மசாலா: “ஆக்ஷன் ஹீரோவா பேர் எடுக்குறதை விட காமெடி ரோல்ல கலக்குறதுதான் ஒரு ஆக்டருக்கு ரொம்பவே கஷ்டம். என்னைப் பொறுத்தவரை ஒரு நடிகனா முழுமை பெறணும்னா கட்டாயம் காமடி ரோல்ல நடிச்சே ஆகணும்.” – நடிகர் விஷால்
மருந்து: தம்பி விசாலு உன்னோட ஆக்ஷன் சினிமாவைத்தான் நம்ம தம்பிமாரு காமடின்னு சிரிக்கான். அவன்கிட்ட போய் காமடி நடிக்கப் போறேன்னா அழ மாட்டானா? ஏம்டே இப்புடி கொல்லுத?
_____
மசாலா: “இந்திப் போராட்டத்துக்குப் பின்னால, இப்ப நடந்த ஈழப் பிரச்னைக்குதான் ஸ்டூடன்ட்ஸ் மூர்க்கமா வெகுண்டு எழுந்திருக்காங்க. இன்ஜினீயரிங் காலேஜ்களின் ஆதிக்கத்திற்கு முன்னால் கவர்மெண்ட் ஆர்ட்ஸ் மாணவர்களுக்குன்னு இருந்த இயல்பான போர்க்குணம் கம்மியாகிடுச்சு. இந்தப் போர்க்குணத்தை போராட்ட உணர்வை மறுபடியும் காட்டப் போற படம்தான் ‘சிப்பாய்’. இவன் படைவீரன் கிடையாது. போர்க்களத்துல நின்னு போராடுகிற போராளியும் கிடையாது. உங்களில் ஒருவன்.” – இயக்குநர் சரவணன்
மருந்து: ஏலேய் சரவணா, ஈழப் போராட்டத்துல ஆர்ட்ஸ் காலேஜ்தாண்டே அதிகம் போராடுனான். தினத்தந்தி சினிமா மலரத்தாண்டி எதயும் படிக்காதவன்தாண்டே நீ. சரிடே, சிப்பாய் – வீரனும் இல்ல, போராளியும் இல்லேன்னுட்டு எதுக்குடே சிப்பாய்ன்னு பேர் வெச்சு, ஈழம், மாணவருன்னு கொல்லுத!
_____
மசாலா: “முதல் படத்தில் பேண்ட், சட்டை கூட இல்லாமல் யானையின் மீது காட்டுவாசி மாதிரி காட்டுனாங்க. ‘இவன் வேற மாதிரி’ படத்துல காஸ்டியூம் எப்படி?” – கும்கியில் நடித்த பிரபு மகன் விக்ரம் பிரபுவிடன் குமுதம் நிருபர் கேள்வி!
மருந்து: ஏலேய் கூ முட்ட குமுதம்! காட்டுவாசி கேரக்டர பேண்ட் சட்டை இல்லாமத்தான்டே காட்டணும்! ஒரு படத்துல ஹீரோவோட ஜட்டி சைஸ் என்ன, கலரு என்னண்ணு ஆராய உன்ன மாதிரி ஒரு தண்டம், அதை பிரிண்ட் பண்ணுது ஒரு முண்டம்!
_____
மசாலா: “அது எப்படி ரவி? நடிகர்கள் நினைச்சா உடம்பை கும்னு ஏத்துறீங்க.. நினைச்சா சப்பையா இளைக்குறீங்க?” குமுதம் நிருபர் (இலக்கியவாதி) கடற்கரய் கேள்வி. அதற்கு ஜெயம் ரவி பதில் : ” ஆக்சுவலி இதோ போல பண்றது உடம்புக்கு நல்லதில்லை. பாடி அன் கம்ஃபர்டபுளா மாறிடும். ரிஸ்கியான வேலைகள்னு தெரிஞ்சு சினிமாவுக்காக பண்றோம். வேற வழியில்லை.”
மருந்து: மூணு வேளை முக்கிட்டு, முப்பது முட்டையை அமுக்கிகிட்டு ஐஞ்சு மணிநேரம் ஜிம்முல தொங்குனா கறிய ஏத்தலாம். அதுக்கு நீ வேற வேலவெட்டி இல்லாம இருக்கணும். ஏதோ காந்தி 30 நாள் உண்ணாவிரதம் இருந்து உடம்ப கெடுத்துக்கிற மாறி அவன் பேசுறான், இவன் எழுதுறான்! ஏலேய் கடற்கரய் என்ன எழவுடே நீ உலக எலக்கியம் படிச்ச?
_____
மசாலா: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து புதியதாக இசை ஆல்பம் தயாரிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள். அதற்காக இரண்டு முறை கலாமை டெல்லி போய் சந்தித்துவிட்டு வந்துவிட்டார் யுவன். விரைவில் இசை அலப்பரை ஆரம்பமாகப் போகிறது.
மருந்து: ஊர் ஊராக குழந்தைகள கனா காணுங்கன்னு துன்புறுத்துன கலாமை விட்டு மியூசிக் போட்டா ஆம்பிளிஃபயரே அலறி தற்கொலை செஞ்சுக்குமேடே? தம்பி யுவனு நல்லாத்தானடே போயிகிட்டு இருந்த!
______
மசாலா: தனுஷுக்கு திருப்பதி ஏழுமலையான் என்றால் ரொம்ப இஷ்டம். ரஜினிக்கு பாபா போல தனுஷுக்கு வெங்கடாசலபதி. ஒவ்வொரு படத்தின் ரிலீஸுக்கும் முன்னால் ஒரு ஸ்பெஷல் தரிசனம் அடித்து வருகிறார் தனுஷ். இந்திப் படத்திற்காக பெரிய பூஜையே நடத்தி விட்டு வந்ததாக செய்தி வலம் வருகிறது.
மருந்து: தம்பி தனுஷு உனக்க மாமா பாபா பாபான்னு பேசித்தான் பாபா படத்துல கவுந்தாரு. நீயும் மாமா செண்டிமெண்டுன்னு இலக்கியவாதி எஸ். ராமகிருஷ்ணங்கிட்ட (பாபா படத்திற்கு வசனம்) வசனத்த வாங்கி திருப்பதி நாமம்னு படம் எடுத்து மொட்டை போட்டுக்காதடே! பீரு மல்லையா கூட ஏழுமலைக்கு கட்டிங் வெட்டியும் ஒண்ணும் ஆவல!
_____
மசாலா: ‘உருமி’ படத்தைத் தொடர்ந்து சந்தோஷ் சிவன் இயக்கி வரும் புதிய படம் ‘இனம்’. இப்படத்தையே ஆங்கிலத்தில் ‘சிலோன்’ என பெயரிட்டு திரையிட இருப்பதாகவும் தகவல். சிங்களர்களால் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையின் கொடூரம்தான் திரைக்கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் என தகவல்கள் எட்டுகின்றன.
மருந்து: இங்கிலீசுல சிலோன்னு சொல்லிட்டு பெறவு எதுக்குடே இனம்னு வுடுதான். ஆணா ஒண்ணு பாத்துக்க இந்தப்படத்துக்கு சோனியா காந்தியில ஆரம்பிச்சு ராஜபக்சே வரை விருது நிச்சயம்டே! பாரத் மாதாகி ஜெய்னு துள்ளுறவனுக்கு ஈழத்தமிழனோட வலி எப்புடிடே தெரியும்?
_____
மசாலா: டைரக்டர் இராம.நாராயணன் பவர்ஸ்டாரை நாயகனாக்கி ஆர்யா சூர்யா என்றொரு படத்தை இயக்கினார். படமும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது, மோசடி வழக்கில் பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், பவர்ஸ்டார் நடித்த வேடத்துக்கு டி.ஆரை ஒப்பந்தம் செய்து மீதி படத்தை படமாக்கி வருகிறார் இராமநாராயணன். சின்னத்திரை தொடர்களில், இனி அவர் வேடத்தில் இவர் நடிப்பார் என்பது போன்று, இப்படத்திலும் கார்டு போடப்படுகிறதாம்.
மருந்து: சரிடே, அது மாதிரி பவரு ஏமாத்துன தொகையை இவரையே கொடுக்கச் சொல்லுடே! பவரோட படத்துல பாதியை நீ எடுத்துக்கிட்டா பவரோட மோசடியில மீதிக்குண்டான நிவாரணத் தொகையை கொடுக்கணும்லா?
_____
மசாலா: விஜய்யைப் பொறுத்தவரை ஒரு உறுதியான கொள்கை வைத்திருக்கிறார். அதாவது எந்த இயக்குனராக இருந்தாலும் தன்னிடம் முழுக் கதையையும் சொல்ல வேண்டும். அதன்பிறகுதான் அந்த கதையில் நடிப்பதா? வேண்டாமா? என்பது பற்றி முடிவெடுப்பேன் என்பதில் உறுதியாக இருப்பவர் அவர்.
மருந்து: எல்லா பயபுள்ளகளும் கதயக் கேட்டுத்தான் நடிக்கிறோம்கிறாங்க. விஜய் படத்துல நாலு டான்ஸ், எட்டு பைட், பத்து பஞ்ச் டயலாக், பதினைஞ்சு காமடி, இருபது கவர்ச்சின்னு பிச்சு மேஞ்ச பெறவு எங்கடே கதைக்கு இடம் இருக்கு? புளுகுறதுக்கு ஒரு அளவில்லையாடே?
_____
மசாலா: தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் பி.வாசு, ஹாலிவுட்டில் கால்பதிக்கிறார்.
மருந்து: குசேலனுல வாங்குன அடியில சினிமான்னா இனிமா ஆகும் பி வாசு ஹாலிவுட்ல படம் இயக்குறார்ணா, கேக்குறவன் கோட்டின்னு நினைப்பாலே? அமெரிக்காவுல ஹேண்டி கேம் வச்சு படம் புடிக்கிறவனெல்லாம் ஹாலிவுட் தயாரிப்பாளர்னா, ஸ்பீல் பெர்க் படத்துல டி.ஆர் நாயகனா நடிக்கிறதையும் நம்பணும்டே!
____________________________________
– காளமேகம் அண்ணாச்சி
____________________________________
இன்னாடா,கொஞ்சக்காலமா காளமேக அண்ணாச்சிய காணோமேன்னு பாத்தா, இப்பத்தான் தெரியுது,இத்தன நாளா, அண்ணாச்சி காலிவுட்டு,கோலிவுட்டுன்னு சுத்தியிருக்காருபோல………….
// மருந்து: ஊர் ஊராக குழந்தைகள கனா காணுங்கன்னு துன்புறுத்துன கலாமை விட்டு மியூசிக் போட்டா ஆம்பிளிஃபயரே அலறி தற்கொலை செஞ்சுக்குமேடே? தம்பி யுவனு நல்லாத்தானடே போயிகிட்டு இருந்த! //
அண்ணாச்சி, கலாம் அய்யா நல்லா வீணை வாசிப்பாகளாமே.. பாத்துகிடுங்க..: http://newindianexpress.com/cities/bangalore/article546263.ece
ரொம்ப முக்கியம். வாழ்க வினவுவின் சமூக சேவை.
Vianu also started to add masala in their website.