privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபார்ப்பன பாசிசத்துக்கு பல்லக்குத் தூக்கும் போலி கம்யூனிஸ்டுகள் !

பார்ப்பன பாசிசத்துக்கு பல்லக்குத் தூக்கும் போலி கம்யூனிஸ்டுகள் !

-

லது-இடது போலி கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்ற அரசியல் சாக்கடையில் தம் சொந்த விருப்பத்தின் பேரில்தான் இறங்கியிருக்கின்றனர் என்பது உண்மையே எனினும், அவர்களைத் திணறத் திணற அந்தச் சாக்கடைக்குள் முக்கி எடுப்பதற்கு ஒரு ஜெயலலிதா தேவைப்படுகிறார். நடந்து முடிந்த மாநிலங்களவைத் தேர்தல் கூத்துகள் போலிகளின் முக விலாசத்தை முற்றிலும் அம்பலமாக்கி விட்டன. தங்களுடைய மாநிலங்களவை வேட்பாளருக்கு ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரி சென்னைக்குக் காவடி எடுத்த வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களைக் காக்க வைத்து, பார்க்க மறுத்து, பிறகு ஆதரவு இல்லை என்று டில்லியில் அறிவித்து கதவை மூடிய பின்னரும் காம்பவுண்டுக்கு வெளியே காத்திருந்தனர் போலி கம்யூனிஸ்டுகள்.

பல்லக்கு
பாசிசத்துக்கு பல்லக்குத் தூக்கும் போலி கம்யூனிஸ்டுகள்.

ஐந்து வேட்பாளர்களை அறிவித்து, அதில் சரவணபெருமாள் கிரிமினலென்று அம்பலமான பின்னரும் விடாமல், மாற்று வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமளவுக்கு வாக்குகளைத் திரட்ட முடியாது என்று தெரிந்த பின்னர்தான், பிச்சைக்காரனுக்கு மிச்சம் மீதியை எறிவதைப் போல ஒரு இடத்தைப் போலிகளுக்கு விட்டெறிந்தார் ஜெயலலிதா. தன்னுடைய ஆசிபெற்ற தா.பாண்டியனுக்குப் பதிலாக ராஜாவை நிறுத்தியதன் காரணமாகத்தான் இந்த விசேட அவமதிப்பு என்று பத்திரிகைகள் எழுதுகின்றன. ஜெயலலதாவின் அவமதிப்புகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தில் அ.தி.மு.க. அடிமைகளை விஞ்சியவர்கள் போலிகள்.

பாபர் மசூதி இடிப்பை வெளிப்படையாக ஆதரித்த ஜெயாவுடன் 2001 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்துவிட்டு, “அவர் மாறிவிட்டார்” என்று விளக்கமளித்தனர். மதமாற்றத் தடைச்சட்டம், கிடாவெட்டுத் தடைசட்டம், அரசு ஊழியர் மீதான அடக்குமுறை – என அடுக்கடுக்காக விழுந்தன செருப்படிகள். “தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தால் எலிக்கறி தின்கிறார்கள்” என்று சொன்னதற்காக இவர்களது எம்.எல்.ஏ.வின் வீடு தாக்கப்பட்டது. “தரிசு நிலங்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுக்காதீர்கள், நிலமற்ற விவசாயிகளுக்குக் கொடுங்கள்” என்று கேட்ட இவர்களை “நிலம் கேட்பீர்கள், பிறகு அதை உழுவதற்குப் பணம் கேட்பீர்கள்” என்று ஜெ எள்ளி நகையாடினார். இந்த ஆளும் வர்க்க, பார்ப்பனத் திமிரும் அவமதிப்புகளும் போலி கம்யூனிஸ்டுகளுக்கு எள்ளளவும் கோபத்தை ஏற்படுத்தாமைக்கு ஒரே காரணம், அவர்களுக்கும் அ.தி.மு.க.வின் பிழைப்புவாத அடிமைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை – தோளில் போட்டிருக்கும் துண்டின் நிறத்தைத் தவிர.

தனியார்மய எதிர்ப்பையும் மதச்சார்பின்மையையும் வைத்துத்தான் போலிகள் தங்களைச் சந்தைப்படுத்திக் கொள்கிறார்கள். தனியார்மய எதிர்ப்புமே வங்கத்தில் சந்தி சிரித்து விட்டது. எஞ்சியிருப்பது மதச்சார்பின்மை. இந்தியாவில் மிக மோசமான சந்தர்ப்பவாதக் கட்சிகூட வெறுத்து ஒதுக்கும் பாசிசக் கொலைகாரன் மோடியை “தனது அருமை நண்பர்” என்று திமிராகப் பிரகடனம் செய்து கொள்ளும் ஒரே அரசியல்வாதி ஜெயலலிதா. “அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா” என்று சோ உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் ஏற்கெனவே பிரச்சாரம் செய்து வருகிறது. இதெல்லாம் தெரிந்துதான் போலி கம்யூனிஸ்டுகள் ஜெயலலிதாவுக்குப் பல்லக்குத் தூக்குகிறார்கள். நாளை மோடியை ஜெ ஆதரிக்கும் போது, “நாங்கள் ஜெயலலிதாவுடன்தான் கூட்டணி, அவர் மோடியுடன் கூட்டணி வைத்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இவர்கள் கூசாமல்பேசுவார்கள். போலிகளின் தனியார்மய எதிர்ப்பு முகமூடி மமதா பானர்ஜி என்றவொரு பாசிஸ்டின் கையால் கிழிபட்டது. மதச்சார்பின்மை முகமூடியோ ஒரு பார்ப்பன பாசிஸ்டின் கரத்தால் கிழிக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறது.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

 1. ஊருல இருக்றவன் எல்லாம் போலி…நீ மட்டும் தான் ஒரிஜினல்… அக்மார்க் அசல்… யோவ் உண்மையிலேயே தைரியம் உள்ள ஆம்பளையா இருந்தா, உங்க பு.ஜ.மு கூட்டத வெச்சு ஜெயலலித்தாவை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டமே, இல்லை ஒரு கூட்டமோ சென்னையிலே போடு பார்ப்போம்… சும்மா கதவ மூடிட்டு எவன் வேணும்னா இணையதளத்துல வீரம் பேசலாம்….

  • இந்தியா,

   வினவுல கட்டுரைகளை எவ்ளோ நாளா படிக்கிற… போய் மே-தின ஆர்பாட்டங்களை தேடிப்படி…

   //சும்மா கதவ மூடிட்டு எவன் வேணும்னா இணையதளத்துல வீரம் பேசலாம்…//

   உங்க கோமணத்த நீங்களே உரிவிட்டீங்களே பாசு…

  • புதிய ஜனநாயக இதழில் அட்டைப்படமாகத்தானே ஜெயா கார்டூன் வெளிவந்துள்ளது? அதைத்தானே தமிழகம் முழுதும் நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள்? இணைய வீரம் மட்டுமே பேசும் நீங்கள் இதை வினவுவதுதான் வேடிக்கை!

 2. அவென்யு மாலில் மேலே இருந்து கீழே விழுந்து துடிக்கிறான் ஒரு இளைஞன், மக்கள் சுற்றி நின்று அதை வேடிக்கை பார்க்கிறார்கள். ஒரு சில இளைஞர்கள் மட்டும் அவனை தூக்கி காப்பாற்ற முயல்வதை அந்த நிர்வாகமும், அங்கே இருக்கும் பவுன்சர்களும் தடுக்கிறார்கள். போலீசும் ஆம்புலன்சும் வந்துதான் மேற்கொண்டு எதையும் செய்ய வேண்டும் என்கிறார்கள். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் அந்த உடல் அங்கே இரத்த கசிவுடன் கிடக்கிறது. பின்னர் ஒரு வழியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்கிறார்கள். இடைப்பட்ட நேரத்தில் அங்கே நின்ற ஒரு சில இளைஞர்கள் நிர்வாகத்திடம் அலட்சியப்படுத்தியதற்காக வாக்குவாதத்தில் இறங்குகிறார்கள். நிர்வாகம் இளைஞன் நலமாக இருக்கிறான் களைந்து செல்லுங்கள் என்று அறிவிக்கிறது!

  அங்கே ஒரு பெண் வருகிறார், நான் மருத்துவமனையில் இருந்து வருகிறேன், மருத்துவர் அதிக ரத்தம் வெளியேறியதால் இறந்துவிட்டாதாக அறிவித்துவிட்டார் என்கிறார். தான் மாடியில் இருந்து அனைத்தையும் கவனித்து, இறங்கி வந்தும் இருபது நிமிடங்கள்வரை அவரை இங்கேயிருந்து நகர்த்த அனுமதிக்கவில்லை என்று சொல்லி நிர்வாகத்திடம் பெரும் வாக்குவாதத்திலும் இறங்குகிறார் அந்தப்பெண். இவ்வளவு தைரியமான பெண்ணை சாமான்ய உலகில் பார்த்தது இல்லை. நிர்வாக ஏற்ப்பாட்டில் அங்கே காவல் துறை வருகிறது, தன்னந்தனியாக போராடும் அந்த பெண்ணிடம் ஒரு ‘காவல்துறை அதிகாரி’ சொல்கிறான் ”ஓடிப்போயிரு உதைப்பேன்” என்று.

  அந்த பெண்ணை பார்த்தால் ஏழை எளியவர் வீட்டு பெண் போல தெரியவில்லை, வசதியான வீட்டு பெண்ணாகத்தான் தெரிகிறார். அவரிடமே காவல்துறை காட்டுக்கூச்சல் இடுகிறது. அந்த இடத்தில் ஏழை எளியவர்களை என்ன செய்து இருப்பார்கள்? அவன் மாடியில் இருந்து விழுந்தது முதல் அந்தப்பெண் தன்னந்தனியாக போராடுவது வரை அத்தனை காட்சிகளையும் இப்போதும் மாடிகளில் நின்றவாறு தொடர்ந்து வேடிக்கை மட்டுமே பார்க்கிறது பெரும்பான்மை சமூகம். சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது தமிழ்நாட்டு தமிழர்களை அழிக்க எவனாவது ஒரு ராஜ பக்சே பிறக்க மாட்டானா, கூடங்குளமும் கல்பாக்கமும் ஒருசேர வெடித்து சிதறாதா என்றெல்லாம் ஏங்குகிறது மனம்!!! (கீழே இணைக்கப்பட்டு இருக்கும் காணொளியை அவசியம் பாருங்கள், நாம் வாழும் சமுகம் எது என்று உங்களுக்கு புரிய வேண்டும்)
  http://www.youtube.com/watch?v=D2cyHg11758&feature=youtu.be

  • இதற்கு எல்லாம் ஒரே காரணம் அடுத்தவன் செத்தால் எனக்கு என்ன நான் நல்ல இருக்கணும், எனக்கு ஒனும் ஆக கூடாது…. அனால் கிராம புறங்களில் இப்படி நடப்பது இல்லை நகர புற வாழ்கைக்கு அப்படி எதிர் ஆக இருக்கிறது….பணம் இருந்தால் எனவும் செய்யலாம் என்ற எண்ணங்கள் தான், அதனால் மனித நேயம் செத்து போகிறது…….

 3. மிஸ்டர் வினவு,
  போத் கயா சம்பவத்துக்கு RSS/இந்துத்வா கை தென்படாதா என்ற நப்பாசையில் இதுநாள்வரை அதைப்பற்றி ஒரு வரி கூட எழுதாத வீரனே.. இப்பொழுது அதற்கு இந்தியன் முஜாய்தீன் பொறுப்பு ஏற்றுள்ளது.. அது இந்துக்களின் தீவிரவாதம் என்று எழுத நினைத்ததை அழித்துவிட்டு அது இஸ்லாமியர்களில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்வினை என்று கட்டுரை தீட்டுங்கள்.

  • மனிதன்.. உனக்கு அரிவு இருக்கா இல்லையா? அந்த தினமலர் குப்பையை படிதுவிட்டு இஙகு வந்து வாந்தி எடுக்காத. ட்விடர்ல போட்டானுகலாம்… இப்ப நான் கூட ஒரு அக்கவுன்ட் உன் பேர்ல ஆரம்பிச்சு என்ன வேனும்னாலும் எழுதலாம். அதெல்லம் ஒரு ஆதாரமா? மொதல்ல தினகுப்பைய படிக்கரத நிப்பாட்டு. உனக்கு அரிவு தானா வலரும்.

 4. ஒரு சிலருக்கு பதவி இருந்தால்தான் சொத்து நிலைக்கும். வேறு சிலருக்கோ பதவி இருந்தால்தால்தான் கட்சியே நிலைக்கும். பாவம் போலி கம்யூனிஸ்டுகள்!

 5. பார்பன எதிர்ப்பு, என்ற வாசகம் செத்தபாம்பையே திரும்ப திரும்ப அடிப்பது போல, பிராமனாள் கபேக்கு இருந்த எதிர்ப்பு வெள்ளாலர் கல்லூரி,தேவர் ஓட்டல்,போன்றவற்றிகு இல்லை,ஏன் அங்குசென்றால் உதை நிச்சயம்

  • ‘பிராமனாள் காபே’க்கு எதிர்ப்பு இருக்குது ஆனால் ஐயங்கார் பேக்கரி, ஐயர் ஓட்டல் எல்லாம் ஒவ்வொரு மூலைக்கும் இருக்கு. அவற்றை மூடியே ஆக வேண்டும் என்று போராடவில்லையே ஆனால் ‘பிராமனாள் மட்டும்’ என்று இருந்ததற்கு எதிர்ப்பு இருந்ததே ஏன் என்று தெரியுமா?

   எல்லா சாதி பெயரையும் அழிக்கதான் வேண்டும், இருந்தாலும் இப்போது எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உங்களைப்போல முட்டாள்கள் அல்ல!

 6. னான் பட்டியலிட்ட வகுப்பை சேர்ந்தவன். நாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள பார்ப்பனரல்லாத வகுப்பினரால் நடத்தப் படும் தீண்டாமை கொடுமை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அன்று பார்ப்பனர் செய்ததை இன்றுநீ செய்கிராய். அவர்கள் அடங்கி விட்டனை. உங்களை அடக்குவது யார்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க