Wednesday, February 21, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் !

பா.ம.க.வின் சாதிவெறி : இருட்டில் கல்லெறிந்த சத்திரிய வீரம் !

-

த்தம் காலனியில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே மரக்காணம் தாக்குதலும் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாகியிருக்கிறது. 2011-ஆம் ஆண்டில், மாமல்லபுரம் வன்னியர் விழாவுக்குச் சென்ற கும்பல் எந்த இடத்தில் தாக்குதல் நடத்த முயன்று அது முறியடிக்கப்பட்டதோ, அதே இடத்தில் இப்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தீவைப்பு, கொள்ளை உள்ளிட்ட அனைத்தும் நத்தம் காலனி தாக்குதலை அப்படியே ஒத்திருக்கின்றன.

கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து சுமார் நூறு மீட்டர் உள்ளே இருப்பதும், இடையில் இருக்கும் அடர்த்தியான தைலமரக் காட்டினால் முற்றிலுமாக மறைக்கப்பட்டிருப்பதுமான தாழ்த்தப்பட்டோர் காலனியின் மீது தாக்குதல் நடத்துவதற்கு உள்ளூர் பா.ம.க.வினர்தான் உடன் இருந்து திட்டமிட்டுக் கொடுத்துள்ளனர். இது தன்னெழுச்சியாகவோ, தற்செயலாகவோ நடந்த தாக்குதல் அல்ல. பிரச்சினைக்குரிய இடம் என்று தெரிந்தும் அந்த இடத்தில் மாமல்லபுரம் செல்லும் வண்டிகள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டதும், அங்கே பெயருக்கு சில போலீசார் மட்டுமே நின்றிருந்ததும், இந்தத் தாக்குதல் திட்டத்தை நிறைவேற்ற போலீசு ஒத்துழைத்துள்ளதையே காட்டுகிறது. இந்த விசயத்திலும் நத்தம் காலனி தாக்குதலின்போது போலீசு நடந்து கொண்டதற்கும், மரக்காணத்தில் நடந்துள்ளதற்கும் அதிக வேறுபாடு இல்லை.

கட்டையன் தெரு
மரக்காணத்திற்கு அருகிலுள்ள கட்டையன் தெரு என்ற ஊரில் வன்னிய சாதிவெறிக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு.

மாமல்லபுரம் விழாவாகட்டும், மரக்காணம் தாக்குதலாகட்டும் இரண்டின் நோக்கமும் தாழ்த்தப்பட்டோர் எதிர்ப்பு ஆதிக்க சாதிவெறிதான். இருப்பினும் வன்கொடுமை குற்றம் என்ற அடிப்படையில் கையாள்வதற்குப் பதிலாக, பொதுச்சோத்துக்கு சேதம், வன்முறை என்ற சட்டம்-ஒழுங்கு கோணத்திலேயே பெரும்பாலான வழக்குகளைப் பதிவு செய்திருக்கிறது ஜெ அரசு. நத்தம் காலனி தாக்குதலிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சாதிவெறியர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், முதல் சுற்றில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க்கினால் கைது செய்யப்பட்ட 141 பேருக்கு மேல் வேறு யாரும் அதன் பின்னர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை.

சாதி வெறியர்களாக இருக்கட்டும், இந்து மதவெறியர்களாக இருக்கட்டும் அவர்கள் மீது உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுவதுமில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதுமில்லை. மாறாக, “தடையை மீறியது, உரிய நேரத்தில் கூட்டத்தை முடிக்காதது” போன்ற உப்புப் பெறாத விசயங்களுக்காக அப்போதைக்கு கைது செய்து சில நாட்கள் சிறை வைக்கப்படுகின்றனர். அந்த கைது நடவடிக்கையையே பெரும் சாதனை போல ஊடகங்கள் மூலம் காட்டப்படுகின்றன. அல்லது ஒரு சிலர் குண்டர் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்களில் கைது செய்யப்பட்டு ஓரிரு மாதங்கள் சிறை வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்படுகின்றனர். தற்போது நடந்து வருவதும் அதுதான்.

மாமல்லபுரம் விழாவிலும் சரி, அதற்கு முன்னரும் சரி, ராமதாசின் தாக்குதல் கருணாநிதியையும் தலித் மக்களையும் நோக்கியே இருந்தது. “நாங்க என்ன சோப்பு போடுற சாதியா, நாங்க என்ன மோளம் அடிக்கிற சாதியா, அக்கினியில் பொறந்தவன் வன்னியன்” என்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியும் தொடர்ந்து பேசிவருகின்றனர். இத்தகைய சாதிவெறிப் பேச்சுகள், நடவடிக்கைகளுக்காக ராமதாசு, காடுவெட்டி குரு ஆகியோர் மீது டஜன் கணக்கில் வன்கொடுமை வழக்குகள் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஜெ. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

“வன்னியனைத் தவிர வேறு யாரையும் ஜெயிக்க விடமாட்டோம், நாங்க கண்ணசைத்தா என்ன நடக்கும் தெரியுமா, நாங்க கலவரம் பண்ணா தமிழகம் தாங்காது”என்ற மாமல்லபுரம் பேச்சுகள் தலித் எதிர்ப்பு என்ற எல்லையைத் தாண்டி மொத்த சமூகத்துக்கும் சவால் விட்டன. வெறியூட்டும் பேச்சுகளால் முடுக்கி விடப்பட்ட வன்னிய குல சத்திரியக் கொழுந்துகள், தமிழகத்தை ஆளப்பிறந்த பல்லவ மன்னர் பரம்பரை என்ற தோரணையில், மாமல்லபுரம் தொல்லியல் சின்னங்களைத் தமது பிதுரார்ஜித சொத்தாகக் கருதி, அவற்றின் மீது உரிமையோடு மஞ்சள் கொடியேற்றி நடனமாட, இந்தச் சூழலால் போதை தலைக்கேறிய ராமதாசு, “முடிந்தால் வழக்குப் போடு” என்று ஒரு பேச்சுக்கு சவால் விட்டார். இதன் விளைவுதான் கத்திரி வெயிலில் திருச்சி சிறையே அன்றி, அது சாதிவெறி நடவடிக்கைக்கான வழக்கோ, தண்டனையோ அல்ல.

இருப்பினும், அந்தக் கைதுக்கும் பயன் இல்லாமல் இல்லை. கைது நடவடிக்கைகள் தொடங்கியவுடன் “தமது கண்ணசைவில் ஒரு மாவட்டத்துக்கே தீ வைக்கும் ஆற்றல் பெற்ற” ஆண்ட பரம்பரை சாதிச்சங்கத் தலைவர்கள் தெறித்து ஓடி ஒளிந்து, முறுக்கு மீசைகளின் “வீரத்தை”அம்பலப்படுத்திக் கொண்டனர். அதேநேரத்தில் ராமதாசு கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கட்டவிழ்த்துவிட்ட வன்முறையின் மூலம், தாங்கள் தலித் மக்களுக்கு மட்டுமின்றி மொத்த சமூகத்துக்குமே எதிரிகள் என்பதை பா.ம.க. சாதி வெறியர்கள் தெளிவாக எடுத்துக் காட்டினர்.

ராமதாசு கைதுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் உயிரைப் பற்றிக் கடுகளவும் கவலைப்படாமல் பா.ம.க. காலிகள் ஓடும் பேருந்தின் ஓட்டுநரைக் குறிவைத்து இரவு நேரத்தில் கல் வீசியிருக்கின்றனர். ஊத்தங்கரை அருகே இரவு நேரத்தில் அரசுப் பேருந்தை தடுத்து நிறுத்தி பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருக்கின்றனர். என்ன ஏதென்று தெரியாத பயணிகள் எகிறிக் குதித்து மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றனர். லாரிகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்திருக்கின்றனர். அரியானா மாநில ஓட்டுநர் ஒருவர் தீக்காயத்தால் இறந்திருக்கிறார். பாலங்கள், குடிதண்ணீர்க் குழாய்கள் தகர்க்கப்பட்டிருக்கின்றன. நியாய விலைக்கடைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன.

சாதிவெறியர்களின் இந்த “எதிர்ப்பு” நடவடிக்கைகள் அனைத்திலும் பொதுமக்களும் பொதுச்சொத்துக்களுமே இலக்காகியிருக்கின்றன. ஓடும் பேருந்தின் ஓட்டுநர் மீது கல்வீசிய அந்தக் கும்பல், பேருந்து தறிகெட்டு ஓடிக் கவிழ்ந்தால் உயிரிழக்க கூடிய மக்களைப் பற்றி கடுகளவும் கவலைப்படவில்லை. தீக்கிரையான ஓட்டுநரைப் பற்றிக் கவலைப்படவில்லை. சாதிவெறியர்களின் இந்த சமூக விரோதத் தன்மை, ஐயா “கைது” தோற்றுவித்த கோபத்தினால் ஏற்பட்ட பிறழ்வு அல்ல. ராமதாசின் வக்கீல்களான பின்நவீனத்துவ அறிஞர்கள் கூறும் “கொண்டாட்ட” மனோநிலையிலும் அவர்கள் சமூகவிரோதிகளாகவே நடந்து கொண்டிருக்கிறார்கள்.

சேலத்தைச் சேர்ந்த செல்வம்
ராமதாசுக் கைதைக் கண்டிப்பது என்ற பெயரில் பா.ம.க. ரவுடிகள் பேருந்து மீது நடத்திய கல்வீச்சில் கொல்லப்பட்ட சேலத்தைச் சேர்ந்த செல்வம்.

மரக்காணம் காலனியைத் தாக்குவதற்கு முன்னரே, பல இடங்களில் இருபுறமும் இருந்த கடைகளை களவாடிக் கொண்டும், சாப்பிட்டதற்குப் பணம் கேட்ட ஓட்டல்காரர்களைத் தாக்கிக் கொண்டும், கோட்டக்குப்பம் மதரசாவிலிருந்து வெளியில் வந்த இசுலாமியப் பெண்களை நோக்கி கைலியை அவிழ்த்துக் காட்டி நடனமாடிக்கொண்டும்தான், சத்திரிய குலக்கொழுந்துகள் மாமல்லபுரம் நோக்கி சென்றிருக்கிறார்கள். பிள்ளையார் குப்பம், கூனிமேடு, அனுமந்தை போன்ற பல ஊர்களில் இந்தக் கும்பலால் பாதிக்கப்பட்ட வன்னியர்கள், மீனவர்கள், இசுலாமியர்கள் உள்ளிட்ட அனைத்துச் சமூகத்தினரும் சேர்ந்து இவர்களைத் திருப்பித் தாக்கியிருக்கிறார்கள்.

ராமதாசு தூண்டிவரும் வன்னிய சாதிவெறி என்பது தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும்தான் தாக்கும் என்று யாரேனும் எண்ணினால் அது தவறு. சாதி என்பது தன் இயல்பிலேயே ஒரு ஜனநாயக விரோத நிறுவனம். சாதித் திமிரும், லும்பன் கலாச்சாரமும், வெறியூட்டப்பட்ட கும்பல் மனோபாவமும் சமூக விரோத சக்தியாக மட்டுமே நடந்து கொள்ள முடியும். இந்த விசயத்தில் வன்னியர் சங்கம் மட்டுமல்ல, எல்லா சாதி சங்கங்களும் தங்கள் யோக்கியதையை நிரூபித்திருக்கின்றன.

முத்தரையர் சங்கத்தினர் சென்ற ஆண்டு திருச்சியில் ரவுடித்தனம் செய்து மக்களிடம் அடிவாங்கினர். தேவர் குருபூசை, மருது குருபூசை என்றால் அந்தக் கும்பல் போகும் பாதை முழுவதும் கடையடைக்கப்பட்டு ஊர்களெல்லாம் சுடுகாடுகளாகி விடுகின்றன. பயந்து ஓடுவது மொத்த சமூகமும்தான். சாதிச் சங்கங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையும் அச்சுறுத்தும் சமூகவிரோத சக்திகள். இவர்கள் துப்புரவாக ஒழிக்கப்படவேண்டும் என்பதற்கான நியாயம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு துலக்கமாகியிருக்கிறது.

– தொரட்டி

________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________

 1. வினவு சார்,

  தலித் சாதிவெறி பத்தி ஒரு கட்டுரை எழுதுங்களேன்.

  • எதுக்கு பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கிறீர்கள், உங்களுக்குத் தேவை என்றால் நேரடியாக கேட்டு வாங்கலாமே? நீங்கள் கேட்டு என்றாவது மறுத்திருக்கிறோமா?

 2. //இந்த விசயத்தில் வன்னியர் சாதி சங்கம் மட்டுல்ல, எல்லா சாதி சங்கங்களும் தங்கள் யோக்கியதையை நிரூபித்திருக்கின்றன.//
  இவ்வாறு பதிவு செய்துள்ளீர்கள். இப்பதிவுக்கு விளக்கம் தருக.

 3. அதாங்க தலித் சாதிவெறி பற்றி ஒரு கட்டுரை. அவ்வளவு ஏன், போலியாக வன்கொடுமைச் சட்டத்தை பயன்படுத்தி வழக்குத் தொடுத்தது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். உங்கள் நேர்மையைப் பார்ப்போம்.

 4. // “நாங்க என்ன சோப்பு போடுற சாதியா, நாங்க என்ன மோளம் அடிக்கிற சாதியா, அக்கினியில் பொறந்தவன் வன்னியன்” என்றும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியும் தொடர்ந்து பேசிவருகின்றனர்.//

  அவரு அப்படி பேசினா, அது எப்படி தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துவதாகும்?

 5. ரெண்டு சாதியும் தாழ்ந்த ஜாதிதான் நீங்க ஏன்டா அடிச்கிறீங்க

  • //ரெண்டு சாதியும் தாழ்ந்த ஜாதிதான் நீங்க ஏன்டா அடிச்கிறீங்க//

   Hello Dog ram …, are u showing parpana Temer?

  • மனிதன் எனக்கும் ஜாதி உண்டு என் ஜாதி உயர்த்தும் இல்லை தாழ்ந்ததும் இல்லை ஆனால் ஜாதி மாறி கல்யாணம் பண்ணிதான் ஜாதி போகும் என்று சொல்லும் நிஜமான கீழ் ஜாதி இல்லை

   • ராம்,
    டமார் டமார்னு செருப்பால அடிச்ச மாதிரி இருக்கு. பின்னிப்பிட்டீங்க போங்க.

  • ராம், வன்னியர் மற்றும் தலித் இருவரும் தாழ்ந்த ஜாதிதான் என கூறினார்!

   இரண்டு மக்களுக்கும் வேலை செய்கிறார்கள்,உழைக்கும் மக்கள்!

 6. ////கல் எறிந்த சத்திரிய வீரம்/////

  இதற்கு முன் எங்கோ இந்த கல் எரிதலை கேட்டதாக தெரிகிராது. ஆமாம்!! காஷ்மீரில் நமது ராணுவத்தின் மீது இஸ்லாமிய வெறியர்கள் கல் எறிந்தார்கள்! இதனை இதே வினவு ஆதரித்து. இது என்ன இஸ்லாமிய சத்திரிய வீரமா?
  மரக்காணம் பகுதியில் உள்ள தாழ்ந்த ஜாதியினர் என்று குறிப்பிடப்படுபவர்கள்தான் முதலில் இந்த கல் எறிதல் சம்பவத்தை தொடங்கி வைத்தனர். அதனை சமாளிக்க வேண்டி வன்னியர்கள் எதிர் தாக்குதல் நடத்தினார்கள்.

  இதனை வினவு போன்ற உலக “இஸ்லாமிய அதிபயங்கரவாத இயக்கங்கள்” எதிர்க்கின்றன. இது வினவுவின் நீதி போலும்.

  எந்த கட்டுரையிலும் இஸ்லாமியத்தை ஒரு ஏற்றம் கொடுத்துத்தான் இங்கு கட்டுரை எழுதப்படுகிறது. இது ஒரு மோசமான முற்போக்கு எழுத்து.

   • காஷ்மீரில் சின்னஞ்சிறு சிறார்கள் முதல் வயதான கிழவி வரை இராணுவத்தின் எதிர் நின்று கல்லெறிகிறார்கள் இராணுவத்தை நோக்கி. அதை ஒப்பிட்டு பேசினால் சத்திரிய வம்சத்தினர் போலீசை எதிர்த்தல்லவா கல்லெறிந்திருக்கவேண்டும்.

    தண்ணிக்காக ரோட்ட மறிச்சா புள்ளத்தாசி வலியில துடிக்குறா பிளடி இந்தியன்சுன்னு வய்யிறவா எல்லாம் பொதுமக்கள் போகின்ற பஸ் மீது கல்லெறிந்த சத்ரிய வம்சத்த ஆதரிக்கிறதுதான் வேடிக்கை. இதுதான் பார்ப்பனீயம்.

    • நீங்கள் உழைப்பாளர்கள் என்று குறிப்பிடுவது தலித்களையா? அல்லது மற்ற சாதிகளில் உழைப்பாளர்கள் இல்லையா?

 7. oyaa ஏன்டா அடிச்கிறீங்க அதாங்க தலித் சாதிவெறி பற்றி ஒரு கட்டுரை. அவ்வளவு ஏன், போலியாக வன்கொடுமைச் சட்டத்தை பயன்படுத்தி வழக்குத் தொடுத்தது பற்றி ஒரு கட்டுரை எழுதுங்களேன். உங்கள் நேர்மையைப் பார்ப்போம்.

  • புதிய ஜனநாயத்துல எழுதுறத இதுல போட மாட்டீங்களோ?

  • அப்போ எல்லா சாதிகளிடமும் சாதி வெறி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள். ஒட்டுமொத்தமாக சாதிவெறியை குறைக்க என்ன செய்ய வேண்டும்?

 8. ஆண்ட குலத்தினர் என்று பெருமையடித்துகொள்வதற்கு ஒன்றுமில்லை! எப்படி ஆண்டனர் என்பதைத்தான் வரலாறு உணர்த்திவிட்டதே! பக்கத்து ஊரை கொள்ளயடித்து பட்டம் கட்டி கொள்வதெல்லாம் ஆள்வது என்று கொள்ள முடியாது! சாதாரண குடிமக்கள், அச்சமின்றி,நாகரிக வாழ்க்கை வாழ்ந்தார்களா? வந்தேறிகள் காட்டியதே வழ்க்கை என்றுதானே வாழ்ந்தோம்? தமிழ்னாட்டில் அரசுகள் உருவாவதும், உடைவதும் யாருடைய ஆலொசனையின்பேரில்? யாருடைய ஆலொசனையால் நம் சகொதரரையே நாம் அழித்துக்கொண்டு , இன்னமும் நாஙகள் தாம் ஆண்டோம் என்றால், தமிழனின் இன்றைய அடிமைநிலைக்கு நீங்கள்தானே காரணம்? நடந்ததை மறந்து இனியாவது சமூதாய ஒற்றுமைக்கு என்னவ்ழி என்று அனைவரும் யொசிக்கலாமே! பின்புலத்திலிருந்து தூண்டிவிடும் அரசியல் மற்றும் ஆதிக்கசக்திகளுக்கு நாம் தெரிந்தே அடிமையாகலாமா? உழைப்பாள்ர்களை நம்பியே நாம் வாழ்ந்திருந்தோம்! பிழைக்க வந்தவர்களால் அல்ல!

 9. AJ

  Tn was never an isolated island.They have always had contact with the rest of India,that’s how Rajendra Chozhan went and conquered Gangai.

  How did they develop a Navy and went to fight in Srilanka and Indonesia.

  Did they do all that without outside contact?

  DNA studies show that all Indians across all regions and castes have ancestors broadly from 3 major groups and some have more than the other.

  So,the issues come up from politics and culture.

  regarding the caste system,the argument is always about the fighting between the vegetarian and non vegetarian caste hindus.

  Regarding the others,how does it happen that a small group of people convinced the whole lot that these guys do not belong.

  Then are the others idiots? Why do you insult their intelligence by doing so,

  The right question you should be asking is,

  On whose advice is TN eating river sand,on whose advice is an open sewer overflowing in Madras.

  On whose advice did TN always maintained poor relationships with its neighbors and the centre hurting our farmers and otherwise.

 10. இதே தருமபுரி கலவ்ரம் அப்பபேருந்து மெது கல்லடி பட்டுஇறந்த ஒரு வன்னியனுக்கு என்ன பதில் விடுதலை சிறுத்தைகள் மரக்காணத்தில் கொலை செய்த இரண்டு வன்னியர் உர்ய்ருக்கு இதே கேள்வி கேட்டது உண்ட, பேறுந்தில் கல்லு வீடு எரிந்து பா ம க மேல பழி போட்ட விடுதலை சரிதை கையும் களவும பிடித்து கைது செய்தார்களே எதற்கு என்ன பதில், இதுபோல பல இடனக்ளில் விடுதலை சிறுத்தை சிஎதுவீடு பா ம க மேல பழி போட்டு இருக்க கூடாத என்ன நீங்க என்ன அவளவு பெரிய விசாரணை குழுவ என்ன அரசு சிபிஐ விசாரணி வைத்து உண்மை குற்றவ்ளைய தண்டிக்கட்டும் அது பா ம க வ யுர்ந்தாலும் அதை விடுத்துவிட்டு அவதூர உங்க ஜாதி பாசத்தில் கட்டுரை எழுதினா உண்மைய ஆகிவிடுமா என்ன ?? உங்களுக்குத்தான் கொண்டாட்டம் இதுபோல ஜாதி கலவரம் நடந்த பக்கம் பக்கமா கட்டுரை எழுத இப்ப வேற விசயம் இல்லை என்பதால் மீண்டும் மேநேண்டும் எதயாவது திருத்து எழுதுங்கள்

 11. நடந்த சம்பவம் இருட்டில் அதுல உங்கள்ளுக்கு எப்படி தெரியும் அவர்தான் பா ம க வை சேர்ந்தவரா என்று எதாவது உங்களுக்கு தலித்து ஜாதி வெறிய ??

 12. இவங்க கிட்டே இருட்டில படம்பிடிக்கிற கேமரா இருக்கு. அதை வைச்சு படம் பிடிச்சு. யார் யார் கல்லெரிந்தார்கள் என்று அடையாளம் கண்டு அதன் பின் இது வன்னிய சாதி வெறி என்பதை கண்டுபிடித்து விட்டார்கள்.

 13. அட வினவு, நீ என்னத்த வினவுரன்னு தெரியலை. எனக்கு தெரிந்து வன்னிய சாதி வெறினு பொய் சொல்லி நீ மத்த ஜாதிக்கு எல்லாம் வெறியேத்துர. மருத்துவர் வெளியே வந்த பிறகும் நடந்த வன்முறை, தேசிங்கு என்ற தலித் ஜாதி வெறியன் கல்லெறிந்த வன்முறை, பல இடங்களில் தலித் இளைஞர்கள் வன்னியர்களின் பெயரை பயன்படுத்தி செய்த வன்முறை , எல்லாம் உனக்கு தெரியவில்லையா என்று நான் வினவுகிறேன். மேலும் மருத்துவரின் கைதுக்கே முன்பே வன்னியர் சங்க நிர்வாகிகள், பா.ம.க நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். வினவு அது கூட தெரியாம என்னத்த புடிங்கிட்டு இருந்துச்சு? கருத்து சொல்ல்கிறோம் அப்பிடின்னு ஒற்றுமையா இருக்கிற மக்கள் மத்தியில விரோததை வளர்க்கிற நீ கூட தீவிரவாதிதான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க