Sunday, November 3, 2024
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்போலீசு சுவரொட்டியைக் கிழித்ததாம் ! சுவரொட்டியோ போலீசை கிழித்தது !

போலீசு சுவரொட்டியைக் கிழித்ததாம் ! சுவரொட்டியோ போலீசை கிழித்தது !

-

வன்னிய சாதி ஆதிக்க வெறிக்குத் துணை போகும் சூளகிரி- அஞ்செட்டி போலீசு!

போலீசு சுவரொட்டியைக் கிழித்ததாம் ! அடடே… சுவரொட்டியோ போலீசை கிழித்தது!

பத்திரிகை செய்தி
11.07.2013 தேதியிட்ட தமிழ் முரசு நாளிதழில் வெளியான செய்தி

தமிழக அரசே,

இராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு, முதலான பா.ம.க சாதி வெறியர்களை வன்கொடுமை கொலைக் குற்றத்தின்கீழ் கைது செய்!
வன்னிய சங்கத்தை உடனே தடை செய்!

உழைக்கும் மக்களே,

சாதிவெறியர்களை ஒழித்துக்கட்டுவோம்!
சாதியை மறுத்து உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணைவோம்!

மேற்கண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியின் சுவரொட்டி முழக்கத்தினைக கண்ட போலீசின் ‘அற’ச்சீற்றமே சுவரொட்டி கிழிப்பு மற்றும் தோழர்கள் மீதான பொய்வழக்கு!

தமிழகம் முழுவதும் பரவலாக ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு., மற்றும் பெ.வி.மு. ஆகிய அமைப்புகளால் மையமான இந்த முழக்கத்தின் கீழ் சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அஞ்செட்டி, சூளகிரி போலீசுக்கு மட்டும் இது கிழிக்கவேண்டிய சுவரொட்டியாகத் தெரிகிறது.

உலகறிய நடந்த ஒரு மரணத்திற்கு காரணமான வன்னிய சாதி வெறிக் கிரிமினல்களைக் கைது செய் என்று ஜனநாயக வழிமுறையில் கோருவதைக் கூட சகிக்கமுடியாத அளவிற்கு ஒருசிலர் புகார் கொடுக்கின்றனர் என்றால் அவர்களைப் பிடித்து சிறையில் தள்ள வேண்டிய போலீசு முந்திக் கொண்டு அவர்களின் ஏவலாள் போல சுவரொட்டியைக் கிழித்ததேன்?

பா.ம.க.வின் வன்னிய சாதிவெறியை இளவரசனின் மரணம் திரைகிழித்தது என்றால், இளவரசனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒட்டிய சுவரொட்டி போலீசுக்குள் மறைந்துள்ள பா.ம.க.வினரை அடையாளம் காட்டியுள்ளது!

சுவரொட்டியின் வெற்றி!!

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

  1. அந்த போஸ்டர் இன்னும் அங்கு ஜாதி கலவரத உருவாக்காமல் இருக்க செய்வதுதான் இது போல வேற யாரும் ஒரு ஜாதிய எதிர்த்து எழுதினாலும் இதே நடவடிக்கை நடக்கும் உங்களை போன்ற ஆட்டகள் இன்னும் ஜாதி கலவரம் உருவாக்கி அதை வைத்து கட்டுரை எழுதி பொழப்பு ஓட்டுவது வெட்ககேடு

  2. போலீசு சுவரொட்டியைக் கிழித்ததாம் !

    அடடே…

    சுவரொட்டியோ போலீசை கிழித்தது!

    நல்ல கவிதை வரிகள் !

    நாமும் முயற்சி பண்ணினால் என்ன ?

    இளவரசன் கொலையுண்ட இடத்திற்கு போலீசு நாய் வரவழைக்கப்படவில்லை !

    போலீசு நாய்கள் மட்டுமே வந்திருந்தன !

  3. எப்படியாவது கைதாகி சிறையில் சென்று பாதுகாப்பாக உக்காந்து கொள்ளலாம் என்ற உங்கள் எண்ணத்தில் அரசு மண் அள்ளி போடும். இளவரசன் உடல் அடக்கத்துக்கு பின்னர்தான் உங்கள் தோழர்களை கைது செய்யும்-வேறு வழக்குகளில்.
    நிற்க.
    “இது நாடக காதல் என்று நிரூபணம் செய்ய ஏற்கனவே கதை வசனம் எழுதி வைத்து விட்டார்கள். காட்சிகள் ஒவ்வொன்றாக அரங்கேற்றப்படுகிறது. இன்னும் நிறைய காட்சிகள் பாக்கி உள்ளன. சம்பந்தப்பட்ட நபரே/நபர்களே ஊடகத்தில்/நீதிமன்றத்தில் தோன்றி சாட்சியம் அளிப்பார்கள்.இளவரசன் மரணத்தை தற்கொலை என்று பெற்றோர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அரசு அடக்குமுறையை கைவிடும்.கொலை என்று வாதிட்டால் கொலை குற்றத்தை, கூட இருந்தவர்கள் மேலே போட்டு உள்ளே தள்ளும்”.
    இப்படி ஒரு கற்பனையான சாத்தியகூற்றை நீங்கள் யூகித்ததுண்டா? இல்லையென்று சொல்லிப்பாருங்கள்.
    இதெல்லாம் உங்கள் யூகத்தில் இல்லை என்று சொல்வதால்-யாருக்கு லாபம்? யாருக்கு துயரம்?
    உங்கள் அரசியல் சண்டையில் மகனை இழந்து நிற்கும் பெற்றோருக்கு நீங்கள் தருவது ஆறுதலா இல்லை துன்பமா?

    தருமபுரி கலவரத்துக்கு நீங்கள் தான் காரணம் என்று வன்னிஅரசு சொன்னதை தமிழ்நாட்டில் யாரும் நம்பவில்லை.உங்களை அக்னிபரீட்சை செய்ய சொல்லி யாரும் சொல்லவில்லையே? வெற்றிலையில் மை போட்டு பார்த்து உங்கள் தலைமையின் ரிஷிமூலத்தை அம்பலப்படுத்திவிடுவோம் என்று தமிழ் தேசியவாதிகள் எப்போதும் உங்களை மிரட்டியது இல்லையே? ஒரு வேலை அப்படி எதாவது திரைமறைவில் நடந்துவிட்டதா? இல்லை ரெண்டுபட்ட ஊரில் இரட்சணிய சேனைக்கு ஆள் சேர்க்கும் அவசரமா? இல்லை திருமாவளவன் அவர்களை அரசியல் ரீதியாக ஓரங்கட்டும் முயற்சியா?
    Why this kolaveri?

  4. தலித்திற்கு நடந்தால் தான் கொடூரம்
    மற்றவர்களுக்கு நடந்தால் சாதாரம் …
    தலித்திற்கு கெட்டது நடந்தால் ப்ளாஷ் நியூஸ்
    மற்றவர்களுக்கு கெட்டது நடந்தால் மவுனம் மட்டுமே .
    தலித்திற்க்காக பத்துநாள் மீடியா கவரேஜ்
    மற்றவர்களுக்கு என்றால் யாரும் திரும்பி பார்ப்பது இல்லை
    தலித் என்றால் மனித உரிமை ஆணையம்
    மற்றவர்களுக்கு என்றால் அந்த ஆணையம்
    வெளிநாடு சென்றுவிடுகிறது …
    தலித் என்றால் முழு பாதுக்காப்பு அளிக்கிறது போலிஸ் .
    மற்றவர்கள் நியாயமான காரணத்திற்கு போராடினால் கூட சிறையில் அடைக்கிறது போலிஸ் ..
    இது தான் இன்றைய நடுநிலை. இதுதான் ஜாதிய ஒழிப்பு, இதுதான் திராவிடம், இதுதான் “பகுத்தறிவு சமதர்மம் சம உரிமை”

  5. ஜாதி கலவரத்தை தூண்டுவதாக இருப்பதாக அந்த போஸ்டர்கள் இருந்தால் அது போஸ்டர் ஓட்டியவர்களின் முற்போக்கை குறிக்கிறது அதை கண்டு சினம் கொள்பவர்களின் பிற்போக்குத்தனத்தை இங்கு குறிக்கிறது அது சில போலி(ஸ்) ஆட்களாகவும் இருகிறார்கள்.

  6. பெருமாள் எஸ் ஐ மாதிரி ஆட்கள் தான் இந்தநாட்ல பதவில இருக்கனும் அப்பீடித்தானே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க