முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

-

1. திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.கவின் வன்னிய சாதி வெறியர்களே! என்ற தலைப்பில் திருச்சியில் 06.07.2013 மாலை 6 மணி அளவில் இரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் முன்பு ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய அமைப்பை சேர்ந்த தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். திருச்சி பகுதி ம.க.இ.கவின் தோழர்.ஜீவா தலைமையேற்று நடத்தினார்.

இவ்வார்ப்பட்டத்தில் இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.கவைச் சேர்ந்த இராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோரை வன்கொடுமை கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் வன்னியர் சங்கத்தை தடை செய்யக் கோரியும் இதை உடனடியாக செய்யாவிட்டால் இன்னும் ஆயிரம் ஆயிரம் இராமதாசுகள் சாதிய கொலை வெறியோடு முளைத்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் இதற்க்கு சாதியை மறுத்து உழைக்கும் மக்கள் ஓர் அணியில் அணிதிரண்டு போராட அறைகூவல் விடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெருவாரியான மக்கள் ஆர்வத்தோடு நின்று கருத்துக்களை கவனித்தனர். மையக்கலைக்குழுவினரின் ஆயிரம் காலம் அடிமை என்றாயே ! அரிசனன்னு பேரு வைக்க யாருடா நாயே ! என்ற பாடல் நின்று கவனித்துக்கொண்டிருந்த மக்களிடம் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருந்தது.

இவ்வார்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கங்கள்:

கைது செய்! கைது செய்!
இளவரசன் மரணத்துக்கு
காரணமான குற்றவாளிகள்
பா.ம.க சாதிவெறியர்களை
வன்கொடுமை சட்டத்தின் கீழ்
கைது செய்! கைது செய்!

தடை செய்! தடை செய்!
சாதிவெறியை மூட்டிவிடும்
வன்னிய சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
தடை செய்! தடை செய்!

ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதிய குப்பையை தூக்கியெறிந்து
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றினைவோம்!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
குச்சி கொளுத்தி ராமதாசை,
காடுவெட்டி கயவாளியை,
சாதிவெறி பயங்கரவாதிகளை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி : ம.க.இ.க.திருச்சி

2. விழுப்புரம்

விழுப்புரத்தில் 05.07.13- வெள்ளி   மாலை மிகச் சரியாக ஐந்து மணிக்கு கலெக்டர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் வி.வி.மு சார்பில் ஒன்பது பேரும், புமாஇமு  சார்பில் இருபது பேரும் கலந்து கொண்டனர்.

காவல் அனுமதி வாங்காமல், அனைத்து பத்திரிக்கை/ தொலைக்காட்சிகளுக்கு முறையாக தகவல் தந்தோம். திடீரென கலெக்டர் அலுவலக வாயிலில் கூடி முழக்கங்களை எழுப்பினோம். ஏப்ரல் 25 அன்று ராமதாசுக்காக போட்ட144 தடையுத்தரவை இரண்டு மாதங்களுக்கு பிறகு மிகசரியாக ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் வாபஸ் பெற்றார்கள். மாவட்ட ஆட்சியர் collector அலுவலக வாயில் சமீப காலமாக யாருக்கும் கூட்டங்களுக்கு அனுமதியும் தருவதில்லை. இச்சூழலில் நாம் திடிரென ஆர்ப்பாட்டம் நடத்தியதும், முதலில் திகைத்த போலீஸ் சுதாரித்துகொண்டு நம்மை மிரட்ட ஆரம்பித்தனர். “அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள், உங்களை சும்மா விடமாட்டேன், உடனே கலைந்து செல்லைவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுப்பேன்…ஆ,ஊ..” என சத்தம் போட்டு பார்த்தார் காவல் ஆய்வாளர். பதிலுக்கு நாமும் முழக்கத்தை நிறுத்தாமல்,  “நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் ராமதாஸ்,  அன்புமணி, காடுவெட்டி குரு போன்றோர் மீது நடவடிக்கை எடு! வன்னியர் சங்கத்தை தடை செய்! ” என்று   வாதம் செய்துகொண்டே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளும் திமு திமுவென்று குவிந்து செய்தி சேகரிக்க. வழக்கத்திற்கு மாறாக மக்கள் அதிகளவில் கூட ஆரம்பித்தனர்.

பீதியடைந்த போலீசு வலுக்கட்டாயமாக தோழர்களை இழுத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தோழர்களை ஜிப்பிலும், ஷேர் ஆட்டோவிலும் தாலுக்கா ஸ்டேஷன் அழைத்து சென்றார்கள். ஜீப்பில் முழக்கம் போடும்போது, “உங்களை கைது செய்துள்ளோம். என் கஸ்டடியில் உள்ளீர்கள், முழக்கமெல்லாம் போடக்கூடாது” என்று மிரட்ட தொடங்கினார் ஆய்வாளர். முன்பை விட அதிக சத்தத்துடன் முழக்கம் எழுப்பி எங்கள் உரிமையை நிலைநாட்டினோம். ஜீப்பில் இருந்து இறங்கி ஸ்டேஷன் வாசலில் நின்று முழக்கம் போட்டதும் அவரின் கோபம் உச்ச கட்டத்தை அடைந்து காச்சு, மூச்சு என்று கத்த ஆரம்பித்தார். நாம் அப்போதும் நிறுத்தாமல் உள்வரை  முழக்கம் எழுப்பியபடியே சென்றோம். உங்களை கட்டாயம் ரிமாண்டில் அடிப்பேன் என்று எகிற ஆரம்பித்தார். அது பற்றி எல்லாம் நாம் கவலைபடாமல் நங்கள் செய்தது சரிஎன்று வாதிட்டு வென்றோம். மூணு மணிநேரம் வைத்திருந்து விட்டு ஒன்பது மணிக்கு சொந்த ஜாமீனில் வெளியிட்டார்கள்.

எங்களை கைது செய்து அழைத்து வந்த பிறகும் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் கூடிய கூட்டம் அவ்வளவு சீக்கிரத்தில் கலையவில்லையாம். போலிசை குவித்து மக்களை மிரட்டி கலையவைத்துஉள்ளார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

3. மதுரை

துரையில் 6/7/13 அன்று மாலை 5 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகில் ம.க.இ.க.,புஜதொமு, விவிமு, புமாஇமு ஆகிய அமைப்புகள் சார்பில் “இளவரசனின் மரணத்திற்கு காரணமான பாமக, வன்னிய சாதி வெறியர்களை வன்கொடுமை, கொலை வழக்கில் சிறையிலடை” என்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மகஇக அமைப்பாளர் தோழர். இராமலிங்கம் தலைமை தாங்கினார். விவிமு தோழர். ஆசை மனித உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட கிளை செயலர் தோழர்.லயனல் அந்தோனிராசு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை

4. உசிலை (கூடுதல் படங்கள்)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை

5. தருமபுரி, விழுப்புரம் போஸ்டர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

6. பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

 1. //ஆதிக்க சாதி சங்கங்களை
  தடை செய்! தடை செய்!//
  தடை செய்யுரதுன்னு ஆனதுக்கப்புறம் எதற்க்கு ஆதிக்க சாதி சங்கங்களை மட்டும் தடை செய்யனும்…அனைத்து சாதி சங்கங்களையுமள்ளவா தடைசெய்யவேண்டும்..

   • விடுதலை சிருத்தைகள்.புதிய தமிழம்,புரட்சி பாரதம்,பகுஜன் சமாஜ் கட்சி??

    • சிலம்பரசன் கூறிய சங்கங்கள் யாவும் அரசியல் செய்கின்றனவா??? அல்லது அடித்தட்டு மக்களின் உயர்விற்க்குபோராடுகின்றதா???

     எல்லாம் ரவுடிப்பயலுக…

   • எப்படி ஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி கேள்வி கேக்குரான் பாருங்க சார்….

 2. ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.— அடுதுவர்கள் ஆர்பாட்டம் பண்ணினானால் மக்களுக்கு பாதிப்பு என்று கத்துவது தான்கள் பண்ணினானால் மக்கள் ஆதரவு என்று எழுதுவது எந்த போரட்டத்துக்கும் நடுநிலை பொதுமக்கள் எப்பவும் ஆதரவு தரமாட்டான் பலருக்கும் போராட்டம் பண்ணுவதால் இண்டச்சல் என்ற கருத்தே இருக்கு

 3. எவ்வளொ பெரிய போராட்டம் பாக்கவெ ரொம்ப பயங்கரமா இருக்கு…அய்யொ.அய்யொ..

 4. சமிபத்தில் கைதானபொது மக்கள் பட்ட கஷ்டம் போதாதோ?

 5. கள்ளக்காதலில் பாமக பிரமுகர் ஆணுறுப்பு நசுக்கி கொலை !

  ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ஆறுமுகம்,அந்தப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கியவர் ???????????????

  ஆறுமுகம் செல்வி எனும் பெண்ணால் , கள்ளக் காதலியால் ,ஆணுறுப்பு நசுக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார் !!!!!!!!!!!!!!!!!!!!!

  ஷத்திரிய குலத்தின் மானமும், மர்மமும், கொலையும் பாரத நாட்டின் புகழ்பெற்ற வசிஷ்ட நதிக்கரையில்தான் நடந்திருக்கிறது என்பது முக்கியம்.

  அனைத்து சாதிவெறியர்களையும் அவர்களது சாதித்திமிர் எனும் ஆண்குறியையும் தமிழக மக்கள் நசுக்கி ஒழிக்கும் காலம் வராமல் போகாது…………………..

 6. தடை செய்யுரதுன்னு ஆனதுக்கப்புறம் எதற்க்கு ஆதிக்க சாதி சங்கங்களை மட்டும் தடை செய்யனும்…அனைத்து சாதி சங்கங்களையுமள்ளவா தடைசெய்யவேண்டும்..
  விடுதலை சிருத்தைகள்.புதிய தமிழம்,புரட்சி பாரதம்,பகுஜன் சமாஜ் கட்சி?? சாதி சங்கங்களை
  தடை செய்! தடை செய்!//

  • தாழ்த்தப்பட்ட மக்களும் சாதிகளும் ஆதிக்க சாதி பட்டியலில் வராதே! இது கூடவா தெரியவில்லை!

   • ஓ…ஓஓ…அப்படியா… வினவு சாதியை ஒழிக்க பாடுபடவில்லை. எல்லா சாதியும் ஒழியனும். ஆனால் தலித் சாதி மட்டும் வாழனும்.

    நல்லாயிருக்கு வினவுவின் எண்ணம்.
    இது தெறியாம இவ்வளவு நாளாக வினவில் வரும் கருத்துகள் நல்லவை,நானயமானவை,நடுத்தரமானவை என நினைத்து ஏமாந்துவிட்டேனே. மக்கு மூட்டாளே.

    • சிலம்பு, ஆதிக்க சாதிக்கும், தாழ்த்தப்பட்ட சாதிக்கும் பொருள் என்ன? ஆதிக்க சாதிகள் இல்லாது போனால் தாழ்த்தப்பட்ட சாதிகள் தானாகவே போய்விடும்.

   • எல்லா சாதி சங்கங்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்ய சொல்லுவதில் உங்களை எது தடுக்கிறது ?

    • ஆதிக்க சாதி சங்கங்களும், தாழ்த்தப்பட்ட சாதி சங்கங்களும் ஒன்றா?

     • தாழ்த்தப்பட்டவர்களுக்காக நீங்களும் பிற புரட்சி அமைப்புகளும் போராடுவதில் இருக்கும் நியாம் அரசியலுக்காக ஆதாயத்துக்காக சங்கம் கட்சி என்று நடத்தும் சுயநல அமைப்புகள் செய்யும் போராட்டங்களில் இல்லையெனும்போது அவற்றை ஏன் தடை செய்ய கூடாது என்கிறீர் ? விளக்கவும்…

     • ஜாதீன்னு வந்ததக்கப்புறம் ஆதிக்க சாதி என்ன, தாழ்த்தப்பட்ட சாதி என்ன..எல்லாம் குப்பை தான்…இப்ப திருமா 144 தடையநீக்கச்சொல்றாரே அது எதுக்கு ஒரு பெரிய பேரணி நடத்தி இந்தப்பையனின் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடத்தான்….ஏன் இவர்களுக்கு உண்மையிலேயே பாசம் இருந்தால் அந்தப்பையனை பாதுகாத்திருக்கலாமே…அட அட்லீஸ்ட் ஒரு டீயாவது அந்தப்பையனுக்கு வாங்கிக்கொடுத்திருப்பார்களா???

      இப்ப இறந்த அந்தப் பையனை வைத்து அரசியல் ஆதாயம் தேடனும்…அதுக்கு தான் வி சி அலையுது…

 7. இணையத்தில் வலைப்திவர்களின் பெயரில் ஜாதிப்பெயர்கள்(ஒட்டு) இருந்தால் அவையும் நீக்கப்படவேண்டும்.என்று உத்தரவிடவேண்டும்

 8. தோழர்களே ஜாதிச்சங்கங்கள் வேறு….. ஜாதிக்கட்சிகள் வேறு ….ஜாதிச்சங்கங்களை மட்டுறுத்த எந்த அமைப்பும் கிடையாது… ஆனால் ஜாதிக்கட்சிகளை மட்டுறுத்த தேர்தல் ஆணையம் என்ற ஒன்று உள்ளது ஆகையினாலே ஓரளவிற்கேனும் அவர்கள் கடுப்ட்டுடன் இயங்க வழிஇருக்கிறது ….
  ஆலோசித்துப்பாருங்கள் …பறையனார் படையாச்சி வன்னியன் தேவர் கொங்குவேளாளர் என்று கொடி பிடிப்பதற்கு ம் பாட்டாளி மக்கள்கட்சி விடுதலைச்சிறுத்தைகள் பகுஜன் சாஸ் கட்சி என்பதற்கு முள்ள வேற்றுமைகளை உற்றுநோக்குங்கள் சாரத்தில் அவை பெரும்பான்மை ஜாதி ஆதிக்கதிதிலிருந்தாலும் மற்றவர்களுக்கு இடமிருக்க வாய்ப்புண்டு ….அதைத்தான் வினவு முழக்கமிட்டுள்ளது ஆனால் ஜாதிக்கு சங்கம் என்பது கூடாது… அவை தடை செய்யப்படவேண்டும் இதில் நீதிமன்றங்களும் கண்டிப்பாக இருக்கவேண்டும் …..இது உடனடியாகச்செய்யவேண்டியதே

 9. இன்று பெரும்பாண்மையான பிராமணர்கள் பகுத்தறிவாதிகலாக ,காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை ஏற்று கொண்டவர்களாக வாழ்கிறார்கள்,பிராமணர் பிரிவிலும் காதல் திருமணம் நடைபெறுகிறது,ஆனால் யாரும் வன்முறை போராட்டம் நடத்துவதில்லை,கொலையில் ஈடுபடுவதில்லை,கிராமங்களை கொளுத்துவதில்லை,பிராமண பெண்கள் ஒருகாலத்தில் படிக்க கூடாது,விதவைகள் மொட்டை அடித்து கொள்ளவேண்டும் என்று கட்டுபாடு இருந்தது,இன்று பிராமண பெண்கள் தான் அதிகம் படிக்கிறார்கள்,மறுமணம் செய்து கொள்கிறார்கள்,கடல் தாண்டி போவது தீட்டு என்று இருந்தது,இன்று அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கிறார்கள்,இடஒதுக்கீட்டால்,பிராமணர்களின் வளர்ச்சியை தடுக்கமுடியவில்லை,ஏன் சிலர் அசைவம் கூட சாப்பிடுகிறார்கள்,வேலை செய்யும் இடத்தில் சாதி பாகுபாடு பார்க்காமல் பழகுகிறார்கள்,உண்மையை சொல்வது என்றால் பெரியார் கொள்கைகளை அவர்கள் தான் பின்பற்றுகிறார்கள்,ஆம் இப்போதும் நாம் பின்பற்றும் விதமாக பிராமணர்கள் உயர்ந்து தான் இருக்கிறார்கள்,உயர்சாதியினர் என்று சொல்வது இதனால் தானோ,பிராமணர்களை தூற்றுவதை விட,பிராமணர்களை போல் நாமும் காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை ஏற்று கொண்டு ,பழைய மூடநம்பிக்கைகளை விடுத்து,சாதிபெருமை பேசுவதை விடுத்து,சாதி சண்டை போடுவதை விடுத்து நாமும் அவர்கள் வழியில் வாழ்வோம்,உயர்வோம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க