privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்பாகலூர் : மின்வாரிய அதிகாரிகள் பணிந்தனர் !

பாகலூர் : மின்வாரிய அதிகாரிகள் பணிந்தனர் !

-

சூர் தாலுக்கா பாகலூர் அருகே லிங்காபுரம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள விவசாயிகள் பெரும்பாலும் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். வறட்சியினால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தோழர் ரவிச்சந்திரன்
பு.ஜ.தொ.மு-ன் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் விவசாயிகளிடையே எழுச்சியுரையாற்றுகிறார்.

இந்நிலையில், அடிக்கடி மின்வெட்டினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு டிரான்ஸ்ஃபார்மரில் பழுது ஏற்பட்டதால் மேலும் நெருக்கடியானது. தக்காளி, பீட்ரூட், கேரட் போன்ற பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர். குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டு  3 கி.மீ. தொலைவுவரை சென்று தண்ணீர்எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கால்நடைகளுக்கு தென்பெண்ணையாற்றில் வரும் கழிவு நீரினை கொடுக்க வேண்டிய அபாயம் ஏற்பட்டது. 12 நாட்களுக்கும் மேலாக இந்த நிலை நீடித்தது. இந்நிலையில், ஊர் பொதுமக்களும் விவசாயிகளும் பாகலூர் மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. முக்கியமாக இங்குள்ள மக்கள் படிப்பறிவற்ற, தமிழ் தெரியாத மக்கள் என்ற கோணத்தில் இவர்களை எளிதாக ஏமாற்றிவிடலாம் என்று அதிகாரிகள் கருதிக் கொண்டனர். மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய அதிகாரிகள் மக்கள் சேவை செய்யாமல் ஊர்சுற்றித் திரிகின்றனர். ஃபோர்மென், ஜே.இ., ஏ.இ., போன்ற அதிகாரிகளின் செல்போன்கள் பலநாட்களாக சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்தன. இது மக்களுக்கு மேன்மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்கள், தலைவர்கள் இது குறித்து விவாதித்து மின்சாரவாரிய அதிகாரியை முற்றுகையிட திட்டமிட்டனர். இவர்களிடையே ஒற்றுமையின்மை காரணமாக முற்றுகைப் போராட்டம் நடக்காமல் இப்பிரச்சனை நீடித்துக்கொண்டே சென்றது. டிரான்ஸ்பார்மரும் வந்தபாடில்லை. பிரச்சினையும் தீர்ந்தபாடில்லை. இதனால், நொந்துபோன பொதுமக்கள் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்பினரிடம் முறையிட்டனர். ஓட்டுக்கட்சித் தலைவர்களை நம்பினால் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று கருதியவர்கள் பிரச்சனை தீராததால் புரட்சிகர அமைப்பினர்தான் மக்கள் ஒற்றுமையைக் கட்டியமைத்து போராடுவார்கள் என்று உணர்ந்தனர். கட்சி வேறுபாடின்றி புரட்சிகர அமைப்புகளின் தலைமையை ஏற்று போராட ஊர் பொதுமக்கள் உறுதியளித்தனர்.

தினகரன் செய்தி
16.05.2013 அன்று தினகரனில் வெளிவந்த செய்தி

15-05-2013 அன்று காலை 9.30 மணியளவில் பு.ஜ.தொ.மு.வின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர்.ரவிச்சந்திரன், வி.வி.மு. தோழர்.ரமேஷ் தலைமையில் திரண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாகலூர் மின்வாரிய அலுவலகத்தை கோபத்துடன் முற்றுகையிட்டனர். மின்வாரிய நுழைவாயிலில் உட்கார்ந்து முழக்கமிட்டனர். அவ்வழியாக சென்று கொண்டிருந்த விவசாயிகள், மின்கட்டணம் செலுத்த வந்த விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் திரள்வதைப் பார்த்து ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் இப்போராட்டத்திற்கு ஆதரவாக அதிகாரிகளிடம் சென்று சத்தம் போட்டு அதட்டினர். இதனைப் பார்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், இவ்வளவு நாளாக இவர்கள் எங்கு சென்றார்கள் என்று ஆத்திரத்துடன் கத்தத் தொடங்கியவுடன் அவர்கள் பின்வாங்கினர்.

இனியும் பொறுத்திருந்து பயனில்லை என்ற நிலையில் நுழைவாயில் கேட்டை மூடி பூட்டுப் போட்டனர் மக்கள். மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளை சமாதானப்படுத்த முயற்சித்தனர். போலீசும் அங்கே குவிக்கப்பட்டது.எப்படியும் போராட்டத்தை முடக்கிவிடலாம் எனக் கருதினர். ஆனால், விவசாயிகளும் பொதுமக்களும் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. பு.ஜ.தொ.மு., வி.வி.மு. தோழர்கள் டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கும் வரை போராட்டத்திலிருந்து பின்வாங்குவதில்லை என்று அறிவித்தனர். இதனால், வேறுவழியின்றி முற்றுகைப் போராட்டம் நடந்துக்கொண்டிருக்கும் போதே குறைந்த மின் அழுத்தத்தை தாங்கும் டிரான்ஸ்பார்மரை  உடனே அமைத்து விட்டனர்.

விவசாயிகளிடம், “இப்போ ஊருக்கு போங்க நாளைக்கே அதிக மின் அழுத்ததைத் தாங்குகின்ற டிரான்ஸ்பார்மரை அமைத்து தருகிறோம்” என்று உறுதி கூறினர். அதிகாரிகள் சொல்வது உண்மைதானா என சோதித்து தெரிந்துக் கொண்ட விவசாயிகள் போராட்டத்திற்கு தற்காலிக வெற்றி கிடைத்துள்ள நிலையில் போராட்டத்தை வாபஸ் பெறலாம் என முடிவெடுத்துப் பின்வாங்கினர். உடனடி போராட்டத்தின் மூலம் அதிகாரிகள் பணிந்ததைக் கண்ட மக்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.

இப்பகுதியில் செயல்படும் பு.ஜ.தொ.மு., வி.வி.மு. தோழர்கள்  பாகலூர் மின்வாரியத்தின் அராஜகத்தையும் ஊழலையும் கண்டித்து தொடர்ந்து போராடி வருகின்றனர். முன்மாதிரியாக நின்று இப்பகுதியில் ஏற்கனவே பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இவ்வாறு மக்கள் பிரச்சனைகளை எடுத்து தன்முனைப்புடன் இவ்வமைப்புகள் சமரசமின்றி போராடுவதை அப்பகுதி மக்கள் உணர்ந்து புரட்சிகர அமைப்பின் கீழ் திரண்டு வருவதற்கும் போராட முன்வருவதற்கும் இந்த திடீர் போராட்டமும் ஒரு முன்னுதாரணமாகும்.

தகவல் :
பு.ஜ செய்தியாளர், ஒசூர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க