privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஜிம்மர்மேன் விடுதலை : வெள்ளை நிறவெறிக்கு தண்டனை இல்லை !

ஜிம்மர்மேன் விடுதலை : வெள்ளை நிறவெறிக்கு தண்டனை இல்லை !

-

மெரிக்காவில் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட கறுப்பின இளைஞன் மார்ட்டின் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது. கொலை செய்த வெள்ளையர் ஜார்ஜ் ஜிம்மர்மேன் குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ளை இனவெறிக்கு ஆதரவாக அமெரிக்க நீதித்துறை செயல்படுவதை தான் இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

ஜிம்மர்மேன், மார்ட்டின்
ஜிம்மர்மேன், மார்ட்டின்

டிரேவான் மார்ட்டின் எனும் கறுப்பின இளைஞன் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரை சேர்ந்தவன். 17 வயது இளைஞன். தன் தந்தையைக் காண சான்போர்ட் நகருக்கு வந்திருந்தான். சில நாட்கள் சான்போர்ட் நகரில் தங்கியிருந்தான். 2012-ம் வருடம் பிப்ரவரி 26-ம் தேதி இரவு, கடைக்கு சென்று இனிப்புகள், தேனீர் போன்ற சிலவற்றை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான் மார்ட்டின். அப்போழுது பக்கத்துக் குடியிருப்பு காவலாளியாக இருந்த 27 வயதான ஜார்ஜ் ஜிம்மர்மேன், மார்ட்டினை துரத்தத் தொடங்கியுள்ளார், அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற மார்ட்டினை சுட்டுக் கொன்றுவிட்டார்.

”மார்ட்டின் என்னை தாக்கவந்தான், அவனிடம் இருந்து என் உயிரை காப்பாற்றிக்கொள்ளவே நான் அவனைச் சுட்டேன்” என ஜிம்மர்மேன் வாக்குமூலம் அளித்தார். ஆனால் உண்மையில் ஜிம்மர்மென் சம்பவத்தன்று மார்ட்டினை பார்த்தவுடன், அவசர உதவி சேவைக்கு அழைத்து பேசியுள்ளார். அதில் ஆரம்பம் முதலே, சந்தேகப்படும்படியாக ஒரு கறுப்பின இளைஞனை தான் பார்ப்பதாகவும், அவன் திருடன் போல் இருக்கிறான், கறுப்பினத்தவர்கள் திருடர்கள் தான் என்றும் பேசியுள்ளார்.

இதையடுத்து ஜிம்மர்மேன் மார்ட்டினை தாக்கப் போவதை அறிந்து அவசர உதவி சேவையாளர், ”அப்படியெல்லாம் எதுவும் செய்ய வேண்டாம்” என்று எச்சரித்துள்ளார். தேவையானால் தான் உடனடியாக போலீஸை அனுப்புவதாகவும் கூறியுள்ளார் (இவையனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சாட்சியமாக அளிக்கப்பட்டன). யாரையும் பொருட்படுத்தாத ஜிம்மர்மேன் மார்ட்டினை தாக்கத் தொடங்கினார்.

அதே நேரம் இருவர் சண்டை போடுவதை பார்த்த சிலர் அவசர உதவிக்கு அழைத்து தெரியப்படுத்தியுள்ளனர். அவர்களின் சாட்சிப்படி, இருவர் கட்டிப் புரண்டு சண்டை போடுவதாகவும், ஒரு சிறுவன் காப்பாற்றுங்கள் என்று அலறிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். பின்னர் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதை பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள கறுப்பின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கறுப்பின இளைஞர்கள் என்றாலே திருடர்கள், கொள்ளையர்கள் என முன்முடிவுடன் பார்க்கப்படுவதும், வெள்ளையின வெறியர்களின் கடுமையான பிரச்சாரமும் கறுப்பினத்தவர்களை சீண்டியபடி உள்ளன.

ஜிம்மர்மென் வழக்கு விசாரணையில் நிறைய பொய் சொல்லியுள்ளதை அப்பொழுது பல பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. மார்ட்டின் கையில் சில இனிப்புகள் மட்டும் வைத்திருந்த நிலையில் கையில் துப்பாக்கியுடன் இருந்த ஜிம்மர்மேன், மார்ட்டின் தன்னை பலமான ஆயுதத்தால் தாக்கியதாக கூறினார். இது பின்பு பொய் என நிரூபிக்கப்பட்டது. அதே நேரம் மார்ட்டினிடம் கத்தி, துப்பாக்கி போன்ற எந்த வித ஆயுதமும் இல்லை என்பது நிருபிக்கப்பட்டது.

ஆயுதம் ஏதும் இல்லாத அப்பாவி கறுப்பின இளைஞனை மார்ட்டின் வெறுப்புடன் எந்த வித காரணமுமின்றி கொலை செய்தது வெட்ட வெளிச்சமாகியது. ஒரு வருடத்திற்கு மேல் விசாரணையில் இருந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

கடந்த சில வாரங்களாகவே இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு தேதி நெருங்கி வந்த நிலையில் கூட ஜிம்மர்மேன் எதுவும் பேசாமல் இருந்தார். நீதிமன்றத்திலும் வாய் திறக்கவில்லை. வெள்ளையின வெறி அப்பட்டமாக தெரிந்தும், இந்த வழக்கில் தீர்ப்பு ஜிம்மர்மேனுக்கு சாதகமாக அதாவது வெள்ளையின வெறிக்கு ஆதரவாகவே வழங்கப்பட்டுள்ளது.

ஜிம்மர்மேனுக்கும் மார்ட்டினுக்கும் முன் விரோதமில்லை, ஜிம்மர் மேன் இதற்கு முன் குற்றச் செயல்கள் எதுவும் புரியவில்லை, இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு அவர் குற்றவாளி இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம், ஜிம்மர்மேனின் வெள்ளையின வெறி மிகுந்த பேச்சுகளும், பொய்களும், பதிவுகளும் கவனமாக புறக்கணிக்கப்பட்டுள்ளன.

கறுப்பு என்றால் அசிங்கம், சாத்தான், இருட்டு, அழிவு; வெள்ளை என்றால் தூய்மை, அழகு, அமைதி, சமாதானம், என்று மக்கள் மத்தியில் ஆழமாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதனாலான சமூக வெறுப்பை தினம் தோறும் தங்கள் வாழ்க்கையில் அனுபவித்து வருபவர்கள் கறுப்பின மக்கள்.

மார்ட்டினின் கொலை திட்டமிட்ட கொலை இல்லை என்றாலும், அமெரிக்க சமூகத்தில் ஊறிப்போன வெள்ளையின வெறியின் வெளிப்பாடு. ஆனால், நீதித்துறையோ வெள்ளையின வெறிக்கு துணை போய் ஜிம்மர்மேன் குற்றவாளி இல்லை என அறிவித்து அம்பலமாகி விட்டது. முதல் கறுப்பின அதிபர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒபாமா கூட நீதித்துறையை நாம் மதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கறுப்பின மக்கள் மீது இருக்கும் காழ்ப்பிற்கு இன்னொரு உதாரணமும் இந்த வழக்கு தொடர்பாக வெளிப்பட்டுள்ளது. மார்ட்டின் கொலை வழக்கில் தீர்ப்பு வரும் நாளன்று ஒருவேளை மார்ட்டினுக்கு ஆதரவாக தீர்ப்பு வரவில்லை என்றால், கறுப்பின மக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடும் என கோர்ட் வளாகம் முதல் கறுப்பினத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் எல்லாம் போலீஸார் அதிகப்படுத்தப்பட்டனர்.

ஆனால் தீர்ப்பு வெளியானதும் நீதிமன்ற வளாகத்தில் கூடி இருந்த கறுப்பின மக்கள் சோகத்துடனும், விரக்தியுடனும் அமைதியாக கலைந்தனர். நாடு முழுவதும் அமைதியான பேரணிகள், கூட்டங்கள் நடத்தப்பட்டன. இது அமெரிக்க வெள்ளையின வெறியர்களின் முகத்தில் காறி உமிழ்வது போன்று இருந்தது.

சாதி வெறியோ, வெள்ளை இனவெறியோ அவற்றை கட்டிக் காக்கும் அரசும், சட்டமும் அதன்படி செயல்படும் நீதித் துறையும் அவற்றை ஒழித்து விடும் என்பது பகல் கனவு. அதைத் தான் ஜிம்மர்மேன் தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

மேலும் படிக்க

 1. சாதி வெறியோ, வெள்ளை இனவெறியோ அவற்றை கட்டிக் காக்கும் அரசும், சட்டமும் அதன்படி செயல்படும் நீதித் துறையும் அவற்றை ஒழித்து விடும் என்பது பகல் கனவு. அதைத் தான் ஜிம்மர்மேன் தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

  இதுவே இஙுகுநடந்தால் பார்பன இந்து மதம் என்று பதியும் வினவே? – இதற்க்கு எதாவது அடை மொழி … கீழ்ததர கிறித்தவம் (அ) கழிசடை கிறித்தவம் …… என்று இதுபோல் போட துணிவு
  உண்டா?

  • அறிவு, நேர்மை என்றால் என்னனு தெரியுமா உனக்கு.

   எல்லா மதங்களாலும் மனித சமூகத்திற்கும் துன்பம் தாம் கிடைக்கும், இருந்தாலும் கிருத்துவ மதமும், ஹிந்து மதமும் ஒன்றா? கிருஸ்துவ, இஸ்லாம் மதத்தில் அனைத்து மனிதர்களும் ஆதாம், ஏவாள் ளிடம் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லுது, கொஞ்சமாவது நேர்மை இருக்குது, அனால் இந்த கேடுகெட்ட, அயோக்கிய, பொறம்போக்கு ஹிந்து மதம் என்ன சொல்லுது? தலையில் இருந்து பொறந்தவன், நெஞ்சில், காலில் இருந்து போரந்தானுங்க ஒருவனுக்கு இன்னொருவன் அடிமை என்று சொல்லுது, பின்பு அதை காரி துப்பாமல் இருக்க முடியுமானால் அவன் உன்னை போன்ற சமூக விரோதியாக தான் இருப்போம்.

   சரி கட்டுரையை திரும்ப படி, அப்பவாவது உனக்கு புரிய வாய்ப்பு இருக்கும், “வெள்ளை இனவெறி“ என்ற சொல்லை நீ காண முடியும், “பார்பன ஹிந்து மத வெறி“ என்ற சொல்லை விட மிக கேவலமான சொல்.

   அங்கு என்ன நடக்குதோ அதை தான் சொல்ல முடியம், நீ நினைத்ததை எல்லாம் சொல்ல, மற்றவர்கள் உன்னை போன்ற கோமாளிகள் இல்லை.

   • ஆதம் எவள் மட்டும் முதல் மனிதர்ன அப்ப கிறிஸ்டியன் பூர இன்செஸ்ட் அ

    • \\ஆதம் எவள் மட்டும் முதல் மனிதர்ன அப்ப கிறிஸ்டியன் பூர இன்செஸ்ட் அ\\

     Pathetic question… What is the answer to this question?

     • I can’t speak for all Christians. I can only say my views

      1. Bible should not be taken literally in all aspects. For example, if Bible says help the poor, we can take it literally, but when we hear stories like Adam/Eve, Noah’s flood etc, we can’t take it literally. They are just mythologies.

      2. Every culture has/had incest in it in various forms. For example, marrying cousin is also incest, which is still prevalent in India. According to mythology, Brahma married his daughter Saraswathi. Current objection to incest is due to its gross nature, risk of genetic defects and cultural taboo.

      3. If we take the story literally, not only Christians, all people will be assumed as children of incest. There are some verses in Bible that indirectly refer other people living apart from Adam and Eve. Again, these are just man made stories to explain origin of life in olden days.

      4. There is no mention of race in Bible. Bible is strict in terms of religion but not in terms of race/caste. For example, Ruth, great grandmother of Jesus is not a Jewess. Abraham married an Egyptian. Moses married a Midianite. The only thing Bible care is religion should be preserved.

      5. In NT, there are some verses where there is freedom of religion given inside family. A man can’t force his wife or children to accept Christian religion. But this verse is subjective and people can interpret as they wish.

      To close, my argument is not to prove/justify anything Christians believe as true. I just made these statements to show that Christian faith is not a castist/racist religion as Hinduism.

      • //Bible should not be taken literally in all aspects.//
       Who wrote bible? The God who was on suicide mission to earth?

       //Again, these are just man made stories to explain origin of life in olden days.//
       Thanks for accepting rel1g1on was cooked by crooks

       // There is no mention of race in Bible.//
       Then why people have separate churches? white brown black all have their own to pray.
       You guys use color system it is also one form of caste system

       //But this verse is subjective and people can interpret as they wish.//
       Ha ha! This single line can justify all the re1g1ons

       • //Who wrote bible? The God who was on suicide mission to earth?//
        Men wrote Bible. I don’t see any harm in accepting that men wrote Bible.

        //Then why people have separate churches? white brown black all have their own to pray.
        You guys use color system it is also one form of caste system//
        You got it wrong. Only modern Churches separate on lines of color and race. Catholic Church had three African popes in history. There are many African Saints. For example, St. Augustine is an African. Anglican Church has lot of Blacks in top positions. Please watch the Coronation ceremony of Arch Bishop Justin Welby in youtube to know the truth. He is received by a Sri Lankan Tamil and a speech is given by Ghanaian Bishop. Jesus is not an European or Black, but a Semitic Asian. There were Churches in Egypt, Ethiopia, Turkey, Syrian even before in UK or Germany. Even today majority of worlds Christians live in South America and Africa where whites are minority. The Church never forbade inter racial marriages and everyone takes communion from same cup. I have seen some Blacks and Koreans joining our service sometimes. We don’t give them a separate chair or cup.

        //Ha ha! This single line can justify all the re1g1ons//

        “…if any brother has an unbelieving wife, and she is content to live with him, let him not leave her. The woman who has an unbelieving husband, and he is content to live with her, let her not leave her husband. For the unbelieving husband is sanctified in the wife, and the unbelieving wife is sanctified in the husband.” -I Corinthians 7:12-14 (Holy Bible, World English Version).

        You decide for yourself. Some people twist this by saying that only if conversion happens after marriage. Still, that is more progressive compared to Hinduism or Islam

        • I dont know about the rules but two ex girlfriends of mine were catholic and their parents always raised the issue of my caste/religion and conversion,not saying everyone is like that but it is insisted,i have never seen hindus asking anyone to stop going to church/mosque.

         • I have personally seen Christian girls forced to become Hindus. Asked to wear bindhi/saffron spots against their will, tied thali with hindu gods, forced to do parikarams etc. I don’t say this in just one or two sporadic cases. I have seen 10+ in my close relatives circle itself. Even Hindu mils sometimes forces Christian dils on mean things like which day to cook meat and which day to wash hair etc. Don’t act holy. Your religion does more harm to us than good.

          • Thats only amongst Udayar/Nadar/Mukkulathor christians who marry across hindu-christian,

           and mother in law asking a girl to cook meat only on some days,etc are normal things,this happens to the same hindu girls also.

           and what harm does it do,to be asked a few things,a liberal hindu family wont do it.

           and converts cant disconnect from their brethren and go hang around with anonymous people only because of caste,come on.

           Only problem is if the family asks the girl not to go to church or things like not allowing her keep a photo of jesus/mary.

           But it is nothing compared to what a hindu girl would be forced to do and all the poisonous campaigning against the religion she has to face.

          • //and mother in law asking a girl to cook meat only on some days,etc are normal things,this happens to the same hindu girls also.//

           What if the girl wants to eat meat on that day?

           //Only problem is if the family asks the girl not to go to church or things like not allowing her keep a photo of jesus/mary.//

           Is it? WOW!!! How about forcing the girl to go to temple and do parigaram by rolling on the floor or forcing her to eat food offered to idols, which Christian religion forbids? How about forcing her to wear kungumam? What about forcing her to wear thali with hindu gods?

           //a liberal hindu family wont do it.//

           So you accept there are liberal hindus as well as moronic hindus like you. Same way we can say liberal Christians won’t do that blah blah… There are Christians who go to astrologers, see horoscope, good/bad time, go to temples, babas etc. Does that mean anything?

          • //Thats only amongst Udayar/Nadar/Mukkulathor christians who marry across hindu-christian,//

           What if the boy converts voluntarily and marries a Christian girl of different caste?

           What makes you to think inter-religious marriages happen only in castes you have mentioned?

           One of my relative is a Kerala Christian. Her husband converted to Christianity while in school due to his grandma who is also a convert. Now the ego problem between the boy’s grandma and the boy’s mom is reflected on the life of a Christian girl who married him (love marriage). One day in front of me the girl was forced to eat tripathi ladu and wear kumkum. She said, I will do it later (just to avoid it politely). But the girl was verbally abused, the boy was slapped and forced to do the same by her MIL. Why a Christian needs to compromise his/her faith and accept food offered to a hindu god?

   • //கிருஸ்துவ, இஸ்லாம் மதத்தில் அனைத்து மனிதர்களும் ஆதாம், ஏவாள் ளிடம் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லுது//

    அது எப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வெள்ளையர்கள் , கருப்பர்கள் , பழுப்பு இந்தியர்கள் , சீனர்கள் என்று விதம் விதமாக வந்தார்கள் ?

    புளுகிலே நல்ல புளுகு என்று பெருமையா ?

    • நான் தமிழ் நாட்டில் பிறந்து, வளர்ந்து கல்யாணம் செய்து பிறகு ஐரோப்பியக் கண்டத்திற்க்கு மனைவி சகிதம் சென்றுவிட்டால், அங்கு எனக்குப் பிறக்கும் என் பிள்ளை மற்றும் பேரன் எப்படியிருப்பார்கள்?

     என்னைப்போலவா? அல்லது ஐரோப்பியர்களைப் போலவா??

     ராமன் போன்றவர்கள் சிந்திக்கக் கற்றுக் கொண்டாலே, பாதிப் பிரச்சினை தீர்ந்துவிடும்..

     • //அங்கு எனக்குப் பிறக்கும் என் பிள்ளை மற்றும் பேரன் எப்படியிருப்பார்கள்//

      Same side goal?

    • According to modern science, we all are descendents of on mother (who lived thousand of years before) and one father (who lived later than the mother). So we are not sons of one mom and father living at same time. But we descended from fewer ancestors. Whites evolved from Blacks. That is called “Out of Africa” theory.

 2. Its incident tell what mean the persons all are not grown fullfilness, ya our teach man should growth body and mind, for this mental persons we face for this cases daily, so pls trust in truth, no violence,and to keep safe in peace, Thank u,

  • No, Zimmerman father is awhite and his mother is hispanic. zimmerman had white racist view adding to that he also attacked martin because he hate Black..

 3. ஜா”தீ” ஒழிய வேண்டுமென்றால், நிற வெறி ஒழிய வேண்டுமென்றால், நாம் அனைவரும் சமம் என்ற எண்ணம் மனிதர்கள் மத்தியில் ஆழமாகப் பதிய வேண்டும்..

  அல்லாமல் வீர வசனம் பேசுவதால் ஒளிந்து விடாது..

  வெட்டுச் சவடால் விடுபவர்களுக்கு, சவாலாகவே இக்கருத்தைச் சொல்கிறேன்..

  “”இன இழிவு நீங்க இஸ்லாமே இனிய மருந்து”” என்று பெரியாரே ஜா “”தீ”” ஒழிய உண்மையான மற்றும் ஆக்க பூர்வமான வழியைச் சொல்லியுள்ளார்…

  அல்லாமால் எந்த வழியுமில்லை..

  அப்படியிருந்தால், நிரூபிக்க வேண்டும்…

  • சாதி, இனவெறி கூட முதலாளித்துவ வளர்ச்சிக்கு தடையாக இருந்தால் தகர்ந்துவிடும், இன்று எவ்வளவோ மாறியும் உள்ளது. ஆனால் அதைவிட கொடுமையான விடயம் ஏழைப் – பணக்காரன் என்ற நிலை.

   அதாவது உழைப்பவன் ஏழையாகவும் உழைக்காதவன் பணக்காரணாகவும் இருக்கும் நிலைக்கு அல்லா நல்லாவே முட்டுக்கொடுக்கிறார்.

   உழைக்காமல் ஏய்த்து செல்வம் வைத்திருப்பவனை தர்மகர்த்தாவாக நடக்க சொல்கிறார், அதுவும் உழைப்பவர்களின் கோபத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள!

   எல்லா கடவுள்களும் எப்பொழுதும் பணக்காரர்கள் நன்மைகாகவே இருக்கும் மர்மம்தான் என்னவென்று தெரியவில்லை ?

   அல்லாவால் மனித சமூகமத்திற்கு ஏற்படும் நன்மையை விட, துன்பங்களே ஏராளம்!

 4. அமெரிக்காவில் இருக்கும் வெள்ளையர்களின் இனவெறியை பற்றி பேசினால், இங்கே சிலர் கிருத்துவம், இஸ்லாம் என திசை திருப்புகின்றனர்.

 5. Been reading ur half baked posts and laughing as usual just to kill time..But the level of stupidity in this post is monumental that i had to reply
  1)zimmerman is not white. he is a mestizo,a brown skinned latin american.
  2)travoyn martin is a pot head(ganja),a hoodlum and owns a gun himself.the messages and pictures from his phone reveals so…….
  3)zimmerman calls the police to complain about a stranger and only when the officer asks him the persons ethnicity he replies”he appears to be black”.its in utube .hope u tamil medium geniuses can understand it and yet u complain without seeing the other side

 6. இங்கு கறுப்பின மக்கள் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இல்லை. சொற்ப்ப பணத்துக்காக வழிப்பறி மற்றும் கொலை செய்வது சாதாரணம். பள்ளியில் படிக்கும் மாணவர்களே இதை செய்கிறார்கள். உட்பிரிட்ஜ் என்ற இடத்தில் ஒரு பஞ்சாபிக்காரர் 9ம் வகுப்புமானவர்களால் கொலைசெய்யப்பட்டார். அவர் கையில் மட்டும் துப்பாக்கி இருந்திருந்தால் தப்பித்திருந்திருப்பார். பொதுவாக வெள்ளையர்களுக்கு நீதித்துறை மற்றும் காவல் துறையில் மற்றவர்களைவிட சலுகைகள் காட்டப்படுவது உண்டு. ஆனால் இந்த விஷயத்தில் அப்படி இல்லையென்றே நினைக்கின்றேன்.

 7. ஊடகங்களில் உண்மைகள் எப்படியெல்லாம் திரிக்கப்படுகின்றன! ஆனால் பொதுவாகவே அமெரிக்க,அய்ரோப்பிய நாடுகளில், முக்கியமாக ஆரிய இனவாதம் தலை தோக்கும் ஜ்ர்மனியில் இந்த கருப்பு-வெளுப்பு பிரச்சினை கொஞம் அதிகம் போலும்! பார்க்க:http://kalaiy.blogspot.in/2010/06/blog-post_08.html

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க