முகப்புகட்சிகள்அ.தி.மு.கஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

ஆடிட்டர் ரமேஷ் கொலை : தயாராகும் இந்துமதவெறியர்கள் !

-

மிழகத்தில் கடந்த ஓராண்டாக இந்து இயக்கங்களின் தலைவர்கள் மீது தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்கள், படுகொலைகளைக் கண்டித்து பாஜக திங்கள் கிழமை பந்த் நடத்தியது. கோவை, குமரி மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் பந்த் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் தமிழகத்தில் ஆங்காங்கே கடை அடைப்பு நடந்திருக்கிறது. திண்டுக்கல், நாகப்பட்டினம், ராமநாதபுரம், பூந்தமல்லி, சென்னை, நாகர்கோவில், கோவை போன்ற இடங்களில் மறியல் செய்ய முயன்ற அக்கட்சித் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த பந்த்தை ஆதரிப்பதாக பாமக நிறுவனத் தலைவர் ராமதாசு கூறியிருந்தார். வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சிபிஎம்மின் ஜி. ராமகிருஷ்ணன் என அனைவரும் இப்படுகொலைகளை கண்டித்துள்ளனர். இக்கொலையை விசாரிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வுப் படையை நியமித்திருக்கிறது.

ஆடிட்டர் ரமேஷ்
ஆடிட்டர் ரமேஷ்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பாஜகவின் பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷை மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். ஜூலை 1-ம் தேதி வேலூரில் இந்து முன்னணியின் மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் டாடா சுமோவில் வந்த 6 பேரால் பகல் நேரத்தில் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் 21-ல் நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி மீது நடைப்பயிற்சி மேற்கொள்கையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இப்படி கடந்த ஓராண்டு காலத்தில் இந்துமதவெறி இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்டிருப்பதாக கூறி இந்துத்துவ அமைப்புகள் ‘இந்துக்களிடம்’ இந்துமதவெறி அரசியலைத் தூண்டி வருகின்றன. தேர்தல் அரசியலில் தமிழக கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் இருக்கும் பாஜகவிற்கு இத்தகைய தாக்குதல்கள் மூலம் மக்களிடையே மதவெறியை தூண்டிவிட்டு செல்வாக்கு அடையலாம் என்ற சதிக்கனவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த நேரத்தில், அத்வானி தமிழ்நாடு வந்த போது அவரை கொல்லத் திட்டமிட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிலரது படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இவர்களுக்கும் பங்கிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இத்தகைய கொலைகளில் விசாரணை துவங்குவதற்கு முன்னரே இசுலாமிய தீவிரவாதம் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது ஊடகங்களுக்கும் காவல் துறைக்கும் வாடிக்கையாக ஆகியிருக்கிறது.

கடையடைப்பு நடத்துமாறு மிரட்ட மாட்டோம் என்றெல்லாம் சில பாஜக தலைவர்கள் சடங்கு அறிக்கை வெளியிட்டாலும் பல இடங்களில் கடையடைப்பு நடத்தும்படி கட்டாயப்படுத்தி வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுக்க சுமார் 6,000 பேர் கைதாகியிருக்கின்றனர். ராமதாஸ் கைதைத் தொடர்ந்து பாமக குண்டர்கள் நடத்திய அழிவு செயல்களுக்கு போட்டியாக 100 பேருந்துகள் உடைப்பு, கோவையில் மசூதி மீது பெட்ரோல் குண்டு வீச்சு என பாஜக தங்களது ‘ஜனநாயக’ கடமையை செய்து முடித்திருந்தது. இதன் மூலம் தங்களுக்கு நேசக் கரம் நீட்டியிருக்கும் ராமதாசுக்கு இணையாக பேரம் பேச தகுதி பெற்று விட்டார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

இல.கணேசன், கோபமடைந்துள்ள இந்து இளைஞர்களை கட்டுப்பாடாக வைத்திருப்பதால்தான் இப்படி பந்த் போன்ற அகிம்சை போராட்டங்களை நடத்துகிறோம் எனக் கூறி அரசை மறைமுகமாக மிரட்டுகிறார். இத்தகைய கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதற்காகத்தான் மாமல்லபுரத்தில் வீராவேசம் பேசிய மருத்துவர் ஐயா திருச்சி சிறைக்கு சென்றார். ஆனால், இல.கணேசனின் இந்த அறிக்கைக்கு ஜெயா பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்க கூடாது. பார்ப்பனியத்தின் பங்காளிகள் கூட்டணியில் இல்லை என்றாலும் கொள்கையில் ஒன்றுபடுபவர்கள். எனினும் தாங்கள் எதிர்பார்த்த மாதிரி ஜெயலலிதா செயல்படவில்லை என்று தீவிர இந்துமதவெறி தொண்டர்கள் கருதினாலும், தலைவர்கள் புரட்சித் தலைவிக்கு நன்றி மேல் நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேசத்துக்காக உழைத்தவர்கள் என்றும், தேச விரோத சக்திகள் இவர்களை கொன்று விட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன இந்துமத வெறி அமைப்புகள். இது பாகிஸ்தான் சதி, ஜிகாதி பயங்கரவாதம் என்று இசுலாமியர்களை குறிவைத்து பாஜக தலைவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் சுதேசி விழிப்புணர்வு இயக்கம் மூலமாக சுதேசி பொருட்களை பயன்படுத்தக் கோரி பிரச்சாரம் செய்வாராம். ஆர்.எஸ்.எஸ் பேசும் சுதேசி ஒரு ஏமாற்று என்பதை உலகறிந்த விசயம். மேலும் ஆடிட்டர் ரமேஷ் தணிக்கையாளர் வேலை பார்த்தவர் என்பதால் அதில் பன்னாட்டு கம்பெனிகளுக்கு கணக்குக் காட்டுவதில், வரி கட்டுவதில் திருட்டுத்தனம் பண்ண உதவினாரா என்றெல்லாம் கேட்க கூடாது. ஏனெனில் கோகோ கோலாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் அருண் ஜேட்லி என்பதை நினைவில் கொள்க.

ஆடிட்டர் இறந்தவுடன் சேலம் பாஜகவைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் முருகமணி என்பவர் மாரடைப்பால் இறந்து விட்டார் என்றும் சேர்த்து பிரச்சாரம் செய்கிறது பாஜக. இன்னும் அத்வானி வரப்போகிறார், மோடி அறிக்கை விட்டு அப்டேட்டுகிறார் என்றெல்லாம் உணர்ச்சியை சூடாக வைத்திருக்க பாஜக முயல்கிறது.

வேலூர் இந்து முன்னணியின் முழுநேர ஊழியர் வெள்ளையப்பன் தென் மாவட்டத்தை சேர்ந்த சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர். கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வேலூர் மண்டலத்துக்கான பொறுப்பாளராக இருந்திருக்கிறார். வேலூர் ஜலகண்டேசுவரர் ஆலையத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்தியதை எதிர்த்து இயக்கம் நடத்திக் கொண்டிருந்தாராம். மக்களோடு எளிதில் பழகும் தன்மை உடையவர் என்றும் அப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதரை இசுலாமிய தீவிரவாதிகள் கொலை செய்வதன் மூலம் மற்ற இந்துத் தலைவர்கள் முடக்கிப் போடலாம் என்று நினைக்கிறார்கள் என்றும் இந்துமத அமைப்புகள் பிரச்சாரம் செய்கின்றன. அவரது கனவை நனவாக்குவோம் என்கிறார் ராம.கோபாலன். அதாவது ஜலகண்டேசுவரரது உண்டியலை அரசிடமிருந்து பார்ப்பனர்கள் கைகளுக்கு மாற்றிட போராடுவோம் என்கிறார். வெள்ளையப்பனின் அந்த முயற்சியில் கோபமடைந்த யாரோ இந்த கொலையை செய்து விட்டார்கள் என்பதால் முசுலீம்கள் மீது பழியைப் போடுவதில் என்ன முகாந்திரம் இருக்கிறது? இதற்கிடையில் இந்தக் கொலையை செய்தது தென்மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினராக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். கூலிப்படை என்றாலே அது சாட்சாத் ‘இந்து’ தளபதிகளின் தலைமையில்தான் நடக்கும் என்பது தினசரிகளின் குற்றச் செய்திகளை படிப்போருக்கு புரியும்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலூரில் பாஜகவின் மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த ரெட்டி கொலைசெய்யப்பட்ட போது இதே போன்று ஆரவாரம் செய்து கடையடைப்பு நடத்தியது வேலூர் பாஜக. ஆனால் அந்தக் கொலை தொடர்பாக திட்டம் தீட்டியது வேலூர் மத்திய சிறையில் உள்ள பிரபல ரவுடி வசூர் ராஜா என்பதோடு கைது செய்யப்பட்ட அனைவருமே இந்துக்கள்தான். கொலைக்கான காரணம் பெண் விவகாரம் எனவும் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. இப்போது அந்தக் கொலையையும் சேர்த்து பந்த் நடத்தி பஸ் உடைக்கும் இந்து மத வெறியர்கள் மக்களை அவ்வளவு தூரம் முட்டாள்களாக நினைத்திருக்கிறார்கள். வேலூர் ரெட்டி கொலை விசாரணையை காவல்துறை திசைமாறி விசாரிக்கிறது என்றும் அபாண்டம் பேசுகிறார்கள் இந்துமதவெறியர்கள். எனில் உண்மையான குற்றாவாளிகள் யார் என்று இவர்கள் அடையாளம் காட்டலாமே?

நாகப்பட்டினத்தை சேர்ந்த புகழேந்தி, பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர். கடந்த ஆண்டு ஜூலை 5 அன்று காலை நடைப்பயிற்சியின் போது ஆட்டோவில் வந்த 4 பேரால் வெட்டிக் கொல்லப்பட்டார். அப்போது இதைக் கண்டித்து பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் இவர் அங்குள்ள பிரபல தேவாலயமொன்று அரசு புறம்போக்கை ஆக்கிரமிக்க முயன்ற போது எதிர்த்துப் போராடியதால் தான் இக்கொலை நடந்ததாக கூறினார். ஆனால் அதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் ஆசிரியர் ஒருவரது வீட்டை அபகரித்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்திருந்தார் புகழேந்தி. கட்டப்பஞ்சாயத்து மற்று அடாவடி வேலைகளில் ஈடுபட்டு வந்த அவரை கொன்றதாக கைதானவர் முனீசுவரன் என்பவர், ஒரு இந்து.

அடுத்து கடந்த மார்ச் மாதம் பரமக்குடியில் கொல்லப்பட்ட முன்னாள் பாஜக கவுன்சிலர் முருகன் என்பவரை கொன்ற ராஜபாண்டி மற்றும் முருகன் ஆகியோர் காரணமாக சொன்னது 6 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறுதான்.

கணக்கு எழுதுவது, ரியல் எஸ்டேட் என்று மட்டுமின்றி கந்து வட்டி தொழிலிலும் இந்துத்துவ அரசியல் தலைவர்கள் கொடிகட்டிப் பறக்கிறார்கள். கடந்த ஆண்டு ஏப்ரலில் சென்னை கோயம்பேட்டில் கொலை செய்யப்பட்ட விட்டல் என்ற பாஜகவின் 127-வது வட்டச் செயலாளர் கந்துவட்டிக்கு கடன் கொடுப்பவர். சுந்தரபாண்டியன் என்பவரிடம் கொடுத்த ரூ 2 லட்சம் கடன் திரும்பி வராத காரணத்தால் அவரது வீட்டுக்கு போய் அந்த வீட்டுப் பெண்களை ஆபாசமாக பேசியுள்ளார். அதனால் கோபமடைந்த சுந்தரபாண்டியன், அவரது அண்ணன் முருகன் மற்றும் நண்பர் கங்காதரன் ஆகியோர் சேர்ந்து விட்டலை வெட்டி கொலை செய்திருக்கின்றனர். பெண்களை தாயாகவும், நதியாகவும், பாரதமே தாயாகவும் பேசும் பாஜக ஆதரவாளர்கள் விட்டல் திட்டியது இந்து குடும்ப பெண்களை என்பதை கவனிக்க தவறக் கூடாது.

ரியல் எஸ்டேட், கட்டப் பஞ்சாயத்து என்று உருமாறியிருக்கும் ஓட்டுக் கட்சி பிரமுகர்களுக்கிடையேயான தொழில் போட்டியில் எந்த ஒரு கட்சியிலும் ஒரு ஆண்டில் ஒரு சில நபர்கள் கொல்லப்படுவது சாதாரணமாகிப் போயிருக்கிறது. திமுகவில் தா.கிருஷ்ணன் நடைப்பயிற்சியின் போது மதுரையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார், பொட்டு சுரேஷை கொன்றார்கள். திருச்சி ராமஜெயத்தை கொன்றவர்களை ஓராண்டு முடிந்த பின்னும் இன்னும் பிடிக்க முடியவில்லை. இதற்காக திமுக திராவிட இனத்தை தட்டி எழுப்பி பந்த் நடத்தியதாக தெரியவில்லை.

இது போன்று தங்களது கட்சியில் சிலர் கொல்லப்பட்டதை ஏதோ தேசத்திற்காக தியாகம் செய்தது போல பிரச்சாரம் செய்து மதவெறியை தூண்டுகின்றனர் இந்துமத வெறியர்கள். இறந்தவர்கள் சொந்தப் பகை காரணமாக கொல்லப்பட்டனரா அல்லது தொழில் காரணமாக கொலை நடந்ததா, உண்மையிலேயே கட்சி வேலை காரணமாக கொல்லப்பட்டனரா அல்லது ஏதாவது பாலியல் விவகாரமா என்ற விசாரணைகளை துவங்குவதற்கு முன்னர் இசுலாமியர்களை நோக்கி அவர்களது கைகள் திட்டமிட்டு நீளுகின்றன.

1998-ல் அவர்கள் திட்டமிட்டு நடத்திய கோவை கலவரம்தான் அவர்களுக்கு தமிழ்நாட்டிலும் சில நாடாளுமன்ற சீட்டுகளை வாங்கித் தந்தது. கோவை, நாகர்கோவில் , நீலகிரி பகுதிகளைத் தொடர்ந்து இப்போது வட மாவட்டங்களில் குறிப்பாக தோல் தொழிலில் பணக்கார முசுலீம்கள் கொடிகட்டிப் பறக்கும் வேலூர் பகுதியில் மதவெறிப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் ஓராண்டாக நடந்த தாக்குதல்கள், படுகொலைகள் என அனைத்துமே வேலூர், குன்னூர், திருப்பூர், ராமநாதபுரம், நாகர்கோவில், நாகப்பட்டினம் என குறிப்பிட்ட இடங்களாகவே இருப்பதால் இந்துமத வெறியர்கள் இங்கெல்லாம் அனல் பறக்கும் மதவெறியைக் கிளப்பி விட்டிருக்கிறார்கள். இசுலாமியர்களோடு சகோதரத்துவ உணர்வில் பழகும் ‘இந்துக்கள்’ எல்லாம் பாஜகவின் வருகைக்குப்பின்னர் மதவெறி பிரச்சாரத்திற்கு எளிதில் இரையாகின்றனர்.

பேருந்து
சென்னையில் கல்வீச்சில் சேதமடைந்த மாநகரப் பேருந்து (படம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்)

சிபிஎம், கருணாநிதி உள்ளிட்ட யாருமே இந்தக் கொலையில் ஒட்டுமொத்த முசுலீம்களை நோக்கி வைக்கப்படும் இந்துமதவெறியர்களின் சதியை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக மற்றும் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இசுலாமிய தீவிரவாதிகளை மட்டுமல்ல மனிதநேய மக்கள் கட்சி போன்ற தேர்தல் அரசியலை ஏற்றுக் கொண்டவர்களையே தீவிரவாதிகளாக சித்தரித்துதான் அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளன. இசுலாமியர்களுக்கெதிரான பொதுப்புத்தியை கிளறிவிட்டு அதில் குளிர்காய இந்த அமைப்புகள் தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் மத அடிப்படைவாத சக்திகளுக்கோ, இடதுசாரி தீவிரவாதத்திற்கோ இடமில்லை எனக் கூறியுள்ள ஜெயலலிதா ஆடிட்டர் ரமேஷ் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவு விசாரிக்கும் என அறிவித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு இந்து அமைப்புகளை அச்சுறுத்தவே இந்தப் படுகொலைகள் நடப்பதாக கூறியுள்ளார். இப்படித்தான் கோத்ரா விபத்தை காரணமாக்கி குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது. தமிழகத்திலும் அத்தகைய முயற்சிக்கு இவர்கள் தயாராகிவருகிறார்கள்.

வேலூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ‘’துலுக்க நாய்களே! நீங்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்பதை மறந்து விடாதீர்கள். 2002 குஜராத் மறந்து விட்டதா’ என்றெல்லாம் இந்து முன்னணி போஸ்டர் ஒட்டியுள்ளது. இளவரசனது இறுதி ஊர்வலத்துக்கு தடை, போஸ்டர் ஒட்டினால் போலீசே வந்து கிழிப்பது எல்லாம் நடக்கும். ஆனால் மேற்படி ஜனநாயகபூர்வமான போஸ்டர்களுக்கு போலீசு மரியாதை. பாசிச இந்துமத வெறியர்கள் ஜெயாவின் உதவியுடன் அடுத்த கலவரத்திற்கு தயாராகி வருகின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் பேரங்களுக்காகவும் அரங்கேற்றப்படும் இந்துமதவெறியர்களின் சதித் திட்டங்களில் பாதிக்கப்படுவது அனைத்து மதங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்கள்தான். இசுலாமிய மக்களை தனிமைப்படுத்தும் முயற்சிக்கு தோதாக விசுவரூபம் பிரச்சினை, ரிசானா நபீக் விவகாரம், அமெரிக்க துணைத் தூதரக முற்றுகை போன்றவற்றில் அடிப்படைவாத இசுலாமிய அமைப்புகளை ஆட விட்டு, மக்கள் மனநிலையில் முசுலீம்கள் மீதான வெறுப்பை தோற்றுவிக்க முயற்சித்தவரும் இதே ஜெயலலிதாதான். இப்போது அவர் முசுலீம்களுக்கு எதிராக இந்துத்துவ வெறியர்கள் நடத்தவிருக்கும் கலவரங்களை எதிர்பார்த்து இருக்கிறார்.

அனைத்து மதங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள் இத்தகைய மதவெறி பிரச்சாரங்களை அடையாளம் கண்டு நிராகரித்து ஒருங்கிணைய வேண்டும். தமிழகத்தில் இந்துமதவெறியருக்கு இடமில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.

– வசந்தன்.

 1. சரி குற்றவாள்கள் கண்டுப்டிக்கப்படும் வரை…யாரையும் குற்றம் சோல்லக்கூடாதுதான்…ஆனால் இதுவரை எத்தனையோ இந்து முண்ணனி தலைவர்களும் இந்து அமிப்புகளின் தலைவர்களும் கொல்லப்பட்ட்னரே…அதற்கு சில தீவிரவாதிகளுக்கு தண்ட்லையும் வழங்கப்பட்டுள்ளது…

  திண்டுக்கல் இந்து முண்ணணி ராஜகோபாலன் கொலை வழக்கு இதற்க்குநல்ல எடுத்துக்காட்டு…

  http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/6-get-life-term-for-murder-of-hindu-munnani-activist/article2437992.ece

  • Paiya.. ஏன் அத்தனை வருடங்களுக்கு முன் (1994ல்) நடந்த கொலைக்கு சென்றீர்கள்…? சமீபத்தில் நடந்த கொலைகளையே எடுதாக்கட்டாக கூறலாம் வாருங்கள்.

   //பாரதிய ஜனதா, இந்து முன்னணியின் தேர்தலை ஒட்டிய விஷமப் பிரச்சாரமும், ஆனால் அதிர்ச்சி தரும் உண்மை நிலையும் ஆதரங்களுடன்..!

   பாரதிய ஜனதா, இந்து முன்னணி போன்ற இந்துத்துவா சக்திகள் ஆடிட்டர் ரமேஷ் கொலையை இந்து முஸ்லிம் பிரச்சனையாக்கி மக்களிடையே விஷமப் பிரச்சாரத்தையும், மதக்கலவரத்தை ஏற்படுத்துவும், மக்களிடையே பீதியை உருவாக்கி வருகிற மக்களைவை தேர்தலில் சில சீட்கலாவது பெற திட்டமிடுகிறார்கள்.

   இவர்கள் கூறுவதில் உண்மை உள்ளதா…? இங்குள்ள நோட்டிசைப் போல இன்னும் பல இடங்களிலும் இவர்கள் பரப்பும் இந்த கூற்று உண்மையா..?

   அதிர்ச்சி தரும் உண்மைகள் செய்தி ஊடகங்களின் ஆதாரத்துடன்..

   முஸ்லிம் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர் என்று வேடம் போட்டு பந்த் நடத்தும் ப.ஜ.க. வின் வேஷம் கலைக்கும் ஆதாரங்கள். தேவையான இடங்களில் பகிருங்கள் இந்தியர்களே, தமிழர்களே..!.

   1. 4-7-2012 இல் நாகையில் பா.ஜ.க. மாநிலச் செயற்குழு உறுப்பினர் புகழேந்தி என்பவரை கொன்ற வழக்கில் தேடப்பட்ட “முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் சரண்”.

   http://www.dinakaran.com/News_Detail.asp?nid=18393

   2. 23-10-2012 இல் வேலூரில் பா.ஜ.க. மருத்துவ அணியின் மாநிலச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி என்பவரின் கொலையில் கைதானவர்களின் விவரம். கைதான ஆறு பேரும் இந்துக்கள்.

   http://www.dinakaran.com/News_detail.asp?Nid=31815

   3. 19-3-2013 அன்று பரமக்குடி நகராட்சி பா.ஜ.க. முன்னாள் கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் கைதானவர்கள் விவரம். இதில் ஒரு இந்துவும், மூன்று முஸ்லிம்களும் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் காரணம் இந்து முஸ்லிம் பிரச்னை அல்ல. சொத்து தகராறு.

   http://www.thinaboomi.com/2013/04/06/20905.html

   4. 8-7-2013 அன்று ராமேஸ்வரத்தில் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் மாந்தோப்பு ராமச்சந்திரன், முருங்கவாடி சண்முகநாதன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளனர்.

   http://www.dailythanthi.com/node/361658

   5. 1-7-2013 அன்று வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பன் என்பவர் கொலையுண்ட வழக்கில் போலீசார் இன்னும் விசாரணை செய்து வருகின்றனர்.

   ஆக, மேலே சொல்லப் பட்ட வழக்குகளில் ஒருவர் கூட இந்து முஸ்லிம் மதப் பிரச்சனையால் கொலை செய்யப்படவில்லை என்பது மிகத் தெளிவு.

   இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும், உண்மைகள் இருந்தும், அயோக்கியத்தனமாக மக்களை பிரித்தாளும் கொள்கையை விதைத்து தமிழகத்தில் எப்படியாவது 1998ன் சூழலை திரும்ப கொண்டு வந்து பிஜேபிக்கு சில சீட்களாவது வாங்க இவர்கள் நடத்தும் வெறியாட்டத்தை நல்லவர்களே, நியாயவான்களே கண்டு கொள்ளுங்கள். இவர்களை அடையாளம் காணுங்கள்.
   மக்களை சாதி, மதத்தால் பிரித்து கலவரத்தை தூண்ட நினைக்கும் இத்தகைய மனிதகுல விரோதிகளை இனம் கண்டு தனிமைப் படுத்துங்கள்.
   //

 2. Abdul Munaf என்பவர் மின்னஞ்சலில் அனுப்பிய செய்தி

  காரைக்காலில் முஸ்லிம் அமைப்பினர் கடை மீது தாக்குதல் நடத்திய பாஜக மாநில தலைவர் அருள்முருகனை கைது செய்யக் கோரியும், கடைமிது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம் களை தரக்குறைவாக பேசிய
  காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300 க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஜமாத்தார்கள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். இதனால் காரைக்காலில் பரபரப்பு காணப்பட்டது.

  கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலத்தில் பாஜக மாநில செயலர் வெட்டி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் தமிழகத்தில் அண்மை காலமாக தொடர்ந்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உடனடி நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தியும் பாஜக சார்பில் இன்று மாநிலம் தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

  புதுச்சேரி மாநிலத்திலும் பாஜக சார்பில் பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் காரைக்காலில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன.அரசு மற்றும் தனியார் பேருந்துகள்,ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின. காரைக்கால் மாதா கோவில் வீதியில் திறக்கப் பட்டு இருந்த முஸ்லிம் அமைப்பை சேர்ந்த நிர்வாகி ஒருவரின் கடையை மூடுமாறு பாஜகவை சேர்ந்தவர்கள் கூறினார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கடையின் முன் பக்க கண்ணாடி சேதப் படுத்த பட்டது..இதில் கடையில் வியாபாரம் செய்த ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கடையின் கண்ணாடியை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடை உரிமையாளர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் அப்போது காவல்துறையினருக்கும் முஸ்லிம் அமைப்பினர்ருக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் போது காவல்துறை அத்துமீறி முஸ்லிம் அமைப்பினர்ரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

  இதனை அடுத்து முஸ்லிம் அமைப்பினர் பேரணியாக சென்று காவல்துறை மீதும், கடையை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் பொருப்பில் உள்ள முத்தம்மாவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

  • ஆண்டவனே … இந்தியாவில் இந்து தீவிர வாதம் கொறயணும்.. முசுலிம் ஆட்சி மலரணும்.. அப்ப இருக்கிடி வினவு உனக்கு… ஒருத்தன விடாம……..அவ்வளவுதான்.. அப்ப உம்மால ப்ளாக் இல்லை.. ப்ளாக்போர்ட்லகூட எழுத முடியாது..

 3. என்ன இந்து மதவெறியர்கள்….இது அநாகரீகமான பேச்சாகத்த்ரியவில்லையா…

  வினவில் ஒருநாளாவது முஸ்லீம் மதவெறியர்கள் அல்லது கிரித்துவ மதவெறியர்கள் என கட்டுரை வ்ந்ததுண்டா???

  சொல்லப்போனால் இந்துவிற்க்கு மதவெறியே கிடையாது..இந்தப்போராட்டங்கள் இன்றே அடங்கிவிட்டன..

  • பாபர் மசூதி குஜராத் படுகொலை இதுவெல்லாம் என்னவென்று சொல்வது

   • இருக்கிற இடமெல்லாம் வெடி வைக்குறீங்களே அதை என்ன சொல்லுவது?

    • HHaa GOOD JOKE Still you are in dream and false propaganda. FOR all bombing arr carried out By RSS members and as turtu has come out Even the main RSS man SUNIL Joshi was killed by Rss itself. Dont make reel here

     • 1984-ல் மதுரையில் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ராம.கோபாலன் முதற்கொண்டு இப்போது சேலத்தில் கொல்லப்பட்டுள்ள ஆடிட்டர் ரமேஷ் வரை, கொலைகாரர்களின் பிரதானக் குறிக்கோள் இந்து இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்துவதே.

      அடுத்து, இந்து இயக்கங்கள் மக்களிடையே பெற்றுவரும் ஆதரவு, தேசவிரோதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்களிடையே பீதியை உருவாக்குவதன் மூலமாக இந்து இயக்கங்களின் ஆதரவுத் தளத்தை அழிப்பதும் அவர்களது நோக்கம்.

      • Paiya முஸ்லிம்கள் செய்யாத குற்றங்களுக்கே கைது செய்யப்படுகிறார்கள் .செய்யாத குற்றங்களுக்கு தண்டிக்கப் பட்டுள்ளார்கள் அவ்வாறிருக்க அரவிந்த் எரெட்டி இன்னும் சிலர் படு கொலை சம்பநதமாக டிஜிபியின் அறிக்கையை பார்த்த பிறகு மனம் போன போக்கில் பேசிக் கொள்ளுங்கள் மேலும் தங்களை பிரபல படுத்த கொலை மிரட்டல் கடிதங்கள் வேறு .இந்த கடிதங்கள் பாஜகவின் தயாரிப்பே .தமிழகத்தில் அனாமதேய கட்சியான பாஜக .கட்சி தலைவர்களை கொன்று அக்கட்சியை மக்கள் மத்தியில் அனுதாப ஆதரவை உருவாகக் முஸ்லிம்கள் பைத்தியக்காரர்கள் அல்ல .கட்சியை வளர்க்க வேறு நல்ல காரியங்கள் உள்ளன .சமிபத்திய செய்தி நாகை பா.ஜ.க பிரமுகர் புகழேந்தி கொலை வழக்கில், சேலம் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார். புகழேந்தி கடந்த 4ம் தேதி நாகையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த, முனீஸ்வரன் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சரணடைந்த முனீஸ்வரனை 15 நாள் சிறையில் அடைக்குமாறு, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மேகலா உத்தரவிட்டுள்ளார். – செய்தி

  • முஸ்லிம் பெண்கள் கருவில் உங்கள் விந்துவை செலுத்தி ஹிந்து கருவை வளர செய்யுங்கள் என்று காவி தலைவர்கள் மேடைகளில் பேசுவது மிகவும் இழிவான மதவெறி அல்லவா ? பஜக ஆட்சிக்கு வந்தால் அதே இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவோம் என்று கூறுவது மதவெறி அல்லலலவா ? ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் வாக்குறிமையை பறிப்போதும் என்று தொக்காடியா பேசுவது மத வெறியலலவா ? வீடு வாடகைக்கு கொடுக்காதே முஸ்லிம்களுக்கு என்று கூறுவது மதவெறியல்லவா ?

  • மதம் பிடித்தவர்கள் என்று காவி தினமணி தலையங்கம் எழுதியதே அது மதவெறி செயல் அல்லவா?

   குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம்களை தலைமை தாங்கி நடத்திய கொலைக்காரர் அவர்களை காரில் அடிப்பட்ட நாய் குட்டி என்று கூறியது மதவெறி அல்லவா ?

  • @ Paiya

   பையா சொல்வதை கண்ணபின்னா என வரவேற்கிறேன்…

   உண்மையில் மதவெறி என்பது… எல்லா மதத்துக்கும் பொதுவானது.

   இதில் ஈடுபடுவது அடிப்படை வாதிகள் தாம். பொது மக்களில் பெரும்பான்மையோருக்கும், அதே மததை சேர்ந்தவர்கும் இது இடைஞ்சலே…

  • பையா, இந்தியன் போன்றவர்களுக்கு இஸ்லாமிய மதவெறியைக் கண்டித்து எத்தனை கட்டுரைகள் வந்தாலும் ” வினவில் ஒருநாளாவது முஸ்லீம் மதவெறியர்கள் அல்லது கிரித்துவ மதவெறியர்கள் என கட்டுரை வந்ததுண்டா??? ” இப்படி தான் கூறுவார்கள்.

   விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?
   https://www.vinavu.com/2013/01/30/viswaroopam-jaya-islamic-fundamentalism/
   என்ற கட்டுரையில் ” யோவ் என்னயா முஸ்லீம் தீவிரவாதி அது இதுன்னு திடீர்னு எழுதிப்புட்ட… ” https://www.vinavu.com/2013/01/30/viswaroopam-jaya-islamic-fundamentalism/#comment-77848 என்று பின்னூட்டமிட்டுள்ளார் பையா.

   இஸ்லாமிய மதவெறி பற்றிய கட்டுரையில் ” யோவ் என்னயா முஸ்லீம் தீவிரவாதி அது இதுன்னு திடீர்னு எழுதிப்புட்ட…” என்று பின்னூட்டமிட்டவர் திரும்பவும் ” வினவில் ஒருநாளாவது முஸ்லீம் மதவெறியர்கள் அல்லது கிரித்துவ மதவெறியர்கள் என கட்டுரை வ்ந்ததுண்டா??? ” என்று கேட்கிறார் என்றார் என்றால் பையா எவ்வளவு நேர்மையாக இருக்கிறார் என்று பாருங்கள்…. இதுதான் இந்துமதவெறி..

   // சொல்லப்போனால் இந்துவிற்க்கு மதவெறியே கிடையாது..இந்தப்போராட்டங்கள் இன்றே அடங்கிவிட்டன..//

   அனைத்து இந்துக்களும் மதவெறியர்களும் அல்ல. அப்பாவி உழைக்கும் மக்கள் இந்துமதவெறிக்கு இறையாகிறார்கள் என்று தான் கூறுகிறோம். ஆனால் அந்த அப்பாவி இந்துக்களின் பட்டியலில் பையா வருகிறாரா என்று தெரியவில்லை.

 4. யாருக்கெல்லாம் இதயம் இல்லையோ
  யாருக்கெல்லாம் மூளை இல்லையோ
  அவனே இந்துவாக இருக்க முடியும்
  என்று அம்பேத்கரும் பெரியாரும்
  அறைந்து கூறினர்.

  உனது பிறப்பையே
  வேசிமகன் என்று
  இழிவுபடுத்தும்… இந்த மதம்
  இந்த இந்துமதம்
  உன் சொந்த மதமா?
  என பெரியாரும் அம்பேத்கரும்
  சுரனை கொடுத்த இந்த மண்ணை
  பார்ப்பன மலவண்டுகள்
  அரிக்கப் பார்க்குது
  போராடும் தலைமுறையே
  எச்சரிக்கை!

  • சரி ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம் சம்பு சார்…உங்களை யாரவது அவ்வாறு அழைத்தால் நீங்கள் அதுவாகவே ஆகிவிடுவீர்களா என்ன?

   • அதுவாக ஆகிவிடாவிட்டால் அந்த வர்னாசிரம கொள்கை சரியா ?

    • வர்னாசிரம கொள்கை தவறுதான் அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்…

     னிங்கள் இருக்கின்ற இடத்தில் விசுவாசமாக் இருங்கள்…

     • இருக்கிற இடம் ஒரு புறம் இருக்கட்டும் பையா.. இந்து மதம் எல்லாரும் முதலில் இருத இடம் தானே..

      இருந்த இடம் விட்டு போக வேண்டி வந்தது வருணாசிரமம் , தீண்டாமை, அடக்குமுறைதானே காரனம்…

      இதை அனுபவித்தவர்கள் ஏன் இதை பற்றி சொல்ல கூடாது…

      • இந்து என்ற சொல் ஒரு பூளோக சுட்டி. சிந்து நதிக்கு அப்பால் இருந்தவர் என்ற அர்த்தத்தில். அவ்வளவே. பின்னர் பிரிடிஷ்காரன் காலத்தில் அதை அரசியல் சமய குறியீடாக மாற்றிவிட்டனர். இதில் பிரிடிஷ்கரனுக்கும் பங்கு உண்டு. ஏனென்றால் பிரித்து ஆள்வதற்கு தெளிவான பிரிவினை தேவை.
       இந்து சமயம் என்று சொல்வதிலேய ஒரு சில குழுவினர் [வீர சைவர்களை போல்] நாங்கள் இந்து இல்லை என்று கூறுகிறார்கள். இதைபோல் ஆறு சமய குழுக்களும் இன்ன பிற வழிபாட்டு/சடங்கு முறை குழுக்களும் தங்களை இந்து இல்லை என்று கூறிக்கொள்ள ஆசைதான். ஏனென்றால் இவர்கள் சாதியாகவும் திரள முடியும். ஆனால் பெரிதாக ஒன்றும் பயன் இல்லை என்பதால் வாளாவிருந்து விட்டனர்.
       ஒரு கடவுள் வழிபாடு, ஓர்மை தத்துவம் என்று நகர முயன்ற இந்திய சமயங்கள் இறக்குமதி சமயங்களின் தாக்குதலை சமாளிக்க திரும்பவும் பலகடவுள் வழிபாடு, பிற கடவுள் வழிபாடு, பிற சமயம் பொறுத்தல் என்று தங்களை தகவமைத்து கொண்டு வாழ்கின்றனர்.
       எனவே இந்துவாக இருந்து மற்ற சமயம் மாறினார்கள் என்று கூறுவது பொருந்தாது. இல்லாத ஒன்றில் இருந்து எப்படி மாறுவது?
       சமணம்,பௌத்தம் வைதீக சமயங்களுக்கு முந்தியவை. அவற்றின் அழிவில் இருந்தே வைதிக சமயங்கள் நிருவனமாயின.அதிகார போட்டியில், இயற்கை வளங்களை கவர்வதில் உண்டான போட்டியில் சாதிகள் இறுகி அதிகாரம் மையப்படும் போக்கு உருவானது. வெளியில் இருந்து வரும் படையெடுப்புகளின் கொடூரம் அஞ்சி, மக்கள் இந்த சாதிக்கொடுமைகளை சகித்துக்கொண்டு வாழ்ந்தனர்.
       வெளி பகை இல்லா தருணம் இந்த சாதி அடக்குமுறைகளை உடைக்க சித்தர் மரபும், ராமானுஜரும் முயன்று பார்த்தார்கள். மீண்டும் சாதி இறுகியதே ஒழிய தளரவில்லை. பிரிடிஷ்காரன் காலத்தில் ஒரு பாதுகாப்பு உணர்வு மக்களிடையே வந்தபின்புதான் சாதி தளர ஆரம்பித்தது. அதையும் திராவிட அறிவுகொழுந்துகள் கெடுத்து குட்டிசுவராக்கி இன்று இந்து அல்லாதவர்கள்,பஞ்சமர்கள்[தலித்துகள் நிலை இரண்டும் கெட்டான் நிலை]ஒரு புறமும் சாதி இந்துக்கள் மறுபுறமும் நின்று தாண்டவமாடும் நிலைமைக்கு கொண்டுவந்து விட்டனர். இதில் RSS, BJP மீது பலி சொல்வது அயோக்கியத்தனம். பகுத்தறிவு, குரங்கு கை கத்தியாக போனதால் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்த இந்த திராவிட ஆண்டிகள் குப்புற விழுந்தாலும் அடுத்தவன் மீசையைத்தான் பார்ப்பார்கள்.
       மதமாற்றம் என்ற நிகழ்வு பற்றி வெளியில் பேசாமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

       • இந்துமதவெறியர்களைப் பற்றியும் மோடியை பற்றியும் பேசினால் அயோக்கியத்தனம் என்று பரலோகபாண்டியன் கூறிவிட்டதால் இனிமேல் யாரும் அதைப் பற்றி பேசாதீர்கள்.

        சரி பரலோகப்பாண்டியன் மேலே சொல்லியிருக்கீங்களே அதை எல்லாம் எதற்காக சொல்றீங்க, அதெல்லாம் சமீபத்தில் நீங்க படிச்சதா ?

     • paiya
      ஒரு அடிப்படை அளவு கோலை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்
      முதலாவதாக
      80 சதவிகிதம் இந்தியாவில் அனைத்து மதத்தவரும் கலந்து நட்புடன் தான் வாழ்கின்றனர்
      பிரிவினையை உருவாக்கி அதில் குளிர் காய நினைப்பது குறிப்பாக தமிழகத்தில் சமீப காலமாக காவி சிந்தனை படைத்த தீவிரவாதிகள் தான்

      ஹிந்துக்கள் தான் இந்நாட்டில் பெரும்பான்மை மக்கள்
      பெரும்பான்மை மக்களை சிறுபான்மை மக்கள் பயமுறுத்தமுடியாது என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை

      சமீபத்தில் தமிழகத்தில் நடந்த கொலைகளில் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதை நன்பர் ibn mohideen சரியாக பட்டியலிட்டுள்ளதை பாருங்கள்.

      மோடி சமீபத்தில் முஸ்லிம்களை நாய்களுக்கு ஒப்பிடடு பேசியுள்ளது எந்த வகையை சார்ந்தது. ஒரு பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவரே இப்படி ஒரு வன்முறை பேசினால் என்ன வென்று சொல்வது

     • வந்தேறிகள் ஆரிய பார்ப்பனர்கள் .

      இந்த நாட்டை குட்டிச்சுவராக்கியவர்கள். அவர்கள் வெளியேறவேண்டியவர்கள்.

  • அப்படியெல்லாம் எவனும் உன் பிறப்பை இழிவு செய்ய இயலாது. பெரியார் சொன்னார் சிறியார் சொன்னார் என்றெல்லாம் கை காட்டாமல் கொஞ்சம் சொந்த மூளையையும் பயன்படுத்தவும். உம்மால் முடியக்கூடிய சிறிய விஷயம்தான்.

   • பெரியார் தமிழைக் கூட காட்டுமிராண்டி பாஷை என்றார் அதுக்காக அப்படியே ஆகிவிடுமா என்ன.?

    • சாதி ரீதியாக மக்களை பிரித்து வைக்கும் இந்து மதத்தை தூக்கி பிடிக்கும் நீங்க தமிழ பத்தி கவலை படுரீங்க

 5. நீங்கள் இப்படி என்னதான் உண்மையை தெள்ளத்தெளிவாக விளக்கினாலும் ஒரு இலக்கு நோக்கியே இந்த சக்திகளின் பார்வையும் கொந்தளிப்பும் இருக்கும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது பற்றியோ பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது பற்றியோ அக்கறை கொள்ளுமளவுக்கு இவர்களிடம் தெளிவு கிடையாது. அவர்களை பொறுத்த வரை, அவர்கள் அறிந்த அரிச்சுவடி சிறுபான்மை சமூகங்களின் மீது வெறுப்பை உமிழ்வது மட்டும் தான். குற்றவாளி பிடிபட வேண்டும், அவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என நடுநிலையாக சிந்திப்பது கூட அவர்கள் பார்வையில் தீண்ட தகாதது தான்.வெறும் 3500 பேர்களை வழி நடத்தி, ஒரு ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக வழியில் நடத்த தெரியாமல், வன்முறையில் வெறியாட்டம் போட்ட இவர்கள் பின்னால், நாடு போனால், நாடு எப்படி ஜனநாயக வழியில் செல்லும்.

 6. நன்றி, உங்கள் கட்டுரை முழு உண்மையையும் உலகத்திற்கு உணர்த்துகிறது………..வாழ்த்துக்கள்

 7. ஓடு படுகொலை நடைபெற்று இருக்கு அதற்க்கு கண்டனம் தெரிவிப்பது பெயரய தவறா எப்பட ராமதாஸ் செய்து வரும் என்று தூங்காம கூட கடவுளை பிரார்த்தனை பண்ணுவிங்க போல நல்ல போலி மதசாற்படர்வர்கள்

 8. வினவு …நீ என்ன சோறு தான் திங்குரியா …இல்ல P—- திங்குரியா ????? அந்த ______ ELAVARASAN ku சப்போர்ட் பண்ணுன …பட் aditor ramesh கொலைக்கு கீழ்த்தரமான வாசகம் எழுதிருக்க … இந்த பொழப்புக்கு நீ போஒய் தூக்கு மாட்டி சாகலாம்…

  • அன்னோனு….

   விசாரணைக்கு முந்தியே இது இன்னார் செய்த குற்றம் தான்னு முடிவு பண்ணிட்டு விசாரிக்கிறத பல காலாமா பாக்குறோம், ராஜிவ் கொலையில் இது தான் நடந்தது, இபோது இதற்கு தான் அடி போட படுது…

   சாதி வெறி வேண்டாம்னு சொன்னா அது பீ தீன்னு சொல்லுவதா ? என்ன கீழ் தரமான வாசகம் இருக்கு ? யார் தூக்கு போட்டு சாக வேண்டும் ?

   • இங்க மட்டும் குற்றவாளி விசாரணைக்கு முன்னே சொல்றாங்களா.

  • விசாரனைக்கு முன்பே காவிச் சிந்தனை தினமணி மதம் பிடித்தவர்கள் என்று தலையங்கம் எழுதியதே தினமணி ஆசிரியர் எதை திங்கவேண்டும் ?

 9. உனக்கு எதுக்கு இந்த மானம் கேட்ட பொழப்பு ???? எழுதினா ஒழுங்கா எழுது…இல்லேன்னா மூடிகிட்டு வேலைய பாரு …

 10. //தேர்தல் அரசியலில் தமிழக கூட்டணிகளில் இடம்பெற வழியில்லாமல் இருக்கும் பாஜகவிற்கு இத்தகைய தாக்குதல்கள் மூலம் மக்களிடையே மதவெறியை தூண்டிவிட்டு செல்வாக்கு அடையலாம்//

  இது தான் இந்த காவிகளின் எண்ணம்.

  என்னதான் உடம்புல எண்ணெய்ய தடவி புரண்டாலும் உங்களுக்கு(காவிக்கு) ஒரு மண்ணும் ஒட்டாது.

 11. வைகோ, கருணாநிதி, ஜெயலலிதா, சிபிஎம்மின் ஜி. ராமகிருஷ்ணன் என அனைவரும் இப்படுகொலைகளை கண்டித்துள்ளனர்.////சீமானு,கொங்கு முன்னேற்ற கழகம் விட்டுடீங்களே?

  • எதிரிகளின் கொலை மற்றும் சாவை ரசிக்கும் மனோபாவம்தான் இப்படி உங்களை சிந்திக்க வைக்கிறது………….. உங்களுக்கும்(வினவு உள்பட……), இளவரன் சாவுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடிய சாதி வெறியர்களுக்கும் என்ன வித்தியாசம்(………… .

   • நண்பரே நீங்க முஸ்லீம கொலை பண்றப்ப இத யோசிச்சிறுக்கீங்கலா? நாட்டை மக்களை பிரித்து கலவரத்த தூண்டறதுக்கு தான நீங்களே ரமேஷ்க்காக கண்ணீர் விடுறீங்க. எங்கயாச்சும் மத கலவரம் பண்றதுக்கு சாவ உபயோகிக்கிற நீங்க உண்மையா வருத்த படுங்க எங்களையும் திட்டுங்க

  • ஏன் இந்தப்படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பது அவ்வளவு பெரிய தவறா??

   • கண்டனம் தெரிவிக்கலாம் அப்பதான் எங்களுக்கு யார் யார்லாம் இந்துத்துவ பயங்கரவாதத்துக்கு அடிமைனு தெரியும்

    • அப்ப வருசம் தவறாம இந்தியாவில் குண்டு வெடிக்கும் போதும், இந்துத்துவ தலைவவர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்படும் போதும்….வாயையும் மூடிக்கிட்டு இருக்கும் உம்மை என்ன சொல்லுவது??

     • வருச வருச அப்பாவி முஸ்லீம்கள கைது செஞ்சு ஜெயில்ல போட்றாங்களா அதுக்கு நீங்க என்ன பேசிறிக்கீங்க? குஜராத் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிச்சீங்களா?

         • கசாப்பும் மோடியும் ஒண்ணா தான் எங்களுக்கு தெரியுறது, என்ன சட்ட பூர்வமா, சட்ட துணையோட, அதிகார வர்க்கமா இருந்து மோடி கொலை பண்றார் அவ்வளவு தான்

  • எடுத்த எடுப்பிலேயே மதம் பிடித்தவர்கள் என்று தலையங்கம் தீட்டி காவிப் பத்திரிக்கை தினமணியை கண்டிக்கவேண்டும் அனைவரும்.

   • அப்ப இல்லாத இந்துத்தீவிரவாத்தினைப் பற்றி வெனவு பேசும் போது மட்டும் இனிக்குது….

    இருக்கிற இஸ்லாம் தீவிரவாத்தினைப் பற்றிப்பேசினால் கசக்கிறதா?

    • அப்ப இல்லாத இந்துத்தீவிரவாத்தினைப்///அப்ப ஆர்.எஸ்.எஸ் யாரு

      • தேசியவாதி, தீவிரவாதி – உங்களுக்கு ஆரம்பத்திலிருந்து வகுப்பெடுக்க வேண்டும் போல் இருக்கிறது. காந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் காரன் உமக்கு தேசியவாதி!!! என்றால் — ம் என்னத்த சொல்றது.

    • இல்லாத இந்துத்தீவிரவாத்தினைப் பற்றி //

     மலேகான் குன்டு வெடிப்பில் சிக்கிய பெண் சாமியார்கள் எத்த மதத்தை சார்ந்தவர்களாம் கன்னா?

     பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கிய அட்வானி சி யாராம்

     ஆயிரம் கொலைகளை செய்த மோதி யாராம் எந்த மதத்தை சார்ந்தவராம்

 12. இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் “ தருமபுரி பகுதிகளில் நக்சல்பாரி நடவடிக்கைகள் குறைந்ததால்தான் , பாமக வின் சாதி அரசியல் பெருக காரணம்“ என்று நோட்டீசு கொடுத்து இழவு வீட்டில் அரசியல் ஆதாயம் அடைய முயன்ற உங்களுக்கும் ,,,,,,,,, இந்து மத தலைவர்கள் கொல்லப்படுவதை வைத்து பிஜேபி அரசியல் ஆதாயம் தேடுவதற்கும் பெரியவித்தியாசமில்லை…………. அரசியல் எதிரிகள் வீழ்ந்தால் மகிழும் அற்ப அரசியல்வாதியின் மனநிலைதான் உங்களுக்கும் உளளது………………… இளவரசன் தற்கொலை செய்துகொண்டான் என்று காவல்துறை கூறியபோது அதை கட்டுக்கதை என்று கூறிய வினவு …………. இன்று ஒவ்வொரு ஹிந்து மத தலைவர்கள் கொலைக்கும் காவல்துறை கூறும் காரணத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனநிலை என்பது உண்மையை தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றி வழங்கும் சன் டிவிகாரனுக்கு ஒப்ப உளளது……………….. தனி மனிதனின் ஒழுக்க விடயத்தை ஒவ்வொரு கொலைக்கும்(அது உண்மையா இல்லையா என்பது வேறு விஷயம்.) சுட்டிக்காட்டுவதன் மூலம் இப்படுகொலைகளை வினவு நியாயப்படுத்தவே செய்கிறது………………..

  • // இளவரசன் தற்கொலை செய்துகொண்டான் என்று காவல்துறை கூறியபோது அதை கட்டுக்கதை என்று கூறிய வினவு …// அய்யா பொய் சாமி மேற்கண்ட வரிகளை வினவு எங்கே கூறியிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டவும். பாமக சாதிவெறியை ஆதரிப்பதாக இருந்தால் அதை நேரடியாக செய்து விட்டு அரிப்பை தீர்த்துக் கொள்ளலாமே? வினவு மேல் இப்படி அவதூறு சொல்வதற்கு என்ன காரணம்?

   • ஒருவேளை ராமதாஸ் அய்யா பாஜக பந்துக்கு தமது ஆதரவை வழங்கியதைக் கண்டு தொண்டர்க்கும் இப்படி ஆர்.எஸ்.எஸ்க்கு ஆதரவாக களம் இறங்கியிருக்கிறார்கள் போலும். என்ன இருந்தாலும் ஷத்திரியர்கள் அல்லவா!

    • சர்க்கஸ் அரங்கிற்குப் போனால் அங்கு சில காட்சிகள் வரும். பளு தூக்குவதில் வல்லவரான நல்ல உடல்வாகு கொண்ட ஒருவர் வந்து பல கிலோ எடைகளை அவர் தூக்கும் கம்பியின் இருபுறமும் வைத்து அவற்றை முயற்சி எடுத்துத் தூக்கிக் காட்டுவார். அவர் அதனைச் செய்வதன் மூலம் உருவாக்கிய தாக்கம் பார்ப்பவரின் மனதிலிருந்து அகல்வதற்கு முன்பாகவே சர்க்கஸ் நிகழ்ச்சியில் வரும் கோமாளி ஒரு சிறிய கம்பினை எடுத்துவந்து அதன் இருபுறமும் இரு தொப்பிகளை வைத்து அதனை மிகவும் சிரமப்பட்டு தூக்குவது போல் தூக்கிக் காட்டி அனைவரையும் சிரிக்க வைப்பான்.வினவு பத்திரிக்கையையும் கோமாளித் தனமானதாக ஆக்கியுள்ளது.

    • அன்புடையீர், நடந்த கொலைக்கு தயவு செய்து சாதி வர்ணம் பூச முயலாதீர்கள். ஒரு உயிரைப் பறிக்க எவர்க்கும் உரிமை யில்லை. இதில் இஸ்லாமியர்,இந்து,கிறித்தவர் என்ற பாகுபாடு வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையாக வாழ இறைவனை வேண்டுங்கள். ஏன்னை ப்போன்ற எத்தனையோ பார்ப்பனர் உங்கள் வாசகர்களாக உள்ளோம். முன்னோர்கள் செய்த தவறுக்காக மிகவும் வருந்துகிறோம். அன்று ஆரம்பித்த தீண்டாமை தீயை அணைக்க மிகவும் முயன்று வருகிறோம். தயவு செய்து பார்ப்பன சமூகத்தை ஒட்டு மொத்தமாக மனது புண்படும் படி விமர்சனம் என்று உங்கள் அனைவரையும் பணிகிறேன்.

   • ஒருமையில் கீழ்த்தரமாக பேசுவதாலும், சாதிமுத்திரை குத்துவதாலும் உங்களின் ஒருசார்பு நிலையை நியாயபடுத்திவிடமுடியாது ………… , புரட்சியாளர்கள் என்ற பெயரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுவதால் நீங்கள் நினைக்கும் பொதுஉடமை சமூகத்தை அடையலாம் என கருதுகிறீர்கள் போலும்…………… நேர்மையானவர்கள் என்றால்…………. வன்னியர்களுக்கும், தலித் மக்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் பாடுபடுகிறோம் என்று கூறும் நீங்கள் இளவரசன் சாவுக்கு நியாயம் கேட்டதுபோல் , நாகராஜ் சாவுக்கும் நேர்மையாக நியாயம் கேட்டு போராடியிருக்கவேண்டும்………. இளவரசன் இறந்த வீட்டில் புரட்சி செய்த நீங்கள்………… நாகராஜ் இறந்தபோது அவர் வீட்டிலும் புரட்சி செய்துருக்க வேண்டும்………….. உங்களைப்பொருத்தவரை பொதுஉடமை என்பது நிபந்தனைக்கு உட்பட்டதா …………?
    இதேநிலைதான், ஹிந்து தலைவர்கள் கொலையிலும் வினவின் நிலைப்பாடு ……… ஒவ்வொருவரின் கொலைக்கும், கேலியாகவும் கிண்டலாகவும் விளக்கம் கொடுக்கும் வினவு, இந்த படுகொலைகளை கண்டு மகிழும் மனநிலையை காட்டுகிறது……. தனிமனித ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவதன் மூலம் இந்த படுகொலைகளை மறைமுகமாக நீங்கள் நியாயப்படுத்தவே செய்கிறீர்கள்……. இந்த மனநிலை கருணாநிதி எதிரிகளை சந்திக்க கடைசியாக பயன்படுத்தும் ஆயுதமான, தனிமனித ஒழுக்கத்தை சந்திக்கு இழுக்கும் உத்தியை ஒப்ப உளளது………….

    • தருமபுரியில் இளவரசனைக் கொன்று வீசியது பமக வின் வன்னிய சாதி வெறி. திவ்யா வின் தந்தை நாகராஜைக் காவுகொண்டது சாதிவெறியர்களின் அவச்சொல்லும், எள்ளலும், ஏகடியமுமே! இதன் முழுப்பொறுப்பும் சாதிவெறியன் இராமதாசையேச் சாரும்! உழைக்கும் மக்கள் இந்த வன்னிய சாதி வெறிக்கு ஆட்பட்டது என்பது பொதுவுடமைச் சிந்தனை அவ்வுழைக்கும் மக்கள் மனங்களில் குறைந்ததே! இதைக் குறிப்பிடுவதில் என்ன தன்னலம் வினவுக்கு உள்ளது? மனிதருக்குள்ளே ஏற்றத்தாழ்வு என்பது மனிதத்தன்மையே அல்ல! அது விலங்கு (மிருக) உணர்ச்சி&வெறி. அந்த வெறி மனிதனுக்கு வந்து சகமனிதனைக் கொல்கிறாயென்றால் இவனுக்கு மனிதத்தன்மை போய்விட்டது என்று பொருள். உழைக்கும் மக்களுக்கு மனிதத் தன்மை வேண்டும், அந்த உன்னத நிலையைத் தரும் பொதுவுடமைச் சிந்தனைக்குள் உழைக்கும் மக்கள் வரவேண்டும் என்று சொல்வதில் என்ன தன்(சுய)நலம் உள்ளது நண்பர்களே?
     நண்பர்களே.. தணிக்கையாளர் இரமேசின் கொலை என்பது இந்து மதவெறியர்களின் கூற்றுப்படிப் பார்த்தால் ஒரு எதிர் வினைதானே! குசராத்திலும், அயோத்தியிலும் செய்ததின் எதிர் வினை என்பதுதானே இன்னொரு கோணத்தில்? ஆனால், இந்தக் கொலையால் ஆதாயம் அடைவது என்னவோ இந்து மத வெறியர்கள் மட்டுமே! இந்து மதவெறியர்கள் தங்கள் படுகொலைக் கணக்கை காந்தியிலிருந்து துவக்கி குமரி, கோவை என்று விரிவு படுத்தி, அதன்மூலம் ஒருசில சட்டமன்ற நாடாளுமன்ற இருக்கைகளைப் பெற்று அதிகாரத்தை சுவைத்ததால்… ஒருவேளை இக்கொலை, இவர்களின் கடந்தகாலச் சதி வேலைகளையும், இவர்களுடைய அர்த்தசாத்திரத்திரத்தில் இவர்கள் எழுதிவைத்த சூதுவாது, சூழ்ச்சிகளைக் கவனிக்கும் போது ஏன் இந்த இந்துமத வெறியர்களையே விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரக்கூடாது?
     பெரியார்த் தொண்டர்களோ அல்லது உண்மையான பொதுவுடமையாளர்களோ… தன் ஆதிக்கத்திற்காக அடிப்பவனையும், தன்னைப் பாதுகாக்க வேண்டி திருப்பி அடிப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க மாட்டார்கள்! ஒரு துயரச் செயல் நடக்கும் போது அதன் அடிமூலம், அதன் காரணம் என்ன ? அந்த மூலங்களை இச் சமூகத்தை விட்டு அப்புறப்படுத்துவதாலேயே அடுத்த துயர நிகழ்வை தடுத்து நிறுத்த முடியும்.. இப்படித்தான் நாங்கள் சிந்திப்போம்!
     மத வெறியர்களை, சாதி வெறியர்களை.. இவர்களை மனிதாக மாற்றுவது, மனிதனாக்குவது உண்மையான பொதுவுடமைச் சித்தாந்தமே! இச் சிந்தனைக்குள் வருவதாலேயே மட்டும்தான் நம் தமிழ்ச்சமூகம் நிம்மதியான வாழ்வுக்குள் அடியெடுத்து வைக்கும். மனிதனுக்கேயுரிய மாண்பும் கிட்டும், தமிழனைக் கூறுபோட்டு தொங்கவிடும் சாதி எனும் சாக்கடையும், கடவுள் என்ற அடிமுட்டாள்தனமும் சவக்குழிக்குள் புதைக்கப்படும்.

   • சுதந்திரத்திற்கு முன் காந்தி இஸ்லாமியர்களை தாஜா செய்யமுயன்று கடைசியில் தோற்றுப்போனார்…………. இன்று கம்யூனிஸ்ட்’ கள் முயன்றுகொண்டிருக்கிறார்கள்……… இந்த படுகொலைகளுக்கு இஸ்லாமியபயங்கரவாதிகள் காரணமில்லை என்று கூறுவதன்மூலம்,இஸ்லாமியர்களை தாஜா செய்ய முயன்றிருக்கிறீர்கள்……. இம்முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

 13. இவனுங்கெல்லாம் செத்தா யாருக்கு என்ன நட்டம்?

  போய் தொலையட்டும் இந்த பூமிக்கு சுமையாவது குறையும்.

  இந்து மதவெறி ஓநாய்களை ஒழித்துக்கட்ட வேண்டும்.

   • எங்க சொந்தகாரர் ஒரு சிலர் BJP-ல் மாவட்ட அளவில் பதவியில் இருக்கிறார்கள். இவர்கள் நன்கு மூளைச்சலவை செய்யப்பட்ட, சிந்திக்கும் திரணற்ற, மதவெறியூட்டப்பட்ட ரோபோக்களைப்போல் இருக்கிறார்கள். இவர்கள் நோக்கம் என்னானு நல்லா தெரியும். இவர்களை இப்படி மாற்றி தனது ஆதாயத்துக்கு பயன்படுத்தும் நாதாரிகள் சாவதில் என்ன சோகம் வேண்டிகெடக்கு.

   • லாப நட்டக்கணக்குப் பார்ப்பதற்கு இது என்ன வெங்காய மண்டி வியாபாரமா? நீ 3000 ம்னு கணக்கு பார்த்தால், அவன் பாக்கி 2999 இருக்கு என்று பதில் சொன்னால் – இது எங்கு போய் முடியும்? இதுல நொந்த சாமியான நல்லுசாமி இந்த ஒன்றுக்கே இந்த புலம்பு புலம்புகிறார். ச்ச்சீனு, மோடி மஸ்தான் செய்த 3000 ப்பற்றி இப்போதாவது ஒத்துக்கிறீங்களே!!

  • எல்லா மதங்களிலுமுள்ள மதவெறி நாய்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பது தான் சரியானது.

 14. இந்து தலைவர்களை தமிழ் மண்ணில் நாய்கூடத் தீண்டாது…. அவர்கள் செத்துப் போனதற்காகவும் கூட ஒரு தெரு நாய்கூட ஓங்கி குறைக்காது. இந்த மண்ணின் மதமாக இந்து மதம் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் பட்டதில்லை. என்னதான் பார்ப்பனர்கள் கூவிய போதும் இந்து முசுலீம் ஒற்றுமை இங்கு சிதைந்ததில்லை…. ஆனால், தற்போதைய தேசிய ஊடகங்களும் இந்திய இந்து தேசியத்தை வலுப்படுத்தும் திரைப்படங்களும் இந்தியில் இருந்தும் ஆங்காங்கே தமிழிலும் வருகின்றன. இன்றைய மாணவர்கள் மற்றும் வெண்-சீருடை வேலை நடுத்தர வர்க்கத்திடம் இந்தியா மீதான பற்று என்பது கிரிகெட் மூலமும் ஹசாரே தனமாகவும் பரப்பப்பட்டு, அது இந்து வெறியாக, முசுலீம் வெறுப்பாக, பார்ப்பனிய விழுமியங்களின் ஏற்பாக மாற்றப் படுகிறது. பெரியாரின் பெயரைச் சொல்லி இயக்கங்கள் நடத்தும் யாரும் இந்த இந்து அபாயத்தை புரிந்து கொண்டதாகக் கூடத் தெரியவில்லை. பெரியாரியப் பனி என்பது வெறும் கடவுள் மறுப்பும் பார்ப்பனர்களைத் திட்டுவதுமே என்று தன்போக்கில் செயல்பட்டு வருகின்றனர். பெரியாரிய மற்றும் திராவிட இயக்கங்களின் போலி பெரியாரியமும், பிழைப்புவாத அரசியலும், சந்தர்ப்பவாதக் கூட்டுகளும் வெற்றுச் சவடால்களுமே இந்த இந்து அமைப்புகளும் ப.ஜ.க வும் தமிழகத்தில் வளர முதல் காரணம். இந்து அமைப்புகளின் அபாயத்தை ம.க.இ.க. மற்றும் புரட்சிகர அமைப்புகள் மட்டுமே எண்பதுகளில் மெல்ல வேரூன்றி, 1992 கு பிறகு அபாயகரமாக வளர்ந்து வரும் இந்து அமைப்புகளுக்கு எதிரான சரியான நிலைப்பாட்டையும் புரிதலையும் தமிழகத்தில் வளர்த்துள்ளதோடு, வீரியமிக்க செயல்பாடுகளையும் கலத்திலும் ஆற்றியுள்ளன.

  • போலி மதச்சார்பின்மை. வலைக்குழுமங்களில் மதச்சண்டை நடப்பது சர்வ சாதாரணம். இதில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் என பல தரங்கள் உண்டு. இந்துக்கள் சார்பாக இந்துக்கள் மட்டுமே பேசுவார்கள் ஆனால் இந்துக்களையும் இந்து மதத்தையும் தாக்கி எழுத, கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பகுத்தறிவுவாதிகள், மேலும் பகுத்தறிவாளர் வேடமிடும் பிற மதத்தவர் என எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள். முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துக்கள் பெரும்பாலும் பகுத்தறிவு வாதம், நட்புக்கு உதவி என்ற ரீதியில் முஸ்லீம்களுக்கு ஆதரவளிப்பார்கள். உண்மையில், இந்த பகுத்தறிவாளர்களின் போர்வையில் இருப்பதெல்லாம் இந்து மதம் தவிர்தத பிற மத வெறியர்களின் கலவையே. இவர்களது வாதம் என்னவென்றால் இவர்கள் மதச்சார்பற்றவர்களாம், முற்போக்கு சிந்தனாவாதிகளாம். பகுத்தறிவுப்படி பேசுபவர்களாம். இவர்களின் பகுத்தறிவு இந்து மதத்துக்கு எதிராக மட்டுமே சிந்திக்கும், இந்து சம்பிரதாயங்களை மட்டுமே விமர்சிக்கும். இஸ்லாம், கிறித்துவ மதத்தைக் கேள்வி கேட்கும் விதத்தில் சிந்திக்கவே சிந்திக்காது. இவர்கள் மொழியில் இதற்குப் பெயர் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மையாம்!!!!!

   பகுத்தறிவாளர்களில் கடவுளே கிடையாது, தீமிதித்தல் காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் பிதற்றும் திராவிட வியாதிகள், பெரியார் வியாதிகள் உண்டு. இந்த வியாதிகள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருப்பார்கள். ஏதோ ஒரு நம்பிக்கைக் குறை அவ்வளவுதான். ஆனால் முஸ்லீம்களும் கிறித்துவர்களும் இந்த பகுத்தறிவாளர் போர்வையில் ஒளிந்திருப்பார்கள் பாருங்கள், பேச்செல்லாம் விடம். இவர்களுக்கு மதத்தைப் பற்றியும் கிறித்துவ மதத்தைப் பற்றியும் பேசினால் மட்டும் பகுத்தறிவு வேலை செய்யாது. எங்கள் மதம், எங்கள் மார்க்கம், எங்கள் மத நியதி, ஏக இறைவன் என்றெல்லாம் பேசுவார்கள். இந்துக்கள் எதிர்வாதம் புரியும் போது, இந்துமத சம்பிரதாயங்களைக் காட்டி அது பகுத்தறிவுக்கு ஒத்து வராது என்று உளறுவார்கள். குரானில் சொல்லியிருக்கிறது, பைபிளில் இருக்கிறது என்று அவர்களின் மதச்சார்புடைய வலைச்சுட்டிகளைப் பட்டியல் இடுவார்கள்.

   அதே போல் ஒரு இந்துவிற்க்கு வந்தால் அது தக்காள்ச்சட்ட்னி ம்த்தவர்களுக்கு வந்தால் அது ரத்த்ம்…இவ்வள்வுதான்டா வினவு..

   • எதையும் ஒழுங்கா ஆராய்வது கிடையாது, நீங்களே ஒன்றை நினைத்துக்கொண்டு உளருவது.

    சரி இதை விடுங்க ஈழத்தமிழர்கள் மற்றும் பிரபாகரன் மகன் கொலை செய்யப்பட்டதற்கு நீர் நீலி கண்ணீர் வடித்தாய் என்று எடுத்துக்கொள்வோமா?

    ஏனென்றால் ஈதமிழர்கள் அழிப்பை பார்த்து கொண்டாடியவர்கள் தான் பாஜக ஓநாய்கள் , முழுக்க முழுக்க ராஜபக்சேவுக்கு ஜால்ரா போட்டவன் தான் இவனுங்கெல்லாம். எப்படி பார்த்தாலும் இவனுங்க சமூகவிரோத கும்பல் தான்

  • //இந்த மண்ணின் மதமாக இந்து மதம் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் பட்டதில்லை. //
   திருச்சிற்றம்பலம்… தென்னாடுடைய சிவனே போற்றி! இடையில் வந்த மதங்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாது விட்டாலும் தமிழ் மண் சிவபூமி என்ற உண்மை மறைந்து விடாது. ஒண்டவந்த பிடாரி, ஊர்பிடாரியை விரட்டிச்சுதாம் என்ற கதை தான் இது. 🙂

  • சொற்றுனை வேதியன் சோதி வானவன்
   பொற்றுனை திருந்தடி பொருந்தக் கைதொழக்
   கற்றுனைப் பூட்டி ஓர் கடலினிற்பாய்ச்சினும்
   நற்றுனையவது நமச்சிவாயவே…….

 15. வினவு, உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.ஒரு கொலையை கூட நியாயமாக எழுதாத நீங்கள், முற்போக்கு வேஷம் போடுவது யாரை ஏமாற்ற? மாற்றம் உங்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் போல.

 16. எண்கவுன்டெர் ஸ்பெசலிஸ்ட் மோடியின் சீடர்கள் இந்துக்கள் பயணம் செய்யும் பஸ் கண்ணடியை உடைப்பது சரிஅல்ல.

 17. 1. “விசாரணை துவங்குவதற்கு முன்னரே இசுலாமிய தீவிரவாதம் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது ஊடகங்களுக்கும் காவல் துறைக்கும் வாடிக்கையாக ஆகியிருக்கிறது”.

  வினவு மட்டும் தான் தீர விசாரித்து ராமதாஸ் தான் கொலையாளினு தீர்ப்பு சொல்லலாம். காவல்துறையும் நீதிமன்றமும் சொன்னால் அது சிறுபான்மையினருக்கு எதிரான போர் அப்படிதானே வசந்தன்.

  2. “பாஜக தங்களது ‘ஜனநாயக’ கடமையை செய்து முடித்திருந்தது”

  சரி பாஜக செய்யல நீங்க உங்க கடைமையை முடிசிட்டேன்களா? தான் வாழும் சமுதாயத்தில் ஒருவர் இழப்புக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் கொண்டாடி மகிழும் உங்கள் போன்றவர்கள் புலிகளுக்கு சப்போர்ட் பண்ணி தனி ஈழம் ஆதரவு கோஷம் போடுவீங்க அதையும் நம்பனும்.

  3. “மாநிலம் முழுக்க சுமார் 6,000 பேர் கைது, 100 பேருந்துகள் உடைப்பு”.

  இது என்ன ம.க.இ.க கண்டுபிடிப்பா?

  4. “கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தேசத்துக்காக உழைத்தவர்கள் என்றும், தேச விரோத சக்திகள் இவர்களை கொன்று விட்டார்கள் என்றும் பிரச்சாரம் செய்கின்றன இந்துமத வெறி அமைப்புகள்.”

  என்ன யோக்கியமா எழுதுறீங்க, இளவரசன் மட்டும் காஷ்மீர்ல எதிரிகள்கூட சண்டை போட்டு நாட்ட காப்பாத்தினானா என்ன?

  இந்தியாவுல முஸ்லீம் தீவிரவாதமே இல்லை என சொல்கிறீர்களா? கட்டுரையின் ஒவ்வொரு வரியிலையும் அபத்தம். முடிந்தவரை ஒருசார்பு நிலையை விட்டுட்டு பொதுவா எழுத முடியுமான்னு யோசிக்கலாமே.

  • ராகுல் ///வினவு மட்டும் தான் தீர விசாரித்து ராமதாஸ் தான் கொலையாளினு தீர்ப்பு சொல்லலாம். காவல்துறையும் நீதிமன்றமும் சொன்னால் அது சிறுபான்மையினருக்கு எதிரான போர் அப்படிதானே வசந்தன்.///

   வினவு சாதி வெறியை எதிர்க்கும் தளம் ..பாமகவினர் காரணமாக இருக்கலாம் என்று தனது தரப்பு வாதத்தை வைக்க உரிமை உள்ளது
   ///விசாரணை துவங்குவதற்கு முன்னரே இசுலாமிய தீவிரவாதம் என்றெல்லாம் ஒப்பாரி வைப்பது ஊடகங்களுக்கும் காவல் துறைக்கும் வாடிக்கையாக ஆகியிருக்கிறது”.///
   காவல்துறையும் பொதுவான ஊடகங்களும் அது போன்று கூறுவது எப்படி வினவு கருத்து போல் ஆகும்?

 18. இந்துமதவெறியன் செத்துப்போனதுக்கு ஒப்பாரி வைப்போர் பட்டியலில் முந்திக்கொண்டோர்
  ராமதாசு, வைக்கோ..இந்த ரெண்டு பேரும் வைக்கும் ஒப்பாரியைப் பார்க்கையில் நெருங்கிவரும் தேர்தலும் கூட்டணிக் கணக்கும் தென்படுகின்றன..இப்படித்தான் ஒருத்தி எழவு வீட்டுக்குப் போனாளாம்..ஒப்பாரி வைக்கையிலே ‘எக்கா…ஒங்க வீட்டு கொல்லையிலே முருங்கைக்காயீ..முறுக்கு முறுக்கால்லா காச்சிருக்கு’ன்னு சொல்லி அழுதாளாம்..எழவு வீட்டிலே வைக்கோவும் டாக்டரும் இப்படித்தான் எம்பி சீட்டா நெனச்சு அழுதிருப்பாங்க..

  எள்ளுதான் எண்ணெய்க்குக் காயுது..இந்த எலிப்புழுக்க என்னாத்துக்கு காயுதாம்?
  அதான்..மானம்ம்ம்ம்ம்ம் மிக்க்க்க்க்கு வீரமணியும் ஒப்பாரி வச்சிருக்காரு…”சேலத்தில் ஆடிட்டர் இரமேஷ் என்ற பா.ஜ.க.வின் தமிழகப் பொதுச் செயலாளர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும்.

  இதற்கு மூல காரணம் யார் எது என்று கண்டறியப்படுவது, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதைவிட முக்கியமாகும்.

  இதற்கு சில வாரங்கள் முன் வேலூரில் இதே கட்சியின் ஒருவரும் வெட்டிக் கொல்லப் பட்டார் என்ற வேதனைக்குரிய செய்தியும் வெளிவந்தது!”

  • பாய்…பேரு கிடைக்காட்டிநல்ல பேராநான் வைக்குறேன்…சும்மா…கனகுராஜ் கினகுராஜுன்னு வச்சுக்க்கிட்டு காமிடி பண்ணாத..

  • பாராளுமன்ற தேர்தலுக்கு திமுகவோ அதிமுகவோ கூட்டணி வைக்காது பணம் கிடைக்காது என்பதால் கிடைத்த காரணத்தை காட்டி உறவு வைக்கக் மமுனைகிறார்கள் .ஜெயிக்கிரமோ கிடைக்குதோ இல்லையோ இந்த தடவை மோடி பணத்தை அள்ளி விடப் போகிறாராம் .அதில் டாக்டரும் புலித்தோலும் வரிந்து கட்டுகிறார்கள்

   • நடந்த ஒரு படுகொலைக்கு இரங்கல் தெரிவிப்பதை எவ்வளவு கீழ்த்தர‌மாக விமர்சிக்கிறீர்கள்…..இதுதான் உங்கள் தரம் என்பது உலகுக்கே தெரியும்…..