையும் காணாம‌ல் போக‌ வைக்க‌ கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுதான் இந்த‌ ஜ‌ன‌க‌ண ம‌ன‌க‌ண‌ வின் சேர்ந்திசை கின்ன‌சு சாதனை. அதாவ‌து அண்ண‌ன்க‌ள் தாம் அடிச்ச‌ கொள்ளையில் கொஞ்சம் அம்ம‌ன் கோவிலுக்கு கூழ் ஊற்றி ஊரின் மனம் குளிர்ந்த புரவலராக பிளக்ஸ் பேனர் வைத்து வலம் வருவது போல சகாராவும் வருகிறது. பாகிஸ்தான் வீர‌ர்க‌ள் இந்திய‌ ராணுவ‌ வீர‌ர்க‌ளைக் கொன்றது, ம‌ற்றும் சீன‌ ஊடுருவ‌லால் கொதித்துக் கொண்டிருந்த‌ பாஜ‌க‌ வின் பார‌த் மாதா கீ ஜெய் இப்போது ச‌காரா வின் பேட்ஜ் இன் கீழ் முழ‌க்க‌மிடுகிற‌து.

சஹாரா கிரிக்கெட்விளம்பரத்தின் முத‌ல் வ‌ரியிலேயே போட்டியாக‌ அவ‌ர்க‌ள் குறிப்பிடும் கின்ன‌சு சாத‌னை பாகிஸ்தான் தேசிய‌ கீத‌த்தை ஒரே இட‌த்தில் 42,813 பேர் பாடிய‌தைத்தான். லக்னோ ச‌ஹாரா இந்தியா ப‌ரிவார் நிறுவ‌ன‌த்தின் ஊழிய‌ர்க‌ள் 1 ல‌ட்ச‌த்து ஆயிர‌ம் பேர், ஒரே யூனிஃபார்மில் மே 6 இல் பாட‌ இருக்கிறார்க‌ளாம். நாட்டில் 4,512 ச‌காரா அலுவ‌ல‌க‌ங்க‌ளில் சுமார் 10 ல‌ட்ச‌ம் ஊழிய‌ர்க‌ள் பாடி இர‌ண்டாவ‌து உல‌க‌ சாத‌னை ப‌டைக்க‌ இருக்கிறார்க‌ளாம். ஒரு ல‌ட்ச‌ம் மாண‌வ‌ர்க‌ள், 7 மாநில‌ங்க‌ளின் பெரும்பாலான‌ ராணுவ‌ வீர‌ர்க‌ள் என‌ திட்ட‌மிட்டுள்ள‌ இந்த‌ ப‌ஞ்ச‌ர‌த்ன‌ கீர்த்த‌னையில் நீங்க‌ளும் ப‌ங்கு பெற‌லாம். வீடு ரோடு என்றெல்லாம் பாகுபாடு இல்லை. ஃபேஸ்புக், ட்விட்ட‌ர், யூ டியூப் என‌ எப்ப‌டியாவது ப‌ட‌ம் பிடித்து அப்லோடு செய்து சாத‌னையின் அங்க‌மாக‌லாம் என‌ இந்திய‌ர்க‌ளுக்கு தேச‌ப‌க்தியை போதிக்கிற‌து ஹ‌வாலா புக‌ழ் ச‌காரா.

ஸ்வ‌ர‌த்தோடு இசைந்திருக்கும் ப‌ண் போல‌ ம‌க்க‌ள் த‌ம‌க்குள் தேசிய‌ உண‌ர்ச்சியின் கீழ் அணிதிர‌ண்டு ஒன்றிணைய‌ வேண்டும் என்கிற‌து விள‌ம்ப‌ர‌ம். த‌ன்னை மேனேஜிங் ஒர்க்க‌ர் என்று அழைத்துக் கொள்ளும் சுப்ர‌தோ ராய் ஜ‌ன‌க‌ன‌ ம‌ண‌ பாட‌த் துவ‌ங்குவார். மாண‌வ‌ர்க‌ள் அட்டென்ச‌னில் நிற்பார்க‌ள். ஏழு மாநில‌ங்க‌ளின் ராணுவ‌ வீர‌ர்க‌ளும் தான். அவ‌ர்க‌ளுக்குத் தெரியாது, ‘தேச‌த்தின் எதிரி சீனாவோ பாகிஸ்தானோ அல்ல‌, சகாராவைப் போன்ற தரகு முதலாளிகள்தான்’ என்று. அவ‌ர்க‌ள் முதுகுக்கு பின்னே ச‌காரா கொள்ளையின் கீழ் பார‌தா மாதா கீ ஜே என்று குவியும் அண்ணா ஹசாரே புகழ் மெழுகுவ‌ர்த்தி அம்பிகள் – மாமிகள் தேசிய கீதத்தை பாடப் போகிறார்கள்.

ஒரு கொள்ளைக்காரன்தான் தேசிய கீதம் பாடுவதில் சாதனை படைக்கப் போகிறான் என்றால் அந்த தேசத்தின் அருகதை என்ன?

  1. பார்ப்பனர்கள், ஹிந்துத்துவா, ஆதிக்க சாதிவெறி போன்ற தலைப்புகள்தான் வினவில் சூடாகின்றன. கார்ப்பரேட் கொள்ளையர்கள் மக்கள் மனதில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை போலிருக்கிறது. ஆச்சரியம்தான்!!

    • ரிஷி,

      இதிலிருந்து என்னா தெரியுது நம்ம பயபுள்ளைகள்ட மதவெறி, சாதிவெறிய ஊதி விட்டா எதையுமே கண்டுக்க மாட்டாங்க. அவ்ளோ ஃபயர் பக்தி. அப்புறமென்ன நம்ம கார்ப்பரேட்டுகாரர்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான், ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் மாதிரி. இது படிச்சவன் படிக்காதாவன் வித்தியாசமெல்லாம் நஹி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க