Sunday, September 15, 2024
முகப்புசெய்திஎன் பார்வையில் வினவு - மன்னார்சாமி

என் பார்வையில் வினவு – மன்னார்சாமி

-

என் பார்வையில் வினவு – 2 : மன்னார்சாமி

வினவு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்…!

வினவின் முதல் பதிவிலிருந்து வாசித்து வருகிறேன். எல்லா பதிவுகளையும் வாசித்திருப்பேன் என்று சொல்ல முடியாவிட்டாலும், முக்கியமான பதிவுகள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன்.

clarion-callதமிழ் இணையம் தளர்வான ஒரு காலப்பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது தான் வினவு தனது பயணத்தைத் துவங்கியது. திராவிட – பார்ப்பனிய சக்திகளுக்கிடையே காத்திரமான விவாதங்கள் நடந்து ஓய்ந்திருந்த காலம் அது. தீவிர அரசியல் பதிவுகள் செல்வாக்கிழந்து மொக்கைப் பதிவுகள் செல்வாக்குப் பெறத் துவங்கியிருந்த காலப்பகுதியிலே தான் வினவு தனது பயணத்தைத் துவங்கியது. 2004-2005 கால கட்டத்தில் தமிழ் வலைப்பூக்கள் பிரபலமாகத் துவங்கியிருந்த காலத்தில் இணையத்தில் எழுத வந்திருந்த மூத்த பதிவர்கள் பலரும் அப்போது ஓய்ந்திருந்தனர். இந்த பின்னணியை வைத்துப் பார்த்தால், வினவின் இந்த ஐந்தாண்டு சாதனைகள் பிரமிக்கத் தக்கவை என்று துணிந்து சொல்ல முடியும்.

தொடர்ந்து வாசிக்க நேரம் இருந்தாலும், பின்னூட்டமிட்டு விவாதிக்க நேரம் என்னை அனுமதிப்பதில்லை. பல நேரங்களில், மத வெறியர்கள், சாதி வெறியர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்கள் போன்றோர் மறுமொழிகளில் அசட்டுத்தனமாக உளறி வைப்பதை அந்த விவாதச் சூடு தீர்ந்து போன பின் தான் பார்க்க நேர்கிறது. உருப்படியான விவாதங்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது என்னளவில் பெரும் குறையாகவே கருதுகிறேன். மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். எனினும், ஆதிக்க சாதிவெறியைக் கண்டிக்கும் போது ‘நீ தலித்தா’ எனக் கேட்கப்படுவதையும், தலித் பிழைப்புவாதக் கட்சிகளை அம்பலப்படுத்தி எழுதும் போது ‘நீ தலித் விரோதி’ என்று முத்திரை குத்தப்படுவதையும், இந்து மதவெறிக்கு எதிராக எழுதும் போது ‘ நீ துலுக்கன்’ என்கிற வசவு வைக்கப்படும் போதும், இசுலாமிய அடிப்படைவாதத்தை கண்டிக்கும் போது ‘நீ இசுலாமிய விரோதி’ என்றும் உங்கள் மேல் வைக்கப்படும் முத்திரை குத்தல்கள் ஒன்றை மட்டும் தெளிவாக்குகிறது. நீங்கள் சரியான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள். சமூகத்தின் விரோதிகள் அனைவருக்குமே நீங்கள் விரோதிகள் எனும் போது நீங்கள் மக்களின் நண்பர்களாகத் தான் இருக்க முடியும். எனினும், இது போன்ற வசவுகள் அவ்வப்போது விவாதங்களில் பதில் அளிக்கப்பட்டிருக்கலாம். அது உங்கள் கடமை மட்டுமல்ல; என்னைப் போல் வெளியில் இருந்து வாசிக்கும் ஆதரவான நண்பர்களின் கடமையும் தான் என்பதை உணர்கிறேன்.

இந்தப் பதிவிலேயே நீங்கள் செய்யத் தவறியவை பற்றி சுருக்கமாக குறிப்பிட்டுள்ளீர்கள் – உங்களிடம் இருக்கும் குறைவான ஆற்றல்களைக் கொண்டு நீங்கள் செய்திருக்கும் சாதனைகள் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் நான் வாசித்த இந்த வரிகளை நினைவூட்டுகிறது – ‘புரட்சிகரமான கம்யூனிஸ்ட் ஒருவன் நூறு எதிரிகளுக்குச் சமம்’. என்றாலும், புதியவைகளை படைக்கும் ஆற்றலை உங்களது ஆள்பற்றாக்குறை பாதிப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு வாசகனாக என்னால் இயன்றதை செய்யத் தயாராக இருக்கிறேன், என்னை ஒத்த வாசகர்கள் பலரும் தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறேன். வினவு ஒரு மக்கள் ஊடகம் எனும் வகையில் பரந்து பட்ட வாசகர்களின் பங்களிப்பும், பங்கேற்பும் கொண்டு செயல்படும் காலம் ஒன்று வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனது கோரிக்கைகள்

  1. காத்திரமான அரசியல் விவாதங்களை ஒலித்துண்டுகளாக பதிவேற்ற வேண்டும்.
  2. துறைவாரியான நிபுணர்களுடன் நேர்காணல்கள் நடத்தி அதை ஒலிப்பதிவுகளாக வெளியிட வேண்டும்.
  3. மார்க்சிய கோட்பாடுகள் குறித்த விவாத ஒலிப்பதிவுகள் வெளியிடலாம்.
  4. சோவியத் / சீன சிறுகதைகளையும் இலக்கியங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  5. தமிழில் எழுதும் நல்ல எழுத்தாளர்களையும், அவர்களது படைப்புகளையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.

தற்போதைய உங்களது பணிச்சூழலில் இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் இவற்றைக் கணக்கில் கொண்டு செய்ல்படுவீர்கள் என்று நம்புகிறேன்.

வாழ்த்துக்கள் நண்பர்களே…!

– மன்னார்சாமி

  1. //ஆதிக்க சாதிவெறியைக் கண்டிக்கும் போது ‘நீ தலித்தா’ எனக் கேட்கப்படுவதையும், தலித் பிழைப்புவாதக் கட்சிகளை அம்பலப்படுத்தி எழுதும் போது ‘நீ தலித் விரோதி’ என்று முத்திரை குத்தப்படுவதையும், இந்து மதவெறிக்கு எதிராக எழுதும் போது ‘ நீ துலுக்கன்’ என்கிற வசவு வைக்கப்படும் போதும், இசுலாமிய அடிப்படைவாதத்தை கண்டிக்கும் போது ‘நீ இசுலாமிய விரோதி’ என்றும் உங்கள் மேல் வைக்கப்படும் முத்திரை குத்தல்கள் ஒன்றை மட்டும் தெளிவாக்குகிறது. நீங்கள் சரியான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்.//

    மிகவும் சரியாக சொன்னீர்கள். பல நேரங்களில் ஆத்திரத்தை வரவழைக்கும் இந்த மாதிரியானா பின்னூட்டங்களையும் தொடர்ந்து அணுமதிப்பதுதான் வினவின் நடுநிலை பாங்கு.

  2. //தொடர்ந்து வாசிக்க நேரம் இருந்தாலும், பின்னூட்டமிட்டு விவாதிக்க நேரம் என்னை அனுமதிப்பதில்லை. பல நேரங்களில், மத வெறியர்கள், சாதி வெறியர்கள், முதலாளித்துவ ஆதரவாளர்கள் போன்றோர் மறுமொழிகளில் அசட்டுத்தனமாக உளறி வைப்பதை அந்த விவாதச் சூடு தீர்ந்து போன பின் தான் பார்க்க நேர்கிறது. உருப்படியான விவாதங்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்பது என்னளவில் பெரும் குறையாகவே கருதுகிறேன். மாற்றிக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். எனினும், ஆதிக்க சாதிவெறியைக் கண்டிக்கும் போது ‘நீ தலித்தா’ எனக் கேட்கப்படுவதையும், தலித் பிழைப்புவாதக் கட்சிகளை அம்பலப்படுத்தி எழுதும் போது ‘நீ தலித் விரோதி’ என்று முத்திரை குத்தப்படுவதையும், இந்து மதவெறிக்கு எதிராக எழுதும் போது ‘ நீ துலுக்கன்’ என்கிற வசவு வைக்கப்படும் போதும், இசுலாமிய அடிப்படைவாதத்தை கண்டிக்கும் போது ‘நீ இசுலாமிய விரோதி’ என்றும் உங்கள் மேல் வைக்கப்படும் முத்திரை குத்தல்கள் ஒன்றை மட்டும் தெளிவாக்குகிறது. நீங்கள் சரியான நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள். சமூகத்தின் விரோதிகள் அனைவருக்குமே நீங்கள் விரோதிகள் எனும் போது நீங்கள் மக்களின் நண்பர்களாகத் தான் இருக்க முடியும்//

    Very well said!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க