முகப்புஉலகம்அமெரிக்காஇசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !

இசுலாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !

-

வுதி அரேபியாவில் மன்னராட்சிக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தம் கோரியும் போராட்டங்கள் நடக்க ஆரம்பித்துள்ளன. அதற்காக போராடும் மனித உரிமையாளர்கள் பலரையும் பயங்கரவாதிகளைப் போல கைது செய்து கொடுமைப்படுத்துகிறது சவுதியின் மன்னராட்சி. பெண்கள் வீதிக்கு வந்து போராடுவதை சகித்துக் கொள்ள முடியாத ஷேக்குகளின் சட்ட ஆட்சி மேலாண்மை செலுத்துகிறது. மனித உரிமைகளுக்காக போராடுவதாக சொல்லிக் கொண்டு ஈராக், லிபியா, சிரியா என்று பிற நாடுகளின் மீது வரிசையாக பயங்கரவாதத்தை அவிழ்த்து விடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய ‘ஜனநாயகங்கள்’ சவுதி அரேபியாவின் நம்பகமான கூட்டாளிகளாக உள்ளன. தங்களுக்கு எண்ணெய் வளத்தை வாரி வழங்கும் மன்னர் ஆட்சியை பாதுகாத்து நிற்கின்றன.

அப்துல் கரீம் யூசுப் அல் காதர்
அப்துல் கரீம் யூசுப் அல் காதர்

அப்துல்கரீம் அல்காதர் என்பவர் சவுதி அரேபியாவிலுள்ள குவாஸிம் பல்கலைக்கழக சட்டத்துறைப் பேராசிரியர் மட்டுமல்ல, அரேபிய குடியுரிமை மற்றும் அரசியலுரிமைக்கான கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினரும் கூட. ஆட்சியாளர்களது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகவும், சட்டவிரோதமாக மனித உரிமை அமைப்பு தொடங்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. உண்மையில் பேராசிரியரின் அமைப்பு அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்க ஆரம்பித்த பிறகு உள்கட்டுமான அமைச்சகம் இப்போலிக் குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தியிருக்கின்றது.

புரைடா நகரில் நடந்த அல்காதர் மீதான விசாரணையை பார்க்க நீதிமன்றத்திற்குள் அவரது வீட்டுப் பெண்கள் வர முயன்ற போது, ஆண்கள் மட்டும்தான் வர வேண்டும் என்று நீதிபதி சொல்லி விட்டார். தனிப்பட்ட முறையில் நீதிபதியுடனான முரண்பாடு காரணமாக வழக்கு பதியப்பட்டிருப்பதால் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரினார் அல்காதர். அல்காதரின் வழக்கறிஞரான அப்துல்சிஸ் அல்-சுபைலியை விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொய்க்குற்றம் சாட்டி காவல்துறையினர் கைது செய்து பின் விடுவித்தனர். பிரதிவாதியும், அவரது வழக்கறிஞரும் இல்லாமலேயே ஏப்ரல் 25 அன்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி இப்ராஹிம் அப்துல்லாஹ் எல்-ஹோசினி. இதன்படி அல்காதருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கேட்டால் 5 ஆண்டுகள் தண்டனை குறைப்புக்கும் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இதே நீதிபதி கடந்த மார்ச் 9 அன்று அம்மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த முகமது அல்-கஹானி, அப்துல்லா அல் ஹமீது ஆகியோர் ஆட்சியாளர்களுக்கு எதிராக பேசியதாகவும், நாட்டு முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதாகவும் கூறி 10 மற்றும் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தார். முகமது அல்-கஹானி இசுலாமிய பெண்கள் கார் ஓட்ட அனுமதிக்க கோரி 2011-ல் போராடிய போது வெளிநாட்டுக்காரனை பின்னால் உட்கார வைத்து அல்-கஹானியின் மனைவி கார் ஓட்டப் போகிறார் பாருங்கள் என்று கெக்கலித்தனர் நீதிபதிகள். அல்-கைதாவும், இம்மனித உரிமை அமைப்பும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். பெண்கள் எல்லாம் இணையதளத்தில் குரானை மேற்கொள் காட்டுவதையும், அதற்கு பொருள் சொல்வதையும் தன்னால் பொறுத்துக்கொள்ள இயலாது என்றும் நீதிபதி சொல்லியுள்ளார்.

அல்சயீத் என்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட போது அவருக்காக வாதாட வந்த குவைத்தை சேர்ந்த வழக்கறிஞரான அம்மாஸ் அல்ஹார்பிக்கு அவர் சவுதியின் பிரஜை இல்லை என்று அனுமதி மறுக்கப்பட்டது. மனித உரிமை சங்கம் ஆரம்பித்த முகமது அயீத் அல்-ஒடிபி இணையதளம் துவங்க அனுமதி பெறவில்லை என்றும் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வழக்கறிஞர் வைத்துக்கொள்ளவே அனுமதி மறுக்கப்பட்டது. இந்த அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவரான எய்சா அல் நெகாபிக்கு கடந்த ஏப்ரல் 29 அன்று மூன்றாண்டு சிறைத்தண்டனையும், நான்காண்டு வெளிநாடு செல்லத் தடையும் விதித்தது நீதிமன்றம். அவரது வங்கிக் கணக்குகளையும், இணைய பக்கங்களையும் அரசு நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு மாத்திரம் தீவிரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற போர்வையில் மனித உரிமை ஆர்வலர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலரும் சிறையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவும் இரண்டு மூன்று ஆண்டுகளாக அரசால் வெளியிடப்படவேயில்லை. பலரையும் அவர்களது குடும்ப உறுப்பினர், வழக்கறிஞரை சந்திக்கக் கூட அரசு தரப்பு மறுத்து வருகிறது.

அரபு வசந்தம்
அரபு வசந்தம்

அல் ஸாடி என்ற மனித உரிமை ஆர்வலர் சிறையில் 30 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இப்போது உயிருடன் இருக்கிறாரா எனத் தெரியவில்லை. அவர் உண்ணாவிரதம் இருக்கும் செய்தியை அரசு இருட்டடிப்பு செய்து விட்டது. மார்ச் 21, 2011 முதல் சிறையில் இருக்கும் அவரை யாருமே இதுவரை சந்திக்க இயலவில்லை. ரகசியமாக சிறையிலிருந்து கடத்தி வரப்பட்ட கடிதங்கள் சில ட்விட்டரில் உலவினாலும் அவரை சந்திக்க அவரது மனைவி, தாய்க்கும் கூட அனுமதி கிடையாது.

அரபு வசந்தத்தை ஆதரித்து அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட சையது அகீல் அக் 2011-ல் கைது செய்யப்பட்டு இதுவரை யாரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. உண்ணாவிரதமிருந்த காரணத்தால் அவரை மருத்துவமனையில் சங்கிலியால் கட்டிலுடன் பிணைத்து காவல் போடப்பட்டிருந்தது. தொழுகை நடத்த அவர் அனுமதி கேட்டபோது பாதுகாப்புக்கு நின்ற வீரர்கள் அதனைக் காதுகொடுத்துக் கூட கேட்கத் தயாராக இல்லை.

கிழக்குப் பகுதியில் உள்ள குவாதிப் நகரத்தில் கடந்த ஜூன் 22 அன்று நடந்த சிறப்பு காவல்படையின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி இளைஞன் ஒருவனும், 2011 அரபு வசந்த புரட்சியை ஆதரித்து நடந்த பேரணியின் முன்னணி இளைஞர்களில் ஒருவனுமான மோர்சி அல்-ரெஃப்-ம் கொல்லப்பட்டனர். மோர்சியை பிடித்த பிறகுதான் சுட்டுக் கொன்றதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இறந்து கிடந்த மோர்சியின் உடலை பெற வேண்டுமானால் தாங்கள் சொல்லும் பேப்பரில் கையெழுத்திடுமாறு அவரது குடும்பத்திற்கு மிரட்டல் உள்கட்டுமான அமைச்சகத்திலிருந்து வந்ததாம். அதற்கு அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

மனித உரிமை ஆர்வலர்களைக் கண்டு அஞ்சும் ஆட்சியாளர்கள் அவர்களிடமிருந்து பேனாவையும், செல்பேசிகளையும் பிடுங்கிக் கொள்கின்றனர். அரசியல் கைதிகளை விடுவிக்க கோரும் போராட்டத்தில் பெண்கள் வீதிகளுக்கு வந்து இரவெல்லாம் கூடாரம் அமைத்து போராடுகின்றனர். போலீசார் அவர்கள் மீது உப்புப்பெறாத காரணங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், இயற்கை உபாதை மற்றும் உணவுக்கு கூட அவர்களை போக விடாமல் தடுத்துள்ளனர்.

இந்த அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் பல்வேறு தளங்களில் நடத்தப்படுகின்றன. வைபர் என்ற தகவல்தொடர்புக்கு உதவும் மென்பொருளை கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி அரசு தடை செய்ததும் ஓபன் சோர்ஸ் ஆதரவாளர்கள் அதற்கு பதிலாக எந்தெந்த மென் பொருட்களை பயன்படுத்தலாம் என ஆலோசனைகளை ட்விட்டரில் கொட்டத் துவங்கினர். தற்போது ட்விட்டரில் நானும் அம்மனித உரிமை அமைப்பின் உறுப்பினர்தான் என்ற பெயரில் ஒரு அக்கவுண்ட் துவங்கப்பட்டு பலரும் அதில் இணைந்து வருகின்றனர். அனைவரும் அல் காதரின் விடுதலைக்காகவும், அரசியலமைப்பை மாற்றக் கோரியும் ட்விட்டரில் பிரச்சாரம் செய்கின்றனர்.

ட்விட்டர் மற்றும் முகநூலில் செயல்படும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை கைது செய்வதற்கு ‘பயங்கரவாதத்திற்கெதிரான போரை’ சவுதி மன்னராட்சி தொடங்கியுள்ளது.

இளவரசன் முகமது பின் நயீப் பில் அல் அசீஸ்
இளவரசன் முகமது பின் நயீப் பில் அல் அசீஸ்

இந்த ஆண்டு துவக்கத்தில் பிரிட்டன் பிரதமர் காமரூனையும், அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் சந்தித்து பயங்கரவாத எதிர்ப்பில் கரம் கோர்த்து செயல்பட பேச்சுவார்த்தை நடத்திய சவுதி இளவரசரும், உள்கட்டுமானத்துறை அமைச்சருமான முகமது பின் நயீப் அரச பயங்கரவாத நடவடிக்கைகளை மக்கள் மீதும், அரசியல் உரிமை, சமூக உரிமை கோரும் போராளிகள் மீதும் ஏவி விட்டுள்ளார். இத்தகைய போராட்டங்களையும், போராடும் மக்களையும் ஒடுக்கும் அரசின் பிரதிநிதியாக முகமது பின் நயீபை போராடும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மன்னர் அப்துல்லாவுக்கு அடுத்தபடியாக கருதப்படும் இவர்தான் தற்போது பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளவர்.

அமெரிக்க அடிவருடிகளான அரபு ஷேக்குகள் தங்களது குடிமக்களையும் அரசியல் உரிமைகளையும் நசுக்குவதை மேற்கத்திய நாடுகள் வரவேற்கவே செய்யும். தங்கள் நாட்டு மக்களுக்கு பத்து சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய சட்டம் போட்டு முயற்சிப்பதாக காட்டிக் கொண்டாலும், எதேச்சதிகார அரசு நிர்வாகம் மூலமாக மனித உரிமைகளைப் பறிப்பதும், அரசியல் உரிமைகளை மறுப்பதும் தொடர்வது அரேபியாவில் சாத்தியமில்லைதான்.

போராடும் சவுதி அரேபிய இளைஞர்கள் அரசியல் மாற்றத்தைக் கோருகிறார்கள். அவர்களது கையில் சித்தாந்தத் தெளிவும், அதனடிப்படையிலான அமைப்பும் இல்லையென்றாலும் சர்வாதிகாரத்தை புதை குழிக்கு அனுப்ப வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இசுலாத்தின் காவலர்களாகவும், புரவலர்களாகவும் காட்டிக் கொள்ளும் சவுதி ஷேக்குகளின் வேடம் இனியும் செல்லுபடியாகாது. இசுலாமிய மத மாயைகளிலிருந்து சவுதி மக்கள் வெளியேறத்தான் போகிறார்கள். அமெரிக்க ஆதரவுடன், இசுலாத்தின் பெயரில் ஆட்டம் போடும் சவுதி ஷேக்குகளின் பயங்கரவாதம் விரைவிலேயே சவுதி மக்களால் ஒழிக்கப்படும்.

‘அரபு வசந்தம்’ இரண்டாம் பாகம் துவங்குகிறது.

– வசந்தன்.

 1. Saudi Arabia still has no law that specifically criminalizes violence against or neglect of a wife and her children.Women who try to stop abuses are more likely to be punished than to have their grievances redressed and there is no protection for victims.they should start by abolishing the male guardianship system in law.Under Saudi law, all females must have a male guardian, typically a father, brother or husband. The guardian has duties to, and rights over, the woman in many aspects of civic life. A United Nations Special Rapporteur report states that “legal guardianship of women by a male, is practised in varying degrees and encompasses major aspects of women’s lives. The system is said to emanate from social conventions, including the importance of protecting women, and from religious precepts on travel and marriage, although these requirements were arguably confined to particular situations.” Depending on the guardian, women may need their guardian’s permission for: marriage and divorce; travel, if under 45; education; employment; opening a bank account; elective surgery, particularly when sexual in nature.

 2. //அமெரிக்க அடிவருடிகளான அரபு ஷேக்குகள் தங்களது குடிமக்களையும் அரசியல் உரிமைகளையும் நசுக்குவதை மேற்கத்திய நாடுகள் வரவேற்கவே செய்யும்//

  அமேரிக்கா கணக்கு வழக்கு இல்லாமல் அச்சடிக்கும் பணத்திற்கு மதிப்பு வருவது அரேபியாவால்தான்.
  கச்சா எண்ணெய்யை அமரிக்கா பணம் கொண்டுதான் வாங்க முடியும் . தங்கத்தை கொடுத்து கூட வாங்க முடியாது.
  இதனால் அணைத்து உலக நாடுகளும் அமரிக்க பணத்தை பதுக்கி வைத்து உள்ளார்கள். அவர்களுடைய நாட்டு கரன்சியின் மதிப்பு அதனை பொறுத்துதான் உள்ளது .

  இப்போது அரேபியாவில் வசந்தம் ஏற்பட்டு அமெரிக்க பணம் மறுக்கபட்டால் , உலக நாடுகள் அனைத்தும் ஏழை நாடுகலாகிவிடும். எநேநேரால் அணைத்து நாடுகளும் தங்கள் உழைப்பை அல்லது எதிர்கால உழைப்பை டாலராக சேமித்து வைத்துள்ளன.

  இது உலக நாடுகளுக்கு இடையே ஒரு புது பொருளாதார குழப்பத்தை ஏற்படுத்தும். ஏராளமான மக்கள் வேலை இழப்பு , பெருமந்தம் ஏற்படும் ..

 3. சிஙளவனின் பஙாளிகள்-அராபு சேக்குகள்,ஏழை தமிழ் முச்லிம் ரிசானாவின் தலயை வெட்டிய கொடுமையை யாராவது தாஙிகொள்ளமுடியுமா? இதைவிட்டுவிட்டு கமலின் படத்துக்கு வெளம்பரம் தேடிய வெண்ணை வெட்டி முச்லிம்கள் வாழும்நாடு இது

 4. //இப்போது அரேபியாவில் வசந்தம் ஏற்பட்டு அமெரிக்க பணம் மறுக்கபட்டால் , உலக நாடுகள் அனைத்தும் ஏழை நாடுகலாகிவிடும்.// அண்ணே வெறும் பேப்பர் காசுக்கு எங்கிருந்துண்ணே மதிப்பு உருவாகுது?

  காசு பணம் துட்டு மணி மணின்னு அமெரிக்கா-அரபு காம்பினேசன் பாட்டு போட்டானாலேயா? அந்தந்த நாட்டினுடைய உண்மைப் பொருளாதாரம் உருவாக்கும் செல்வங்களே பேப்பருக்கு மதிப்பைக் கொடுக்குது. உங்க கருத்து எப்பிடிக்கீதுன்னா கைய வைச்சி கண்ண மறைக்காத சூரியன் இருட்டாயிடும்னு பூன சொன்னமாரிக்கீது.

  • //உங்க கருத்து எப்பிடிக்கீதுன்னா கைய வைச்சி கண்ண மறைக்காத சூரியன் இருட்டாயிடும்னு பூன சொன்னமாரிக்கீது//

   நன்றி .
   1. Reserve Currency என்றால் என்ன என்று விளக்குவீர்களா ?
   2. இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதம் வளர்கிறது எனும்போது , இந்தியாவின் பணம் ஏன் மதிப்பு இழந்து போகிறது என்பதையும் விளக்குங்கள்.

 5. உண்மையான பதிவு…..நிச்சயம் அங்கு மக்கள் கிளர்ச்சி ஏற்படத்தான் செய்யும் ஆனால் அது எப்போது என்பது இறைவனே அறிவான்…..உரிமையை நிலைநாட்டப்போராடுபவனும், உரிமையை ம்றுக்கும் ஆட்சியாளனையும் ஒரு சேர கருத்துரைப்பது பாசிச அடிவருடித்தன்மே…உங்கள் அடையாளம் மறூக்கப்பட்ட்டால் அதில் இருக்கும் வலியை உணர்வீர்கள்….எஙகள் அடையாளம் அழிக்கப்படுகிறது அதற்காகவே இந்த மீட்டெடுப்பு போராட்டம்….விசுவரூபத்தையும் இதையும் முடிச்சு போடும் விந்தை தான் என்ன….வினவு தோழரை நிச்சயம் ஆதரிக்கிறேன்….மார்க்கத்தை முன்னிறுத்தி உரிமையை பறிக்க முடியாது…ஏனென்றால் இவர்கள் கூறுவது மார்க்கமே இல்லை…வார்த்தை ஜாலம்…..the most misunderstood religion is Islam not only by others but mainly the Muslims.-கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்கள் விசுவரூபம் சம்பந்தமாக நடந்த கருத்தரங்கில் சொல்லிய நியாபகம்….இங்கு அது சாலப்பொருந்தும்….. இது என் பார்வை

 6. //அமெரிக்க அடிவருடிகளான அரபு ஷேக்குகள் தங்களது குடிமக்களையும் அரசியல் உரிமைகளையும் நசுக்குவதை மேற்கத்திய நாடுகள் வரவேற்கவே செய்யும்///

  மிக தவறான புரிதல். உலகெங்கிலும் லிபரல் ஜனனாயக பரவுவதையே மேற்குலகம் விரும்புகிறது. சந்தை பொருளாதாரம் அதில் ஒரு அங்கம். அவ்வளவு தான். ஆனால் அமெரிகாவில் ஒரு சிறு குழுவினர் (neo-conservaties) அரசியலில் பெரும் அதிகாரத்தை கொண்டவர்களாக தொடர்வதால் இந்த லட்சியவாதம் முழுமையடை முடியவில்லை. ஆனால் 70 ஆண்டுகளுக்கு முன்பு உலகெங்கிலும் இருந்த அளவு சர்வாதிகாரமும், நிலப்பிரத்துவ அடிப்படையிலான மன்னராட்சிகளும், காலனிய ஏகாதிபத்தியமும், இன்று பெரும் அளவில் அழிந்து, ஜனனாயக கூறுகள் பரவலாகி உள்ளன. இன்னும் வரப்போகும் காலங்களில் அரபுலகிலும் ஜனனாயகம் உருவாகும். அமெரிக்காவில் உள்ள ‘ஆதிக்கவாதிகள்’ வலுவிழப்பார்கள். ஜெர்மனியில் 1945க்கு பின் நிகழந்தது போல் அமெரிக்காவிலும் நல்ல மாற்றங்கள் உருவாகும்..

 7. இஷ்லாம் என்பது ஏதொ தான் தோன்ரித்தனமான மதம் அல்ல ….யாரொ சிலர் செய்யூம் தவருக்காக ஒட்டு மொத்த இச்லாம்யெ குரை சொல்வது எந்த விதத்தில்நியாயாம் ?????? வினவு அவர்கலெ உன்மை இச்லத்தை விலஙக நிஙகல் குரானை விலங்கி படிஉஙல் இந்த உலகத்திர்க்கு மட்டுமல்ல மரு உல்கத்திர்க்கு கிடைத்த மபெரும் பொக்கிஷம் தான் இந்த குரான்

  • நிச்சயமாக . புத்தகத்தின் ஒரு பிரதியை மன்னருக்கு அனுப்புங்கள்

  • @islaamiyan
   நீங்கள் எந்த மொழியில் பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள் என்பதை சொல்லமுடியுமா ?

 8. “இசுலாத்தின் பெயரால்” சவுதி மன்னராட்சி பயங்கரவாதம் !
  அது என்னங்க இஸ்லாத்தின் பெயரால்? அத பத்தி உங்க பதிவில் ஒன்னுமே சொல்லல ஆனால் தலைப்பை மட்டும் கொஞ்சம் சூட போடுவோம்னு போட்டிங்களா ?. இதுதான் வினவின் பிரச்னை. அந்த நாட்டு மன்னர் சொன்னாரா , இஸ்லாத்தை காக்க இவரபுடுச்சி உள்ள போட போறம்னு …நம் நாட்டு பிரதமர பத்தி எழுதும் போது இப்படிதான் ..இந்து மதத்தின் பெயரால் என்று எழுதுகிறீர்கள்?…உங்க தலைப்பிற்கும் , பதிவிற்கும் சம்மந்தமே இல்லை இது போன்று தலைப்புகளை இனி இடவேண்டாம் சவுதி மன்னர் என்னவோ இஸ்லாத்தின் காவல் காரர் மாதரியும் அந்த நாடு இஸ்லாமிய நாடு போலவும் , அவர்களுடைய சட்டம் எல்லாம் இஸ்லாமிய சட்டம் போலவும் உங்களின் புரிதல் உள்ளதால் இந்தமாதரி கட்டுரை எழுதீனீர்கள் , எழுதுகிறீர்கள். இது முற்றிலும் தவறான புரிதல். சவுதி மன்னரின் ஆட்சி எந்த முஸ்லிம்களுக்கும் பிடிப்பதில்லை , அவர்கள் தான் இஸ்லாத்தின் பிரநிதிகள் என்று எந்த மூலையில் உள்ளம் முஸ்லிமும் ஏற்று கொண்டது இல்லை. இதை வினவு முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் சவுதி மன்னரின் ஆட்சியை பத்தி நல்ல முறையில் விமர்சனம் செய்யுங்கள் அனால் இஸ்லாத்தை உள்ளே இழுக்காதிர்கள் , அவர்களின் நடத்தைக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை. அவர்கள் செய்யும் எந்த செயலும் இஸ்லாத்திற்காக என்று சொன்னது இல்லை . அவர்கள் செய்யும் செயல் எல்லாம் அவர்களின் ஆட்சியை நிலை நாட்டிகொள்ளவே .அவர் இஸ்லாத்தின் படி நடக்கவில்லை என்று விமர்சனம் செய்யுங்கள் நாமும் உம்மோடு இருப்போம் அத விட்டிட்டு அவர் செய்யும் செயலுக்கு இஸ்லாம் தான் காரணம் என்று சொல்வது நயவஞ்சகத்தனம் வினவு உண்மையை புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன் அப்படி இல்லாமல் இஸ்லாத்தை பத்தி ஏதாவது எழுதியே ஆகனும் இல்லை என்றால் இந்து மத
  சகோதர்கள் வந்து இஸ்லாத்தை பற்றி உங்களுக்கு எழுத தைரியம் இருக்க என்று கேட்பார்களே என்று நினைப்பீர்களே ஆனால் சரியானதை விமர்சனம் செய்யுங்கள்.உங்களின் சிந்தனையை முடிவை ஆராய்ந்து பாருங்கள் , உங்களிடம் இருக்கும் அந்த பொது புத்தியிலிருந்து வெளியே வாருங்கள். நீங்கள் நினைப்பது மட்டும் சரி என்று வாதிடுவீர்களே யானால் உங்களை போன்றதொரு பைத்தியம் யாரும் இருக்க முடியாது.

  • சிறிது நாட்களுக்கு முன்பு மக்கா இருக்கும் சவூதி இஸ்லாமிய நாடாக்கும் என உங்கள் சகோதரர்கள் சொன்னதையெல்லாம் ரப்பர் வச்சு அலச்சிடலாமா

   • நண்பர் அம்ஜத் அவர்களே சவுதி முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு நாடு அவ்வளவே. அது ஒரு இஸ்லாமிய நாடு அல்ல, இருக்கவும் முடியாது இரண்டிற்கும் வித்யாசம் உள்ளது .

  • சக மனிதன் மதத்தின் பெயரால் , மதத்தின் புனிதத்தை கெடுத்து விட்டான் என்று தண்டிக்கப்படும் போது பெரும்பான்மை மக்கள் அமைதி காப்பார்கள்

   மனிதனை அடிமையாக்குவதை மதம் எளிதாக்குகிறது .இது மதங்கள் மறைமுகமாக ஆட்சியாளர்களுக்கு செய்யும் உதவி .

 9. ஒரு மார்க்கத்தை கடைபிடித்து இறைவன் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பி, குற்றங்களையும் பாவங்களையும் அவன் கணக்கிடுகிறான் என்ற பயத்தில் மக்கள் அனைவரும் பாவங்களில் இருந்து விலகி இருப்பதால் தான் அந்த நாடு இன்றளவும் அசைக்க முடியா இரும்பு கோட்டையாக உள்ளது…

  மதத்தின் கோட்பாடுகளை காக்கும் அரசாக சவுதி அரசு உள்ளது… மீறுவோர் யாராயினும் கடும் தண்டனை என்பது இறைவனை நம்பும் சவூதி நாட்டு பிரஜைகளுக்கு ஏற்புடையதாகவே உள்ளது… இன்றைக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பினாலும் ஒருநாள் இறைவனின் முன்னால் அவர்கள் பதில் கூற வேண்டும் என்று அறிந்தே இருக்கின்றனர் அம்மக்கள்..

  • இறைவன் பெயரால் செய்யும் அட்டூழியங்களை நிறுத்துங்கள். நாம் இருப்பதுதான் சொர்க்கம் மறுமையில் என்னசெய்வன் என்பதை இறந்த பின்பு பார்த்துக்கொள்ளலாம்.

 10. “இஸ்லாத்தின் பெயரால் சவுதி மன்னராட்சி பயங்கரவாதம்”

  தலைப்பின் பெயரே தவறு.. நீங்கள் தான் சொல்கிறீர்கள் அது இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றும் இஸ்லாமிய நாடென்று..

  அவர்கள் என்றாவது சொன்னதுண்டா?

  உங்கள் கர்ப்பனைகள் சில சிந்திக்கத் தெரியாத மூடர்களின் காதுக்குப் போய், அவர்கள் எங்களை முஸ்லிம்கலென்று சொன்னார்கள் என்று வெகுண்டெழுந்து விடுவார்களென்று நினைக்கிறேன்..

  அமெரிக்காக்கு / அமெரிக்க இரானுவத்திற்க்குத் தேவையான அனைத்து பொருட்களையும் இன்னும் ஒரு படி மேலே போனால், ஒரு மாமாவாக வேலை செய்யும் இவர்கள் எப்படி இஸ்லாத்தை பிரதி நிதித்துவப்படுத்த முடியும்??

  உங்கள் இஸ்லாமியப் பார்வையை பரிசீளிங்கள்..

  • Indian Rizwan,

   //நீங்கள் தான் சொல்கிறீர்கள் அது இஸ்லாமிய சட்டங்களை நிறைவேற்றும் இஸ்லாமிய நாடென்று..
   அவர்கள் என்றாவது சொன்னதுண்டா?//

   Your TAKIYA (deliberate dishonesty ) is nauseating. Just see the Saudi FLAG. Have you seen any other flag like this in the world? If it is not enough, see its constitution, if such a document exists, it is based on SHARIA. Why do many MUSLIM countries call themselves ISLAMIC REPUBLIC?

   • Dear Freind,

    What do u know abt Sharia? I am saying that, I am a Doctor & I do not know the basic treatment also to cure anything.. Do you call me a Doctor? any one can claim anything but they sud eligible for their claim. else they are bluffers & their claim is time pass / wrong…

    like Babar Masjid’s (fake)claim based on believe & not with an evidence…

 11. “இசுலாமிய மத மாயைகளிலிருந்து சவுதி மக்கள் வெளியேறத்தான் போகிறார்கள்”

  இந்தியா மற்றும் ஐரோப்பிய நாட்டில் வசிக்கும் இஸ்லாமியரே தம் மத மாயையிலிருந்து வெளியேற தயாராகவில்லை பின் எப்படி இதை சவுதியில் எதிர்பார்க்க முடியும்? மற்ற மதங்களில் மதவாதிகள் மற்றும் அதை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டமும் தான் தன் மத நம்பிக்கையை தூக்கிபிடிக்கும், ஆனால் இஸ்லாதில் ஒவ்வொரு இஸ்லாமியரும் தானே மத காவலராக நினைத்து செயல்படுகிறார்கள். இது சவுதியில் வாழும் இஸ்லாமியர் என்று இல்லை ஐரோப்பாவில் வாழ்ந்தாலும் இப்படித்தான் இருக்கிறார்கள்.

  இதனாலேயே மதத்தை வைத்து தீவிரவாதத்தில் ஈடுபடும் குழுக்கள் வெகு சுலபமாக எவ்வளவு படித்தவர்களையும் சுலபமாக தனது சதி வேளைகளில் ஈடுபடவைக்க முடிகிறது.

 12. சமீப காலமாக என் மனதில் மிகுந்த அச்சத்தையும், துயரத்தையும் உண்டாக்கிய ஒரு விடயத்தைப் பற்றி பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.
  சமூக வலைதளங்களில் ( Facebook, Twitter) பகிரப்படும் மதம் சார்பான கருத்துக்களே.
  ஒருவர் தன் மதத்தைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து பேசலாம், எழுதலாம். அது ஆரோக்கியமானதும் கூட, ஆனால் அதில் மற்ற மதங்களைப் பற்றி விமர்சிப்பதும், இகழ்ந்து எழுதுவதும் மிகவும் அபாயகரமானது. கண்டனத்துக்கிரியது. மிக்கியமாக நான் குறிப்பிட விரும்புவது இந்து – முஸ்லிம் பற்றியே. இதனால் நம்மிடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி மதத்தின் பெயரால் உண்டாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. சிலரது அரசியல் நோக்கத்திற்காகவும், சுய லாபத்திற்காகவும் இந்து – முஸ்லிம் வெறுப்புணர்ச்சி உண்டாக்கப்படுகிறது.

  இதனால் நம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் விட்டுசெல்வது என்ன? ஏற்கனவே வருங்காலத்தில் அவர்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் அதிகம். குறிப்பாக குடிநீர் தடுப்பாடு, புவி வெப்பமயமாதல் – பருவ நிலை மாற்றம், பொருளாதார சிக்கல், மக்கள் தொகைப்பெருக்கம். இதனுடன் அவர்களது மனதிலும் மதம் என்னும் மதத்தை விதைத்து ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ள வேண்டுமா? அல்லது அவர்கள் மனிதம் கொண்டு எதிர்வரும் சிக்கல்களை ஒன்றிணைந்து களைய போராட வேண்டுமா? சிந்தியுங்கள் நண்பர்களே. தயவுசெய்து மற்ற மதங்களைப் பற்றி இகழ்ந்து கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். மற்ற மதத்தினருடன் சகோதரத்துவுடன் பழகுங்கள், அவர்களது மதத்தையும் மதித்து மனிதத்தைப் பேணுங்கள்.ஒருவருக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது என்றால், அது அநீதி என்று தெரியும் பட்சத்தில் அவர் எந்த மதத்தை சேர்ந்தவராயினும், மற்ற மதத்தை சார்ந்தவரும் அந்த அநீதிக்கு எதிராக போராடும் சிறந்த குணத்தைப் பெற்றிருக்க வேண்டும். மாறாக என் மதத்தை சேர்ந்தவனுக்கு மட்டுமே நான் போராடுவேன் என்று சொல்வது மனிததன்மையற்ற செயல். எந்த கடவுளும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்.

  குறிப்பாக சமீபத்தில் ஒரு பா ஜா கா அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட சிறுது நிமிடத்தில் அதற்கு அரேபிய வந்தேறிகள்தான்(முஸ்லிம்) காரணமென்று சிலரால் பரப்பப்படுகிறது, அவரது கொலைக்கு காரணம் அரசியல் உள்நோக்கமாக இருக்கலாம் அல்லது வேறு தனிப்பட்ட பிரச்சினைகளாக கூட இருக்கலாம். அல்லது அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொலையுண்டார் என்றால், கண்டிப்பாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எந்த கடவுளும் மதத்தின் பெயரால் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை கொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டார், அப்படி ஏற்றுக்கொண்டால் அவர் கடவுளாக இருக்க முடியாது.
  கொலைக்கான உண்மைக் காரணம் விசாரிக்கப்பட்டு, விரைவில் வெளிவரும். அதற்கு முன்னர் மற்ற மதத்தினரை குறைக்கூறுவது, ஒட்டுமொத்த மதத்தையும் தவறாக சித்தரிப்பது போன்ற காரியங்களை தவிர்ப்போம். இல்லையேல், மதவெறி மக்கள் மனதில் பதிந்து, மிகப்பெரிய கலவரத்திக்கு வழிவகுக்கும். வேண்டாம் இனி ஒரு மதக்கலவரம். ஏற்கனவே மதத்தின் பெயரால் பல குடும்பங்கள் நிர்மூலமானது, பலரது வாழ்க்கை நாசமானது. இனி வரும் தலைமுறையாவது ஒற்றுமையாக வாழ , அமைதியான சூழலை உண்டாக்க முயர்ச்சிப்போமாக.

  • //மற்ற மதங்களைப் பற்றி விமர்சிப்பதும், இகழ்ந்து எழுதுவதும் மிகவும் அபாயகரமானது. கண்டனத்துக்கிரியது.//

   Those who don’t believe in any MADNESS has to critique the MADNESS of their brethren so that at least some people get some sense back. Only this way, we the HUMANITY has progressed to this stage from the beasts that we were and we still have to go a long way. However painful this may seem, alternative is more dangerous. Without this brotherly critique, we would be still be living in tribal societies annihilating each other over nothing more than stones taken as G*Ds.

   My small contribution to this process:
   நம்பிக்கைக்கு மதிப்பா? (http://questionstomuhamadhians.blogspot.com.au/2012/09/blog-post_26.html)

   //மற்ற மதத்தினரை குறைக்கூறுவது, ஒட்டுமொத்த மதத்தையும் தவறாக சித்தரிப்பது போன்ற காரியங்களை தவிர்ப்போம்//

   The person with one MADNESS has no basis to critique other kinds of MADNESSES. However, when one particular MADNESS is calling for destruction of all other MADNESSES, then this MADNESS can be critiqued by anyone.

   //ஏற்கனவே மதத்தின் பெயரால் பல குடும்பங்கள் நிர்மூலமானது, பலரது வாழ்க்கை நாசமானது. இனி வரும் தலைமுறையாவது ஒற்றுமையாக வாழ , அமைதியான சூழலை உண்டாக்க முயர்ச்சிப்போமாக.//

   I too am for it. But this does not happen without debating and discarding the MADNESS in us.

   • Mr Univerbuddy

    Ur first comment and attachment are conflicting

    Ur attached link saying keep your faith with you but not to dispose
    But you saying in your first point that we have to review ours with others….

    that means your linked article is much suit for you only…..

    So my advise is be stable in your comment…

    • Dear Indian,
     Thanks for you advise. But I am not unstable in my comments and posts. Let me explain.
     Keeping one’s faith to oneself is one thing.
     Not keeping one’s faith to oneself, exposing it to others (and claiming it to be good to others) is another thing.
     The first one cannot attract any critique while second one is open to all forms of critique.
     If you think you have something good for others, you got to be open to critique/ differing opinion.
     And believes that can be universally accepted need not fear any critique.

 13. மன்னராட்சி காலத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொள்ள தவறிவிட்டது.மக்களின் சிந்தனை போக்கு மன்னராட்சிக்கு எதிராக போகிறது. மன்னர் சுதாரித்து கொண்டு தன்னை மாற்றிக்கொண்டு விடுவார் என்ற நினைக்கிறன். ஏனென்றால் இசுலாமிய ஜனநாயக நாட்டை விட மன்னராட்சி நாடு அமெரிக்காவுக்கு நல்லது. அமெரிக்கா அழுத்தம் கொடுத்து துபாயில் சீர்திருத்தம் கட்டாயம் வரும். மீண்டும் மன்னராட்சி நியாயப்படுத்தப்படும்.
  நீங்கள் நினைப்பது போல் மக்கள் மன்னராட்சியை அகற்ற முடிந்தாலும், பின் வரும் மக்களாட்சி மதவாதிகளால் கடத்தப்படாது என்பதுக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஈரான் நிலையை ஒப்பிட்டு பாருங்கள்.
  நுகர்வு கலாச்சாரம் அனுபவித்துவிட்ட மக்கள் தங்கள் சுதந்திரம் மன்னராட்சியால் கட்டுப்படுத்தப்படுவதை விரும்பவில்லை. அவ்வளவே. போராடும் மக்களின் மனதில் பெரியதொரு அரசியல் விழிப்புணர்வோ, சுயவிமர்சனமோ வந்து விட்டதாக தெரியவில்லை. மதத்தை தாண்டி வருவார்களா என்று சொல்ல முடியாது. தங்கள் சமயத்தின் மீது விமர்சனம் வைக்கும் பக்குவமும் பிற சமயங்களை பகையின்றி பார்க்கும் பக்குவமும் வந்தால், அது சாத்தியமாகலாம். சமயம் அவர்களுக்கு ஒரு கால் விலங்காக உள்ளது. அந்த சமயம் தன்னை தகவமைக்கும் உரிமையை அதன் மக்களுக்கு வழங்கவில்லை. தகவமைப்பு தடைசெய்யப்பட்டுள்ளது. இசுலாமியர்களின் விடுதலையை இந்த உலகம் ஆர்வத்துடன் எதிர்பார்த்துகொண்டிருக்கிறது. அதற்கான முயற்சியில் உள்ளவர்களை வாழ்த்துவோம்.

 14. மக்கு யெந்த நாட்டுலதான் இஸ்லாம் இருக்கு? இஸ்லாம் தோத்து போச்சா/

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க