முகப்புகட்சிகள்இதர கட்சிகள்திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !

திவ்யாவை தருமபுரி எஸ்பியிடம் ஒப்படைத்து ஓடிய பாமக !

-

திவ்யா
சென்னை உயர்நீதி மன்றத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசும் திவ்யா

திவ்யாவின் தாலியை இரக்கமின்றி அறுத்தெறிந்த பாமகவினர் இன்று காலையில் திவ்யாவையும், அவரது தாயாரையும் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அஸ்ரா கர்க்கிடம் ஒப்படைத்தனர்.

மகளின் காதலை ஓரளவுக்கு ஏற்கும் மனநிலையில் இருந்த திவ்யாவின் தந்தை நாகராஜனின் தற்கொலையை தூண்டி விட்டதும் இதே பாமகவினர்தான். நாகராஜின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருந்த இந்த சாதி வெறியர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதும் உடன் திட்டமிட்டு தலித் மக்களின் ஊர்களை நாசமாக்கினர். அப்போதும் பாமகவின் சாதி வெறி அடங்கவில்லை. இவர்களை துணிவுடன் எதிர்த்து நின்று கணவன் இளவரசனுடன் வாழ்ந்து வந்த திவ்யாவை எப்படி பிரிப்பது என்று இரத்தவெறி பிடித்த ஓநாய் போலக் காத்திருந்தனர்.

பல மாதங்களுக்கு பிறகு திவ்யாவை தந்திரமாக ஊருக்கு வரவழைத்து தாய், தம்பிக்கு ஏதாவது ஏற்படும் என்று அச்சுறுத்தி வலுக்கட்டாயமாக அவரை இளவரசனிடமிருந்து பிரித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அழுதவாறே பேசும் திவ்யாவே இதற்கு சாட்சி. இதன் மூலம் வன்னிய மானம், கௌரவம் மீட்கப்பட்டதாக வெட்கமின்றியும், காட்டுமிராண்டித்தனமாகவும் பேசி வந்தனர் பாமக சாதி வெறியர்கள். அதன் ஆதாரங்களை ராமதாஸின் அடியாள் அருளின் பதிவுகளில் பார்க்கலாம்.

இந்நிலையில்தான் இளவரசனது மரணம் ஏற்படுகிறது. இது கொலையா, தற்கொலையா என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றாலும் இரண்டுக்குமே இந்த சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இளவரசன் மரணத்திற்கு பிறகு திவ்யாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வாய்ப்பையும் பாமகவினர் வைத்திருந்தனர். ஏனெனில் திவ்யாவும், அவரது தாயார் தேன்மொழியும் அவர்களது சிறையில்தான் இருந்தார்கள். இளவரசன் மரணம் கண்டு கலங்கி, தான் எவ்வாறு பாமகவினரால் அச்சுறுத்தப்பட்டேன் என்று திவ்யா கூறிவிட்டால் பாமக தலைகளுக்கு ஆபத்து உறுதி. இதனாலும், திவ்யா ஏதும் மனம் மாறி தங்களது வன்னிய மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதாலும் அவருக்கு ஆபத்து என்பது நிச்சயமாகவே நிறையவே இருந்தது. மேலும் இந்த பாமக சாதி வெறியர்கள் எந்த கொலைபாதகத்திற்கும் அஞ்சாதவர்கள் என்பதும் கூடுதல் காரணம்.

இதை முன்யூகித்தே மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நேற்று தொடுத்த வழக்கில் திவ்யாவுக்கு கவுரவக் கொலை நிகழும் ஆபத்து இருப்பதை சுட்டிக் காட்டியது. அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் உடன் அரசு அதிகாரிகள், மனநல மருத்துவர்கள் திவ்யாவை பார்த்து அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வது குறித்து அறிக்கை தரவேண்டும் என்று உத்தரவிட்டார்கள்.

இளவரசனது மறைவை அடுத்து ஊடகங்கள் மற்றும் இணையம், கள நிலவரப்படி தமிழக அரசியல் அரங்கில் பாமக சாதி வெறியர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இளவரசனது மரணம் சாதி வேறுபாடுகளின்றி தமிழக மக்கள் அனைவரையும் பாமகவை வெறுக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் திவ்யாவுக்கு ஏதாவது நேர்ந்தால் தமது தலை தப்பாது என்று பயந்து போயே இப்போது தாய், மகளை தருமபுரி போலீசிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இந்த ஒப்படைப்பு குறித்து பத்திரிகையாளர்கள் பாமக தலைவர்களிடம் கேட்டால், “இல்லையே நாங்கள் ஒப்படைக்கவில்லையே, அவர்களாகத்தான் சென்று சேர்ந்திருக்கிறார்கள்” என்று பட்டுக் கொள்ளாமல் பேசுகிறார்களாம். ஆனால் திவ்யாவை நீதிமன்றத்துக்கு அழைத்து வரும் போது அவர் பேசும் போதும் கூட தீவட்டி தடியர்கள் போன்று நின்று கொண்டு போஸ் கொடுத்த போது இருந்த ‘வீரம்’ இப்போது எங்கே போனது? இல்லை இதுநாள் வரையிலும் திவ்யா பாமக கட்டுப்பாட்டில்தான் இருந்தார் என்பதற்கு இந்த கோர்ட் காட்சிகளும், அது வெளியான எல்லா டிவி காட்சிகளும் இருக்கிறது என்பது கூட இந்த முட்டாள்களுக்கு தெரியவில்லை.

ஆனால் பாமக தொண்டர்களிடம் கேட்டால், “எதுக்கு சார் பிரச்சினை, இனிமேலும் அந்த பெண்ணை வைத்திருந்தால் எங்களுக்குத்தான் பிரச்சினை அதான் கொண்டு விட்டுவிட்டோம்” என்று பட்டென்று பேசுகிறார்களாம். இதெல்லாம் நமது பத்திரிகை நண்பர்கள் தெரிவித்த செய்திகள். மேலும் இளவரசனது மறைவை ஒட்டி பத்திரிகையாளர்கள் திவ்யாவை சந்திப்பதற்கு பெரும் பிரயத்தனம் செய்தும் அவர்களை தடுத்து நிறுத்தி காவல் காத்ததும் இதே பாமக தலைவர்கள்தான்.

தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் திவ்யா என்ன பேச வேண்டும் என்று இவர்கள் மிரட்டியபடியே சொல்லிக் கொடுத்துதான் அனுப்பியிருப்பார்கள். ஆனால் திவ்யா அதை மறுத்து உண்மையை பேச வேண்டும். பேசினால் இளவரசனது மரணத்திற்கு இந்த பாமக சாதிவெறியர்கள்தான் காரணம் என்பதற்கு மற்றுமொரு சாட்சியமாக இருக்கும். இளவரசன் மறைவுக்காக கண்ணீரும் கம்பலையுமாக இருக்கும் திவ்யா அதைச் செய்ய வேண்டும். தனது கணவனது மரணத்திற்கு காரணமாணவர்களை அப்படித்தான் தண்டிக்க முடியும். ஆனால் அப்படி திவ்யா பேசிவிடக்கூடாது என்பதில் அவரது தாயார் கூட இருந்து கவனிப்பார் என்பது பாமக சாதி வெறியர்களது எதிர்பார்ப்பு.

மகன் மறைவு குறித்து ஆரம்பத்தில் திவ்யாவை அழுது கொண்டே திட்டிய இளவரசனது தந்தை தற்போது பாசம் கொண்டு பேசுகிறார். இப்போதும் திவ்யா தனது வீட்டிற்கு மருமகளாக வந்தால் ஏற்றுக் கொள்வேன், அவளைப் படிக்க வைத்து மறுமணமும் செய்து வைப்பேன் என்று கூறுகிறார். எவ்வளவு துயரத்திலும் உழைக்கும் மக்களின் பண்பாடு எப்படி மேலானதாக இருக்கிறது என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்?

மறுபுறம் பாமக சாதிவெறியர்கள் ஒரு இளஞ்சோடியை பிரித்து கணவனை கொன்று அடையும் மகிழ்ச்சியின் வக்கிரத்தை இதோடு ஒப்பிட்டு பாருங்கள்!

பாமக சாதிவெறியர்களை ஒழிக்க வேண்டும் என்பதில் யாராவது மாறுபட முடியுமா?

இந்த நேரத்தில் வன்னிய இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் வெளிப்படையாக இந்த பாமக சாதிவெறியர்களை கண்டிக்க முன்வரவேண்டும். அது ஏதோ தலித் மக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் நமது தமிழக மக்கள் அனைவருக்கும் செய்து கொள்ளும் உதவியாக இருக்கும். சாதி வேறுபாடு இன்றி வர்க்கமாக நாம் ஒன்றிணையும் போதுதான் நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு போராட முடியும்.

பாமக எனும் நச்சும்பாம்பை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள்வோம்!

 1. /// திவ்யா தனது வீட்டிற்கு மருமகளாக வந்தால் ஏற்றுக் கொள்வேன், அவளைப் படிக்க வைத்து மறுமணமும் செய்து வைப்பேன் என்று கூறுகிறார்/// – இறந்துப்போன இளவரசனின் தந்தை

  என்னது திரும்பவும் முதல்ல இருந்தா …அவ்வ்வ்வ்வ்வ்வ்

 2. இந்த நேரத்தில் வன்னிய இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறோம். நீங்கள் வெளிப்படையாக இந்த பாமக சாதிவெறியர்களை கண்டிக்க முன்வரவேண்டும்// இது என்னவோ வன்னியர் மக்களுக்கு எச்சரிக்க மிரட்டல் விடுவது போல இருக்கு

  • வன்னிய மக்களெல்லாம் நாங்கள் கேட்காமலேயே பாமக சாதிவெறியர்களை கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; இருப்பார்க்கள். ஆனால் மின்னஞ்சலிலேயே படையாச்சி போட்டு சாதி வெறி காட்டும் உங்களைப் போன்றவர்களுக்கு வேண்டுமானால் அது எச்சரிக்கையாக இருக்கலாம். பின்னே ஜெயா அரசு எல்லாரையும் தூக்கி உள்ளே வைத்து போது உங்களைப் போன்ற வீரர்களெல்லாம் ஓடி ஒளிந்தவர்களாயிற்றே. வன்னிய மக்கள் எங்கள் மக்கள். நாங்கள் எங்களுக்குள் பேசிக் கொள்வோம், விமரிசித்துக் கொள்வோம். உங்களைப் போன்ற சாதிவெறியர்களையும் திருத்துவோம். நன்றி

 3. //மகளின் காதலை ஓரளவுக்கு ஏற்கும் மனநிலையில் இருந்த திவ்யாவின் தந்தை நாகராஜனின் தற்கொலையை தூண்டி விட்டதும் இதே பாமகவினர்தான்.//

  “ஓரளவுக்கு” என்று எதற்கு எழுதுகிறீர்கள்? எங்களுடைய பத்திரிகை நண்பர் ஒருவரிடம், ‘மகளின் காதலை முழுவதுமாக ஏற்கத் தயாராக இருக்கிறேன்’ என்று திவ்யாவின் தந்தை கூறினார் என்று எழுதுங்களேன்….

  News is: The Girl Divya and her Mom appeared before District SP Asra Garg. All the other information given in the article can be disputed. It is full of opinions and assumptions. Adjectives used to communicate your view – for ex: “இரத்தவெறி பிடித்த ஓநாய் போலக் காத்திருந்தனர்”….Look at the assumptions: “திவ்யாவின் தாலியை இரக்கமின்றி அறுத்தெறிந்த பாமகவினர்” (it is not proved yet..Write this only after it is proved. Till then stay neutral), “இளவரசனது மரணம் சாதி வேறுபாடுகளின்றி தமிழக மக்கள் அனைவரையும் பாமகவை வெறுக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது”.. Is this how you report news? I couldnt even completely read your article. It is soooo one-sided. Where is the opinion of PMK supporters like Arul?

  • ஸ்ரீதரய்யா நீங்கள் இவ்வளவு பெரிய அறிவாளியா, ஆச்சரியமாக இருக்கிறது! திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து அவரை மிரட்டி இனி கணவனோடு பேச மாட்டேன் என்று பேச வைத்தது பாமகவினர்தான். இது எல்லா டிவி களிலும் வந்தது. அதாவது திவ்யாவை கூட்டி வந்து சுற்றி நின்றது எல்லாம் பாமகவினர்தான். இளவரசன் தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மையானால் திவ்யா அப்படி பேசியதால்தான் அந்த நிலைக்கு அவர் போனார். அதன்படி தற்கொலையை தூண்டிவிட்டதற்கு முழுமுதற்காரணமே பாமகவினர்தான். அதன்படி திவ்யாவின் தாலியறுத்த பாமக என்று போட்டது எப்படி தவறு? அடுத்து இளவரசன் கொலை செய்யப்பட்டார் என்றால் அதை பாமகவினர் அன்றி வேறு யாரும் செய்வதற்கான முகாந்திரமே இல்லை. ஏனெனில் திவ்யா – இளவரசனை பிரிக்க வேண்டும் என்று கருத்திலும், களத்திலும் தீயாய் வேலை செய்தவர்கள் அவர்களே அன்றி வேறு யாருமல்ல. அடுத்து இளவரசன் மரணத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணம் பாமகவினர்தான் என்பது உலகறிந்த ஒன்று உங்களுக்கு தெரியவில்லை என்றால் ஒன்று செய்யலாம். திவ்யா இளவரசன் இருவரும் இணைந்து வாழவேண்டும் என்று பாமக செய்த வேலைகள், பேச்சுக்களுக்கு ஆதாரம் கொடுங்கள்.

   • //திவ்யாவை இளவரசனிடமிருந்து பிரித்து அவரை மிரட்டி இனி கணவனோடு பேச மாட்டேன் என்று பேச வைத்தது பாமகவினர்தான்.//

    பக்கத்துல இருந்து பாத்தீங்களா?

    //அதாவது திவ்யாவை கூட்டி வந்து சுற்றி நின்றது எல்லாம் பாமகவினர்தான்.//

    இளவரசனை சுற்றி இருந்தது யாரு?

    “நான் சொல்லாததை சொல்லி என்னை தனிமைப்படுத்திவிட்டார் ரஜினி சார்”-னு திவ்யா சொன்னாங்களே, அதுக்கும் ஏதாவது விளக்கம் வெச்சிருக்கீங்களா? இதுக்கு பிறகு தானே தான் இளவரசன் கூட வாழவே மாட்டேன் என்று போட்டு உடைக்க வேண்டியதாயிற்று?

    இப்பொழுத்உ விசிக்கள் உள்ளே வந்தாச்சு. முன்பு முத்துக்குமார் உடல், இப்பொழுது இளவரசன் உடல்.

    • சீனு, இளவரசனை சுற்றி நின்றவர்களுக்கு அந்த காதல் ஜோடிகளை சேர்த்து வைக்க வேண்டும் என்ற நோக்கமும், திவ்யாவை சுற்றி நின்றவர்களுக்கு அந்த ஜோடிகளை பிரிக்க வேண்டுமென்ற நோக்கமும் இருந்தது உலகறிந்த உண்மை. எனவேதான் நாம் இங்கு பிரிக்க நினைத்தவர்களின் குற்றத்தை சுட்டிக் காட்டுகிறோம். மற்றபடி இன்னும் ஏனைக்கு கேனை என்று விவாதிக்கும் உங்களது அறிவு இன்னும் மாறவில்லை. இத்தனை நாள் இவ்வளவு எழுதியும் சீனுவைப் போன்ற அப்பாவி அறிவிலிகளைக்கூட மாற்றமுடியவில்லையே என்ற ‘சோகம்’ மனதைக் கவ்வுகிறது.

     • Sir.. How many other caste leaders accepted inter-caste marriage? do you have the statistics?Your intention is just to blame PMK and their leaders.Is Mr.Thirmavalavan is Mr.Perfect??? I know an situtaion where Mr.Perfect demanded money from a girl’s father for leaving her daughter who’s under custody(i.e Love) by an dalit guy.Dont write filthy as you got a blog to write…I know it wont be published as I questioned you.

  • since when did you expect vinavu to report news neutrally,they have a clear agenda and bias.They behave self righteously and often dont offer much proof.

   they often mention things,idhu ella TVlayum vandichu,ella Newspaperlayum vandichu but then when the official media news affects their position like say if Ilavarasan could have commited suicide,they ll start questioning it.

   basically all the news on this story is already decided,The girl’s family and the boy’s family have no issues at all,all of them are nice people.The SC/ST association in Dharmapuri could have easily convinced Nagaraj to let his daughter live with Ilavarasan but PMK has started uniting other OBCs against SCs in that area,so it is the PNK’s fault.

   This Ilavarasan’s death,a total twist in the story is definitely done by PMK guys.

   These are the assumptions and normal Tamil people dont question much,they just sway with the emotions and thus it is easier for these guys to arrive at premeditated conclusions.

   I find it so funny that pondatti amma veetukku poitta,naan thandavaalathula thalai vaippennu solradhu.

 4. பாமக சாதிவெறியர்களை ஒழிக்க வேண்டும் என்பதில் யாராவது மாறுபட முடியுமா?

  எப்போதோ ஒழிந்திருக்க வேண்டியது. ஓட்டுக் கட்சியானதால் உறவாடிக் கொண்டிருக்கிறது

  இனி தலை தூக்காது

 5. View replies

  பத்திரிகைகளும்,தொலைக்காட்சிகளும் தங்கள் வியாபார நலனுக்காக இந்த விஷயத்தை மிகவும் பெரிதாக்குகின்றன.நாடு லஞ்சத்திலும் மதுவிலும் நாசமாகிறது.இதை தடுக்க எந்த மீடியாவும் முழு அளவில் முயற்சி செய்வதில்லை.ஏனென்றால் இதில் அவர்களுக்கு வியாபாரம் இல்லை.ஆனால் தருமபுரி திவ்யாவை மீடியாக்கள் சூழ்கின்றன. எனென்றால் இதில் அவர்களுக்கு வியாபாரம் உண்டு.ஒரு கண்வனை இழந்த கைம்பெண்ணை அவளின் எதிர்காலம் கருதாமல் அவளின் இறந்த கணவன் எழுதியாதாக கூறி கடிதங்களையும் அதில் உள்ள அந்தரங்க விஷயங்களையும் வெளியிடுகிறார்கள்.இதுதான் பத்திரிக்கை தர்மமா? அந்த பெண்ணின் எதிர்காலம் என்ன ஆவது?பத்திரிகையாளர்களே உங்கள் வீட்டு பெண்ணிற்கு இதுபோல் நிகழ்ந்தால் இப்படித்தான் செய்தி வெளியிடுவீர்களா? இதுபோதாதென்று தொலைகாட்சிகளில் இரவில் விவாதம் என்ற பெயரில் ராமதாஸை பிடிக்காதவர்களை கூப்பிடு வைத்து அவரையும் அவரது சாதியையும் காயப்படுத்துவது .இவற்றால் சாதி ஒழிந்துவிடுமா? இவர்கள் நடத்தும் செய்தி நிறுவனங்களில் சாதி சமயம் பார்ப்பதில்லையா? அப்படியே சாதிகள் ஒழிந்துவிட்டாலும் வேறு ஏதேனும் ஒன்று மனித சமுதாயத்தை பிரிக்க போகிறது.மனிதன் தோன்றியது முதல் ஒரே கூட்டாகவா வாழ்ந்துவருகிறான்.அவனுள் ஏகப்பட்ட பிரிவினைகள் தோன்றவில்லையா? சாதியும் அவ்வாறு ஒரு பிரிவினையே. ஒவ்வொரு சாதிக்குள்ளும் பாரம்பரியங்கள் நிறைய உள்ளன.அவை என் ஒழிய வேண்டும்? இன்றைய நிலையில் ஒவ்வொரு மனிதனையும் அவன் சாதி கல்வி வேலைவாய்ப்பில் அவனை முன்னேறிவிடும் ஏணியாகவே திகழ்கிறது.காதல் என்ற ஒற்றை வார்த்தைக்காக சாதிகள் ஒழிய வேண்டும் என நினைப்பவர்கள் அது தரும் பலன்களை வசதியாக மறந்துவிடுவது வேதனை.காதல் என்ற தமிழ் வார்த்தைகூட காத்தல்-காப்பாற்றுதல் என்ற வார்த்தையிலிருந்து மருவி வந்ததுதானே.அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணை காப்பாற்றுவது.இது இக்காலத்தில் இருபாலருக்கும் பொருந்தும். நிகழ்காலத்தில் காதல் காத்தல் என்ற பொருளில் பார்க்கப்படுகிறதா? சினிமாவிலும் உடகங்களிலும் காத்தல் என்ற பொருளில் காதல் காண்பிக்கப்படுகிறதா? ஆழமான பொருள் உள்ள காத்தல்-காதல் என்ற வார்த்தை இன்று எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது. இன்று நடப்பதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சிதானே.இதெப்படி காதலாகும்.இப்படி பொருளற்ற ஒன்றுக்காக உடகங்கள் சாதியை இழுத்து ,திட்டி ஒற்றுமையை சீர்குலைப்பது நியாயமா? நீங்க்கள் ஒருகுறிப்பிட்ட சாதியையும் அதன் தலைவரையும் திட்டினால் அந்த குறிப்பிட்ட சாதியினருக்கு சாதிவெறி அதிகமாகத்தானே செய்யும்.அதைவிடுத்து நாட்டை சமூகத்தை அழிக்க காத்திருக்கும் லஞ்சத்தையும் மதுவையும் எதிர்த்து முழுவீச்சில் போராடலாமே.உதாரணத்திற்கு மது அருந்தும் சினிமா காட்சிகளை எங்கள் தொலைகாட்சியில் காட்டமாட்டோம் என்று முடிவு செய்யுங்களேன்.அதுபோலவே லஞ்ச ஒழிப்பு சம்மந்தப்பட்ட விவ்வாதங்க்களை அதிகமாக்குங்கள்.லஞ்சம் வாங்கியவரின் முகத்தை மறைக்காமல் மணிக்கொருமுறை மக்களுக்கு காட்டுங்கள்.அதை பார்க்கிற அரசு ஊழியன் அவமானத்திற்கு பயந்தேனும் லஞ்சம் வாங்குவதை குறைப்பான்.வியாபார நோக்கம் பாராமல் பத்திரிகைகளும் செய்திஊடகங்க்களும் இவ்வாறு செய்தால் உண்மையில் அவை சமுதாயத்தை தாங்கிப்பிடிக்கும் மிக உறுதியான தூண் என போற்றலாம்.

  Saravanan sivan
  (POSTED IN JUNIOR VIKATAN)

  • எதுக்கு இப்படி வள வளன்னு பேசிகிட்டு,? திவ்யா இளவரசன் தம்பதியினரை ஏன் பிரித்தீர்கள்? இதனால் இளவரசன் மரணமடைய ஏன் காரணமாக இருந்தீர்கள்? உங்கள் கையில் இருக்கும் இரத்தக்கறை குறித்து பேசினால் ஊர் முழுக்க ரத்த தானம் செய்ய ஓதுவீர்களா?

  • Your comment is absolutely correct. No media think about Divia’s future even after loosing her father and husband. Showing their confidential in media is only for business. No need others to make Diva’s life also redundant, media only enough.

   I started looking Vinavu from last 6 months only. Before I never had any caste feelings. After looking vinavu, the way of presenting the article, giving more attention to one community and always writing against Vanniyars, trigger to have caste feeling only to safeguard our self. As I understand it is the feeling of so many vinavu readers also.

   One-think is sure, vinavu is not trying to clean the caste, its helping to grow only.

 6. //எவ்வளவு துயரத்திலும் உழைக்கும் மக்களின் பண்பாடு எப்படி மேலானதாக இருக்கிறது என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்?//

  நீ என்ன சொன்னாலும் எங்கள மாறி ஆளுங்களுக்கு ஒண்ணும் உரைக்காது கண்ணா!

  • // நீ என்ன சொன்னாலும் எங்கள மாறி ஆளுங்களுக்கு ஒண்ணும் உரைக்காது கண்ணா!// ஆமாம்.உரைக்காதுதான்.வன்னிய உழைக்கும் மக்கள் என்பவர்கள் வேறு.உங்கள மாறி ஆளுங்க என்பவர்கள் வேறு.

 7. ஏப்பா வினவு…. பகுத்தறிவு கேக்குறதுக்கு முதல்ல பதில் சொல்லு…

  • கொலை செய்து விட்டு ஒரு கொலைகாரன் பெருமாள் கோவிலில் புராணம் கேட்கிறான். அந்த பக்கமாக வந்த வினவு கொலைகாரனை பிடித்து போலீசில் கொடுக்க போகும் போது ராசா கேட்கிறார். ” முதல்ல புராணத்துல ஐயங்கார் கேட்ட கேள்விக்கு பதில் சொல் “

  • பகுத்தறிவு கேக்குறதுக்கு பதில் சொன்னா மட்டும் , அடுத்த சீன்ல திருந்திட போறீங்களா?

   • கரெக்டா பதில் சொன்னால் திருந்துவதற்கு வருந்தப் போவதில்லை மிஷ்டர் தலித்.

 8. Whatever it may be. Dont care about who killed ilavarasan. This is a tragedy . But enough is enough. Please dont make them to feel like they are shit.Do you see how his mother is crying infront of his body.First of all, see his face. Does he look like he is making love drama. I dont think that divya family is that much rich to put these kind of love drama.

  Think about if the same untouchability is applied to you. It is very cruel guys. Please try to understand. Even as vanniyar, i also encountered various caste based partiality from my upper caste friends. Makes them to merge with main stream. If they are uncivilized , make them civilized.

  Tell me, how long they will face these kind of problems. Even now a days, people are allowing dogs inside their house not the dalit peoples(even in my family also.sorry to say.now i asked my parents to change).

  One thing. upper caste peoples even wont touch dalit kids. But for their parents their kid is only source of love. For their sake of love, please dont do these kind of barbaric acts.

  I am not supporting vinavu in all their policies. I am supporting only the dalit issues. Now Ramdoss lost all the respects from every corner of the vanniyar families. I think his political chapter is closed. This is the high time, that we can change our attitudes towards dalit peoples.

 9. //..Whatever it may be. Dont care about who killed ilavarasan. This is a tragedy . But enough is enough. Please dont// make them to feel like they are shit….///

  i agree all your words expect the above.. those who killed should be killed. tthat is the way to provide justice. else after few days they start thier rowdisim again. once 10 people put hang to death.. then no body in any caste will come to kill any one for love , marriage or any thing…

  this should be done.

 10. I think, the people and media analyze this issue wrongly,

  1. Why should he marry when he cannot stand on his own leg?
  2. Seems he is not having own source of income, before which, such a complicated love and marriage is unwarranted.
  3. I’m not against love, why should one opt in such as in other caste, that too in rigid society where he lives.
  4. if this guy was earning well and living in City then the issue might not gone this way,
  5. The girl too opted for wrong boy at her wrong age at wrong time and wrong place
  6. Does this boy did not find any girl on his own community, why should he opt of this girl, at this age, when no job, and no good income.
  All are because of bullshit Cinema and Media.

  • மிஸ்டர் மோகன்… அறிவுப்பூர்வமான கேள்விகளையெல்லாம் கேட்டிருக்கிறீர்கள். எனக்கும் உங்கள் புத்திகூர்மையைப் பார்த்து ஒரு கேள்வி மனதில் எழுகிறது…
   “உங்களை பெத்தார்களா, பேண்டார்களா?”

    • மோகன், நீங்க கூடத்தான் பொறக்ககூடாத இனத்துல (மனிதன்) வந்து பொறந்துட்டீங்க அதுக்காக உங்கள அறுத்து சாப்பிடவா போறோம்

    • வார்தையய் வைத்தே எனன் சாதி கண்டுபிடிக்க்க முடியுமா மோகன்..? உலக காமேடி பண்ணூறிங்களே..? அது எப்படி உங்களூக்கு பிடிக்கத வார்தை இல்லைன்ன கோபமூட்டுற வர்த்தை பேசுனா பேசுனவங்க கீழ் சாதியா…

     வன் கொடுமை தடுப்பு சட்டத்தில்2 வரும் உள்ள இருக்க் போதுமான வார்த்தைகள் பேசி இருக்கீங்க.. பரமேசு நினைத்தால் நீங்கள் உள்ள இருக்கணும், மறந்துடாதீங்க…

  • I think, the people and media analyze this issue wrongly,

   1. Why should he marry when he cannot stand on his own leg?
   ஐயா காதலித்த இருவருக்கும் இடையில் இருக்க்கும் பிரச்சனை அது. இளவரசன் போலிஸ் வேலைக்காக காத்திருந்தான் , சரியான வேலை இல்லை என்பது காதலிக்கும்போதும், திருமணம் செய்யும்போதும் 9 மாதம் சேர்ந்து வாழ்ந்த போதும் திவ்யாவிற்கு தெரியாதா, திவ்யா என்ன கைகுழந்தையா?

   2. Seems he is not having own source of income, before which, such a complicated love and marriage is unwarranted.
   கல்லூரி/ பள்ளி காதல் சோடி ஓவ்வொறு ஊரிலும் நூற்றுகணக்கில் இருக்கு.. அவர்களீடம் கேட்டு பாருங்க. எதிர் காலத்தில் செட்டில் ஆனவுடம் திரும்ணம் செய்வோம்ன்னு சொல்லுவாங்க. இவர்களை பிரிக்கும் முயர்சி நடந்ததால் உடனடி திருமணம் செய்துகிட்டாங்க போல.

   3. I’m not against love, why should one opt in such as in other caste, that too in rigid society where he lives.
   பார்த்து பிடிதிருந்து லவு பண்ணுராங்க… சாதி மதம், குலம் கோத்திரம் எல்லாம் பார்த்து செஞ்சா அதுக்கு பேர் லவ் இல்லை அரேஞ்சுடு மேரேஜ்.

   4. if this guy was earning well and living in City then the issue might not gone this way,
   உணைமை தான், திருமணம் முடிந்த்வுடன் சூழ் நிலை சரியில்ல்லைன.. உடனெ சென்னை பேங்களுர்ன்ன்னு எங்கயாவது போய் வேலை வீடுன்னு செட்டி ஆகி இருந்தா இப்படி இருந்திருக்காது தான்.

   5. The girl too opted for wrong boy at her wrong age at wrong time and wrong place
   இது அவர்கள் விருப்பம், வயது குறைவு என்று சொல்கிறார்கள், ஆனால் பெண் வயதில் பெரியவளாம இருக்கும் திருமணங்கள் நிறைய இருக்கே…?

   6. Does this boy did not find any girl on his own community, why should he opt of this girl, at this age, when no job, and no good income.
   காதல் இப்படி தானே இருக்கு, காதலிலும் சாதி பார்க்க சொன்னீங்கன்ன வேலைக்காகுமா? மற்றவிஷயங்கள் இரண்டு பேரும் சேர்ந்து தான் முடிவு பண்ணி இருக்காங்க?

   All are because of bullshit Cinema and Media.
   அப்ப்டியெல்லாம் சொல்ல முடியாது. இல்லாத ஒருத்தரை சொல்லி திசை திருப்பும் வேலை தான் இது. சினிமாவில் பல விஷங்கள் சொல்லுறாங்க… அதை எல்லாமா கேட்டு நடக்கிறாங்க ? கவுரமா சொன்னா வயசு கோளாறு, உடைச்சு சொன்னா காமத்திற்கான தேவை. இது தான் காதலின் அடிப்படையா இருக்கு, சினிமா அதை கொஞ்சம் மிகைப்படுத்துன்னு சொல்லலாம். ஆனா சினிமா தான் உண்டாக்குதுன்னு சொல்ல முடியாது…

   ரவுடிசம் பற்றி, கெட்ட அரசியல் வாதிகளை மக்கள் திருத்துவது பற்றி எத்தனை படங்கள் வந்தது?

   இதனால் ரவுடிசம் கூடிட்டதா? ரவுடிசம், அரசியல் வாதிகளும் போலிசும் சேர்த்து உருவாக்குவது அவரிகளீன் துணை இல்லாமல் யாரும் ரவுடியாக நிலைக்க முடியாது..

   படம் பார்த்து எத்தனை அரசியல்வாதிகள் திருந்தினர்? அல்லது திருத்தபட்டனர்?

   இதேல்லாம் சினிமா பார்த்து வராதபோது லவ்வு மட்டும் எப்படி வரும் ?

   என்ன மேட்ட்ருன்னா, பள்ளி கல்லூரி ஆண் பெண்களூக்கு , காமம் தேவை இருக்கு, காதல் தேவை இருக்கு, அவர்கள் பக்கத்தில் எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஆண்/பெண் பிடித்திருந்தால் , காதல் காமம் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள்.

   இது படைப்பளிகளூம் தெரியும், இதயே சுவாரசியமான சரக்காக படமாக்கி விற்கிறார்கள். காதல், காமம் சப்ஜக்டில், கல்லூரி வயசு தாண்டியவர்களூக்கும் , ஏன் திருமனம் முடிந்து குழந்தகளூக்டன் இருப்பவர்ளுக்கும் கூட நிறைவேறத கனவுகள் இருக்கு, அதை அதிகப்டசம் தொடும் படங்கள், அதீத வெற்றியடைகின்றது.. ஆட்டோகிராப் போல..

   ஏர் முனைன்னு ஒரு படம் வந்ததே தெரிய்மா உங்களுக்கு? காதல் இல்லாமல் பொது பிரச்சனைகளை பேசும் பல படங்களுக்கு மக்கள் ஆதரவில்ல்லமல் காணாமல் போய் இருக்கு. என்னா மக்கள் படம் பார்ப்பது பொழுது போக்கி சுகமாக இருப்பதற்காக. அடுத்தவர் பிரச்சனையை தெரிந்து துயரப்பட இல்லை.

   அதனால் காதல் படங்கள், ஓடுது.. அவ்வளவு தான். சமூகத்தால் தான் மீடியாவும் சினிமாவும் இப்படி இருக்கே தவிர, மீடியாவல் சமூகம் இப்படி இல்லை. குற்றவாளீ நாம் தான்.

 11. பாமக எனும் நச்சும்பாம்பை ஒழிக்க அனைவரும் ஒன்று திரள்வோம்!

  ஒன்று திரள்வோம்! ஒன்று திரள்வோம்!! ஒன்று திரள்வோம்!!!

  • sridhar,

   I am not telling about educated/rich dalit peoples. I am talking about chari peoples in villages.I know in cities, that dalit people are having a good life compared to those peoples in chari.

   In my childhood days, peoples near to my home are pillais. For some functions they wont call us. They wont come to my home.

   I dont know about remaining points. Those points i taken it from websites.

  • உனக்கு நச்சு பாம்பாக தெரியும் ஒன்றுதான் 2 கோடி மக்கள் வணங்கும் நாக பாம்பு..

   • திரு ஆர்.தியாகு,2 கோடி மக்கள் ஒன்றும் வணங்கவில்லை.வணங்குபவர்களும் விரைவில் கீரிப்பிள்ளைகளாய் மாறுவார்கள்.

   • 2 கோடி பேரு வணங்கியதாலதான் பாப்புக்கு டெபாசிடே கிடைக்கலியாக்கும்

   • தியாகு, நல்லா பர்த்து எழுதுங்க நீங்க ரெண்டு கேடின்னு சொல்ல வந்தீங்களோ?

    முதலில் வன்னிய சமூதாயத்தை சேர்ந்தவங்க எல்லாரும் பாமக வை வணங்குறாங்கன்னு சொன்னிங்கன்ன… நீங்க தூக்கத்தில் கனவு காணுறிங்கன்னு அர்த்தம்..

    பமக தலைவர்கள் சொல்லுறத மக்கள் / வன்னிய சமூகத்தை கேட்குறாங்கன்ன்னு நினைச்சீங்கன்ன.முழிச்சுகலைன்னு அர்த்தம்.

    பாமக மட்டும் தான் வன்னியர்களின் முகமாக இருந்தாலூமே (உண்மையில் அப்படி இல்லை)… மக்கள் கருத்தை தான் கட்சி பிரதிபலிக்க வேண்டும் , கட்சியின் கருத்தை மக்களீடம் திணீக்க கூடாது.. காலுக்கதான் செருப்பே தவிர செருப்புக்கு கால் இல்லை.. இது பமாக மட்டு இல்லை எல்லா கட்சிக்கும் பொறுந்தும்..

    வன்னியர் சாதியில் இருப்பர்களில் சாதி மறுப்பு திருமணத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறவர்களும் இருக்காங்க. அப்படி மற்றவர்கள் செய்வதை ஏற்றுகொள்பவர்களூம் இருக்காங்க…

    சந்தேகம்ன்ன… ஒரு முறை தமிழ் மேட்ரி மோனி மாதிரி திருமண தகவல் சைட்டுக்கு போய், கேஸ்ட் நொ பார்ன்னு சொல்லுறவங்க எத்தனை பேர்னூ பாருங்க..

 12. //Even as vanniyar, i also encountered various caste based partiality from my upper caste friends.//One thing. upper caste peoples even wont touch dalit kids.//Even now a days, people are allowing dogs inside their house not the dalit peoples//

  In which world are you living Mr.Vinoth? Dont cook up stories like this. I have not seen in my entire life, somebody saying i wont touch a Dalit. Its becoming a fashion to say such things to get sympathy and showcase as Victim. I am a Brahmin and i have many Brahmin friends as well. We all have Dalit friends also. We have shared food and we have gone to everyone’s house and slept there. I feel, pagutharivu has a valid point when he says, Media is making mountain out of a mole. Isolated incidents are blown into big issue and where there is a samooga nallunarvu, it doesnt even get reported. Look what you have written – Dogs are allowed but not dalits. This is plain bullshit. Give examples of how many such events you have seen like that. Starting with vinavu, everyone wants to cash in on Negative news….The problem is: When they do, some people start cooking up stories. Are upper castes not travelling in buses/trains with dalits? Are they asking for caste before they board the bus/train? The situation of Touching a Dalit comes outside the house, in public places only. Inside the house, none except relatives will be allowed. Even upper caste non-relative will not be allowed. May be, some social evils like : Two-tumbler system exists in remote corners. To abolish that, bring the awareness on how in cities, none care about this. But some caste based political parties and websites like vinavu, amplify the issue and make it a Kalavaram. Even in this issue, i do not see the portal is acting responsibly by reporting everything one-sided…!! I have communicated this to vinavu also…

  • ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 400 கிராமங்களுக்கு மேல் இரட்டைக்குவளைமுறை வழக்கத்தில் இருக்கிறது. ஆதிக்க சாதியினர் வாழும் தெருக்களில் செருப்பு அணிந்து நடக்கத்தடையும், பைக்கில் செல்ல தடையும் பல கிராமங்களில் அமலில் உள்ளது. கொஞ்ச நாள் முன்னாடி வடுகபட்டியில் ஒரு சிறுவனை செருப்பை தலையில் தூக்கி நடக்க வைத்த சம்பவத்தின் போது நீங்கள் பிறந்திருக்கவில்லையா?

  • What Mr Sridhar says is correct. Gone are the days of untouchability and now as labour has added values, all are employed in all positions.
   Where ever love marriages take place parents and relatives may try to stop it whether they belong to dalit or non dalit.
   Parental control and monitoring plays a greater role in the marriage decisions of their wards. Now around 30% inter caste marriages happens and they are not within selective communities.
   It happens between Hindu and Muslim Christian and Hindu, dalit and non dalit, Gounder and Jain , Thevar and Punjabi etc due to the exposure our younger generation are prone to in their study and work environment. People have started accepting such independent proposals of their children saying if the young ones are happy they will also be happy.
   Only thing they verify is whether the relationships are genuine.
   But marriages of young ones who are less than 20 years of age are not favored by the parents.
   More than the understanding and intimacy , mere teen age attractions see persons united though without any career building activities.
   PMK or any party did not stop the marriage in controversy but they expressed some opinion and one has the right to criticize such opinion, but simply targeting them for everything of what has happened is not the right way of taking things to the public.
   Dr Ramadoss himself had earlier made it clear that he was not opposed to the inter caste marriage.

 13. திவ்யா வின் வழக்கறிஞர் பாலு என்பதால்
  திவ்யா விவகாரத்தில் பா.ம.க தலையீடு உள்ளது… one india.

  அட பரதேசிகளா …
  அவர் வழக்கறிஞர்டா _____..
  நீங்களும் வாதாட அழைத்தால் உங்களுக்காகவும் வாதாடுவார்…
  என்ன புரிதலோ…
  ஏன்டா… வன்னியன் என்ன பண்ணாலும் குற்றமா…?

  • அப்போ பாமகவின் டாக்டர் செந்தில் திவ்யாவை வீட்டில் சந்தித்து அட்வைஸ் சொன்னது? கோர்ட்டில் பசுமைத்தாயகம் அருள் திவ்யாவிடம் பேசியதாகச் சொன்னது? அவங்கெல்லாம் பாமகவினர் இல்லையா?

   யப்பா சாமி… போன் வயர் பிஞ்சு ஒரு மாசமாச்சு.

 14. எவனோ எங்கயோ செத்துட்டானாம், அதுக்காக வன்னிய பேரினம் தலை குணியனுமாம்! சில பொரம்போக்குகள் சொல்லுது..
  எடு செருப்ப ________! அவன் குடிபோதையில ரயில்ல விழுந்தா அதுக்கு நாங்க என்னடா பன்ன முடியும்

  • எவனோ எங்கோ செத்துட்டானாம்,அதுக்கு வன்னிய பேரினம் தலை குணியனுமாம்!
   தம்பி வெக்கபடனும், வேதனை படனும். யார்? வன்னிய உழைக்கும் மக்கள் அல்ல, வன்னிய மக்களை அடகு வைது பொரிக்கித்தின்னும் பாமக சாதிவெ றி பிடித்த ரத்த ஓனாய்கள். எனவே இந்த புரிதல் இல்லாமல் சாதியை பிடித்து மாற்டிக்கும் உன் மூளையைநீ சொன்ன செருப்பாலே அடிதுக்கோல்.

 15. முகமூடி சமூக சீர்திருத்த வாதிகளே ! அவனுக்கு வாழ கற்று தராமல் இளவரசனை உசுப்பேத்தி உசுப்பேத்தியே கொன்னுட்டிங்கையா.

 16. னன்றி ச்ரிதர்!நீங்கள் குறிப்பிட்டபடி எல்லோரும் சாதி மறந்து சமத்துவமாக இருந்தது, இருப்பது உண்மைதான்! ஆனால், கிராமஙகளில் சமீப காலமாக மீண்டும் சாதியம் தலை தூக்குகிறது! விடுதலைபுலிகளின் வீழ்ச்சிக்கு பின் ஈழம் படும் பாடு போல, திராவிட இயக்க ஆதிக்கம் அரசியலில் குறைய குறைய, இது போன்ற அடிப்படைவாத சக்திகளால் தூண்டப்படும் கலவரங்கள் தலைதூக்கும்! இத்ற்கு பின்னனி சந்தர்ப்பவாத அரசியலே! காந்திய கொள்கைகளில் பெரும்பற்று கொண்ட பெரியார், காஙகிரசிலுள்ள ஆதிக்க சக்திகளை எதிர்த்து வெளியேறி, இந்த ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடி வந்தபோது தலைதூக்காத சாதி வெறி இப்போது ஏன் தலை தூக்க வேண்டும்? ப ம க வின் புதிய அவதாரம் இந்துத்வ சக்திகளால் வளர்க்கப்பட்டதே! இதை தட்டி கேக்க வேண்டிய ஒரே திராவிட கட்சி ஊழல் பொறியில் மாட்டிகொண்டு தனித்து விடபட்டிருப்பது அவலம்! பெரியார் வளர்த்த திராவிட் இயக்கம், இந்த ஓட்டுபொறுக்கும் அரசியலால் சிதறுண்டு வருவதே இதற்கு காரணம்! காந்தி, பெரியார் போன்ற மன்சாட்சியுள்ள, தன்னலமற்ற தலைவர்களை இப்போதேனும் மக்கள் நினைத்துப்பார்ப்பார்களா?

 17. இரண்டு உழைக்கும் சாதியினரிடையே, வெறுப்புணர்வை தூண்டிவிட்டு நடுவில் குளிர் காய்பவர்கள் யார்? மனிதநேயம் உள்ளவர்கள் சிந்திக்கட்டும்!

 18. எவளவு தான் கட்டுகதைகள் பா ம க வினரால் கொல்லப்படவோ தாக்க படவோ சாத்தியமுள்ள ஒரு நபர் அதுவும் ரஜனிகாந்த போன்ற ஒரு வக்கீல் தொடபுடையவர எப்படி தனியாக தனியடிக்க போனார் என்று தான் எனக்கு புரியவில்லை. இது நிச்சயம் ஒரு கொலை தான் அதுவும் இளவரசனின் நண்பர்களாலோ அல்லது அவனை சார்ந்தவர்களால் மட்டுமே நிகழத்த பட்டிருக்க முடியும்

 19. இளவரசனின்
  தலித் என்பதால் கொல்லப்பட்டான்.
  சடலத்தை கண்டவுடன்
  தற்கொலை என்றது சாதி மீடியாக்கள்
  ஏனென்றால்
  இளவரசன் கீழ் சாதிக்காரன்.

  ரயிலடித்து செத்தான் என்றது பொலிஸ்.
  அம்மாவின் கட்டளை 144 போட்டது
  திவ்யா விதவையானாள்
  திருமா சமாதான தூதரானார்.

  மகாத்மா காந்தியின் சத்திய சோதனை
  புத்தகத்தில் கண்ட
  இந்தியா
  இன்றும் அதே பொலிவுடன்
  காட்டுமிராண்டியாக நிற்கிறது.

 20. “ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் கவுண்டச்சி குடும்பம் நடத்தட்டும்.
  ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் செட்டியார் பெண் குடும்பம் நடத்தட்டும்.
  ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் தேவர் பெண் குடும்பம் நடத்தட்டும்.
  இதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதிலடியாக இருக்க முடியும்.”

  வழக்குரைஞர் ரஜினிகாந்த் பேச்சு – மேட்டுப்பாளையம்

  • அப்போ சக்கிலியர் பெண்கள் யார் வீட்டில் குடும்பம் நடத்தட்டும்?

 21. //ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் கவுண்டச்சி குடும்பம் நடத்தட்டும்.
  ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் செட்டியார் பெண் குடும்பம் நடத்தட்டும்.
  ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் தேவர் பெண் குடும்பம் நடத்தட்டும்.
  இதுதான் அவர்களுக்கு நாம் தரும் பதிலடியாக இருக்க முடியும்.”

  வழக்குரைஞர் ரஜினிகாந்த் பேச்சு – மேட்டுப்பாளையம்//

  அப்படியே
  ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் பறையர் பெண் குடும்பம் நடத்தட்டும்.
  ஒவ்வொரு சக்கிலியர் வீட்டிலும் பள்ளர் பெண் குடும்பம் நடத்தட்டும்.

  ஒரே வருடத்தில் சாதி ஒழிந்துவிடும்.
  [பி.கு.: எதற்கும் முதலில் சக்கிலிய பெண்களிடம் அனுமதி வாங்கிவிடுங்கள்.பின்னே அவர்கள் பாவம் எங்க போய் குடும்பம் நடத்துவது?]

  • திரு தர்மா,இனியன்,பரலோகபாண்டியன் – நீங்கள் நினைக்கிற மாதிரி இந்த வீட்டிலும்,அந்த வீட்டிலும் பெண் குடும்பம் நடத்தனுமா?.பெண் சமுகத்தை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? இதைத் தானே சிங்கள இனவெறி கும்பலும் சொன்னது. எந்த சிசுவை சுமக்க வேண்டும் என்பது அந்தப் பெண்ணின் விருப்பத்திற்குட்பட்டது.
   [பி.கு.: ம க இ க தோழர் ஒருவருடன் உரையாடியபோது கிடைத்த கருத்து.நன்றி தோழர்.]

   இதற்காகவா பெண்கள்?பெண்ணினமே,இந்த மாதிரி பேசுவோர் தலை மயிரை பிடித்து உலுக்கி எடுக்க வேண்டுகிறேன்.

   • திரு இளையோன் அவர்களே:
    நான் கூறிய கருத்தை தவறாக புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறன். அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில் இடம் பொருள் ஏவல் சுட்டாமல் நான் சொல்லிவிட்டான். மன்னிக்கவும். தெளிவாக சொல்லாதது என் தவறுதான்.
    மேட்டுப்பாளையம் பேச்சின் உள்முரண் நகைச்சுவையானது. அங்கு யார் யார் என்ன பேசினார்கள், கூட்டத்தை யார் நடத்தியது என்ற முழுத்தகவல்களுடன் மீண்டும் நீங்கள் என் பின்னூட்டத்தை வாசித்தல் நான் என்ன சொல்ல வந்தேன் என்பது உங்களுக்கு புரியும்.
    ஒடுக்கப்பட்ட சாதிகளின் உள்முரண்பாடும் பெண்ணை ஒரு போகப்பொருளாக/சொத்தாக அவதானிக்கும் மனநிலைக்கு ஒடுக்கப்பட்டோரும் விதிவிலக்கில்லை என்பதை சுட்டிக்காட்டவே நான் இந்த சம்பவத்தை குறிப்பிட்டேன்.
    சாதீயம் பெண்கள் மேல் கட்டப்படும் ஒரு கருத்தாக்கம். அது எல்லா சாதி பெண்களுக்கும் தெரியும். ஆனால் தந்தை வழி ஆணாதிக்க சமூக மனம் அவர்களை ஒடுக்கி வைத்துள்ளது.அருந்ததியர் ஆண் அருந்ததியர் பெண்ணை விட மேல் என்ற யதார்த்தம்/மனநிலை மேற்கண்ட பேச்சின் சாரம் என்பதே நான் சொல்ல வந்தது நண்பரே. மற்றபடி ம.க.இ.க. மற்றும் தி.க. தோழர்களின் மேதாவிலாசத்தில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவர்களிடம் முழு தரவையும் கொடுத்து கருத்து கேட்டு எழுதினால் நன்றாக இருக்கும்.
    நன்றி.

 22. உயர்சாதியை சாதி சொல்லி திட்டினால் “புர்ர்ர்ர்ர்ட்சி”
  கீழ்சாதியை சாதி சொல்லி திட்டினால் பி.சி.ஆர் வழக்கு

  உயர்சாதியை திட்டினால் “சாதி மறுப்பாளன்”
  கீழ்சாதியை திட்டினால் “சாதி வெறியன்”

  உயர்சாதிக்காரன் கொலை செய்யப்பட்டால். அது தற்கொலை
  கீழ் சாதிக்காரன் தற்கொலை செய்தாலும் அது கொலை

  இப்ப சொல் எவன் ஆதிக்க சாதி?????????????????

  • எந்த ஒடுக்கப்பட்ட சாதியும் அவமானிக்கும் போது ,அச்சிருத்தும் போதும், அதுக்கு ஆதரித்து பேசும் எவனும் ஆதிக்க சாதியே…னீரும்.

 23. சாதி- நமது சமூக/தனி மனித நனவிலி மனதில் வரலாற்று ரீதியாக ஊறிப்போன ஒரு விஷயம். சாதி மறுப்பு என்பது இந்த நனவிலி மனதில் இருந்து புத்தியால் சாதி பற்றிய கருத்துருக்களை ஆராய்ந்து மறுப்பதனால் மட்டுமே சாத்தியமாகும். அடுத்தவன் சொல்லுக்காக , கருத்துகவர்சிக்காக, சாதிமறுப்பு என்று சொல்லிக்கொண்டு திரிபவர்களின் வேஷம் ஒரு பிரச்னை வரும் போது வெளுத்துவிடும். நமக்கு இருப்பது மறுப்பா இல்லை வெறுப்பா என்பதை நம் வார்த்தைகள் காட்டிக்கொடுத்துவிடும்.வெறுப்பு வெறியின் மறுபக்கம்.

  ஒரு சில ஆண்டுகளாக வணிக பத்திரிக்கைகள்-வலைதளங்களில்-என்ன பிரச்சினையாக இருந்தாலும்- மக்கள் தங்கள் கருத்துகளை சொல்ல இடமளிக்கிறோம் என்ற போர்வையில் பொருளற்ற வன்முறை/ஆபாச சொல்லாடல்களுக்கு முன்னுரிமை கொடுத்து தீர்வை நோக்கிய உரையாடல்களை தணிக்கை செய்து தங்கள் rating ஐ அதிகரிக்கும் கொடுமையான விளையாட்டை நடத்திக்கொண்டுள்ளனர். வலைதளங்களில் இந்த பத்திரிகைகளின் பதிவுகளை/பின்னூட்டங்களை படிக்கும் யாரும் இதை கவனிக்க தவற மாட்டார்கள். வினவும் அந்த வேலையை செய்வது வேதனையான விஷயம். பதிவுக்கு எடுத்துகொள்ளும் விஷயங்கள் நேர்மையானதாக இல்லையென்றால் பின்னூட்டங்கள் மோசமாக வரும். ஆனால் சாதி பற்றிய பதிவுகளில் பின்னூட்டங்கள் அனைத்துமே வன்முறை வாந்தியாக உள்ளது. வினவின் பின்னூட்டமும் இந்த லட்சணத்தில்தான் உள்ளது. என்ன கொடுமை? ஓட்டுபொறுக்கும் திராவிட கட்சிகளின் உபாயத்தை சாதி விசயத்தில் வினவும் பின் பற்ற வேண்டுமா? அதையும் அளவுக்கு அதிகமாக செய்து எதிர்மறை நிலைக்கு தன்னையே தள்ள வேண்டுமா? இந்த பதிவுகளை/பின்னூட்டங்களை படித்துவிட்டு நடுநிலையான ஒருவர் என்ன முடிவுக்கு வருவார்? குடித்துவிட்டு எழுதுவார்களோ என்று ஒருவர் கேட்டார். இல்லை குடிக்காமலேயே நம் மக்கள் இப்படித்தான் எழுதுவார்கள் என்று சொல்வதா?
  நடுநிலையான மனிதர்கள் என்பதே ஒரு பித்தலாட்டம்-எல்லோரும் சார்பு/பற்று/வெறி-உள்ளவர்கள்தான்- என்பதுதான் உங்கள் கோட்பாடா? அதனால் புத்தியோடு உரையாடுவதை விட உணர்ச்சிப்பிழம்பாய் காரி உமிழ்வதுதான் நல்ல சொல்லாடல் என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களோ? தப்பி தவறி யாரேனும் நிதானமாக எதாவது சொன்னால் உடனே அதை ஆட்சேபித்து வரும்-கெட்டவார்த்தையில் மிரட்டும்- பின்னூட்டங்களை போட்டு புளகாங்கிதம் அடைவதுதான் இடதுசாரி மாண்போ? வலதுசாரிகள் கூட பிடிக்காதது பின்னூட்டமாக வராமல் பார்த்துக்கொள்வார்கள்-சொல்லவிட்டு திட்டமாட்டர்கள்.
  நிற்க.
  உங்கள் பதிவுகளை/பின்னூட்டங்களை சக்கிலியரும், வனவாசிகளும், நரிக்குறவர்களும் கூடத்தான் வாசித்துகொண்டிருக்கிரார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? தெரியாதென்றால் தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த கூத்துகளை அவர்கள் வேதனையுடன் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். உரக்கப் பேசினால் எல்லாம் உண்மையாகிவிடுகின்ற அவலத்தால் அவர்கள் மௌனமாக இருக்கிறார்கள்.

 24. வினவின் உண்மை முகம் மிக குறுரமானது. சாத்தான் வேதம் ஓதியது போலத்தான். சாதியை ஒழிக்கிறோம் என்று ஒற்றுமையுடன் வாழும் தாழ்த்தப்பட்ட மற்றும் குடியான மக்களிடையே மிகப் பெரும் வன்முறையை உருவாக்கி அதில் குளிர்காயும் பயங்கரவாதிகள்தான் நீங்கள். பலதரப்பட்ட மக்களிடையே வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய சூழலில் நீங்கள் வேற்றுமைக்கான விதைகளை வெற்றிகரமாக தூவுகிரீர்கள். பிரித்து ஆளும் சூழ்ச்சிக்கு பேசாமல் பிச்சை எடுக்கலாம்.
  இதுதான் உங்கள் புதிய ஜனநாயகமா? உங்கள் இந்த கேவலமான பிழைப்பை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லை என்றால் தமிழ் சமூகம் வெட்டுண்டு சாவதை ரசிக்கும் வெட்கங்கெட்ட வெறி கொண்ட கொடூர நாய்களாக நீங்கள் இருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை…

  • உன் சக்தியை முழுவதும் பயன்படுதி வினவின் உண்மையை புரிந்து எழுதி இருக்கிர..எந்த அளவுக்கு உன் மொக்க மூளை வேலை செய்திருக்கு. உண்மையை சொல்வது மட்டும் வினவின் வேலை இல்லை உன்னை மாதிரி மொக்கயை திருத்துவதும் தான்.

 25. பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா. We should not leave these culprits just like that, they should be hanged until death before Illavarasan’s burial.
  As well Divya should spend her rest of life with Illavarasan’s parents.

  • // பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்து விடு பாப்பா// ஆமாம் திரு பெருமாள்,திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் களப்பால் கிராமத்தில் உலக பசுமை விழிகள் இயக்க நிறுவனர் பாஸ்கர் ( இவர் வட்டித் தொழில்,கிரிமினல் வேலை செய்து வந்துள்ளார் ) என்பவர் பொது மக்கள் 100 பேர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்கிறது காவல் துறை செய்தி.

 26. இளவரசன் மறைவுச் செய்தியைப் பார்த்த அன்று முழுவதும் மனத்துயரத்தோடே கழிந்தது! கேவலமான சாதி வெறியர்களுக்கு இவ்வளவு ஆற்றல் எப்படி வாய்த்தது, எந்தப் புலனுக்கும் எட்டாத கற்பனைக் கருத்தான சாதிக்காக, வாழவேண்டிய ஒரு சிறுவயது இளைஞனை கொடூரமாக கொலை செய்யும் அளவுக்கு? பெற்றவயிறு பற்றி எரிவதை இராமதாசு உணரவில்லையா? இராமதாசு கூட பிள்ளைகள் பெற்ற ஒரு மனித இனத்தைச் சேர்ந்தவர்தானே? ஒரு தந்தையின் உணர்வை இராமதாசு கல்லாக்கிக் கொண்டு இப்படி நடந்து கொள்ள அவரின் மனம் எப்படி துணிந்தது? அடாத செயலைச் செய்த இராமதாசு நிம்மதியாக வீட்டில் தூங்குவது எப்படி அறமாகும்? தான் பதவி சுகம் பெற வேண்டுமென்பதற்காக, உழைப்பாளி மக்களின் சொத்துக்களை அழித்து, மனிதர்களைக் கொன்று பலியிட இராமதாசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
  இராமதாசே, சாதி.. சாதி என்கிறீரே… அந்த சாதி உமது உடம்பில் எந்த பாகத்தில், எந்த வடிவில் உள்ளது? கூறமுடியுமா இராமதாசு? பார்ப்பான் திணித்த சாதிப் பீ யை இப்படி மனம் முழுக்கச் சுமக்கிறீரே…! அப்ப.. உங்களை சூத்திரன் என்பதை ஒத்துக் கொள்கிறீரா இராமதாசு? சூத்திரன் என்ற சொல்லை எங்கள் தமிழ் மொழியில் மொழிபெயர்த்து உங்களை அழைக்கலாமா சாதி வெறியரே?
  அதிகாரத்தைக் குவித்து வைத்துள்ள இந்த அரசு ஏன் இன்னும் உறங்குகிறது? சாதி வெறி மிருகங்களை இன்னும் ஏன் ஊருக்குள் நடமாட அனுமதிக்கிறது? இந்த அரசு அவசரகதியில் செய்ய வேண்டியது என்னவென்றால்: சாதித் தலைவர்களான இராமதாசு, அன்பு(???)மணி, மனிதவெட்டி குரு… இன்னும் பிற சாதித் தலை மிருகங்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது மேல் சட்டையோ, கால்சட்டையோ, வேட்டியோ… எந்த உடையுமே இவர்கள் அணிந்து வரத் தடை விதிக்க வேண்டும்! மீறி வெளியில் வந்தால், உடை அணியாமல் அம்மண குண்டியாகத்தான் இவர்கள் மக்கள் மத்தியில் நடமாட வேண்டும், ஆம், அம்மணமாக, பிறந்த மேனியாகத்தான் இதுகள் தெருவில் திரிய வேண்டும்! ஏனென்றால், மானத்தை மறைக்கும் உடையை அணியும் உரிமையை இந்த இராமதாசு போன்றவர்கள் இழந்து விட்டார்கள்! இவர்கள் உடை அணியக்கூடாது! ஒரு அய்நூறு ஆண்டுகளுக்கு முந்தைய மனநிலைக்குச் சென்று விட்டார்கள் இவர்கள்! மீறி கொலைகாரச் சாதி மிருகங்கள் ஆடை அணிந்து வெளியில் வந்தால், குண்டர் சட்டத்தில் ஓரு ஆண்டுக்கு நேராக புழல் சிறைக்கு கொண்டு போய் விட வேண்டும், இப்படி ஒரு அவசரச் சட்டத்தைப் அரசு உடனே பிறப்பிக்க வேண்டும்! இதுதான் இப்போதைய அவசரத் தேவை இராமதாசு போன்ற மிருகங்களுக்கு!
  சகோதரன் இளவரசனை பறிகொடுத்த அவரது தாய் தந்தைக்கு பொதுவுடமையை நேசிக்கும் தந்தைப் பெரியாரின் தொண்டர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது மனத்துயரத்தில் பங்குகொள்கிறோம்.

 27. எது எப்படியோ வன்னிய இளைஞர் களை வினவு , பேஷ் புக் ஒன்று சேர்கிறது , வினவு பா ம க விடம் பனம் வாங்கி விட்டதா 

  • அப்போ Mark Zuckerberg இக்கு குடுக்குற அளவுக்கு உங்க ராமதாஸ் ஐயாகிட்ட இர்ருகுன்னு ஒத்துகிறிங்களா

   • //Mark Zuckerberg //

    அவரு யாரு பெண்ணை பெத்தவங்க கிட்ட கட்டபஞ்சாயத்து பண்டரவரா ? உனக்கு ஒருத்தன தெரிஞ்சி இருக்குன்னா அவன் கட்ட பஞ்சாயத்து பன்றவனா தான இருப்பான் ?

    • வினாவுக்கு பணம் வந்கிட்டாத சொல்லுற நீயும் குடுத்து இருப்பான்னு நம்புற உன் தலைவன் மட்டுமே இங்கே கட்ட பஞ்சாயத்து செய்யமுடியும்னு நிருபிச்சிகிட்டு இருக்கான். அத தான் நீயும் மேல பதிவுல சொல்லிருக்க. இந்த கேள்விய மொதல்ல போய் ஒன்ன அடியாளா வச்சிருக்க ராமதாஸ் கிறுக்கன் கிட்ட போய் கேளுடா.

 28. திவ்யா, இளவரசன் அவர்களது குடும்பம் என நான்கு சுவர்களுக்குள் அடங்கியிருக்க வேண்டிய பிரச்சனை. அரசியல் சுயலாபத்துக்காக இதை ஊதிப் பெரிதாக்கி, ஊரைக் கொளுத்தி, சம்பத்தப்பட்ட இரண்டு பேர் சாகும் அளவிற்கு இதை வளர்த்துள்ளனர் பாமகவினரும், ராமதாசும், அவரது கூட்டாளிகளும். வினவு சொன்னது போல இதை கொலையா, தற்கொலையா என்ற குறுகிய கோணத்தில் பார்க்காமல் ஆதி முதல் நடந்த நிகழ்வுகளின் பின்புலத்தில் மேற்கண்டோர் விசாரிக்கப் பட வேண்டும். நடக்குமா என தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராமதாஸ் கோவணம் உருவப்படும்.

  குற்றம் நடக்கும் போது அதை தட்டிக் கேட்கும் பொறுப்பு இருந்தும் மௌனம் சாதிக்கும் திருதராஷ்டிரர்களாக சிலர் வலம் வருகின்றனர். இளவரசன் மரணம் பற்றி “நாவடக்கம்” புகழ் கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் பாமக என்ற வார்த்தை இல்லை. புரட்சி புயல் வைகோவும் அப்படியே. தன்மானத் தமிழன் சீமானும் அப்படியே. பச்சை பிழைப்புவாத பச்சோந்திகள்.

  http://tamil.oneindia.in/news/2013/07/06/tamilnadu-karunanithi-seek-judicial-probe-on-ilavarason-death-178574.html

  http://tamil.oneindia.in/news/2013/07/05/tamilnadu-vaiko-demands-judicial-probe-into-ilavarasan-death-178520.html

  http://tamil.oneindia.in/news/2013/07/07/tamilnadu-divya-ilavarasan-s-love-become-political-instrument-178638.html

  எல்லா ஜாதியினரும் இந்துக்கள் என நீட்டி முழக்கும் அர்ஜுன் சம்பத்தும், ராமகோபாலனும் இது பற்றி பேசினாரா என தெரியவில்லை. “தமிழ் ஹிந்து” வாய் திறக்கவில்லை. பாஜக ஒரு சொத்தை அறிக்கை வெளியிட்டதோடு சரி. இவர்கள் இந்த விவகாரத்தில் நேரடியாய் ஈடுபாடு கொண்டு சாதிவெறிக்கு எதிராய் செயல்பட வேண்டாமா?

  http://tamil.oneindia.in/news/2013/07/06/tamilnadu-karunanithi-seek-judicial-probe-on-ilavarason-death-178574.html

 29. தர்மபுரி: தர்மபுரியில் காதல் திருமணம் செய்து கொண்ட இளவரசன் தற்கொலை செய்து கொண்டது கடிதம் மூலம் உறுதியாகியுள்ளது என மாவட்ட எஸ்.பி., அஸ்ரா கார்க் கூறியுள்ளார். மேலும் அவர், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என கடிதத்தில் இளவரசன் கூறியுள்ளதாகவும் கூறினார.

 30. வினவு,
  ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்கு உரிய அனைத்து இழிவான குணமும் உன் கிட்ட இருக்கு. நீ ஏன் காம கதைகள் எழுத கூடாது.

  இப்படி சாதி வெறியை தூண்டுவதற்கு பதில் அதை செய்யலாம்.

  • @கெல்வி
   அந்த கொறய நீ பின்னூட்டமிட்டு தீத்துக்கிறியேபா! 🙂 பின்னெ என்ன 🙂

 31. களத்தில் நின்று போராடும் எம் தோழர்களுக்கு எமது பாராட்டுக்கள்…

  ஓட்டு அரசியல்வாதிகளையும், சாதிய பிழைப்புவதிகளையும் அம்பலப்படுத்துவதற்கான சரியான தருணமிது…

  தோழர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்…

 32. Dear Vinavu,

  Please avoid the expressions like given below at any cost. They are ugly unnatural ideas. They need to be made obsolete and forgotten.

  தாலியை அறுத்தல்
  விதவையாக்குதல்

  Then
  Please delete/edit the comments attacking the human dignity of people facing this attack for a long time.

  • திரு relax,உங்கள் மனநிலை பரிதாபதத்திற்குரியது.மனிதச் சாரம்-ன்னு ஒரு புத்தகம்.சென்னை கீழைக்காற்று பதிப்பகத்தில் கிடைக்கும்.வாங்கி படிக்க ஆரம்பிச்ச ஒரு நாளிலியே நல்ல முன்னேற்றம் தெரியும்.

   • இளையோன்,
    ஒரு சுய விளக்கம்.
    படித்த, வேலையில் இருக்கும் எவனும் சாதியை பத்தி கவலை படமாட்டான். சாதி ஒரு பொருட்டே அல்ல. வாழ்வில் பாதிநேரம் ஆபீசில் , மீதி வீட்டில் , சமுதாயத்தோடு நேரம் செலவழிக்க முடிவதில்லை. சாதி சோறு போடாது , இது அனைவருக்கும் தெரியும்.

    ஆனால் இங்கு வினவு எழுதும் விதமும் அதற்க்கு அரைவேக்காடுகளின் விவேகமற்ற கருத்துகளையும் பார்க்கும் பொழுது, அவர்களுடன் கருத்து பரிமாற்றம் எனபது சாத்தியம் அல்ல.

    you guys are bunch of jokers.

    ஒரு விடலை பையன் இங்கு தியாகி ஆகி கொண்டு இருக்கிறான் . இது சமுதாயத்திற்கு நல்லதில்லை.

    • // படித்த, வேலையில் இருக்கும் எவனும் சாதியை பத்தி கவலை படமாட்டான். சாதி ஒரு பொருட்டே அல்ல.// நல்லது.
     // சாதி சோறு போடாது , இது அனைவருக்கும் தெரியும். // நல்லது.
     // இங்கு வினவு எழுதும் விதமும் அதற்க்கு அரைவேக்காடுகளின் விவேகமற்ற கருத்துகளையும் பார்க்கும் பொழுது, அவர்களுடன் கருத்து பரிமாற்றம் எனபது சாத்தியம் அல்ல. // வினவு எழுதும் விதம் குறித்து விவாதியுங்கள்.விவேகமான கருத்துகளை இடுங்கள். கருத்து பரிமாற்றம் எனபதை சாத்தியமாக்குங்கள்.உங்கள் நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
     // ஒரு விடலை பையன் இங்கு தியாகி ஆகி கொண்டு இருக்கிறான் . இது சமுதாயத்திற்கு நல்லதில்லை // நான் அப்படி கருதவில்லை.
     // வாழ்வில் பாதிநேரம் ஆபீசில் , மீதி வீட்டில் , சமுதாயத்தோடு நேரம் செலவழிக்க முடிவதில்லை// சமுதாயத்தோடு நேரம் செலவழிக்க முடியாதது சமுதாயத்திற்கு நல்லதா? யோசியுங்கள்.நன்றி!

 33. இரண்டு ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும். அரசியல் மற்றும் சாதிப் பிரிவுகளை தாண்டி இவர்களை முன்னேற்றுவதற்கு வினவு போன்ற இயக்கவியாளாலர்கள் முன் வர வேண்டும்.

 34. I wish to tell one thing to VINAVU…………. Yaetho paesunumae nu ninaichu thayavu seithu paesatheenga, starting la irunthu PMK makkal mattum than Dharmapuri la nadantha anaithu nigalvugalukkum karanam maathiri paesureenga…… ORU KAI THATTINAL OSSAI VARUMAA????????????????? blog yaelutharavanga irandu pakkamum ulla nirai kurai galai yaeduthu sollanuu mae thavira ippadi oru caste ah patthi mattum kurai solla koodathu…………. BLOG maela iruntha interest sutthama poiduchu.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க