privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பிரா, ஜட்டி பொம்மைகளுக்கு இந்து ஞான மரபில் இடமில்லை !

பிரா, ஜட்டி பொம்மைகளுக்கு இந்து ஞான மரபில் இடமில்லை !

-

1000 ஆண்டுகளாக சுல்தான்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் என்று அன்னியர்கள் ஆட்சியில் பாழ்பட்டு, சீர் கெட்டு, தன் பாரம்பரிய பெருமையை எல்லாம் இழந்து நிற்கும் பாரத தேசத்தின் பொற்காலத்தை மீட்டுத் தர அவதாரம் எடுத்திருக்கும் கட்சி பாரதீய ஜனதா கட்சி. தொலைக்காட்சி விவாதங்களில் மல்லுக் கட்டுவதிலும் சரி, அமெரிக்காவில் பிறந்த குழம்பி நிற்கும் தேசிகளை (American Born Confused Desi) பேஸ்புக்கில் குழு அமைத்து கொக்கி போட்டு பிடிப்பதிலும் சரி, வாஜ்பாயி தலைமையில் ஆட்சி புரிந்ததிலும் சரி, இப்போது குஜராத்திலும், சத்தீஸ்கரிலும், கொஞ்ச காலம் முன் வரை கர்நாடகாவிலும் செய்யும் ஆட்சிகளிலும் சரி அந்த பொற்கால மீட்சி போராட்டத்திலிருந்து அவர்கள் கண்களை எடுப்பதே இல்லை.

கவனத்தை ஒரு முகமாக குவித்து புறாவின் கழுத்தை மட்டும் பார்த்து இலக்கை வீழ்த்திய அர்ச்சுனன் போல சங்க, பரிவார வானரங்களின் பேச்சு, மூச்சு, உயிர் வாழ்வு அனைத்துமே பாரதத்தை ஒரு அபவுட் டர்ன் அடிக்க வைத்து அந்த பொற்காலத்துக்கு திரும்ப அழைத்துச் செல்வதை நோக்கிதான் இருக்கிறது.

1990-களில் சிவசேனாவின் முக்கிய தலைவர்களின் ஒருவரான பிரமோத் நவால்கர் மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் காதலர்கள் நெருக்கமாக இருப்பதை எதிர்த்து இயக்கம் நடத்தி இந்து மரபை நிலை நாட்டியதும், இன்றைக்கும் மும்பை கடற்கரைகளில் போலீஸ் காதலர்களை கண் கொத்தி பாம்பாக கண்காணிப்பதும், 2005-ம் ஆண்டு சிவசேனாவின் அமைச்சர் ஆர் ஆர் பட்டீல் மும்பையில் செயல்படும் இரவு விடுதிகளை தடை செய்ததும் இந்த யுகாந்திர தரும யுத்தத்தின் பகுதிகள்தான்.

துணிக்கடை பொம்மைஅப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த ஒரு இந்துத்துவர்தான் மும்பை மாநகராட்சியில் இப்போது வார்டு உறுப்பினராக இருக்கும் திருமதி தவாடே. இந்தியா என்று மிலேச்சர்களால் பெயர் சூட்டப்பட்ட இந்த நாட்டில் பாரத நாரிகள் துன்புறுத்தப்படுவதைக் குறித்து பல நாட்கள் கடுமையாக சிந்தித்தார். பாரதத்தில் நடந்திராத பெண்கள் மீதான வன்முறைகள் இந்தியாவில் நடப்பது ஏன் என்று விளங்காமல் இன்னும் கடுமையாக தியானம் செய்து யோசித்தார். ஒரு நாள் அவருக்குள் இந்து ஞானமரபின் உள்ளொளி வழி காட்டியது.

மும்பையில் பெண்களுக்கான உள்ளாடைகளை விற்கும் கடைகளுக்கு வெளியே விளம்பரத்துக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர பிளாஸ்டிக் பெண் பொம்மைகள்தான் பிரச்சனைக்கு காரணம் என்பதை உணர்ந்தார். பெண்களின் உள்ளாடைகளை அணிவித்து நிறுத்தப்பட்டிருக்கும் அந்த பொம்மைகள் பெண்களை சங்கடப்படுத்துகின்றன. ஆண்களிடத்தில் காம, வக்கிர உணர்வுகளை தூண்டுகின்றன என்பதை கண்டு பிடித்தார்.

கூடவே, பொற்கால பாரதத்தில் இத்தகைய பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும், இந்த கிறித்தவ ஐரோப்பாதான் இத்தகைய இழிவுகளை இந்தியாவுக்கு இறக்குமதி செய்திருக்கின்றது என்பதையும் புரிந்து கொண்டார். இந்த பொம்மைகளுக்கு தினமும் உடை மாற்றும் ஆண் ஊழியர்களின் மனதில் காம, குரோத எண்ணங்கள் புகுந்து கொள்கின்றன என்பதையும் தனது உள்ளுணர்வால் தெரிந்து கொண்டார்.

ஒவ்வொரு முறையும் அவரது தொகுதியில் உள்ள நடுத்தர வர்க்க குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த கடைகளை கடந்து செல்லும் போது, இந்த பொம்மைகளை பார்க்கும் போது அவர் கடும் அதிர்ச்சியடைகிறார். பாரத நாரிகளின் நலனுக்காக, பாரத பண்பாட்டின் மீட்சிக்காக இந்த பொம்மைகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

யாரிடம் அந்த கோரிக்கையை வைக்கிறார்? மாநகராட்சியின் தலைவர் சுனில் பிரபுவிடம். அவர் இன்னொரு இந்துத்துவர். பாரதீய ஜனதா இந்துத்துவத்தை விட தீவிரமான, மராத்தி பெருமை கலந்து செய்யப்பட்ட சிவசேனா கட்சியின் இந்துத்துவர். மராத்தி மனுஷ்களின் மனதில் நஞ்சை ஊட்டும் இந்த பொம்மைகளை ஒழித்துக் கட்ட வேண்டியதில் அடங்கியிருக்கும் உள்ளொளியை அவரும் பெற்று விட்டார். அந்தத் தீர்மானத்தை உடனடியாக மாநகராட்சியின் 227 உறுப்பினர் சபையில் வாக்களிப்புக்கு விடுகிறார். மாநகராட்சி ஆணையர் உடனடியாக இது போன்ற நாகரீகமற்ற பொம்மைகள் பற்றிய ஒரு கொள்கையை வகுக்க வேண்டும் என்று நகராட்சி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

துணிக்கடை பொம்மைகள்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை நடத்த தூண்டும் வகையில் பெண் பொம்மைகள் இருக்கிறது என்று மாநகராட்சி அதிகாரி கருதினால் அதை நீக்கும்படி கடைக்காரருக்கு உத்தரவிடும் அதிகாரத்தை அவருக்கு வழங்க வேண்டும் என்று இந்த தீர்மானம் கோருகிறது.

இந்த இந்துத்துவ ஞான ஒளியை இன்னும் சில இடங்களில் பாய்ச்சி பார்க்கலாம். முதலில் பெண்களுக்கான உள்ளாடைகள் உற்பத்தியாகும் தொழிற்சாலைகளை என்ன செய்வது என்ற கேள்வி வருகிறது. இந்துத்துவாவின் இரும்பு மனிதர் நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன், கும்பமேளாவுக்கு வரும் திகம்பர நாகா சாமியார்கள், சட்டை அணியாத சாதுக்கள் எல்லாம் சேர்ந்து சாதுக்களின் மகா சம்மேளனம் நடத்தி ஒரு முடிவு எடுப்பார்கள். அதை நாடாளுமன்றத்தின் முன் வைத்து அரசு சட்டமாக நிறைவேற்றும்.

அதன்படி பெண்களுக்கான உள்ளாடைகள் செய்யும் தொழிற்சாலைகளில் பெண்கள் மட்டும்தான் வேலை செய்ய வேண்டும். நாயுடு ஹால், ஜாக்கி முதலான அனைத்து உள்ளாடை பிராண்ட் நிறுவனங்களும் பெண் முதலாளிகளுக்கு விற்கப்பட வேண்டும். அந்த நிறுவனங்களில் பங்கு வாங்குவதற்கு ஆண் முதலாளிகள் அனுமதிக்கப்படக் கூடாது. பெண்களின் உள்ளாடை நிறுவன லாபத்தை கணக்கு போடும் போதோ, பங்குகளை வாங்கி விற்கும் போதோ ஒரு ஆண் முதலாளியின் மனதில் காம குரோதங்கள் தோன்றாது என்று என்ன நிச்சயம்? முதலாளி மட்டுமல்ல உள்ளாடைகளை தயாரிக்கும் தொழிலாளிகளும் பெண்களாய் மட்டும் இருக்க வேண்டும்.

உள்ளாடைகள் விற்கும் கடைகளிலும் பெண்கள் மட்டும்தான் வேலைக்கு வைக்கப்பட வேண்டும். பெண்களுக்கான உள்ளாடைகளுக்கென்றே அல்லி ராஜ்யம் போல ஒரு தனி பகுதி ஒவ்வொரு நகரிலும் ஏற்படுத்தப்படும். அவற்றுக்கு வெளியே பெண் காவலர்கள் நிறுத்தப்படுவார்கள். அதற்குள் போவதற்கு ஆண்களுக்கு கண்டிப்பாக அனுமதி இருக்காது.

உள்ளாடைகளுக்கு நிகரான விளையாட்டு ஆடைகளை அணிந்து கொண்டு பெண்கள் ஓடி, குதித்து, நீந்தி விளையாடுவதை பார்க்கும் ஆண் மனங்களில் என்ன எண்ணங்கள் தோன்றி விடும் என்ற நிச்சயம் இல்லாத நிலையில் பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்பது தடை செய்யப்படும். இன்னும் சில படிகள் தொலைநோக்குடன் யோசித்தால், பெண்கள் அனைவரும் தலை முதல் கால் வரை மறைக்கும்படியாக கருப்பு உடையை அணிந்து கண்கள் மட்டும் தெரியும்படிதான் வெளியில் வர வேண்டும். அதுவும் ஆண் உறவினர்கள் (அப்பா அல்லது கணவன்) துணையுடன்தான் வெளியில் வர வேண்டும் என்று சட்டம் போடப்படும்.

இஸ்லாமிய ஞான ஒளியில் செயல்படும் சவுதி அரேபியாவில், இத்தகைய சட்டங்களில் பல ஏற்கனவே அமலில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. கும்பமேளாவில் குதித்து, குட்டிகரணம் போட்டு மக்களுக்கு அருள் பாலிக்கும் திகம்பர (நிர்வாண) நாகா சாமியார்களும், சாதுக்களும், பாரதீய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சவுதி அரேபியாவுக்கு நல்லிணக்க அரசு முறை சுற்றுலா போய் பெண்களை எப்படி பாதுகாக்கலாம் என்று வகாபிகளிடம் பாடம் படித்துக் கொண்டு வருவார்கள்.

அடுத்து இந்துத்துவ மரபினால் கோயில்களிலும், அஜந்தா, எல்லோரா ஓவியங்களிலும் நிர்வாணமாக தீட்டப்பட்டுள்ள பெண் சிலைகளையும் ஓவியங்களையும் எப்படி ஆண்கள் கண்ணில் படாமல் பாதுகாப்பது என்ற பிரச்சனையை தீர்க்க வேண்டியிருக்கும். அத்தகைய கோயில் மண்டபங்களையும் குகைகளையும் கணக்கெடுத்து, அவற்றுக்கு பெண் புரவலர்களை நியமித்து ஜெயேந்திரர், நித்தியானந்தர், மதுரை ஆதீனம், பிரேமானந்தர் முதலான சாது, சன்யாசி மரபினரை தவிர மற்றவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி மறுக்கப்படும்.

சஞ்சய் ஜோஷி என்ற பாரதீய ஜனதா கட்சி தலைவர் பங்கு பெறும் காம யோகக் காட்சிகள் அடங்கிய சிடி வெளியாகி சில ஆண்டுகளுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியதையும், கர்நாடகா சட்டசபையில் பாலியல் படங்களை தமது கையடக்க கணினியில் பார்வையிட்டு யோகப் பயிற்சி செய்து கொண்டிருந்த இந்துத்துவர்களை மையமாக வைத்து திம்மி ஊடகங்கள் போட்ட குத்தாட்டத்தையும் இந்துத்துவ அரசு கவலையோடு பரிசீலிக்கும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ண மரபில் வந்த இந்துத்துவ அரசியல் தலைவர்கள், சட்ட சபை உறுப்பினர்கள், மடாதிபதிகள், ஆதீனங்கள் போன்றவர்களின் யோக லீலைகளை திருட்டுத்தனமாக படம் பிடித்து பொதுவில் அம்பலப்படுத்தி காசு பார்க்கும் ஊடகங்களை தடுத்து நிறுத்துவதற்காக கடும் நடவடிக்கைகளை எடுக்கப்படும். ரகசிய கேமரா, ஜூம் கேமரா போன்றவை தடை செய்யப்படும் அல்லது அவற்றின் விற்பனையும் பயன்பாடும் ஒழுங்குபடுத்தப்படும். சிடிக்களில் பதியப்படும் படங்களும் வீடியோக்களும் இந்துத்துவ காம யோக காட்சிகளை கொண்டிருக்கின்றனவா என்பதை பரிசீலித்து ஒப்புதல் அளிப்பதற்கு சுப்பிரமணியம் சாமி, சோ தலைமையில் ஒரு ஒழுங்கு முறை ஆணையம் அமைக்கப்படும்.

இதுவரை கற்பனை குதிரை தடங்கலின்றி ஓடினாலும், பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களில் பலர் தமது குடும்ப உறுப்பினராலேயே கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எனும் போது அதைத் தடுப்பதற்கு இந்துத்துவ அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கும் என்ற இடத்துக்கு வந்ததும் திகிலாகிப் போய் நின்று விட்டது.

– செழியன்

மேலும் படிக்க

 1. //இந்துத்துவாவின் இரும்பு மனிதர் நரேந்திர மோடி தலைமையில் 2014-ல் மத்தியில் ஆட்சியைப் பிடித்தவுடன், கும்பமேளாவுக்கு வரும் திகம்பர நாகா சாமியார்கள், சட்டை அணியாத சாதுக்கள் எல்லாம் சேர்ந்து சாதுக்களின் மகா சம்மேளனம் நடத்தி ஒரு முடிவு எடுப்பார்கள்//

  பார்பனர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை நீங்கள் ! பிடிக்காதவர்கள் என்றால் கதை கட்டி விடுவது. எப்படி எல்லாம் கஷ்டம் வரும் என்று இப்படி எழுதி மனக்கண் முன்னாள் நிறுத்தி வாசகர்களை பயமுறுத்துவது ..

  மோடி இப்படிதான் இப்போது ஆட்சி செய்கிரார ?
  வாஜ்பாய் தலைமையில் இருந்த பா ஜா கா அரசு இப்படிதான் நடந்ததா ?

 2. Vinau,

  Now a days ur articles are look like Neeya Naana Program “Hot topic” but useless solution or waste of time..

  Kind advise, think advance and stop blaming or ridiculing other religious.

  We know vinavu is non believer in any religious but u r still in India (a country having different religious)

 3. // கர்நாடகா சட்டசபையில் பாலியல் படங்களை தமது கையடக்க கணினியில் பார்வையிட்டு யோகப் பயிற்சி செய்து கொண்டிருந்த இந்துத்துவர்களை //

  குஜராத்திலும் சட்டசபையில் இரண்டு எம்.எல்.ஏக்கள் பாலியல் வீடியோ பாத்து மாட்னாங்களே… அவனுங்கள எப்படி மறந்தீங்க…

 4. மதவாதிகளின் அராஜகம் இப்படித்தான்! பெண்கள் சம்பந்தப்பட்டது எல்லாமே அவர்களுக்கு ஆபாசமாகத்தான் தெரியும்! ஒருக்கால், விபத்தினால் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், பெண்கள் அனைவரையும் நாடுகடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! ஆனால் இவர்கள் சாமியார்கள் திரை மறைவில் செய்த,செய்து வருகின்ற லீலைகள் தனிக்கதை!

 5. மும்பை மாநகராட்சியில் உறுப்பினராக இருக்கும் திருமதி தவாடே செய்தது தவறு எனில் , ம.க.இ.க மகாராஷ்ட்ர மகளிர் அணி , பெண்ணுரிமை குரல் எழிப்பி இருக்காலமே?- திருமதி தவாடேயும் ஒரு மக்கள் பிரதினிதி என்பதை மற்க்கவேன்டாம்

 6. சொல்ரதுநிசம்தானுஙக ஜட்டியொட் மரபாஷியக்ல் பார்தாலுமெ மூடு வந்திடுதுங அதான் பஜொர கோயிலுக்கு போரதைநிறுத்திட்டெனுஙக

  • வீட்ல அம்மா, தங்கச்சி, அக்கான்னு பெம்பளைங்கல்லாம் இருப்பாங்லே, அப்ப உங்க கேவலமான புத்தி என்ன செய்யும்.

 7. பெண்களுக்கு எது பாதுகாப்பு என்பதை பெண்களை அடிமையாக வைத்திருக்கும் இந்த சமுக அமைப்பு தீர்மானிக்கும் வரை இந்த கூத்து நடந்துக்கிட்டு தான் இருக்கும்.

 8. ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே மாதிரியான தேசிய உடை வரவேண்டும்! டீ சர்ட், ஜீன்சு மிகவும் பொருத்தமானது! உழைக்கும் மக்களுக்கும் எளிதானது! சிகை மற்றும் மற்ற அலஙகாரங்களும் தவிர்க்கப்படவேண்டும்! ஆனால், இஙகே ஆண்களும் அல்லவா மேக்கப் பொடுகிறார்கள், தன்னம்பிக்கையில்லாமல்!செஞ்சீனாவில், கலாச்சார புரட்சி ஏற்பட்டதைபோல இஙகும் ஏற்படவேண்டும்!

 9. சென்னை வெயிலில் பதினெட்டு முழம் பட்டு புடவை குளு குளு என்று இருக்குமா அரிகுமார்? உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை! பக்கத்தில் மாமியைக்கேட்டு சொல்லுங்களேன் !

 10. I didn’t say saree is the ideal thing in the hot weather,u said jeans is.

  Most girls agree that the salwar kameez they wear is comfortable enough.

  and u haven’t heard of cotton sarees?

  and please dont make mention of my family members here,you dont have rights to do so.

  • தாழ்த்தப்பட்ட ஜாதிகளுக்கு உங்கள் பகுத்தறிவைப் பயன் படுத்திதான் மேலாடை அணியத்தடை விதித்தீரோ?

  • I have no intention to drag family members! But I strongly advocate dress code for women shall be decided not by chauvenist MEN, especially, fundamentalists like Ari!

   • I do not advocate any specific dress for anyone,men or women,let them choose what is correct for them.

    Shirt/trousers,salwar/kameez/saree all of them can be attractive/sexy on a girl.

    so,it is not worth a debate.

    i dont know from where you get ideas like chauvinistic men and all,i propose emotional/physical morality/loyalty for both men and women,i do not support polygamy/polyandry in a normal situation.

    As a man if a find a woman attractive/sexy,i ll only try to view her beauty without her feeling that i am lusting after her like anything.

  • I appreciate your soft side on family ie. women! Is it not bit chauvinistic possessiveness? Do you know even sari is considered bit of sexy when compared to decent Pant&Shirt! I dont oppose salvaar commeeze with thuppatta , but now adays thuppaatta has gone and jeans and T-shirt have come in force for fiel working women! It is a natural choice, we men folk should not interefere on ethical, fundamental and nationalistic grounds! Who knows, by the trend being set by Hindi and Tamil movies, I would be happy they wear some dress, for the sake!

   • It is just normal that i dont want them discussed just like i dont discuss anyone’s family here.I dont give adjectives to describe it.

    Any dress can be sexy,any normal man is attracted to women,even the eyes of a woman can be seductive.I feel if you take the extreme step of covering women fully like they do is islamic society,it only causes repressiveness,just like our tamil movies also do.

    Thats why it is important for humans to do marriage/intercourse as early as possible,else it keeps getting worse.

 11. பிரா ஜட்டியுடன் உயிருள்ள பெண்களே திரைப்படங்களில் தோன்றுவதோடு ஒப்பிடும்போது, பொம்மைகள் எவ்விதத்திலும் சலனத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை.

 12. உண்மைதான் ரிஷி! வக்கிரபார்வை இன்றைய,சூழ்னிலைக்கு பழகிய இளைஞருக்கு இல்லை! மத அடிப்படை வாத சக்திகளே, ஆணாதிக்க வெறியையும், பெண்களை அச்சம், மடம்,நாணம், பயிர்ப்பு என்ற, ஆண்களுக்கு இல்லாத விலஙகுகளையும் போட்டு அடிமைபடுத்துகிறது! படித்த பெண்கள், கடையில் கான்டொம் கெட்டு வாஙகும் விளம்பரத்தை பார்த்த பின்னரும் இவர்கள் திருந்த வில்லையே!

 13. தமிழ் பண்பாடு வாழ்க. அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகி, மும்பையில் வளர்ந்து, கோடம்பாக்கத்தில் கொழிக்கும் விபச்சாரப் பண்பாடு வெல்க.
  பெண்ணுரிமை ஜிந்தாபாத். அதற்குக் குரல் கொடுக்கும் ஆண்மேலாதிக்கம் ஜிந்தாபாத்.
  பேட்டியாளர் – சுவாமிஜீ, பெண்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று நீங்கள் அறிவுரை கூறுகிறீர்கள்.
  சுவாமி விவேகானந்தர் – நீங்கள் யார் பெண்கள் என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்க. சரியான கல்வியை அவர்களுக்குக் கொடுங்கள். அவர்கள் முடிவெடுத்துக்கொள்வார்கள் அவர்களுக்கு எது சரி என்று.
  அதெப்படி நாங்கள் அப்படி முடிவெடுக்க விட்டுவிடுவோமா என்று ஆணாதிக்கம் இந்த கட்டுரை எழுதியிருக்கிறது.
  பெண்களை நீலப்படங்களிலும், மஞ்சள் பத்திரிகைகளிலும் அனுபவித்து அலுத்துப்போய், பெண்ணுரிமை என்ற பெயரில் நேரடி தரிசனம் தர வைத்து ஜொள்ளு விடலாம் என்றால் விடமாட்டார்கள் போலிருக்கிறதே இந்த கலாசார காவலர்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க