Wednesday, February 21, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஐபிஎல்: மங்காத்தாவே இனி பாரதமாதா !

ஐபிஎல்: மங்காத்தாவே இனி பாரதமாதா !

-

இந்தியன் பப்பெட்ஸ் லீக்
ஐ.பி.எல் – இந்தியன் பப்பெட்ஸ் லீக் (நன்றி : இந்தியா டுடே)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் பல இலட்ச ரூபாய்களை சூதாட்டக்காரர்களிடம் வாங்கிக் கொண்டு ‘ஸ்பாட் ஃபிக்சிங்’ மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சென்ற வருடம் பணம் வாங்கிக் கொண்டு சில வீரர்கள் ஆட்டத்தை விட்டுக்கொடுத்ததை இந்தியா டிவி அம்பலப்படுத்தியிருந்தது. அவர்களெல்லாம் புதுமுகங்கள், மூத்த வீரர்கள் இல்லை என்ற குறையை ஸ்ரீசாந்த் போக்கி விட்டார்.

ஐபிஎல்லின் ஒரு சீசனது மதிப்பு ரூ 20,000 கோடி இருக்குமென்றால் அதன் மொத்த மதிப்பு ரூ  50,000 கோடியைத் தாண்டுகிறது. 9 அணிகளின் உரிமையாளர்களும் நாடறிந்த தரகு முதலாளிகள்.

குற்றங்களையே பாதையாக்கி ரிலையன்ஸின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அம்பானியின் மும்பை இந்தியன்ஸ், ஊழியர்களின் ஊதியத்தையும் பொதுத்துறை வங்கிகளையும் கொள்ளையிட்ட மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ், சிமெண்ட் மூட்டையில் பகற்கொள்ளையனும், ஆந்திரத்து ஓய்.எஸ்.ஆர்.ரெட்டியுடன் சேர்ந்து கொள்ளையடித்த வழக்கில் விசாரிக்கப்படுபவருமான இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் சென்னை சூப்பர் கிங்ஸ், மக்கள் பணம் ரூ 25,000 கோடியை ஏப்பம் விட்டிருக்கும் சஹாரா நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கும் புனா அணி… என ஒவ்வொரு அணி முதலாளியும் கிரிமினல்தான்.

ஸ்பாட் பிக்சிங்
நன்றி : டெக்கான் குரோனிக்கிள்

தற்போதைய சூதாட்டத்தின் பின்னே தாவூத் இப்ராகிம் இருப்பதாகவும், அது தேசத்துக்கு ஆபத்து என்றும் இந்த விவகாரத்துக்கு முலாம் பூசப்படுகிறது. பங்குச் சந்தை, நிதிச்சந்தை தொடங்கி போதைமருந்து, மாபியா வேலைகள் வரையிலான அனைத்தும் இரண்டறக் கலந்த உலக நிதிமூலதனத்தின் சூதாட்டக்களத்தில் ஐ.பி.எல் ஒரு கவர்ச்சிகரமான சூதாட்டம்.

விளையாட்டு என்ற சொல்லின் பொருளையே ரத்து செய்து, அதனுடன் சேர்ந்திருந்த தேசியம் தொடர்பான ஜிகினா வேலைகளையும் உதிர்த்துவிட்டு, வீரர்களை கூலிப்படையாகவும் முதலாளிகளை அணியின் தலைவர்களாகவும் மாற்றிவிட்ட இந்த ஐ.பி.எல் இல் விளையாட்டுணர்வு என்பதற்கு கடுகளவும் இடம் கிடையாது. புரவலர்கள், தொலைக்காட்சி உரிமை, விளம்பரங்கள், நிறுவனங்களின் தூதர்கள், ஆபாச நடனங்கள் என்று ஐபிஎல் முழுவதும் பணம்தான் ஆட்சி செய்கின்றது. ஒரு சூதாட்டத்துக்குரிய விறுவிறுப்பை வழங்கும் வகையில்தான் T20 போட்டியின் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

வீரர்களை விலைக்கு வாங்குவது, ஏலம் விடுவது, சிண்டிகேட் அமைப்பது உள்ளிட்டு ஐபிஎல்லின் அமைப்பு முழுவதும் மர்மங்களால் ஆனது. நாட்டுப்பற்று, விளையாட்டுணர்வு ஏதும் இல்லாமல் அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தன்னை விற்றுக் கொள்ளும் ஒரு ஆட்டக்காரன், ஒரு சூதாடிக்கு தன்னை விற்றுக்கொண்டதில் என்ன ஒழுக்க கேடு வந்துவிட்டது? நாட்டுப்பற்று, இறையாண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற எல்லா விழுமியங்களையும் பத்தாம்பசலித்தனமானவை என்றும் காலத்துக்கு ஒவ்வாதவை என்றும் கழித்துக்கட்டி வரும் மறுகாலனியாக்க சூழலில் கிரிக்கெட் வீரர்களின் ஒழுக்கம் கெட்டுவிட்டது பற்றி போலியான ஒரு அதிர்ச்சியை தெரிவிப்பதை ஒரு நகைச்சுவை என்றும் சொல்லலாம். பித்தலாட்டம் என்றும் அழைக்கலாம்.

சென்ற ஐபிஎல்லின் சூதாட்ட வர்த்தகம் ரூ 5000 கோடி  என்றார்கள். இந்த ஆண்டு அது இரண்டு மடங்காகியிருக்கும். இங்கிலாந்து, வளைகுடா, பாகிஸ்தான், மும்பை என்று ஒருங்கிணைத்து சூதாடும் இந்த நிறுவனங்கள் தொழில் நுட்ப புரட்சியின் உதவியோடு அதை பரவலாக கொண்டு சென்றிருக்கின்றன.

தற்போதைய செய்திகளின்படி சூதாடியவர்கள் கொலை, திருட்டு, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடும் செய்திகள் ஏராளம் வருகின்றன. தங்களுடைய கிரிமினல் பண்பாட்டை மக்கள் மத்தியில் இறக்கி விட்டு வெற்றி கண்ட மகிழ்ச்சியில் ஆளும் வர்க்கம் திளைக்கிறது. பல்லாயிரம் கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியிருக்கும் சர்வகட்சி ஓட்டுப் பொறுக்கிகளும், அதிகார வர்க்கமும், அந்த ஊழல்களில் ஆதாயம் பெற்ற முதலாளிகளுக்கும் கூட இந்த விவகாரம் நிச்சயம் மகிழ்ச்சி அளித்திருக்கும். ஊழல், ஒழுக்க கேடு, கொள்ளை, சூது போன்ற தேசிய விளையாட்டுகளில் தாங்கள் மட்டும் ஈடுபடவில்லை என்ற அவர்கள் காட்ட முடியும். இதைப் பணம் கட்டி வேடிக்கை பார்த்து, கைதட்டுவதற்கு கோடிக்கணக்கில் மக்கள் இருப்பதால் இனி மங்காத்தாவே பாரதமாதா என்று அவர்கள் அறிவிக்கவும் முடியும்.
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மே 2013
________________________________________________________________________________

 1. ஐபிஎல்-யையே தடைசெய்ய வேண்டியதில்லை என மனுஷபுத்திரன் தொடர்ந்து தொலைக்காட்சிகளில் கூறிவருகிறார். அப்போது இந்தியா சட்ட அமைப்பு தப்புன்னா கலைத்திட முடியுமா? என இந்திய அரசியலமைப்புக்கு ஒளிவட்டம் போடும் மனுஷபுத்திரன் அவர்களுக்கு ஒரு கேள்வி….

  தினமணி போன்ற ஊடகங்களும், பல பத்திரிக்கையாளர்களும் கூட இன்று ஐபிஎல்-யை தடை செய்ய வேண்டும் என்றும் அதற்கான காரணமாக பலவற்றை சொல்லும் போது அது குறித்து பதில் அளிக்காமல் மேற்கண்ட உதாரணம் கொடுத்து பேசுவது எந்த வகையில் சரியாக இருக்க முடியும்.

  வெளிப்படையாக இந்திய அரசியல் அமைப்பு கூட புளுத்து நாறும் காலத்தில்….
  ஐபிஎல் என்பது இன்று

  முதலாளி கூட இன்னார் என தெரியாமல் வழக்கு மூலம் போட்டி நடைபெறுவதும்..
  காங்கிரஸ், பிஜேபி கட்சி தலைவர்கள் மட்டுல்ல பிசிசிஐ சீனிவாசன் கூட ஒரு ஐபிஎல் ஓனர் என…
  சூதாட்டத்திலும் ஒரு சூதாட்டம் என புளுத்து நாறுகிறது.

  இத்தகைய ஐபிஎல்-யை கிரிக்கெட்-ன் தேசவெறி இல்லாமல் ரசிக்க பழக்குவது, மக்கள் விரும்பு பார்ப்பது, வாழ்க்கையுடன் கலந்தது, மற்ற விளையாட்டுகளை அழித்தது அரசு தான் கிரிக்கெட் கிடையாது என ஐபிஎல்-க்கு வக்காலத்து வாக்குவது வெட்கக்கேடானது.

 2. the cartoons are really impressive and elucidates the condition of players without any words.. appreciate the creativeness of the cartoons and the writer of this article!!!!!

 3. ஆனானப்பட்ட அரசியல் தலைவர்களெ ஊழல் பண்ணி பணம் தேடும் பொழுது ச்ரிஷெட் வீரர்கள் பணம் பன்னுவது பாவமா? சூதாட்டமும் ஒரு விளையாட்டுதானெ.இதில் ஊழல் என்ன இருக்கு?

 4. பிசிசிஐ சிறீனிவாசன் : தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிசிசிஐ கொண்டு வர முடியாது. ஏன் எனில் இது தனியார் அமைப்பு . நாங்கள் அரசிடம் இருந்து எந்த வித நிதியையும் பெறுவது இல்லை .

  *********

  பிசிசிஐ என்பதே தனியார் அமைப்பு என்பது இன்று பல பேருக்கு தெரியாது . இன்றும் சாமான்ய மக்கள் இதனை இந்திய அரசின் அதிகாரப் பூர்வ அமைப்பு என்று நினைத்து கொண்டு இருக்கின்றனர்.
  இந்த பிசிசிஐ அமைப்பை பொது வெளிக்கு கொன்று வருவதர்க்கான ஒரு சிறு துரும்பாகிய தகவல் அறியும் உரிமை சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதில் இருந்தே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை புரிந்து கொள்ளலாம் .

  இந்த பிசிசிஐ அமைப்பு தனியார் அமைப்பு என்றால் ,எதற்க்காக இந்த அமைப்பில் உள்ள வீரர்களை இந்தியாவின் அதிகாரப்பூர்வ வீரர்கள் என்று அழைப்பது?

  இந்த அமைப்பே தனியார் முதலாளிகளால் நடத்த படுவதால், இந்த அமைப்பையே அரசு எடுத்து நடத்த வேண்டும் . கண்டிப்பாக ஐ பி ல் போட்டிகளை தடை செய்ய வேண்டும்.

 5. ஐபிஎல் –ஐ ஆதரிக்கும் மனுஷ்யபுத்திரன் போன்றோருக்கு இதில் தனிப்பட்ட ஆதாயம் இருப்பதாக கருத முடிகிறது. ஹைதரபாத் சன்ரைசர்ஸ் விளையாடிய ஒரு ஆட்டத்தின் போது அவருக்கு சில அன்பளிப்புகள் வந்ததாக முகநூலில் ஒப்புக்கொண்டார்.

  பொதுவாக இவர்களுக்கு ஐபிஎல் என்பது ஒரு கச்சேரி சீசன். இதனை ஒட்டி நடைபெறும் விவாத விளையாட்டுகளில் பங்குபெற சான்ஸ் கிடைப்பது இவர்களுக்கு பெரிய விஷயம்.
  சினிமாவில் நடிக்க கிடைக்கும் வாய்ப்பை பெறுபவரது மகிழ்ச்சியும், பரவசமும் இவர்களுடையது. பொருத்தமில்லாத முகபாவங்களை வேறு இப்போது காட்ட முயற்சிக்கிறார்கள். ஒரு பிரச்சினைக்கு தம்மை அழைக்கும் போது ”அது பற்றி பேச வேறு தகுதியானவர்கள் இருக்கிறார்கள்; எனவே அவர்களை அழையுங்கள்” என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்.

 6. //பிசிசிஐ சிறீனிவாசன் : தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிசிசிஐ கொண்டு வர முடியாது. ஏன் எனில் இது தனியார் அமைப்பு . நாங்கள் அரசிடம் இருந்து எந்த வித நிதியையும் பெறுவது இல்லை//

  மிகத்தவறான கருத்து! விளையாட்டு அமைச்சகத்தால், அஙீகரிக்கப்பட்ட, விளையாட்டு ஆர்வலர்களின் கூட்டமைப்பு என்பதுதான் சரி! சாதாரண பி அய் எல் எனப்படும், பொதுநல மனு தாக்கல் செய்து, இந்த அமைப்பினை அரசே ஏற்க செய்யலாம்! அப்பொது மட்டும் ஊழல் ஒழிந்து விடுமா?

  • நண்பரே , பிசிசிஐ என்பது தனியார் அமைப்பு என்பது நான் கூறிய கருத்து அல்ல, அதன் தலைவர் ஸ்ரீனிவாசனே கூறிய கருத்து .  தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிசிசிஐ கொண்டு வர வேண்டும் என்ற ஒரு பத்திரிக்கியாலரின் கேள்விக்கு ஸ்ரீனிவாசன் அளித்த பதில் தான் இது. 
   மேலும் பிசிசிஐ, ஐ பி எல்  இவை விளையாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் கட்டுபடுத்த முடியாது என்று விளையாட்டு துறை அமைச்சர் கூறியிருக்கிறார். 
   பிசிசிஐ அமைப்பை அரசே ஏற்றால் ஊழல் ஒழியாது ஆனால் இதனை கேள்விக்கு உட்படுத்தும் அதிகாரம் வரும். தற்பொழுது பிசிசிஐ அமைப்பின் வரவு, செலவு கணக்குகள் வெளிப்படையாக காட்டப்  படுகிறதா? ஐ பி எல் அணிகளின் முதலாளிகள் யார் யார் என்ற விவரம் முழுமையாக தெரியுமா? பிசிசிஐ அமைப்புக்கு வருமான வரி விளக்கு அளிக்கப்படுவதாக யாரோ தொலைக்காட்சியில் சொன்னார்கள் அது உண்மை என்றால் எதற்க்காக தனியார் முதலாளிகள் லாபம் ஈட்டுவதற்கு அரசு சலுகை காட்ட வேண்டும்.. 
   பிசிசிஐ என்பது தனியார் முதலாளிகளால் நடத்தப்படும் ஒரு தொழில்.

 7. கள்ள சாரயத்தை ஒழிப்பதாக கூறி, அரசு சாராயம் வந்தது! எவ்வளவு இழந்தாலும், குடிமககள் குதூகலமாக இல்லையா? அது போலத்தான் கிரிகெட்டும்! அது உழைக்காத, சுரண்டும் வர்க்கத்தின் சூதாட்டமாக மாறிவிட்டது! பெண்கள் சீரியல் பார்ப்பது போல, வெட்டி ஆபீசில் வேலையற்ற ஆண்களின் அரட்டைக்கு கருப்பொருள் ஆகிவிட்டது!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க