Wednesday, October 16, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்காதல் மறுக்கப்பட்டால் கள்ளக்காதலாகி கொலை செய்யும் !

காதல் மறுக்கப்பட்டால் கள்ளக்காதலாகி கொலை செய்யும் !

-

டலூர் மாவட்டம் பண்ருட்டி, காந்தி சாலையைச் சேர்ந்தவர் 30 வயது சீனிவாசன். அவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. சீனிவாசன் சென்னையில் ஒரு மருந்துக் கடையில் வேலை செய்கிறார்.

சீனிவாசன், கல்பனா, தினேஷ் பாபு
சீனிவாசன், கல்பனா, தினேஷ் பாபு

திருமணம் முடிந்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் முகமாக சீனிவாசன் மனைவியுடன் மாமியார் வீட்டிற்கு சென்றிருக்கிறார். திருமண விழாவை கொண்டாடிய பிறகு அவர் மனைவியுடன் உள்ளூரில் உள்ள திருவதிகை என்கிற இடத்தில் பைக்கில் சென்றுகொண்டிருந்த போது திடீரென்று வழிமறித்த ஒரு கும்பலால் கொலை செய்யப்படுகிறார். ஆனால் அந்த கும்பல் கல்பனாவை ஒன்றுமே செய்யவில்லை. ஏனெனில் அந்த கும்பலை கூலிக்கு அமர்த்தியதே கல்பனா தான்.

பள்ளி பருவத்திலிருந்தே கல்பனா அதே ஊரைச் சேர்ந்த தினேஷ் பாபுவை காதலித்து வந்திருக்கிறார். ஆனால் தினேஷ் பாபு வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் கல்பனா வீட்டில் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வீட்டாருடன் எவ்வளவு போராடியும் கல்பனாவின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கிடையில் காதலுக்காக காத்திருக்க முடியாத தினேஷ் அவரது வீட்டார் ஏற்பாட்டில் முதலில் திருமணம் செய்துகொள்கிறார். தினேஷின் திருமணத்திற்கு பிறகும் இருவருக்குமிடையே தொடர்பும் பழக்கமும் தொடர்ந்து கொண்டு தான் இருந்திருக்கிறது. இதை தெரிந்துகொண்ட கல்பனாவின் பெற்றோர் உடனடியாக உறவுக்காரரான சீனிவாசனை கல்பனாவிற்கு திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த திருமணம் நடந்து தான் ஓராண்டாகிறது. சீனிவாசனை திருமணம் செய்து கொண்ட பிறகும் கல்பனா தினேஷ் உறவு தொடர்ந்தது.

காதலிக்க முடியாத சமூகத்தில் இருவரும் கள்ளக்காதல் மூலம் சேர முயன்ற போது இந்த விவகாரம் தெரிந்து சீனிவாசன் மனைவியைக் கண்டித்திருக்கிறார். அதன் பிறகே கல்பனாவும் தினேஷும் இணைந்து கொலைத் திட்டம் போடுகின்றனர். அதன்படி பைக்கில் சென்று கொண்டிருந்த சீனிவாசனை வழிமறித்து தினேஷும் அவரது நண்பரான முரளியுடன் இணைந்து அடித்துக் கொல்கிறார்.

ஆரம்பத்தில் நகை மற்றும் வழிப்பறிக்காக நடந்த கொலை என்று கல்பனா சொன்னதை வைத்து புலனாய்வு செய்த போலீசு பின்னர் உண்மையை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் நாங்கள் தான் குற்றவாளிகள் என்று இருவரும் போலீசில் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். எனினும் இந்த கொலைக்கு இவர்களை மட்டும் குற்றம் சாட்ட முடியுமா, இதற்கு இவர்கள் மட்டும் தான் காரணமா? காதல் திருமணங்களை எல்லாம் நாடகத் திருமணங்கள் என்று கூறிவரும் காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் இதில் பங்கு இல்லையா?

ஏனெனில் இந்த பிரச்சினையில் எந்த தலித்தும் இல்லை. சீனிவாசனும் கல்பனாவும் செட்டியார் சாதி, தினேஷ் நாயுடு சாதி. மேலும் இங்கு நடந்திருப்பதும் ராமதாஸ் கும்பல் சொல்லுவது போல பணத்திற்காகவோ இல்லை சொத்துக்களை கைப்பற்றுவதற்காகவோ நடந்த ஏமாற்று வேலை அல்ல. நடந்திருப்பது ஒரு கொடூரமான கொலை. அதில் சீனிவாசன் எனும் அப்பாவி இளைஞர் இரக்கமின்றி கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணங்கள் தான் பெண்களுக்கு நல்லது என்று பிரச்சாரம் செய்பவர்கள், காதல் திருமணங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கல்பனாவுக்குக்கும் தினேசுக்கும் பெற்றோர் தான் திருமணம் செய்து வைத்தனர், ஆனால் ஏன் இவர்கள் கொலைகாரர்கள் ஆனார்கள்?

இது போன்ற குற்றங்கள் ஏன் நடக்கின்றன? கல்பனாவின் விருப்பப்படி தினேஷை திருமணம் செய்து வைத்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்காது. கல்பனாவும் தினேசும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பது தான் ராமதாசின் கருத்து. இதன் மூலம் இது போன்ற கள்ளக்காதலையும், கொலைகளையும் ஊக்குவிப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள். தலித் இளைஞர்கள் வன்னியப் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று பா.ம.க சாதிவெறியர்கள் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள். ஆனால் இங்கோ இவர்கள் நடத்தி வைத்த உண்மையான திருமணம் கொலையில் முடிந்திருக்கிறது. வன்னியர் ஏரியா என்று சொல்லப்படுகின்ற கடலூர் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

கல்பனா தனது வீட்டாரின் சாதி வெறியை எதிர்த்து போராடுவதற்கு பதில் இத்தகைய கிரிமினல் வேலையை ஏன் மேற்கொண்டாள்? அது போல தினேஷூம் தைரியம் சொல்லி கல்பனாவையே திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டு திருப்திக்கு வேறு ஒரு அப்பாவிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு இப்போது கொலைகாரனாக மாறியது ஏன்?

ஏனென்னால் சமூகத்தில் இருக்கும் பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான சாதி எனும் வில்லனை எதிர்ப்பது சுலபமல்ல என்பது இவர்கள் கருத்து. அதை விட கொலை பிரச்சினை இல்லை என்று இவர்கள் கருதுமளவு சாதி மறுப்புத் திருமணம் என்பது கடினமானது. இப்படி சாதி மறுப்பு திருமணங்களையும் காதலையும் எதிர்த்து பிரச்சாரம் மற்றும் தண்டனைகளை கொடுத்து வரும் இந்த சமூக அமைப்புதான் இவர்களை கொலைகாரர்களாக்கியிருக்கிறது.

அந்த சமூக அமைப்பின் பாதுகாவலர்களாக வலம் வரும் ராமதாஸ், காடுவெட்டி குரு, பாமக,வன்னியர் சங்கம், இதர ஆதிக்க சாதி அமைப்புகள் அனைவரும்தான் இந்த கள்ளக்காதல் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். அதன்படி வன்னியர் சங்கம் மற்றும் இதர ஆதிக்க சாதி சங்கங்களை உடன் தடை செய்வது அவசியம்.

இதை ஏதோ ஒரு கள்ளக்காதல் கிசு கிசு சம்பவமாக பார்க்காமல் ஒரு அப்பாவி இளைஞன் உயிர் பறிக்கப்பட்டு இருவர் சிறையில் காலம் தள்ளப் போகிறார்கள் என்ற உண்மையோடு சிந்தித்து பார்க்க வேண்டும். இவர்கள் எவரும் விடலை பருவ வயது கொண்டவர்கள் அல்ல. முப்பதுகளைத் தொடும் வயதும், கொலையே செய்யுமளவு முதிர்ச்சியும் கொண்டவர்கள். ஒருவேளை இவர்கள் அப்போதே திருமணம் செய்திருந்தால் கல்பனா வீட்டில் மற்றும் கொஞ்சம் வருத்தம் இருந்திருக்கும். பிறகு நாளடைவில் அதுவும் சரியாகியிருக்கும். ஆனால் அந்த காதலை தடை செய்ததால் இன்று இரண்டு குடும்பங்கள் நடுத்தெருவில் இருக்கின்றன. ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இருவர் சிறையில் நீண்ட காலம் வாழப்போகின்றனர்.

சாதிவெறியர்களே இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?

பின் குறிப்பு: இந்த செய்தி ஊடகங்களில் கிசுகிசு, கள்ளக்காதல் ரசனை முதலான மலிவான நோக்கில் விதவிதமாக ஊதிப்பெருக்கி எழுதப்படுகிறது. இதில் காதல், சாதி போன்றவற்றின் சமூக யதார்த்தத்தை மட்டும் மனதில் கொண்டு நாங்கள் எழுதியிருக்கிறோம்.

  1. // கல்பனா தனது வீட்டாரின் சாதி வெறியை எதிர்த்து போராடுவதற்கு பதில் இத்தகைய கிரிமினல் வேலையை ஏன் மேற்கொண்டாள்? அது போல தினேஷூம் தைரியம் சொல்லி கல்பனாவையே திருமணம் செய்து கொள்ளாமல் தனது வீட்டு திருப்திக்கு வேறு ஒரு அப்பாவிப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு இப்போது கொலைகாரனாக மாறியது ஏன்?

    ஏனென்னால் சமூகத்தில் இருக்கும் பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான சாதி எனும் வில்லனை எதிர்ப்பது சுலபமல்ல என்பது இவர்கள் கருத்து. அதை விட கொலை பிரச்சினை இல்லை என்று இவர்கள் கருதுமளவு சாதி மறுப்புத் திருமணம் என்பது கடினமானது. இப்படி சாதி மறுப்பு திருமணங்களையும் காதலையும் எதிர்த்து பிரச்சாரம் மற்றும் தண்டனைகளை கொடுத்து வரும் இந்த சமூக அமைப்புதான் இவர்களை கொலைகாரர்களாக்கியிருக்கிறது. //

    தவறான ஜோடிகளுக்கு வக்காலத்து வாங்குவதால் கட்டுரையின் நோக்கம் பாழாய்போகும்..

    காதலிக்காக காத்திருக்காத காதலன் ; அந்த டுபாக்கூருக்காக கணவனைக் கொன்ற கிறுக்குக் காதலி ; போலீஸ் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல் இருந்தால் சீனிவாசனுக்கு அடுத்ததாக காதலனின் மனைவியையும் தூக்கியிருப்பார்களோ..?! அப்போதும் போலீஸ் கண்டுபிடிக்காவிட்டால் காதலனும் காதலியும் திருமணம் செய்து கொள்வார்களா..?! அப்போது மட்டும் பார்ப்பனியம் (செட்டியார், நாயுடு காதலில் பார்ப்பானின்-இயம் எங்கே வந்தது..?) அவர்களை அனுமதித்து விடுமா..?! அப்பாவிகளைக் கொன்று காதலை நிறைவேற்றுவதை விட, சமூகத்துடன் மோதிப் பார்த்து முதல் திருமணத்திலேயே இணைவது அல்லது தாங்கள் மட்டுமே சாவது காதலுக்கு மரியாதை.. அதைச் செய்யாத இந்த கொலைகார டுபாக்கூர் காதலர்களை உதாரணத்துக்கு எடுத்து பேரைக் கெடுத்துக் கொள்ளவேண்டுமா..?!

    • அம்பி, இவர்களை க்ட்டுரை கொலைகாரர்கள் என்றே கடுமையாக சாடுகிறது. அவர்களை டூபாக்கூர் என்று மென்மையாக அழைப்பதுதான் சரியல்ல. எனினும், சாதி மறுப்புக்கு போராட முடியாதவர்கள் எப்படி கொலைகாரர்களாக மாறினார்கள் என்பது தனியாக ஆய்வு செய்யப்படவேண்டிய விசயம். அதேநேரம் சமூக ரீதியாக இங்கே சாதி மாறி காதலிப்பதும், வாழ்வதும் எவ்வளவு கடினம், எத்தனை தடை என்பதை இளவரசன் – திவ்யா திருமணத்திலிருந்தே புரிந்து கொள்ளலாம். மற்றபடி உயர்வு தாழ்வு சாதி மேல் கீழ் போன்றவை இங்கே நெடுங்காலமாக பார்ப்பனிய இந்து மதத்தின் மூலமாக நிலைநாட்டப்பட்டு வந்தது. அதற்கு மகாபாரதம் முதல் மனுஸ்மிருதி வரையிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. பார்ப்பனியம் என்றால் என்ன என்று ஏராளமான வினவு கட்டுரைகள் மூலமும் உங்களுக்கு புரியவைக்க முடியவில்லை என்றால் நேரில் சந்தித்து விளக்குகிறோம். வாருங்கள்!

    • காதல்னாலே காத தூரம் ஓடும் இவர்கள் எங்கிருந்து சேர்த்து வைக்க போகிறார்கள்? காதல் என்பது ஒருவனுக்கு ஒருத்தி உணர்வு என்பதை மாற்றி வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, அறத்தை மீறிதான் வாழ வேண்டும் என கட்டாயபடுத்தியதன் விளைவு தான் இது. அவர்களை பெற்றவர்களே பொய்யாக வாழுங்கள் என்று கட்டாயபடுத்தும் பொது, அவர்களின் அற உணர்வு அற்று சுய ஆசைகளுக்கு கொலையும் செய்ய தூண்டுகிறது.

  2. vinavu is right,that girl kalpana chettiyar is not at all deflowered by that chettiyar boy,she deflowered by naidu boy,but that naidu girl deflowered by naidu boy,what kind of justice is this.vinavu will switch on some lights on this issue

  3. Chettiar & Naidu are equivalent Jati/Varna.This issue has nothing to do with the caste people,it has rather everything to do with the intentions of the girl,is she has so much courage to kill her husband with that idiot,then they should have refused the arranged marriage proposed in their families,there is no point taking such extreme measures now.

    such criminal people are very dangerous in society,tomorrow she might find another guy and she ll kill this dinesh babu for the sake of the other guy.

  4. முட்டாள் தனமான வாதம் வினவு……. அவர்கள் உண்மை காதலர்கள் என்றால் சமூகத்தை எதிர்த்து ஒன்று சேர்து வாழ்ந்து காட்டி அதை நிரூபித்து இருப்பார்கள்….. அன்றி அப்பாவி சீனிவாசனை கொன்ற்து… தன்கள் உல்லாச வாழ்வுக்கு அவர் இடையுரக நின்றதே….

  5. கள்ளகாதலுக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு வினவு இறங்கிவிட்டது…

  6. //காதல் திருமணங்களை எல்லாம் நாடகத் திருமணங்கள் என்று கூறிவரும் காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் இதில் பங்கு இல்லையா?// எல்லா காதலையும் தடுக்கவில்லையே. இதில் அவர்கள் பங்கு எங்கு இருக்கிறது. நாடக காதலையும் காசு பறிக்கும் கும்பலையும்தானே எதிர்க்கிறார்கள்.

    • இளவரசன் – திவ்யா நல்ல காதல்தானே, ‘நாடகக் காதல்’ இல்லையே? பிறகு ஏன் பாமக சாதி வெறியர்கள் பிரித்தார்கள்?

  7. எதுவும் ராமதாஸ் பற்றி செய்தி இல்லை என்றால் எதற்காவது ஒரு கட்டுரை எழுதி அதில் அவரை இழுக்கணும் எப்பதான் இந்த ஜாதி வெறி கட்டுரையாளர் நல்ல விசயத்துக்கு கட்டுரை எழுதுவார் கள்ள காதலுக்கு ராமதாஸ் என்ன செய்வார்

  8. மருத்துவர் அய்யா , என்றைக்கும் காதலை எதிர்த்ததில்லை , நாடக காதல் வேண்டாம் என்று தான் சொல்கிறார் . முதலில் இதை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் .நாடக காதலையும் காசு பறிக்கும் கும்பலையும்தானே எதிர்க்கிறார்கள். கள்ளகாதலுக்கு வக்காலத்து வாங்கும் அளவுக்கு உங்களுடைய தரத்தை நீங்கள் குறைத்துக் கொள்ள வேண்டாம் .

    • // நாடக காதல் வேண்டாம் என்று தான் சொல்கிறார் . //

      காதலிக்கும்போது மானே தேனே ஒழுகுவதும் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன பிறகு சனியன் என திட்டுவதும் என்பதுதான் பெரும்பாலான ஆண்களின் நிலை. இதுவும் ஒரு வகையில் நாடகம்தானே.

    • கபிலன், காதலுக்கு தடை சொல்லுபவர்களும், காதலர்களை எரிப்போம் என்று செய்து காட்டுபவர்களும்தான் கள்ளக்காதலை ஊக்குவிக்கிறார்கள்! ஏதோ ராமதாஸ் ஊர் ஊராக சென்று சாதி மறுப்பு காதல் திருமணங்களை நடத்துபவர் போல சித்தரிக்கிறீர்களே! நாங்கள் காதலை ஆதரிக்கிறோம், கள்ளக்காதலை தவறு என்கிறோம். ராமதாஸ் காதலை நேரடியாக மறுக்கிறார், அதனால் கள்ளக்காதல்கள் தோன்றுகின்றன.

      • காதலை மருத்தால் அது கள்ள காதாலாக மாறி விடுமா என்ன?
        அப்படி மாறினால் அதுக்கு பெயலர் காதலே அல்ல.
        ஒருவனை கொலை செய்யும் அளவுக்கு துணிவுள்ள ஒரு பெண்ணாலும் பையனாலும் சாதீயை எதிர்க்க முடியவில்லயா என்ன?

    • சரி நம்ம ராமதாஸ் சேர்த்து வைத்த உண்மைக் காதலர்கள் லிஸ்ட் இதுல இணைச்சிங்கனா எங்களுக்கும் தெரியும்ல அந்த நல்ல்ல்ல்ல்ல்ல்லவர பற்றி.

  9. பார்ப்பனியம் என்பதில் இன்னும் ஒரு தெளிவுக்கே வரவில்லை உடன் வாசகர்கள்! பார்ப்பனியம் என்பது சாதிப்பெயர் அல்ல! அது ஒரு இனத்தின் பெயரே! வந்தேறி ஆரியனையே பார்ப்பனர்கள் என்கிறோம். ஆரியரில் பல்வேறு சாதிகள் இருக்கின்ற போதும் பார்ப்பான் என்றால் அது ஒட்டு மொத்த, ஆரிய இனத்தவர்களான, பல்வேறு சாதிப்பிரிவுகளைக் கொண்ட பார்ப்பனர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும்.
    மக்களை நேசிக்கும் உண்மையான பொதுவுடமையாளர்கள் மற்றவர்களைப் போல் நுனிப்புல் மேய்வது போல சமூக அவலத்தின் விளைவைப் பார்க்க மாட்டார்கள்! அவலத்தின் வேரைத்தான் வெட்டி எறிய வேண்டும் என்பார்கள்! இராமதாசு போன்று நாற்காலிக்காக சாதி வெறியை மூளைக்குள் ஏற்றிய மக்கள் விரோதியே இந்த அவலத்தின் மூல வேர். மக்கள் திரளிலிருந்து களையப் படவேண்டியவர்கள் இராமதாசும் அவரைப் போன்ற சாதி வெறி பிடித்த மனித விலங்குகளுமே!

  10. காதல் திருமணங்களை எல்லாம் நாடகத் திருமணங்கள் என்று கூறிவரும் காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் இதில் முழுபங்கு உள்ளது. சாதரணமாக பார்த்தால் தெரியாது சமூகக்கண் கொண்டு நேர்மையாக பார்க்கவேண்டும்.அப்படி பார்ப்பவர்கள் மிகக்குறைவு, அதனால்தான் ராமதாசுன்னு சொன்னவுடனே சிலதுகளுக்கு மூக்கு சிவந்து விடுகிறது.

  11. காதலை ஏற்றுகொள்ள திரானியற்ற சமுகம், வேறு வழியின்றி கள்ளக்காதலை உற்பத்தி செய்யும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு நடைமுறை உதாரணம்.
    நல்ல காதல், போலி காதல், நாடக காதல் என்று பிதற்றுபவர்கள் எல்லாம், moral policing செய்து கொண்டுதிரிபவர்கள். மனித இனத்தின் வரலாறு முழுக்க இனக்கலப்பு நடந்து கொண்டேதான் இருக்கிறது. அறிவியலில் hybrid ஐ ஏற்றுகொள்ளும் படித்த ஜீவிகள், அறத்தில் ஏற்பதில்லை.அதற்க்கு முக்கிய காரணம் ஜாதி யில் வேரூன்றி போன பிற்போக்கான சமூகமாக இருப்பதுதான்.
    அதனால்தான்,சுதந்திரமாக துணையை தேர்ந்து எடுத்துகொள்ளும் மேற்குநாடுகளில் வேலை செய்யும் நம்ம ஊர் “படித்த அறிவு ஜீவிகள்”, கல்யாணம், என்றால் இங்கே கிராமத்தை நோக்கி ஓடி வருகிறார்கள்.

  12. Dalit thavaru seiya mattaragal enbathu thaan vinavu vathaam , oru velai avargal thavaru seivathu kandupidaka pattal , athi enna thavaru thaan pesum , unga nadu nilaimaiyai , marakanam la seathu pona rendu pera pathi peasathapothu therinjipochu.

    oru velai irantha irruvar dalit ah irrunthaal , vinavu ippadi amaithi kaakuma? entha yosikanum ellorum

  13. சரி நம்ம ராமதாஸ் சேர்த்து வைத்த உண்மைக் காதலர்கள் லிஸ்ட் இதுல இணைச்சிங்கனா எங்களுக்கும் தெரியும்ல அந்த நல்ல்ல்ல்ல்ல்ல்லவர பற்றி.

  14. பாண்டியராசு- விவசாயி, பெரம்பலூர் மாவட்டம் பாண்டியராசு- விவசாயி, பெரம்பலூர் மாவட்டம்

    http://www.maalaimalar.com/2013/06/16153123/panruti-man-murder-case-wife-a.html

    அவர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் குறிஞ்சிப்பாடியில் உள்ள கல்லூரியில் படித்தேன். அப்போது தினேஷ்பாபுவின் மனைவி வித்யா என்னுடன் படித்தார். இருவரும் நெருங்கிய தோழிகளாக இருந்தோம். வித்யா, தினேஷ்பாபுவை திருமணம் செய்து பண்ருட்டிக்கு வந்தார். அதன் பிறகு நான் அடிக்கடி வித்யாவை சந்திக்க அவர்களது வீட்டுக்கு சென்றேன். அப்போது எனக்கும் தினேஷ்பாபு வுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டோம். இந்த தொடர்பு நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு எனக்கும் சீனிவாச னுக்கும் திருமணம் நடை பெற்றது. நான் சென்னைக்கு சென்று விட்டேன் ஆனாலும் அவ்வப்போது பண்ருட்டிக்கு வந்து தினேஷ் பாபுவை சந்தித்தேன்.

    நான் சென்னையில் இருக்கும்போது அடிக்கடி தினேஷ்பாபுவுடன் பேசிக் கொண்டிருப்பேன். எனது கணவர் காலையில் வேலைக்கு சென்றுவிட்டால் இரவில்தான் வீடு திரும்பு வார். அவர் போனில் என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது எனது போன் என்கேஜ்டாக இருக் கும். இதனால் என் கண வருக்கு என் மீது சந்தேகம் ஏற்பட்டது. நீ யாரிடம் போனில் பேசினாய் என்று கேட்டதற்கு எனது குடும்பத்தினரிடம் பேசினேன் என்று கூறினேன். ஆனால் அவர் என் குடும்பத்தினரிடம் விசாரித்தபோது நான் அவர்களிடம் போனில் பேச வில்லை என்பது அவருக்கு தெரிந்தது. எனவே என் மீது அவருக்கு சந்தேகம் வலு வடைந்தது.

    இந்த நிலையில் எனக்கும் தினேஷ்பாபுவுக்கும் கல்ல தொடர்பு இருப்பதை எப்படியோ அவர் கண்டு பிடித்து விட்டார். எனவே எனக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். தினேஷ் பாபுவுடன் இனி போனில் பேசக்கூடாது என கண்டித்தார். இதனால் கணவரை தீர்த்து கட்டினால் தான் நிம்மதியாக இருக்க முடியும் என கருதினேன். இதுபற்றி எனது கள்ளக் காதலன் தினேஷ்பாபுவிடம் கூறினேன். அவரும் தீர்த்து கட்டுவதற்கு சம்மதம் தெரிவித்தார். கடந்த 1-ந் தேதி திருமண நாள் என்பதால் அன்று பண்ருட்டிக்கு செல்வது என்று முடிவு செய்திருந் தோம். அந்த நாளில் தீர்த்து கட்டிவிடலாம் என நாங்கள் திட்டம் தீட்டினோம்.

    இதற்காக கடந்த 24-ந் தேதியே நான் மட்டும் பண்ருட்டி வந்து விட்டேன். தினேஷ்பாபுவை சந்தித்து எப்படி கொலை செய்வது என்பது பற்றி முழுமையாக ஆலோசித்தோம். இதற்கிடையில் எனது கணவர் பண்ருட்டி வந்தார். கடந்த 31-ந் தேதி நாங்கள் குடும்பத்துடன் திருவந்திபுரம் சென்றோம். அப்போதே சீனிவாசனை தீர்த்து கட்ட தினேஷ்பாபு எங்களை பின் தொடர்ந்து வந்தார். ஆனால் அன்று சரியாக சந்தர்ப்பம் அமைய வில்லை. எனவே மறுநாள் தீர்த்துக் கட்டுவதற்கு முடிவு செய் தோம். அன்று நானே வலிய சென்று எனது கணவரை கடலூருக்கு போய் வரலாம் என அழைத்தேன்.

    இருவரும் மோட்டார் சைக்கிளில் கடலூருக்கு வந்தோம். அப்போது தினேஷ்பாபுவிடம் தகவலை தெரிவித்து விட்டேன். அவர் தனது நன்பர் முரளியுடன் எங்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தார். நாங்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றோம் என்ற தகவலை அவ்வப் போது எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் கொடுத்து கொண்டே வந்தேன். அதன் பிறகு சில்வர் பீச்சுக்கு சென்று அங்கு அமர்ந்திருந்தோம். சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து பண்ருட்டிக்கு புறப்பட்டோம். பண்ருட்டிக்கு நெல்லிக்குப்பம் வழியாக செல்லலாம் என சீனிவாசன் என்னிடம் கூறினார்.

    ஆனால் நான் திருவந்திபுரம் வழியாக செல்லலாம் என்று பிடி வாதம் பிடித்து அழைத்து சென்றேன். நெல்லிக்குப்பம் வழியாக சென்றால் அங்கு ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். திருவந்திபுரம் வழியில் காட்டுபகுதி அதிக மாக உள்ளது. எனவே அங்கு வைத்துதான் கொலை செய் வதற்கு வசதியாக இருக்கும் என்பதால் திருவந்திபுரம் வழியை நான் தேர்வு செய்தேன்.

    சில்வர் பீச்சில் இருந்து புறப்பட்டதும் மீண்டும் தினேஷ்பாபுக்கு தகவல் கொடுத்தேன். அவர் எங்களை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். திருவதிகை அணைக் கட்டு அருகே சென்றபோது நான் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி என் கணவரி டம் கூறினேன். அவர் நிறுத்தினார்.

    அப்போது பின் தொடர்ந்து வந்த தினேஷ்பாபுவும், முரளியும் எனது கணவரை பிடித்து சரமாரியாக கத்தியால் குத்தினார்கள். இதில் அவர் இறந்து விட்டார். கொள்ளையர்கள் தான் கொன்றதாக நினைக்க வேண்டும் என்பதற்காக எனது நகைகளை தினேஷ் பாபுவிடம் கழற்றி கொடுத் தேன். எனது செல்போ னையும் அவரிடம் கொடுத்துவிட்டேன். ஆனால் நான்தான் கொலை செய்ய ஏற்பாடு செய்தேன் என்பதை போலீசார் கண்டு பிடித்துவிட்டார்கள்.

    வினவு ஆசிரியரே கல்பனாவின் கல்லூரி தோழியை திருமணம் செய்ததால் தான் தினேஷ் உடன் பழக்கம் ஏற்பட்டு இருப்பதாக மாலை மலர் செய்திகள் வருகிறது. பதிவிடும் முன்னர் உண்மை தன்மையை பரிசோதிக்க வேண்டுகிறோம்.

    • பாண்டிய ராசு இது தினமணியில்வந்த செய்தி
      ________________________________________
      மருந்துக் கடை ஊழியர் கொலை வழக்கில் திருப்பம்: மனைவி கைது

      கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, சென்னையைச் சேர்ந்த மருந்துக்கடை ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திடீர் திருப்பமாக, அவரது மனைவி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை, தனது தூண்டுதலால் காதலன் தினேஷ்பாபு கொலை செய்ததாக போலீஸாரிடம் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

      கடலூர் மாவட்டம் பண்ருட்டி காந்தி சாலையைச் சேர்ந்தவர் சீனுவாசன் (30). சென்னை பட்டாளத்தில், மருந்துக்கடையில், ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கும் பண்ருட்டி தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சந்திரசேகர் மகள் கல்பனாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

      ஜூன் 1-ஆம் தேதி, முதலாம் ஆண்டு திருமண விழாவை பண்ருட்டியில் உள்ள தனது மாமியார் வீட்டில் கொண்டாடிய சீனுவாசன், மனைவி கல்பனாவுடன் பைக்கில் திருவதிகை அருகே சென்றபோது மர்ம நபர்களால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

      சீனுவாசனை, நகைக்காக மர்மநபர்கள் கொலைசெய்ததாக, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கல்பனா போலீஸாரிடம் புகார் கூறியிருந்தார்.

      இதுதொடர்பாக பண்ருட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இக்கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. முருகன், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் ராதிகா உத்தரவில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

      இதனிடையே, இக்கொலை தொடர்பாக, பண்ருட்டி மேலப்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ்பாபு (27), சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி சரணடைந்தார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரை, பண்ருட்டி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், கல்பனாவுக்கும், தனக்கும் தொடர்பு இருந்ததும், கல்பனா தூண்டுதலின் பேரில் நண்பர் முரளியுடன் சேர்ந்து சீனுவாசனை கொலை செய்ததாகவும் தினேஷ்பாபு கூறியுள்ளார். இதையடுத்து கல்பனாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

      போலீஸாரிடம் கல்பனா கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கல்லூரியில் படிக்கும் போது தினேஷ்பாபுவுடன் பழக்கம் ஏற்பட்டது. வேறு ஜாதி என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் மறுத்துவிட்டனர். தினேஷ்பாபுக்கு வேறு திருமணம் நடந்த பிறகும் எங்கள் பழக்கம் தொடர்ந்தது. இதனால் பெற்றோர், உறவுக்காரரான சீனுவாசனுக்கு என்னை திருமணம் செய்து வைத்தனர்.

      எங்கள் தொடர்பு தெரியவரவே, கணவர் என்னை கண்டித்தார். எனவே அவரை கொலை செய்ய முடிவெடுத்தேன். இதற்காக கடந்த 6 மாதமாக தினேஷ்பாபுவுடன் திட்டமிட்டேன். அதன்படி, திருமண நாளன்று தினேஷ்பாபு, அவரது நண்பருடன் சேர்ந்து சீனுவாசனை கொலை செய்தார். இதை மறைப்பதற்காக நகை, செல்போனை தினேஷ்பாபுவிடம் கொடுத்துவிட்டு கொள்ளையர்கள் வழிப்பறி செய்து கொலை செய்ததாக நாடகமாடினோம் எனக் கூறியுள்ளார்.

      இதனைத் தொடர்ந்து தினேஷ்பாபு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரத்தக்கறை படிந்த துணி, கத்தி, கல்பனா கொடுத்த நகை மற்றும் பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முரளியை பண்ருட்டி போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      __________________________________________________________________

      பொதுவாக கள்ளக்காதல் என்றால் பத்திரிகைகள் அதன் சமூக அவலத்தை மறைத்துவிட்டு காமாந்தர கிசுகிசு செய்திகளாக வெளியிடுவார்கள். அதை புரிந்து கொள்ளவும். மேலும் இது குறித்து நாங்கள் பண்ருட்டியில் எமது தொடர்புகள் மூலம் தெளிவாக விசாரித்துவிட்டே எழுதியிருக்கிறோம். இந்த செய்தியின் சமூக பிரச்சினையை விடுத்து விட்டு கிசுகிசு ரசனையில் மூழ்கி விடாதீர்கள். ஒரு சிலர் கல்பனாவை கிட்டத்தட்ட விலைமாது போல சித்தரித்து பின்னூட்டம் இடுகிறார்கள். இன்னும் சிலர் இதை விட ஆபாசமாகவும் கதைகள் புனைந்து எழுதுகிறார்கள். இவர்கள்தான் அத்தகைய கிசுகிசு ரசனையில் மூழ்கியிருக்கிறார்கள். மற்றவர் ஒழுக்கத்தை நிர்ணயிக்கும் இந்த யோக்கியர்கள் முதலில் தங்களை திருத்திக் கொள்ளட்டும்.

  15. ராமதாஸ் எத்தனையோ முறை சொல்லிவிட்டார்,காதலுக்கு நாங்கள் எதிரியல்ல திட்டமிட்ட நாடக காதலுக்கும் , சினிமா மோக சிறுவயது காதலுக்கு மட்டுமே எதிரி என்று..
    இந்த செவுட்டு வினவிர்க்கு அவர் சொன்னது கேட்கவில்லையா?

  16. எதற்கெடுத்தாலும் பார்ப்பனியம்தான் காரணம் என்றால் இது போன்றவை தொடரத்தான் செய்யும்.

    சாதியை இன்னும் அதிதீவிரமாக தாங்கிப் பிடித்துக்கொண்டிருப்பது பார்ப்பணர்கள் அல்ல. அவர்களின் பெயரை பயன்படுத்திக்கொண்டு வாழும் மற்ற சாதியினரே.

  17. ஜாதி என்பது அழுத்தம் திருத்தமான மறூக்கப்படமுடியாத உண்மை. ஆனால் திருமணம் போன்ற விஸயங்களுக்கு அது மட்டுமே காரணமாகுமா? ஒழுக்ககேடான சமூக அமைப்பு, வேலையில்லலா திண்டாட்டம் போன்றவைகள். வேலை இல்லை என்பதற்காக பசிக்காமலோ, உணர்ச்சிலக

  18. இந்த கள்ளக்காதலுக்கு காரணம் கம்யுனிஸ்ட்களுக் தி.க வும்தான்.. ஒவ்வொரு ஜாதியும், தங்கள் கலாச்சாரத்தை கடைபிடித்து கட்டுக்கோப்பாக வாழ்ந்துவந்ததை, தி.க பரதேசிகள் தான் ஜாதி மறுப்பு என்னும் பெயரில் குலைக்க முற்பட்டனர்.. வயதுக்கு வந்தவுடனே திருமணம் முடித்து வைத்த நிலையில், எந்த பெண்ணும் முறை தவறி நடக்கும் வாய்ப்பு இருக்கவில்லை.. ஆனால், பெண்ணீயம் என்று சொல்லி, 18 வயது வந்தால்தான் திருமணம் என்று கொண்டுவந்தது, கம்யுனிச —-. 18 வயது வரை, எந்த பெண்ணுக்கு பையனுக்கும் உணர்ச்சிகள் இருக்காதா என்ன..

    இந்த மாதிரி சமூகத்தை சீரழித்த ——– இன்று அதே சமூகத்தை குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன..

    தீண்டாமையினால் எந்த ஜாதிக்கும் எந்த பாதிப்பும் இல்லை.. ஆனால் தீண்டாமையை எதிர்க்கிறோம் என்று சொல்லிக் கொண்டு கம்யுனிஸ்ட்களுக், தி.கவினரு செய்த அட்டூழியங்களும், அடக்குமுறைகளுமே ஏராளம்..

  19. காதல் என்னும் அறத்தை மறுத்து வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, அறத்தை மீறிதான் வாழ வேண்டும் என கட்டாயபடுத்தியதன் விளைவு தான் இது. அவர்களை பெற்றவர்களே பொய்யாக வாழுங்கள் என்று கட்டாயபடுத்தும் பொது, அவர்களின் அற உணர்வு அற்று சுய ஆசைகளுக்கு கொலையும் செய்ய தூண்டுகிறது.ஆறம் சார்ந்த வாழ்க்கையே இன்று எந்த பெற்றோராலும் பிள்ளைகளுக்கு கற்றுதரபடுவதும் இல்லை ஏற்கபடுவதும் இல்லை. நீ செழிப்பாக வாழ எதை வேண்டுமானாலும் செய்துகொள் என்று சொல்லியே ஒரு தலைமுறை அடுத்த தலைமுறையை உருவக்குவதன் ஒரு விளைவு தான் இது.

  20. இந்த செய்தி ஊடகங்களில் கிசுகிசு, கள்ளக்காதல் ரசனை முதலான மலிவான நோக்கில் விதவிதமாக ஊதிப்பெருக்கி எழுதப்படுகிறது….. இப்ப நீ என்ன ராமாயணமா எழுதி இருக்கே…. இதுல உருப்படியா ஏதாவது இருக்கா…… சும்மா ஏதாவது கிறுக்கி தாலிய அறுக்காதேயா…..

    • In other media the couples are projected as guilty but here the society is blamed and how the society forced two individuals not to live their dream is explained

  21. எல்லாம் சரி. அந்த அப்பாவி சீனிவாசன் என்ன பாவம் செஞ்சான்? இந்த ரெண்டு பேரும் ஓடிப்போயி கல்யாணம் செஞ்சிருக்கலாம். இல்ல அவங்க அப்பன்-ஆத்தாவை போட்டு தள்ளியிருக்கலாம்.

    // ஏனென்னால் சமூகத்தில் இருக்கும் பார்ப்பனியத்தின் ஏற்றத் தாழ்வான சாதி எனும் வில்லனை எதிர்ப்பது சுலபமல்ல என்பது இவர்கள் கருத்து. அதை விட கொலை பிரச்சினை இல்லை என்று இவர்கள் கருதுமளவு சாதி மறுப்புத் திருமணம் என்பது கடினமானது. //

    எனது நெருங்கிய சொந்தத்தில் மூன்று பேர் ஜாதி-மதம் மாறி திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கின்றனர். மற்றவர்கள் அவர்களோடு சகஜமாகத்தான் பழகுகின்றனர்.

    • @Venkatesan

      தான் மணக்க போகும் பெண்ணிடம் என்னை பிடிதிருகிறதா என்று கீட்காதவன் அந்த மாப்பிள்ளை . அவனுக்கு உரிய தண்டனை கிடைத்துள்ளது.

      நான் ஒரு பெண்ணை பார்த்தேன் , அவரது தந்தை பிடிதிருகிறதா என்று கேட்டார் . நன் அந்த பெண்ணிடம் தனியாக பேசிய பின்னர் சொல்வதாக கூறி பேசினேன்.

      அந்த பெண்ணிடம் , உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னிடம் கூறுங்கள் , உங்கள் தந்தையிடம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறி விடுகிறேன் , என்று சொன்னவுடன் வந்த பதில் “அவருக்கு என்னை பிடிக்கவில்லை. திருமணத்தில் விருப்பம் இல்லை ” என்பதே

      ஒரே ஒரு கேள்வி கேட்டு இருந்தால் வாழ்வு பிழைத்திருக்கலாம்

      • @ராமன்
        அவன் என்ன கடத்திட்டு போயா கல்யாணம் பண்ணான்? அவன் பக்கத்துல உக்காந்து தாலி கட்டிக்கிட்டாளே. அவளுக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்குன்னு தானே அவன் நெனைப்பான்.

        அம்பி கேட்ட கேள்விக்கு பதில் என்ன? இவனை தீத்துக் கட்டிட்டு என்ன செய்றதா உத்தேசம்? ரெண்டு பேரும் வீட்டை எதுத்து கல்யாணம் பண்றதா? அப்ப மட்டும் மறுபடியும் ஜாதி குறுக்கே வராதா?

        ரெண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிட்டு கூடியிருக்கலாமே ஐயா.

        ஜாதி என்னும் சமூக கொடுமை இவர்களது குற்றத்தை நியாயப் படுத்தாது.

        • // அவன் என்ன கடத்திட்டு போயா கல்யாணம் பண்ணான்? அவன் பக்கத்துல உக்காந்து தாலி கட்டிக்கிட்டாளே. அவளுக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்குன்னு தானே அவன் நெனைப்பான்.//

          Why should he assume ? Why not ask? He basically purchased her from her parents and deserves this end.

          Whe she was with her parents, problem is about marriage.
          but after marriage with a stranger everyday life becomes tough,that would have pushed her to make extreme decision

          • // Why should he assume

            இவன் கேட்டாதான் அவ சொல்லுவாளா? காலேஜ் எல்லாம் படிச்சவ தானே. கல்யாணத்துக்கு முந்தியே ஒத்த ரூபா போன் போட்டு “உன்னைய கல்யாணம் கட்ட எனக்கு பிடிக்கல. மீறி கட்டினா கொன்னுடுவேன்” அப்படின்னு ஒரு சொல்லியிருந்தா அவன் தலை தெறிக்க ஓடியிருப்பான்.

            // He basically purchased her from her parent

            அப்படியா? எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினான்? அப்படியாயின் இது trafficking குற்றம் ஆகாதா? அந்த அம்பிகாபதி போலீசிடம் அமராவாதி விலைக்கு விற்கப்பட்டதை சொல்லி விலைக்கு விற்ற அமராவதியின் பெற்றோர், விலைக்கு வாங்கிய சீனிவாசன் ரெண்டு பேரையும் உள்ளே தள்ளி, அமராவதியை மீட்டிருக்கலாம்!

            இந்த “விவாதம்” லூசுத்தனமா போயிட்டிருக்கு. நான் உளறியாச்சு. அடுத்து நீங்க ஏதாவது உளறுங்க. அத்தோட முடிச்சுப்போம். வேற ஏதாவது உருப்படியான வேலையை பார்ப்போம்.

            • Gentleman!
              Women have lot of limitations in the society! You are expecting a lot from women.

              If she had called him and if her parents came to know about this, they would have made her life hell.

              I gave you my case, A real life example.
              Person who was talking to me was forced to meet me. All I had to do is promise her that her preference will not be made known to others and then she told me the truth.

              Well you still think society has no role in influencing the decisions of individuals..

    • //எனது நெருங்கிய சொந்தத்தில் மூன்று பேர் ஜாதி-மதம் மாறி திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கின்றனர். // அதில் எத்தனை பேர் அவர்களை விட தாழ்ந்தது என்று கருதப்படும் சாதியில் திருமணம் செய்துள்ளனர்?

      • ஒருவர் வேற்று மதத்தில் மணம் செய்தார். மற்ற இருவரும் இந்து மதத்துக்குள்ளேயே தங்களை விட தாழ்ந்தது என்று கருதப்படும் ஜாதியில் மணம் செய்தனர் (இதில் ஒருவர் தலித்).

  22. ‘என்னப்பா இவ்வளவு வயசாச்சு ஏன் இன்னும் காதலிக்க வில்லை?’ என்று தம் மகன் ஒரு பெண்ணை காதலிக்க வைக்க இயலாதவனோ என்ற ஐயத்தில் பெற்றோர்கள் அவனை செல்லமாய் ஓட்டுவது போன்ற காட்சிகளை சர்வ சாதாரணமாக மேல்நாட்டு திரைப்படங்களில் எத்தனை வருடங்களாய் பார்த்திருக்கிறோம்?இங்கே மட்டும் ஏன் 2013 லும் இப்படி இருக்கிறார்கள்?எல்லா துறைகளிலும் அவர்களை காபி அடிக்கும் இந்தியர்கள் காதல் விஷயத்தில் இவ்வளவு வளர்ச்சி இல்லாமல் இருப்பது சாதி என்ற கருத்தியல் இங்கு ஆழமாய் வேரூன்றி இருப்பதால் தான்.அதை தூக்கி குப்பையில் போடும் இளையோர் துணிவில் தான் சமத்துவம் நம் நாட்டில் ஒரு 50 வருடத்திலாவது சாத்தியம்.

  23. //கல்பனாவின் விருப்பப்படி தினேஷை திருமணம் செய்து வைத்திருந்தால் இந்தக் கொலை நடந்திருக்காது. கல்பனாவும் தினேசும் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்பது தான் ராமதாசின் கருத்து. இதன் மூலம் இது போன்ற கள்ளக்காதலையும், கொலைகளையும் ஊக்குவிப்பவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.//

    டாஸ்மாக்கை ஒழிச்சா கள்ளச்சாராயம் பெருகும்னு சொல்ற மாதிரியே இருக்கு… 😀

    • காதல் திருமணம் செய்து கொண்ட சீனு தன்னையே டாஸ்மாக் என்று கேலி செய்வது மனதுக்கு இதமாக இல்லை!

      • இது மாதிரி தான் எடுத்துப்பீங்கன்னு நல்லா தெரியும்…

        உங்களோட ஒப்பீடு தவறு என்கிறேன். காதல் திருமணம் செய்யாதவர்கள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறார்கள் என்பதை போல எழுதியிருக்கிறீர்கள்.

        காதல் திருமணம் செய்துவைத்துவிட்டால் கள்ளக்காதல்+கொலை நடந்திருக்காது என்பதை போல எழுதியிருக்கிறீர்கள். பல காதல் திருமணங்கள் புரிந்தவர்கள் கூட கள்ளக்காதல், கொலைகள் எல்லாம் நடந்திருக்கிறது தான்.

        மதுவிலக்கு நடைமுறைப்படுத்தினால் கள்ளச்சாராயம் பெருகும்னு அரசியல்வாதிகள் சொல்றதை போல இருக்குங்குறேன்…

  24. இந்த கள்ள உறவு காதலில் வரும் பெண் மீதான வெறுப்பு என்பது மனதின் உடனடி எதிர்வினை. ஆனால், இந்த பிரச்சினைக்குள் இருக்கும் சமூகவியல் காரணத்தை வெளிப்படுத்தியிருக்கிறது வினவு கட்டுரை. உண்மையில் இது மட்டுமே ஒரு ஊடகத்தின், ஒரு அரசியல் இயக்கத்தின் கடமையாக இருக்க முடியும். சில நபர்கள் வேறுவேறு பத்திரிகைகளில் இந்த சம்பவம் தொடர்பாக எழுதப்பட்டிருக்கும் விவரணைகளை வைத்து வம்பிழுக்க முயல்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முயற்சிப்பது வீண். ஒரு பக்கம் தினத்தந்தி, மாலைமலர் மற்றொரு பக்கம், வினவு. கிளுகிளுப்பு மனநிலையிலிருந்து அவர்களாக மேலெழ அவகாசத்தை மட்டுமே நாம் வழங்க முடியும். பதிலளிப்பது வீண் வேலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க