Tuesday, January 26, 2021

தாலி பாக்யா

-

ந்து ஞானமரபு பல ஆயிரம் ஆண்டுகளாக பல சவால்களையும் சமாளித்து உயிர்ப்போடு இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தொழில் நுட்ப புரட்சியின் காலத்தில் கூட சனாதான தருமம் தனது வருண சாதிப் புனிதத்தை காப்பாற்றிக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறது என்று அறிய வேண்டுமா, கீழ்க்கண்ட செய்தியை படியுங்கள்.

தாலி தூண்டில்
தாலி தூண்டில் (படம் : நன்றி – தி ஹிந்து)

5 ஆண்டுகளாக பாரதீய ஜனதா ஆட்சி புரிந்து வந்த காலத்தில் பெண்களுக்கு இந்து தர்மப்படி சரியான சாதியில், சரியான வர்க்கத்தில் திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக கர்நாடகாவில் “தாலி பாக்யா” என்ற திட்டத்தை உருவாக்கியிருக்கின்றனர் மேட்டுக்குடி இந்துக்கள். அரசு உயர் பதவிகளுக்கான தேர்வுகளில் முதல் கட்டத்தை தாண்டி விட்ட இளைஞர்களை மகளுக்கு மாப்பிள்ளையாக வளைத்துப் போட செல்வாக்கு மிகுந்த பணக்கார மாமனார்கள் உருவாக்கிய திட்டம்தான் இது.

மாநில தேர்வுத் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும், “தாலி பாக்யா” திட்டம் திருமணத்துக்கு தகுதி வாய்ந்த இளைஞர்களிடம் பணம் கறப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது என்கிறார் அஜய் எனும் பாதிக்கப்பட்ட நபர்.

இந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி நடந்த உயர் பதவிகளுக்கான கர்நாடகா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் கலந்து கொண்ட அஜய் 1,800-க்கு 1,040 மதிப்பெண்கள் பெற்று 34-வது இடத்தைப் பிடித்திருந்தார். 362 பதவிகளுக்காக நடத்தப்பட்ட தேர்வில் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) பதவியின் விலை அதிகம். அஜய் குடும்பத்தை அணுகிய ஒரு கல்யாண தரகர், ‘ரூ 80 லட்சம் முதல் ரூ 90 லட்சம் வரை லஞ்சம் கொடுத்தால்தான் டிஎஸ்பி பதவி நியமனம் பெற முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஒரு மத்திய அரசு அதிகாரியின் ஒரே மகளுடன் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டால் லஞ்சத் தொகையில் 80 சதவீதம் வரை பெண்ணின் அப்பா கொடுத்து விடுவார் என்றும் நேர்முகத் தேர்வில் அஜய் தேர்வு பெறுவதையும் அவர் உறுதி செய்து விடுவார் என்றும் அந்த தரகர் சொல்லியிருக்கிறார். தேர்வு பெற்ற இளைஞர்களின் பட்டியலை அலசி தனது சாதியைச் சேர்ந்த அஜயை அடையாளம் கண்டிருக்கிறார் அந்த செல்வாக்கு படைத்த அதிகாரி. சாதி, செல்வாக்கு, பணம் எல்லாம் ஒத்து வந்தாலும் அஜயின் தந்தை கணேஷ் இந்த டீலிங்கை ஏற்றுக் கொள்ளவில்லை.

தரகருடனான உரையாடலை அஜய் பதிவு செய்திருக்கிறார்.

அஜய் ஏப்ரல் 1-ம் தேதி நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டிருக்கிறார்; மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் எவை, பெங்களூருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவு என்ன போன்ற பல கேள்விகளுக்கு டாண் டாண் என்று பதில் சொல்லியிருக்கிறார்; நேர்முகத் தேர்வு நடத்தியவர்கள் அவரை பாராட்டியிருக்கிறார்கள். ஆனால், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அஜய் அதிர்ச்சியடைந்திருக்கிறார். தேர்வில் 200-க்கு 55 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. தர வரிசைப் பட்டியலில் அவரது இடம் 34-லிருந்து 157-க்கு வீழ்ச்சியடைந்தது. டிஎஸ்பி பதவிக்கு அவரை தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் திடீரென்று மறைந்து விட்டன.

“தாலி பாக்யா” திட்டம் ஆண்களுக்கு மட்டும்தான் செயல்படுகிறது” என்றும் “இது கடந்த 2 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது” என்றும் தெரிவிக்கிறார் டாக்டர் மைத்ரி என்பவர். வருவாய்த் துறை துணை ஆணையர் பதவி பெறுவதற்கு லஞ்சம் கேட்டு அவரை அணுகியிருக்கின்றனர் தரகர்கள்.

அஜய்க்கு தெரிந்த ஒருவர் சென்ற ஆண்டு இந்த திட்டத்தை ஏற்றுக் கொண்டு அரசுப் பதவியும் பெற்று, திருமணமும் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறாராம்.

பாரதீய ஜனதா கட்சியை அழிவிலிருந்து காப்பாற்ற தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடி அவதாரம் எடுத்திருப்பது போல சாதி அழிந்து இனக் கலப்பு நிகழும் சூழல் ஏற்பட்டு, தர்மம் பலவீனமடையும் போதெல்லாம் “தாலி பாக்யா” போன்ற திட்டங்களின் மூலம் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதாரம் எடுக்கிறார்.

மேலும் படிக்க

 1. பாரதீய ஜனதா கட்சியை அழிவிலிருந்து காப்பாற்ற தேர்தல் பிரச்சாரக் குழு தலைவராக நரேந்திர மோடி அவதாரம் எடுத்திருப்பது போல சாதி அழிந்து இனக் கலப்பு நிகழும் சூழல் ஏற்பட்டு, தர்மம் பலவீனமடையும் போதெல்லாம் “தாலி பாக்யா” போன்ற திட்டங்களின் மூலம் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் அவதாரம் எடுக்கிறார்.

 2. Vinavu doesn’t know about ground realities in Tamilnadu.

  Dalit youths who clear IAS exams voluntarily marry into rich or powerful Brahmin families. And they try to remove all traces of their Dalit history. After becoming IAS, why not marry a Dalit girl.

  This happens even in USA. Rich Blacks (African Americans) always marry a white skinned girls. Almost all Black sportspersons – Basketball, Golf, Baseball, Athletic players always marry a white girl manytimes a model.

  • Those families are those who have voluntarily given up brahminism and they dont identify themselves as brahmins.

   They are just some rich and powerful families,

   true brahmin families never marry even out of sub caste.

 3. உண்மைதான் அய்யா ஆர் ஆர்! பணக்காரன், பசை உள்ளவன் என்றால் வளைத்து போட வெள்ளை தோல் மோகினிகள் இருக்கும்போது யார்தான் மயஙகமாட்டார்கள்? வரதட்சினை கொடுமையில்லை,நாத்தனார்,மாமியார் கொடுமையில்லை, மீனம் மேஷம் தோஷமும் இல்லை, பின்னர் என்ன கசக்கிறதா தமிழ் மாப்பிள்ளைகள்? ஆனானப்பட்ட விசுவாமித்திரனிலிருந்து இன்றைய ரஜினி வரை உங்கள் மோகனாச்திரத்திற்கு தப்பியவர் யார்? அசுரகுல திலகங்களை அழிக்கவல்லவா அம்மன் அவதாரம்? வினவுக்கு தெரியாதது இல்லை! பணம் படைத்தவர்களுக்கு சாதியில்லை அல்லது பணக்காரர்கள் எல்லாம் ஒரே சாதி! பார்ப்பனர் பிழைப்பே இதுதானே!

  • Another typical half baked person on the public forum.

   If I comment about ADMK rule then I am DMK.
   If I comment about DMK rule then I am ADMK.

   உங்கள் மோகனாச்திரத்திற்கு தப்பியவர் யார்? What made you decide I belong to Brahmin caste or white skinned group. If you have seen my comments in various Vinavu article, you would term me as anti-Brahmin.

   My point is if a Dalit IAS officer marries a Brahmin or well settled family, may be he alone would lead a comfortable life.
   If a Dalit IAS officer marries into a Dalit or poor girls family, there is a high chance the girls’ family may move up the socio-economic ladder. This upliftment opportunity is missed due to the selfishness of the Dalit IAS boy.

   Here Brahmins should not be blamed rather the Dalit boy should be blamed for his selfishness.

   Another related comment why does all our Tamil Directors cast girls from other states – even Directors who talk big about Tamil Culture like Bala, Sasikumar, Hari, Seeman, Thankar.
   Worst recent case – Bala is his last movie he cast a white skinned girl and applied black paint on her face – why not select a Tamil dark girl instead.

 4. // பார்ப்பனர் பிழைப்பே இதுதானே! //

  உம்மைப் போன்ற அரைவேக்காட்டையும், நீர் பெற்று உம்மைப் போலவே வளர்த்து வைத்திருக்கும் அரைக்கால்வேக்காடுகளையும் இந்த பாப்பாத்திகள் சீந்தாமல் படித்த IAS தலித் இளைஞர்களை வளைத்துப் போடுவதாக புலம்பிக் கொண்டு வயிற்றில் அணு உலையுடன் அலைந்து திரிவதால் மட்டும் முழுதாக வெந்து விட முடியுமா.? அல்சரும், தூக்கமின்மையும்தான் மிஞ்சும்..

 5. //அல்சரும், தூக்கமின்மையும்தான் மிஞ்சும்..//அனுபவசாலி அம்பி! உண்மையை சொன்னால் பொத்துகொண்டு வருவது ஏன்? தலித் இளைஞன் பாப்பாத்திகளை காதலித்து திருமணம் செய்து கொள்வது தானே உஙகள் வயிற்றெரிச்சலுக்கு காரணம்? தலித் இளைஞன் தலித் பெண்ணை மட்டுமே மணந்து கொள்ள வேண்டும் என்ற உஙகள் சாதி வெறியை ஏன் என்மேல் ஏற்றுகிறீர் அம்பியே! சிண்டு முடிதல் இதுதானோ?

  ஆர் ஆர் பார்வைக்கு! உங்கள் என்றுநான் குறிப்பிட்டது, உஙகள் கருத்தின் தாக்கத்தில் தான்! மற்றபடி எந்த சாதியனரையும் நான் எதிர்ப்பவனல்ல்! ஆனால் சாதி வெறியை எதிர்த்துதானே ஆகவேண்டும்?

  தலித் பெண்களை பற்றிய தஙகள் அக்கறையை வரவெற்கிறேன், சந்தடிசாக்கில் கலப்பு திருமணத்தையே அல்லவா எதிர்க்கிறீர்கள்!

  அரசு வேலை பார்க்கும் தலித் பெண்களை மணந்து சீராக வாழ்ந்துவரும் பிராமணக்குடும்பஙகளை எனக்கு நன்றாகவே தெரியும்! பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் சில வைதீக சடஙகுகளில் மட்டும் த்விர்த்து விடுவார்கள்! பிராமணர்களைத் தவிர்த்த பிற சாதியினரே கலப்பு திருமணத்தையே இன மான பிரச்சனையாக எதிர்க்கிறாரகள்! இந்த விஷயத்தில் நான் அறிந்த பிராமணர்கள் எவ்வள்வோ மேல்! ஆனால் இதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாகநடக்கும் விதிவிலக்குகள் தானே! சாதி ஒழிய கலப்பு திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும்! ஆயிரம் அம்பிகள் குறுக்கெ வந்தாலும் சரி! அதற்காக காதலுக்கு கலர் கொடுப்பதை நான் எதிர்க்கிறேன்!

  சினிமாவில் ஏன் வெள்ளைத்தோல் கதானாயகிகளை காட்டுகிறார்கள்? நான் முன்பே ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டது பொல,நமது கருப்புநிற தாழ்வு மனப்பாண்மை, வெள்ளைநிறத்தையே கவர்ச்சியாக நினைக்கிறது! கருப்பு பிராமணர்கள் உட்பட அனைவருக்கும் இந்த பாதிப்பு உண்டு! பணம் போட்டு படம் எடுப்பவர்கள், ரசிகர்களின் இந்த பலவீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள்!

 6. //உம்மைப் போன்ற அரைவேக்காட்டையும், நீர் பெற்று உம்மைப் போலவே வளர்த்து வைத்திருக்கும் அரைக்கால்வேக்காடுகளையும்….// அதை வாசகர்கள் முடிவு செய்வார்கள் அம்பி! உஙள் தொழில்முறை ஆராய்ச்சி எதற்கு?

  • இளவரசர் ஹாரியும் வில்லியமும் இந்தியப் பாரம்பரியம் கொண்டவர்கள் என்று தொழில் முறை ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்ததைப் பார்த்து அதே நினைவாக இருக்கிறீர்கள் போல.. ஆசை யாரை விட்டது…?

 7. //…….Here Brahmins should not be blamed rather the Dalit boy should be blamed for his selfishness..//

  Is it not utter non-sense and provocative RR? For an affair to happen, both parties are reponcible! We are talking about Child marriages aranged by neo-brahmins between teenagers, to blame parents!

 8. Dalit IAS officers are the worst of the reservation receivers,i can even support Engineers or Doctors but IAS is just funny.

  People in charge of the country should earn it,not receive alms.

  • இந்திய ஆட்சிப் பணிக்கு வரும் பல தலித் இளைஞர்கள் நல்ல வேலையை விட்டுவிட்டுத்தான் வருகிறார்கள்.. அவர்களில் பலரும் சேவை மனப்பான்மையிலும் திறமையிலும் பிற சாதியினருக்கு எந்த வகையிலும் குறைந்தவர்களல்ல.. ஆட்சி, அரசு நிர்வாகத்திலும் தலித்துகளுக்கு பங்கிருப்பதுதான் அவர்கள் நிலையை உயர்த்தும்..

 9. தாலி பாக்யா போன்று சம்வங்கள் கர்நாடக பாஜக அரசியலில் மட்டுமல்ல.. தமிழகத்திலும் காலங்கலாமாக இருக்குது. நீங்க எந்த அரசுத் தேர்வு எழுதினாலும் குறிப்பாக பணம் அதிகம் புளுங்கும் அல்லது அதிகாரப் பதவிகளுக்கு, தேர்வில் வெற்றுப்பெற்று நேர்முகத் தேர்விற்கு காத்திருந்தால் போது, அந்தந்த சாதி பெரிய இடத்து பலங்கள் வரும். வீடு தேடி வரன்கள் வரும்.வீடு தேடி பணிநியமன ஆணை வரும்.. இது எல்லா சாதி மக்களுக்கும் தெரந்த ஓன்று.. எல்லா அரசு வேலை வாய்ப்புகளுக்கும் லஞ்சப் பணம் இல்லாமல் பணிநியமன ஆணை வராதது. அதற்கான லஞ்சப் பணத்தை அவன் சாதி பெண் வீட்டார் கொடுத்து புக்கிங் செய்த பிறகு சுபம்தான்.

  ஏதோ கர்நாடகத்தில் மட்டும் நடப்பாதாக நினைக்கவேண்டாம். காலம் காலமாக பெரியார் காலத்தில் இருந்து வருகிறது. வரன்கள் சாதிகள் ஓரளவிற்கு சொந்தங்களாக அல்லது சாதி பாசம் இருப்பதனால் வழக்குப்பதிவு கிடையாது. மாப்பிள்ளையே அதிகாரமிக்க அரசு பதவிக்காக விலைபோவது வாடிக்கை. இது தமிழகத்தில்….

  • கல்லு நீங்கள் எப்படி? உங்கள் திருமணத்தில் உங்களுக்கு விலை உண்டா? என்ன ரேட்?

   • கல்நெஞ்சத்தின் அப்பா திருமணம் வரதட்சனை இல்லாமலும், கல்நெஞ்சத்தின் அண்ணனின் காதல் திருமணமும் வரதட்சனை இல்லாமலும் நடந்தேறியுள்ளது.. கல்லுவின் ஆசையும் அதுவே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க