privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கராமதாஸ் கைது : கருணாநிதி மறைமுக ஆதரவு ?

ராமதாஸ் கைது : கருணாநிதி மறைமுக ஆதரவு ?

-

ராமதாஸ் கைது குறித்து தினமணியில் வந்த செய்தியைப் பார்த்து விடுவோம் :

“ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும்” என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாமக தலைவர் ராமதாஸை விடுதலை செய்ய வேண்டும், அவர் நாவடக்கம் இல்லாமல் பேசுவது இயல்புதான்; மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய வேண்டும். பாமகவினர் நாவடக்கத்துடன் பேசக் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக இந்தநடவடிக்கை எடுக்க வேண்டும்…. ” என்றார்.

கருணாநிதி, ராமதாஸ்ஓட்டுப் பொறுக்கி அரசியலில் கூட்டணிகளின் மூலம்தான் காலம் தள்ள முடியும் என்பது கடந்த பதினைந்து ஆண்டுகளாக உருவாகியிருக்கும் நிலை. இதனால் தமிழகத்தில் கூட்டணி என்பது வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஒன்றாக நம்பப்படுவதால் இத்தகைய கூட்டணிகளில் மாறி மாறி இடம் பிடித்து பிழைத்து வந்த பாமக-வை கருணாநிதி எப்போதும் பகைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்.

வாக்கரசியலின் லாப நட்டம் பார்க்காமல் கருணாநிதி வாய்தவறி பேசும் ஒரு விசயம் இந்துத்துவ எதிர்ப்புதான். அதுவும் கூட அவரைத் தவிர ஏனைய திமுக தலைவர்கள் விரும்புவதில்லை என்பதால் சமீப காலங்களாக அதையும் அடக்கித்தான் வாசிக்கிறார். மற்றபடி சங்கராச்சாரி கைதைக்கூட திமுக கொண்டாடவில்லை என்பதும் அவரையும் விடுதலை செய்ய விரும்பியதும் நமக்குத் தெரியும். சேது சமுத்திரத் திட்டத்தைக் கூட வெறும் பொருளாதார பலன்களைச் சொல்லித்தான் திமுக ஆதரிக்கிறதே அன்றி ராமர் பாலம் குறித்த பார்ப்பனிய புளுகுகளை அம்பலப்படுத்தி அவர்கள் பேசுவதில்லை.

அந்த வகையில் திமுக அனைத்து விதமான சமூக தட்டுக்களுடன் அவை அநியாயமாக இருந்தால் கூட இணைந்து செல்லவே விரும்புகிறது. திராவிட இயக்கத்தின் சீரழிந்த இந்த நிலை ஒருபுறமிருக்கட்டும்.

ராமதாஸ் எதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்? தலித் மக்கள் மீது துவேஷத்துடன் பேசினார் என்றாலும் அதை தவிர்த்த மற்ற சட்ட பிரச்சினைகளை வைத்து கைது செய்திருக்கிறது ஜெயா அரசு. ராமதாஸ் சமீப காலமாக சாதி வெறியையும், ஆதிக்க சாதி சங்க தலைவர்களை வைத்து கூட்டங்கள் நடத்தியதையும் கருணாநிதி கண்டித்ததே இல்லை. சொல்லப் போனால் கொங்கு வேளாளர் கட்சியுடன் சென்ற தேர்தலில் கூட்டணி வைத்ததே திமுக தானே.

திமுகவைப் பொறுத்த வரை சாதிக் கட்சிகள் தமது வலிமையை வாக்கு எண்ணிக்கையில் காண்பிக்கும் பட்சத்தில் வரவேற்று சேர்த்துக் கொள்ளும். பலமில்லை என்றால் சீண்ட மாட்டார்கள். ஆக இத்தகைய கணக்குகளை வைத்தே கருணாநிதி தற்போது ராமதாசுக்கு ஆதரவாக அறிக்கை விட்டிருக்கிறார். தேமுதிக வருகிறதா இல்லை என்ற நிச்சயமின்மை இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என்று ராமதாசுக்கும் ஒரு துண்டு போட்டு வைக்கிறார்.

அந்த அறிக்கையில் நாவடக்கம் குறித்துதான் அவர் கவலைப்படுகிறார். அதாவது திமுக குறித்தும், கருணாநிதி குறித்தும் காடுவெட்டி குரு முதலான அற்பங்கள் அநாகரீகமாக பேசுவதுதான் அவரது கவலை. அது போல தன்னை மட்டுமல்ல மற்ற கட்சிகளையும் நாகரீகமாக பாமக பேசவேண்டும் என்பதுதான் அவரது வேண்டுகோள்.

மற்றபடி “நான் என்ன மேளம் அடிக்கிறவனா” என்று தலித் மக்களை இழிவு படுத்திய காடுவெட்டி குருவின் சாதித் திமிரெல்லாம் அவருக்கு கவலை இல்லை. தாங்கள் நினைத்தால் தமிழகத்தை எரித்து விடுவோம் என்று ஆதிக்க சாதி வெறியின் ‘வலிமையை’ அவர் தற்பெருமையாக பேசியதும் பிரச்சினை இல்லை. ஒருவேளை தன்னைவிட தாழ்த்தப்பட்ட மக்கள் மலிவானவர்கள் என்று கூட கருணாநிதி நினைத்திருக்கலாம்.

ஆனாலும் கருணாநிதி தன்னையறியாமலே கூட சில நல்ல விசயங்களை செய்யவும் வாய்ப்பிருக்கிறது. சமச்சீர் கல்வி, அண்ணா நூலகம், தலைமைச் செயலகம் தொட்டு பல்வேறு பிரச்சினைகளில் கருணாநிதிக்கு எதிர் தரப்பில் ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்ட ஜெயலலிதாவை நாம் அறிவோம். கருணாநிதியும் அறிவார்.

அதன்படி தான் ராமதாசை விடுதலை செய்யச் சொன்னால் அதற்கு நேரெதிராக அவர் மீது குண்டர்கள் சட்டம் போடக் கூட வாய்ப்பிருக்கிறது என்பது கருணாநிதிக்கு தெரியாதா?

அதனால் உண்மையில் கருணாநிதி பாமக தலைவர்கள் கைதை ஆதரிக்கிறாரா? அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை என்பதால்தான் இப்படி வஞ்சப்புகழ்ச்சி பாணியில் சொல்கிறாரா? இந்தக் குழப்பம் உங்களுக்கு இருக்கிறதா?