Thursday, May 30, 2024
முகப்புசெய்திஎன் பார்வையில் வினவு - தங்கஅரசன் அண்ணாமலை, அம்பி

என் பார்வையில் வினவு – தங்கஅரசன் அண்ணாமலை, அம்பி

-

என் பார்வையில் வினவு – 3 : தங்கஅரசன் அண்ணாமலை

முதலில் வினவின் ஆறாம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கற்றலும் கற்பித்தலும்

நான் கடந்த ஒரு வருடமாக வினவினை படித்து வருகிறேன். என் வாழ்வில் கடந்த பதினெட்டு வருடங்களாக படிப்புக்காக செலவளித்துள்ளேன். ஆனால், அந்த பதினெட்டு வருடம் கற்றதைவிட வினவில் இந்த ஒரு வருடமாக கற்றுக்கொண்டதுதான் அதிகம். வினவின் கட்டுரைகளின் சிறப்பு என்னவெனில், நிறைய மறுமொழிகள் வரும். அப்படி வரும் மறுமொழிகளில் பெரும்பான்மையானவை எதிர்த்துதான் வரும், அதுதான் வினவின் வெற்றி. ஏனெனில், உண்மையை அலசி ஆராயமல் அறியாமையால் பொதுபுத்தியால் வரும் மறுமொழிகளே அவை.

இருப்பினும், வினவு, அவர்களை போட்டிக்காக மடக்க வேண்டும் என மறுமொழி இடாமல், அவர்களை வெறுக்காமல், அவர்களுக்கு அவர்களின், அறியாமையை விளக்குவதே வினவின் வெற்றியாகும். வினவை படிக்க தொடங்கியதிலிருந்து, எப்படி எந்தவொரு விசயத்தையும் பார்க்க வேண்டும் என்றும், என் பார்வையும் என் கருத்தும் மாறிவிட்டது.

இப்போதெல்லாம், நான் படிக்கும் கல்லூரியிலும், என்னை சுற்றி இருப்பவர்களிடத்திலும் சரி எந்தவொரு விசயம் நிகழ்ந்தாலும் அதைபற்றி யாரும் சிந்திக்காத எதிர் மாற்று பார்வையை வினவை போலவே எடுத்து கூறி முன்வைக்கிறேன். வழக்கம்போல வினவுக்கு வரும் மறுமொழிகள் போலவே எனக்கும் வரும். ஆனால், அவையனைத்திற்க்கும் பொறுமையாய் எடுத்துகூறி அறியாமையை நீக்குகிறேன். இது எனக்குக் கிடைத்த வெற்றிமட்டும் அல்ல, வினவுக்கும் கிடைத்த வெற்றி. இது வினவால் தான் சாத்தியமானது.

_______________________________________________________________

என் பார்வையில் வினவு – 4 : அம்பி

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் வினவுக்கும், அதன் வெற்றிக்கு காரணமான அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்..!

இணையத்தில் வினவு தளத்தின் வளர்ச்சிக்கும் , நாள்தோறும் அதிகரிக்கும் அதன் வாசகர்களின் எண்ணிக்கைக்கும் காரணமாக முதலில் தோன்றுவது இணையத்தில் அதன் பாத்திரம்.. பொது ஊடகங்களில் வெளிவர இயலாத மாற்று கருத்துக்களையும், செய்திகளையும் சமரசமில்லாமல் முன்வைப்பது வினவின் தனிச் சிறப்பு..

வினவின் மாற்றுக் கருத்துக்கள், விமர்சனங்களுக்கு அடித்தளமாக அமைவது அதன் மார்க்சிய கொள்கையும் , கண்ணோட்டமும் – அதன் விளைவான அரசியல், சமூக பார்வையும்.. வினவில் வெளியாகும் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், செய்திகள் மற்றும் கார்ட்டூன்கள் காட்டமாக வெளியாகும் போதெல்லாம் பின்னுட்டங்களும் அதே வகையில் அமைவது இயல்பு.. இத்தகைய பதில்களையும் மட்டுறுத்தாமல் வெளியிடும் வினவின் ஜனநாயகம் அதன் மற்றுமோர் தனிச் சிறப்பு..

வினவின் பல கட்டுரைகள் அதன் மார்க்சிய அரசியல், சமூகப் பார்வையுடன் தெளிவாக செதுக்கப்பட்டது போன்று வெளியானாலும் சில கட்டுரைகள்/கதைகள்/கவிதைகள் வம்பிழுக்கும் தொனியில் அமைந்து/அமைக்கப்பட்டு வெளிவருவதும் உண்டு..!

இதனாலும், இதன் விளைவான சூடு பறக்கும் விவாதங்கள் வசவுகளில் மூழ்கிவிடுவதாலும் , வினவுக்கு வசவு தளம் என்ற பெயரும் இணயத்தில் ‘புகழுடன்’ புழங்கி வருவதும் தெரிந்ததே..! இந்த புகழ்ச்சி தொடர்ந்து நிலைபெற்றுவிடாமல் இருக்க வினவு சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..!

மாற்றுக் கருத்துக்களையும், எதிர்க் கருத்துக்களையும் மட்டுறுத்தாமல் வெளியிடும் வினவின் ஜனநாயகம் பாராட்டத்தக்கது.. அதே நேரம் பலப்பல வினோதமான பெயர்களுடன் திடீர் என்று குதித்து பின்னுட்டக்காரர்களை வசை பாடி விரட்டும் சில அன்பர்கள், ‘ஜனநாயக ரீதியிலான விவாதங்கள்’ என்ற வினவின் நோக்கத்திற்கு எதிராக போகும் சூழலும் தவிர்க்கப் படவேண்டியவை..!

இறுதியாக, எந்த ஒரு சாதியையும் முழுக்கவும் பொதுமையாகவும் கடுமையான விமர்சனங்களுக்குள்ளாக்குவது பல வாசகர்களிடம் எதிர்மறையான எண்ணங்களை உடனடியாக உருவாக்கி விவாத தளத்திலிருந்தும், வினவு தளத்திலிருந்தும் விலகச் செய்யும் என்பது எனது கருத்து..

ஜனநாயக ரீதியில் வினவின் பல்வேறு கருத்துக்கள், நிலைப்பாடுகளுடன் உடன்பட்டும், மாறுபட்டும் விவாதங்களில் ஈடுபட விழையும்,

அன்புள்ள அம்பி

  1. // வினவுக்கு வசவு தளம் என்ற பெயரும் இணயத்தில் ‘புகழுடன்’ புழங்கி வருவதும் தெரிந்ததே..!//

    கிடைச்ச சான்சை நன்னா யூஸ் பண்ணியிருக்கேள் போங்கோ! அப்பப்ப அடிச்சது இன்னும் வலிக்கிறதோ என்னமோ! சரி அம்பி வாள் மத்தவா எல்லாம் ஏதோ ஏதோ புனை பெயருல வந்து வசை பாடுறா, வச்சுக்குங்கோ!நீங்க மட்டும் அம்பின்னு வச்சுருக்கேளே அது மட்டும் ஒரிஜினல் பேரா, மத்தவாள விமரிசிக்கிறதுக்கு முன்னால செத்த நம்மயும் கொஞ்சம் உத்துப் பாத்துண்டா லோகத்துக்கு ஷேமம் இல்லையோ!

    கிண்டலா நான் எழுதியிருந்தாலும் அம்பி அவர்கள் சீரியசா பதில் சொல்வாருன்னு எதிர்பார்க்கிறேன்.நன்றி!

  2. வெளிப்படையாகவே அம்பி என விளம்பிவிட்டதால், அம்பி இதற்கு பதில் சொல்ல மாட்டார்! எனக்கு தெரிந்தவரை, வினவின் நோக்கமான. மார்க்சிய லெனினிய கருத்துக்களை ஆதரித்தோ, விமரிசித்தோ பின்னூட்ட மிடாமல், தஙகள் சாதிபற்றை பறை சாற்றவே பின்னூட்ட மிடுகிரார்கள்! வினவு உட்பட. எல்லோரும் சாதி சழக்குகளுக்கு அடுத்தவரை குற்றம் சாட்டி எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்துகின்றனர் ! மத தீவிர வாதிகளும், சாதி பற்றாளர்களும் ஒரு போதும் கம்யூனிச்டுகளாக முடியாது! அம்பெத்கர் தாழ்த்தப்பட்டவர்க்கு மட்டுமே தலைவராகவும், பெரியார் பிற்படுத்தபட்டவற்கு மட்டுமே தலைவராகவும் , சில ஆதிக்க சக்திகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது! உண்மையில் இவர்கள் சுரண்டல் சமூகத்தின் சாதிய அரண்களை தஙகள் வழியில் உடைத்த, பேரரிவாளர்கள்! இவர்கள் விட்ட பணி தொடராமல் , சமத்துவம் வளர முடியாது! வளரட்டும் வினவின் பணி!

  3. முரண்கள் இருந்தாலும், மற்று அரசியலுக்காக உங்களது பணி இன்றைய காலகட்டத்தில் முக்கியமான தேவை………. இன்று உங்கள் கருத்து சிறு தீப்பொறியாக இருந்தாலும் என்றாவது ஒரு நாள் இதன் தேவை இருக்கும்………….ஆறு வருடம்……. திட்டதோன்றினாலும்…… வினவு உங்களை பாராட்டத்தான் தோன்றுகிறது…………… வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க