முகப்புஉலகம்ஆசியாநிதாகத் மூலம் வெளிநாட்டு தொழிலாளிகளைத் துரத்தும் சவுதி அரசு !

நிதாகத் மூலம் வெளிநாட்டு தொழிலாளிகளைத் துரத்தும் சவுதி அரசு !

-

வுதி அரேபியா தன் மண்ணின் மைந்தர்களுக்கு வேலையில் முன்னுரிமை தர வேண்டும் என்று கொண்டு வந்துள்ள நிதாகத் சட்டத்தினால் சுமார் 65 ஆயிரம் இந்தியர்கள் வேலை இழந்து வீடு திரும்ப காத்துக் கொண்டிருக்கின்றனர். சவுதி அரசுக்கு தன் மக்கள் மீது உருவாகியிருக்கும் “குபீர்” கரிசனம் ஏன்? நாடு திரும்பிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?

இந்தியத் தொழிலாளர்கள்
சவுதி அரேபியாவில் இந்தியத் தொழிலாளர்கள்.

எண்ணெய் வளம் கொழிக்கும் சவுதி அரேபியாவிற்கு அறிமுகம் தேவையில்லை. எண்ணெய் வளத்தை பன்னாட்டு முதலாளிகளுக்கு திறந்துவிட்டு எண்ணெய் விலை சூதாட்டத்தில் உருவான ஷேக்குகளின் ஆடம்பரம், அமெரிக்க மோகம், இதை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்க அரசு, பின்பு அமெரிக்காவிற்கு விசுவாச அடிமைகளான கதை எல்லாம் நாம் அறிந்ததே.

ஒரு பக்கம் அல்லாவின் தேசம் என்று சொல்லி கடுமையான ஷரியத் சட்டங்களை நடைமுறை படுத்தி தன்னை இசுலாமிய மத அரசாக காட்டிகொண்டு, மறுபுறம் குடி கூத்துக்களோடு உல்லாசம் ஊதாரித்தனத்தில் திளைக்கும் ஷேக்குகளின் ராஜ தந்திரம் யாருக்கு வரும்?

வளைகுடா ஷேக்குகளுக்காக கட்டிடங்களை எழுப்ப கடும் சூட்டில் மூன்றாம் உலக நாடுகளில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்கள் வந்து உயிரை கொடுத்த கதையை வினவில் பல கட்டுரைகளில் பார்த்திருக்கிறோம். (மேலும் கட்டுரைகள் கீழே தொடர்புள்ள இடுகைகளில்).

சவுதி அரசு ஏற்கனவே 1991-ல் சவுதிமயமாக்கல் எனும் சட்டத்தை இயற்றியிருந்தது அதன்படி அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் சவுதியின் மண்ணின் மைந்தர்கள் சுமார் 30 சதவீதத்தினர் வரை வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும். ஆனால் இந்த சட்டம் நடைமுறையாகவில்லை. நடைமுறைப்படுத்தவும் அரசு பெரும் அக்கறை காட்டவில்லை. மீண்டு எழுந்த பொருளாதாரம் அப்போதைக்கு இதையெல்லாம் தள்ளிப்போட்டது. குறைந்த செலவில் உழைப்பதற்கு ஏழை நாடுகளிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்வதை சவுதி ஷேக்குகள் ஊக்குவித்தார்கள்.

சவுதி ஊழியர்கள்
சவுதி ஊழியர்கள்

ஆனால் 2008-ல் ஏற்பட்ட உலக பொருளாதார பெருமந்தம் சவுதி அரேபியாவை காட்டமாக தாக்கியுள்ளது, மீண்டு எழுந்துவிடலாம் என்ற நம்பிக்கையும் மங்கத் தொடங்கியுள்ளது. இதனால் 2013-ம் ஆண்டில் பெருகி வரும் வேலையில்லா சவுதி அரேபியர்களின் எண்ணிக்கை சவுதி அரேபியாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 5.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது வரும் நாட்களில் 6.3 சதவீதமாக உயரும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.

இதனால் சவுதி அரசு தன் பழைய சட்டத்தை தூசி தட்டி அதில் ஏற்பட்ட தவறுகளை களைந்து புதிதாக நிதாகத் எனும் சட்டதை இயற்றியுள்ளது. அதன்படி, மொத்த வேலை வாய்ப்பில் 10 சதவீதம் வேலைகள் சவுதி அரேபியர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் முதல் சிறு கடைகள் வரை இவை நிறைவேற்றப்பட வேண்டும்.

30 சதவீதம் என்று முன்னர் சொன்ன சவுதிமயமாக்கல் சட்டத்தை விட இது கொஞ்சம் விட்டுப் பிடிக்கும் சட்டம். காரணம் சவுதியில் தேவையான மற்றும் தகுதியான வேலையாட்களின் எண்ணிக்கை குறைவு, அதனால் உடனடியாக இத்தனை சதவீதம் பேர் வேலைக்கு வைக்க வேண்டும் என்று சட்டம் போடாமல், ஒவ்வொரு துறையாக பிரித்து மெல்ல ஒவ்வொரு துறைகளிலும் கணிசமானோரை சில ஆண்டுகளில் வேலைக்கு அமர்த்திவிட வேண்டும் என்கிறது நிதாகத் சட்டம்.

சவுதி அரேபியாவில் குடியேற்றம் பெற்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் இருக்கும். இதில் கூலி வேலை, சாதாரண வீட்டு வேலைகள், உழைக்கும் தொழிலாளர்கள் கணிசமானோர். இவர்கள் பெரும்பாலும் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்ரிக்க நாடுகளிலிருந்து வந்தவர்கள். பெரும்பான்மையானோர் இந்தியர்கள் (சுமார் 20 லட்சம்). இந்தியர்களில் பெரும்பான்மையானோர் கேரளா மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள்.

நிதாகத் சட்டதின் முதல் படியாக, முறையான வேலை பர்மிட் இல்லாதவர்களை சவுதி அரசு வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இதனால், சவுதியில் உள்ள இந்திய தூதரகத்தின் முன் சுமார் 65 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப காத்துக் கொண்டிருக்கிறார்கள், இதேபோல் 30 ஆயிரம் பாகிஸ்தானியர்களும் அவர்கள் நாட்டு தூதரகத்தின் முன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சவுதி அரேபியா - இந்திய ஊழியர்கள்
சவுதி அரேபியா – இந்திய ஊழியர்கள்

முதல் கெடுவாக மார்ச் மாதத்துக்குள் அனைவரும் வெளியேறிவிட வேண்டும் என கட்டளை இடப்பட்டது, ஆனால் ஆயிரக் கணக்கானோரை நாடு திரும்ப வைக்க கடினமாக இருந்ததால், அந்தக் கெடு ஜூலை மாதம் 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது, சொன்ன கெடுவிற்குள் இவர்கள் சவுதியை விட்டு வெளியேறவில்லை என்றால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இப்போதைக்கு முறையான வேலை பர்மிட் வாங்கி இருக்கும் தொழிலாளர்களுக்கு பிரச்சனை இல்லை.

சவுதியில் இத்தனை நாள் உழைத்து வந்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சவுதி பணத்தில் சுமார் 900 ஆயிரம் முதல் 1000 ரியால்கள் வரை குறைந்தபட்ச சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிது. இதுவும் பர்மிட் இல்லாத தொழிலாளிகளுக்கு சம்பளம் இன்னும் குறைவு. ஆனால் சவுதியின் நிதாகத் சட்டமோ உள்நாட்டைச் சேர்ந்த சவுதி அரேபிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக சுமார் 3000 ரியால்கள் கொடுக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது. இப்படி சவுதி அரேபிய இசுலாமியர்களுக்கு அதிக சம்பளமும், வெளிநாட்டு இசுலாமியர்களுக்கு குறைந்த சம்பளமும் கொடுப்பதை அல்லா எப்படி அனுமதிக்கிறான், ஷரியத் எப்படி நியாயப்படுத்துகிறது என்பதை மார்க்க பேரறிஞர் பி. ஜெய்னுலாபிதீன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

இத்தனை நாட்களாக தம் நாட்டு மக்கள் மீது இல்லாத கரிசனம் திடீரென சவுதி மன்னருக்கு பொங்கி வழிய அல்லாவின் அருள்தான் காரணமென்று நினைத்தால் அது இல்லை. அதன் காரணம் ‘அரபு வசந்தம்’.

கடந்த சில மாதங்களுக்கு முன், மக்கள் நலனை புறக்கணித்து ஆண்டு வந்த சர்வாதிகாரிகளை மத்திய கிழக்கு மக்கள் வீதிக்கு வந்து போராடி துரத்தியடித்த சம்பவங்கள் அவை. ஒரு பாரிய புரட்சி இல்லையென்றாலும், அதன்படி தன் எதிர்காலத்தையும் நினைத்துப் பார்த்திருக்கிறார் சவுதி அரசர். இப்போதைக்கு தன் மாளிகையை விட்டு ஓடத் தயாரக இல்லாத சவுதி மன்னர் உடனடியாக தன் மக்கள் மேல் கருணை மழை பொழிய தொடங்கியுள்ளார்.

என்ன தான் மக்களை மத நம்பிக்கை காட்டி ஒடுக்கி வைத்தாலும், யதார்த்தம் மக்களை போராட வைக்கும் என்பது தான் உண்மை. எகிப்திலும், துனிசியாவிலும், இசுலாமிய மக்கள், இசுலாமிய அதிபர்களை தான் துரத்தியடித்தார்கள். ”நானும் இசுலாமியன், உன் சகோதரன்” என்று அதிபர்கள் உருகியிருந்தால் உதைபட்டிருப்பார்கள், அதே தான் சவுதிக்கும் பொருந்தும், இது அல்லாவின் தேசமல்லவா ”ஏழைகளே பொறுங்கள், ரம்ஜான் மாதத்தில் கருணையுடன் நான் நோன்பிருந்து உங்கள் பசியை அறிந்து கொள்வேன், பின்னர் என்னால் முடிந்த சில ரொட்டிகளை உங்கள் பாத்திரங்களில் இடுவேன், நீங்கள் பசியாறலாம்” என்று சவுதி மன்னர் சொன்னால் அவர் அரண்மனை கைப்பற்றப்படும் என்று அவருக்கு தெரிந்திருக்கிறது. அதனால் நிதாகத் சட்டம் வந்தேவிட்டது.

சவுதியில் கணக்கு வேலை அல்லது மென்பொருள் வேலை பார்க்கும் இந்தியருக்கு கிடைக்கும் வசதிகள் இந்தியாவை விட சிறப்பாக இருக்கும்; சவுதி மக்கள் மெல்ல தொழில்நுட்ப அறிவு பெற்று, அலுவலக வேலைகளுக்கு தகுதியானவர்களாக உயர்த்திக் கொண்டதும் அத்தகைய வேலைகளிலும் அவர்கள் அமர்த்தப்படும் சாத்தியம் ஏற்படும். அப்பொழுது வேலை செய்வதற்கான உரிமை பெற்று இப்பொழுது தங்கள் சக சகோதரர்கள் வெளியேறுவதை பார்த்துக்கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க வெளிநாட்டு ஊழியர்களும் வெளியேற்றப்படுவார்கள்.

மன்மோகன் சிங், சவுதி மன்னர் அப்துல்லா
மன்மோகன் சிங் சவுதி அரேபியாவில்

இனி இந்தியாவின் நிலைமை. ஆயிரக்கணக்கில் நாடு திரும்பிக்கொண்டிருக்கும் இந்த தொழிலாளர்களின் நிலை?

சவுதி கனவென்பது அமெரிக்கக் கனவை போன்றதல்ல. விவசாயத்தை இழந்த எண்ணற்ற விவசாயிகள் உதிரிகளாக ஆக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஒரு லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன்பட்டு ஏஜென்டுகளிடம் கொடுத்து சவுதி வெயிலில் அவதிப்பட்டு பணம் சேர்க்க நினைத்த கனவு. பெரும்பான்மையான உதிரித் தொழிலாளர்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் மிருகங்களை போல் நடத்தப்படுகிறார்கள். அவர்கள் படும் துன்பங்களில் இருந்து பார்த்தால், அவர்களின் கடவுள் நம்பிக்கை என்பது அப்பாவித் தனமானது மட்டுமே. அதுதான் அவர்களை போராடவிடாமல் ஷேக்குகளின் முன் அடிமைகளாக இருப்பதற்கு உதவி செய்கிறது.

இப்பொழுது நாடு திரும்பி இருக்கும் இவர்கள் வெளிநாடு சென்றதற்கான கடனை அடைக்க வேண்டும், தன் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும். இவர்களுக்கு மறு வாழ்வளிக்க அரசு ஏற்பாடு செய்யும் என இந்திய அரசு சொல்லியுள்ளது எல்லாம் பச்சையான ஏமாற்று மட்டுமே. நாட்டில் பல கோடி மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்திக் கொண்டிருக்கும் இந்திய அரசு இவர்களை காப்பாற்றிவிடும் என்பதை ஆண்டவனே கூட நம்பமாட்டான்.

உலகம் முழுவதிலும் முதாளித்துவத்தின் தோல்வியால் வேலை இல்லாமல் திண்டாடும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்கள் உபரியான, உதிரியான தொழிலாளர்களாக உருவாக்கப்பட்டு வருகிறார்கள். முதலாளிகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்ய, உபரி கூலிப் பட்டாளம் தேவை. அவர்களை திட்டமிட்டு உருவாக்கும் முதலாளித்துவம், தேக்க நிலை வரும் போது அவர்களை பராமரிக்க முடியாமல் தவிக்கிறது.

இதே நிலை தான் இப்பொழுது உலகம் முழுவதும் உருவாகி இருக்கிறது. உழைக்கும் மக்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் என இறங்கினால் ஆளும் வர்க்க அரசுகளுக்கு ஆபத்து என்பதால் போர்கள், இனக் கலவரங்கள், மதக் கலவரங்கள், சாதி கலவரங்கள் போன்ற மக்களை பிளவுபடுத்தும் திசையில் கோபத்தை திசை திருப்ப ஆளும் வர்க்கங்கள் முயற்சிக்கின்றன.

அப்படித்தான் சவுதி அரசும் தனது நெருக்கடியை மறைக்க வெளிநாட்டு தொழிலாளிகளை விரட்டி உள்நாட்டு தொழிலாளிகளை ஊக்குவிப்பதாக நாடகமாடுகிறது. பார்க்கலாம், இந்த நாடகம் இன்னும் எத்தனை காலமென்று!

-ஆதவன்

மேலும் படிக்க

 1. //எகிப்திலும், துனிசியாவிலும், இசுலாமிய மக்கள், இசுலாமிய அதிபர்களை தான் துரத்தியடித்தார்கள். ”நானும் இசுலாமியன், உன் சகோதரன்” என்று அதிபர்கள் உருகியிருந்தால் உதைபட்டிருப்பார்கள், அதே தான் சவுதிக்கும் பொருந்தும்//

  லிபியாவை விட்டது தற்செயலா?

 2. //சவுதியின் நிதாகத் சட்டமோ உள்நாட்டைச் சேர்ந்த சவுதி அரேபிய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியமாக சுமார் 3000 ரியால்கள் கொடுக்க வேண்டும் என தீர்மானித்துள்ளது. இப்படி சவுதி அரேபிய இசுலாமியர்களுக்கு அதிக சம்பளமும், வெளிநாட்டு இசுலாமியர்களுக்கு குறைந்த சம்பளமும் கொடுப்பதை அல்லா எப்படி அனுமதிக்கிறான், ஷரியத் எப்படி நியாயப்படுத்துகிறது என்பதை மார்க்க பேரறிஞர் பி. ஜெய்னுலாபிதீன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

  ///

  We have explaination already ,,

  “Ohh prophet… Surely we have made foreigners Inferior to Saudi’s.. Surely Allah is mercuifull”.. Ha Ha Ha Ha

  • True, and sure they will find an (fake) explanation from their book. By the way did you read that book ? before starting leave your brain out from your head.

   Johnney Johnney – yes papa
   Job in Saudi – yes pp
   Lot of tension – yes pap
   Too much work – yes papa
   Bugs in Bed – Yes papa
   Weathering condition – Hot papa
   Family life – no papa
   BP sugar – high papa
   Yearly bonus – joke papa
   Annual pay – low papa
   Personal life – lost papa
   Compromise with life – lot papa
   Promotion incentive – ha ha ha

  • வினவு,சவூதி அரசு தனது நாட்டு மக்களுக்கு 3000 ரியால் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கிறது .
   இந்தியாவும் அது போன்று எங்கள் நாட்டு மக்களுக்கு 3000 ரியால் சம்பளம் கொடுக்க வேண்டும் ,இல்லையெனில் வேலைக்கு ஆள் அனுப்பமாட்டோம் என்று நிபந்தனை விதிக்க வேண்டும் .

   அப்புறம் சவுதிகாரனுக்கு 3000 ரியால் சம்பளம் அவன் குடும்ப செலவுக்கு பற்றாக் குறையாகவே இருக்கிறது ,
   இந்தியன் 1000 ரியல் சம்பளம் வாங்கி ,அதிலும் சேமித்து விடுவான் .

   ஆக சவுதிகாரனை 3000 ரியால் வாங்கினாலும் அவனை கடனாளியாகவே வைத்துள்ளான் .
   ஆனால் இந்திய முஸ்லிம்களை 1000 ரியாலில் அவனுக்கு அபிவிருத்தி எனும் பறக்கத் செய்துள்ளான்

   • ஆக, இந்தப் பிரச்சினைக்கு இசுலாத்தில் பதிலில்லை என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. இப்படியாவது மெல்ல மெல்ல மதத்தை விட்டு யதார்த்த உலகிற்கு வாருங்கள், வாழ்த்துக்கள்!

 3. //சவுதியின் நிதாகத் சட்டமோ உள்நாட்டைச் சேர்ந்த சவுதி அரேபிய தொழிலாளர்களுக்கு …………… ஷரியத் எப்படி நியாயப்படுத்துகிறது என்பதை மார்க்க பேரறிஞர் பி. ஜெய்னுலாபிதீன் அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்.///

  அவரு சொல்லக்கூடிய கருத்து என்னவா இருக்குமின்னு நினைக்கிறீங்க ரொம்ப சிம்பிள் – சவுதி முஸ்லீம்கள் அதிகமாக வேலை செய்வது கிடையாது (அல்லா செயக்கூடாதுன்னு கூட சொல்லியிருக்கலாம்) அதனால அவுங்க மூளை எப்போதும் ப்ரஷாவே இருக்கும். அதனாலாதான் அந்த ரேட், இப்போ காய்கறி கடைக்கு போய் பிரஷ்ஷா உள்ள காய்களை தானே வாங்குவீங்க? நல்லவேளை அல்லா உள்ள அரபு தேசத்தில் பிறந்த அனைவரும் முதல் வணக்கத்திர்க்குரியவர்கள் என்று சொல்லவில்லை (நடந்தாலும் நடக்கலாம் யாரு கண்டா ?)

 4. ஒரு பக்கம் அல்லாவின் தேசம் என்று சொல்லி கடுமையான ஷரியத் சட்டங்களை நடைமுறை படுத்தி தன்னை இசுலாமிய மத அரசாக காட்டிகொண்டு, மறுபுறம் குடி கூத்துக்களோடு உல்லாசம் ஊதாரித்தனத்தில் திளைக்கும் ஷேக்குகளின் ராஜ தந்திரம் யாருக்கு வரும்? சத்தியமான உண்மை.இஸ்லாம் என்ற போர்வையை போர்த்திக்கொண்டு இவர்கள் இவர்கள் செய்யும் அநியாயம் செய்கிறார்கள்.

  • நீங்கள் சொல்வது சரி – இவர்களுக்கு தன் ஆயுள் முழுக்க எத்தனை முறை ஹஜ் மற்றும் மக்கா யாத்திரை சென்றாலும் கணக்கு கிடையாது. மற்ற நாட்டு முஸ்லீம்கள் வாழ்வில் ஒருமுறை அல்லது அடுத்த மூன்று வருடங்களுக்கு என்ட்ரி கிடையாது.
   ஒவ்வொரு வியாழக்கிழமை மாலைவேளையில் தம்மாம் பஹ்ரைன் இணைப்பு பாலத்தில் எவ்வளவு வாகனங்கள் கடக்கின்றன என்று (குடி மற்றும் கூத்திற்கு) தெரிந்தாலே சையது சொல்வது உண்மை என்று தெரியும். அரை கிலோமீட்டர் கடக்க நாலு மணிநேரம் ஆகும்.

   • இப்பொது கூட ரமலான் மாதத்தில் சவுதி நாட்டை சேர்ந்தவர்களுக்கு 4மணி நேரம் மட்டும் வேலை எங்களுக்கு 7மணி நேரம் வேலை, இரண்டு பெரும் இஸ்லாமியரே.

    • இதுவும் சரி தான் – இங்குள்ள நியூஸ் பேப்பர்களில் தினம் தினம் சவூதி அரசர் அல்லது இளவரசர் புகைப்படங்கள் இல்லாமல் ஒரு பேப்பர் கூட வெளிவரமுடியாது.

   • ஒவ்வொரு வியாழக்கிழமை மாலைவேளையில் தம்மாம் பஹ்ரைன் இணைப்பு பாலத்தில் எவ்வளவு வாகனங்கள் கடக்கின்றன என்று (குடி மற்றும் கூத்திற்கு) தெரிந்தாலே சையது சொல்வது உண்மை என்று தெரியும். அரை கிலோமீட்டர் கடக்க நாலு மணிநேரம் ஆகும்.

    நம்மிடம் அது போன்று செல்வம் இருந்தால் நாம் எப்படி இருப்போம் என்பதை சிந்தித்து பின்னர் எழுத பாருங்கள்
    வயிறு பசிக்கு திருடுகிரவனை முதுகு வீங்க அடிக்கும் நமது நாட்டில் லட்ச கோடி திருடுபவனை தலைவராக ,தெய்வமாக கொள்ளும் நாட்டில் நாம் வாழுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்

    • அன்பரே இங்கே அளவற்ற செல்வத்தை பற்றி பேசவில்லை.. அனைத்து மத கடவுள்களையும் தினம் காலையில் வணங்குபவன் என்றமுறையில் சொல்கிறேன். இஸ்லாம் பின்பற்றப்படும் அனைவருக்கும் நியதி என்பது ஒன்றுதான் அவர் பங்களாதேஷ் காரராக இருந்தாலும் சரி இரு மசூதிகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் சவூதி அரசராக இருந்தாலும் சரி. குடி கூத்திற்கு இஸ்லாம் வழி வகுக்கிறதா அதுவும் எதுவும் தடை செய்யப்பட்ட சவுதியை விட்டு வெளியில் சென்று சுதந்திரமாக இருக்கவேண்டும் (இப்போதுள்ள சவூதி இளைய தலைமுறைகள் அப்படித்தான்) அப்போ பஹ்ரைன் துபாய் கத்தார் போன்ற நாடுகளை இஸ்லாத்திலிருந்து ஒதுக்கி வைத்துவிடலாமா? கடந்த ஐந்து வருடங்களாக நானும் என் இஸ்லாமிய மேனேஜரும் வியாபார விஷயமாக ரமதான் மாதத்தில்தான் வெளியில் செல்வோம் – (எதற்கும் தடையில்லை).. எல்லாம் பண்ணிட்டு கொஞ்சம் துஆ ஹஜ் செய்தால் எல்லா பாவமும் கழுவப்பட்டுவிடுமா செல்வம் அதிகம் கிடைத்தால் நீங்களும் இப்படித்தான் செய்வீர்களா ?

     • என்னை பின்பற்றும் மக்கள் வறுமையில் வாடுவதைவிட செல்வசெழிப்பில் அவர்களைப் பற்றி அதிகம் கவலைப் படுகிறேன் எண்டு முஹம்மது நபி[ஸல்] அவர்கள் சொன்னது உண்மையாகவே இருக்கிறது.
      ///அனைத்து மத கடவுள்களையும் தினம் காலையில் வணங்குபவன் என்றமுறையில் சொல்கிறேன். இஸ்லாம் பின்பற்றப்படும் அனைவருக்கும் நியதி என்பது ஒன்றுதான் அவர் பங்களாதேஷ் காரராக இருந்தாலும் சரி இரு மசூதிகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் சவூதி அரசராக இருந்தாலும் சரி. ////
      நீங்கள் அனைத்து சின்னங்களுக்கும் ஓட்டு போடுபவர்போலும் .
      எங்களது கடையில் எனது உறவினரும் இன்னொருவரும் வேலை செய்கிறார்கள் ஒரே வேலையை செய்யும் அவர்களிருவரும் முஸ்லிம்களே ,அவர்களுடனே உண்ணுகிறோம் ,உறங்குகிறோம் .வணங்குகிறோம் ஆனாலும் ஒரே வேலைகளை செய்யும் எனது உறவினருக்கு ,ரூ.6000/=மும் உறவினர் அல்லாதவருக்கு ரூ.5000/= கொடுக்கிறேன் .ஆனால் அதே வேலைக்கு வேறு கடைகளில் ரூ.4500/=தான் சம்பளம் கொடுக்கிறார்கள் .இப்போது என்னிடம் என்ன தவறு காண முடியும்?

       • இருக்கட்டும் ஹரிகுமார் பாய்,ஆனால் 10000/=ரூபாய்க்கான வேலைக்கு 20000/=ரூபாய் கொடுப்பதை எங்ஙனம் குறைகாண முடியும்?அவனது நாட்டானுக்கு அவன் எவ்வளவும் கொடுத்து விட்டு போகட்டும்

    • வாங்க இப்ரகிம் பாய்,

     உங்கள் நயவஞ்சகத்திற்கு அளவே இல்லையா?

     As per Islamic law, the punishment for theft is cutting of the hand, whether the theft is 1 rial or 1 billion rial. ( ஷரியா தவறா) You have the guts to write like below.

     //வயிறு பசிக்கு திருடுகிரவனை முதுகு வீங்க அடிக்கும் நமது நாட்டில் லட்ச கோடி திருடுபவனை தலைவராக ,தெய்வமாக கொள்ளும் நாட்டில் நாம் வாழுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்//

     There are many videos in youtube of cutting the hands and fingers as per Shariya. Boys hands are crushed with a vehicle for stealing a bread or something as simple as that, fingers are chopped off, etc. They have even invented apparatuses to hold their hand for chopping the finger tips. I will give you the links in a while later. Jingcha-alla.

 5. //இப்படி சவுதி அரேபிய இசுலாமியர்களுக்கு அதிக சம்பளமும், வெளிநாட்டு இசுலாமியர்களுக்கு குறைந்த சம்பளமும் கொடுப்பதை அல்லா எப்படி அனுமதிக்கிறான், ஷரியத் எப்படி நியாயப்படுத்துகிறது//
  இப்படித்தான்,
  16:71. அல்லாஹ் உங்களில் சிலரை மற்றவர்களைவிட செல்வத்தில் மேன்மைப்படுத்தி இருக்கிறான்; இவ்வாறு மேன்மையாக்கப்பட்டவர்கள்; தங்களுடைய செல்வத்தை தங்கள் அடிமைகளுக்கு கொடுத்து, அவர்களும் இவர்கள் செல்வத்தில் சமமான உரிமை உள்ளவர்கள் என்று ஆக்கிவிடுவதில்லை; அப்படியென்றால் அல்லாஹ்வின் அருட்கொடையையல்லவா அவர்கள் மறுப்பவர்களாவார்கள்?

  16:75. அல்லாஹ் உதாரணம் கூறுகிறான்: பிறிதொருவனுக்கு உடமையாக்கப்பட்ட எந்தப் பொருளின் மீதும் உரிமை பெறாத ஓர் அடிமை; மற்றொருவனோ, அவனுக்கு நல்ல வசதியை கொடுத்திருக்கின்றோம்; அவனும் அவற்றிலிருந்து இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கிறான். இவ்விருவரும் சமமாவாரா? அல்ஹம்து லில்லாஹ் (புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே) – என்றாலும் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

  16:76. மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் அடிமை; எந்தப் பொருளின் மீது உரிமையும் சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து [இஸ்லாமைப் பின்பற்றி], நீதியை நிலைநாட்டுகிறான்- இவனுக்கு முந்தியவன் சமமாவானா?

  • 16:71 அல்லா ரொம்ப கொழப்புராறு. அப்போ அடிமைகள் தொழிலாளிகள் எப்போதுமே முன்னுக்குவரகூடாதுன்னு அல்லாவே சொல்றாரா ..
   16:75 அதே குழப்பம் தான் – என்ன சொல்ல வராரு. அடிமையாய் இருப்பவன் எப்படி செலவு செய்ய முடியும் (அவனுக்கு தான் அல்லா எதுவுமே கொடுக்கலியே)
   16:76 அடிமை எஜமானனுக்கு சுமையாய் இருந்தால் எஜமானன் எதுக்கு வைத்திருக்கிரார்ன் ? அப்போ திரும்பி வருகிற இந்தியர்களால் உங்கள் எஜமானன் சவுதிக்காரங்களுக்கு தேவை இல்லாத ஆணிகள் – இதுவரை அவர்களுக்கு எந்த நன்மையையும் இல்லை ??

   எல்லாத்துக்கும் விளக்கம் வச்சுருக்கீங்க.. அப்படியே சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு பிட்சை கேட்கவேண்டும் என்று எந்த வரிகளில் சொல்கிறான்.
   சவுதியில மற்ற மத கோவில்கள் இருக்கக்கூடாது / மற்ற மத வழிபாடுகள் நடத்த கூடாது / இறக்குமதி செய்யும் புத்தகங்களில் உள்ள மற்ற மதம் சார்ந்த பகுதிகளில் கருப்பு மை தடவ வேண்டும் என்று எந்தெந்த வரிகளில் சொல்கிறான்.

   • //அல்லா ரொம்ப கொழப்புராறு//
    It is not Alla, It is Muhamad.
    For more info: tamil.alisina.org

    //அப்படியே சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு பிட்சை//
    It is ‘Jizya’. Jingcha-alla give you details later.

    //சவுதியில மற்ற மத கோவில்கள் இருக்கக்கூடாது / மற்ற மத வழிபாடுகள் நடத்த கூடாது / இறக்குமதி செய்யும் புத்தகங்களில் உள்ள மற்ற மதம் சார்ந்த பகுதிகளில் கருப்பு மை தடவ வேண்டும் என்று எந்தெந்த வரிகளில் சொல்கிறான்.//
    While in his deathbed, Muhamad ordered that no madness except Islam should be the madness of the Arabian peninsula. Jingcha-alla give you details later.

    • அப்போ முஹம்மது தான் குரான் எழுதியதா ?

     பிச்சையே தவறு அதிலும் நான் ரொம்பவும் வறியவன் வக்கற்றவன் என்று பொய் சொல்லி திறமை இல்லாமல் குறுக்கு வழியில் முன்னேற துடிப்பதற்கு (இடஒதுக்கீட்டைதான் சொல்றேன்) சொல்லிக்கொடுத்துல்லார்களா ?

     அப்போ இஸ்லாத்தை அரேபியன் பெனின்சுலாவில் மட்டும் வைத்துகொள்ளவேண்டியதுதான் – மற்ற நாடுகளில் (அரபுநாடுகள் சட்டதிட்டங்களுக்கு மற்ற நாட்டு மக்கள் எப்படி கட்டுப்பட்டு நடக்கின்றனரோ அதுபோல்) இஸ்லாம் பரவிய மற்ற நாடுகளிலும் அவர்கள் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அதாவது அடங்கி இருக்கனுமின்னு சொல்றேன். இந்தியாவில்தான் அது கிடையாதே சட்டமே உங்கள்ளுக்கு தனியாக இருக்கு.

   • ///
    //அப்படியே சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு பிட்சை//
    It is ‘Jizya’. Jingcha-alla give you details later.
    ///

    It is the opinion of Imams, particularly one named Anjem Choudhry in UK.

    Anjem Choudary, an Islamic cleric and popular preacher in the United Kingdom, was secretly taped telling a Muslim audience to follow his example and get “Jihad Seeker’s Allowance” from the government—a pun on “Job Seeker’s Allowance.”

    The father of four, who receives more than $38,000 annually in welfare benefits, referred to British taxpayers as “slaves,” adding, “We take the jizya, which is ourhaq [Arabic for “right”], anyway.

    Part of his quote:
    “The normal situation by the way is to take money from the kafir [infidel], isn’t it? So this is the normal situation. They give us the money—you work, give us the money, Allahu Akhbar [“Allah is Great”]. We take the money. Hopefully there’s no one from the DSS [Department of Social Security] listening to this.”

    http://www.liveleak.com/view?i=62b_1361181861

  • உங்களில் ஒருவரை விட மற்ற வரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக் கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமை களிடம்107 கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ் வின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?குர்ஆன் 16;71

   It is not Alla, It is Muhamad.
   நாங்கள் அல்லா அருளியதாக நம்புகிறோம் .உங்கள் வாதப்படி முஹம்மது நபி[ஸல்] அவர்கள் சொன்னதாகவே கொள்வோம் மார்க்ஸ் போன்றோருக்கு முன்னோடி யார் என்பது தெரிகிறதா?
   7ஆம் நூற்றாண்டில் சொல்லபப்ட்ட இந்த பொது உடமைக் கொள்கையின் தாத்பரியத்தை உணரமுடிகிறதா?

   • இப்ரகிம் பாய்,

    //7ஆம் நூற்றாண்டில் சொல்லபப்ட்ட இந்த பொது உடமைக் கொள்கையின் தாத்பரியத்தை உணரமுடிகிறதா?//

    Q 16.71 க்கும் பொது உடமைக் கொள்கைக்கும் என்ன பாய் தொடர்பு ? விளக்கமா சொல்லுங்க பாய்.

    • காழ்ப்புணர்வை கலட்டி பாருங்கள் ,உண்மை புரியும் .
     அலிசீன சொல்வதே இஸ்லாம் என்று நினைத்தால் பாக்கிஸ்தான் பெண்ணை பற்றியே பேசிக்கொண்டு இருக்க வேண்டும்

     • //காழ்ப்புணர்வை கலட்டி பாருங்கள் ,உண்மை புரியும் .//

      Q 16.71 க்கும் பொது உடமைக் கொள்கைக்கும் என்ன தொடர்பு என்பதற்கு இதுதான் உங்கள் விளக்கமா

      //பாக்கிஸ்தான் பெண்ணை பற்றியே பேசிக்கொண்டு இருக்க வேண்டும்//

      Ibrahim, it is the debate we two are currently having in my blog (http://questionstomuhamadhians.blogspot.com.au/2013/07/blog-post.html) Thanks for giving it a publicity here in Vinavu.

      // அலிசீன சொல்வதே இஸ்லாம் என்று நினைத்தால்//

      Ali Sina was borne and brought up a Muslim, in a Muslim country. He understood Islam to be the foremost problem facing the humanity. So he exposes Muhamad, Islam and Muslims based on Islams’ original texts, Islams’ history and from his own experience. It is better for Non muslims to belive what Ali Sina says than the muslims like you. Just yesterday I exposed your ‘Nayavanjakam’ here in Vinavu. Do you want us believe you. Sorry boy.

 6. ////சவுதி அரேபியாவில் குடியேற்றம் பெற்று வேலை செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம் இருக்கும். ////
  இது தவறு
  சவூதி யின் மக்கள் தொகை 1 கோடி .அங்கு வெளிநாட்டவர்களின் மக்கள் தொகை 85 லட்சம் .
  நமது இந்தியாவில் நாம் 120 கோடி .வெளிநாட்டவர் 100 கோடி பேர் வேலை கொடுக்க நாம் அனுமதிப்போமா?
  இல்லை செல்வ நாடான அமெரிக்க அனுமதிக்குமா?

   • இப்ராகிம்… வேலைக்கு ஆள் வேண்டும் தேவைப்படும்போது அவ்வளவு தான். வேலை முடிஞ்சதும் பிரச்சனை பண்ணாம போயிடனும், இது தான் தேவை.

    சவுதியில் மட்டுமல்ல, இந்தியாவின் பல பாகங்களின் வெளியுர், வெளி மாநில மக்களால் நிரம்பி வழியும் ஊர்கள் பல உள்ளது…

    நம் கண்ணுக்கு தெரிந்த பம்பாய், இப்போ மும்பை, சென்னை, கோவை, திருப்பூர்…
    அங்கே பல தலைமுறைகளாக உள்ளூர் வாசிகள் வேலைக்காக வந்து செட்டில் ஆனவர்கள்.. என்று பார்த்தல் நீங்க சொல்லும் 85% அல்ல 150% வெளியுர் வாசிகள் தான் இருப்பர்..

    இத்தனை வருடமும் தென் மாவட்ங்களில் இருந்து ஆட்களை இறக்குமதி செய்த நிறுவனங்கள், இப்போ 2 வருடமாக பீகாரிகளை கொண்டுவர திடிரேன மாநிலம் கடந்த பாசம் பொத்துகோன்டு ஊற்றவில்லை…

    காரனம், வெளியுர் என்பதால் சிறிய அறையில் பல டஜன் பணியாளர்களை அடைக்கலாம். 18 மணி நேரம் வேலை வாங்கி 6 மணி நேரம் சம்பளம் தரலாம், அவர்களுக்கு அங்கே சம்பளம் குறைவு என்பதால் இதை பொறுத்துகொள்கிறார்கள்…

    லாபம் கூடும்… எல்லாம்
    காசு பணம் துட்டு மணி மணி…
    காசு பணம் துட்டு மணி மணி…

    இதே தான் சவுதிலும், ஏன் யுஎஸ்சிலும்…

  • சவுதியின் வளர்ச்சி வெறும் நாற்ப்பது வருடங்களுக்கு முற்பட்டதுதான் அதற்க்கு முன் எப்படி இருந்தது என்று துபாயின் படங்களையே வைத்து பாருங்கள். இந்த அதீத வளர்ச்சியை பல மாடி கட்டிடங்களை கட்ட, பெட்ரோல் எடுக்க (அமெரிக்காவின் கைப்பாவை .. வேறு வழி ??) தொழில் வளர்ச்சி அடைய (எனினில் அவர்களுக்கு மூளை வளர்ச்சி கிடையாது) மட்டும் இந்த நூறு கோடி பேர் தேவை படுவர். சவுதியில் வேலைசெய்யும் வெளிநாட்டவர் யாரை வேண்டுமானும் கேட்டு பாருங்கள் அதிகாரம் பணம் வரும் இடம்.. இந்த இரண்டு இடத்தில் மட்டும்தான் சவுதிகாரர்கள் இருப்பார்கள். இந்த இரண்டு இடங்களும் அதிக வேலை இருக்கும் என்று நினைக்கிறீர்களா (ஒரு தத்துவம் : எந்த முதலாளிகளும் வேலை செய்யவேண்டிய அவசியம் இல்லை – அவர்கள் வெறும் உத்தரவு பிரப்பித்தாலே போதும் அது மட்டுமே அவர்கள் வேலை)எல்லோரும் மேனேஜராக இருந்தால் சவுதியின் ரோட்டை கூட்டுவது யார் செய்வது ? நீங்கள் சொன்ன அந்த நூறு கோடி பேர் தான். இந்தியா சூரையாடப்படாமல் இருந்தால் அதே நூறு கோடி பேருக்கு நாம் வேலை கொடுத்திருக்கலாம்.

 7. கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது அத்தனையும் சரிதான் ஆனால் சில உண்மைகளை சொல்ல விரும்புகிறேன். இந்த நிடாகத் சட்டத்தினால் பலனடைந்த வெளிநாட்டுக்காரர்கள் மிக அதிகம். என்ன ஆகுமோ ஏதாகுமோ என இருந்த நிறைய பேர் பிரச்சனையில்லாமல் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். ஆயிரக்கணக்கான பேர் சலுகையில் தங்கள் நிலை (profession) மாற்றி உள்ளனர். இதனால் தங்களை குடும்பங்களை அழைத்து போக வாய்ப்பு பெற்றுள்ளனர். கேவலமான மோசமான நிலையில் இருந்த பல அற்புதமான வாய்ப்புகள், நல்ல வேலைகளை அடைந்துள்ளனர். எங்கிருந்தாலும் பிழைத்துக்கொள்ளலாம் அல்லது போதுமான அளவு சம்பாதித்த நிறைய பேர்தான் துணிவுடன் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர். ஆனா நிலை இப்படி இருந்துவிடாது. இப்போதே ஆள் கிடைக்க திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது. இனி நிறைய வேலை வாய்ப்பு உருவாகும். நிறைய பேரை சவுதி அரசாங்கமே (இடை தரகர்) இல்லாமல் அழைத்து முறையாக வேலையில் அமர்த்தும் யோசனையில் உள்ளது. உள்ளூர் காரர்களை வைத்தே எல்லா வேலையையும் அரசு பார் என்று சொன்னால் அது பெரிய காமெடி. சவூதி காரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலை என்ன என்று பார்த்தால் அதிகம் வேலையில்லாமல் சும்மா இருக்கும் வேலைகள் தான். உதாரணத்துக்கு செக்யூரிட்டி வேலையில் உள்நாட்டு காரனை மட்டும் தான் வைக்க வேண்டும் என்பது சட்டம். ஏனென்றால் சும்மாவே உட்கார்ந்திருப்பது தான் வேலை. அரசாங்கம் பயப்படுவது உண்மைதான். ஏனென்றால் இங்கே வேலையில்லாதவன் எண்ணிக்கை பெருத்தான் அவன் புத்தி எப்படிப்போகும் என சொல்லமுடியாது. அதுதான் காரணம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க