Tuesday, October 15, 2024
முகப்புஉலகம்ஐரோப்பாஇளவரசர் வில்லியமும் இந்திய மரபணுவும் !

இளவரசர் வில்லியமும் இந்திய மரபணுவும் !

-

21-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அரச பரம்பரை பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணி எலிசபெத் II பிரிட்டன், வட அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, போன்ற நாடுகளைத் தவிர இன்னும் 13 குட்டி நாடுகளுக்கு மட்டும் மகாராணியாக விளங்குகிறார். இந்தக் காலத்தில் இவ்வளவு செலவழித்து (ஆண்டுக்கு சுமார் 20 கோடி பவுண்டுகள் = சுமார் ரூ 1800 கோடி) அரச பரம்பரையை காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று இங்கிலாந்து மக்களில் பலர் விமர்சிக்கிறார்கள். அடுத்து அரியணை ஏறவிருக்கும் இளவரசர் சார்லஸ் போன்ற ஒரு மொக்கையை நமது மகாராஜாவாக ஏற்றுக் கொள்வதா என்று ஆஸ்திரேலியாவை முழுமையான (பெயரளவிலான மன்னராட்சியை ரத்து செய்து விட்டு) குடியரசாக மாற்ற முயற்சி செய்யும் அரசியல்வாதிகள் பிரச்சாரம் செய்கிறார்கள்.

எலிசபெத் மகாராணி
மகாராணி இரண்டாம் எலிசபெத்

பிரிட்டனின் வடபகுதியான ஸ்காட்லாந்து தனக்கென தனியாக நாடாளுமன்றத்தை ஏற்படுத்திக் கொண்டு சுதந்திர அரசாக பிரிந்து போக முயற்சி செய்கிறது. பிற பகுதிகளான வேல்சும், வட அயர்லாந்தும் பிரிட்டிஷ் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள முயற்சிக்கின்றன.

இவற்றை எல்லாம் எதிர் கொண்டு சாம்ராஜ்யத்தை கட்டிக் காப்பதற்காக 87 வயதான மகாராணி இரண்டாம் எலிசபத், சுமார் 45 ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் 65 வயதான மகன் இளவரசர் சார்லஸூக்கு வழி விடாமல் நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார். அம்மா போனால்தான் திண்ணை காலியாகும் என்று வெகு காலம் முன்பே விரக்தியில் செட்டில் ஆகி விட்டிருக்கிறார் சார்லஸ். இருப்பினும் தனது முன்னாள் காதலி பமீலா பார்க்கர் பவுல்சை சட்டப்படி திருமணம் செய்து கொண்டு ராஜ வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். சார்லஸ் முதலில் திருமணம் செய்து கொண்ட டயானாவுக்கும் சார்லஸூக்கும் பிறந்த மூத்த மகன் வில்லியம், சார்லஸூக்கு அடுத்து அரியணை ஏறுவதற்கு வரிசையில் நிற்பவர்.

20-ம் நூற்றாண்டிலேயே ஆட்டம் கண்டு இந்த நூற்றாண்டில் துருப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் பிரிட்டிஷ் அரியணையின் இமேஜை உயர்த்துவதற்கு இப்போது அவசர தேவை இருக்கிறது.

இந்தச் சூழலில் வில்லியம் குறித்து ஒரு பரபரப்பூட்டும் தகவல் வெளியாகியிருக்கிறது. “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” என்ற நிறுவனம் ஒரு அமவுண்ட் கொடுத்தால் ஒருவரது மரபணுவை ஆராய்ந்து அவரது மூதாதையர்கள் பற்றிய விபரங்களை ஆய்வு மூலம் திரட்டிக் கொடுக்கிறது. எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பணி புரியும் ஜிம் வில்சன் என்ற மரபணு நிபுணருடன் இணைந்து வில்லியமின் தாய் (டயானா) வழி உறவினர்களின் உமிழ்நீரை ஆய்வு செய்து இளவரசன் வில்லியமின் உடலில் இந்திய மரபணு கலந்திருப்பதாக அறிவித்திருக்கிறது “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ”.

டயானா, ஹேரி, வில்லியம்
(காலம் சென்ற) சீமாட்டி டயானா மகன்கள் ஹேரி மற்றும் வில்லியம் உடன் (கோப்பு படம்)

வேல்ஸ் இளவரசி சீமாட்டி டயானாவின் எள்ளுப்பாட்டியின் பாட்டி எலிசா கேவார்க் என்பவர் கிழக்கிந்திய கம்பெனியில் பணி புரிந்த தியோடர் போர்ப்ஸ் என்ற ஸ்காட்லாந்து வணிகரின் மாளிகையில் வீட்டு பராமரிப்பாளராக இருந்திருக்கிறார். எலிசாவின் தந்தை ஆர்மீனியாவைச் சேர்ந்தவர் என்றும் தாய் இந்திய வம்சாவளியினர் என்றும் “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” கண்டறிந்துள்ளது.

குஜராத்தின் சூரத் நகரில் வசித்து வந்த தியோடர் போர்ப்ஸ், எலிசாவை திடீரென்று கை விட்டு விட்டு அவர்களுக்குப் பிறந்த கேத்தரீன் என்ற மகளை 6 வயதில் பிரிட்டனுக்கு அனுப்பியிருக்கிறார். எலிசாவிடமிருந்து கேத்தரீன் வழியாக அவர்களது பெண் சந்ததியினருக்கு இந்த மைட்டோகாண்ட்ரியா மரபணு கடத்தப்பட்டு டயானாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. டயானாவின் மகனான, அடுத்ததற்கு அடுத்ததாக பிரிட்டிஷ் மகாராஜா ஆகப் போகிற வில்லியமுக்கு இந்திய அடையாளம் இருப்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது.

17-ம் நூற்றாண்டில் நிலப்பிரபுத்துவ அதிகாரங்களை விட்டுக் கொடுக்க மறுத்து முரண்டு பிடித்த மன்னர் முதலாம் சார்லஸின் கழுத்தை வெட்டி முதலாளிகளின் அதிகாரத்தை நிலைநாட்டியவர் முதலாளித்துவ புரட்சியாளர் ஆலிவர் குரோம்வெல். அன்று ராஜ பரம்பரைக்கு இழைத்த துன்பத்துக்கு பரிகாரமாக இன்று முதலாளித்துவ நிறுவனம் ஒன்று வில்லியம்ஸூக்கு இருக்கும் இந்தியத் தொடர்பை நிரூபித்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு சேவை செய்திருக்கிறது. கூடவே தனது மரபணு பரிசோதனை சேவைக்கான சந்தைப்படுத்தலையும் செய்திருக்கிறது “பிரிட்டன்ஸ் டிஎன்ஏ” நிறுவனம்.

1983-ல் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை ஜெயித்த பிறகு இந்தியாவில் கிரிக்கெட் டேக் ஆப் ஆனது போல, 1994-ல் உலக அழகியாக ஐஸ்வர்யா ராய் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு இந்தியாவில் அழகு தொழில் பிக் அப் ஆனது போல, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் எதிர்கால அரசர் வில்லியமின் உடலில் இந்திய மரபணு இருக்கிறது என்ற தகவல் இந்திய கனவான்களின் நெஞ்சில் ராஜ விசுவாசத்தை மூளச் செய்யாது என்று எப்படி சொல்ல முடியும்!

அவரது குழந்தை பிறந்தவுடன் அடுத்த மாதம் அரசு முறை சுற்றுப் பயணமாக முதல்முறையாக இந்தியா போவதற்கு வில்லியம் ஊக்குவிக்கப்படுகிறார். அதற்கு முன்பு பிரிட்டிஷ் அரச குடும்பத்தை இந்தியர்களுக்கு சந்தைப்படுத்தும் விதமாக வில்லியமுக்கு இந்தியாவுடன் இருக்கும் கனெக்சன்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடப்படும்.

இந்திய பாரம்பரியம் உறுதியாகியுள்ள வில்லியமுக்கு நந்தன் நீலகேணி ஆதார் அட்டை வழங்கி ஆதார் திட்டத்தை வலுப்படுத்திக் கொள்ளலாம்.

வில்லியம், கேத்தரீன்
இளவரசர் வில்லியம் தன் மனைவி கேத்தரீனுடன் – இங்கிலாந்து சர்ச்சின் ஆர்ச் பிஷப்பை சந்தித்தல்

வில்லியமின் மூதாதையரான எலிசா கேவார்க்கும், தியோடர் போர்ப்ஸூம் வாழ்ந்தது குஜராத்தில் உள்ள துறைமுக நகரான சூரத் என்பதையும் கவனிக்க வேண்டும். குஜராத்தின் பெருமையான நரேந்திர மோடி, வல்லபாய் பட்டேலுக்கு சர்தார் சரோவர் அணைக்கு அருகில் சிலை வைப்பது போல, 300 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்திலிருந்து இங்கிலாந்து சென்ற வம்சத்தைச் சேர்ந்த பிரிட்டிஷ் அரியணை ஏறவிருக்கும் வில்லியமுக்கும் சிலை வைக்க முடிவு செய்யலாம்.

இந்திய மண்ணின் மைந்தன், குஜராத்தின் பேரன் வில்லியமின் தலைமையை ஏற்றுக் கொண்டு இந்தியாவையும் பிரிட்டிஷ் குடைக்குள் கொண்டு வருவதையும் சங்க பரிவாரங்கள் பரிசீலிக்கலாம்.

இன்னும் 100 ஆண்டுகள் கழித்து உத்தர பிரதேசம், டெல்லி, உத்தரகாண்ட், ஆந்திர பிரதேசம் என்று நாடு முழுவதும் டிஎன்ஏ வழங்கியவரான என் டி திவாரியின் வாரிசுகளை ஆய்வு செய்யவிருக்கிற மரபணு ஆய்வாளர்களை நினைத்தால்தான் கதி கலங்குகிறது.

போகட்டும், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள். இதன்படி லண்டனில் இருக்கும் வெள்ளையர்கள் அனைவரையும் பரிசோதனை செய்தாலும் அதில் இந்திய மரபணு மட்டுமல்ல, இலங்கை, பாகிஸ்தான், பர்மா, சீனா மற்றும் ஆப்பிரிக்க மரபணுக்களும் இருக்கும். காலனிய ஆட்சியாளர்கள் ஏழை நாடுகளின் சொத்துக்களை மட்டுமல்ல மரபணுக்களையும்தான் கொண்டு சென்றிருக்கிறார்கள். நிலைமை இப்படி இருக்க இதையெல்லாம் சர்வதேச செய்திகள் என்று வெளியிடுகிறார்களே முட்டாள் ஊடகங்கள், அவர்களை கவனிக்க வேண்டும்.

எனினும் இந்த மரபணு விசயத்தில் ஒரு அம்சத்தை நமது சாதியவாதிகளுக்கு நினைவூட்ட வேண்டும். தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி. ஏனெனில் வன்னியர் உடலில் பறையர் மரபணு, தேவர் உடலில் அருந்ததியர் மரபணு, பார்ப்பனர் மரபணுவில் பழங்குடிகள் என்று முழு இந்தியாவும் கலந்திருப்பது தெரியவரும். அப்போது நமது சாதிய பரிசுத்தவான்கள் என்ன சொல்வார்கள்?

மேலும் படிக்க

  1. //தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி. ஏனெனில் வன்னியர் உடலில் பறையர் மரபணு, தேவர் உடலில் அருந்ததியர் மரபணு, பார்ப்பனர் மரபணுவில் பழங்குடிகள் என்று முழு இந்தியாவும் கலந்திருப்பது தெரியவரும். அப்போது நமது சாதிய பரிசுத்தவான்கள் என்ன சொல்வார்கள்?//

    செம..! 🙂
    இந்த மேட்டரை சொல்லாம விட்டிருந்தால் கட்டுரை சாதாரணமாய் போயிருக்கக்கூடும்!!

  2. //…….. என்று முழு இந்தியாவும் கலந்திருப்பது தெரியவரும். அப்போது நமது சாதிய பரிசுத்தவான்கள் என்ன சொல்வார்கள்?..//

    இந்த டிஎன் ஏ டெஸ்டே டுபார்க்கூர் அதெல்லாம் பொய்ன்னு சொல்லீட்டா ?

  3. //தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி. ஏனெனில் வன்னியர் உடலில் பறையர் மரபணு, தேவர் உடலில் அருந்ததியர் மரபணு, பார்ப்பனர் மரபணுவில் பழங்குடிகள் என்று முழு இந்தியாவும் கலந்திருப்பது தெரியவரும். அப்போது நமது சாதிய பரிசுத்தவான்கள் என்ன சொல்வார்கள்?//

    அருமை!!:-)

  4. After Queen, plan is to make Williams as the King. To become the King, he needs the support of all Commonwealth countries. It seems for some strange reasons (no idea what), India is not favourable to the idea of Williams as the King. So this story is planted to make India accept Williams.

  5. //எனினும் இந்த மரபணு விசயத்தில் ஒரு அம்சத்தை நமது சாதியவாதிகளுக்கு நினைவூட்ட வேண்டும். தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி. ஏனெனில் வன்னியர் உடலில் பறையர் மரபணு, தேவர் உடலில் அருந்ததியர் மரபணு, பார்ப்பனர் மரபணுவில் பழங்குடிகள் என்று முழு இந்தியாவும் கலந்திருப்பது தெரியவரும். அப்போது நமது சாதிய பரிசுத்தவான்கள் என்ன சொல்வார்கள்?//

    அதுபோல தேவர் மரபணு தலித்களிடம் இருந்தால் என்ன செய்வீர்கள்?

    • let vinavu tell whatever he wants. Let me tell my opinion. we all are Tamilians. once upon a time we all were in one family. Later we split in to castes and sub castes. So we all have one common ancestor. in that view, there is no point in fighting. Surely in my blood there will be slight traces of many castes. surely some of our (everyone of us) ancestors would have inter-married. So no point in saying any caste is pure. Recently a genetic study revealed we have genetic materials from Neanderthals. Just google about this and all our caste/race concepts are man made constructs to control our mind and society.

      • Tamil is a language,not a race.

        Anyone who speaks tamil contonously over generations becomes a tamil.

        it is true for Arabs mixed in tamil society also like muslims of keezhakarai and pattanis of vellore.

  6. உங்களுக்கு எதிரி முதலாளித்துவம் என்றால் அதை மட்டும் வம்பிழுங்கள். எதற்காக சாதியை இழுக்க வேண்டும்?

    • பெருமாள் தேவன் அவர்களே….

      எதிரி முதலாளித்துவம் தான். ஆனால் எதிரி மட்டும் தனியாக இல்லை. கூட்டணியாக அனைத்து மோசடிகளும் செய்கிறார்கள். கூட்டளிகள், சாதி, மதம், இனம், மொழி, கல்வி,நாடு / தேசியம் அனைத்துமே.

      இவையத்துமே வர்க்கரிதியாக பாதிக்கபடும் மக்களை ஒன்று சேராமல் பிரிப்பட்ற்காக, அரசு முதாளிதுவமும் செய்யும் சதிதான் , கூட்டணி தான். அனைத் தையுமே வேறருக்க வேண்டும்;.

  7. உலகம் முழுவதும் நாசமா போன, நாசமாக்கிய கம்யூனிஸ்ட்கள் இந்தியாவில்/ தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்துவார்களாம். அதற்கு வினவு பிரச்சாரம் செய்து வருகிறது. ஹாஹாஹா

  8. இதே போல திராவிட இரத்தம் ஆரியர்களிடமும் ஆரிய இரத்தம் திராவிடர்களிடமும் கலந்து பல ஆயிரம் வருடங்கள் ஆகியிருண்தாலும் இன்னும் வந்தேறி ஆரியன் என்று அரசியல் செய்து பிழைக்கிறார்கள்

  9. //எனினும் இந்த மரபணு விசயத்தில் ஒரு அம்சத்தை நமது சாதியவாதிகளுக்கு நினைவூட்ட வேண்டும். தனது சாதி புனிதமானது, வேறு சாதி ரத்தம் கலக்காதது என்று நம்பிக் கொண்டிருக்கும் அனைவரிடமும் இத்தகைய சோதனையை மேற்கொண்டால் நிறைய கலவரங்கள் பிறப்பது உறுதி. ஏனெனில் வன்னியர் உடலில் பறையர் மரபணு, தேவர் உடலில் அருந்ததியர் மரபணு, பார்ப்பனர் மரபணுவில் பழங்குடிகள் என்று முழு இந்தியாவும் கலந்திருப்பது தெரியவரும். அப்போது நமது சாதிய பரிசுத்தவான்கள் என்ன சொல்வார்கள்?//

    தங்களது கையாலாகா தனத்தை மறைக்க வினவை திட்டி தீர்பதின் மூலம் தங்களை சுயமைதுனம் செய்துகொள்வார்கள்…

  10. Brahmins have no problem with accpeting their DNA,forget about DNA many Iyengars are purely dalit even now as Ramanujar handpicked dalit people to vaishnavism.

    so,where is the problem?

    • ஹரிகுமார் there you are man நீங்கள் சொல்வது வரலாற்று உண்மை.அப்புறம் பெருமாள் கள்ளா சாதி அடுக்கில் நம்பர் ஒன்னில் இருக்கும் ஐயங்கார்களுக்கே தலித் எதிர்ப்போ வெறுப்போ வேற்றுமையோ இல்லாத போது நீ எல்லாம் ஏன்யா இங்கே வந்து சாதி பேசுற?

      • It is not about race,it is about behaviour and temperment.

        Thats all,i dont know if he is justified in making a political plank but this is a political/tempermental fight not a race fight.

  11. I have done my own DNA analysis,it includes 3 different ancestors

    50% ANI(Ancestral north Indian),35%(Ancestral south indian) and 15% ancestral mongloid.

    This doesn’t mean my fatehr is north indian,motehr is part south indian and part east asian.

    It means a mix of all 3 from 40,000 years ago.

    i am proud all 3 of them.

  12. one more thing,this study doesn’t involved chettiar/naidu/mudaliar/udayar etc etc meaning they are just titles and not separate jatis.

    also there is lot of connection between iyer and iyengar.

    The later iyers/iyengars have elss and less relationship,the gurukkals have much more.

  13. எதோ இந்த DNA ஆரய்ச்சியால் பெருமாள் தேவர் இங்கு வந்து சாதிப் பெருமை பேசும் கமெண்டுகள் குறைந்தாலே போதும் அதுவே பெரிய விளைவுதான்.

  14. Still there are fellows who claim supremacy over others saying they were born from the forehead of Brammah a Mythical God in Aryanised Hindu Mythology. They do not even accept the theory of evolution as the basis of Human lives. How then will they agree to the DNA findings which would undo all the Aryan domination and erupt a volcanic force in the social set up that had been nurtured on falsehood and mythical puranas. For them they will be happier in their land of ignorance rather than the wisdom of modern science.

  15. Mano

    It is you who doesn’t understand the simple nature of the Varna system.it merely classifies society based on occupation and character.

    Hindu theology never had any opinion about evolution,the term Brahma’s head is metaphorical not literal.

    it is funny that most brahmins have accepted science readily and are also scientists and mathematicians,you are talking about the christian church who do not accept evolution.

    It is funny that you are trying to confuse people here.

  16. ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி டிஎன்ஏ இருக்குன்னு நீங்க சொல்ற மாதிரி கருத்தாகுது. மரபணு வரைக்கும் சாதி கல்ந்து இருக்குன்னு சொல்ற மாதிரி சாதியை வலுவானதா கட்டமைத்த ஒரு பிம்பமும் வந்து தொலையுது. வினவுகிட்ட இருந்து இப்படி ஒரு சொதப்பல் கருத்தை எதிர்பார்க்கலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க