முகப்புசெய்திகருத்து மாற்றத்தினால் களத்தில் இறங்கினேன் - சேகர்

கருத்து மாற்றத்தினால் களத்தில் இறங்கினேன் – சேகர்

-

என் பார்வையில் வினவு –  24 : சேகர்

வினவு தோழர்களுக்கு, வணக்கம். தற்செயலாக கூகுளில் எதையோ தேடப்போய்தான் வினவின் அறிமுகம் கிடைத்தது. பல பேர் ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதைப் போல ‘ஏன் வினவு மாதிரி ஒவ்வொரு விசயத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை’ என படிக்கப் படிக்க கேள்வி எழுந்தது.

மறுமொழிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கொட்டித் தீர்த்ததைப் போல “உமக்கு எத எடுத்தாலும் குறை சொல்வதே வாடிக்கை” என்பது போன்ற எண்ணங்களும் வந்து செல்லாமல் இல்லை. பொறுமையாக யோசித்த பின்னர் தான் சமச்சீர் கல்வி, சேது சமுத்திர திட்டம் போன்றவைகளை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதில்லை எனப் புரிந்தது.

போராடும் தருணங்கள்
தொடர்ந்து வினவைப் படித்துவந்த நிலையில் “வினை செய்” என்பதன் பொருளைப் புரிந்து கொள்ள முடிந்தது.

சொல்வது எல்லாம் சரியாகத்தான் உள்ளது. எதன் மீது அமர்ந்துகொண்டு இந்த சமூகத்தினை அலசுகிறார்கள் அல்லது விமர்சிக்கிறார்கள் என ஆரம்ப சில நாட்களில் எனக்கு புரியவில்லை.ஆனால் ஏதோ ஒன்று அவர்களை இயக்குகிறது என்பது மட்டும் உறுதியாகத் தோன்றியது. அதன் பெயர் கம்யூனிசம். ‘ஓ! அது வேறு நாட்டிற்கான தத்துவமாயிற்றே!’ என்பன போன்ற பாமரத்தனமான புரிதல்தான் அன்று இருந்தது. அந்த மாபெரும் அறிவியல் விஞ்ஞானத்தை வறட்டுத்தனமாக அல்லாமல் நடைமுறையோடு பொருத்தி எளிதாக கிரகித்துக் கொள்ளும் வண்ணம் பிசைந்து கொடுப்பதில்தான் வினவின் சிறப்பு அடங்கியுள்ளது.

தோழர் மருதையன் அவர்களின் கட்டுரையால் அதிகம் ஈர்க்கப்பட்ட நான் சமச்சீர் கல்விக்காக புமாஇமு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கிற்கு அவர் பேச வருவதை அறிந்து விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை வந்து தோழர்கள் அனைவரின் உணர்வு பூர்வமான செயல்களை நேரில் கண்டேன்.

அவை என்னையும் பரிசீலிக்க வைத்தது. இதுநாள் வரை சமூகத்தின் அனைத்து நலன்களையும் பயன்படுத்தி ஒரு வளமான இடத்தை தக்கவைத்துக் கொண்ட நான் குற்றவுணர்வுக்கு உள்ளானேன்.உழைப்பின் பலனை ஒட்டாக உறிஞ்சிக் கொண்டு லாபத்தின் ஒரு சிறு துண்டை வெட்டி கூலியாக வீசி எறியும் முதலாளி போல சமூக உழைப்பில் இருந்தே ஒவ்வொன்றையும் கற்று மேலேறிய நான் கடை நிலையிலுள்ள மனிதருக்கு பிச்சை போட்டு மன நிம்மதியைத் தேடிக்கொள்வதையே மாபெரும் சாதனையாக நினைத்து வாழ்நாளை கம்பீரமாக கழித்து வந்தேன்.

ஈழத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது சில நாட்கள் அமைதியான நேரங்களில் கண்ணீர் சிந்தியதுண்டு.

மக்களின் நிலை கண்டு வருந்துவதனாலோ கழிவிரக்கம் கொண்டு பொருளுதவி செய்வதனாலோ – அது தவறில்லை என்றாலும் – எந்த மாற்றமும் வரப்போவதில்லை எனவும் அது ஒரு இயலாமையின் வெளிப்பாடு எனவும் வினவு உணர்த்தியது.

இந்த அநீதியான சமூகத்தை தக்க வைக்கும் செயல்கள், கருத்துக்கள் எவை, அவற்றை மாற்றுவதற்கான செயல்கள், கருத்துக்கள் எவை எனவும் தெளிவாக விளக்கிக் காட்டியது. எந்த நம்பிக்கையில் மாற்றம் நிகழ்த்தமுடியும் என செயல்படுகிறார்கள் என்று எண்ணிய போதெல்லாம் எந்த நம்பிக்கையில் சொத்து சேர்த்துக்கொண்டிருக்கிறீர்கள் என அது திருப்பிக்கேட்டது.

வினவினை நண்பர்களிடம் அறிமுகப்படுத்தலானேன். எனக்கு முன்பாக அவர்கள் வினவைப் படித்துவிட்டு ஏதாவது கட்டுரையினை எனக்கு அறிமுகம் செய்தால்.. மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதே சமயம் என் வட்டத்தில் நான்தான் முதலில் வினவின் ஒவ்வொரு கட்டுரையையும் படிக்க வேண்டும் என்ற வீண் கர்வமும் இருக்கும். வினவு, தினம் ஒரு கட்டுரை என வளர ஆரம்பித்து புதிய தளம், தினசரி செய்திகள் என வளர்ச்சியின் ஒவ்வொரு படியினை எட்டும்போதும் அதை என்னுடைய வெற்றியாக வரித்துக்கொண்டு நண்பர்கள் மத்தியில் மிடுக்காக நடந்து திரிவதுண்டு.

இத்தனை நாள் வாழ்ந்து என்னத்தடா செஞ்சிட்டோம் எனக்கேட்கும்போது “அதான் இந்தியா வேர்ல்டு கப்பு வாங்குறத பாத்துட்டோம்ல” எனப் பேசித் திரிந்த நண்பர்கள் இப்போது அதே கேள்விக்கு “அதான் வினவை படித்து பொறுப்பாக பேஸ்புக்ல ஷேர் பண்றோம்ல” என்பதோடு நிற்காமல் போராட்டங்களுக்கு நிதியும் தவறாமல் கொடுக்கிறார்கள்.

கீழைக்காற்று சென்று புத்தகங்கள் வாங்கி வார விடுமுறை நாட்களை உருப்படியாகக் கழிக்கத் தூண்டியது. போராடும் தருணங்கள், கேளாத செவிகள் கேட்கட்டும் போன்ற புத்தகங்கள் கீழான சிந்தனைகள் எழும்போதெல்லாம் என்னை அவற்றிலிருந்து காக்கின்றன.

தொடர்ந்து வினவைப் படித்துவந்த நிலையில் “வினை செய்” என்பதன் பொருளைப் புரிந்து கொள்ள முடிந்தது. மீதமுள்ள என் வாழ்நாளை சரியான வழியில் தோழர்களுடன் வினைபுரியக் காத்திருக்கும் ஒரு தோழனாக என்னை மாற்றியிருக்கிறீர்கள். வினவுக்குக் நன்றிகள் மற்றும் ஆறாம் ஆண்டு புரட்சிகர நல்வாழ்த்துக்கள்.

 1. வினவின் பெருமை பேசும் கட்டூரைகள் அதன் உண்மை முகத்தை மாற்றவா? அல்லது வாசிப்பாளர்களிடம் இருக்கும் வெறுப்பை குரைக்கவா? அல்லது வினவிற்கு வேறு கட்டூரைகள் இல்லையா?. தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றியும் வன்னியர்கள் பற்றியும் நீங்கள் எழுதியிருக்கும் கட்டூரைகள் உங்கள் உண்மை முகத்தை காட்டிவிட்டது. இனியும் பெருமை பேசும் கட்டூரைகளுக்குள் ஒளிந்துகொள்வதில் அர்த்தமில்லை.

  • ஆமாம் எங்களது உண்மை முகம் “மனிதத்தை காப்பாற்றும் பொதுவுடமைவாதி முகம்” என்பது இப்போதுதானா நீங்கள் சோல்லி மற்றவர்களுக்கு தெரிய போகிறது. அனைவருக்கும் எப்போதே தெரியும்.

  • ஓந்திரியர்,

   நீங்க எந்த ஊரு? உங்க பக்கதிலாவது சிங்கபூர்/மலேசியவுக்கு பிழைக்க போனவர்கள் கடினபட்டு கொடுத்த காசில், தொடங்கிய பள்ளிகளில் படித்து காசு பார்த்தவர்களின் அடுத்த தலைமுறை இன்று தேசியம் பேசுகிறீர்கள், உங்களை எல்லாம் கூத்தப்பால் கள்ளர்கள், கந்தர்வகோட்டை கள்ளர்கள் ஊரு ஊருக்கு குற்ற மரபு என சொல்லி ஒடுக்கிய தேசியத்தை கொண்டாடுகிறீர்கள், ஆனா தென்மாவட்ட மக்களை படிக்கவே விடாமல் பார்ப்பனீயத்தின் அடியாகளாக ஆக்கியது உங்க தேசிய தலைவர் கிரிமினல் முத்துராமலிங்கம்தானே? இப்போ நீங்கள் எல்லாம் தொண்டமான் வாரிசுகாளக தீயா வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

   எப்போதாவது ஒரத்தநாடு, நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி, தஞ்சாவூர் ஒன்றியங்களில் உங்க கள்ளர் சாதிகாரர்களின் பிரச்சனையை நேர்மையாக பேசி இருக்கிறீர்களா? ஈஸ்டர்ன் பவர் கார்ப்பரேசன் கொள்ளைகாக, அந்த பகுதியில் வீணாக போக போகும் 1 லட்சத்துக்கு 6 ஆயிரத்துக்கு அதிகமான நிலத்தில், பாதிக்கபட போவது உங்க கள்ளர் சாதியினரே, அதையெல்லாம் பற்றி கவலைபடாமல் இருக்க வைப்பது என்ன? உங்க கள்ளர் சாதி வெறியே, அறிவை சாதி வெறிக்கு தொலைத்து விட்டால் சாதி வெறி காட்டுமிராண்டிகள் கிரிமினல் முத்துராமலிங்கம், கிரிமினல் டாக்டர்கள் ராமதாசு, ஸ்மால் ராமதாசு இவர்கள் மேல் பாசம் பொங்கதானே செய்யும்.

   • அண்ணன் நெடுவாக்கோட்டை நெடுவாண்டார், குற்ற மரபு என்று இந்திய அரசால் வெளியிடப்பட்டிருக்கும் அரசாணையை நீங்கள் வெளியிடவேண்டும்.

    பார்ப்பனியத்தை பழித்தோம் அதை விடுப்போம் அதற்க்கு மாற்றாக மக்களை நெறிப்படுத்தும் சங்க இலக்கியங்களை சொல்லித்தன்தொமா? இல்லை. பிறகு பார்ப்பனியத்தை பழித்து பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீது ஆங்கில அரசு போட்ட வழக்கினால் அவரை கிரிமினல் என்று நீங்கள் குறிப்பிட்டால் அதற்காக பெருமைப்படுகிறேன். இந்திய அரசு போட்ட வழக்கிற்காக கிரிமினல் என்று நீங்கள் குறுப்பிட்டால் உங்கள் அனுபவ அறிவு முதிர்ச்சி ஆய்வுக்குரியது. அப்படி இல்லை என்று அன்றைய நீதி துறை வழக்கிலிருந்து அவரை விடுதலை செய்துவிட்டது.

    அண்ணன் அமெரிக்காவில் இருப்பீர்கள் போலும். டெல்டா மாவட்டங்கள் போராட்டக்களத்தை சந்தித்து தமிழக அரசு கவனத்தை ஈர்த்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளன.

    தீண்டாமை நிகழ்கால சந்ததி யாரிடமும் இல்லை என்பது நிசப்தமான உண்மை. அவரவர் சமுதாய பழக்க வழக்கங்ககளை பழித்து எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

    இருபதாம் நூற்றாண்டில் காங்கிரசுக்கு பலியானவர்களில் மிச்சமீதயாய் இருப்பீங்க போல. அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகாதீர்கள்.

    • தீண்டாமை நிகழ்கால சந்ததி யாரிடமும் இல்லை என்பது நிசப்தமான உண்மை//
     உசிலம்பட்டியில் போன மாதம் அருண்குமார் என்ற சிறுவனை நிலமாலை என்ற தேவர் சாதி வெறியன் தலையில் செருப்பை சுமந்து நடக்க வைத்த கொடூரத்தை என்னவென்பீர் உங்களின் ஜனநாயக உரிமை என்றா?

    • கள்ள(ர்) முரளி அவர்களே,

     //தீண்டாமை நிகழ்கால சந்ததி யாரிடமும் இல்லை என்பது நிசப்தமான உண்மை//

     நீங்கள் இங்கே குறிப்பிட்ட நிகழ்கால சந்ததி என்பது கிரிமினல் தேவர்சாதி வெறியன் முத்துராமலிங்கம் வாழ்ந்த காலத்தையும் சேர்த்து தானா??

     உமக்கு “டிமெண்டியா” நோய் இருந்தால் குறளகத்தில் குல்கந்து வாங்கி சாப்பிடவும்…அல்லது சுரேஷ் கல்மாடியை அணுகவும்…

     • நீ சொல்லியிருப்பதில் எதாவது அர்த்தமிருக்கிறதா?. இதுபோல் தட்டுகெட்டதனமாக பேசி பின் வாங்கிய உதைக்கு பணம் வசூலிக்கும் கும்பல்தானே நீங்கள்.

      அதற்கு பொதுவுடமை என்று பிதற்றல் வேறு. உனக்கு நெஞ்சுரம் இருந்தால் தேவர் வழக்குகளுக்கு வந்த தீர்ப்பை அவரின் வெறிக்கு ஆதாரமாக வெளியிட வேண்டும்.

      இல்லையெனில் வீன் வாதத்தை நிருத்த வேண்டும்.

    • ஓந்திரியர்,

     இந்திய நீதி துறை 47 பெண்கள், குழந்தைகளை கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவை கூடதான் விடுதலை செய்தது, அதனால் அந்த கோபாலகிருஷ்ண நாயுடு கிரிமினலாக இல்லாமல் போவானா? கோபாலகிருஷ்ண நாயுடுக்கு எந்த வகையிலும் குறையாத கிரிமினலே மறவர் முத்துராமலிங்கம். உங்கள் ஆள்கள் எல்லாம் தொண்டமான் பரம்பரை தொண்டமான் பிரிட்டிஷ் அரசுக்கு ஐந்தாம்படையாக இருந்தவன், மறவர் முத்துராமலிங்கம் பார்ப்பனர்களுக்கு அடியாளாக இருந்தவன். உங்களின் கள்ளர் சாதி வெறிதான் கிரிமினல்கள் சசிகலா, நடாராஜன், திவாகரன், தினகரன், பாஸ்கரன், சுதாகரன், கள்ள கடத்தல் கிரிமினல் சிதம்ப்ர வாண்டையார், இன்னொரு பக்கம் பூண்டி கலை வாண்டையார்ஸ் குருப், கயவாளி காங்கிரசில் தஞ்சை இளவல் வாண்டையார்கள் என எல்லா பக்கமும் துரோகிகளை கொண்டுள்ளது. இப்படி சாதி வெறி சமூக விரோதிகளையும், கிரிமினல்களை கொண்டுள்ள கள்ளர் சாதியில் பெரும்பான்மையானவர்கள் உழைக்கும் ஏழை மக்கள், அந்த ஏழை மக்களின் வாழ்க்கையில் சட்டபடி மண் அள்ளி போடத்தான் உங்கள் சாதி வெறி துரோகிகளின் எஜமானி புரட்சி தலைவி பிராடு எம்.எஸ்.சாமிநாதன் தலைமையில் குழு அனுப்பி ஆப்படிக்க தொடங்கியுள்ளார், சாதி வெறி துரோகிக தலைவர்களான, உங்க கள்ளர் சாதி ஜெயலலிதா அடிமைகள், சொந்த சாதி ஏழைகளுக்கு துரோகம் செய்யும் போது, யார் போராட போகிறார்கள்?

     • ஓன்றுக்கு ஓன்று தொடர்பில்லாததையே பேசுவது உனக்கு வழக்கமாகிவிட்டது. உணர்ச்சி வசப்பட்டு உதைத்தால் அதற்கு தண்டனை குறைவு எங்கிறது சட்டம். இந்த பேச்சின் உள்நோக்கத்தை இதற்கு முந்தய பதிவிலேயே சொல்லிவிட்டேன்.

      தேவர் முழங்கியது போல் வீரத்துடன் விவேகம் கைகோர்த்துவிட்டது. உங்கள் முட்டாள்தனம் இனி முடங்கிபோகும். தன் வினை தன்னை சுடும். போயி புள்ள குட்டியல படிக்க வைங்க தம்பி.

      எங்கள் மண்ணை புடுங்க எந்த புண்ணாக்காலும் முடியாது. நடந்து வரும் போராட்டங்கள் தேவைப்படும் பட்சத்தில் கொரில்லா தாக்குதலாக மாறும். எண்ணிலடங்கா இளைஞர் படை நாங்கள். இது அரசு மரமாக இருந்தாலும் சரி ஆல மரமாக இருந்தாலும் சரி அனைத்து வேரையும் அருப்போம்.

      நாங்கள் எதிரியின் எல்லையில் புகுந்து செல்வத்தை கவர்ந்த சிங்கங்கள் . தஞ்சாவூருக்கே தவுலா?… தட்டி காண்பிக்கிறோம் வந்து பார்.

      • ஏ எப்பா! முத்துராமலிங்கம் மடியில குண்டு(யாரும் சிரிக்காதிங்கப்பா) வச்சிருந்தாராமே , இன்னும் அதை வச்சிருப்பாரு போல முரளி ஓந்திரியர்.

    • குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தினாலும் பிரிடிஷ்காரன் அவர்களை உயிரோடு வாழ விட்டான். பிழைப்பை மட்டுமே கெடுத்தான். ஆனால் புர்ர்ர்ரட்சி ரஷ்யாவில் கசாக்குகள் பெருந்திரளாக கொல்லப்பட்டனர். கம்முனிஸ்டு நாட்டில் காயடிக்கப்பட்டவன் மட்டுமே வாழ முடியும். ஆம்பளைகளுக்கு இடம் இல்லை சித்தப்பு.

     • பரலோகம்,

      ஏதோ 60 ஆண்டுகளுக்கு முன் இருந்த சோவியத் ரஷ்யாவுக்கு போய் பார்த்ததை போல் எழுதுவது அயோக்கியதனம், ஐந்தாம்படை சாதி வெறியர்களுக்கு குற்றபரம்பரையாக இருப்பது வசதியாகவே இருக்கும், கம்னிஸ்டு ஆக இருப்பது சாதி வெறி குற்ற பரம்பரையால் முடியவே, முடியாது. பரலோகத்தின் கருத்து படி சோவியத்தில் ஆம்பலகள் இல்லை என்றால் இங்கு தமிழ் நாட்டில் ஜெயலிலதா அடிமைகளாக இருக்கும் உஙக கள்ளர், மறவர், சேர்வை அடிமைகள் எல்லாம் ஆம்பளயா?

      • பிறப்புக்கு முன் நடந்ததை பார்க்க முடியாதென்றால் நீங்கள் எப்போது மார்க்சிடம் டியூஷன் படித்தீர்கள் நண்பரே?

       • கொல்லப்பட்ட கணக்கு கள்ளக்கணக்கு என கணக்கு போட்டவனே ஒத்துக்கொண்டானே பாண்டியா

         • //ஆனால் புர்ர்ர்ரட்சி ரஷ்யாவில் கசாக்குகள் பெருந்திரளாக கொல்லப்பட்டனர்.// இதுல ஏதாவது ஆதாரம் தெரியுதா?

          • பலமுறை சொல்லி சலித்துப்போன விஷயம் இது நண்பரே.உங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னால் வியப்பாக உள்ளது. நான் சொன்னால் அது ஒரு சார்பாக இருக்கலாம் அல்லவா? எனவே நீங்களே தேடி தரவுகளை எடுங்கள் நண்பரே. ஒன்றுக்கொண்டு முரண்படும் தரவுகளை கட்டாயம் திரட்டி வாசியுங்கள். பின்னர் தரவுகளின் கூற்றை செரித்து உங்கள் கூற்றை உருவாக்குங்கள். முன்முடிபுகளோடு தேடும் போது தவறு செய்வோம். உண்மை தரவுகளில் இல்லை. வாசிப்பவன் புத்தியில் உள்ளது. வாசிப்பவன் உண்மையை கட்டவேண்டும் தரவுகளின் அடிப்படையில்/விமர்சனத்தில்.
           வாழ்த்துக்கள் நண்பரே.

         • உங்களுடைய கூற்றுக்கு என்ன ஆதாரம் பரலோகபாண்டி ? அதியமான் மாதிரி ஏதாவது ஏகாதிபத்திய லிங்குகளை தூக்கிக்கொண்டு வராதீர்கள்.

          • ஆடு வளர்த்தவனை விட வெட்டுபவனை நம்பும். கொன்னவன் சாட்சிதான் செல்லும் என்றால் இந்த பேச்சை விட்டுவிடலாம்.

       • பெரும்பாண்மை உழைக்கும் மக்கள் மீது முதலாளிகளின் ஆட்சி நீடித்து நிலைத்திருக்க முதலாளித்துவத்திற்கு பூசை செய்து வரும் பரலோகபாண்டியன் ஏகாதிபத்தியங்களிடம் நல்ல முறையில் டியூஷன் கற்றிருக்கிறார் என்பதை நாங்கள் அனைவரும் மறுபேச்சின்றி ஏற்றுக்கொள்கிறோம்.

        • இந்தப் பேச்சை அவ்வளவு எளிதில் விட்டுவிட நான் விரும்பவில்லை நண்பரே. கொன்னவன் என்று சொன்னவன் அல்லது சொல்பவன் தரப்பில் நின்று கொண்டு ஆடுகளைப் பற்றியும் சாட்சிகளைப் பற்றியும் கொன்றவன் மந்தையைச் சேர்ந்த ஆட்டுக்குட்டியான நீங்கள் பேசக்கூடாது என்று சொல்கிறேன்.

         உண்மை தரவுகளில் இல்லை வாசிப்பவன் புத்தியில் உள்ளது என்பது உண்மை தான், ஆனால் அந்த உண்மை உங்கள் வார்த்தைகளில் இல்லை. ஆடுகள் என்றாலே அவை மந்தைகளில் இணைந்து தான் ஆக வேண்டும். நான் ஆடு அல்ல என்று கருதும் புனித ஆடுகள் உட்பட. எனவே எல்லா ஆடுகளும் கருதுவதைப் போல நீங்களும் வெட்டுபவனைத் தான் நம்புகிறீர்கள், அவனுக்காக தான் பேசுகிறீர்கள். வெட்டுபடுவதும் செத்து போவது ஆடுகளின் உரிமை என்று கூற மாட்டேன் அவை புனித ஆடுகளின் உரிமை. அவற்றின் உரிமையில் நாம் தலையிட விரும்பவில்லை.

         • இங்கே கொன்னவன் யார் என்பதையே மாற்ற முயற்சிக்கிறார். கொள்கையை பரப்புங்கள் தினிக்காதீர்கள். பரவும் திசையில் தடை இருந்தால் அதை உடைக்க நினைப்பதை எந்த விதத்தில் ஏற்றுக்கோள்வது. இது அடுத்தவரின் உரிமையை பரிக்க நினைக்கும் செயல் இல்லையா?. அவ்வாறு உடைக்க நினைக்கும் நீங்கள் மனிதம் பற்றி பேச எந்த விதத்தில் தகுதி பெற்றீர்.

          கொன்னவனின் அறிவுரையும் எங்களுக்கு வேண்டாம், அவ்வாறு நினைப்பவனின் கொள்கையும் வேண்டாம். புதிதாய் எதாவது முடிந்தால் சொல்லுங்கள். இல்லையேல்,நண்பர் கூற்றுப்படி விவாதத்தை விடுங்கள்.

          • கம்யூனிஸ்டுகள் உங்கள் மீது எதையும் திணிக்கவில்லை. முதலாளிகள் தான் திணிக்கிறார்கள், முதலாளித்துவம் தான் திணிக்கிறது.

      • உசிலம்பட்டியில்/கம்பத்தில் போய் வி.வி.மு. வில் இருக்கும் ஆட்களின் சாதியை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் நண்பரே. கள்ளரும் மறவரும் உண்டு.
       குற்ற பரம்பரை சட்டத்தில் ஒடுக்கப்பட்ட சாதிகளும் உண்டு.
       நீங்கள் பேசும் முன்பு பல தரவுகளை பார்த்துவிட்டு பேசினால் நல்லது. தெரியவில்லை இன்றல் கேள்வியாக கேளுங்கள். ஆராய்ச்சி முடிவு போல் சொல்வது அழகல்ல.
       எந்த சாதியாக இருந்தாலும் மரியாதையாக பேச பழகுங்கள். சுய மரியாதை உள்ளவர்கள் அடுத்தவரை தரக்குறைவாக பேச மாட்டார்கள்.
       உங்கள் கருத்தை சொல்லும்போது அது வினவு கருத்து இல்லை என்றால் தெளிவாக சொல்லிவிடுங்கள். காலரியில் அமர்ந்து கொண்டு காறி துப்புவது உங்களுக்கு அழகல்ல. ஆக்கபூர்வமாக உங்கள் கருத்தை நீங்கள் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளபோது திட்டுவது நியாயமல்ல நண்பரே.

     • இந்த ஆடு எந்த மந்தையைச் சேர்ந்த ஆடு என்பதை அனைவரும் கவனித்துக்கொள்ளுங்கள்.

  • முத்துராமலிங்கம் யார்????????????

   1 ஜாதி வெறி பிடித்தவன்…

   2 சமாதான கூட்டத்தில் தன்னை எதிர்த்து பேசிய இம்மானுவேல் தேவேந்திரனை கொலை செய்த பாதகன்…

   3 தனக்கு ஒட்டு போடாத மக்களை தன் அடி ஆட்களின் மூலம் அடித்து உதைத்து துன்புறுத்தியவன்…

   4 காமராஜரை அவன் இவன் சானன் என்று பொது கூட்டங்களில் பேசிய கயவன்…

   5 தன் நிலத்திற்கு வரி வசூல் செய்ய வந்த தாசில்தார் ஒருவரின் காலை வெட்டியவன்…

   6 தான் சொன்ன படி தீர்ப்பு கூறவில்லை என்று முதுகுளத்தூர் நீதிபதி பிரம்மநாயகம் பிள்ளையை கொலை செய்தவன்…

   7 கலெக்டர் போலீஸ் நீதித்துறை இந்த மூன்றுக்கும் கட்டுப்படாத அயோக்கியனாக செயல்பட்டவன்…

   8 தென் மாவட்டத்தில் ஒரு ரவுடி போல் செயல்பட்டவன்…

   9 முதுகுளத்தூர் கலவரம் ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் முத்துராமலிங்கம்…

   10 பெரியார் கூட இந்த பயங்கரவாதியை பிடித்து ஜெயிலில் போடுங்கள் என்று குடியரசு ஏட்டில் பதிவு செய்தார்…

   11 இப்படிப்பட்ட புறம்போக்கு முத்துராமலிங்கத்திற்கு அரசு விழா எடுப்பதன் நோக்கம் என்ன ?

   12 அரசியல் எச்ச பொறுக்கி சுப்ரமணியசாமி இவனுக்கு பாராளுமன்றத்தில் சிலை வைத்ததின் நோக்கம் என்ன ?

   வரலாற்றைத் தவறாக எழுதும் ஓந்திரியர்கள் இவனை நல்லவனாக சித்தரிப்பதன் நோக்கம் என்ன ?

   • கற்பனைக்கு பெயர் போன நண்பரே,

    தன்னை தனக்கே தெரியாத நிலையில் தேசியவாதி பற்றி எழுதியிருப்பது வேடிக்கைதான். இங்கே சொல்லப்பட்டிருக்கும் அனத்துக்கும் ஆதாரம் வெளியிட்டால் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

    மீண்டெழும் பாண்டியர் வரலாறு எழுதிய செந்திலுக்கு சொந்தக்காரனாக இருப்பீரோ?… பள்ளாங்குழி பாண்டியாட்டம் என்று அழைக்கப்டுவதால் பள்ளர்களெள்ளாம் பாண்டியர்கள் என்று எழுதியிருக்கிறாராம். பல்லாங்குழி எப்போது பள்ளாங்குழி ஆனதோ?…

    அதுபோல் இருக்கிறது உங்கள் கருத்து.

 2. தோழர் சேகருக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
  சமுதாயத்தில் உள்ள அனைத்து கருவூலங்களையும் பயன்படுத்தி தன்னை எப்படி வாழ வைத்துக்கொள்வது என்று நினைப்பவர்கர்கள் சாதாரான மனிதர்களின் வாழ்க்கைமுறை! அந்த கருவூலங்களின் அறிவை கிரகித்து அச்சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு முனைபவர்களே கம்யூனிஸ்டுக்கள்! இதுதான் சிறந்த வாழ்க்கை! அந்த வாழ்க்கையில் பயனிக்க வந்த உங்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

  • //கருவூலங்களின் அறிவை கிரகித்து அச்சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு முனைபவர்களே கம்யூனிஸ்டுக்கள்!//
   ஆம் தோழரே.வாழ்த்துக்களுக்கு நன்றி.

 3. பசும்பொன் முத்துராமலிங்கம் பற்றியும் வன்னியர்கள் பற்றியும் வினவு எழுதியிருக்கும் கட்டூரைகள்
  சாதி வெறியர்களின் உண்மை முகத்தை சந்தி சிரிக்க காட்டிவிட்டது.

  • ஜாதி வெறி என்று குறிப்பிடும் தோழர் வலிப்போக்கன், எந்த மாதிரியான செயல்பாடுகள் சாதிவெறியில் அடங்கும் என பட்டியலிட வேண்டும்.

   உங்களுக்கு தகுந்த பதிலை நான் தர இருக்கிறேன். வாலும் இல்லாமல் தலையும் இல்லாமல் பின்னூட்டமிடுவது இங்கே பலருக்கு வழக்கமாகிவிட்டது.

 4. ஒன்னு வுட்ட பங்காளி முரளி அவர்களே,

  அது என்ன முக்குலத்தோருக்கு மட்டும் முத்து அண்ணன மொத்தமா போட்டு புட்டு, வன்னியர்களுக்கு-ன்னு என்னோட பேர போடாம வுட்டு புட்டீக…..

  வருத்தமுடன்….. ச.ராமதாசு

 5. சேகர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
  போராடும் தருணங்கள், என்னையும் பாதித்த புத்தகம். நாங்க எல்லாம் வீரர்கள் என்று பேசுபவர்கள் நீங்கள் சொன்ன 2 புத்தகமும் படித்து பார்த்தல் அவர்களின் வீரம் என்ன என்பது தெளிவாகிவிடும்.

 6. வினவை பாராட்டி எழுதுகின்ற தோழர்கள் தங்களைப் பற்றி சிறிய அறிமுகத்துடன் அதாவது வாழும் பகுதி பணிபுரியும் களம் போன்ற விவரங்களுடன் எழுதினால் நல்லது!

 7. வினவை இணையம் மூலமாக எல்லோரும் படித்துவிட முடியாது. இதனை வெகு ஜனங்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில்தான் வெற்றி இருக்கிறது.

 8. நாளை முதல் வினவு , வன்னிய மற்றும் தேவர் சாதி பெருமை பேசி கட்டுரை எழுதினால் அதை தவறு என்று, இந்த ஒன்திரியர்கள் மற்றும் உள்ள தமிழ் தேசிய சாதி வெறியர்கள் மறுப்பு சொல்வார்களா அல்லது வினவுக்கு தேசிய விருது வாங்கி கொடுப்பர்கள ? . இவர்களை பொறுத்த மட்டில் இவர்களின் சாதி வெறியை யாரும் கண்டுகொள்ள கூடாது அப்படி எழுதினால் அவர்களின் பண்பாட்டை குறை கூறுவதாக சொல்லி திரிகிறார்கள் . வினவு இன்னும் அதிகமாக , சாதி எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை எதிர்க்கும் கட்டுரைகளை அதிக வீரியத்துடன் எழுத வேண்டும் என்றே தோன்றுகிறது .

  • அடுத்தவன் வீட்டில் நடக்கும் விருந்தில் எனக்கும் ஓர் இலை போட வேண்டும் என்பது போல இருக்கிறது. கலாச்சாரம் என்பது அந்தந்த சமுதாயத்திற்கு சொந்தமானது. உங்கள் வீட்டு திண்ணையில் எங்களை பற்றி பேசுவதில் தவறில்லை. ஊர் வீதியில் வந்து எங்களையும் எங்கள் பழக்க வழக்கங்களையும் இழிந்து பேசுவதன் உள்நோக்கம் என்ன?.

   • உங்க கலாச்சாரம் என்ன? பறையனே சக்கிலியனே நு இழிவுபடுத்துறதும்தானே

    • பறையரும் சக்கிலியரும் இழிந்தவர்கள் என்று யாரும் இங்கு வாதாடவில்லை. எங்களுடைய பழக்க வழக்கவழக்கம் வேறு அவர்கள் பழக்க வழக்கங்கள் வேறு.நல்லிணக்கத்தை கடைபிடிக்க முடியும். கடைபிடித்துக்கோண்டிருக்கிறோம்.

     • முரளி ஓந்திரியரே,

      இடுகை 1.2.1.1-ல் கணேஷ் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கவும்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க