முகப்புநீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்மோடியைக் காப்பாற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் - சதிகள் !

மோடியைக் காப்பாற்ற சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடிகள் – சதிகள் !

-

குஜராத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த முசுலீம் படுகொலையின்பொழுது மிகக்கொடூரமாகக் கொல்லப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது சக அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேர் மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டுக்களை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, “நரேந்திர மோடி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமோ, விசாரிக்கத்தக்க சாட்சியமோ இல்லாததால், அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது” எனக் கடந்த ஆண்டு அகமதாபாத் விசாரணை நீதிமன்றத்திடம் அறிக்கை அளித்தது. இந்த அறிக்கைக்கு எதிரான மனுவொன்றை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாகியா ஜாஃப்ரி, “சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்; ஒரு சுதந்திரமான கமிசனை அமைத்து மோடி மீதான தனது குற்றச்சாட்டுகள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரியிருக்கிறார்.

ஜாகியா ஜாஃப்ரி, தீஸ்தா சேதல்வாத்
இந்து மதவெறி பயங்கரவாதி நரேந்திர மோடியைத் தண்டிக்கக் கோரிப் போராடி வரும் ஜாகியா ஜாஃப்ரி (நடுவில்) மற்றும் வழக்குரைஞர் தீஸ்தா சேதல்வாத் (இடது).

ஜாகியா ஜாஃப்ரி இந்த மனுவைத் தாக்கல் செய்தது கூட எளிதாக நடந்து விடவில்லை. சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது அறிக்கைகள்-சாட்சியங்கள் குறித்த ஆவணங்கள் உள்ளிட்டு அனைத்தையும் ஜாகியா ஜாஃப்ரிக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டிருந்த போதும், அக்குழு இந்த உத்தரவை மதித்து நடக்கவில்லை. ஜாகியா ஜாஃப்ரி தனது அறிக்கைக்கு எதிராக எதிர் மனு தாக்கல் செய்வதைத் தடுக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், அந்த ஆவணங்களை முழுமையாக அவருக்கு வழங்க மறுத்து வந்தது, சிறப்புப் புலனாய்வுக் குழு. ஜாகியா ஜாஃப்ரி இச்சட்டவிரோத அடாவடித்தனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வென்று, அதன் பிறகுதான் இந்த எதிர் மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியைக் காப்பாற்றுவதற்கு எத்துணை கீழ்த்தரமான வேலையிலும் இறங்கும் என்பதற்கு இது இன்னொரு சான்று.

நரேந்திர மோடி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை முழுமையாக விடுவித்துவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடுதான் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது விசாரணையை நடத்தி வந்தது என ஜாகியா ஜாஃப்ரி மட்டுமல்ல, குஜராத்தின் முன்னாள் போலீசு தலைமை இயக்குநர் ஆர்.பி. சிறீகுமார், மோடி அரசால் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அம்மாநில முன்னாள் உளவுத் துறை துணை ஆணையர் சஞ்சீவ் பட், குஜராத் முசுலீம் படுகொலை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்திய தெகல்கா வார இதழ் நிருபர் ஆஷிஷ் கேதான் உள்ளிட்டுப் பலரும் அம்பலப்படுத்தியுள்ளனர். சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்விசாரணையின் இடைக்கால அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அளித்த பொழுது, “விசாரணைக்கும் அதன் இறுதியில் வந்தடைந்த முடிவுகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை” என அந்நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததோடு, இவ்வழக்கு விசாரணையைக் கண்காணிக்க ராஜு ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நீதிமன்ற நண்பனாக (அமிகஸ் கியுரே) நியமித்தது.

மோடி மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முகாந்திரமில்லை எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கை அளித்திருப்பதற்கு மாறாக, “மதக் காழ்ப்புணர்ச்சியைத் தூண்டிவிட்ட குற்றத்திற்காக மோடி மீது வழக்குத் தொடர முகாந்திரம் இருப்பதாக” அறிக்கை அளித்திருக்கிறார், ராஜு ராமச்சந்திரன். மேலும், மோடி பிப்.27, 2002 அன்று இரவு நடத்திய உயர் அதிகாரிகள் கூட்டத்தில், “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது” எனக் கூறியது தொடர்பாக போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் அளித்திருக்கும் சாட்சியத்தைச் சிறப்புப் புலனாய்வுக் குழு நம்பகத்தன்மையற்றது எனக் கூறி ஒதுக்கிவிட்டது. ஆனால், “சஞ்சீவ் பட் சாட்சியத்தின் உண்மைத்தன்மையை நீதிமன்ற விசாரணையின் மூலம்தான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார், ராஜு ராமச்சந்திரன்.

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரியிருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் புரிந்துகொள்ள வேண்டும். அவர், தனது எதிர் மனுவில் இணைத்துள்ள ஆதாரங்கள், குஜராத் முசுலீம் படுகொலைக்கான சதித் திட்டமும் ஆலோசனையும் கோத்ராவில் ரயில் பெட்டிகள் தீக்கிரையான செய்தி மோடிக்குத் தெரிந்த மறுநிமிடமே தொடங்கிவிட்டதை எடுத்துக் காட்டுகிறது; சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியின் கைத்தடியாகச் செயல்பட்டு வந்திருப்பதையும் உறுதிப்படுத்துகிறது.

நரேந்திர மோடி, ஜெய்தீப் படேல்
குஜராத் முசுலீம் படுகொலையின் சதிகாரர்கள் : நரேந்திர மோடி மற்றும் விசுவ இந்து பரிஷத்தின் குஜராத் மாநிலச் செயலர் ஜெய்தீப் படேல்

2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க., தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையில்தான் ஆர்.எஸ்.எஸ்.-இன் வளர்ப்புப் பிராணியான நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். இத்தோல்விகளிலிருந்து மீள்வதற்கு முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியைத் தூண்டிவிடும் கிரிமினல் நடவடிக்கைகளில் ஆர்.எஸ்.எஸ். பரிவார் அமைப்புகள் அனைத்தும் அச்சமயத்தில் ஈடுபட்டு வந்தன. இந்த நேரத்தில்தான் சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் கோத்ரா ரயில் நிலையத்தில் தீக்கிரையாகின.

இந்தச் செய்தி அகமதாபாத்தை எட்டியவுடன், நரேந்திர மோடி உள்துறை அதிகாரிகளுக்கு அப்பால், அம்மாநில விசுவ இந்து பரிசத்தின் பொதுச் செயலர் ஜெய்தீப் படேலோடும் (தொலைபேசி வழியாக) உரையாடியிருக்கிறார். இந்த உரையாடல் ஒரு பெரும் சதித் திட்டத்தின் தொடக்கம் என்பதை பின்னால் நடந்த நிகழ்ச்சிகள் நிரூபிக்கின்றன.

கோத்ரா சம்பவம் குறித்து முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, “இது பாகிஸ்தான் உதவியோடு முசுலீம்கள் நடத்திய திட்டமிட்ட சதிச் செயல்” எனச் சட்டசபையில் நாக்கூசாமல் அறிவித்த கையோடு கோத்ராவுக்குக் கிளம்பிச் சென்ற மோடி, தீக்கிரையாகி இறந்துபோன கரசேவகர்கள் மற்றும் பிறரின் உடல்களைச் சட்டத்திற்குப் புறம்பாக வெட்டவெளியில், ஆர்.எஸ்.எஸ். குண்டர்களின் கண்முன்பாக, பிரேதப் பரிசோதனை நடத்திட உத்தரவிட்டார். ஒருபுறம் பிரேதப் பரிசோதனை நடந்துகொண்டிருக்க, இன்னொருபுறம் அமைச்சரவைக் கூட்டம் என்ற பெயரில் சதியாலோசனைக் கூட்டமும் நடந்தது. மோடியோடு பேசி வைத்திருந்தபடி கோத்ராவுக்கு வந்திருந்த ஜெய்தீப் படேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டதே, இது கலவரத்தைத் தூண்டிவிடுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம்தான் என்பதை நிரூபிக்கிறது. இக்கூட்டத்தில் இறந்து போனவர்களின் உடலை ஜெய்தீப் படேலிடம் ஒப்படைக்கவும், அவர் அச்சடலங்களை கோத்ராவிலிருந்து 300 கி.மீட்டருக்கு அப்பாலுள்ள அகமதாபாத்திற்குச் சாலை வழியாக எடுத்துச் செல்லவும் அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

அரசைச் சாராத வெளிநபரும் இந்து மதவெறி பயங்கரவாதியுமான ஜெய்தீப் படேலிடம் சடலங்களை ஒப்படைக்கும் முடிவை கோத்ரா மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெயந்தி ரவி எதிர்த்த போதும், மோடி இச்சட்டவிரோத முடிவை நடைமுறைப்படுத்தினார். சடலங்களைச் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துவருவதன் மூலம் இந்து மதவெறியைக் கொழுந்துவிட்டு எரியச் செய்ய முடியும் என்பதுதான் மோடியின் கணக்கு. அன்றிரவே அகமதாபாத் திரும்பிய நரேந்திர மோடி உயர் அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டுவதைத் தடுக்கக் கூடாது” என்றும் கட்டளையிட்டார். கூட்டக் குறிப்புகள் பதிவு செய்யப்படாமல், தந்திரமாகவும் சதித்தனமாகவும் நடத்தி முடிக்கப்பட்ட இக்கூட்டத்தின் மூலம் இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கும் என்பது வெளிப்படையாக, அதேசமயம் சட்டவிரோதமான முறையில் உறுதி செய்யப்பட்டது.

12-cartoonஇதற்கு மறுநாள் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து மாநிலம் தழுவிய அடைப்புப் போராட்டத்தை, மோடி அரசின் முழு ஆசியோடு அறிவித்து நடத்தின. அன்று ஜெய்தீப் படேல் நரோடா காவ் தாக்குதலைத் தலைமையேற்று நடத்தினான்; மோடி அரசில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராக இருந்த மாயாபென் கோத்நானி நரோடா பாட்டியா தாக்குதலைத் தலைமையேற்று நடத்தினார்.

ஏறத்தாழ ஒரு மாத காலத்திற்கு மேலாக நடந்த குஜராத் முசுலீம் படுகொலையின் தொடக்கம் இப்படித்தான் அமைந்தது. ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ கோத்ரா ரயில் பெட்டி தீக்கிரையான பிப்.27 மற்றும் நரோடா காவ், நரோடா பாட்டியா படுகொலைகள் நடந்த பிப்.28 ஆகிய இரு தினங்களிலும் மோடிக்கும் ஜெய்தீப் படேலுக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரிப்பதை வேண்டுமென்றே தவிர்த்து விட்டது. “இறந்து போனவர்களின் சடலங்களை ஜெய்தீப் படேலிடம் ஒப்படைக்கும் முடிவை, மோடி எடுக்கவில்லை; மாஜிஸ்ட்ரேட் ஒருவர்தான் எடுத்தார்” எனச் சட்ட பாயிண்டுகளைக் காட்டி, மதவெறியையும், கலவரத்தையும் தூண்டிவிட்ட குற்றச்சாட்டிலிருந்து மோடியை நயவஞ்சகமாகத் தப்பவைத்தது. பிப்.27 அன்று இரவில் மோடி அதிகாரிகள் கூட்டத்தை நடத்தியதற்கான ஆதாரம் எதுவுமில்லை எனக் கூறி மோடியைச் சதிக் குற்றச்சாட்டிலிருந்தும் தப்ப வைத்துவிட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கோத்ராவில் தீக்கிரையாகி இறந்து போனவர்களின் சடலங்கள் அகமதாபாத்திற்கு எடுத்து வரப்பட்டு எரியூட்டப்பட்ட அன்று, அதே நாளில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் மாநிலம் தழுவிய பந்த் நடத்தியபொழுது, குஜராத் மாநிலம் முழுவதும் எவ்வித வன்முறையுமின்றி அமைதியாக இருந்ததென்று அறிக்கை அளித்திருக்கிறது. இதன் மூலம் அப்படுகொலைகள் திட்டமிட்ட முறையில் தூண்டிவிடப்பட்டோ, அரசின் ஒத்துழைப்போடோ நடத்தப்படவில்லை; மாறாக, அவை இந்துக்களின் தன்னெழுச்சியான ஆத்திரத்தின் வெளிப்பாடுதான் எனக் காட்ட முனைந்திருக்கிறது. ஆனால், அந்த இரு நாட்களிலும் எதார்த்த நிலைமை குறித்து உளவுத் துறை போலீசார் அனுப்பிய செய்திகளே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மோசடித்தனத்தை அம்பலப்படுத்துகின்றன.

 • சடலங்கள் அகமதாபாத்திற்குக் கொண்டுவரப்படும் செய்தியைக் கேள்விப்படும் ஒரு உளவு அதிகாரி, தனது மேலதிகாரிக்கு பிப்.27 அன்று மதியம் அனுப்பிய தந்திச் செய்தியில், “அகமதாபாத்தில் மதக் கலவரம் நடக்கும்; எனவே, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 • ஜெய்தீப் படேல், கௌசிக் மேத்தா, திலீப் திரிவேதி உள்ளிட்ட விசுவ இந்து பரிஷத்  தலைவர்கள், “கோத்ராவில் இந்துப் பெண்கள் மானபங்கபடுத்தப்பட்டதாக” வதந்தியைப் பரப்பி மதவெறியைத் தூண்டிவருவதாகவும்; வாபி, பாவ்நகர், கேத்பிரம்மா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முசுலீம் எதிர்ப்பு பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும்; “இரத்தத்துக்குப் பதில் இரத்தம்” என ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலைவெறியோடு தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுத்துவருவதாகவும் உளவுத் துறை அனுப்பிய தந்திச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
 • அகமதாபாத்தில் சடலங்கள் வைக்கப்பட்டிருந்த சோலா சிவில் மருத்துவமனையிலிருந்து பிப்.28 அதிகாலை முதல் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தந்திச் செய்தியும், அம்மருத்துவமனை 3,000-க்கும் அதிகமான இந்து மதவெறிக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு நிலைமை கட்டுக்கு அடங்காமல் போவதைக் குறிப்பிடுவதோடு, மருத்துவமனைக்கு சிறப்பு போலீசு படையை அனுப்புமாறும் கோருகிறது. அம்மருத்துவமனையிலிருந்து இறுதியாக அனுப்பப்பட்ட தந்திச் செய்தி, அப்பகுதியில் கலவரம் வெடித்துவிட்டதாகக் குறிப்பிடுகிறது.
 • சபர்கந்தா மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட தந்திச் செய்தி, கேத்பிரம்மா ஊரில் நடந்த சவ அடக்க ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டு, இரண்டு முசுலீம்கள் கத்தியால் குத்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது.

அகமதாபாத் நகர போலீசு கட்டுப்பாடு அறையிலிருந்தும், மாநில முழுவதுமுள்ள பல்வேறு போலீசு நிலையங்களிலிருந்தும் அந்த இரண்டு நாட்களில் இவை போன்று நூற்றுக்கணக்கான தந்திச் செய்திகள் போலீசு தலைமை அலுவலகத்திற்கும், உள்துறை அமைச்சரான மோடிக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. மோடி அரசோ முசுலீம்களுக்கு எதிரான படுகொலையைத் தொடர்ந்து நடத்தும் திட்டப்படி செயல்பட்டு வந்ததால், இந்தத் தந்திகளில் பெரும்பாலானவற்றை அழித்து, ஆதாரமில்லாமல் செய்தது. சிறப்புப் புலனாய்வுக் குழுவோ தனது கைக்குக் கிடைத்த மிச்சம் மீதி தந்திச் செய்திகளிலிருந்து உண்மையைக் கண்டறிய மறுத்து, மோடியைக் காப்பாற்றியது.

குஜராத் முசுலீம் படுகொலைக்கும் மோடிக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிப்பதற்கு சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கேட்பது கைப்புண்ணைப் பார்க்க கண்ணாடி கொண்டு வரச் சொல்வதைப் போன்றது. எனினும், போதுமான ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்த பிறகும் மோடியின் மீது ஒரு பெட்டி கேஸைப் போடுவதற்குக் கூட இந்திய நீதிமன்றங்கள் தயாராக இல்லை. தீவிரவாதிகளாக முத்திரை குத்தப்படும் அப்பாவி முசுலீம்களை எவ்வித ஆதாரமும் இன்றித் தூக்கு மேடைக்கு அனுப்பத் தயங்காத இந்திய நீதிமன்றங்கள், மோடிக்கு அளித்துவரும் இந்தச் சலுகை அநீதியானது. ஊழலோ, அதிகார முறைகேடுகளோ அம்பலமாகும் பொழுது அதில் சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என சவுண்டு விடும் மேல்தட்டு பார்ப்பனக் கும்பலும் அவர்களின் ஊதுகுழல்களான தேசியப் பத்திரிகைகளும் இத்துணை கொடூரமான, பெருந்திரள் படுகொலையைத் திட்டமிட்டு நடத்திய மோடியைப் பிரதமர் நாற்காலியில் அமர்த்தி அழகு பார்க்கத் துடிக்கின்றன.

இத்தகைய அநீதியும் போலித்தனமும் ஓரவஞ்சனையும் நிறைந்த இந்த அரசியல் அமைப்பிற்குள், முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் மைய நீரோட்டமாக மாறியுள்ள நிலையில் மோடியைத் தண்டித்துவிட முடியும் என நம்பிக்கை கொள்ள முடியுமா? ஆனாலும், இவற்றை எதிர்கொண்டுதான் ஜாகியா ஜாஃப்ரி போராடி வருகிறார். இத்தகைய போராட்டம் இல்லையென்றால், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் குஜராத் படுகொலைக்கு என்றோ மங்களம் பாடியிருக்கும்.

– செல்வம்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

 1. எல்லாம் சரிதான் சார்…தமிழ்னாட்டில் கொஞ்சநாள் இந்து அமைப்பினர் படுகொலை செய்யப்படுகின்றனரே…அத்தப்பத்தி வாயத்திறந்தால் உமக்கு ஏதாவது ஆகிவிடுமா சார்..

  • சார், அதான் தெளிவா சொல்லிட்டாங்கலே,தேர்தல் வருது குஜரத் பாணியை, தமிழ்லகத்திலும் செயல்படுத்தும் முனைப்புதான். ஆனா நடக்காது சார், அந்த பருப்பு நம்ம ஜனங்ககிட்ட வேகாது.

  • நீங்கள் இந்துக்கள் மீது ஏன் பரிந்து பேசுகிறீர்கள் என்று தெரியவில்லை!!!
   இந்துக்கள் எல்லாம் “வெறியர்கள்”.
   அதனால்தான் இஸ்லாமிய சகோதரர்கள் “இந்து வெறியர்களை” கண்டந் துண்டமாக வெட்டிக்கொலை செய்கிறார்கள்!!!!!!!!!

   பாகிஸ்தான்,சிரியா, ஆப்கானிஸ்தான், சூடான், ஈராக், ஈரான் மற்றும் பிற இஸ்லாமிய நாடுகளில் தினசரி அப்பாவி மக்கள் கொடுரமாக கொல்லப்படுவதெல்லாம் இஸ்லாமின் சகோதரத்துவத்தை காட்டுகிறது!!!!
   இதெல்லாம் உங்ககளுக்கு தெரியவில்லை போலும்!!!!! “இப்போது “ஜிகாத்” காலம் உலகமெங்கும் தொடங்கிவிட்டது. அதனால்தான் இஸ்லாம் அல்லாதவர்களை “கொலை” செய்கிறார்கள்!! இது நபிகள் (ஸல் ஸல் ஸல்……..) அவர்களின் உத்தரவு.
   இதனை செயல் படுத்துவது இஸ்லாமிய “சகோதர்களின் “கடமை”!!!!!
   உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால், வினாவுக்கு வரிகட்டி வந்தால் நீங்கள் பிழைக்கலாம்!!!
   இல்லாவிட்டால் அதோ கதிதான்!!!!!!
   ஏ!!!!!!! இந்துவே இந்த நாட்டில் வாழ உனக்கு உரிமை இல்லாமல் போகும் காலம் வந்துகொண்டு இருக்கிறது.

  • வினவைப் படித்துப்படித்து வினவு போலவே விரிவா சிந்திக்கிறான்யா இந்தத் தம்பி..

  • னிதீஸ் குமார் தேசிய அரசியல் எனும் கடலில் நீந்த முயற்ச்சிப்பதற்க்கு முன் தன் மானில வளர்ச்சிக்கான வேலைகளைச் செய்ய வேண்டும்….னிதீஸா மோடியா என வந்த போது மோதியே என நல்ல முடிவெடுத்து நிதீசை கூட்டணியிலிருந்து கழட்டி வீட்டது மிகநல்ல முடிவு…

  • அப்படி சொல்ல முடியாது சதீஸ், குழந்தைகளை அரசியலுக்காக கொன்றது தெரிந்தால்… அப்புரம் அகில இந்திய அளவில் அரசியல் எதிர்காலம் இராது என்பது தெரியும்..

   சாதி மோதல், மதபூசல் என்று செய்தால் வோட்டு பார்க்க துட்டு பார்க்க வாய்ப்பு கிடைக்கும் எனவே இந்த சத்துணவு மரணத்துகுக் பின் சதி இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

 2. மிக சிறப்பாக உண்மைகளை உரத்துச் சொல்லும் கட்டுரை.
  ஆனால், ந.மோ வை விட்டால் இன்று ஆர்.எஸ்.எஸின் சிந்தனைகளை செயலாக்க வேறு ஆள் கிடைக்காது என்பதனால்,ந.மோ என்னத்தை உளறினாலும் அதற்கு முட்டுக்கொடுக்கவும், அவன் செய்த, செய்யத்தூண்டிய, துணை நின்ற அனைத்து கொலைகளையும் மூடி மறைக்கவும் ஆள் அம்பு சேனை என்று அனைத்து முறைகளையும் ஆர். எஸ். எஸும், பீ.ஜே.பியும் கையாண்டு வருகின்றன. அவற்றுள், எஸ்.ஐ.டி யும் ஒன்று….
  காசுக்கு விலை போகும் கயவர் கூட்டம் உள்ள வரை நரமாமிச பட்சி ந.மோ வுக்கு கொண்டாட்டம் தான்.

 3. மிழகத்தில் BJP இந்து முன்னணியின்
  கந்துவட்டி கள்ளத்தொடர்பு கொலைகளும் .
  முஸ்லிம்கள் மீதான பழிகளும் .

  கடந்த ஓராண்டில் பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் நடுரோட்டில் ஓடஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . இந்த கொலைகள் நடந்தவுடன் வழக்கம் போல ஊடகங்களும் ற்ஸ்ஸ் BJP இந்து முன்னணி காவி பண்டாரங்களும் முஸ்லிம்களின் மீது பழி போட்டு பஸ் எரிப்பு ,கடையடைப்பு நடத்தி அரசியல் ஆதாயம் அடைகிறது .

  சில நாட்கள் கழித்து இந்த கொலைகள் தொடர்பான உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இந்த கொலை தொடர்பான கேவலமான பின்னணி தெரிய வரும்போது , இதனை பத்திரிக்கைகள் சிறிய செய்தியாக வெளியிடுகிறது .

  தற்போது சேலத்தில் பிஜேபி பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட நிலையில் ,
  ”ஏற்கெனவே பிஜேபி இந்து முன்னணி பிரமுகர்கள் வேலூர் அரவிந்த் ரெட்டி ,கோயம்மேடு விட்டல் ,பரமக்குடி முருகன் , நாகை புகழேந்தி ,ராமேஸ்வரம் குட்டநம்பு , வேலூர் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகளே ஆடிட்டர் ரமேசையும் கொலை செய்திருக்கிறார்கள் ” என மோடி முதல் ராமகோபால ஐயர் வரை கூறி திங்கள் கிழமை தமிழகத்தில் கடையடைப்பு நடத்துகிறார்கள் ..

  உண்மையில் மேற்படி கொலைகளை யார் எதற்காக செய்தார்கள் ?

  கோயம்பேடு விட்டல் கொலை 27.4.2012 .

  சென்னை விருகம்பாக்கம் சாய்நகரை சேர்ந்தவர் விட்டல் (35). இவர் 127-வது வட்ட பா.ஜனதா தலைவராக இருந்தார்.கோயம்பேடு மார்க்கெட்டில் கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.27.4.2012 .அன்று இரவு கோயம்பேடு மார்க்கெட்டின் பின்புறம் கை துண்டிக்கப்பட்டு உடல் முழுவதும் பலத்த வெட்டுக்காயங்களுடன் விட்டல் பிணமாக கிடந்தார்.

  கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு சுந்தரபாண்டியன் என்பவருக்கு ரூ.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். அந்த பணத்தை சுந்தரபாண்டியன் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் அடிக்கடி விட்டல் சுந்தரபாண்டியன் வீட்டுக்கு சென்று வீட்டு பெண்களை ஆபாசமாக பேசியுள்ளான் .இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுந்தரபாண்டியன் அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டிக் கொன்றுள்ளனர். இந்த வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

  டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை 23.10.12 .

  வேலூர் ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல டாக்டர் அரவிந்த் ரெட்டி (38). பாஜ மாநில மருத்துவர் அணி செயலாளராக இருந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வேலூர் தொகுதி பாஜ வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த மாதம் 24மிரவு 7.30 மணியளவில்,பைக்கில் வந்த 3 பேர் அரவிந்த் ரெட்டியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தனர் .

  கொலை நடந்த இடத்தில் ஸ்பிரேயர் பாட்டிலில் தயார் செய்த நாட்டு வெடிகுண்டை போலீசார் பறிமுதல் செய்தனர் . உடனே முஸ்லிம் தீவிரவாதிகள்தான் இந்த கொலையை செய்ததாக பந்த் நடத்தினார்கள் .

  விசாரணையில் பெண் விவகாரத்தால் கொலை நடந்தது தெரிய வந்தது .இந்த கொலைக்கான சதித்திட்டத்தை குண்டர் சட்டத்தின்கீழ் வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா தீட்டியுள்ளார் .
  வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ் (26), பிச்சை பெருமாள் (28) மேலும், இந்த கொலையில் ஓல்டு டவுன் உதயா என்ற உதயகுமார் (28), சின்னா என்ற சந்திரன் (25), அரியூர் ராஜா (எ) ராஜ்குமார் (எ) எமெலே ராஜா (32), சோளிங்கர் தரணி என்ற தரணிகுமார் (24) ஆகியோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர் .

  நாகப்பட்டிணம் புகழேந்தி கொலை 5.7.12 .

  நாகப்பட்டிணத்தில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்த புகழேந்தி (53),காலை நடைபயணம் சென்ற போது ஆட்டோவில் வந்த 4 மர்ம நபர்களால் வெட்டி படுகொலைச் செய்யப்பட்டார்.

  சம்பவ இடத்துக்கு வந்த பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியது :-
  கடந்த 30 ஆண்டுகளாக இந்து மக்களுக்காக போராடி வந்தவர் புகழேந்தி. இவர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததை எதிர்த்து போராடியவர் .இதனால் இந்த கொலை நடந்ததாக கூறினான் .

  ஆனால் போலீஸ் விசாரணையில் .

  கொலை செய்யப்பட்ட புகழேந்தி, கட்டப்பஞ்சாயத்து நில ஆக்கிரமிப்பு அடாவடி செயலில் ஈடுபடுவதும் , சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஆசிரியர் ஒருவர் வீட்டை அபகரித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் ஜாமீனில் வெளிவந்ததும் தெரியவந்தது . இவனால் பாதிக்கப்பட்ட முனீஸ்வரன் என்பவர் இந்த கொலையை செய்ததும் தெரியவந்தது . முனீஸ்வரன் சேலம் நீதி மன்றத்தில் சரணடைந்தார் .

  பரமக்குடி முருகன் கொலை 19.3.13

  பரமக்குடி. பாரதீய ஜனதா முன்னாள் கவுன்சிலரான முருகனிவர் வாஜ்பாய் மன்ற தலைவராகவும் இருந்து வந்தார்.

  மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களால் பைப்வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டார்.

  போலீஸ் விசாரணையில் 6 ஏக்கர் நிலத்தகராறு தொடர்பாக ராஜபாண்டி மனோகரன் ஆகியோரால் படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது .

  வேலூர் வெள்ளையப்பன் கொலை .

  இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் வேலூரில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வெள்ளையப்பன் சென்ற போது இந்த சம்பவம் நடந்தது.

  வெள்ளையப்பன் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிள் அருகே 4 பைப் வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர் .

  இது தொடர்பாக ஜூலை 02,2013 வெளிவந்த தினமலர் செய்தியில் ”

  வேலூர், புது பஸ்நிலையம் அருகே, இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், 45, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். .. ……கொலை நடந்த இடத்தில், கறுப்பு நிற பை கண்டெடுக்கப்பட்டது. அந்த பையில், ஐந்து பைப் வெடிகுண்டுகள் இருந்தன. பேட்டரி இணைக்கப்பட்டிருந்த வெடி குண்டை, கொலைக்கு அல்லது தப்பி செல்லும் போது, பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். பைப் வெடிகுண்டுகள், தென்மாவட்டங்களில் பிரபலம் என்பதால், தென் மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர், இதில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர். ”

  ராமேஸ்வரம் குட்டநம்பு கொலை 7.7.13 ,

  ராமேசுவரத்தை சேர்ந்தவர் குட்டநம்பு இந்து முன்னணி ஒன்றிய துணைத்தலைவராக இருந்து
  வந்தார் .சம்பவத்தன்று மர்ம நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

  விசாரணையில் ரெயில்வே ரோடு பகுதியில் குடிபோதையில் குட்டநம்பு தகராறு செய்ததால் ஊர்மக்கள் கல்லால் அடித்து கொன்றது தெரியவந்தது .இது தொடர்பாக ராமச்சந்திரன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர் .

  இப்படியாக இந்த பிஜேபி இந்து முன்னணி நாதாரி நாய்கள் குடிபோதை கந்துவட்டி கள்ளத்தொடர்பு நில ஆக்கிரமிப்பு போன்றவட்டில் ஈடுபட்டு பாதிகப்பட்டவனால் துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்யப்பட்டபோது அந்த பழியை முஸ்லிம்கள் மீது போட்டு , பஸ் எரிப்பு கடையடைப்பு பந்த் நடத்தி அரசியல் ஆதாயம் அடைகின்றனர் .இவர்களை அடக்கி ஒடுக்காமல் அதிமுக அரசு ஏன் வேடிக்கை பார்க்கிறது என்று புரியவில்லை .

  நன்றி: நிழல்களும் நிஜங்களும்
  & Vஅஜுபுடேன் றொயல் & ஜெஹபர் சாதிக்

 4. //எல்லாம் சரிதான் சார்…தமிழ்னாட்டில் கொஞ்சநாள் இந்து அமைப்பினர் படுகொலை செய்யப்படுகின்றனரே…அத்தப்பத்தி வாயத்திறந்தால் உமக்கு ஏதாவது ஆகிவிடுமா சார்..//

  அவரே சரமாரியா வெட்டிகிட்டு தற்கொலை பன்னிக்கிட்டார்னு சொன்னாலும் சொல்லும் வினவு.

  அப்புறம், தீஸ்தா செதல்வாட்? இது தான் அவிங்க லட்சனம் 😀

  The court was told that 22 witnesses, who had submitted identical affidavits before various courts relating to riot incidents, were questioned by SIT and it was found that the witnesses had not actually witnessed the incidents and they were tutored and the affidavits were handed over to them by Setalvad.[18] The report which was brought to the notice of the bench consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the much publicised case of a pregnant Muslim woman Kausar Bano being gangraped by a mob and foetus being removed with sharp weapons, was also fabricated, and false.[17][19]

  http://en.wikipedia.org/wiki/Teesta_Setalvad#Allegations_of_witness_tampering

 5. Seenu has tried to question Vinavu’s exposing facts by quoting SIT report without understanding the basic that vinavu’s article is that SIT has tried to shield Modi. For Seenu’s kind information – Supreme Court, in the year 2004 blasted the Modi Government saying – When women and children were burnt you were fiddling like Nero, we have no trust in you..
  The brutal attack on pregnant lady Kausar Bano was published in almost all leading news paper that time.

 6. இந்துக்கள் உயிர் என்றால் வெல்லமோ. மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் காலங்காலமாக அரசியல் கட்சிகளாலேயே படுகொலைகள் நிகழ்த்தப்பட்டபோது எங்கு போயிருந்தீர்கள். நக்ஸலைட்டுகள் கதை தனி. காமாலைக் கண்ணன்கள். உங்கள்மேல் கை வைக்கும்போது தெரியும். தலைவலியும், பல்வலியும் தனக்கு வந்தால் தெரியும்.

 7. நரேந்திர மோடி மீது எனக்கு மிகுந்த கோவம்!!
  கோத்திர ரயில் ரயில் எரிப்பு சம்பவம் நடந்ததும் குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதில் இந்துக்கள் பலரையும் இஸ்லாமியர்கள் கொன்று குவித்தார்கள். அப்போது சில முஸ்லீம்களும் கொல்லப்பட்டார்கள்!!!
  போர் களத்தில் ஒப்பாரி வைப்பது சரியல்ல!!
  மோடி செய்யத்தவரியது இதுதான்!!
  குஜராத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் பாக்கிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும். இந்திய சுதந்திரம் அடைந்த போது அம்பேத்கார் இதத்தான் சொன்னார்!!
  அப்போது அவர் சொன்னது போல் முஸ்லீம்கள் அனைவரையும் பாக்கிஸ்தானுக்கு அனுப்பி இருந்தால் இது போன்ற கொலை கொள்ளைகள் நமது நாட்டில் நடந்து இருக்காது.
  நல்ல வளர்ச்சியை பெற்றிருக்கும்.
  இந்த “ஜிகாத்” என்ற கொலை கார கும்பலை அவர்களுக்கு சொந்தமான பாகிஸ்தானுக்கு அனுப்பி நமது நாட்டை காப்பற்ற வேண்டும்.
  இந்நேரம் ஒரு முஸ்லீம் தமிழ் நாட்டில் கொல்லப்பட்டு இருந்தால் “வினவு” போன்ற படு பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புக்கள் குதியாய் குதித்திருப்பார்கள்!!!!!
  எல்லாம் பெட்ரோ டாலர் செய்யும் வேலை!!!!
  தமிழர்களே இந்த வெளிநாட்டு மத பயங்கர வாதிகளிடம் உசார்!!!!!!
  வெளி நாட்டு மதங்களை வெளியற்ற சபதமெடுப்போம்!!!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க