முகப்புசெய்திஷாஜி : குடிகார கொலைகாரனுக்கு முதல் வகுப்பு சிறை !

ஷாஜி : குடிகார கொலைகாரனுக்கு முதல் வகுப்பு சிறை !

-

மே 22-ம் தேதி நள்ளிரவில் குடித்து விட்டு தனது மெர்சிடஸ் பென்ஸ் காரை வேகமாக ஓட்டி 13 வயது சிறுவன் முனிராஜை கொலை செய்து 10 வயது சிறுமி சுபாவை படுகாயப்படுத்திய முதலாளி கோமான் ஷாஜி, ராஜ மரியாதைகளுடன் புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

முனிராஜ்-குடும்பம்
கொல்லப்பட்ட சிறுவன் முனிராஜ் (இடது), சோகத்தில் அவரது குடும்பம் (வலது)

2012-ல் காலாவதியாகி விட்ட ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமலேயே கார் ஓட்டி கொலை செய்த ஷாஜியை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால், அவர் போலீசிடமிருந்து மாயமாக தப்பித்து, காரில் பெங்களூரு போயிருக்கிறார். பெங்களூருவிலிருந்து கொழும்புவுக்கு விமானத்தில் பறந்து, கொழும்புவில் இருந்து தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்குக்கு தலைமறைவாகியிருக்கிறார்.

லண்டனில் படித்த ஷாஜிக்கு தாய்லாந்தில் பல நண்பர்கள் உள்ளார்களாம். பாங்காக்கில் உள்ள ஒரு மோட்டலில் (பயணிகள் தங்கும் விடுதி) பதுங்கிக் கொண்ட அவர், அந்த ஊர் சிம் கார்ட் ஒன்றை வாங்கி சென்னையில் உள்ள உறவினர்கள், நண்பர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். விபத்து தொடர்பான விசாரணையில் என்ன நடக்கிறது என்று கவனித்துக் கொண்டிருக்கிறார்.

ஷாஜியின் குடும்பத்துக்குச் சொந்தமான எம்பீ குழுமம் ஹோட்டல், சாராயம், சர்க்கரை, மின் உற்பத்தி, போக்குவரத்து, கட்டுமானம், ஏற்றுமதி என்று பல்வேறு துறைகளில் கால் பதித்து நிற்கும் ஆண்டுக்கு ரூ 2000 கோடி ஈட்டும் ஒரு பெருநிறுவனமாகும். ஷாஜியின் சார்பாக அவரது தந்தை எம்பீ குழும தலைவர் புருஷோத்தமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்பிணை வாங்குவதற்கு செய்த முயற்சி போலீசாலும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களாலும் முறியடிக்கப்பட்டது. தன் மகன் சட்டத்தை மதித்து சரணடைந்து விடுவான் என்று புருஷோத்தமன் கௌரவம் சிவாஜி போல வசனம் பேசக் கூட செய்தார். ஆனால் சரணடையப் போவதாகச் சொன்ன ஜூன் 10-ம் தேதி வரை ஷாஜி தன் பதுங்கல் இடத்திலிருந்து வெளிவரவில்லை.

empee குழுமம்
empee குழுமம்

எழும்பூர் நீதிமன்றம் அவர் தலைமறைவான குற்றவாளி என்று அறிவித்தது. ஷாஜி வந்து சேர்ந்ததும் கைது செய்யும்படி இந்தியாவின் முக்கிய விமான நிலையங்கள் அனைத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டது.

இதற்கிடையில் கேரளா உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வாங்குவதற்கு புருஷோத்தமன் கும்பல் முயற்சி செய்தது. ஷாஜி குடும்பத்துடன் கொல்லத்தில் வசிப்பதாகச் சொல்லி கேரள உயர்நீதிமன்றத்தில் கொல்லம் முகவரியுடன் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னதாக தாக்கல் செய்த மனுவில் அவர் சென்னையில் எழும்பூரில் வசிப்பதாக சொல்லியிருந்தார். இது நீதிமன்றத்தை ஏமாற்ற முயற்சிப்பதற்கு நிகரானது என்று கேரள உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

கேரள உயர்நீதிமன்றமும் ஷாஜியின் மனுவை நிராகரித்து விட்டது. ஷாஜியின் சொந்த ஊரான கொச்சி விமான நிலையத்துக்கு சென்னை காவல் துறை முன் எச்சரிக்கை அனுப்பியிருந்தது. லங்கா ஏர்லைன்சில் கொழும்பு-கொச்சி விமான பயணச் சீட்டு பதிவு செய்த தகவல் சென்னை டிராவல் ஏஜென்ட் மூலம் சென்னை காவல் துறைக்கு தெரிய வந்தது.

ஷாஜி
மெருகு குலையாத ஷாஜி

அதைத் தொடர்ந்து சென்னை காவல் துறையினர் கொச்சிக்குச் சென்று அங்கு வந்து இறங்கிய ஷாஜியை கைது செய்தனர். 20 நாட்கள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை அலுங்காமல், குலுங்காமல் ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஏற்றி சென்னைக்கு கொண்டு வந்தனர். நீல பிளேசர், வெள்ளைச் சட்டை, கருப்பு பேன்ட் அணிந்து பணக்கார கனவானாக ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டு அழைத்துச் செல்லப்பட்டார் ஷாஜி.

லைசன்ஸ் இல்லாமல் கார் ஓட்டியது, ஒரு சிறுவனை கொன்றது, ஒரு சிறுமியை படுகாயப்படுத்தியது, குற்றம் நடந்த இடத்தை விட்டு ஓடிப் போனது, 20 நாட்களாக தலைமறைவாக இருந்தது, போலீசுக்கு போக்கு காட்டியது, நீதிமன்றத்தை ஏமாற்றியது இப்படி வரிசையாக குற்றப் பட்டியல் இருந்தும் புழல் சிறைக்கு அனுப்பப்பட்ட ஷாஜிக்கு அவரது கோரிக்கையின் படி முதல் வகுப்பு வசதிகள் வழங்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

ஒரு குற்றவாளி, அதிலும் வசதி படைத்த முதலாளியாக இருக்கும் பட்சத்தில் அவனைக் கைது செய்வதும், முதல் வகுப்பில் சிறை வைப்பதாக இருந்தாலும், எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது! இறுதியில் ஏதாவது மேலாட்டமான தண்டனை, அபராதத்துடன் ஷாஜி வெளியே வருவது உறுதி.

மேலும் படிக்க

 1. அரசாங்க விதிகள் துட்டு இருக்கிறவனுக்கு நிறைய வசதிகள் செய்து தருகின்றன என்பது ஒருபுறம்!

  மறுபுறம்,லஞ்சமாக கொடுத்தால், எல்லாம் சப்ளை செய்யக்கூடிய சிறை தான் புழலும்!

 2. இருபது நாட்கள் போலிஸுக்கு போக்கெல்லாம் காட்டியிருக்க வாய்ப்பில்லை. விரைவில் வெளிவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் திரைமறைவில் நடந்தபின்னரே தற்போது வெளிவந்திருக்கிறான் கொலையாளி. சிறையில் விதவிதமான வகுப்புகளெல்லாம் ஏற்பதற்கில்லை. நீதிக்கு முன் அனைவரும் சமம் என்று எவனாவது சொன்னால் செருப்பைக் கழட்டித்தான் அடிக்கவேண்டும்.

 3. ஒரு வேளை புஜ தொ கம்யூனிஸ்ட் காரங்களுக்கு இந்த மாதிரி ஹய் கிளாஸ் ஜெயில் குடுக்கமா கொசு கடிகேஎல போட்டு பெண்டு எடுகரதள வினாவுக்கு பொறமை போல

  • கும்கி கவலை வேண்டாம்…
   உங்களைப் போன்ற தூங்கும் ஆசாமிகள் விரைவில்
   அனுபவிப்பீர்கள்

  • அது உங்கள மாதிரி அழுக்கு புடிச்ச தோழர்கள் களுக்கு எங்களுக்கு இல்லை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க